pt
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1.அதிமுக தலைமையின் தன்னிச்சையான போக்கால் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறது: வைகோ
பதில்: தங்களை அறியாமலேயே வைக்கோவும் ஜெயும் கருணாநிதிக்கு துணை போகிறார்கள். வேறு என்ன கூறுவது?
கேள்வி-2. திமுகவின் தேர்தல் அறிக்கை, வறுமையும் ேலைவாய்ப்பின்மையும் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது: திருப்பூரில் டி.கே.ரங்கராஜன் பேட்டி
பதில்: சரியாகத்தானே கூறுகிறார்? பை தி வே, இப்பேட்டியைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?
கேள்வி-3. கிரைண்டர்(அ) மிக்சி, லேப்-டாப் இலவசம்: தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள்
பதில்: தேர்தல் நெறிமுறைகளுக்கு அப்பட்டமான சவாலாக அல்லவா இது உள்ளது? தேர்தல் கமிஷன் தூங்குகிறதா?
கேள்வி-4. தனியார் பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்ட 321 அரிவாள்கள் பறிமுதல்
பதில்: வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் இளநீர் வியாபாரிகளுக்கு இலவசமாக அனுப்பியிருக்கிறோம் எனக் கூறினாலும் வியப்படைவதற்கில்லை.
கேள்வி-5. ராஜீவ் காந்தியை குற்றவாளி என்கிறார் பிரதமர்: .அத்வானி
பதில்: நீங்கள் இச்செய்தியைத்தானே கூறுகிறீர்கள்? ராஜீவை விடுங்கள், அவரை யார் என்ன சொன்னாலும் அவருக்கு என்ன பிரச்சினை? உயிருடன் இருப்பவர் பற்றிப் பேசவும்.
மன்மோகன் சொன்னதையே எடுத்துக் கொள்வோம். காங்கிரஸ் 2009-ல் பணபலத்தால்தான் வெற்றி பெற்றது என்பதை எல்லோருமே அறிவர். அதையே தான் குற்றமர்றவர் என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கூறியதன் மூலம், வோட்டர்களுக்கு ஒரு லஞ்சமும் தர முயலாது போனாலும் வெற்றி பெற்ற மோதியின் தரப்பை இன்னும் பலமாக்கியுள்ளார். அவர் அறியாமலேயே மோதிக்கு கிடைத்த வெற்றி (2002, 2007 மற்றும் உள்ளாட்சி தேர்தல்) அவர் குஜராத் கலவரத்தில் குற்றமற்றவர் எனக் காட்டுவதை உறுதிபடுத்தியுள்ளார். மன்மோகனுக்கு எனது நன்றிகள். இந்த அழகில் மேலே குறிப்பிட்ட 3 குஜராத் தேர்தல்களிலும் சம்பந்தப்பட்ட தேர்தல் கமிஷன் தலைமை கமிஷனர்கள் காங்கிரசுக்கு பூத் ஏஜெண்டாகவே கோமாளித்தனமாகச் செயல்பட்டனர். இருப்பினும் மோதி ஜெயித்தார்.
இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணை டீம் மோதியை கோத்ராவுக்கு பிந்தைய கலவரம் பற்றிய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மானுடத்தின் வெற்றி
-
மேல்நாட்டு அருங்காட்சியகங்கள் அந்த நாகரீகத்தின் மையங்கள். அவர்களுக்கான
ஆலயங்கள் அவையே. அறிவாலயங்கள்.நாம் ஆலயங்களுக்கே கொடையளிக்கிறோம். அங்கே
அருங்காட்சியகத...
21 hours ago
3 comments:
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா: பெண்களுக்கு இலவச மின் விசிறி, மிக்சி, கிரைண்டர்
2.தேர்தல் ஆணையம் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்: ஜெயலலிதா பேட்டி
3. அ.தி.மு.க. அறிக்கை எடுபடாது: கருணாநிதி
4.தமிழகத்தில் தி.மு.க. அணிக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட்டுப் பிரசாரத்துக்கு வர மாட்டார்கள்
5.இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னைகளுக்கு போர் மூலம் தீர்வு காணமுடியாது என்று பாக். பிரதமர் யூசஃப் கிலானி கூறியுள்ளார்.
For டோண்டு பதில்கள்:
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=91
பிட் அடித்த மாணவர்களை "தேர்தல் நேரம், ஓட்டுப் போய்விடும்" என்று காப்பாற்றினாராம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. இதில் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறார்களாம். இந்த கண்றாவிக்கு இலவச +2, இலவச டிகிரி என்று கொடுத்து விட்டுப் போகலாமே? Your take, Sir!
இவர்களின் தேர்தல் பிரச்சாரம் பற்றி உங்கள் கருத்து?
1.கலைஞர்
2.அம்மா
3.மருத்துவர்
4.திருமா
5.ஸ்டாலின்
6.அழகிரி
7.வடிவேலு
8.விஜயகாந்த்
9.பிரேம லதா
10.சின்னத்திரைகள்
Post a Comment