இன்று இணையத்தை மேய்ந்து கொண்டிருந்தபோது எதேச்சையாக நண்பர் பாரா அவர்களது சுட்டு சாப்பிடு சூப்பர் டேஸ்டு என்ற தலைப்பில் உள்ள பதிவை படித்தேன். அதிலும் அக்காலகட்டத்தில் நானும் பின்னூட்டமிட்டிருந்திருக்கிறேன் என்பது அப்போதுதான் என் நினைவுக்கும் வந்தது.
லக்கிலுக்கின் விளம்பர உலகம் பற்றிய என்னும் புத்தகத்துக்கான மதிப்புரைதான் அப்பதிவு. ஆனால் இப்பதிவு அந்தப் புத்தகம் பற்றியல்ல.
பாரா அவர்கள் ஒரு விளம்பர வாசகத்துக்காக தான் பட்ட கஷ்டங்கள் பற்றிக் கூறினார். அதில் அவர் இவ்வாறும் எழுதினார், “வெகுகாலம் முன்னர் அப்பளம், ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று என்னிடம் தனக்கான விளம்பர வாசகங்களை எழுதித் தரச் சொல்லிக் கேட்டது. ரூ. இருநூற்றைம்பது மட்டும் என்று ரசீது எழுதி கையெழுத்து வாங்கிக்கொண்டு ஒரு மாமா ஐந்து ஐம்பது ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொடுத்துவிட்டு, ‘அட்வான்ஸ் இப்ப வாங்கிக்கோங்கோ. மிச்சத்த முடிச்சதும் செட்டில் பண்ணிடறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
கிட்டத்தட்ட ஆறு மாத காலம் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் சலிக்காமல் சுமார் ஆயிரம் விளம்பர வாசகங்களையாவது எழுதிக் கொடுத்திருப்பேன். ஒன்றுகூட அந்த அப்பள கம்பெனி முதலாளிக்குச் சரிப்பட்டு வரவில்லை. இறுதியில் அவரே எழுதினாரோ, வேறு யாரைக் கொண்டு எழுதவைத்தாரோ தெரியவில்லை. வெளிவந்த அவர்களது விளம்பரத்தை செங்கல்பட்டு தாண்டி எங்கேயோ செல்லும்போது ஒரு சிறு ஹோர்டிங்கில் பார்த்து தலையில் அடித்துக்கொண்டேன். என்ன கண்றாவி இது என்று பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பித் தள்ளினேன்.
ஏதோ ஒரு விளம்பரத்துக்கு இவன் ஏன் இத்தனை மாய்ந்து போகிறான் என்று நண்பர்கள் நினைத்திருக்கக் கூடும். அந்த அப்பள கம்பெனி மேலாளர் மாமா அதன்பின் என்னைச் சந்திக்கவில்லை. கொடுத்த 250 ரூபாயைத் திரும்பக் கேட்கவும் இல்லை. சனியன் விட்டது என்றுதான் நினைத்துக்கொண்டேன். அந்த விளம்பரம் ஒன்றே அவர்களுடைய கம்பெனியை இழுத்து மூடப் போதுமானது என்றும்.
ஆனால் நடந்தது வேறு. விளம்பரம் ஹிட். கிராமப்புறங்களில் ‘சுட்டு சாப்பிடு. சூப்பர் டேஸ்டு’ என்பது ஒரு வேத வரிபோல் ஆகிவிட்டது.
எண்ணெயில் பொறித்துச் சாப்பிடும் மத்திய தர வர்க்கத்துக்கு – அதற்கு மேற்பட்ட வர்க்கங்களுக்காகத் தனது அப்பளம் தயாரிக்கப்படவில்லை; எண்ணெய்க்குக் கூட வசதியற்றவர்கள்தான் டார்கெட் என்று அவர் என்னிடம் முதலிலேயே தெளிவாகச் சொல்லியிருக்கலாம். சுட்டு சாப்பிடு, சூப்பர் டேஸ்டு மாதிரி நானும் ஏதேனும் முயற்சி செய்திருப்பேன்.
எதற்கு இந்தக் கதை என்றால், விளம்பர உலகின் ஆதாரப்புள்ளி என்பது யார் டார்கெட் என்பதில்தான் இருக்கிறது”.
ரொம்ப சத்தியமான வார்த்தைதான். இலக்கு வாசகர்களை கண்டறிவதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும். அவரது அப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம், “மன்னிக்கவும் என்னால் ஒன்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. அப்பள கம்பெனி முதலாளி உங்களிடம் இலக்கு வாசகர்களை கூறினாலும் கூறாவிட்டாலும் அவரது பொருள் என்ன, யாரை குறிவைத்து விளம்பரங்கள் வரவேண்டும் என்பதை நீங்கள்தான் அவரைக் கேட்டிருக்க வேண்டும். நீங்களும் இதில் பல காலவிரயங்களை தவிர்த்திருக்கலாம்.
நான் பணிபுரியும் மொழிபெயர்ப்பு துறையிலும் இலக்கு வாசகர்கள் முக்கியம். உதாரணத்துக்கு ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு மொழிக்கு மாற்றும்போது அது ஒரு தொழிநுட்ப வார்த்தைகள் நிறைந்த கையேடாக இருந்தால் தயங்காமல் மொழிமாற்றும் நான் அதுவே அக்கம்பெனியின் இணையப்பக்கம் என்றால் அதை பார்க்க வேண்டியவர்கள் பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதையும் அவர்கள் மண்வாசனையே இல்லாத வாசகங்களை வைத்து கொண்டு சலிப்படைவார்கள் என்பதை உணர்ந்து மரியாதையாக வாடிக்கையாளரிடம் அவர் இந்த வேலையை பிரெஞ்சை தாய்மொழியாக கொண்டவரிடம்தான் தரவேண்டும் எனக்கூறி மேலே சொன்னதையும் சொல்வேன். இருப்பினும் பரவாயில்லை என சில வாடிக்கையாளர்கள் என்னையே செய்யச் சொன்னால், மண்வாசனை இல்லை என பின்னால் ஏதேனும் பிரெஞ்சுக்காரர் சொன்னால் அதை வைத்து என்னை தொந்திரவு செய்யக்கூடாது என்று கூறிவிட்டே வேலையைத் துவங்குவேன். அப்படியும் வேலையைத் தருபவர்கள் பிரெஞ்சுக்காரனுக்கு பணம் அதிகம் தரவேண்டும் என்னும் தயக்கத்தால்தான் என்னிடம் வருகிறார்கள் என்பது வேறு விஷயம்.
போகிற போக்கில், சுட்டு சாப்பிடு சூப்பரா இருக்கு என்பது அமர்க்களமான ஸ்லோகன்”. மேலும், விளம்பர வாசகங்கள் என்பவை விளையாட்டல்ல, நல்ல உழைப்பு தேவைப்படும். அப்படித்தான் கோக்கோ கோலா சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒரு பிரச்சினை வந்தது. அதை அவ்வாறு உச்சரித்தால் சீன மொழியில் அது ஒரு ஒரு கெட்ட வார்த்தையாம். சீனாவில் ஒத்துக் கொள்ளும் பெயரை கண்டுபிடிக்க நீண்ட நாள் உழைப்பு தேவைப்பட்டதாம்.
இப்போது வேறு விஷயம் சொல்ல வேண்டும். இந்திய வாடிக்கையாளர்கள் இம்மாதிரியான தலைகீழ் மொழிபெயர்ப்புகளை (அதாவது ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு அல்லது ஜெர்மன்) என்னைப் போன்றவர்களிடம் தருவதற்கு பணம் மட்டும் காரணம் இல்லை. அவர்கள் என்னிடம் தரும் டெக்ஸ்ட்களில் உள்ளவை இந்திய ஆங்கிலத்தில்தான் இருக்கும். அதுவும் அவற்றில் எழுதியவரது தாய்மொழியின் வாசனையும் வரும். உதாரணம், some unknown person has set the paper இந்த மாதிரி வாக்கியத்தைப் பார்த்ததுமே ஆங்கிலத்திலிருந்து தன் மொழிக்கு மாற்ற முன்வரும் ஒரு சராசரி பிரெஞ்சுக்காரரோ ஜெர்மானியரோ தலைமயிரைப் பிய்த்துக் கொள்வது உறுதி. ஆனால் நான் அதை சரியாகக் கண்டு கொள்வேன். எழுதியவர் என்ன வார்த்தை போட நினைத்து இதைப் போட்டார் என்பதையும் அறிவேன் (நன்றி அப்பா).
கடந்த ஓரிரு மாதங்களாக அவ்வளவாக பதிவிடாததற்கு காரணம் வேலை மட்டுமல்ல. ஒரு வித அலுப்பே காரணம். அதிலிருந்து மீண்டு விட்டேன் என நம்புகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
புத்தாண்டு
-
புத்தாண்டில் வழக்கமான மலைத்தங்குமிடத்தில் இருப்பேன். (31 காலைமுதல் 1 மாலை
வரை) ஆர்வமிருக்கும் நண்பர்கள் வந்து என்னுடன் தங்கலாம். செலவுகளைப்
பகிர்ந்துகொள்ளு...
17 minutes ago
6 comments:
welcome back to pavilion!
@hayyram
You meant to say "welcome back to the pitch"!
Only the player who is out will be welcomed back to the pavilion. :))))
Regards,
Dondu N. Raghavan
//Only the player who is out will be welcomed back to the pavilion// i know that. my meaning is your pitch is your translation job. whenever u get relax then only u can write something in blog. so i asked u to come to pavilion and write something in blog. so now i can say welcome back to blog.
@hayyram
Nice reply, thanks a lot.
Regards,
Dondu N. Raghavan
some unknown person has set the paper என்பதை an idiot has set the question paper என்று கூட சொல்லலாம் தானே ? :D
@வஜ்ரா
1. ஆசிரியர் கூற நினைத்தது “எவனோ (விஷயம்) தெரியாதவன் பேப்பரை செட் பண்ணியிருக்கான்”
2. ஆசிரியர் சொன்னது, “some unknown person has set the paper"
3. நான் அதை கேலி செய்தேன்.
4. என் தந்தை என்னை மென்மையுடன் சரியான பாதைக்கு அழைத்துச் சென்றார்.
5. நீங்கள் கூறுவது “எவனோ முட்டாப்பய பேப்பரை செட் செய்திருக்கான்”
6. நீங்கள் சொல்வது இண்டெர்ப்ரெடிங்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment