கண்பத் (மொக்கை கேள்விகள்)
கேள்வி-1. மைலாப்பூரிலிருந்து நங்கநல்லூருக்கு வர எந்த பஸ்(தடம் எண்) ஏறவேண்டும்?
பதில்: N 45B or 45B>Guindy>52L/P/etc.
கேள்வி-2. நங்கநல்லூரிலிருந்து மயிலாப்பூருக்கு திரும்பி வர எந்த பஸ்(தடம் எண்) ஏறவேண்டும்?
பதில்: நங்கநல்லூருக்கு பஸ்ஸில் வரும்போது வாய் கொழுப்புடன் கண்டக்டருடன் சண்டை போட்டிருந்தால் மரியாதையாக நங்கநல்லூர் ரயில் நிலையம் சென்று மயிலைக்கு டிக்கெட் வாங்கவும்
கேள்வி-3. சைதாப்பேட்டை சென்னை 15 என்கிறார்கள் ஆனால் சென்னை 16 அதை அடுத்த கிண்டி இல்லையாம். அதற்கும் அடுத்த St.Thomas mount என்கிறார்கள்.இது என்ன டுபாக்கூர் வேலை?
பதில்: கிண்டி சென்னை-32 ஆயிற்றே அதை ஏன் விட்டு விட்டீர்கள்?
pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-4. சமீபத்தில் ரஜினியை விமர்சிப்போர் பட்டியலில் இணைந்த இயக்குநர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தைப் பார்த்துப் பாராட்டினார் ரஜினி. சமீபத்தில் ஒரு மேடையில், “ரஜினியின் எந்திரன் படம் தரமற்றது” என்ற ரீதியில் பேசி பரபரப்பேற்படுத்தியவர் இயக்குநர் மிஷ்கின். இப்போது சேரன் நடிக்கும் “யுத்தம் செய்” படத்தை இயக்கியுள்ளார்.
பதில்: எல்லாம் மாயை. சண்டை போடுவார்கள், ஆனால் போட மாட்டார்கள். சண்டை போடுபவருக்கு இவர் சான்ஸ் கொடுத்தால் அவர் போட மாட்டார். சுற்றி நின்று பார்த்து கருத்து சொல்பவர்க்கள் மடையர்கள்.
கேள்வி-5. அரசியலோடு பின்னி பிணைந்தது இரண்டே இரண்டு. அதில் முக்கியமான ஒன்று பிரியாணி. அரசியலில் நுழைய அதிகாரபூர்வமாகவே முடிவெடுத்துவிட்ட விஜய்க்கு அஜீத் வைத்த பிரியாணி விருந்துதான் இப்போதைக்கு கோடம்பாக்கத்தின் டாப் கியர் பேச்சு
பதில்: விருந்தின் போது அல்வா பரிமாறப்பட்டதாமா?
கேள்வி-6. 2050ம் ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக, பலம் வாய்ந்த ஜாம்பவானாகத் திகழும் இந்தியா என பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. 2011 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஜப்பானையும் சீனாவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அந்நிறுவனத்தின் தலைமைப் பொருளியலறிஞர் ஜான் ஹாக்ஸ்வொர்த் கூறியுள்ளார்.
பதில்: இரண்டாவதாகவா? முதல் இடத்தில் யாராம்?
கேள்வி-7. ஒரு பத்திரிக்கையில் அதிமுக தலைமையை விமர்சித்து தேமுதிக நிர்வாகிகளின் பெயரில் வெளியான விளம்பரத்திற்கும் தேமுதிகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளா
பதில்: பின்னே, கூட்டணி அமைய வேண்டாமா? ஆகவே விஜய்காந்த் செய்வது சரி. அப்படி அமைந்து விட்டால் யாருக்கு பாதிப்பு ஏற்படுமோ அவர் அதற்கு எதிராக சிண்டு முடிவதும் சரிதான் அவரை பொருத்தவரை.
கேள்வி-8.“2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி தாக்கல் செய்த புகார் மனு ஏற்கத்தக்கதே’ என, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தெரிவித்துள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி மோசடி வழக்கில் ராஜாவை ஒரு குற்றவாளியாக சேர்க்கலாம் என்றும், அவருக்கு எதிராக டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளது
பதில்: பிறகு என்ன, சேர்க்க வேண்டியதுதானே. சுப்பிரமணியம் சுவாமியே அதையும் செய்யலாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.
நக்கீரன் பாண்டியன்
கேள்வி-9. பொதுவாகவே நடைமுறையில் விலைவாசி குறைப்பில் அரசியல்வாதிகள் ஏன் அதிகம் அக்கறை காட்டுவதில்லை?
பதில்: ஏன் காட்டப் போகிறார்கள்? அதனால் அவர்களோ அவர்களது குடும்பத்தாரோ பாதிக்கப் பட்டால்தானே. அதனால்தான் “ரொட்டி கிடைக்கவில்லையென்றால், மக்காள் கேக் உண்ணட்டும்” என
பிரெஞ்சு அரசி மாரி ஆந்த்வானெத்தும், மக்களது வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது என கருணாநிதியும் கூற முடிகிறது.
கேள்வி-10. தமிழக அரசின் இலவசங்கள்( குறிப்பாக 21 லட்சம் வீடுகள் பற்றிய கலைஞர்தொலைக் காட்சி விளம்பரங்கள்)ஆட்சியை தொடர வைக்குமா?
பதில்: கூடவே நல்ல கூட்டணியை தக்க வைப்பதும் அவசியம்.
கேள்வி-11. 2ஜி ஸ்பெக்ட்ரம்விவகாரம், பீரங்கி கதை ஆயிடும் போலுள்ளதே?
பதில்: அப்படித்தான் தோன்றுகிறது. பிரச்சினையை ஆராய, ஆராய புதுப்புது பூதங்கள் வெளிவந்த வண்ணமே உள்ளனவே. ஒரு நிலையில் இதற்கு மேல் தோண்டுவது அபாயம் என விட்டாலும் விட்டு விடுவார்கள்.
கேள்வி-12. பெரும் புகழ் பெற்ற சாகாவரம் பெற்ற எழுத்துக்களின் படைப்பாளிகள் கல்கி சுஜாதா சாவி மீண்டும் உயிர் பெற்று வந்தால்?
பதில்: மறுபடியும் எழுதத் தொடங்கும் தங்களை இற்றைப் படுத்திக் கொள்வார்கள்.
கேள்வி-13. ஆண்டாண்டு காலமாய் மக்கள் சக்தி மகத்தானது என்கிறார்கள். ஒன்றும் சாதிக்க (சமீப காலங்களில்) முடியவில்லையே! ஏன்?
இல்லையே சமீபத்தில் 1977, 1996 ஆகிய ஆண்டுகளில் தோற்கடிக்க முடியாதவர்கள் என சாதாரண அரசியல் பார்வையாளர்களால் மதிப்பிடப்பட்ட இந்திரா காந்தி, ஜெயலலிதா ஆகியோரை மக்கள் தோற்கடிக்கவில்லையா?
Kannan
கேள்வி-14. On a different note, what is your take on Tiruchi Velusamy's report... one of them is below.
பதில்: சுவாரசியமாக உள்ளது.
thARumARu
கேள்வி-15. பத்ரியின் ஸ்பெக்ட்ரம் சர்ச்சை குறித்த புத்தகம் படித்தீர்களா? அவர் என்ன படிப்பவர்கள் எல்லாம் கேனயர்கள் என நினைக்கிறாரா? ஸ்பெக்ட்ரம் - நடந்தது என்ன? என்று கழகக் கண்மணிகளை விளக்க கூட்டம் நடத்தச்சொல்லியிருக்கிறார்கள். அதற்கு கழகம் சார்பில் பல
நூறு காப்பிகள் ஆர்டர் கிடைக்கும் என்ற நம்பிக்கையா?
பதில்: பத்ரி அம்மாதிரியெல்லாம் நினைத்து சீப்பாக செயல்படுபவர் அல்ல. அவர் நன்கு யோசித்து தனது கருத்தைக் கூறுகிறார். அவரது முடிவுகள் அதற்கேற்றாப்போல் வந்துள்ளன. அவ்வளவே.
அப்புத்தகத்தை நான் வாங்கவில்லை. பத்ரி தனது வலைப்பூவில் இதுபற்றி எழுதுவதை படித்து வருகிறேன், அவ்வளவே.
மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் அடுத்த முறை சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
போலி இளமை
-
இணையக்குப்பை அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ., வணக்கம்! உங்கள் பதில்
இணையக்குப்பை பல முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். முதலில், எனது மின்னஞ்சலை
கருத்தி...
3 hours ago
16 comments:
விஜய்காந்த் இந்த முறை விருதாஜலத்தில் ஜெயிப்பாரா?
மன்மதன் அம்பு எப்படி ஓடுது சென்னையில(நான் வசிப்பது திருச்சி)
சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போனீர்களா? (நான் போக முடியவில்லை. அதனால் எல்லோரிடமும் விசாரித்தும், பாரா, பத்ரி மற்றும் சில பதிவுலக நண்பர்கள் மூலமும் அது பற்றி விவரங்களை அறிந்து கொள்கிறேன்.)
துக்ளக் ஆண்டுவிழாவுக்கு வர எண்ணியிருக்கிறேன். உங்களை அங்கே சந்திக்கலலமா?
தலைப்பை 2010 என்று இருக்கு. 2011 என்று மாற்றவும்.
Thanks Vajra.
Regards,
Dondu N. Raghavan
//பத்ரி அம்மாதிரியெல்லாம் நினைத்து சீப்பாக செயல்படுபவர் அல்ல//
அதைவிட மோசமோ?
@ராஜரத்தினம்
வார்த்தைகளில் சற்றே மரியாதை இருப்பது நலம்.
டோண்டு ராகவன்
அவரை சீப்புனு சொன்னது நீங்க. எனக்கு மரியாதை வேணும்னீங்கீறீங்க. ஸ்பெக்ட்ரம் மற்றும் கருணாநிதி பற்றீ அவருக்கு இருக்கும் அபிமானம் அவர் மீதான என் அபிமானத்தை மாற்றீ பல நாளாகிறது.
பொங்கலோ பொங்கல் என்றே பொங்குக பால்பானை!
பொங்கிவரும் ஆனந்தம் சேர்க்கட்டும் மங்கலத்தை!
பொங்கல் திருநாள் வாழ்த்துக்களுடன்
--கிருஷ்ணமூர்த்தி
"பத்ரி அம்மாதிரியெல்லாம் நினைத்து சீப்பாக செயல்படுபவர் அல்ல. அவர் நன்கு யோசித்து தனது கருத்தைக் கூறுகிறார். அவரது முடிவுகள் அதற்கேற்றாப்போல் வந்துள்ளன. அவ்வளவே."
டோண்டு,
பிரச்சனயே அதான். வளர்ந்த நாடுகளில் system சரியாக உள்ளதால் ஒரு தவறு செய்தவர் பிடிபட்டால் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
ஆனால் நம்ம நாட்டில் நிலமை கேவலமாக உள்ளது. இப்போது ஒரு பெரிய பிரச்சனை எழுந்து மக்கள் மத்தியில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட
வேண்டும் என்கிற மனோநிலை உருவாகியுள்ளபோது பத்ரி மாதிரி ஆட்கள் அதன் தீவிரத்தைக் குறைக்கும் வண்ணம் வாதம் செய்கிறார்கள். ஒரு
நன்மை பயக்குமெனில் ஒரு உண்மையைக்கூட மறைக்கலாம் என்று வள்ளுவரிலிருந்து பல பேர் சொல்லியிருக்கிறார்கள். பத்ரிக்கு இது தெரியாதா?
கபில் சிபல் ஒரு தொழில்முறை வக்கீல் மற்றும் அரசியல்வாதி. அவர் அம்மாதிரி பேசுவது வியப்பில்லை. ஆனால் ஒரு நல்லவர் என நம்பப் படுபவர்,
system cleansing ற்கு ஒரு chance வரும்போது அதைக் கெடுக்கலாமா? சில சமயங்களில் பொத்திக் கொண்டு இருப்பதே அதிக நன்மை பயக்கும் என பத்ரிக்குத்
தெரியாதா? நடு நிலமை, உண்மை உரைத்தல், கருத்துச்சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு உள்ளதையும் கெடுக்கலாமா? இதுதான் அவர் இப்போது
புத்தகம் வெளியிட்டிருப்பதன் பின்னணியை சந்தேகத்துக்குள்ளாக்குகிறது. மேலும், he has the chutzpah to comment that the CAG does not know the A,B,C of accountancy.
If he knew the modus operandi of the CAG as an entity he would not comment like that. The Badri that wrote on soc.culture.tamil was a righteous man with the larger good of the society at heart.
Now, I can't say the same about businessman Badri. In one of BBC's world debates on "India 2020", one of the panelists, writer Ramchandra Guha commented, "India will muddle along from B- to B+ but we will never achieve A+"
It was irritating to hear then. Now, looking at the scheme of things I can't help get that sense of despair. உள்ளதையும் கெடுக்காதீங்க சாமிகளா!
மதம் மாறுவதால் எப்பயனும் இல்லை என்பதற்கு இந்த உதாரணத்தைப் பாருங்கள்:
http://www.bbc.co.uk/news/world-south-asia-11229170
இப்படி கஷ்டப்பட்டு கஷ்டப்படுவதைவிட ஈசியாக இந்துவாக இருந்தே சாதியை எதிர்த்துப் போராடி ஜெயிக்கலாமே. டோண்டு, உங்கள் கருத்து ?
வஜ்ரா said...
// //ஈசியாக இந்துவாக இருந்தே சாதியை எதிர்த்துப் போராடி ஜெயிக்கலாமே. டோண்டு, உங்கள் கருத்து ?// //
ஹா...ஹா...ஹா....
ஹோ...ஹோ....ஹோ....
ஹி...ஹி....ஹி....
1. பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் கடைகள் வந்ததினால் சிறிய மளிகை கடைகள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன?
2. தாங்கள் மளிகை பொருட்கள் வாங்குவது சூப்பர் மார்கட்டிலா அல்லது சிறிய மளிகை கடையிலா?
3. தங்களுக்கு உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருக்கிறதா?
4. டயபெடிக்ஸ் வராமல் இருக்க உடற்பயிற்சி எல்லாம் செய்வது அவசியமாமே..?
5. 108 ஆம்புலன்ஸ் சேவை திமுகவின் சாதனை தானே?
என்ன Iyengar ன்னு ரொம்ப பீலா உடுரிங்கன்னு wiki ல தேடிபார்த்தேன். I find lot of interesting topics about them. I have seen One article on Iyengar Tamil. It is very interesting that they are using very prominent Tamil than others.
http://en.wikipedia.org/wiki/Iyengar_Tamil Since you have lot of knowledge these area, you can share with us more.
//
ஹா...ஹா...ஹா....
ஹோ...ஹோ....ஹோ....
ஹி...ஹி....ஹி....
//
அர்த்தமில்லாமல் ஆதாரமில்லாமல் அடிக்கடி சிரித்தால் _______ என்று அர்த்தம்.
நீங்கள் ஐயங்கார்கள் தவறே செய்தாலும் அதை தாங்கி (கமல் ஹாசன், பலே S.V.Sekarனு மனசாட்சியே இல்லாமல் ஒரு பதிவு)பிடிக்கிறீர்களே? அது ஏன்?
Post a Comment