pt
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா: பெண்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்
பதில்: தமிழக மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரைக்கும் இதெல்லாம் தொடரும். அதானே, அவர்கள் குஜராத்தியர் அளவுக்கு புத்திசாலிகள் இல்லைதானே.
கேள்வி-2. தேர்தல் ஆணையம் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்: ஜெயலலிதா பேட்டி
பதில்: அதுதான் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பிரச்சினை. மோதி போன்ற ஊழலற்ற முதலமைச்சர் மாநிலத்தில்தான் எல்லா கெடுபிடிகளையும் காட்டி ஒன்றும் தவறு அவரிடம் கண்டுபிடிக்க முடியவில்லை, தான் காங்கிரஸ் பூத் ஏஜெண்டாக செயல்பட்டதுதான் மிச்சம் என அசடு வழியும்.
இல்லாவிட்டால் மற்ற அடாவடி மாநில முதலமைச்சர்கள் விஷயத்தில் அவர்கள் காங்கிரசுடன் சம்பந்தம் உடையவர்களாக வேறு இருந்து தொலைத்தால் சலாம் போட்டு சீப்படும்.
கேள்வி-3. அ.தி.மு.க. அறிக்கை எடுபடாது: கருணாநிதி
பதில்: இல்லையா பின்னே. தன்னை மாதிரியே மக்களை டுபாக்கூராக்கும் அறிக்கையை மற்றவரும் தரலாமா என்னும் கோபம் வராதா? காப்பிரைட் வைத்திருப்பவர்களுக்கு வரும் தார்மீகக் கோபமே அது.
கேள்வி-4. தமிழகத்தில் தி.மு.க. அணிக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட்டுப் பிரசாரத்துக்கு வர மாட்டார்கள்
பதில்: யார் சொன்னதாம்? அதை பொருத்துத்தான் அது உண்மையா அல்லவா என்பதை பார்க்கோணும்.
கேள்வி-5. இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னைகளுக்கு போர் மூலம் தீர்வு காணமுடியாது என்று பாக். பிரதமர் யூசஃப் கிலானி கூறியுள்ளார்.
பதில்: உண்மைதான். போர் என்றால் ஒரு நாளைக்கே கோடிக் கணக்கில் செலவாகும். இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குமே அது தேவையில்லாத, கட்டி வராத ஆடம்பரமே.
Arun Ambie
கேள்வி-6. பிட் அடித்த மாணவர்களை "தேர்தல் நேரம், ஓட்டுப் போய்விடும்" என்று காப்பாற்றினாராம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. இதில் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறார்களாம். இந்த கண்றாவிக்கு இலவச +2, இலவச டிகிரி என்று கொடுத்து விட்டுப் போகலாமே? Your take, Sir!
பதில்: மன்னிக்கவும் உங்கள் சுட்டியில் இப்போது வரும் செய்தி அந்தந்த தினத்தினுடையது. ஆகவே மாணவர்கள் விஷயம் அதில் இல்லை. ஆனால் நான் அதை ஏற்கனவேயே பார்த்து விட்டேன். வெட்கக்கேடு.
ரமணா
கேள்வி-7. NAMATHU VARI PANAM IPPADI POKUTHU
பதில்: தோண்டத் தோண்ட அத்து மீறல்கள்.
கேள்வி-8. 2. Ananda Vikatan survey Result in Tamilnadu elections 2011
பதில்: // எனவே அதிமுக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தாலும் அது, ஜெயலலிதா வார்த்தைகளின்படி மைனாரிட்டி அரசாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.//
அதாகப்பட்டது ஜெயலலிதாவும் கருணாநிதி போலவே மற்ற கூட்டணிக் கட்சிகளை அரசில் சேர்க்காமல் இருந்தால் மட்டுமே இங்கு சொல்லப்படுவது சரியே.
கேள்வி-9. A word to karunanidhi?
பதில்: //உலகத்தில் தமிழகத்தைத் தவிர வேறு எங்கேயுமே சுய மரியாதைக்கு கட்சி தொடங்கியதாகவோ, தன்மானத்துக்காக இயக்கம் தொடங்கியதாகவோ, சரித்திரம் இல்லை. ஆனால், இன்றைக்கு அவமரியாதையின் அடையாளமாகவும், அவமானத்தின் சின்னமாகவும் எம் மக்கள்//
பகுத்தறிவு பகலவன் என அவதூறாக அழைக்கப்படும் ஈ. வே. ராமசாமி நாயக்கரே தன் கட்சியில் உள்ளவர்களுக்கு சுயமரியாதையோ பகுத்தறிவோ இருக்கக் கூடாது என்று சொன்னவர் ஆயிற்றே. அவர் சீடர்கள் மட்டும் என்ன ஸ்பெஷல்? விரை போட்டால் சுரையா முளைக்கும்?
கேள்வி-9. ANTHARANGAM AMBALAM
பதில்: சூடாமணி விகாரத்தின் தலைமை பிக்கு யார்?
கேள்வி-10. ARE YOU GOING TO VOTE "CONGRESS" OR "DMK"
பதில்: மனதை உருக்கும் நிகழ்ச்சிகள். ஆனால் நம்மூர்க்காரர்கள் இதை தேர்தல் பிரச்சினையாகப் பார்ப்பது போலத் தோன்றவில்லையே.
கேள்வி-11. TOP 10 REASONS KARUNANITHI GOING TO LOSE
பதில்: கூடவே இவற்றையும் பார்த்து விடுங்கள். நண்பர் பழமைபேசி நன்றாகவே அலசியுள்ளார் ஒவ்வொரு சினேரியோவையும்.
அ. அதிமுக தோற்பதற்கான காரணங்கள்
ஆ. அதிமுக வெல்வதற்கான காரணங்கள்
இ. திமுக வெல்வதற்கான காரணங்கள்
ஈ. திமுக தோற்பதற்கான காரணங்கள்
கேள்வி-12. இவர்களின் தேர்தல் பிரச்சாரம் பற்றி உங்கள் கருத்து?
1. கலைஞர் 2.அம்மா 3.மருத்துவர் 4.திருமா 5.ஸ்டாலின் 6.அழகிரி 7.வடிவேலு 8.விஜயகாந்த் 9.பிரேமலதா 10.சின்னத்திரைகள்
பதில்: ஒரு படம் 1000 வார்த்தைகளுக்கு சமம். ஒரு காணொளி?
1. விஜயகாந்த் அடாவடி/உளறல்:
2. வடிவேலு:
வடிவேலுவின் பேச்சு வண்டு முருகனாக அவர் ஒரு படத்தில் பேசிய காமெடிக்கு சற்றும் குறைந்ததில்லை. வீடியோ முதல் 25 விநாடிகளுக்கு சரியாக வரவில்லை. பொறுமையாக பார்க்கவும். ஆடியோ க்ளியராக உள்ளது.
மற்றவர்கள் பற்றிச் சொல்ல கருத்து ஏதுமில்லை.
மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மானுடத்தின் வெற்றி
-
மேல்நாட்டு அருங்காட்சியகங்கள் அந்த நாகரீகத்தின் மையங்கள். அவர்களுக்கான
ஆலயங்கள் அவையே. அறிவாலயங்கள்.நாம் ஆலயங்களுக்கே கொடையளிக்கிறோம். அங்கே
அருங்காட்சியகத...
8 hours ago
13 comments:
வடிவேலு ஒரு நல்ல எண்டர்டெய்னர். ஆனால் அவர் பேச்சைக்கேட்டு மக்கள் வோட்டு போடுவார்கள் என்று நம்புவது முட்டாளதனமானது. அது மஞ்சள் துண்டாருக்கே நன்றாகத் தெரியும்.
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.தி.மு.க. கோருகிறது, தில்லி நிறைவேற்றுகிறது: முதல்வர்
2.கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி
3.என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஆணையமே பொறுப்பு: அழகி
4.அதிமுகவை ஆதரித்து களமிறங்கினார் நடிகர் சிங்கமுத்து
5.தேர்தலில் போட்டியிடுவது நானாக விரும்பி ஏற்றதல்ல: கே.வீ. தங்கபாலு
கேள்வி பதில் பகுதிக்கு: உங்கள் நங்கநல்லூர் பஞ்சாமிர்த பகுதிகளை தொகுத்து புத்தகமாக வெளியிடலாமே செய்வீர்களா?
1.பார்ப்பணியப் பத்திரிக்கைகள் ஜெ ஐ ஆட்சியில் அமர்த்த சூழ்ச்சி செய்வதாய் கலைஞரின் பகிரங்க குற்றச்சாட்டு?
2.தேர்தல் கமிஷனின் செயல் பாடுகளை பார்க்கும் போது காங்கிரசின் பிடி இறுகுகிறதா?
3.மருத்துவர்-திருமா ஒரே அணியில்-படு சந்தர்ப்பவாத அரசியலை பார்க்கும் போது என்ன உதாரணம் நினைவுக்கு வருகிறது?
4.தேர்தல் கணிப்புகள் சோ அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் போலுள்ளதே?
5.கடவுள் நம்பிக்கை உள்ளவர்களெல்லாம் ,குறிப்பாய் இந்துக்கள் இந்த தடவை கருணாவுக்கு தேர்தலில் பாடம் புகட்டினால்?
//
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களெல்லாம் ,குறிப்பாய் இந்துக்கள் இந்த தடவை கருணாவுக்கு தேர்தலில் பாடம் புகட்டினால்?
//
தமிழ்நாட்டின் சனியை வீட்டில் உட்காரவைத்துவிட்டு திருநல்லாறு சென்ற துணைவி தான் முதல் பாடத்தை ஆரம்பித்து வைக்கவேண்டும்.
டோண்டு சார், உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை. நான் உட்பட நிறைய பேர் நீங்க ஏதாவது சொல்வீங்கன்னு காத்திருக்காங்க.
http://siliconshelf.wordpress.com/2011/04/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5/
thenkasi said...
1.பார்ப்பணியப் பத்திரிக்கைகள் ஜெ ஐ ஆட்சியில் அமர்த்த சூழ்ச்சி செய்வதாய் கலைஞரின் பகிரங்க குற்றச்சாட்டு?
தலைவர் கலைஞர் அவர்களின் குற்றச்சாட்டுக்கு சான்றுகள் பல உள்ளன.
கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தில்லுமுல்லு செய்யும் பூணுல் பத்திரிக்கைகள்,வட நாட்டு பூணுல் ஊடகங்கள்,துணை போகும் செயல் போல் நடை பெறும் அதீதிய தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள்,அவசரகால செயல் களையும் மிஞ்சும் ஒரு சிலரது ஆதிக்க சக்தி செயல்பாடுகள்,மதுரை அழகிரியாரையே முடக்க செய்யும் பொய் வழக்குகள்,அரசு ஊழியரை போராட்டம் செய்ய தூண்டும் செயல்கள்!
ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி பெய் குற்றசசாட்டுக்கள் அபாண்டமாய் கனிமொழி மீது !
எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மீண்டும் கலைஞர்ஆட்சி தொடர மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள்.
லட்சியக் கூட்டணியின் இமாலய வெற்றி உறுதி.
மக்கள் இன்னொரு முறை அம்மையாரிடம்,ஆதிக்க சக்திகளிடம்,பூணுல்களிடம்,நடிப்பு சுதேசிகளிடம்,பசப்புகாரர்களிடம்,
பொய்புனைவோரிடம் ஏமாந்து செயல்பட தயாராயில்லை.
மாபலி சக்கரவர்த்தி புராணத்தில் ஏமாந்து இருக்கலாம் ஆனால் கலியுக மாபலி ?
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றி ,தலைவர் கலைஞரின் வெற்றிக்கு கட்டியங்கூறுகிறது.
காங் கழகத்தை கைவிடும் என கனவு காண்போரின் எண்ணங்களுக்கு முற்றுப் புள்ளிவைக்கும் வகையில் 2ஜிஸ்பெக்ட்ரம் சிபிஐ அறிக்கை வெளிவந்துள்ளது.
சோனியா அம்மையார் சென்னை கூட்டத்தில் கலந்து கொள்ளுவது கழகத்தின் பால் அவர் கொண்டுள்ள அன்பை வெளிபடுத்துகிறது.
சென்னையில் நடை பெறும் இந்த கூட்டத்திற்கு பிறகு சென்னையும் பிற நகரங்களும் மீண்டும் கழக வசமாகும்.
@ஆர்வி
பின்னூட்டம் உங்கள் இரு பதிவுகளில் இட்டு விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதைவிட யார் தருவார்?
இலவச அரிசி
இலவச காஸ் அடுப்பு
இலவச டீவி
இலவச லேப்டாப்
இலவச பஸ் பாஸ்
இலவச மருத்துவம்
இலவச கல்வி
இலவச உடை
இலவச வீடு
இன்னும் இலவசங்கள் தொடர ஆதரிப்பீர் தலைவரை
மக்களுக்கு யார் தருவார்கள் யார் தரமாடார்கள் என புரியும்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்.
தர்மனைப்போல் அரசாட்சி செய்யும் மக்களின் தர்மராஜா கலைஞரே மீண்டும் முதல்வராவார்
மனுநிதிச் சோழனின் மறு பதிப்பு வாழ்க வாழ்கவே!
அரிச்சந்திரன் எப்படி வாழந்திருப்பான் என் நம் கண்முன்னே காட்டும் உண்மைவிளம்பியை போற்றுவோம்!
தனக்கென வாழா பிறர்க்குரியாளன் புகழ் பாடிடுவோம்.
சாமானியர்களின் நலனுக்காவே தன் உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் அர்பணித்த அண்ணல் வழி நடப்போம்.
For டோண்டு பதில்கள்:
4/4/11 தேதியிட்ட தினமலரில் (டீக்கடை பெஞ்சில்) மைக் கண்ட்ரோல் செய்தவரையே விஜயகாந்த் அடித்தார் என்றும் ஆனால் வேட்பாளரை அடித்ததாக ஆளும் கூட்டணி திட்டமிட்டுப் பேசுகிறது என்றும் போட்டிருக்கிறார்களே? மைக்செட் காரரை அடித்தால் பரவாயில்லையோ?
//Arun Ambie said...
For டோண்டு பதில்கள்:
4/4/11 தேதியிட்ட தினமலரில் (டீக்கடை பெஞ்சில்) மைக் கண்ட்ரோல் செய்தவரையே விஜயகாந்த் அடித்தார் என்றும் ஆனால் வேட்பாளரை அடித்ததாக ஆளும் கூட்டணி திட்டமிட்டுப் பேசுகிறது என்றும் போட்டிருக்கிறார்களே? மைக்செட் காரரை அடித்தால் பரவாயில்லையோ?//
kindly see page 44 of
juniorvikatan dated 6.4.2011
"என் உடல்நிலையை பரிசோதனை செய்துகொள்ள, மூன்று முறை லண்டன் சென்றேன்" என்று துணை முதல்வர் மு.க. இசுடாலின் கூறியிருக்கிறாரே? உலகத்தரம் வாய்ந்த கலைஞர் காப்பீட்டுத்திட்ட இன்சூரன்சில் 108 ஆம்புலன்சில் படுத்துக் கொண்டு போய் அரசு ஆசுபத்திரியில் உடல் நிலையைப் பரிசோதித்துக் கொண்டிருந்தால் மக்களுக்கும் அரசு ஆசுபத்திரிகள் மீது ஒரு நம்பிக்கை வந்திருக்குமே! லண்டனுக்குப் போய்த்தான் உடம்பைப் பரிசோதிக்க வேண்டுமா?
Post a Comment