இந்த ஆண்டு கூட்டத்துக்கு மோடி அவர்களும் வருவதாக இருந்ததால் சற்று தயக்கம் இருந்தது. ரொம்ப கெடுபிடி இருக்குமோ எனத் தோன்றியது. ஆனால் இதற்கெல்லாம் பயப்படுவது ஹிந்து நிருபரின் மகனுக்கு அழகா எனத் துணிந்து சென்றேன். ஒரே ஒரு வேலை செய்தேன். செல்பேசி எடுத்து செல்லவில்லை. மீட்டிங் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தின் காமராஜர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரங்கத்துக்கு சென்றபோது மாலை 04:40. பெரிய கியூ 4 அல்லது ஐந்து வளைவாக நின்றது. பத்து இடங்களில் பரிசோதனை செய்தனர். உள்ளே நுழையும்போது மணி மாலை 05:50. அரங்கம் நிரம்பியதால் வெளியே போன ஆண்டு போல லாபியில் இரண்டு ஸ்க்ரீன்கள் தயார் செய்திருந்தனர். ஒன்றின் முன்னால் உட்கார்ந்து கொண்டேன், தரையில். என் பக்கத்தில் இருப்பவர் என்னைப் பார்த்ததுமே கேட்டார் "நீங்கள் டோண்டு ராகவன்தானே" என்று. ஒரு நிமிடம் விழித்த நான் அடையாளம் கண்டு கொண்டேன். நம்ம வி.எஸ்.கே. சார்தான். அமெரிக்காவில் மருத்துவம் ப்ராக்டீஸ் செய்கிறார். ஒரு பிளாக்கர் மீட்டிங்கில் சந்தித்திருந்தேன் (இட்லிவடை ஸ்கூப் படங்கள் எடுத்த பதிவர் மீட்டிங்). நிரந்தரமாக சோவின் ஹேர்ஸ்டைலை மேற்கொண்டுவிட்டார்.
சற்றே தமிழ்மணம் விஷயங்கள் பேசினோம். பிறகு வேறு விஷயங்கள் பேசினோம். சரியாக மாலை 06:30 க்கு சோ ஸ்க்ரீனில் வந்து மோடி அவர்கள் வர சற்றே தாமதம் ஆவதால் ஐந்து நிமிடங்கள் கழித்து மீட்டிங் துவங்கும் என்றார். அதே போல ஐந்து நிமிடங்களில் மோடியும் வந்தார். அரங்கமெங்கும் கரகோஷம். வெளியிலும்தான். சோவுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அரங்கில் முதல் வரிசையில் அமர்ந்தார். குருமூர்த்தி அவர்கள் அவர் பக்கத்தில் அமர்ந்து எனது வேலையை செய்ய தயாராக இருந்தார்.
மோடி அவர்களுடன் சில பா.ஜ.க. பிரமுகர்களும் வந்திருந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் சி.பி. ராதாகிருஷ்ணன், லலிதா குமாரமங்கலம், திருநாவுக்கரசர் ஆகியோர்.
வழ்க்கம்போல ஒரு பீடிகையும் இன்றி சோ அவர்களின் கணீர் பேச்சு துவங்கியது. முதற்கண் மோடி அவர்களது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து மீட்டிங்கிற்கு நல்ல பொது மக்கள் தொடர்பு சேவை செய்த இயக்கங்களுக்கு தன் நன்றியை தெரிவித்து கொண்டார். அரங்கிலும் வெளியிலும் ஒரே சிரிப்பு. பிறகு போலீசுக்கும் நன்றி தெரிவித்தார். அவர்கள் இவரிடம் இன்விடேஷன் லிஸ்ட், பாஸ் கொடுக்கப்பட்டவர்கள் லிஸ்ட் எல்லாவற்றையும் கேட்டார்களாம். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்றதும் டென்ஷனாகி விட்டார்களாம். தாங்கள் எதைத்தான் செக் செய்வது என்று முதலில் குழப்பம் இருந்தாலும் சுதாரித்து கொண்டு தம் வேலையை திறம்படச் செய்ததற்காக அவர்களுக்கு சோ பாராட்டு தெரிவித்தார். பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் தான் புக் செய்த ஹாலை வாபஸ் வாங்காது செயல்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார். காமராஜ் அவர்கள் ஜனசங்குடன் 1971 தேர்தலில் கூட்டணி வைத்து கொண்டதையும் அவர் நினைவூட்டினார்.
இந்த ஹால் கொடுக்க மாட்டேன் என்று காங்கிரஸ் கூறினால் என்ன செய்வது என்று யோசிக்க இடம் வைக்காது எஸ்.வி.சேகர் அவர்கள் இன்று தான் நாரதகான சபாவில் நடத்த இருந்த தனது நாடகத்தை நிறுத்தி இவருக்கு அதை விட்டுத் தருவதாகக் கூறியிருக்கிறார். அதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்தார் சோ அவர்கள். பிறகு பத்திரிகையில் தன்னுடன் பணிபுரிபவர்கள் மற்றும் வாசகர்களுக்கும் நன்றி கூறிவிட்டு வழக்கம்போல தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவாசகர்களை சுருக்கமாகப் பேச அழைக்கும் முன்னால் தனது சகபாடிகளை அறிமுகம் செய்வித்தார். அவர்கள் உதயசங்கர், சிங்காரம், சத்யா, மதலை, பர்கத் அலி, சுவாமிநாதன், ரமேஷ், இதயா, ஷண்முகம், வசந்தன் பெருமாள், விஜயகோபால், ராமு, ஸ்ரீகாந்த், குமார், ராஜு, சுமதி, குருமூர்த்தி ஆகியோர்.
பிறகு வாசகர்கள் பேச்சு ஆரம்பித்தது.
அனந்தராமன் என்பவர் பேசினார். பாஜக, அஇஅதிமுக ஆகியவற்றின் கூட்டணி வாய்ப்புகள், கலைஞர் அவர்கள் மதுவிலக்கை நிறைவேற்றாததன் காரணங்கள், மோடி அவர்களின் வெற்றி ரகசியம், இடைதேர்தலும் கம்யூனிஸ்டுகளும் பற்றியும் சோ அவர்கள் கருத்து கூறுமாறு கேட்டு கொண்டார். சோ அவர்கள் தன் பதிலில் பாஜக அதிமுக கூட்டணி பற்றி தான் என்ன சொல்ல இருக்கிறது. மதியம்தான் மோடி அவர்கள் ஜயலலிதா வீட்டில் பகல் உணவு அருந்தினார், ஏதாவது நடக்கும் என நம்புவோம் எனக் கூறினார். கூட்டணி வாய்ப்புகள் உண்டு என தனது கருத்தையும் கூறினார். ஏனெனில் மூன்றாவது அணி காலணாவுக்கு பிரயோசனம் இல்லை என்றும் கூறினார். மதுவிலக்கு பற்றி பேசும்போது அது பிராக்டிகல் இல்லை என தான் கருதுவதையும் வெளிப்படுத்தினார். இடைதேர்தல் என்றால் கம்யூனிஸ்டுகளுக்கும் உதறல் ஆனால் காங்கிரசுக்கு அதிக உதறல் என்பதை புரிந்த்து கொண்டு அதற்கேற்ப அவர்கள் மிரட்டுவதாக சோ அவர்கள் கூறினார்.
பிறகு பேசியது பூபால் என்பவர். அவரது கேள்விகள், கலைஞர் கனிமொழி மத்திய காபினெட்டில் பதவி பெறுவாரா? மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது பற்றி கருத்து?
முக அவர்களுக்கு பிறகு திமுக பிளவுபட்டால் பாஜக நல்ல நிலைக்கு தன்னை கொண்டுவர இயலுமா? துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங்குகளுக்கு ஏன் ஹிந்து, எக்ஸ்பிரஸ் ஆகியவற்றிமன் ஆசிரியர்களை அழைப்பதில்லை? இவற்றுக்கு சோ அவர்கள் அளித்த பதில்கள்: கனிமொழி கலைஞரா? ஒத்து கொள்வதிற்கில்லை. முதலமைச்சரின் மகள் என்றால் என்ன வேண்டுமானாலும் கூறிவிடுவதா, தான்கூட கவிதை எழுதியிருப்பதாகவும் தன்னை அதற்காக கலைஞர் என்று கூறிவிட முடியுமா என்று கேட்டபோது, அரங்கத்திலும் வெளியிலும் சிரிப்பு. அவர் காபினெட் மந்திரி ஆவாரா என்பதற்கு மன்மோஹன் சிங்காலேயே கூட பதிலளிக்க இயலாது. பாவம் அவர். யாராவது கனிமொழி மந்திரியாவார் என்றால் சரி என்று சொல்லிவிட்டு போகிறார். ரொம்ப நல்லவர் அவர் என்று கூறும்போது சிரிப்பலைகள். மோடிக்கு அமெரிக்க விசா தராததால் இழப்பு அமெரிக்காவுக்குத்தானே தவிர மோடிக்கு அல்ல என்று கூறியபோது ஒரே கரகோஷம். இந்த விசா மறுப்பு நம்மவராலேயே பொய் பிரசாரத்தால் வந்தது என்றும் தெளிவுபடுத்தினார். பாஜக தன்னை முன்னுறுத்தி கொள்ள இயலும், ஆனால் அதற்காக நிறைய உழைக்க வேண்டியிருக்கும். அதை இப்போதிலிருந்தே செய்தல் நலம். மற்ற பத்திரிகையாளர்களை அழைப்பது பற்றிய கேள்விக்கு தான் ஏற்கனவே அக்பர், அருண் ஷூரி ஆகியவர்களை அழைத்திருப்பதை நினைவுபடுத்தினார். உள்ளூர் பத்திரிகை ஆசிரியர்களுக்கு தர்மசங்கடமான நிலைதர வேண்டாம் என்பதாலேயே அவர்களை அழைப்பதிலை என்றும் கூறினார்.
பிறகு தசரதன் என்னும் வாசகர் பேசினார். அவரது கேள்விகள்: கூட்டணிக்குள் பாமகவின் செயல்பாடு, மோடி அரசை போல பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் சந்திரபாபு நாயுசடு அரசு ஏன் வெற்றி பெறவில்லை, நந்திக்ராமால் ஏதேனும் விளைவுகள் உண்டா, ஸ்ரீலங்காவின் தற்போதைய நிலை ஆகியவற்றை பற்றி கேட்டார். சோ அவர்களது பதில் சுருக்கமாக. ஜெயலலிதா அவர்கள் எடுத்து கொள்ளும் விஷயங்கள் வெறுமனே வார்டுகள் பிரச்சினைகளாக உள்ளன. மயிலை சித்திரக்குளம் பகுதி போன்ற இடங்களை பற்றி மட்டும் பேசுகிறார். அதனால் சித்திரகுளம் ஓட்டுகள் கிடைக்கலாம் அவ்வளவே. ஆனால் ராமதாசோ எல்லாவற்றையும் பற்றி பேசுகிறார். ஆட்சியாளர்கள் முன்னே செல்லவும் முடியாது பின்னே செல்லும் வழியின்றியும் செயல்படுகிறார். இதுவும் ஓவரே. ஜெயலலிதா இதை நகல் செய்யும்படி ஒன்றும் இல்லை. ராமதாஸ் அவர்களது செயல்பாடு கூட இருந்து கழுத்தை அறுத்தலுக்கு ஒப்பானது. இதில் போற்றும்படி ஒன்றும் இல்லை. நாயுடு வெற்றியடையாததற்கு காரணம் அவரது அபிவிருத்தி திட்டங்கள் எல்லோரையும் போய் சேரவில்லை, ஆனால் மோடி அவர்களோ எல்லோருக்கும் முன்னேற்ற திட்டங்கள் தந்தார். இலங்கைக்கான தீர்வு சமஷ்டி முறை அரசே. தான் 1971-லேயே அங்கு ஒரு மீட்டிங்கில் இதைக்கூறி தனி ஈழம் வேண்டாம் என்று கூறியதாகவும் அப்போது கோபப்பட்ட ஒருவர் (அந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்தவர்) சில ஆண்டுகள் கழித்து அவரிடம் வந்து தானும் இப்போது அதை உணருவதாகவும் கூறியதை சோ அவர்கள் எடுத்துரைத்தார். யாழ் நகரை சுடுகாட்டாக ஆக்கிவிட்டனர். ச்ர்லங்கா அரசு சரியாகச் செயல்படவில்லை. ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் செயல்பட்டிருந்தால் நல்லது நடந்திருக்கும், ஆனால் அப்படி நடந்தால் தங்களது முக்கியத்துவம் போய் விடும் என்று எண்ணி புலிகள் எல்லாவற்றையும் கெடுத்தனர் என்றும் சோ கூறினார்.
இப்போது பேச வந்த வாசகர் சுரேஷ்மபாபு. அவர் தொட்ட விஷயங்கள் நெல்லையில் நடந்த இளைஞரணி திருப்பு முனையா, தேவகௌடா விஷயம், மன்மோஹன் சிங் லாலு பிரசாத் யாதவ் ஒப்பிடுதல் ஆகியவை. சோ அவர்கள் லாலு அவர்களுடன் ஒப்பிடும் அளவுக்கு மன்மோஹன் சிங்கை தாழ்த்தக்கூடாது என்றார் (அரங்கத்தில் சிரிப்பு). திறமை வாய்ந்த மன்மோஹன் சிங் இப்போது வெத்துவேட்டாக ஆக்கப்பட்டு விட்டார். அது அவர் தவறல்ல. தேவகௌடா பயங்கர கேலிக்கூத்து. ஆனால் அதே சமயம் பாஜகவும் சரியாக செயல்படவில்லை. மாயாவதியிடம் ஏமாந்ததுமே சுதாரித்திருக்க வேண்டும். அல்லது முதலில் கௌடா அழுகுனி ஆட்டம் ஆடியபோதாவது சுதாரித்திருக்க வேண்டும். அவர்களது நல்ல நேரம் ஆட்சி அமைக்க இயலவில்லை, இல்லாவிடில் கௌடாவும் குமாரசாமியும் இன்னும் நாற அடித்திருப்பார்கள். பாஜகவுக்கு ஆதரவு கர்நாடகாவில் அதிகரித்துள்ளது. அதனாலேயே தேர்தல் கமிஷன் இப்போது தேர்தலை கொண்டு வராது என அவர் அபிப்பிராயப்பட்டார். தேர்தல் கமிஷன் தன்னிச்சையான அமைப்பு என்று கூறும்போது அரங்கத்தில் சிரிப்பு, கைதட்டல். நெல்லையில் என்ன திருப்புமுனை வேண்டியிருக்கிறது. எல்லாமே வட்டமாகத்தான் செயல்படுகிறது. இதில் ஏது திருப்புமுனை என்று தன் கையால் காற்றில் ஒரு சுழி செய்தார்.
வாசகர் எழிலரசு அடுத்து வந்தார். அவர் தொட்ட விஷயங்கள்: விஜயகாந்த் வாய்ப்பு, ஜெயலலிதாவுடன் கூட்டணி வாய்ப்பு, இளைஞர்களுக்காக சோ அவர்கள் ஒரு ஊக்கத்தொடர் எழுத வேண்டும். சோ அவர்களது பதில்கள்: விஜயகாந்த் தனியாக வெற்றி பெற இயலாது. பல இடங்களில் மூன்றாவதாக வரலாம், பல இடங்களில் டிபாசிட் போகலாம். திமுக மற்றும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை தட்டி பறிக்கலாம். அதிமுக, பாஜக மற்றும் விஜயகாந்த் ஒரே கூட்டணியில் வந்தால் நல்ல வெற்றி வாய்ப்பு. ஆனால் அது உண்டாவதற்கான சாத்தியக்கூறுகள் கம்மி. விஜயகாந்த தனக்கு இருக்கும் ஆதரவை அதிகமாக மதிப்பிடுகிறார். தனக்கு வரும் கூட்டங்களைப் பார்த்து விஜயகாந்த் மலைக்கக் கூடாது என்றார். தனக்கும் 1971-ல் இதற்கு மேல் கூட்டம் வந்தது என்றும் ஆனால் பலன் ஏதும் இல்லை என்றும் கூறினார். நெல்லை ஜபமணிக்காக தான் பேசிய மீட்டிங்குகளில் கூட்டம் அதிகம், ஆனால் ஜபமணி தோற்றார் என்றும் கூறினார். ஊக்கத் தொடர் பற்றி அவர் சொன்னது என் காதில் விழவில்லை.
இப்போது பேசியது சுவாமிநாதன் என்னும் வாசகர். அவர் கேட்ட கேள்விகள் வாஜ்பேயிக்கு பாரதரத்னா அளிப்பது, வரும் மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜகவின் வாய்ப்பு ஆகியவை பற்றியது. பாரதரத்னா கோரிக்கை நியாயமானது, ஆனால் கேட்ட முறை சரியில்லை. இப்போது எல்லோருக்குமே கேட்க ஆரம்பித்து விட்டனர். விட்டால் தேவகௌடாவுக்கும் கேட்பார்கள் என்றபோது ஒரே சிரிப்பு, கைதட்டல். ஆனால் இம்மாதிரி விருதுகளுக்கு பொருள் ஒன்றும் இல்லை. தானும் விருது அளிக்கும் கமிட்டியில் உறுப்பினராக இருந்ததாகவும், விசாரித்தபோது இதனால் பிரயோசனம் ஏதும் இல்லையென்றும், ரயில் ரிசர்வேஷனில் கூட முன்னுரிமை கிடைக்காதென்றும் கூறினார். குடியரசுத் தலைவர் கையால் வாங்கிய பெருமை வேண்டுமானால் கிடைக்கும். போயும் போயும் வாஜ்பேயி அவர்கள் பிரதீபா பாட்டில் கையில் வாங்க வேண்டுமா என்று கேட்டு நிறுத்தியதும் மீண்டும் அவுட் சிரிப்பு எழுந்தது. ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு, எங்கேயிருந்துதான் இந்த அம்மையாரை தேடி பிடித்தார்களோ என்று அங்கலாய்த்தார் சோ. பேசாமல் கான்ஷிராமுக்கு பாரத்ரத்னா கொடுக்கலாம், அவர் உயிருடன் இல்லாததால் அவருக்கு தனிப்பட்ட முறையில் கேவலம் வந்துவிடப்போவதில்லை. பிறகு பாஜகாவுக்கு ஆதரவு மாநிலங்களை பட்டியலிட்டார் அவர். முக்கியமாக பல மாநிலங்களில் பாஜக நல்ல கூட்டணிகளை தேட வேண்டும் என்றும் கூறினார். நரேந்திர மோடி அவர்களுக்கு இசுலாமியரும் வோட்டளித்தனர். சிறுபான்மையினர் சாதாரணமாக வெற்றி பெறும் கட்சிக்கே ஓட்டளிப்பார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு முக்கியம். இதை மனதில் பாஜக வைக்க வேண்டும். பார்ப்பனர்களை பற்றிப் பேசும்போது கலைஞர் அவர்கள் சிறுபான்மையினர் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் அதுவே இசுலாமியர்கள் விஷயத்தில் பிளேட்டையே மாற்றுகிறார் என்றதும் அரங்கத்தில் சிரிப்பு. அது அவரது வழமையான இரட்டை நிலை என்று முத்தாய்ப்பாஜகக் கூறியதும் கைதட்டல்.
அடுத்து பேசியது ஜி. நடராஜன் என்னும் வாசகர். அவர் கேட்ட கேள்விகள் இந்தியா சீனா உறவு, நேப்பாள் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைத் தொட்டன. சோ அதற்கு கூறியது: சீனா எப்போதுமே நம்பத்தகுந்ததல்ல. நேப்பாளிலோ மாவோயிஸ்டுகள் என்ன செய்தாலும் அதற்கு எதிராகப் போவதே நலம். இங்கு பூனை, எலி, வேடன் கதையைக் கூறினார். சோ அவர்கள் எழுதிய மகாபாரதத்தில் அது வருகிறது.
கடைசியாகப் பேசிய வாசகர் கோவிந்தராஜுலு. அவர் கேட்டது இலவச டிவி பற்றியது. அதில் தவறே இல்லை என்றும் டிவி நல்ல விலைக்கு விற்று பணம் பண்ணலாம் என்று சோ சிரிக்காமல் கூற அரங்கில் ஒரே சிரிப்பு. இரண்டு ஏக்கர் நிலம் என்பது கையளவு நிலம் ஆகிவிட்ட நிலையில் அரசு டிவியைத்தான் நம்ப வேண்டியுள்ளது.
பிறகு சோ அவர்கள் பேசினார்.
அது அடுத்த பதிவில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
1 day ago
42 comments:
ரொம்ப நன்றி டோண்டு சார்!
உங்கள் கடமையுணர்வு உண்மையிலேயே வியக்க வைக்கிறது! நேரில் பார்த்தது போல ஒரு அற்புதமான கவரேஜ். உங்களுடைய கருத்துக்களை கொஞ்சமும் கலக்காமல் ஒரு தேர்ந்த பத்திரிகையாளரைப் போன்ற ஒரு நேர்மையான, தெளிவான நடை. (உங்கள் தந்தை இருந்திருந்தால் உண்மையிலேயே மகிழ்ந்திருப்பார் - பத்திரிகையாளர் அல்லவா?).
சோ அவர்கள் இளைஞர்களுக்காக ஒரு தொடர் எழுதுவதைப் பற்றி என்ன சொன்னார் என்று துக்ளக்கைப் படித்து தெரிந்து கொள்கிறோம். ஆனால் கூடிய சீக்கிரம் நீங்கள் ஒரு பதிவுத் தொடரை இளைஞர்களுக்காக கண்டிப்பாக ஆரம்பிக்க வேண்டும்.
உங்களின் இத்தனை வருட அனுபவம் வெறும் கும்மிகளுக்கு பதில் சொல்வதில் வீணாகக் கூடாது.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
//மோடிக்கு அமெரிக்க விசா தராததால் இழப்பு அமெரிக்காவுக்குத்தானே தவிர மோடிக்கு அல்ல என்று கூறியபோது//
ஒரு ரெளடி இன்னொரு ரெளடியை ஆதரிக்க மாட்டான் என்பது பள்ளியை அபகரித்த ரெளடிக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே
சோ , மோடி வகையறாக்களின் கூட்டத்தை நல்லா அனுபவிச்சு புளங்காகிதம் அடைஞ்சிருக்கீங்க...
செட் அப் கேள்வி பதில் செசன்?? :) கலைஞர் முரசொலில எழுதுவாரே, அது மாதிரியா?? :)
//கலைஞெர் கனிமொழி//
இந்த மாதிரி செட் அப் கேள்வி தேவையா??
//வாஜ்பேயி அவர்கள் பிரதீபா பாட்டில் கையில் வாங்க வேண்டுமா என்று கேட்டு நிறுத்தியதும் மீண்டும் அவுட் சிரிப்பு எழுந்தது//
இந்த துக்ளக் விழா வில் இது தேவையா?? தனி மனித காட்டுமிராண்டி தாக்குதல்
தேவையா?? அருவருப்பான பதில் இது..
அது என்ன.. பெண்கள் என்றாலே சோ வுக்கு இளக்காரம்.. ஜெ தவிர...
ஒரு வேளை ப்ரதீபாவை பா ஜ க முன்மொழிந்திருந்தால் சோ இப்போது பேசியதே வேற மாதிரி இருந்திருக்கும் என்பதை டோண்டு உணரவேண்டும்..
மொத்தத்தில் இது துக்ளக் விழாவாக இல்லை.. அதிமுக பஜக மோடி போற்றுதல்,, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேவகவுடா, லாலு, ப்ரித்தீபா ஆகியோரின் மீது காழ்ப்புணர்வு தாக்குதல் நடத்தப்பட்ட மறைமுக பா ஜ க சட்சி மீட்டிங்...
very first report in blog
//உங்கள் தந்தை இருந்திருந்தால் உண்மையிலேயே மகிழ்ந்திருப்பார் - பத்திரிகையாளர் அல்லவா?//
இதைவிட அதிக மகிழ்ச்சி அளிக்கும் பாராட்டை எனக்கு வேறு யாரும் தர முடியாது. நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தனிமனிதத் தாக்குதல் அதுவும் சோ செய்வாரா? என்ன கேள்வி இது?
செட் அப் கேள்விகள் எல்லாம் சோ விஷயத்தில் நடக்காது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றாக கவர் செய்துள்ளீர்கள்.
//..தான் 1971-லேயே அங்கு ஒரு மீட்டிங்கில் இதைக்கூறி தனி ஈழம் வேண்டாம் என்று கூறியதாகவும் அப்போது கோபப்பட்ட ஒருவர் (அந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்தவர்) சில ஆண்டுகள் கழித்து அவரிடம் வந்து தானும் இப்போது அதை உணருவதாகவும் கூறியதை சோ அவர்கள் எடுத்துரைத்தார்...//
முதலில் 1971இல் தமிழ் ஈழம் என்ற கோரிக்கையே இருக்கவில்ல! இதில் மீட்டிங் போட்டார்களாம், இதில் இவர் வந்து வெண்டாம் என்றாராம்!! நல்ல ஜோக்தான்!!!ஈழக்கோரிக்கை வந்தது 1976இல் தான் என்பது தெரியவில்லை போலும்!!!!
1977 இல் இருந்து 2000 வரை ஈழம் வேண்டாம் மாநில சுயாட்சி போதும் என்ற ஒருவர் ஈழக்கோரிக்கையின் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மருமகன் பேராசிரியர்.வில்சன். அனால் அவர் இறக்குமுன்னர் மனம் வருந்தி ஈழமே ஒரே வழி என சொல்லிவிட்டார்! அவர் மட்டுமல்ல இன்னொருவர் இந்திய வம்சாவழித்தமிழர்களின் குடியுரிமையை ஸ்ரீலங்கா பறிப்பதற்குத்தோள் கொடுத்த ஜி.ஜி.பொன்னம்பலத்தின் மகன் குமார்.பொன்னம்பலம். 1996 வரை அவர் தன்னை சந்திரிகாவின் சகோதரன் என சொல்லி பெருமைப்பட்டு வந்தார். இறுதிக்காலங்களில் ஈழத்துக்காக உயிரைக்கொடுத்தார். இப்பட்டியல் தேவை எனின் நீளும். என்னால் பெயர்கள் சொல்ல முடியும். சோ போல 'ஒருவர்' என சொல்லி மழுப்பத் தேவையில்லை!!!!
///யாழ் நகரை சுடுகாட்டாக ஆக்கிவிட்டனர். ச்ர்லங்கா அரசு சரியாகச் செயல்படவில்லை.////
அப்பொ என்ன செய்யலாம். 60 வருடங்கள் சரியாக செயற்படவில்லை. பாரதப்போரில் சரியாக செயற்படாத கெளவர்களிடம்..ஐந்து நாடு..ஐந்து நகரம்....ஐந்து ஊர்..இல்லையேல் அடு போர் வேண்டியதை நியாயம் செய்பவர்கள் சும்மா கதை அளப்பது வேடிக்கைமட்டுமல்ல துரோகம்!!!
// ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் செயல்பட்டிருந்தால் நல்லது நடந்திருக்கும், ஆனால் அப்படி நடந்தால் தங்களது முக்கியத்துவம் போய் விடும் என்று எண்ணி புலிகள் எல்லாவற்றையும் கெடுத்தனர் என்றும் சோ கூறினார். ///
இவ்வொப்பந்தத்தில் முக்கிய பங்குகொண்ட ஜே.என்.திக்சீட், மற்றும் கேர்னல்.சர்தேஷ்பாண்டே, கேர்னல்.ஹாக்ரத்ட் சிங், ஜெனரல்.மேத்தா....போன்றவர்கள் ஜே.ஆர்.பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என சோ அறியவில்லையா?? வேடிக்கை தான்!!!சரிதான் போகட்டும் இந்திய ராணுவத்தின் கைப்பொம்மை திரு.வரதராஜப்பெருமாள் இந்திய ராணுவத்துடன் தப்பி கடைசி விமனத்தி ஏறும்போது தமிழீழ பிரகடனம் செய்தார் , ஏன் ????சோ அவர்களே ஈழப்பிரச்சினை துக்ளக் கேள்வியும்ம் நானே பதிலும் நானே இலும் ஆழமானது. காலை விட முன்னர் ஆழம் பார்க்கவும்!!!!
எப்படியாவது மோடியை பேசவிடாமல் செய்துவிடவேண்டும் என்று நினைத்து த.மு.மு.க தொ(கு)ண்டர்கள் செய்த சதி வெற்றி பெறவில்லை, ஆகவே இங்கே அவர்களுக்கு டீ, தம் வாங்கிக் கொடுத்து வரும் வாக்காளன் என்பவன் வந்து வயித்தெரிச்சலை வாந்தி எடுத்திருக்கிறான். வக்காளன் ஒரு வலையுலகத் துலுக்கன்.
பூவண்ணன்,
அமேரிக்கா மோடிக்கு விசா மறுத்தது, அமேரிக்காவின் சொந்த முடிவு அல்ல. அது அங்கு வாழும் இந்திய செக்குலர்வியாதிகள் செய்த ரௌடித்தனத்தின் முடிவு.
மிக்க நன்றி ராகவன்!
கடந்த 25 ஆண்டுகளாக துக்ளக் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டுவிட்டு, இந்த ஆண்டு உட்கார இடம்கிடைக்காது என்ற பயத்தில் கூட்டத்தைத் தவிர்த்த எனக்கு உங்கள் சொற்சித்திரம் டிவியில் நிகழ்ச்சியைப் பார்த்ததுபோல இருந்தது.
கண்ணியம், அஞ்சாமை, நேர்மைக்குப் பெயர்போன சோவின் துக்ளக்விழாவை மிக அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
//
லலிதா குமாரமங்கலம்,
//
இவர் திரு. ரங்கராஜன் குமாரமங்கலத்தின் உறவா ?
லலிதா குமாரமங்கலம் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி என அறிகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Lalitha Kumaramangalam is the sister of Rangarajan Kumaramangalam. She is a graduate in Economics from St Stephens College, Delhi and an MBA from Madras University, she has been running Prakriti, an NGO.
She contested as BJP candidate and lost the 2004 Pondicherry MP election to PMK candidate Dr.Ramadoss a Professor of Economics. It is said that the Prof. had lost most of his personal wealth by losing previous elections and finally won in 2004.
Wonder what he did after winning, recover his losses or work for the people?
Modi advocates development on mass movement
Chennai, Jan.14 Gujarat Chief Minister Narendra Modi today said development should be focused on mass movement and 21st century in the globalised era belongs to India.
Addressing the 38th anniversary function of the Tamil Weekly 'Thuglak', he said Gujarat poll verdict had proved beyond doubt that there is hunger for development among the people of the country.
During the freedom struggle, many Indians struggled, but it was Mahata Gandhi, who turned the struggle into a mass movement and got us Independence, he added.
Mr Modi said Gujarat verdict proved that anti-incumbency theory was only a myth. The development and governance would lay a decisive role in deciding election victories, he added.
The Chief Minister said inclusive growth was the need of the hour for development. The voters responded positively to the claims of having fulfilled promises, he added.
Mr Modi said Gujarat during his last tenure witnessed all round groth in agriculture, education, industries and infrastructure. One should not perform and deliver the goods by keeping only the election results in mind, he added.
He said Gujarat people had entrusted additional responsibility on him when they elected him with absolute majority. The development should be taken as a movement by ensuring peole's participation, he added.
He alleged that the UPA Government at the Centre was unable to fight against terrorism, which is a major challenge in the country.
There was no terrorist attack during his tenure and it is this sense of security, which had lingered in the minds of people, while voting back the BJP to power. School drop-outs had been reduced from 49 per cent to three per cent in the last three years and in another two years, the Government would bring it down to zero, he added.
He said poverty need to be alleviated at economic level and not at religious level. "My view of secularism is overall development, in which every citizen will be a beneficiary", he added.
He said when he could succeed with the same system and the constitution that governed the entire country, what prevented the others from following his footsteps.
Published: Tuesday, January 15, 2008
http://www.chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID=%7B9EB2F075-9AE2-4792-95D4-E052AAB0AD1C%7D&CATEGORYNAME=CHN
//காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேவகவுடா, லாலு, ப்ரித்தீபா ஆகியோரின் மீது காழ்ப்புணர்வு தாக்குதல் நடத்தப்பட்ட மறைமுக பா ஜ க சட்சி மீட்டிங//
தம்பி இவுகள தாக்காம என்னலே பண்ண சொல்லுற. இவுக அல்லாரும் செய்த நல்லத விட கெட்டது அதிகம்லே. கேனதனமாயிருக்கு உன் வாதம், பாத்து பேசு.
//இங்கு பூனை, எலி, வேடன் கதையைக் கூறினார். சோ அவர்கள் எழுதிய மகாபாரதத்தில் அது வருகிறது.//
வியாசர் எழுதிய மகாபாரதம் அல்லவா அது? சோ செய்தது மறுஒலிபரப்பு மட்டும்தானே.
To satisfy Cho's ego, TN govt deployed 5000 police for a non-governmental, 'private newspaper aandu vizhaa'. Must have cost atleast 30 lakhs for their salary, wireless, food etc. As a good tax payer, You should have asked Cho if he is going to pay this to the tamilnadu govt.
You can give Re.2 rice to 2 lakh people with that money.
I think you will publish this pinnootam
--aathirai
//To satisfy Cho's ego//
இது என்ன கலாட்டா, அனானி ஆதிரைஜி? உங்களுக்கே தமாஷாக இல்லையா? மோதி அவர்கள் வருவதை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியது யார்? இப்படி ஒரு பாதுகாப்பை தமிழக அரசு கொடுக்காமல் இருந்து எதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?
தமிழக அரசின் நிலைப்பாடு இந்த விஷயத்தில் குறை கண்டுபிடிப்பதற்கு உரியது அல்ல.
1971இல் தனி ஈழம் கேட்டோமா?. இது என்ன சார் வம்பு?
சோ இலங்கை ஜனாதிபதியிடம் 'கொளரவம்' கிடைத்த பின்னர்தான் தீவிர ஈழத தமிழர்கள் எதிர்ப்பாளராக மாறினார். அது நடந்தது 1980க்ளின் ஆரம்பத்தில்.
சோ சொன்னால் கேட்கும் மனிதர்களுக்கு புத்தி எங்கே போய்விட்டது?
ஒரு ஈழத் தமிழன்
பிஞ்சு பிள்ளைக் கறி மட்டும் போதாது கருவிலிருக்கும் கருக்குஞ்சின் ரத்தத்தையும் உறிஞ்சிய நவீன டிராகுலா மோடிக்கு காவடி தூக்கும் டிராகுலா கூட்டமே இன்று அதிகார மமதையில் நீ போடும் ஆட்டம் நீடிக்காது. அதி விரைவில் உன் ஆட்டத்தை முடிக்க திரண்ட அணிதான் நீ நேற்று கண்ட அணி
//TN govt deployed 5000 police for a non-governmental, 'private newspaper aandu vizhaa'. Must have cost atleast 30 lakhs for their salary, wireless, food etc. As a good tax payer, You should have asked Cho if he is going to pay this to the tamilnadu govt.//
Police is already being paid salary with our tax money. Is there any special salary paid for bandobust duty to this 'private newspaper aandu vizhaa'?
I agree there will be expenses related to food and other administrative expenses but paying salary is out of question.
Isn't there any charges for providing bandobust for big functions? If not the police department should charge whatever additional expenses they incur.
And by the way this charge should be applicable for all functions. Only for pure govt. related ones like republic day etc the expenses should be paid by the govt. exchequer.
Otherwise bandobust charges for all other private / non-governmental activities should be paid by the respective beneficiaries.
My Dear Tamil Bloggers
Those who are having dogmatic views on any upper caste or others (Muslims) are actually happen to be ended as self made fools why because these sort of dogmatic individuals are not very much aware of their own caste or communities origins like is there any one who can able to say his or her caste which was existed first in this kind land of nature? If yes who is that person and what is name and where is born? I am sure no one but the existing biases are for only time being and at some point of time all will demise without warning from anyone. Therefore, be aware and don’t be self-foolish or folly by yourself which is neither useful to you nor others. The above comments are not the real warning but the natural order. Let’s learn to live with harmony not with muddled man which is of no meaning other than self-foolish.
//
பிஞ்சு பிள்ளைக் கறி மட்டும் போதாது கருவிலிருக்கும் கருக்குஞ்சின் ரத்தத்தையும் உறிஞ்சிய நவீன டிராகுலா மோடிக்கு காவடி தூக்கும் டிராகுலா கூட்டமே இன்று அதிகார மமதையில் நீ போடும் ஆட்டம் நீடிக்காது. அதி விரைவில் உன் ஆட்டத்தை முடிக்க திரண்ட அணிதான் நீ நேற்று கண்ட அணி
//
டேய் டேய், நிறுத்துங்க டா.
ஆரம்பத்திலிருந்தே பொய் சொல்லி ஏமாத்துறது தான டா உங்க குல்லா வோட வேலை. அந்த கருவிலிருக்கும் குழந்தையைக் கொன்றது எல்லாம் பொய் என்று அந்தக் குற்றத்தைச் சுமத்திய தே$#யா அருந்ததி ராயே ஒப்புக் கொண்டாள். உனக்கு என்ன டா வலிக்குது.
மோடி வந்து போனதற்கு தமிழக அரசு செய்த பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு உன்ன மாதிரி அடிப்படைவாதி தான் டா காரணம். அதுக்குத் தூக்கு பிடிக்கும் தமிழ்நாட்டு முக்கில் மூத்திரம் போவோர் கழகம் (TMMK) தான் அந்த செலவை ஏற்க வேண்டும்.
சைட் பிஸினஸா நீங்க freelance ரிப்போர்ட்டராக வேலை செய்யலாம் :) பதிவுக்கு நன்றி.
அனானி ஆதிரைக்கு, கிரிக்கெட் மேட்சுகளுக்கு ஓசியில் தரப்படும் பந்தோபஸ்து பற்றித் தெரியாதா ? பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு BCCI ஒரு பைசா தருவதில்லை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு :(
மேலும், பதவியில் இருப்பவர்கள் வீணாக்கும், சுரண்டும் பணத்தை கணக்கில் எடுத்தால், இதெல்லாம் ஜுஜுபி என்பது என் தாழ்மையான கருத்து :) இது விவாதிக்கப்பட வேண்டிய மேட்டரே இல்லை என்று கூட கூறலாம் !!!!
எ.அ.பாலா
டோண்டையா, இந்தப் பதிவுக்கு மிக மிக நன்றி.
//முதலில் 1971இல் தமிழ் ஈழம் என்ற கோரிக்கையே இருக்கவில்ல!//
ஆயுதம் ஏந்திய போராட்டாம்தான் இல்லையேவொழிய கோரிக்கை, மேடைப்பேச்சு எல்லாம் இருந்துச்சு அப்பு இருந்துச்சு!
//1977 இல் இருந்து 2000 வரை ஈழம் வேண்டாம் மாநில சுயாட்சி போதும் என்ற ஒருவர் ...... அனால் அவர் இறக்குமுன்னர் மனம் வருந்தி ஈழமே ஒரே வழி என சொல்லிவிட்டார்//
அப்படின்னாக்கா, 1977இல் இருந்து 2000 வரை ஈழம் வேண்டும் ஈழம் வேண்டும் என்ற பலர் (குறிப்பாக இசுலாமியர்), இன்று ஒன்றுபட்ட லங்காதான் வேணுமின்னு அடம்பிடிக்கிறாஹளே? இப்ப என்னா சொல்றீஹ? இப்ப என்னா சொல்றீஹ?
அத்தவுடுயா, நாங்க தமிழங்களே இல்லங்கறாங்களே அந்து லங்கா முஸ்லீம்ஸை என்னான்னு சொல்றது. 'சிங்கள-பவுத்த இனவெறி சக்திகள் சதி செய்து எங்களைப் பிரித்துவிட்டது' அப்படீன்னு சொல்லுறதை விடுதலைப் புலிகளேகூட இப்போ நிப்பாட்டிட்டாங்க (அவிங்க மானஸ்தங்க, அதுபோக அங்கெல்லாம் மைனாரிட்டி ஓட்டெல்லாம்தான் கிடையாதே. ஹிஹி)
//யாழ் நகரை சுடுகாட்டாக ஆக்கிவிட்டனர்//
ஆமாம்யா ஆமாம்! லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்னு குவிச்சு உசிரோட இருக்குறவங்களையும் நடைப்பிணமாக உலாத்த விட்டதுக்கென்னமோ லங்கா (ஸ்ரீ என்ற மரியாதை தேவையா அந்த சிங்கள இனவெறியாளனின் நாட்டுக்கு?) அரசுதான் முழுமுதற்காரணம். அதை சோ ஒண்ணும் இல்லீன்னு சொல்லலியே? 1983 படுகொலைகளை stongest termsல் கண்டிக்கத்தானே செஞ்சாரு? ஒனக்குத் தெரியுமா, ராம கோபாலன், இந்து முன்னணி எல்லாரும்தான் ஈழத்தமிழனுக்கு ஆதரவாக் கொரல் விட்டாய்ங்க. தமிழர் அமைப்புகள் பெங்களூர்லியே ஊர்கோலம் போனாங்க தெரியுமா? டில்லிலேர்ந்து வந்த அடல்பிஹாரி வாஜ்பாயும் வந்து கலைஞரோடு ஒண்ணாப் போராட்டத்தில நின்னாரு (அது தெரியல, ஆனா ஒண்ணா போட்டோவுக்கு ரெண்டு பேரும் போஸ் கொடுத்தாங்க) ஈழத்தமிழருக்காக.
தோ பாரு, ஈழத் தமிழருக்கு தமிழ்நாட்டுல இருக்குற எல்லாத் தமிழனும்தான் ஆதரவுதரத் தயாரா இருக்கான் (விதிவிலக்கே இல்லாம). ஆனா, விடுதலைப் புலிகளையோ, தனித்தமிழ் ஈழத்தையோ ஆதரிக்கோணுமின்னு நீ சொன்னீன்னாக்கா, அடுத்த செகண்டே S.Ve. Sekar நாடகத்துல வராமாதிரி disappear ஆயிடுவானுங்க நம்பத் தமிழ்நாட்டுத் தமிழனுங்க - 'ஆம்மா நான் இப்ப ழொம்ம்ப ஸ்டெடியாக்கும்'னு சொல்லிக்கின்னே கீழேவிழகுற மாதிரி ஸ்டெடியானவங்க கொள்கைல.
//ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் செயல்பட்டிருந்தால் நல்லது நடந்திருக்கும், ஆனால் அப்படி நடந்தால் தங்களது முக்கியத்துவம் போய் விடும் என்று எண்ணி புலிகள் எல்லாவற்றையும் கெடுத்தனர் என்றும் சோ கூறினார்//
ஒப்பந்தம் backfire ஆனதற்கு புலிகள் மட்டுமா காரணம்? மார்க்ஸீய சித்தாந்தவெறிபிடித்த கொலைவெறி கும்பல் JVPஐ ஒடுக்கப் புலிகளோடு இரகசியமாய் கைகோர்த்து IPKFஐ வாபஸ் வாங்கச் சொன்ன பிரேமதாசாவே காரணம்! சோ துக்ளக்ல இதை ரொம்ப தடவை சொல்லியிருக்காரே.
பிரச்சினை என்னான்னா - கணியன் பூங்குன்றன் அன்று சொன்ன ''யாதும் ஊரே ; யாவரும் கேளிர்'' எல்லாம் இன்னிக்கு தேதில out of fashion ஆயிடுச்சி இல்லியா, ''தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக் கென்று ஓர் நாடில்லை'' என்ற தொனியில் சொல்றாங்க சில தமிழ் சிந்தனையாளர்கள்.
தமிழனுக்கென்று நாடில்லைன்னு சொல்றாங்களே, தெலுங்கனுக்கென்றும் நாடில்லைதான், அவன் என்ன புலம்பவா செய்யறான்? தமிழ்நாட்டிலியே இருக்கும் தெலுங்கர்களைப் பாருங்கள் - லட்சக்கணக்கில் அவர்கள் வாழும் மதுரை, விருதுநகர், கோவை, சென்னை போன்ற நகரங்களிலே எப்படி உள்ளூர் தமிழர்களோடு ஒத்துழைந்து வாழுகிறார்கள்! திக, திமுக, அதிமுகவிலெல்லாம் போய் அதை என்னமோ அவிங்க கட்சிங்குற அளவுக்கு ஒன்றிப் போயிட்டாங்கன்னாப் பார்த்துக்கோங்களேன்! அட, அதனாலேயேதானே நாமும் விஜயகாந்தையும் வைக்கோவையும் பெரியாரையும் தமிழரல்லாதவர் என்ற கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லையோ என்னவோ?!.
கன்னடனுக்கென்று ஒரு நாடில்லையே என்று தீவிர கன்னட இன வெறி கும்பல் தலைவன் வட்டாள் நாகராஜ்கூட சொல்வதில்லையே. குஜாரத்தி கவுரம் (Gaurav Yathra) பற்றிப் பிளிரிய நரேந்திர மோடிதான் குஜராத் தனி நாடாகணும் என்று சொன்னாரா? மராட்டிய இன வெறியும் பால் தாக்கரேயும் பார்த்தாவது நாம கத்துக்கிட்டோமா - இன,மான உணர்வு எது தேசிய உணர்வு எதுவென்று? அதுபோகட்டுமய்யா, ''தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை''ன்னு சொல்றாங்களே, மெய்யாலும் சொல்லோணுமின்னா, 'மலையாளி இல்லாத நாடில்லை'ன்னுதானே சொல்லோணும், மலையாளிகென்று ஒரு நாடில்லைன்னு அவன் புலம்பரானா, விட்டா நிலாலயே தட்டுக்கடை போடுவோமான்னு யோசிக்கரவந்தானே மல்லு கம்னாட்டி!
ஒரு பத்து வருஷத்துக்கு மின்னாடி, நாகாலாந்து தலைநகர் கோஹிமாவிலிருந்து ஒரு 40 கிமி தொலைவிலுள்ள ஒரு குக்கிராமத்துக்கு போவ நேர்ந்துச்சு. அடங்கொய்யா! அங்கேயும் நிக்குதான் ஒரு மல்லு! அப்படியே அந்த நாயர் டீக்கடைக்கு ரெண்டு கடை தள்ளிப் பார்த்தா, ஒரு மார்வாடி சேட்டு கடை! ங்கொக்கா மக்கா,பொளைக்கத்தெரிஞ்ச இவுங்கதாண்டான்னு நெனச்சுகிட்டேன்.
நாம் என்னடான்னா, 5 சதவிகித மைனாரிட்டி ஓட்டுக்காக, 3 சதவிகித பாப்பானைத் திட்டிக்கொண்டும், தமிழன்னு கத்திக்கிட்டும் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டுறோம்.
இது எல்லாத்தையும் விட height இன்னா தெரியுமா? நம்ப மாஸோகிஸ்ட் கம்யூனிஸ்ட்தான் - அதாங்க, நம்ப மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்! தமிழ்நாட்டுல வந்த நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவிச்சு கருப்புக் கொடி காட்டி கைதானாங்க, இல்லியா?. அதே மார்க்ஸிஸ்ட்கள் கேரளத்தில் மோடிக்கு கருப்புக் கொடியெல்லாம் காட்டவில்லை. நீங்க வேற! நெடும்பாஸேரி ஏர்போர்டிலாகட்டும், குருவாயூர் கோவிலிலாகட்டும், நரேந்திரமோடிக்கு நேற்று சகல மரியாதையும் உரிய பாதுகாப்பு ஏற்பாடும் கொடுத்து மோடியை அசத்தலா கவனிச்சுக்கிட்டாய்ங்க மார்க்ஸிஸ்ட் அரசின் காவல்துறையினர். டோண்டு ஐயா நீங்களே சொல்லுங்க இப்ப, மார்க்ஸிஸ்ட்டை மாதிரி நாலு கட்சி வேணுமில்ல, நல்ல entertainmentற்கு!
அனானி ஆதிரை அவர்களே,
இதில் சோ அவர்களின் ஈகோ எங்கிருந்து வருகிறது. மோடி ஒரு மாநிலத்தின் முதல்வர். இஜட் பாதுக்காப்புக்கு உரியவர். அவரை வெறுமனே குடைபிடஇத்து அழைத்து அரவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? அவர் பை சான்ஸ் என் வீட்டுக்கு வந்தாலும் அதே பாதுகாப்புதான் தரவேண்டும் அது அரசின் கடமை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
What happens to DMK meeting in nellai. So DMK paid the money for the police- Oh is it a government function? Any political party meeting is non-government activity. What happens to Maran's medical bills we could have further the development of India by miles with the crores spent.
தெரியாமல்தான் கேட்கிறேன் டோண்டு அவர்களே. தமிழ் மீதும், பகுத்தறிவாளர் மீதும், திராவிட சிந்தனையாளர் மீதும், மதசார்பின்மை மீதும் சாதி மத ஒழிப்பின் மீதும் ஏன் தங்களுக்கு இவ்வளவு வெறுப்பு? சோவையும், மோடியையும் இப்படி ஜால்ரா போட்டு எழுதும்போதே தெரிகிறதே.. ஏன் இப்படி?
//
தனிமனிதத் தாக்குதல் அதுவும் சோ செய்வாரா? என்ன கேள்வி இது?
செட் அப் கேள்விகள் எல்லாம் சோ விஷயத்தில் நடக்காது.
//
இலைக்காரன் நீங்க தானா?? ஆஹாஆஆஆ!!!!!!!!!! இது தெரியாம போச்சே!!!!!!!
The Tamil Eelam concept first came into political currency in 1959, when in the aftermath of the 'Sinhala-only' official language law of 1956, the 1958 abrogation of the 'Bandaranaike-Chelvanayakam Pact',
http://www.eelam.com/introduction/eelam_demand.html
\\ஆரம்பத்திலிருந்தே பொய் சொல்லி ஏமாத்துறது தான டா உங்க குல்லா வோட வேலை. அந்த கருவிலிருக்கும் குழந்தையைக் கொன்றது எல்லாம் பொய் என்று அந்தக் குற்றத்தைச் சுமத்திய தே$#யா அருந்ததி ராயே ஒப்புக் கொண்டாள். உனக்கு என்ன டா வலிக்குது.//
More info or any link please.
//பிறகு போலீசுக்கும் நன்றி தெரிவித்தார். அவர்கள் இவரிடம் இன்விடேஷன் லிஸ்ட், பாஸ் கொடுக்கப்பட்டவர்கள் லிஸ்ட் எல்லாவற்றையும் கேட்டார்களாம்//
இன்விடேஷன், பாஸ் எல்லாம் எதுக்கு?. முதுக தடவிப் பாத்தாலே போதுமே. சோ நடத்துற நிகழ்ச்சிக்கு வேற யாரு வரப்போறா?
//
தெரியாமல்தான் கேட்கிறேன் டோண்டு அவர்களே. தமிழ் மீதும், பகுத்தறிவாளர் மீதும், திராவிட சிந்தனையாளர் மீதும், மதசார்பின்மை மீதும் சாதி மத ஒழிப்பின் மீதும் ஏன் தங்களுக்கு இவ்வளவு வெறுப்பு? சோவையும், மோடியையும் இப்படி ஜால்ரா போட்டு எழுதும்போதே தெரிகிறதே.. ஏன் இப்படி?
//
தமிழ் மீது அவ்வளவு வெறுப்பிருந்தால் ஏன் டோண்டு தமிழில் வலைப்பதிவு எழுதுகிறார் ?
பகுத்தறிவாளர்கள், திராவிடச் சிந்தனையாளர்கள் இந்து சமயத்தை மட்டுமே தரக்குறைவாகப் பேசுவதை நிறுத்தும் வரை இந்த வெறுப்பு தொடரும்.
மதச்சார்பின்மை என்றால் என்ன ?
சாதி மத ஒழிப்பிற்கு இது வரை என்ன நடவடிக்கைகள் திராவிட ஓநாய்களான நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் ?
திராவிடச் சிந்தனையே ஒரு ஜாதி அடிப்படைச் சிந்தனை. பிராமணன் அல்லாத மேல் சாதித் தமிழர்களைத் தான் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்கிறீர்கள். ஜாதி இல்லாமல் போனால் திராவிடச் சிந்தனையும் இல்லாமல் போகும். அதனால் ஜாதியைத் தக்கவைத்துக் கொள்ள எல்லா முயற்சிகளும் எடுக்கிறீர்கள்.
சோவுக்கும், மோடிக்கும் ஜால்ரா எங்கே போடப்பட்டுள்ளது. கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும், ரௌடி அழகிரிக்கும் போடப்படும் ஜால்ராக்கள் தான் தமிழகமெங்கும் முழங்கிக் கொண்டிருக்கிறதே.
//சோவுக்கும், மோடிக்கும் ஜால்ரா எங்கே போடப்பட்டுள்ளது. கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும், ரௌடி அழகிரிக்கும் போடப்படும் ஜால்ராக்கள் தான் தமிழகமெங்கும் முழங்கிக் கொண்டிருக்கிறதே.//
அப்ஸல்யூட்லி ரைட் யுவர் ஆனர்!
//பகுத்தறிவாளர்கள், திராவிடச் சிந்தனையாளர்கள் இந்து சமயத்தை மட்டுமே தரக்குறைவாகப் பேசுவதை நிறுத்தும் வரை இந்த வெறுப்பு தொடரும்.//
எவன்யா பகுத்தறிவாளன் சிந்தனையாளன்? இந்துக்களிடம் சகிப்புத்தன்மை இருக்கும் வரை இந்து சமயத்தை இவன் தரக்குறைவாத்தான் பேசுவான். இதே நாய், போய் இஸ்லாத்தை தரக்குறைவாக பேசிப்பாக்கட்டுமே? பகுத்தறிவு, திராவிட சிந்தனை என்குற பேர்ல இஸ்லாத்தைப் பத்தி சில சந்தேகங்களை lightஆக touchபண்ணித்தான் பாக்கட்டுமே. இவிங்களுக்கு பகுத்தறிவும், திராவிட சிந்தனையும் சொல்லிக்கொடுத்தவன் மெக்காலே (Lord McCalay) என்கிற வெள்ளைக்காரன். அதனாலதான், மெக்காலே கிட்ட படிக்காத இலங்கைத் தமிழனிடம் அதிக இந்து உணர்வு இருக்கு. இன்னைக்கு கனடா, ஐரோப்பாவில் வாழும் இலங்கைத்தமிழன் இன்னாடான்னா அத்தினி இந்துக்கோயிலுக்கும் போறான் வரான், ஹரே ராமாங்கிறான், ஹரே கிஷ்ணாங்கிறான், அந்திராக்காரன், கன்னடத்துக்காரன், குஜராத்தி, பஞ்சாபி, மார்வாடிக்காரன் டெக்ஸஸ்லயும், ஹூஸ்டனிலையும், பர்மிங்காமிலையும், பாரீஸ்லையும் கட்டிய கோயிலுக்கும் போறான், குஜராத்தி, மார்வாரி, பஞ்சாபி, கன்னடன், தெலுங்கு, மலையாளின்னு எல்லா இந்துக்களோடையும் மிங்கிள் ஆகுறான் - இதைப் பார்த்து சிங்களனே ஆச்சர்யப் படுறான், இந்து சமயம் இவனுக்கு பெரிய advantageடான்னு.
போவட்டுமய்யா, பாம்பையும் பார்ப்பானையும் கண்டா கொதல்ல பார்ப்பனை அடின்னு இவனுக்குச் சொலிக்கொடுத்தவனே ஒரு ஒரிஜினல் தமிழனில்லையே. அதனாலதானே, சுயம்மா சிந்திக்கிற தமிழனெல்லாம் இன்னிக்கி இவனை ஓரங்கட்டிட்டான். அதான் பாப்புலாரிட்டிக்காக கலைஞர்-ஸ்டாலின்-ரவுடி அழகிரின்னு கத்திக்கினு கீரான்.
கொஞ்ச நாள் மின்னாடி ஞானி மேலயே வள்ளுன்னு விழுந்தானே. பாஜக-ஆரெஸ்ஸஸ், இந்து, சாமி, கோயில்ன்னு ஆதரவு தர சோவை எப்படி ஜீரணிப்பான் இந்த நாய்?!
//அவர் பை சான்ஸ் என் வீட்டுக்கு வந்தாலும் அதே பாதுகாப்புதான் தரவேண்டும் அது அரசின் கடமை.
//
next year cho will invite Bush. And you will pay for it !. Please dondu mama.
political parties should be billed too.
Here, in US my house alarm went off by mistake. The police guy came and told me, thousands of false alarms are distracting them from fighting real crime. etc...
In India, the main duty of police is to do vip duty.
It is true that Cho created unnecessary expense for the public.
-aathirai
////எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்படி 'மோடி' யை ஆதரிக்க முடிகிறது திரு.டோண்டு அவர்களே
?////
செந்தழல் ரவி,
போலியுடன் சேர்ந்து கொண்டு பலரையும் ஆபாசமாக திட்டியதாகட்டும், தரன் என்பவரை ரவுடி ரேஞ்சிற்கு சென்று வெட்டுவேன் என்று திட்டியதாகட்டும், பலருக்கும் ஆபாச பெயரில் தளம் திறந்ததாகட்டும்... அவ்வளவு அசிங்கமாக நடந்து கொண்டு பிறகு ஒரு பார்ப்பனர் வீட்டு பெண்ணை லவ் மேரேஜ் பன்னியதும் அந்தர் பல்டி அடிச்சியே, அதுக்கு உனக்கு குற்ற உணர்ச்சி வந்ததா இல்லையா?
கருந்தழல் கவி கூறுவது பஒப்புகொள்வதற்கில்லை. செந்தழல் போலியுடன் பழகியது அவரை பிடிக்கும் நோக்கத்துடன். அதில் வெற்றியும் பெற்றார். அதற்கு முதலில் போலியின் நம்பிக்கை பெற வேண்டும். நாய் வேஷம் போட்டால் குலைக்கத்தான் வேண்டும் என்று கூறுவதில்லையா.
ஆக, அந்த விஷயத்தில் செந்தழல் ரவி பெருமைக்குரிய காரியம்தான் செய்திருக்கிறார். அதுவே ரவியின் இன்னொரு நண்பர் போலியால் முதலில் பிளாக்மெயில் செய்யப்பட்டு, தற்சமயம் இன்னும் போலியின் வேலையை தன் சுயவிருப்பத்துடன் நிறைவேற்றி வருவதை பார்க்கும்போது ரவியை நீங்கள் இவ்வாறு கூறுவது தகாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஒரு பார்ப்பனர் வீட்டு பெண்ணை லவ் மேரேஜ் பன்னியதும//
ரவி சொல்லவே இல்லை. belated congratulations
//அதுவே ரவியின் இன்னொரு நண்பர் போலியால் முதலில் பிளாக்மெயில் செய்யப்பட்டு, தற்சமயம் இன்னும் போலியின் வேலையை தன் சுயவிருப்பத்துடன் நிறைவேற்றி வருவதை பார்க்கும்போது.//
யார் சார் அது. போலி பாவம் இரண்டவது முறை அவனால் நம்பிக்கை துரோகம் தாங்க முடியாது. மலெசியாவிலிருந்து ஆப்ரிக்காவுக்கு ஓடிவிடுவான்.
//In India, the main duty of police is to do vip duty.
It is true that Cho created unnecessary expense for the public.
-aathirai//
Dear Aathirai-
I appreciate your comment that bandobust expenses can be wasteful unnecessary expense for the tax payer.
But I pity people like you, because you are able to see unwanted expenses only when Cho or Modi is involved.
Recently TN govt. sanctioned money for production of a film about DK leader Periyar.
Did you call that wasteful expenditure?
Then there is a real koothu called Chennai Sangamam. A GO was issued with unlimited budgetary support from TN govt.
Did you call that wasteful expenditure?
Atleast do you accept these also as wasteful expenditure?
If your answer is no, Mr.Aathirai, I call you a hypocrite.
ஆதிரை, மா.சிவகுமார் போன்றவர்கள் உபதேசம் எல்லாம் ஒரு தரப்பினருக்குத்தான் கூறுவார்கள் என்பது தமிழ்மணமே அறிந்ததொன்று. இதில் என்ன ஆச்சரியம் உள்ளது?
மாசி அவர்கள் மோடியை கொலைகாரராக சித்தரிப்பார், ராஜீவ் 1984-ல் செய்தது எதில் சேர்த்தி என்றால், இரண்டு பதில்கள் வைத்திருப்பார். ஒன்று அப்போது தான் பிளாக் ஒன்றும் எழுதவில்லை, இரண்டு ஒரு தவறை இன்னொரு தவறால் சரி செய்ய முடியாது என்பது. அப்போதும் ஒப்புக்கு கூட ராஜீவ் காந்தி கொலைகாரர் என்ற ஒப்புதல் வராது.
நடுநிலையாளராக கருதப்படும் மாசி அவர்களே இப்படி என்றால், அடாவடி ஆதிரையிடம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க இயலும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
////அதுவே ரவியின் இன்னொரு நண்பர் போலியால் முதலில் பிளாக்மெயில் செய்யப்பட்டு, தற்சமயம் இன்னும் போலியின் வேலையை தன் சுயவிருப்பத்துடன் நிறைவேற்றி வருவதை பார்க்கும்போது.//
யார் சார் அது.//
ஒரு க்ளூ: அவர் பெயரில் லலு என்ற எழுத்துக்கள் வருமா?
Post a Comment