pt
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதால் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பெட்ரோல் மீதான விற்பனை வரியை 30 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் குறைத்து 27 சதவீதம் மட்டும் வசூலிக்க முடிவுசெய்துள்ளது.
பதில்: மக்களுக்கு மறதி உண்டுதான். ஆனால் அது நீண்டகால நினைவுகள். குறுகிய கால நினைவுகள் தீவிரமாக இருக்கும். ஆகவே பெட்ரோல் விஷயத்தில் சிறிது கரிசனம் காட்டினால், அது ஓட்டு போடும் வரை நினவிலிருக்கும் என்பது பொது புத்தி. அதில் உண்மையும் உண்டு.
pt:இவரல்லோ யாரும் நினக்ககாததையும் கொடுக்கும் தர்மப் பிரபு.தேர்தல் சாமிக்கு ஒரு ஓ போடு!
டோண்டு:மேலே பதிலில் கூறியுள்ளேனே.
கேள்வி-2 .இன்றைய பொன்மொழி உதிர்த்தவர் ப.சிதம்பரம்பட்டமரம் துளிர்க்காது; பச்சை மரம்தான் துளிர்க்கும்! காங்கிரஸ் பச்சை மரம். ஒரு இலை உதிர்ந்தால் இரண்டு இலைகள் துளிர்க்கும் !-
pt:அப்படி போடு அருவாளை!
டோண்டு:?
பதில்: அரிவாளா? சரிதான், அட்டைக்கத்தியல்லவா வீசுகிறார் ப.சி. பசியுடன்!
கேள்வி-3. லிபியா மக்கள் எனக்காக உயிரைக் கொடுப்பார்கள்: கடாஃபி
pt: அண்ணன் கடாஃபி லிபியாவின் கலைஞர்!
டோண்டு:?
பதில்: கடைசி லிபியனின் கடைசி சொட்டு ரத்தம் வரைக்கும் கடாஃபி போரிடுவாராக்கும்.
கேள்வி-4. குட்டக் குட்ட குனியக்கூடாது: தி.மு.க.வுக்கு கி. வீரமணி வேண்டுகோள்
pt:மே23 க்கு பிறகு பாருங்கள் வீரமணியின் அந்தர் பல்டியை அம்மா முன்னால்!
டோண்டு:?
பதில்: அப்படி குனிவது கூட சொந்த பொறியியல் கல்லூரிக்கு துணை போனால், மாயாவதிக்களிக்கப்பட்ட சேவையையும் மிஞ்சுவார் வீரமணி.
கேள்வி-5. 2ஜி ஊழல் விசாரணைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு: மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டுவந்தார் கபில் சிபல்
pt:வரவேற்போம் இருகரம் கூப்பி
டோண்டு:?
பதில்: கபில் அழுது கொண்டே சிரிக்கின்றார் போலிருக்கிறதே.
அருண் அம்பி
கேள்வி-6. ராவண கும்பகர்ணராமே?
பதில்: அழகிரியை கும்பகருணனாக்கி, தூங்க அனுப்பித்திடும் எண்ணமோ என்னவோ, யாமென்ன அறிவோம்?
பார்வையாளன்
கேள்வி-7. துக்ளக்கில் அறிஞர்கள் பலர் எழுதி இருக்கின்றனர்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவர்கள்..ஆனால் நையாண்டி எழுத்தில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தார் சோ... துக்ளக் வரலாற்றில் முதல் முறையாக , நையாண்டி எழுத்தில், சோவையே மிஞ்சி காட்டும் வகையில் , அல்ட்டிமேட் ரைட்டர் சாரு எழுத ஆரம்பித்து இருப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன? (உதாரணமாக இந்த வார துக்ளக் கட்டுரையின் முதல் வரியை பாருங்கள்.. முதல்வரின் கொள்ளு பேரனுக்கு காவல் இருக்க வேண்டிய போலீசார் இங்கு என்ன செய்கிறார்கள் என யோசித்தேன்)
பதில்: எனக்கென்னவோ இது சோவுக்கு நன்றாகப்படும் என்ற எண்ணத்தில் எழுதியது போலத்தான் படுகிறது. அதாவது செயற்கைதான், சின்சியரிட்டி ஏதும் இல்லை. போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.
கேள்வி-8. துணிச்சலான எழுத்து, வித்தியாசமான பார்வை இவற்றில் சோவிற்கு நிகராக , தமிழ் நாட்டில் அல்டிமேட் ரைட்டர் சாருவை மட்டுமே சொல்ல முடியும் என்ற கருத்து குறித்து உங்கள் கருத்து ?
பதில்: இதைவிட சோவை அவமதிக்க முடியாது.
கேள்வி-9. தொகுதி பங்கீட்டில் பணிந்து போனது காங்கிரசா, திமுக வா?
பதில்: தொகுதி கொடுப்பது முதற் கட்டமே. பிறகு தேர்தலுக்காக உழைக்க தொண்டர்கள் திமுகாவிலிருந்துதான் வரவேண்டியிருக்கும். காங்கிரசில் யாருமே தொண்டர் இல்லை, அவரவர் மனப்படி அவரவர் தலைவரேதான். நோகாமல் நோன்பு கொண்டாட நினைப்பவர்கள். விளைவு சுவாரசியமாக அமையும்.
கூட்டணி கடைசியில் ஒருவாறாக உருவானதில் முதல் இழப்பு பொது மக்களுக்கே.
மீண்டும் கேள்விகள் வந்தால் பிறகு சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
1 hour ago
7 comments:
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.தமிழகத்தில் திமுக கூட்டணியில் 63 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் அந்த ஃபார்முலா வேலைசெய்யாது என சூசகமாகத் தெரிவித்துள்ளது.மேற்குவங்க தேர்தல் திரிணமூல் காங்கிரஸ்
2.சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் உள்ள 79 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து மக்களவையில் இன்று கவலை தெரிவிக்கப்பட்டது.
3.சீனாவிடம் இருந்து நவீன போர்விமானங்களை வாங்கி தங்கள் படையில் சேர்த்த பாகிஸ்தான், கடற்படைத் திறனை அதிகரிக்கும்நோக்கில் தற்போது 6 நீர்மூழ்கிக் கப்பல்களையும் சீனாவிடம் இருந்து வாங்க.
4.: மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது என்பதை வலியுறுத்தி மார்ச் 14-ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தவிருப்பதாக பாமக அறிவித்துள்ளது
5.நாங்கள் ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததால்தான் திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறியாமல் காப்பாற்றப்பட்டது என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது.
அறுபத்து மூன்று என்பதால் பிரிந்தார்கள். பின்பு சேர்ந்தார்கள். இப்போதும் அறுபத்து மூன்றில் மாற்றம் இல்லை. ஒண்ணுமே புரியாமல் தலை சுற்றுகிறது. மீண்டும் ஒருமுறை பழைய செய்தித்தாள்களை படிக்க வேண்டும்.
எனது புதிய முயற்சிக்கு உங்கள் ஆசிகளை வேண்டுகிறேன்.
http://hayyram.blogspot.com/2011/03/blog-post_10.html
@hayyram
வாழ்த்துக்கள். நல்ல முயற்சி, தொடருங்கள். எனது ஆசிகள் உங்களுக்கு எப்போதுமே உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எனது ஆசிகள் உங்களுக்கு எப்போதுமே உண்டு// மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி.
பதிவுபோட விசயமே இல்லையா டோண்டு ஐயா...வேலையில் பிசியாக இருப்பின் வேலை முடிந்தபிறகு பதிவு போடுங்கள்.
கேள்வி பதில் கூட மொக்கையாகவே இருக்கு.
1.2012 ல் உலகம் அழிவதற்கான முன்னோட்டம் தான் ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமி என்பது பற்றிய உங்கள் கருத்து?
2.பூமியின் அச்சு விலகியுள்ளதாய் வரும் தகவல் இன்னும் என்ன செய்யப் போகிறது?
3. வரும் சுப்பர் முழுநிலவு 19.3.2011 என்ன செய்யப் போகிறது?
Post a Comment