pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-1. கருத்துச் சொல்லி எந்த மாற்றமும் உருவாகப் போறதில்லை. எனக்கு அது பிடிக்கவும் இல்லை. என் சினிமா சிறந்த சினிமாவாக உருவாவதைவிட, வேறு எதிலும் எனக்கு அக்கறை இல்லை. சினிமா மூலம்தான் எனக்கு எல்லாமும் கிடைச்சது.-இயக்குனர் சேரன்
பதில்: அதாவது, தான் அரசியலுக்கு வரப்போறதில்லைன்னு இவர் சொல்லறாருன்னு நினைக்கிறேன். தமிழகம் ஆந்திராவுக்கு மட்டுமே இந்த சாபக்கேடு. யாராவது திரைப்படத் துறையில் வெற்றி பெற்று விட்டால் (அதிலும் நடிகராக) அவர் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணமே இந்த இரு மாநிலங்களிலும் டீஃபால்ட் நிலை என ஆகிவிட்டது. என்ன செய்வது, விதி.
கேள்வி-2. வீர விளையாட்டாயினும் மக்கள் சாவதைத் தடுக்க ஜல்லிக்கட்டை தடை செய்யலாமா? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது. மக்கள் சாவதை நாங்கள் விரும்பவில்லை, நீங்கள் விரும்புகிறீர்களா என்றும் அது கேட்டுள்ளது.
பதில்: எனது கருத்தோ உங்களது கருத்தோ கேட்டு என்ன செய்ய? சம்பந்தப்பட்ட மாடுகளின் கருத்தைக் கேட்டுத் தொலையட்டுமே.
கேள்வி-3. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா, அவரது சகோதரர் கலிய பெருமாள் ஆகியோரை சிபிஐ இன்று கைது செய்தது.
பதில்: எல்லாமே கண்ணாமூச்சி நாடகம்தான் என நண்பர் விஸ்வாமித்திரா எழுதியுள்ளாரே, அதுதான் சரி என எனக்குப் படுகிறது
கேள்வி-4. விருப்பத்துடன் கூடிய செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதற்கான தகுதி வயதை 16 என்பதிலிருந்து 12 ஆக குறைக்க வகை செய்யும் சட்ட அம்சத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
பதில்: இதையா கேட்கிறீர்கள்? கேவலமாக இருக்கிறதே. மத்திய அரசுக்கு கடைசியிலாவது புத்தி வந்ததே.
கேள்வி-5. மைனா பட புகழ் அமலா பால் இந்திய கலாச்சாரத்துக்கு எதிராக பேட்டி கொடுத்து, இளம்பெண்களை கெடுக்கிறார் என்று இந்திய் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
பதில்: இன்னொரு குஷ்புவை உருவாக்குகிறார்களா?
கேள்வி-6. மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டியின் மூலம், மற்ற முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ளது ஐடியா நிறுவனம். மொபைல் போன் எண்ணை மாற்றாமல், தான் விரும்பும் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி, சில சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பதில்: சேவை அளிப்பாளர்கள் மரியாதையாக வாடிக்கையாளர் சேவை இதனால் தருவார்கள் என நினைக்கிறேன்.
கேள்வி-7. போன் செய்தால் வீட்டுக்கோ வந்து மொபைல் போன் கருவிகளை வழங்கும் சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது எஸ்ஸார் குழுமத்தின் மொபைல் ஸ்டோர்
பதில்: பில்லையும் பின்னால் அவர்களே கட்டினால் என்ன ஆட்சேபணை?
கேள்வி-8. செல்போன் மற்றும் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் உட்பட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று மத்திய அரசின் ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது. செல்போன் மற்றும் உயர்கோபுரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றி ஆராய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அதில் 8 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். சுகாதார அமைச்சகம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு துறை உறுப்பினர் செயலர் ஆகியோர் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சக பிரதிநிதிகள் இடம்பெற்ற அந்த குழு, தனது ஆய்வு அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது
பதில்: Remedial measures பற்றியும் ஏதாவது சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும், சொன்னார்களா?
கேள்வி-9. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விஜய் காவலனின் வரவேற்பால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறார். காவலன் வெற்றியும், ஷங்கர் 3 இடியட்ஸில் அவருக்கான சீட்டை கன்பார்ம் செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.
பதில்: பாவம், பிழைத்துப் போகட்டும். இனியும் அரசியல் என்றெல்லாம் போகாமல் தனது நடிப்பு வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளட்டுமே.
கேள்வி-10. பருத்திவீரன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் சரவணன். அவரும், அவரது மனைவி சூர்யஸ்ரீயும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து, தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.
பதில்: ஏதாவது ஒரு அரசியல் முகாமில் சேருவதைத்தான் பலரும் தற்காப்பு நடவடிக்கை என நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கு.
மேலும் கேள்விகள் இருந்தால் அடுத்த வியாழக்கிழமை சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
19 hours ago
5 comments:
//தமிழகம் ஆந்திராவுக்கு மட்டுமே இந்த சாபக்கேடு. யாராவது திரைப்படத் துறையில் வெற்றி பெற்று விட்டால் (அதிலும் நடிகராக) அவர் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணமே இந்த இரு மாநிலங்களிலும் டீஃபால்ட் நிலை என ஆகிவிட்டது. என்ன செய்வது, விதி.//
இரு மாநில மக்களும் அப்படி நடிகனை முழுதுமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருந்தால் விஜ்ச்யகாந்தும் சிரஞ்சீவியும் ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டுமே!
ஆனாலும் ஓரிரு வெற்றிகளைப் பெற்றவன் நம்ம ஜெராக்ஸ் அருள் போன்ற முட்டாள் என்றாலும் அவனுக்கு ஈயச் சொம்படிக்க பத்துப் பேராவது இருக்கும் சினிமா உலகில் இந்த build up சகஜம். சேரன் கொஞ்சம் புத்திசாலி என்று நினைக்கிறேன், ஒதுங்குவதாகச் சொல்கிறார். விதி வலியது. பார்ப்போம்.
டோண்டு சாரின் விமர்சனம்?
1.செவ்வாய் கிரகத்துல இருந்து தகவல் அனுப்பியிருந்தாங்க... அவங்க சாட்டிலைட் மூலமா இலைஞன் படத்த பாத்தாங்களாம். மொழி புரியாட்டாலும், அடுக்கடுக்கா வந்த வசன ஒலி அவங்க ரொம்ப கவர்ந்திடுச்சாம்
2.அறுபது வருடங்களுக்கு முன்... கூவத்தில் குளித்தார்களாம்! துவைத்தார்களாம்! நீர் குடித்தார்களாம்! சென்னையில் சங்கமம் ஆனபின்னே... இன்று கூவம் இருப்பதைப் போல... தலைநகர அரசியல்! சென்னையில் சங்கமம்...
3.சாதி சான்றிதழை போலி ஆவணங்கள் மூலம் பெறுவதால் அடித்தட்டு மக்கள் பாதிப்பு: ஊட்டியில் நீதிபதி தர்மராவ் பேச்சு
4.பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5. செருப்புகளில் இந்துக் கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதற்கு மலேசியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது
டோண்டு சாரின் விமர்சனம்?
6.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எங்களால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் கூறியுள்ளது.
7.மழைக்காலம், கிரிக்கெட் போன்ற சீஸன்களில் தியேட்டர்களில் கூட்டமே இருப்பதில்லை. எனவே டாஸ்மாக் கடை- பார் இணைந்த திரையரங்குகளாக இவற்றை மாற்றிக் கொள்ள அனுமதி தேவை என தமிழக அரசுக்கு தியேட்டர்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
8.இந்து முன்னணியினர் காதலர் தினத்தை கண்டிக்கும் வகையில் நாய்களை குதிரை மேல் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்து திருமணம் நடத்தி வைத்தனர்.
9.உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விரைவில் துவங்கவிருப்பதை யொட்டி , ஸ்பாட்பி்க்ஸிங், ஊழல் உள்ளிட்ட சூதாட்டங்களை தவிர்க்க , கிரிக்கெட் வீரர்கள், அணி நிர்வாகிகள் டிவீட்டர் வலைதளத்தை பயன்படுத்த ஐ.சி.சி. தடை விதிக்கப்பட்டுள்ளது.
10.மனைவிக்கு வேறு திருமணம் நடக்க இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று போலீசில் கணவன் புகார் கொடுத்துள்ளார்.
இன்று நண்பகல் 1100 மணிக்கு பிரபல தொலைகாட்சி செய்தி சேனல்களின் பத்திரிக்கையாளரின் துளைக்கும் கேள்விகளுக்கு நமது பாரத பிரதமர் அவர்களின் பதில் பற்றிய உங்கள் கருத்து என்ன?
1)2ஜி ஸ்பெக்ரம் ஊழலில் அரசின் பெருளாதார இழப்பு
2) பெரிய கார்பொரேட்களுக்கு ராசாவின் இந்தச் கட்டணச் சலுகையை ரேசன் பொருட்களுக்கு கொட்டுக்கபடும் மான்யம் போல் என ஒப்பிட்டது?
3)ராசாவின் நியமனத்தில் திமுகவின் நிர்பந்தம்?
4)கூட்டணி கட்சிகளை காம்பரமைஸ் செய்யும் காங்கிரசாரின் நிலை?
5)விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்க விகிதம் அதனால் ஏழைகள் பாதிப்பு?
6)ஜெபிசி முன்னால் ஆஜாராக ரெடி?
7)பிஜேபி மேல் குற்றச்சாட்டு-குஜராத் அமைச்சரை காப்பாற்றத்தான் இந்த பாராளுமன்றத்தை முடக்கும் செயல்கள்?
8)ஊழல்காரர்களை நிச்சயம் தண்டிப்பேன்?
9.தமிழக மீனவர்களின் தொடர் கைது அரசின் நடவடிக்ககள்
10.பொருளாதார கேள்விகளுக்கு பதில் சொல்லுபோது இருந்த முகத் தெளிவு-மெகா ஊழல்கள்-2ஜி,கா.வெ.கேம்ஸ்,எஸ்பேண்ட்,கார்கில்வீடு ஒதுக்கீடு பற்றிய பதில்களின் போது அவரது தோற்றம்,குரல் செயல் பாடு?
3.
டோண்டு சாரின் கேள்வி பதில் பகுதிக்கு
1) கனிமொழி ஸ்ரீலங்கா எம்பசிக்கு முன் போராட்டம் நடத்திக் கைதானார் என்று செய்தி படித்தேன். தந்தை தண்டவாளத்தில் தலை வைத்து தமிழுக்காக உயிரைக் கொடுக்க முன் வந்து மொழி காத்தார். மகள் மனிதாபிமானற்ற மகிந்த ராஜபக்சேயை, மனுநீதிப் பார்ப்பனக் கும்பல் மகிழ்ந்து கொண்டாடும் சிங்களக் கயவனை, சிங்கம் போல சீறிப் பாய்ந்து தன் உயிரையும் துச்சமாக மதித்துப் போராடி சிறை சென்றார் என்று சில வட்டாரங்கள் அதற்குள்ளேயே செய்தி எழுதத் துவங்கிவிட்டன. இதை எல்லாம் இன்னமுமா நம் மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்?
2)சுப்ரமண்யம் சுவாமிக்கு உச்ச காட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சிலர் (ஆர்.எஸ்.எஸ். சார்புடையோர்) கோரிக்கை வைத்துள்ளனர். சுவாமியைப் பார்த்தால் ஒன்றும் பயப்படுகிற மாதிரித் தோன்றவில்லையே! சுவாமிக்கு அம்மா சீட் (ராஜ்ய சபை) வழங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
3)ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் வெல்வார் என்று ப.சி. பேசியுள்ளதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
4)காதலர் தினப் பதிவு ஒன்றும் போடவில்லையே நீங்கள்! ஏன்?
5)நீங்கள் கர்நாடக சங்கீதம் கேட்பது உண்டா? பிடித்த பாடகர்/பாடகி யார்?
சூர்யா
Post a Comment