1/02/2011

உத்தம புத்திரன் - நேர்மறை எண்ணங்களுடன் கூடிய படம்

இன்று காலை எதேச்சையாக உத்தம புத்திரன் படத்தின் ஒரு காமெடி க்ளிப்பிங்கை டி.வி.யில் பார்த்தேன். அமர்க்களமாக இருந்தது. சரி மீதி காமெடி காட்சிகளையும்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் யூ ட்யூப்புக்கு போய் உத்தமபுத்திரன் என ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சிட்டு, தேடினால் பழம் நழுவி பாலில் விழுந்தது போல முழுப்படமே கிடைத்தது.

அது கீழே:



என்ன, கிட்டத்தட்ட ஒரு ஜிபி பிடிக்கும் அதை உங்கள் கணினியில் பார்க்க. எது எப்படியாயினும் பார்க்க வேண்டுமானால் உடனே பார்த்து விடவும். ஏதாவது போட்டுக் கொடுக்கும் பசங்கள் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி இந்த வீடியோவையே தூக்கி விடலாம். கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் அந்த டேப்.

நான் ஏற்கனவேயே ஓரிடத்தில் குறிப்பிட்டது போல, முதன் முதலில் தனுஷை பார்க்க எனக்கு பிடிக்காமலிருந்தாலும், இப்போது பிடித்து விட்டது. காமெடியில் பின்னுகிறார். அதுவும் விவேக்கை வயிறு கலங்க வைக்கும் காட்சிகளும் அற்புதம்.

இன்னொரு விஷயம். இப்படத்தின் சில வசனங்கள் ஒரு குறிப்பிட சாதியைச் சேர்ந்தவர்களுக்கு பிடிக்காமல் ஆட்சேபணை எல்லாம் தெரிவித்தார்களாம்.

அப்படி ஒன்றும் ஆட்சேபகரமாகத் தெரியவில்லையே (இந்த வீடியோ முழு வசனங்களையும் உள்ளடக்கியது என அறிகிறேன்)

இப்படத்தில் எனக்கு பிடித்ததே தனுஷின் நேர்மறையான எண்ணங்கள்தான். இது ஒரிஜினலாக தெலுங்கில் வந்ததாக கேள்விப்பட்டேன். ஆனால் எனக்கென்னவோ இது ஒரு ஹிந்திப்படமாகத்தான் முதலில் வந்திருக்கும் எனத் தோன்றுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

Venkat said...

Sir,
even if it is a draabai padam/dabbaa padam, / commer5cial padam, i wish to ask you,if it is morally right to host a web link to full movie..will it not affect the sales of the movie?and affect the producers?

dondu(#11168674346665545885) said...

It is there in Youtube site for everyone to see. I don't see anything wrong in having that video embedded in my blog.

In any case, I am sure that its days in that site and here in my blog are numbered.

Regards,
Dondu N. Raghavan

மிளகாய் பொடி said...

not only this film but a whole lot of films are available in youtube... I dont want to reveal all the names as it will get unwanted publicity... u just hv to be judicious with ur keywords...

வால்பையன் said...

வழக்கமான தமிழ்சினிமா தானே!
தனுஷ் என்ன காமெடி பண்ணியிருக்கார் இந்த படத்தில், எல்லாம் செம மொக்கையா தெரியுது எனக்கு!

விவேக்கின் ஆக்டிங் நல்லாயிருக்கு, பாண்டு ஒரு சீன்னாலும் சூப்பர் நடிப்பு, மயில்சாமி கூட நல்லா பண்ணியிருந்தார், மத்த எல்லாரும் நாடகத்தனமா நடிச்சிருந்தாங்க!


எனிவே படத்துக்கு நன்றி.

Arun Ambie said...

@ வால்பையன்:

//மத்த எல்லாரும் நாடகத்தனமா நடிச்சிருந்தாங்க!//

நாடகத்தனமில்லாம எப்படிங்க வாலபையன் நடிக்கமுடியும்? இயல்பாக இருப்பது நடிப்பாகுங்களா?

செந்திலான் said...

அது கொங்கு வெள்ளாளர் சமூகம் என்று குறிப்பிடுவதில் என்ன தயக்கம் திரு டோண்டு அவர்களே.இதெற்கெல்லாம் அவர்கள் சண்டைக்கு வரமாட்டார்கள்.படத்தில் ஏதோ கவுண்டர்கள் எல்லோரும் முட்டாள்கள் போல காட்டியிருப்பாதாக அறிந்தேன். அவர்கள் அவ்வாறு காட்டுவதனால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. முதல் நான் பிராமின் ஐ.சி. எஸ். செங்கோட்டையன் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் திட்டத்தின் தலைவர் ஆர்.எம் வாசகம் என்று பலர் பிறந்த சமூகம்.தொழில் விவசாயம் என்று கொடிகட்டிப் பறக்கிறது.மேலும் சமூக அளவில் வெறுப்பை விதைக்காமல் நல்ல சமூக நல்லிணக்கம் நிலவும் பகுதியாகத்தான் கொங்கு மண்டலம் இருக்கிறது.அவ்வாறு கூறியவர்கள் ஒரு வேற்று மொழியைச் சேர்ந்த வந்தேறிகள் என்று மட்டும் தெரிகிறது. இந்த காலத்துல எந்த கவுண்டன் குடுமி வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை.என்னதான் சமூகம் மாறினாலும் இந்த கூத்தாடிகள் மட்டும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு இந்த படமே சான்று.

மிளகாய் பொடி said...

1. நீங்க எந்தெந்த வெளிநாட்டிற்கு சென்றுள்ளிர்கள்?

2. அமர்நாத் குகை சென்றுள்ளிர்களா? செல்லும் எண்ணம் உள்ளதா?

3. சித்தர்கள் பற்றி உங்கள் கருது என்ன? எதாவது சித்தரை meet பண்ணி இருகிறீர்களா?

4. நீங்கள் ink pen உபயோகித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... தற்பொழுது யாராவது ink pen உபயோகிக்றார்களா?

Itsdifferent said...

sorry about the unrelated post, but it is important our people to know. One more konwledge gained from wikileaks. Monsanto using GM foods as currency to make India agriculturally indebted forever.
http://www.youtube.com/watch?v=eiK_RF3ioRw&feature=player_embedded

There is a huge health and economic risk. Listen to him, does anyone of us have the same passion as he has towards our own future and safety.

cnsone said...

என்ன டோண்டு சார்? தனுஷ் படம் பார்க்கலாம் என்று போனால் அப்படியே அவங்க மாமனார் நடிச்ச இந்திரன் படமும் கூடவே கடைச்சுதே.

pt said...

டோண்டு சாரின் விமர்சனம்?
1.சென்னையில் நேற்று நடந்த வைரமுத்துவின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சிகரம் பாலசந்தர், மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொள்வதாக இருந்தது. அழைப்பிதழில் பாரதிராஜா பெயர் இடம் பெற்றிருந்தும் அவர் இந்த விழாவை புறக்கணித்துவிட்டார். அவர் நிகழ்ச்சிக்கு வராதது பலவித யூகங்களை கிளப்பியிருக்கிறது.
2.தமிழகத்தில் மட்டும் சுமார் 600 தியேட்டர்களை கைப்பற்றி விட வேண்டும் என்று துடியாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரைக்கும் 200 தியேட்டர்கள் கூட ஒப்பந்தம் ஆகவில்லையாம். ரொம்பவே டென்ஷனோடு நடந்தது சென்சார். ஆங்காங்கே விஜய் பேசும் சில வசனங்கள் நெருப்பை கக்குகிறதாம் தனக்கு எதிரானவர்களை நோக்கி!
3.ஆடுகளம் இசை வெளியீட்டு விழாவில் இரண்டுபேர் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது். ஒருவர் நடிகர் சூர்யா. மற்றொருவர் இயக்குனர் ஷங்கர். சூர்யா பேசும்போது “நான் தனுஷ் ரசிகன்… அவர் இயக்குனர்களின் நடிகர்” என்று ஈகோ இல்லாமல் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
4.பிப்ரவரி மாதத்தில் ஈரோட்டில் லதிமுகவின் பொதுக் கூட்டத்தை பிரமாண்ட மாநாடு போல நடத்தப் போகிறாராம் ராஜேந்தர்
5.தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களில் திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன் பொறிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது