பத்மநாபன்
கேள்வி-1: வன்மத்தோடு ஜாதீயம் பேசும் நிலையிலிருந்து தமிழ் வலைப்பூவுலகம் மாறுவதற்கு வழியேயில்லையா ?
பதில்: அது எப்படி நடக்கும்? உண்மை என்னவென்றால், பெரும்பாலும் சாதி இல்லை என்பவன்தான் சாதியை தூக்கிக் கொண்டு அலைகிறான். அவர்களில் தலித்துகள்/பார்ப்பனர் இல்லாத மற்ற சாதியினர் தலித்துகள் மேல் வன்கொடுமை செய்யும்போது அதை பார்ப்பனீயம் என சௌகரியமாக பூசி மொழுகுகின்றனர்.
மற்றப்படி சாதி என்பது அவரவர் அஜெண்டாவுக்கு உகந்ததே.
நீச்சல்காரன்
கேள்வி-2: பிரெஞ்சு|ஜெர்மன் டு இங்கிலீஷ் மொழி பெயர்ப்பை கூகிள் செய்யும் பொது உங்கள் மொழி பெயர்ப்பின் தனிச் சிறப்பென்ன அல்லது கூகுளால் உங்கள் தொழில் பாதிக்கப்படுகிறதா?
பதில்: என்ன, என் தொழில் பாதிக்கப்படுமா? சான்ஸே இல்லை.
இது பற்றி நான் எனது ப்ரோஜ் மன்றத்தில் போட்டதை பார்க்கவும்.
There is a lot of (horror) stories about machine translation. My favorite story for the last thirty years goes like this.
The sentence "Out of sight, out of mind" is well known. If you do not see a person for a long time, you tend to forget him. This is true of really famous stars, who suddenly stop acting and fade away from the public gaze. Within a short span of time people just forget them and new people who come on to the scene, have not even heard of them. You got the picture? More about this later.
Let us come back to the sentence, "Out of sight, out of mind". It seems that this sentence was fed into a computer for translation into Russian. The resulting sentence was fed into another computer for translating back into English. The sentence that came out was "Invisible idiot".
You will have to keep in mind that this story has been circulating for more than 30 years and at that time machine translation was not that much known.
Have things become better? I was reading this post about machine translation by google translate and was introduced to this hilarious game.
One sentence in English is to be typed in a box for the purpose of back and forth translation. The moment you click for finding the equilibrium, the machine translation program goes on translating from English into Japanese and back to English and so on, till two successive English sentences are the same. Then you get the message saying that the equilibrium is found.
I give below the result I found. The original sentence describes a beautiful maiden coming to a garden along with her playmates and gets separated from them. She meets a handsome man and falls in love with him. A typical start to a love story.
Original
The young charming heroine out on a game in a garden with her friends gets separated from the latter and wanders around.
into Japanese
彼女の友達と一緒に庭でゲームに小さな魅力的なヒロインを、後者から分離されるの中をうろうろ。
back into English
The heroine in the game in a small attractive garden with her friend, separated from the parade around the latter.
back into Japanese
彼女の友人は、後者の周りのパレードで区切られた小さな魅力的な庭園では、ゲームでのヒロイン。
back into English
Her friend, a charming garden, separated by a small parade around the latter, the heroine of the game.
back into Japanese
彼女の友人は、魅力的な庭園は、後者の周りに小さなパレードで区切られた、ゲームの主人公。
back into English
Her friend, an attractive garden, separated by a small parade around the latter, the hero of the game.
back into Japanese
彼女の友人、魅力的な庭園は、後者の周りに小さなパレードで区切られた、ゲームの主人公。
back into English
Her friend, an attractive garden, separated by a small parade around the latter, the hero of the game.
Equilibrium found! That's deep, man.
I am curious. Let us now try the sentence "Out of sight, out of mind" and see what we get. Here goes:
Original
Out of sight, out of mind
into Japanese
視界の外に心の
back into English
Heart out of sight
back into Japanese
心臓が視力
back into English
Eye heart
back into Japanese
眼部
back into English
Eye
back into Japanese
アイ
back into English
I
back into Japanese
わたし
back into English
I
Equilibrium found!
There you are. Have a nice day.
மிளகாய் பொடி has left a new comment on your post "உத்தம புத்திரன் - நேர்மறை எண்ணங்களுடன் கூடிய படம்":
கேள்வி-3. நீங்க எந்தெந்த வெளிநாட்டிற்கு சென்றுள்ளிர்கள்?
பதில்: அதற்கெல்லாம் ஏதோ பாஸ்போர்ட் என்கிறார்களே, அதை வாங்க வேண்டுமே.
கேள்வி-4. அமர்நாத் குகை சென்றுள்ளிர்களா? செல்லும் எண்ணம் உள்ளதா?
பதில்: இல்லை, இல்லை.
கேள்வி-5. சித்தர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? எதாவது சித்தரை meet பண்ணி இருகிறீர்களா?
பதில்: அபூர்வ பிறவிகள். அவர்களை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். நான் செய்யவில்லை என நினைக்கிறேன்.
கேள்வி-6. நீங்கள் ink pen உபயோகித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... தற்பொழுது யாராவது ink pen உபயோகிக்கிறார்களா?
பதில்: இப்போது இங்க் பேனாக்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. அவற்றின் தொழில் நுட்பம் தேக்க நிலையை அடைந்து நின்று விட்டது. பால் பாயிண்ட் பேனாக்கள், அதுவும் உபயோகித்த பிறகு தூக்கி எரியும் வகைதான் இப்போது கிட்டத்தட்ட எல்லோராலும் பாவிக்கப் படுகின்றன.
முன்பெல்லாம் ஒரு இங்க் பேனா வாங்குவது என்பது ஒரு மாணவனுக்கு பெரிய விஷயம். ஆனால் இப்போது? வேறு விஷயங்கள் அவன் கவனத்தை ஈர்க்க வந்து விட்டன.
pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-7. சென்னையில் நேற்று நடந்த வைரமுத்துவின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சிகரம் பாலசந்தர், மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொள்வதாக இருந்தது. அழைப்பிதழில் பாரதிராஜா பெயர் இடம் பெற்றிருந்தும் அவர் இந்த விழாவை புறக்கணித்துவிட்டார். அவர் நிகழ்ச்சிக்கு வராதது பலவித யூகங்களை கிளப்பியிருக்கிறது.
பதில்: உண்மைத் தமிழனுக்கு அனுப்பியிருக்க வேண்டிய கேள்வி. என்னைப் பொருத்தவரை எல்லாமே ஈகோ பிரச்சினைகளாகத்தான் இருக்கும்.
கேள்வி-8. தமிழகத்தில் மட்டும் சுமார் 600 தியேட்டர்களை கைப்பற்றி விட வேண்டும் என்று துடியாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரைக்கும் 200 தியேட்டர்கள் கூட ஒப்பந்தம் ஆகவில்லையாம். ரொம்பவே டென்ஷனோடு நடந்தது சென்சார். ஆங்காங்கே விஜய் பேசும் சில வசனங்கள் நெருப்பை கக்குகிறதாம் தனக்கு எதிரானவர்களை நோக்கி!
பதில்: இன்னுமா தன்னை ஊர் நம்புவதாக விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார்?
கேள்வி-9. ஆடுகளம் இசை வெளியீட்டு விழாவில் இரண்டுபேர் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது். ஒருவர் நடிகர் சூர்யா. மற்றொருவர் இயக்குனர் ஷங்கர். சூர்யா பேசும்போது “நான் தனுஷ் ரசிகன்… அவர் இயக்குனர்களின் நடிகர்” என்று ஈகோ இல்லாமல் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
பதில்: பெருந்தன்மையான தந்தையைப் பெறும் பேறு பெற்ற சூர்யா அவ்வாறு இருப்பதில் என்ன ஆச்சரியம்? அது சரி, ஷங்கர் என்ன பேசினாராம்?
கேள்வி-10. பிப்ரவரி மாதத்தில் ஈரோட்டில் லதிமுகவின் பொதுக் கூட்டத்தை பிரமாண்ட மாநாடு போல நடத்தப் போகிறாராம் ராஜேந்தர்
பதில்: முதலில் ல எதைக் குறிக்கிறது என்பதை விரிவாகக் கூறுங்கள்.
கேள்வி-10. தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களில் திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன் பொறிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
பதில்: கருணாநிதிக்கென்ன, அவர் தேவையானால் டாஸ்மாக் பாக்கெட்டுகளிலும் தன் உருவத்தை பொறித்துக் கொள்ளட்டுமே.
மீண்டும் மேலே கேள்விகள் வந்தால் பிறகு சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சித்தாந்தம்- சைவ இதழ் தொடக்கம்
-
உளம் கனிந்த ஆசிரியருக்கு, “ சிறைப்பட்டு கிடக்க எவருக்கும் உரிமை இல்லை. அது
முன் நகரும் வாய்ப்புகள் அனைத்தையும் அளித்த வல்லமைக்கு நாம் செய்யும் சிறுமை”
என்...
13 hours ago
21 comments:
பதிலுக்கு நன்றி சார்... இன்னமும் சாதிய வன்மத்திற்கு இரண்டு காரணங்கள்..
இட ஒதிக்கீடு எனும் சலுகை பெற பொய் சொல்லி மாற்றிக்கொள்ளும் (BC TO MBC, MBC TO SC)குற்ற உணர்வுக்கு வடிகாலாகவும் இந்த வன்மத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள்..
இரத்தத்திலும் மரபணுவிலும் ஊறிய அவரவர்களின் சாதிய குறை பாடுகளை செளகரியமாக மறைப்பதற்கும் இந்த வன்மத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள்..
சார் , இன்னமும் பாஸ்போர்ட் எடுக்கவில்லையா ..ஆச்சர்யம்.. அரைமொழி கூட ஒழுங்கா பேசத்தெரியாதவர்கள் கூட தாவுகிறார்கள்.. இவ்வளவு மொழி கற்றுள்ளீர்கள். மொழிகளே உங்களை இழுத்திருக்குமே....
@பத்மநாபன்
வெளிநாடு செல்ல வேண்டும் என்று ஆசை ஒரு நிமிடம் கூட எனக்குத் தோன்றியதில்லை.
நான் எனது இன்னொரு பதிவில் கூறியபடி:
“ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகள் தெரிந்து வைத்திருக்கும் நான் ஏன் ஜெர்மனிக்கோ பிரான்ஸுக்கோ செல்ல முயற்சிக்கக் கூடாது என்று பலரும் என்னிடம் பல முறை கேட்டு விட்டனர். நான் நினைத்திருந்தால் சென்றிருக்க முடியும். ஆனாலும் ஏனோ எனக்கு அவ்வாறு செல்ல வேண்டும் என்று ஒருபோதும் ஆவல் வந்ததேயில்லை. அம்மொழிகளில் பல புத்தகங்கள், செய்தி பத்திரிகைகள் படிப்பவன் என்ற முறையில் என்னால் அந்த நாட்டில் தினசரி வாழ்க்கை என்னைப் போன்றவர்களுக்கு எவ்வாறு அமையும் என்பதை மிகச் சுலபமாகக் கற்பனை செய்து பார்க்க முடியும். அக்கற்பனைகள் ஒருபோதும் எனக்கு வெளிநாடு செல்லும் ஆவலைத் தூண்டியதேயில்லை. நான் எந்த விதத்தில் குறைந்து விட்டேன்? என் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு வரும் வருமானத்தை வைத்து நான் பெற்றுள்ள வாழ்வின் தரம் மற்றும் நிம்மதி கண்டிப்பாக அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிரான்ஸிலோ கிடைத்திராது என்பதே நிஜம். என்னை பொருத்தவரை ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் என் வீட்டு வாசலுக்கே எனக்காக வந்துவிடுகின்றன. என்னிடம் பாஸ்போர்ட் கூடக் கிடையாது”.
பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/blog-post_30.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Sir,The word "dALIT" - I UNDERSTAND, IS FROM MARATTI ORIGIN AND MEANS something on the lines of "odukka pattavan"(tamil).
so, if some body calls themselves or others as dalit, it means a complaint against indian / state government.That is, "Dalit" is directly against Right of equality & right to living stipulated in constitution of india.
So, ideally, any body from govt / judiciary should take suo moto cognizance on hearing some body calling themselves as "dalit", and act towards eliminating the reasons for the "dalit" condition of living for that person.
It is more ironic, when some body from government calls themselves / others as dalit.
Sir,Am I right in this and what is your take on this line of thought?
Thanks,
பொதுவாக அத்வைதிகள்(அய்யர் ) சிவன் / விஷ்ணு இருவரையும் வணங்குகின்றனர். ஆனால் , ராமானுஜர் வழி வந்த வைஷ்ணவர்கள் அவ்வாறு இல்லை ஏன் ?
``என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் `` எனும் சிந்தனை நீண்ட நாட்களாக எனக்கும் இருந்தது...வளைகுடா நாடுகளை பார்த்தவகையில் அந்த சிந்தனை இன்னமும் வலுப்பெற்றுத்தான் உள்ளது..
வளைகுடா வைப் பொறுத்தவரை சட்டாம் பிள்ளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகி எண்ணையை தீர்த்து வறண்டு கொண்டிருக்கிறார்கள்..
நம் நாட்டை பொறுத்தவரை யாரையும் எதிர்பார்க்காத தொழில்நுட்பமும் இருக்கிறது..இயற்கையில் வளங்களும் நிறைந்து இருக்கிறது... ஆளுபவர்களுக்கும் வாழுபவர்களுக்கும் மனது மட்டும் வறண்டு இருக்கிறது ..
எனவே பிழைப்பு நியாயம்கிடைக்காதவர்கள் கடல் தாண்டி விடுகிறார்கள்...
உங்களை போன்று நியாயமும் திருப்தியும் கிடைத்து சொந்த நாட்டில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.
Venkat said...
// //if some body calls themselves or others as dalit, it means a complaint against indian / state government.That is, "Dalit" is directly against Right of equality & right to living stipulated in constitution of india.// //
பார்ப்பனர்கள் அப்பா அம்மாவுக்கு பிறந்தவர்கள், ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் கடவுளுக்கு பிறந்தவர்கள் என்று பொருள்தரும் - காந்தியின் கண்டுபிடிப்பான - "அரிசன்" (Harijan) என்கிற கேவலப்படுத்தும் பெயரைவிடவா - தலித் என்பது தாழ்ந்ததாகத் தெரிகிறது.
தலித் என்பது தாழ்த்தப்பட்ட மக்களிடையே நிலவும் பல்வேறு பிரிவினைகளைக் களைந்து - அவர்களை ஒன்று படுத்துகிறது. இது ஒரு வலிமையான அடையாளமாக திகழ்கிறது.
மற்றபடி, அரசாங்கமோ அரசியல் அமைப்போ தலித் என்பதை முன்னிறுத்தவில்லை. மாறாக, Scheduled castes என்பதுதான் அதிகாரப்பூர்வமான பெயராகும்.
"அரிசன்" என்பது காந்தியும் இந்துக்களும் சூட்டிய பெயர், "Scheduled castes" என்பது அரசாங்கம் வைத்த பெயர், "தலித்" என்பதுதான் சுயமரியாதையுடன் அவர்களுக்கு அவர்களே வைத்த பெயர். இதனை கேலி செய்ய மற்றவர்களுக்கு அருகதை இல்லை.
"""Dalit" is found in many Indian languages and even a Dravidian language. The meaning given to `Dalit' in the dictionary is: burst, split, scattered, dispersed, broken, torn as under, destroyed, crushed. All these English words sum up the exact position of the Indian Untouchables and also tribes. We are crushed and cramped and made mincemeat by the Hindu religion. That is why we are Dalits. Be proud to be a Dalit, the original inhabitants of this ancient land. Let us walk with our head high. Let us be proud of our Dalit culture. Black is beautiful.""
--V.T.Rajshekar
1. தங்கள் ஊரில் பவர் கட் ஆகிறதா? தாம்பரம் தாண்டினால் மற்ற எல்லா ஊர்களிலும் இன்னும் தொடர்கிறது மின்வெட்டு தினமும் 2 மணி நேரம் .. தற்பொழுது குளிர் காலம் தானே? இன்னும் ஏன் மின்வெட்டு தொடர்கிறது?
2. தமிழில் பேசும் போது ஆங்கில வார்த்தை உபயோகித்தால் என்ன தப்பு? அப்படி செய்தால் தமிழ் அழிந்து விடுமா என்ன?
3. ஜல்லி கட்டு நேரடியாக பார்த்து இருக்கிறீர்களா? அதை தடை செய்யவேண்டுமா கூடாதா?
அடுத்த கேள்வி பதில் பகுதிக்கான என் கேள்விகள்.
1) உங்களுக்கு தூங்கும்போது கனவு வருமா ?
2) நீங்கள் காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பீர்களா ? சோ ராமசாமி தேய்ப்பாரா ?
3) நீங்கள் கவிதை எழுதி இருக்கிறீர்களா ? இல்லையென்றால் இந்த கேள்விக்கு பதிலாக ஒரு கவிதை எழுதுங்களேன்.
4) நீங்கள் மதியம் தூங்குவது உண்டா ? இஸ்ரேல் மொசாத்தில் இருப்பவர்களுக்கு மதியம் தூங்கும் பழக்கம் உண்டா ?
5) உங்களுக்கு சச்சின் டெண்டுல்கருடன் நேரடி அறிமுகம் உண்டா ?
6) Brett lee மற்றும் Bruce lee - இவர்கள் இருவரில் யாருடைய பௌலிங் உங்களை மிகவும் கவர்ந்தது ?
1. In my hometown people think the price per vote will be more for 2011 TN Elections because of 2G. What will be the likely going rate per vote?
2. Do you think the Sonia devotee Naveen Chawla(CEC) will be used by DMK/Cong for winning TN elections(like they did in few places in 2009)
3. Why are these self-proclaimed Science lovers so-called "pagutharivivaadigal", especially in blogosphere, still believing in AIT/AMT, despite proven as fake/conspiracy by so many independent/neutral scientific researches.
அருள்.
தலித் என்பது ஒரு வடமொழிச் சொல். பத்தொன்மதாம் நூற்றாண்டில் தான் அதை ஒரு மக்கள் சமூகத்தைக் குறிக்கும் சொல்லாக எடுத்தாளப்படுள்ளது.
காலங்காலமாக ஒரே சாதி மக்கள் தான் தலித்துகளாக இருந்துவந்துள்ளனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இருந்தால் காட்டவும். மாறாக இன்று தலித்துகளாக இருக்கும் சில ஜாதிகள் ஒரு காலத்தில் ஆட்சிப்பீடத்தில் இருந்த ஜாதிகள் என்பதற்கு சான்றுகள் நிறைய உள்ளன.
நீங்கள் ரசித்து படித்த ஜெர்மன் நாவல் அல்லது புத்தகத்தில் ஏதாவது ஒன்றை உரிமம் பெற்றும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடலாம் அல்லவா? மொழிபெயர்ப்பு புத்தகம் வரிசையில் உங்கள் புத்தகமும் இருக்குமே. அப்படி செய்ய ஏதாவது உத்தேசம் உள்ளதா?
அருள் அவர்களுக்கு : உங்களைப் பொறுத்தவரை சாதிகள் இரண்டு: தலித்,மற்றும் பார்ப்பனர்கள். அதாவது வேறெல்லாரையும் பார்ப்பனர் என்றே நினைக்கிறீர்கள்; அழைக்கிறீர்கள். வலைகளில் இந்த அணுகுமுறை standard ஆகி விட்டால், கொஞ்சம் சூடு குறையும், தெளிவு பிறக்கும் என நம்புகிறேன்.
@பத்மநாபன்
@டோண்டு ராகவன்
"நீங்க எந்தெந்த வெளிநாட்டிற்கு சென்றுள்ளிர்கள்?" என்கிற கேள்வியை, ஒருசில நாட்கள் பயணமாகவோ, சுற்றுலாவாகவோ வெளிநாட்டிற்கு சென்றுள்ளீர்களா? என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
நீண்டகால அளவில் வேலைக்காக செல்வது அல்லது ஒரேயடியாக ஊரைவிட்டு ஓடுவதைப் பற்றிமட்டுமே ஏன் பேசுகிறீர்கள்?
//நீங்க எந்தெந்த வெளிநாட்டிற்கு சென்றுள்ளிர்கள்?" என்கிற கேள்வியை, ஒருசில நாட்கள் பயணமாகவோ, சுற்றுலாவாகவோ வெளிநாட்டிற்கு சென்றுள்ளீர்களா? என்றும் எடுத்துக் கொள்ளலாம்.//
அதுக்கெல்லாம் துட்டு யாரிடம் உள்ளது? என்னிடம் இல்லை/இருந்தாலும் அதற்காக செலவழிக்க இஷ்டமும் இல்லை. இந்த பாஸ்போர்ட் வாங்குவது வேறு ஒரு சள்ளை பிடித்தக் காரியம். ஆளை விடுங்கள்.
எது எப்படியானாலும் இந்தியாவில் உள்ளவர்களைப் பொருத்தவரை இம்மாதிரி வெளிநாட்டு டூர் எல்லாமே ஏதேனும் லாபநோக்கமற்ற/வணிக அமைப்பில் வேலை செய்து அஃபிஷியல் டூரில் போனால் மட்டுமே அது சாத்தியம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிளகாய் பொடி said...
// //2. தமிழில் பேசும் போது ஆங்கில வார்த்தை உபயோகித்தால் என்ன தப்பு? அப்படி செய்தால் தமிழ் அழிந்து விடுமா என்ன?// //
அதுசரி....
தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பேசும்போது மட்டும் ஏன் அதனுடன் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுவதில்லை?
ஆங்கிலத்தில் பேசும் போது தமிழ் வார்த்தை பயன்படுத்தினால் என்ன தப்பு? அப்படி செய்தால் ஆங்கிலம் அழிந்து விடுமா என்ன?
அது என்ன ஆங்கிலத்துக்கு ஒரு நீதி, தமிழுக்கு மற்றொரு நீதி?
(@டோண்டு ராகவன்: மிளகாய் பொடியின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது - எனது இந்த கேள்வியையும் அதன் துணைக்கேள்வியாக சேர்த்துக்கொள்ளுங்கள்.)
டோண்டு ராகவன் Said...
// //இந்தியாவில் உள்ளவர்களைப் பொருத்தவரை இம்மாதிரி வெளிநாட்டு டூர் எல்லாமே ஏதேனும் லாபநோக்கமற்ற/வணிக அமைப்பில் வேலை செய்து அஃபிஷியல் டூரில் போனால் மட்டுமே அது சாத்தியம்.// //
உண்மைதான்.
//பார்ப்பனர்கள் அப்பா அம்மாவுக்கு பிறந்தவர்கள், ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் கடவுளுக்கு பிறந்தவர்கள் என்று பொருள்தரும் - காந்தியின் கண்டுபிடிப்பான - "அரிசன்" (Harijan) என்கிற கேவலப்படுத்தும் பெயரைவிடவா - தலித் என்பது தாழ்ந்ததாகத் தெரிகிறது.//
பார்ப்பனர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அல்லாத பிற சாதியினர் எப்படிப் பிறந்தார்கள் அருள்? உங்களின் முனை மழுங்கிய ஏரணத்தின் அடிப்படையில் உளறுங்கள். கொஞ்ச நேரம் பொழுது போகும்!!
நிற்க.
http://www.hindu.com/2010/09/23/stories/2010092362940600.htm
தலித்கள் வன்கொடுமைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களாம். சொன்னவர் பாமக நிறுவனர் மருத்துவர் மாலடிமை. முக்குலத்தோரும் இன்னபிற சாதிகளும் இணைந்து இட ஒதுக்கீடு கோர வேண்டுமாம், மாலடிமை சொல்கிறார். இது குறித்து உங்கள் கருத்து என்னவோ?
காசிக்கோ அல்லது கைலாஷுக்கோ அரசு யாத்திரை ஏற்கனே இருக்கா?
இல்லை என்றால் அரசு செலவில் புனித யாத்திரை என்று ஒட்டு வங்கி வாக்குறுதியில் பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் ஏன் இடமில்லை? இந்த பெரும்பான்மை மக்களுக்கு வேறு வழி இல்லை பாதிக்கு பாதி பேர் வேறு வழி இல்லாமல் ஒட்டு போட்டாலும் போதும் என்ற எண்ணமா?
டோண்டு,அருள் :
அருள் சொல்வதை ஆமோதிக்கிறேன் .
குறிப்பு : அருள் சொல்வதை போன்று, தலித் என்ற வார்த்தை சாதியை குறிப்பிடும் வார்த்தையன்று. இந்த வார்த்தைக்கு, "ஒடுக்கப்பட்ட" என்ற பொதுவான அர்த்தமே ஜ்யோதி ராவ் ப்ஹுலே (இந்த வார்த்தையை முதன் முதலில் பயன் படுத்தியவர் - மஹாரஷ்டிரர் ) அவர்களால் கொள்ளப்பட்டது.
நான் சொல்ல வருவது என்ன வென்றால், ஒருவர் தன்னையோ, அல்லது மர்ரவரையோ, தலித் என்று குறிப்பிட்டால், அது, அரசிடம் முறையிடுவதற்கு சமம். அதாவது, அவர்,தானோ,தலித்தாக அவர் நினைக்கும் மற்றவரோ, இந்த நாட்டில், சுதந்திரமாக வாழும் உரிமையின்றி இருப்பதாக அரசிடம் முறையிடுகிறார் என அர்த்தம்.
இதை உடனடியாக, அரசாங்கத்தில் இருப்பவர்கள், கவனித்து, தலித் என குறிப்பிட படுபவர்களை அணுகி, அந்த நபர்,எந்த விதத்தில்,சுதந்திரமாக வாழ முடியாமல் தடுக்க படுகிறார் என விசாரித்து அந்த கஷ்டங்களை நீக்க வழி வகை செய்ய வேண்டும். நீதி பதிகள் கூட, சமூகத்தில் யாரேனும் தலித் என குறிப்பிட படுவதை கேட்க நேர்ந்தால், உடனே, suo moto வாக இது குறித்து போலிசுக்கு விசாரணை செய்ய ஆணையிடலாம்.
ஆனால், இங்கே, அரசில் இருப்பவர்களே, குடிமக்களை, தலித்துகள் என அழைக்கிறார்கள். இவ்வாறான செயல், ஒருவர் தம் அரசாட்சியில், சில குடிமக்கள், சுதந்திரமாக வாழ வழியின்றி இருக்கிறார்கள் என ஒப்பு கொள்ளவதற்கு சமமாகும்.
டோண்டு சாரின் விமர்சனம்?
1) 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தணிக்கை அதிகாரி தவறான தகவல் தந்துள்ளார் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
2)வசூலில் சற்று முன்னே பின்னே இருந்தாலும், பாராட்டுக்கள் வஞ்சனையின்றி குவிந்து வருகின்றன தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு.
3)காய்கறிகள் மீது மூன்று மாத காலத்திற்கு, உள்ளூர் வரிகள் விதிப்பதை நிறுத்தி வைக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
4.விஜய் நடித்த “காவலன்” படம் பொங்கலுக்கு வருகிறது. “சுறா” படத்துக்கு நஷ்டஈடு அளிக்காததால் இப்படத்துக்கு ஒப்புதல் அளிக்கமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
5.வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
Post a Comment