4/28/2011

டோண்டு பதில்கள் - 28.04.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. தமிழகமே பற்றி எரியும்:கே.வி.தங்கபாலு

பதில்: இப்படியும் ஒரு அல்ப ஆசை இவ்வாறு சொல்லிக்கொள்ள வேண்டுமென்று. தேர்தலில் அவர் தோல்வி பெற்றால் அவர் வயிறு வேண்டுமானால் எரியலாம்.

கேள்வி-2. ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியா முன்னேற்றம்
பதில்: யாருடைய ஏழ்மையை?

கேள்வி-3. ஒரு ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழலா?
பதில்: இதைத்தான் வேறு வழியே இல்லை என்பது. திமுக ஆட்சி இப்போது போக வேண்டியது. இது பற்றி நான் போட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன், “ஒரு பக்கம் அதிமுக கூட்டணி, மறு பக்கம் ஆளும் திமுக கூட்டணி. இரு கூட்டணிகளிலும் உள்ள பிரதான கட்சிகள் இரண்டிலுமே பல குறைகள் உண்டு. இரு கட்சிகளுமே ஆட்சி செய்துள்ளன. 1991 முதல் மாற்றி மாற்றித்தான் அவை ஆட்சி புரிந்துள்ளன. ஆளும் கட்சி ஜெயிப்பது கடந்த இருபது வருடங்களில் குறைந்த பட்சம் பொது தேர்தல்களில் இல்லை”.

1991-96-ல் அதிமுக ஆட்சி அதனுடைய அடாவடி போக்குக்காகவே மக்களால் தோற்கடிக்கப்பட்டது என்பது காலத்தின் கட்டாயம். 1996-2001-ஆட்சியில் ஒப்பீட்டு அளவில் திமுக நல்ல முறையிலேயே ஆட்சி செய்தாலும், கூட்டணி கணக்கில் 2001-ல் தோற்றது. அதே போல 2001-06 அதிமுக ஆட்சியும் ஒப்பீட்டு முறையில் நல்ல முறையிலேயே ஆட்சி தந்தாலும் அதே கூட்டணி கணக்கில் ஆட்சியை கோட்டை விட்டது. ஆனால் 2006-11 திமுக ஆட்சி 1991-96 அதிமுக ஆட்சியையே நினைவுபடுத்துகிறது.
அதற்காகவே அது போக வேண்டும் என்பது மீண்டும் காலத்தின் கட்டாயமே”.

கேள்வி-4. கலக்கிய தேர்தல் கமிஷன்... கலங்கிய கட்சிகள்...!
பதில்: சேஷன் சந்தோஷப்படுவார்.

கேள்வி-5. அலிக்கு உதவிய கவர்னர் ராஜினாமா?
பதில்: ஆக அலிக்கு உதவியது கவர்னர். அவரது ராஜினாமா அல்ல அப்படின்னு சொல்லலாமா?

கேள்வி-6. தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை ஜெயலலிதா எடுத்துக் கொண்டாரா? கலைஞர் கேள்வி.
பதில்: கலைஞர் சொன்னது “ஆற்றிலே வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போன ஒருவன் "உலகம் போச்சு உலகம் போச்சு'' என்று குரல் கொடுக்க அவனைக் காப்பாற்றி "என்னப்பா உலகம் போச்சு என்று குரல் கொடுத்தாயே'' என்று கேட்டபோது "நீங்கள் என்னை காப்பாற்றா விட்டால் என்னை பொறுத்தவரையில் உலகம் போயிருக்கும் அல்லவா, அதனால் தான் அப்படி கத்தினேன்''என்றானாம். அதைப்போல அம்மையாருக்கும் வேறு வழி எதுவும் தெரியாததால் ஏதேதோ குரல் கொடுத்துப்பார்க்கிறார்”, கலைஞருக்கும் பொருந்தும் போலிருக்கிறதே.

கேள்வி-7. பழ. நெடுமாறன் மீது கலைஞர் வழக்கு
பதில்: அவதூறு வழக்கில் பிரதிவாதிக்கு இருக்கும் ஒரு டிஃபன்ஸ் தான் கூறியது உண்மை என கூறுவதாகும். அது நெடுமாறன் விஷயத்திலும் நடக்கும் என நினைக்கிறேன்.

கேள்வி-8. கலைஞர் ஓய்வெடுக்கும் ரிசார்ட்டில் ஸ்டாலின் ஓய்வு
பதில்: என்ன செய்வது, கலைஞரது சீட்டில்தான் அமர இயலவில்லை, ரிசார்ட்டிலாவது ஓய்வெடுப்போம் என்றிருக்கிறாரோ என்னவோ.

கேள்வி-9. இருட்டுக்கடை அல்வா என்ற பெயரில் வேறு யாரும் கடை நடத்த தடை: நெல்லை கோர்ட்
பதில்: “இப்போதான் கரண்டு நாள் பூரா இருக்கறது இல்லையே. அப்போ கரண்டு இல்லாத கடையில் பகலிலும் இருட்டுல அல்வா பண்ணி இருட்டுக் கடை அல்வா என்று வித்தாத் தப்பா என்ன? வேணும் என்றால் வித்தா அதை பகலிருட்டுக் கடை அல்வா என்று போட்டுக்க இட்லிவடை சிபாரிசு செய்கிறது”.
இதுவும் நல்லாத்தானே இருக்கு! நன்றி, இட்லிவடை?

கேள்வி-10. தமிழ் பெண்களின் கற்பு குறித்து பேட்டி: நடிகை குஷ்பு மீதான வழக்கு ஒத்திவைப்பு
பதில்: இன்னுமா ரப்பர் மாதிரி இக்கேசை இழுக்கிறார்கள்?


Arun Ambie
கேள்வி-11. காந்திநகர் நகராட்சித் தேர்தலில் காங்கிரசு வென்று விட்டதாம். இது மோடிக்கு பின்னடைவு, மரண அடியின் முதல் படி என்று கொக்கரிப்போர் பற்றி....
Yet, மோடி சற்றே introspect செய்வதில் தவறில்லை என்பது குறித்த உங்கள் பார்வை??

பதில்: 18:15 பெரிய மார்ஜின் இல்லைதான், இருப்பினும் மோதி அவர்கள் இதை அவதானம் செய்வது நலம்.

கேள்வி-12. மறுஜென்மத்தை ஏற்றாலும் அதை மறுபதிப்பு என்று சொல்லி மீசையில் மண் ஒட்டவில்லை என்று இறும்பூது எய்தும் போலி பகுத்தறிவு ஜென்மங்கள் பற்றி உங்கள் கருத்து என்னவோ?
பதில்: எதைச் சொல்கிறீர்கள்? ராஜராஜ சோழனின் மறுபதிப்புத்தான் கலைஞர்னு ஒரு பதிவர் சொன்னதையா? அவர் சுந்தரசோழன் என எழுத்தாளர் பாரா குறிப்பிட்டுள்ளாரே? பாவம், வந்தியத்தேவனைத்தான் யாருமே கண்டுகொள்ளவில்லை.

thenkasi:
கேள்வி-13. மறுஜென்மம் பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
பதில்: ஒரு சராசரி இந்துவுக்கு இது பற்றி உள்ள எல்லா நம்பிக்கைகளும் எனக்கும் உண்டு.

கேள்வி-14. மானிட இனத்தில் இறப்புக்குப் பின்னால் உயிர் செல்லும் இடம் யாது?
பதில்: எமபுரிக்குச் செல்லும் வழியில் உள்ள வைதரணி நதிக்கரைக்கு உயிர் செல்லும் என கருட புராணக் கூறுகிறது. மேலதிகத் தகவல்களுக்கு, இங்கு பார்க்கவும்.

கேள்வி-15. மனித உடலில் உயிர் பிரிந்தபின் உடலின் எடை 5 கிலோ குறைகிறதாம்-அப்படியென்றால் ஆத்மா பற்றிய நம்பிக்கை சரிதானே?
பதில்: இதை யாராவது வெரிஃபை செய்து பார்த்திருக்கிறார்களா? பரிசோதனை எந்தச் சுழ்ழ்நிலையில் நடத்தப்பட்டது, ஆகிய அடிப்படை கேள்விகளுக்கு பதிலிருந்தால் மேலே பேசலாம்.

கேள்வி-16. இப்பிறவியில் சரியில்லாமல் நெறிமுறை தவறி வாழும் மனிதர்களில் சிலர் செல்வச் செழிப்போடு ஆனந்தமாய்,ஆர்ப்பாட்டமாய் வாழ்வதற்கு காரணம் அவர்கள் போன பிறவியில் செய்த நற்செயல்களா?
பதில்: அப்படித்தான் இந்து மதம் கூறுகிறது. நானும் நம்புகிறேன்.

கேள்வி-17. முந்தையக் கேள்வியில் சொல்லப்டும் நபர்களில், உடன் உங்கள் கவனத்துக்கு முதன்மையாய் வருவது யார்?
பதில்: ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின்னு சொல்லிட்டா உண்மைக்கு உண்மையும் ஆச்சு, ஆட்டோவும் வீட்டுக்கு வராது. எப்புடீ?

18. வாழும் யோகிகளில் யோக்கிமானவர் யார்?
பதில்: தெரியாது.

19. யோகக் கலை பற்றிய ஆர்வம் ஏகமாய் பரவுதன் காரணம் மன அழுத்தமா?
பதில்: அதுவும் ஒரு காரணமே.

20. எல்லாம் பிரம்மம் எனும் எண்ணம் மக்களுக்கு முழுமையாய் வந்துவிட்டால்?
பதில்: அசோகருக்கு பிறகு அவரது குடிமக்களுக்கு சாத்வீக எண்ணங்கள் நிரம்பிச் செல்ல, அன்னிய நாட்டுப் படையெடுப்பில் அவர்கள் லோலுப்பட வேண்டியிருந்தது. வெவ்வேறு எண்ணங்களும் செயல்பாடுகளும் இருந்தால்தான் நாடு நாடாக இருக்கும்.

21. கடவுள் பெருமாள் உங்கள் முன்னால் காட்சி தந்தால் என்ன வரம் கேட்பீர்கள்?
பதில்: இருக்கும்வரை கைகால்கள், மனம், மூளை ஆகியவை செயலாக இருந்து, பிறருக்கு உபத்திரவம் தராது, இறப்பதற்கு முந்தையக் கணம் வரை எனது தொழிலில் நன்கு உழைக்கும் பேறு வேண்டும் எனக் கேட்பேன்.

கேள்வி-22. வேற்று கிரக இறந்த மனிதன் பற்றிய பிரபல வீடியோ பற்றி உங்கள் கருத்து?
இந்த வீடியோவையா குறிப்பிடுகிறீர்கள்? கருத்து ஏதுமில்லை.

ரமணா
மே 13 அன்று
கேள்வி-23.அதிமுக ஆட்சிக்கு வந்தால்?

பதில்: தமிழகத்தின் இப்போதையத் தேவை நிறைவேறும்.

கேள்வி-24. திமுக ஆட்சி தொடர்ந்தால்?
பதில்: தமிழகத்துக்கு கஷ்டகாலம் தொடரும்.

கேள்வி-25. ஜெயலலிதாவின் பெங்களுரு சொத்து குவிப்பு வழக்கு அவருக்கு பாதகமாய் அமைந்தால்?
பதில்: நீதிக்கு ஜெயம்.

கேள்வி-26. பாமக, வி.சி ஜெயலலிதா அணி மாறினால் என்ன சொல்லி சமாளிப்பார்கள்?
பதில்: ஏற்கனவேயே இவ்வாறு செய்தபோது என்ன சொன்னார்களோ அதையே சொல்லிவிட்டு போகிறார்கள். எல்லாமே ஒரு மட சம்பிரதாயம்தானே.

கேள்வி-27. கருணாநிதி என்ன அறிக்கை விட்டு சாடுவார்?
பதில்: மேலே சொன்னதுபோல ஏற்கனவேயே கூறியதைத்தான் சொல்லுவார்.

அதிமுக,காங் கூட்டணி ஆட்சி வந்தால்
கேள்வி-28. கம்யூனிஸ்டுகள் என்ன சொல்லி திட்டுவார்கள்?

பதில்: விவஸ்தை கெட்ட நம்மூர் அரசியலில் யார் எதை வேண்டுமானாலும் கூறலாம். கம்யூனிஸ்ட்களும் அவ்வாறே.

கேள்வி-29. இலங்கைப் பிரச்சனை சூடு தணியுமா?
பதில்: தணியாது.

கேள்வி-30. மீனவர் பாதுகாப்பு என்னவாகும்?
பதில்: தமிழக அரசு, இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியவை கூடிப்பேசி சரி செய்ய வேண்டிய பிரச்சினை இது. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக கோஸ்ட் கார்ட் ஹெலிகாப்ப்டர்கள் மேலா ரோந்துப் பணியில் இருப்பது அவசியம். அதெல்லாம் செய்யாமல் போனால் மீனவர்கள் பாதுகாப்பு சந்தேகமே.

கேள்வி-31. வைக்கோ?
பதில்: அவரே அது பற்றி இன்னும் யோசிக்கவில்லை என நினைக்கிறேன்.ர்

கேள்வி-32. விஜயகாந்த்?
பதில்: ஆட்சியில் பங்கு கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பொருத்துத்தான் அவர் பேசுவது அமையும்.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

4/22/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 22.04.2011

சோ, குஷ்பு, ராஜ்தீப் சர்தேசாய் செவ்வி
தமிழகத் தேர்த்தலில் பணம் விளையாடியது பற்றி சோ மற்றும் குஷ்புவுடன் முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரரான சர்தேசாயின் புதல்வரும் பிரபல பத்திரிகையாளருமான ராஜ்தீப் சர்தேசாய் பேசுகிறார்.

முதலில் வீடியோக்களைப் பாருங்கள்.

வீடியோ 1:


வீடியோ-2: ஆ, அந்தோ! என்ன ஏமாற்றம்! மொத்தம் மூன்று வீடியோக்கள் என்றார்கள், ஆனால் மீதி இரண்டுமே முதல் வீடியோவாகத்தான் உள்ளன. அதாங்க இது என்கிறார்களா? (நன்றி செந்தில்)

கடன் கொடுத்தல் பற்றிய மேலும் சில எண்ணங்கள்
நர்சிம் பற்றி பதிவர் வெண்பூ எழுதியிருந்தது எனக்கு அதிர்ச்சியைத்தான் தந்தது. தான் ஃபோர்ட் கம்பெனியில் பெரிய பொறுப்பில் இருப்பதாகவெல்லாம் பலரிடம் தேவையற்றப் பொய்களை கூறி வந்திருக்கிறார். பலருக்கு கடன்கள் தந்திருக்கிறார் (பைத்தியக்காரன் மற்றும் பலர்), வெண்பூ போன்றவர்களிடம் பணமும் பெற்றிருக்கிறார். பெற்ற பணத்தைத் திருப்புவதில் சுணக்கமும் காட்டியுள்ளார். கடைசியில் கடனைத் திருப்பித் தந்துவிட்டார் என வெண்பூ எழுதியுள்ளார். இருப்பினும் நர்சிம்மின் இமேஜ் விழுந்தது விழுந்ததுதான்.

ஒரு பதிவுக்லக நண்பருக்கு போன் போட்டு பின்புலன் பற்றி கேட்டதில், அவரோ வெண்பூ எழுதியது பனிப்பாறையின் முனை மட்டுமே என பொருள்படக் கூறினார். இது பற்றி நான் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். இருப்பினும் ராம்ஜி யாஹூவிடமிருந்து வந்த கேள்வி என்னை இது பற்றி குறிப்பிட வைத்து விட்டது.

ராம்ஜி_யாஹூ said...
பதிவர் நரசிம் அவர்களின் பண, நட்பு விவகாரங்கள் குறித்து உங்களின் கருத்து என்ன. புதிய பதிவர்கள், பஸ்சர்கள், த்விட்டர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

கடன் வாங்குவது இருவகைப்படும். ஒன்று தினசரி வாழ்க்கைக்கான செலவுகளுக்கே தன்னால் சமாளிக்க முடியாமல் கடன் வாங்குவது. என் தந்தை கூறுவார், “யாராவது ரேஷன் வாங்க வேண்டும் என கடன் கேட்டால் கடன் தருவதும் தராததும் உன் விருப்பம். ஆனால் அது முக்கால்வாசி நேரங்களில் திரும்ப வராது என்பதையும் மனதில் வைத்துக் கொள்வது நலம்”. சத்தியமான வார்த்தைகள்.

இன்னொரு வகை, தான் மற்றவருக்கு கடன் தருவதற்காக வேறு பலரிடம் கடன் வாங்குவது. அவர்கள் ஆபத்தானவர்கள். அவர்களுக்கு காலணா கடன் கூட தரலாகாது. வேறு சிலர் உதார் விடுபவர்கள், தேவையற்ற பொய்களைக் கூறி தமது இமேஜை உயர்த்திக் கொள்ள முனைபவர்கள். இதில் ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால், உண்மை எப்போதாவது வெளியானால் இருந்த இமேஜும் கோவிந்தா.

ராம்ஜியின் கேள்வியின் அடுத்த பாகம், இணையத்தில் இவ்வாறெல்லாம் மாட்டிக் கொள்ளாமல் எவ்வாறு செயல்படுவது? சூதனமாக இருந்து கொள்ள வேண்டும். உங்களைப் பற்றியத் தகவல்களை கண்டவருக்கும் தர வேண்டாம். இணையத்தில் நண்பர்களாக வருபவர்களிடம் ஒரு எல்லைக்குள் பழகுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல்களை அவ்வாறானவர்களிடம் தவிர்ப்பது நல்லது.

உங்கள் தொழில் தொடர்புகளையும் பதிவர் தொடர்புகளையும் வெவேறு தளங்களில் வைத்துக் கொள்வது நலம்.

எதற்குத்தான் கோபப்படுவது என்றில்லையா?
நடிகர் விக்ரம் நடிக்கவிருக்கும் “தெய்வத் திருமகன்” என்னும் திரைப்படத்தில் அவர் மூளை வளர்ச்சி குறைந்தவராக வருகிறாராம். அது சம்பந்தமாக வந்த இச்செய்தியைப் பார்க்கவும்.

சென்னை: விக்ரம் நடிப்பில் மே மாதம் ரிலீஸாகவிருக்கும் 'தெய்வத் திருமகன்' படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தேவர் குல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று இந்த கூட்டமைப்பின் தலைவர் சண்முகையா பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

நடிகர் விக்ரம் நடித்து வெளிவர உள்ள 'தெய்வத் திருமகன்' தமிழ் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த பெயரில் திரைப்படம் வருவதை எங்கள் சமுதாய மக்களால் ஏற்க முடியாது.

எனவே அந்த படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும். அவ்வாறு படத்தின் பெயரை மாற்றி வெளியிடா விட்டால் தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்படும் திரையரங்கங்களை முற்றுகையிடுவோம். திரைப்பட பிரதிகளையும் கைப்பற்றுவோம். கோர்ட்டுக்கும் போவோம்.


தெரியாமல்தான் கேட்கிறேன், இதைவிட முட்டாள்தனமாக யாராவது எதிர்வினை தரமுடியுமா? இவ்ர்களாகவே ஒருவரை ஒரு பெயரை வைத்துக் கூபிடுவார்களாம். ஆனால் அப்பெயரை வேறு யாருக்கும் வைக்க முடியாதாம். என்ன காப்பிரைட்டா வாங்கியுள்ளனர் அப்பெயருக்கு?

அதே போலத்தான் நீல பத்மநாபன் அவர்களது நாவலான பள்ளிகொண்டபுரம் தலைப்பை ஒரு திரைப்படத்துக்கு வைத்ததை ஆட்சேபித்து அவர் கடிதம் எழுதியது நினைவுக்கு வருகிறது. இதிலும் எனது கருத்து அதுவேதான். நீல பத்மநாபன் தனது நாவலின் தலைப்பை திரைப்படத் தலைப்பாக அதற்கான அமைப்பில் பதிவு செய்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அது இல்லாத பட்சத்தில் அவர் கேஸ் ஆட ஒன்றுமே இல்லை என்பதுதான் என் கருத்து. அதே கருத்தை வெளியிட்டு ரவிஸ்ரீனிவாசின் பதிவிலும் நான் மேலே சொன்னதன் சாரமாகத்தான் பின்னூட்டமிட்டேன்.

இது நடந்து கிட்டத்தட்ட மூன்றுகள் ஆகிவிட்ட நிலையில் மேலே என்ன நடந்தது என்று பார்த்தால் இச்செய்தி கிடைக்கிறது. நீல பத்மநாபனின் தரப்பை நீதிபதி ஒத்துக் கொண்டதாக அறிகிறேன். வியப்பாகத்தான் இருக்கிறது. ஒருவேளை கேஸ் பேப்பர்களில் மேல் விவரங்கள் தந்திருப்பார்களாக இருக்கும். எனக்கென்னவோ திரைப்படத் தயாரிப்பாளர் அப்பீலுக்கு போனால் அவர் பக்கம் தீர்ப்பு வரும் வாய்ப்பே அதிகமாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/21/2011

டோண்டு பதில்கள் - 21.04.2011

pt
கேள்வி-1. what is your comment about the actor vadivelu and his support to DMK?
பதில்: முன்னால் மனோரமா செய்தது போல இவரும் செய்ததை ஏற்கனவேயே குறிப்பிட்டுள்ளதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

பிரசாரம் செய்யட்டும் அதற்காக திரும்ப வழியில்லாமல் செய்து விட்டாரே என்றுதான் எண்ணுகிறேன். நதியைக் கடந்து வந்ததும் திரும்ப வழியில்லாமல் கடந்து வந்த பாலத்தையே அழிப்பது என்பது போன்ற சொலவடை ஆங்கிலத்தில் உண்டு. யாராவது தெரிந்தால் அதைக் கூறலாமே?

கேள்வி-2. Is it true that all forward caste journals are acting against DMK ,because it is headed by aன் obc?
பதில்: அப்படியானால் மோதிக்கு எதிராக நிலை எடுத்தவர்களும் அதே காரணத்துக்காகத்தான் என கருணாநிதி கூற இயலுமா? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் வேலை அவருக்குத் தேவையா? அது சரி, ராசா பற்றி இப்போ என்ன சொல்லறாராம்?

கேள்வி-3. It is reported in blogs that Being a iyenkar man you are also acting against DMK ?
பதில்: நான் வடகலை ஐயங்கார், சோ ஐயர். மோதி ஓபிசி. இஸ்ரவேலர்கள் யூதர்கள். அதுக்கென்ன இப்போ?

கேள்வி-4. Whether BJP is indirectly supporting DMK?
பதில்: துரதிர்ஷ்டவசமாக இந்தத் தேர்தலை பொருத்து ஆம் என்றுதான் கூற வேண்டும். அதற்காக கட்சிக்கும் அஜெண்டா வேண்டுமே. தனித்து போட்டியிட முயல்வது இப்போதைக்கு கட்டாயத்தால் என்றாலும், எதிர்காலத்தில் தன்னிச்சையான முடிவாக அமைவதே நலம். என்ன, தன் சுய பலம் அறிந்து ஆரம்பத்தில் குறைவான இடத்துக்கு ப்போடியிட்டு அவற்றில் மட்டும் கவனம் செலுத்தி பிரசாராம் செய்திருக்கலாம். பார்ப்போம்.

கேள்வி-5. what will happen, if AIADMK is voted to power ,in respect of cong,dmk relation and 2g scam case?
பதில்: அது ஜெயா நக்ர்த்தும் காய்களைப் பொருத்ததாகும். முதலில் தேர்தலில் வெற்றி பெறட்டும், பார்க்கலாம்.

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-6. அமைதியான தேர்தல்: ராமதாஸ் பாராட்டு
pt:first step to jump to other side?

பதில்: தேர்தல் கமிஷனைத்தான் தெரியாத்தனமாகப் பாராட்டி விட்டாரோ என நினைத்து விட்டேன். அப்படி இல்லை போலிருக்கிறதே.

கேள்வி-7. கூட்டணி ஆட்சியும் அமையலாம்: கருணாநிதி
pt: last step to retain allaiance partners with him

பதில்: Whistling in the dark.

கேள்வி-8. தனிப் பெரும்பான்மை கிடைக்கும்: ஜெயலலிதா
pt: final reply to all partners?

பதில்: Overconfident.

கேள்வி-9. திரிணமூல் - காங்கிரஸ் கூட்டணி வாக்கைப் பிரிக்கிறது பாஜக
pt: try to give reason for poll results favourable to CPM ?

பதில்: பாஜக கடக்க வேண்டிய தூரம் அதிகம். சி.பி. எம். பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?

கேள்வி-10. தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து
பதில்: கருணாநிதி தோற்று விடுவார் என முடிவே கட்டி விட்டார்களா என்ன?

கேள்வி-11. மம்தாவுக்கு 100 கோடி கறுப்பு பணம்; கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு
பதில்: சபாஷ் சரியான போட்டி

கேள்வி-12. தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி
பதில்: ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். தங்கம் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தால், பலரைப் பொருத்தவரை அதிர்ச்சி மட்டும் வராது, மாரடைப்பே வந்து விடும்.

கேள்வி-13. ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார் : எஸ்.வி.சேகர்
பதில்: அதாவது, அனைவரையும் வைத்துக் கொண்டு வாக்குபதிவு செய்தது.வாக்குபதிவு செய்தவுடன் மாற்றம் தேவை என மக்கள் மத்தியில் முடிவு எடுத்ததாக கருத்து தெரிவித்தது. இதைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? ஆம், அவர் செய்தது தவறுதான்.

கேள்வி-14. இதுவரை இல்லாத அளவு வாக்குப்பதிவு ஏன்?
பதில்: தேர்தல் கமிஷனின் நேர்மையான செயல்பாட்டுக்கு இது ஒரு சாட்சி.

கேள்வி-15. வடிவேலு, குஷ்பூ பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது : நாஞ்சில் சம்பத்
பதில்: வடிவேலு தெரியும், குஷ்பு தெரியும். யார் இந்த நாஞ்சில் சம்பத்?

ரமணா
16. வைகோவுக்கு ஜெயலலிதா செய்தது துரோகமில்லையா?
பதில்: துரோகமல்ல, முட்டாள்தனம்.

17. இதற்குப்பிறகும் வைகோவின் நடு நிலை இந்தத் தேர்தலில் அவர் அரசியல் செல்வாக்கை கூட்டுமா?
பதில்: கூட்டும் என நம்புவதுதான் அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

கேள்வி-18. கல்லூரி மாணவர்களிடையே தேமுதிக தலைவர் மேல் நம்பிக்கை உள்ளதாய் தெரிகிறதே?
பதில்: எந்த மாணவர்கள்? சின்னி ஜெயந்த், விவேக், மற்ற எவர்கிரீன் சினிமா மாணவர்கள்?

19. அதிமுக,தேமுதிக கூட்டணியால் யாருக்கு அதிக லாபம்?
பதில்: கூட்டணி வெற்றி பெர்று, இருவருக்குமே கணிசமான அளவில் சீட்டுகள் வந்தால் இருவருக்குமே லாபம். வேறு எந்த காம்பினேஷனிலும் கூட்டணி உடைவது நிச்சயம். இருவரது ஈகோக்களையும் பார்க்கும்போது கூட்டணி தேறுவது முதலிலேயே சந்தேகம்தான்.

20. தேமுதிகவின் தலைவி பிரேமலதாவின் பிரச்சாரத்திற்கு மக்களிடம் வரவேற்பு எப்படி?
பதில்: வரவேற்பு ஓட்டுகளாக மாறாத வரையில் அதற்கு எந்தப் பலனும் இருக்காது

21. நடிகர் விஜய்யின் திரைஉலக வாழக்கை என்னவாகும்?
பதில்: ஏன், என்னாச்சு?

கேள்வி-22. வடிவேலுவின் கதி?
பதில்: முதல் கேள்வியைப் பார்க்கவும்.

கேள்வி-23. ரஜினி அதிமுகவுக்கு ஓட்டு போட்டதாய் வரும் செய்திகளினால்?
பதில்: சம்பந்தப்பட்ட பூத் அதிகாரிக்கு தலைவலி வரலாம், எப்படி புகைப்படம் அந்த இடத்தில் எடுக்க அனுமதிக்கப்பட்டது என.

24. ஸ்டாலினுக்கு இந்தத் தடவையாவது சான்ஸ் கிட்டுமா?
பதில்: கஷ்டம்தான், அழகிரி செயலாக இருக்கும் வரை

25. ஒருவேளை திமுக தோற்றால் அழகிரியின் கோபம் யார்மீது திரும்பும்?
பதில்: ஸ்டாலின் மீது?

thenkasi
கேள்வி-26.தேர்தலில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்களை உயர் அதிகரிகள் சந்திக்கிறார்கள் என வரும் செய்தி உண்மையா?
பதில்: வழக்கமாக நடப்பதுதானே.

கேள்வி-27. தேர்தல் கமிஷன் கெடுபிடி இல்லை என்றால் 2000 கோடி வரை புழங்கியிருக்குமாமே?
பதில்: இப்போது அதில் பெருந்தொகை வேட்பாளர்கள் இடத்தில் பதுங்கியுள்ளதாக சிலர் கூறுகிறார்களே.

கேள்வி-28. ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் என பிராமணர்கள் செய்தி பரப்புகின்றனர் எனும் திமுகவின் அபாண்ட குற்றச்சாட்டு பற்றி?
பதில்: அதுதான் நீங்களே அபாண்டம் எனக் கூறிவிட்டீர்களே.

கேள்வி-29. இனி இந்துக் கோவில்களுக்கு நல்ல காலமா?
பதில்: இத்தேர்தலில் மதம் ஒரு பாத்திரமும் வகிக்கவில்லை என நினைக்கிறேன்.

கேள்வி-30. முஸ்லீம்கள் ஓட்டு வங்கி எப்படி திசை மாறியது இந்தத் தேர்தலில்?
பதில்: இக்கேள்விக்கான ஒரு ஆதாரத்தையும் நான் பார்க்கவில்லையே.


மேலும் கேள்விகள் வந்தால் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/14/2011

டோண்டு பதில்கள் - 14.04.2011

எல்லோருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

ரமணா
கேள்வி-1. அடுத்து வரும் சிபிஐயின் இரண்டாவது ஸ்பெக்ட்ரம் அறிக்கையில் கலைஞர் டீவி பங்குதாரர்கள் பற்றிய குறிப்பு இருந்தால் (ஏபரல் 13 க்கு முன்னே) அது தேர்தலில் திமுகவின் வெற்றியை இன்னும் பாதிக்குமா? (ஏற்கனவே கருத்து கணிப்புகள்- ஜூவி, குமுதம், புதிய தலைமுறை, லயோலா, ஹெட்லயின் தொலைகாட்சி-நக்கீரன் கோபால் உள்பட, எல்லாம் அதிமுகவுக்கு சாதகமாய்- திமுக -70---->அதிமுக -100)
பதில்: அம்மாதிரி வரக்கூடிய குறிப்பை மட்டும் எதனுடனும் சேர்க்காமல் பார்த்தால் பாதிப்பு வரலாம் வராமல் போகலாம். ஆனால் அக்குறிப்பை ஏப்ரல் 13-க்கு முன்னால் வெளியிட்டால், காங்கிரஸ் திமுகவை கைகழுவ நினைக்கும் நோக்கம் இன்னும் வெளிப்படையாகத் தெரிவித்தால் காங்கிரஸ் திமுக உறவில் பாதிப்பு வந்தால் வியப்படைவதிற்கில்லை (அதாவது சமீபத்தில் 1971-ல் திமுகவின் துணையோடு மத்தியில் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, பின்னால் 1976-ல் சர்க்காரியா கமிஷன் ஏற்படுத்தி ஸ்டாலின் போன்றோரை சிறையில் முட்டிக்கு முட்டி தட்டியது போல).

கேள்வி-2. மருத்துவர் திமுகவின் அதல பாதாள தோல்விக்கு பிறகு காங் உடன் கை கோர்ப்பார் எனும் பா.ஜாவின் குற்றச்சாட்டு?
பதில்: அப்படியே பாமக செய்தால்தான் என்ன? இதை குற்றமாகக் கருதத் தேவையேயில்லை. பாமகவின் செயல்பாட்டை தெரிவு செய்யும் உரிமை அக்கட்சிக்கு மட்டுமே உண்டு. பாஜக இதில் நுழைவது சம்மன் இல்லாமல் ஆஜராவது போலத்தான்.

கேள்வி-3. தலைகால் புரியாமல் கலைஞர் புகழ் பாடும் தொல்.திருமா தேர்தலுக்குபின் என்ன சொல்லி சமாளிப்பார்?
பதில்: தேர்தலில் திமுக தோற்கும் என்றே முடிவு செய்து விட்டீர்களா? நானும் அதைத்தான் விரும்புகிறேன் என்றாலும், எதையும் இப்போது தெளிவாகக் கூறவியலாது என்றுதான் நினைக்கிறேன். முடிவு வரும் வரை இது அனுமானக் கேள்வியாகவே இருக்கும்.

கேள்வி-4. பிரச்சாரத்தில் வி.காந்த்தை வறுத்து எடுக்கும் வடிவேலுவின் திரை உலக வாழக்கை என்னவாகும்?
பதில்: விஜயகாந்த் ரஜனிகாந்த் போல செயல்பட்டால் பின்னவர் தன்னை 1996 தேர்தலில் மிகக்கேவலமாக விமரிசனம் செய்த நடிகை மனோரமாவை மன்னித்து தன் படங்களில் வாய்ப்பு கொடுத்து இன்னா செய்தாரை ஒறுத்தது போல இவரும் செய்யலாம். இல்லையெனில் வடிவேலு? அவ்வ்வ்வ்.

கேள்வி-5. யார் ஜெயித்தாலும் 2 கோடி மிக்ஸி/கிரைண்டர்/ஃபேன் எப்படி தயாரிப்பார்கள்?
பணம்: முன்பணம் அன்பளிப்பாகக் கொடுத்து காண்ட்ராக்ட் பெறுகிறார்கள், தயாரிக்கிறார்கள். இதில் என்ன பிரச்சினை?

தேர்தல் ஸ்பெசல் கமெண்ட்? இவர்கள் என்ன சொல்லி சமாளிப்பார்கள்
கேள்வி-6. அதிமுக கூட்டணி ஜெயித்தால்! அ. கருணாநிதி ஆ. தங்கபாலு இ. ராமதாசு ஈ. திருமாவளவன் உ. பெஸ்ட் ராமசாமி ஊ.வீரமணி எ.வடிவேலு ஏ.சன்/கலைஞர்/மக்கள் டீவிகள் ஐ.இலவச எதிர்பார்ப்பாளர்கள் / பாமர கிராம மக்கள் ஒ.மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஓ.திமுக ஆதரவு பத்திரிக்ககைகள்/வெப்தளங்கள்(தினகரன், தந்தி, விடுதலை, முரொசொலி, குங்குமம், நக்கீரன்...), ஔ. டோண்டு ராகவன்

பதில் (தருவது முரளி மனோகர்): டோண்டு பெரிசு இடும் அடுத்த நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்தைப் பார்க்கவும். மற்றவர் பற்றி அவர்களுக்கே அது தெரியாத நிலையில் பெரிசு மட்டும் என்ன சொல்லிட இயலும்?

கேள்வி-7. திமுக கூட்டணி ஜெயித்தால்! அ.ஜெயலலிதா ஆ.விஜயகாந்த இ.பாண்டியன்(வ.கம்) ஈ.இ. கம் ராமகிருஷ்ணன் உ. சோ ஊ. விஜய்/அஜித் மற்றும் திரை உலகம் எ. வியாபாரிகள் ஏ. படித்த இளைஞர்கள் ஐ. நகர வாசிகள்/உயர் ஜாதி வகுப்பினர் ஒ.மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஓ. அதிமுக ஆதரவு பத்திரிக்ககைகள்(தினமலர்,அண்ணா,தினமணி,துக்ளக்,விகடன்,குமுதம்) ஓள. டோண்டு ராகவன்
பதில்: பதில் (தருவது முரளி மனோகர்): டோண்டு பெரிசு தனது அடுத்த நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்தைப் பார்க்கவும். மற்றவர் பற்றி அவர்களுக்கே அது தெரியாத நிலையில் பெரிசு மட்டும் என்னச் சொல்லிட இயலும்?

ஆக, இரண்டுக்குமே ஒரே விடை. டோண்டு பெரிசை நான் நன்கு அறிவதாலேயே கூற முடிகிறது.

கேள்வி-8 .யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் பாதிக்கப்படும் அதிக நபர் யார் காரணம்? அ. கருணாநிதி/ஜெயலலிதா ஆ. ஸ்டாலின்/அழகிரி இ.விஜயகாந்த/வடிவேலு
பதில்: கருணாநிதி: ஸ்பெக்ட்ரம் கவலைகள் அதிகரிப்பு. ஜெயலலிதா: அடுத்த தேர்தலுக்கு முஸ்தீபு.
ஸ்டாலின்/அழகிரி: இப்போதைக்கு கருணாநிதியின் வாரிசு யார் என்னும் சண்டை பின்னால் தள்ளப்படும். விஜயகாந்த்/வடிவேலு: டாம் அண்ட் ஜெர்ரி.

கேள்வி-9. கருத்துக் கணிப்புகள் தரும் அதிர்ச்சியால் கருணாநிதி என்ன நிலை எடுப்பார்?
பதில்: இதுதான் தனது கடைசி தேர்தல் என்னும் அழுவாச்சி சீன்கள்.

கேள்வி-10. கருணாநிதிக்கு மாற்று ஜெயலலிதா இல்லை என்ற போதும் சோ போன்றோரின் ஜெயலலிதா பாசம் சரியா?
பதில்: இப்போதைக்கு ஒருவர் இன்னொருவருக்கு மாற்றுதான். ஆக கேள்வியே தவறு. இரு மாற்றுகளுமே சொல்லிக் கொள்ளூம்படியான நிலையில் இல்லை என்பது வேறு விஷயம். எது எப்படியானாலும் இப்போதைக்கு கருணாநிதி ஆட்சி போவது தமிழகத்துக்குத்தான் நல்லது.

கேள்வி-11. கேப்டன் விஜயகாந்த் சமீபத்திய பேச்சுகள் அவரது மக்கள் செல்வாக்கை குறைத்து விட்டதா?
பதில்: அவர் பேச்சுக்களின் டேப்புகளை திரிக்கிறார்கள் என்ற எண்ணம் வரத் துவங்கியுள்ளது, பார்ப்போம்.

கேள்வி-12. வருங்காலத்தில் கறுப்பு எம்ஜிஆர் விஜயகாந் ஆட்சியை பிடிப்பாரா?
பதில்: வெறுமனே பெயரை வைத்துக் கொண்டால் போதுமா? எம்ஜிஆர் எனச் சொல்லிக் கொள்பவர்கள் குடிகாரராக இருக்கலாகாது.

கேள்வி-13. அழகிரி திமுக, ஸ்டாலின் திமுக, தயாநிதி திமுக, கனிமொழி திமுக உதயமானால் தொண்டர்கள் யார் பக்கம்?
பதில்: 1, 2 இடையில் போட்டி இருக்கும். 3,4 பிக்சரிலேயே இருக்க முடியாது.

கேள்வி-14. ஜெயலலிதாவுக்கு பின்னால் அதிமுக இருக்குமா?
பதில்: சந்தேகம்தான்.

கேள்வி-15. வைகோவின் எதிர்காலம் இனி?
பதில்: நல்ல லாயராக பிராக்டீஸ் செய்யலாம்.

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-16. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: ராகுல் சூசகம்

பதில்: கொள்ளையில் பங்கு

கேள்வி-17. குடும்ப ஆட்சியை தண்டிக்கும் தேர்தல்: ஜெயலலிதா
பதில்: தோழியின் ஆட்சி மட்டும் பரவாயில்லையாமா? இருந்தாலும் இப்போதைக்கு அதை சகித்துத்தான் கருணாநிதியின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்னும் எனது கருத்தில் மாற்றமில்லை.

கேள்வி-18. தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சிதான்: ஸ்டாலின்
பதில்: இப்படிப் பேசித்தான் சமாளிக்க வேண்டும் போலிருக்கிறதே.

கேள்வி-19. காங்கிரஸ் அரசுக்கு பாடம் புகட்டுங்கள்: விஜயகாந்த்
பதில்: அவர் சொல்வது சரிதானே.

கேள்வி-20. கள் இறக்க அனுமதிக்கப்படும்: ஜெயலலிதா
பதில்: அதில் தவறில்லை.

கேள்வி-21. ரூ.11 கோடிக்கு டி-சர்ட்கள் கொள்முதல்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி
பதில்: வெறும் டி சர்ட்டுக்கே இவ்வளவு அதிர்ச்சி என்றால் மற்ற விஷயங்களுக்கு மாசிவ் ஹார்ட் அட்டாக்தானா?

கேள்வி-22. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை விற்றுவிடுவார்கள்: விஜயகாந்த்
பதில்: என்ன? இன்னும் விற்கவில்லையா?

கேள்வி-23. ஊழலில் திமுக-அதிமுக சமம்: சுஷ்மா ஸ்வராஜ்
பதில்: அவர் அபடித்தான் சொல்லணும். வேறென்ன செய்வார்? இப்போதைய நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவும் சரி அதிமுகவும் சரி விரும்பவேயில்லையே.

கேள்வி-24. தமிழக பத்திரிகைகளுக்கு செலக்டிவ் அம்னீஷியா: சேலத்தில் கனிமொழி பேச்சு
பதில்: முரசொலியும் தமிழகப் பத்திரிககளில் ஒன்றுதானே?

கேள்வி-25. லோக்பால் மசோதா வரைவுக்கான கூட்டுக்குழு குறித்து அரசாணைக் குறிப்பு வெளியிட்டது அரசு
பதில்: பாராளுமன்றங்களில் மகளிர் ஒதுக்கீடு மசோதாவின் கதிதான் இதுக்கும்னு நான் நினைக்கிறேன்.

சூர்யா
கேள்வி-26. விடுதலையில் ஒருவர் இப்படி கேள்வி கேட்கிறார்
கேள்வி: 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி என்பது மக்கள் விரோத ஆட்சி என்று கூறி அதனை ஒழித்தே தீரவேண்டும் என்று கூறிய இடது சாரிகள், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அந்த ஆட்சியைக் கொண்டு வந்தே தீருவோம் என்கிறார்களே?
_ உ, மாரிமுத்து, கச்சனம்
பதில்: இது அவர்களைப் பொறுத்தவரை சகஜம்; வெகு சகஜம், சென்ற தடவை நாம் எடுத்த நிலை தவறு என்று ஒரு வாரம் விவாதித்து முடிவு எடுப்பார்கள்_ ஒவ்வொரு முறையும்! பழைய வரலாற்றைக் கூறுகிறேன்.
வெட்கமில்லாமல் வீரமணியிடம் ஒருவர் இப்படிக் கேள்வி கேட்கிறார். வீரமணியும் தன் பேனாவை முறுக்கிக்கொண்டு இப்படி தெனாவெட்டாக பதில் அளித்துள்ளார். வீரமணி கடந்த காலத்தில் என்ன செய்தார் என்ற வரலாறு அவருக்கே மறந்து போய்விட்டது மாதிரிப் பேசுகிறாரே. எப்படி இவர்களால் வெட்கமில்லாமல் இப்படி நடந்து கொள்ள முடிகிறது?

பதில்: இல்லாத வெட்கம் வீரமணியிடம் இருப்பதாக நீங்கள் அவதூறு செய்தால் அவரும்தான் பாவம் என்ன செய்வார்?

கேள்வி-27. இந்தக் கேள்வியும் வீரமணி சம்பந்தமானதே. கீழ்க்கண்ட கேள்வி பதில் விடுதலையில் வந்தது. தேர்தல் கமிஷனர் ஒரு முஸ்லிம். இங்கே எங்கு பூணுல் வந்தது?
கேள்வி: தேர்தல் ஆணையம் தனது அதிரடியான, வேகமான, உறுதியான நடவடிக்கைகளால், அரசியல் எத்தர்களின் கைகளையும், கால்களையும் கட்டிப் போட்டுள்ளதாக துக்ளக் எழுதியிருக்கிறதே?
- _வி.ஜெயபால், சென்னை _ 11
பதில்: அந்தக் கயிறு பூணூல் கயிறுகளாக இருந்திருந்தால் ஒழிய சோ வின் (குடுமி) பேனா சும்மா எழுதாது! புரிகிறதா

பதில்: அதனால் என்ன, இங்கு இருக்கும் பல பார்ப்பன எதிர்ப்பு பதிவர்கள் கூறுவது போல குரேஷியும் பார்ப்பனவாதி என வரையறுத்தால் போகிறது. ஏற்கனவேயே வினவு போன்றவர்கள் பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் என்றெல்லாம் பதிவு போடுகிறார்களே.

கேள்வி-28. அன்னா ஹசாரே பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஊழலற்ற இந்தியா உருவாக அவர் செயல் ஒரு பிள்ளையார் சுழியாக இருக்குமா? அல்லது இதுவும் விழலுக்கு இறைத்த நீர்தானா?
பதில்: அவரது நோக்கம் நல்லதுதான். ஆனால் ஊழலற்ற இந்தியா உருவாக எல்லோருமாக சேர்ந்து உழைக்க வேண்டும். அது அரசால் மட்டும் முடியாது. என்னதான் லோக்பால் என்றெல்லாம் அமைத்தாலும், அதுவே வரம்பு மீறினால் என்ன செய்வது?

கேள்வி-29. உங்கள் வாக்கு யாருக்கு என்று முடிவு செய்து விட்டீர்களா?
பதில்: செய்யாமல் இருப்பேனா?

Arun Ambie
கேள்வி-30 கம்யூனிஸ சீனா முதலாளித்துவத்தை தீவிரமாக ஆதரிக்கிறதாம்..... இங்கே முதலாளித்துவம் நிர்மூலத்தின் மூலகாரணம் என்று சிவப்புத்துண்டு போட்டுக்கொண்டு முச்சந்திக்கு முச்சந்த்தி கூவும் இடது வலது கம்யூனிஸ்டுகள் என்ன செய்வார்களாம்?
பதில்: சுதந்திரச் சந்தை என்பது விளையாட்டில்லை. அதன் உள்ளே நுழைந்து வெற்றி பெற தனித் திறமை வேண்டும். அது செய்ய முடிந்தவர்கள் அதை ஆதரிப்பார்கள், முடியாதவர்கள் ஆதரிக்க மாட்டார்கள். நீங்கள் சொன்ன அதே கட்டுரையில் பல தரப்பினரது மனமாற்றமும் குறிப்பிடப்பட்டுள்ளதே.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/12/2011

ஓட்டு போடும் முன்னால் யோசிக்கவும்

தமிழக வாக்காளர்களுக்கு முன்னால் என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்பதைப் பார்த்துத்தான் ஒட்டு போடுவது நலமாக இருக்கும்.

ஒரு பக்கம் அதிமுக கூட்டணி, மறு பக்கம் ஆளும் திமுக கூட்டணி. இரு கூட்டணிகளிலும் உள்ள பிரதான கட்சிகள் இரண்டிலுமே பல குறைகள் உண்டு. இரு கட்சிகளுமே ஆட்சி செய்துள்ளன. 1991 முதல் மாற்றி மாற்றித்தான் அவை ஆட்சி புரிந்துள்ளன. ஆளும் கட்சி ஜெயிப்பது கடந்த இருபது வருடங்களில் குறைந்த பட்சம் பொது தேர்தல்களில் இல்லை.

1991-96-ல் அதிமுக ஆட்சி அதனுடைய அடாவடி போக்குக்காகவே மக்களால் தோற்கடிக்கப்பட்டது என்பது காலத்தின் கட்டாயம். 1996-2001-ஆட்சியில் ஒப்பீட்டு அளவில் திமுக நல்ல முறையிலேயே ஆட்சி செய்தாலும், கூட்டணி கணக்கில் 2001-ல் தோற்றது. அதே போல 2001-06 அதிமுக ஆட்சியும் ஒப்பீட்டு முறையில் நல்ல முறையிலேயே ஆட்சி தந்தாலும் அதே கூட்டணி கணக்கில் ஆட்சியை கோட்டை விட்டது. ஆனால் 2006-11 திமுக ஆட்சி 1991-96 அதிமுக ஆட்சியையே நினைவுபடுத்துகிறது.
அதற்காகவே அது போக வேண்டும் என்பது மீண்டும் காலத்தின் கட்டாயமே.

தமிழக மக்கள் கடந்த 20 ஆண்டுகால ரிகார்டை வைத்துப் பார்க்கும்போது திமுக ஆட்சியை இம்முறை அகற்றுவதே தமிழகத்துக்கு நல்லது.

என்ன செய்வது? மோதி போன்ற பேர்வழி நம் தமிழக அரசியலில் செயலுடன் இல்லையே. இருந்திருந்தால் தமிழகமும் இன்னொரு குஜராத்தாக மாறியிருக்குமே. அதை விடுங்கள் கிட்டாததை பேசினால் டென்ஷன் அதிகமாவதே மிச்சம்.

முதலில் சொன்னதையே மீண்டும் கூறுவேன்.

தமிழக வாக்காளர்களுக்கு முன்னால் என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்பதைப் பார்த்துத்தான் ஒட்டு போடுவது நலமாக இருக்கும்.

இப்போது திமுக ஆட்சி போக வேண்டிய கட்டாயத்தில் தமிழக நலன் அதிமுகவுக்கு ஓட்டளிப்பதிலேயே உள்ளது.

நான் வசிக்கும் ஆலந்தூர் தொகுதியில் விஜயகாந்த் கட்சியின் வேட்பாளர் பன்ருட்டி ராமச்சந்திரன் நிற்கிறார். சாதாரணமாக அவருக்கு நான் ஓட்டு போட விரும்பாவிட்டாலும் இப்போதைய தேவைக்கு அவருக்குத்தான் ஓட்டு போட வேண்டிய கட்டாயம். எனது அபிமான கட்சியான பாஜக சார்பில் நிற்பவர் மருத்துவர் சத்திய நாராயணா. அவர்தான் நான் ஏற்கனவேயே இட்ட 42 ஆண்டுகளாக மரணத்தின் அருகாமையில் என்னும் பதிவில் குறிப்பிட்ட சர்ஜன். அவர் மட்டுமே இப்போதைய இத்தொகுதிக்கான வேட்பாளர்களிலேயே மிகச் சிறந்தவர். இருந்தாலும் அவருக்கு ஓட்டுப் போடும் நிலையில் நான் இல்லை. தேவையற்று திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரிவதுதான் அதனால் நடக்கும்.

ஆகவே நண்பர்களே, நன்கு யோசித்து ஓட்டு போடுங்கள் என நான் கூறுவது மதில் மேல் இருக்கும் வாக்காளர்களுக்காகவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/07/2011

டோண்டு பதில்கள் - 07.04.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. தி.மு.க. கோருகிறது, தில்லி நிறைவேற்றுகிறது: முதல்வர்

பதில்: அது போன தேர்தல் நிலவரம். நிலைமை இப்போது மாறி விட்டது என்றுதான் நினைக்கிறேன்.

2. கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி
பதில்: இம்மாதிரி கருத்துக் கணிப்பையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது எனது கருத்து.

3. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஆணையமே பொறுப்பு: அழகிரி
பதில்: தினகரன் 3 ஊழியர்கள், தா. கிருட்டினன் ஆகியோரது கொலைகளுக்கு யார் பொறுப்பு? இப்போது கூட சிலர் “தா.கிருட்டினனுக்கு ஆனதுதான் உங்களுக்கும் நடக்கும்” என்று மிரட்டப்படுகின்றனரே, அந்த மிரட்டலுக்கு யார் பொறுப்பு?

4. அதிமுகவை ஆதரித்து களமிறங்கினார் நடிகர் சிங்கமுத்து
பதில்: சபாஷ் சரியான போட்டி.

5. தேர்தலில் போட்டியிடுவது நானாக விரும்பி ஏற்றதல்ல: கே.வீ. தங்கபாலு
பதில்: எங்கப்பன் குதிருக்குள் இல்லை.

6. 2ஜி ஒதுக்கீட்டில் நேர்மைக்குப் புறம்பாக செயல்பட்டுள்ளார் ராசா: குற்றப்பத்திரிகையில் சிபிஐ தகவல்
பதில்: ஊரறிஞ்ச உண்மையை சி.பி.ஐ. அதிகாரபூர்வமான குற்றச்சாட்டாக்கியுள்ளது.

7. ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு: வைகோ பங்கேற்பு
பதில்: இதைத்தானே கூறுகிறீர்கள்? வைக்கோவுக்கு பாராட்டுகள். அவர் பேசாமல் வழக்கறிஞராகவே அதிகம் செயல்படுவது நலம்.

8. குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி தமிழகத்தை மீட்போம்: சிவகாசியில் ஜெயலலிதா சபதம்
பதில்: 1996-ல் அவசிய தேவை ஜெயலலிதாவை பதவியிலிருந்து இறக்குவது. இப்போதைய தேவை கருணாநிதியை இறக்குவது. அதைத் தவிர தமிழக மக்கள் வேறு என்ன செய்யவியலும்?

9.டாடா, நீரா ராடியா பிஏசி முன்பாக நாளை ஆஜர்
பதில்: டாடா அவர்கள் நன்கு ஒத்துழைத்ததாகவும் நீரா ராடியா போக்கு காட்டினார் என்றும் படித்தேன்.

10. காங்கிரஸை அதிமுகவும், தேமுதிகவும் விமர்சிக்காதது ஏன்? இல. கணேசன்
பதில்: இன்ஷூரன்ஸ்?

hayyram
11. கேள்வி பதில் பகுதிக்கு: உங்கள் நங்கநல்லூர் பஞ்சாமிர்த பகுதிகளை தொகுத்து புத்தகமாக வெளியிடலாமே செய்வீர்களா?
பதில்: யார் ஐயா படிப்பது?

thenkasi
12. பார்ப்பணியப் பத்திரிக்கைகள் ஜெ ஐ ஆட்சியில் அமர்த்த சூழ்ச்சி செய்வதாய் கலைஞரின் பகிரங்க குற்றச்சாட்டு?
பதில்: இப்படித்தான் அவர் பல பத்திரிகைகளுக்கு பூணல் கல்யாணத்தை நடத்தி வைத்த புரோகிதராக மாறி விட்டார். அதற்காக பாராட்டு விழா நடத்தினால் மனம் மகிழ்வார் (நன்றி சோ அவர்களே).

13. தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை பார்க்கும் போது காங்கிரசின் பிடி இறுகுகிறதா?
பதில்: போன தேர்தலிலேயே செய்திருக்க வேண்டியது. இப்போ லேட்தான். பலன் விளைகிறதா இல்லையா என பார்ப்போம். தெருக்குத் தெரு போஸ்டர்கள், வீட்டுச் சுவர்களில் கண்டபடி வாசகங்கள் இல்லை போன்ற விஷயங்களே நல்ல முன்னேற்றம்தானே.

14.மருத்துவர்-திருமா ஒரே அணியில்-படு சந்தர்ப்பவாத அரசியலை பார்க்கும் போது என்ன உதாரணம் நினைவுக்கு வருகிறது?
பதில்: அவர்கள் மட்டுமா சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றனர்? இவர்களை மட்டும் ஏன் குறிவைக்க வேண்டும்?

15. தேர்தல் கணிப்புகள் சோ அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் போலுள்ளதே?
பதில்: மேலே இரண்டாம் கேள்விக்கான பதில்தான் இங்கும்.

16. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களெல்லாம் ,குறிப்பாய் இந்துக்கள் இந்த தடவை கருணாவுக்கு தேர்தலில் பாடம் புகட்டினால்?
பதில்: மனிதனுக்கு இறக்கை முளைத்தால்?


Arun Ambie
கேள்வி-17. விஜயகாந்திடம் அடிபட்டவன் மஹாராஜா ஆவானாமே?
பதில்: முதலில் எம்.எல்.ஏ. ஆகிறாரா என்பதைப் பார்க்கலாமே.

கேள்வி-18. "ஆள்வது திமுகவா, நான் முதல்வரா என்றே தெரியவில்லை", தேர்தல் கமிஷன் கண்டிப்பு பற்றியது என்று சொல்லப்படும் கருணாநிதியின் இந்தப் புலம்பல் குடும்பத்தினரின் அதீத ஆதிக்கம் குறித்த அவரது கருத்து என்கிறேன் நான். Your take?
பதில்: பேண்ட் ஷர்ட்டுகளில் ரகசிய பாக்கெட்டுகள் வைப்பது தங்களது பிழைப்புக்குக் கேடு என ஜேப்படி திருடர்கள் மாநாடு போட்டதாக ஒரு வேடிக்கைக் கட்டுரையை சமீபத்தில் ஐம்பதுகளில் படித்துள்ளேன். இப்போது அது நினைவுக்கு வருகிறது.

19. 4/4/11 தேதியிட்ட தினமலரில் (டீக்கடை பெஞ்சில்) மைக் கண்ட்ரோல் செய்தவரையே விஜயகாந்த் அடித்தார் என்றும் ஆனால் வேட்பாளரை அடித்ததாக ஆளும் கூட்டணி திட்டமிட்டுப் பேசுகிறது என்றும் போட்டிருக்கிறார்களே? மைக்செட்காரரை அடித்தால் பரவாயில்லையோ?
பதில்: அது மட்டும் உண்மையாக இருந்தால், மைக்காரர் தொட்டால் ஷாக் அடிக்கும்படி மைக்கை செட் செய்து வைத்து பிறகு... சேச்சே அப்படியெல்லாம் இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

20. 108 ஆம்புலன்ஸ் திட்டம், கலைஞர் காப்பீட்டுத்திட்டம் ஆகியன திமுக அரசின் சாதனை என்று உள்துறை அமைச்சர் சீனாத்தானா பேசியுள்ளாரே? 108 மத்திய அரசின் திட்டமாயிற்றே? பீட்டர் அல்போன்ஸ் போல சீனாத்தானாவும் தேசியக் கட்சி காங்கிரசைத் தமிழகத்தில் ஓரம்கட்டி உட்கார்த்தி வைத்தது கலைஞரின் மாபெரும் சாதனை என்று மார்தட்டுவார் போலிருக்கிறதே? இந்த சூடு சொரணை இவற்றோடு சேர்ந்த இன்னபிற உணர்ச்சிகள் காங்கிரசாருக்குக் கிடையாதோ?
பதில்: தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு சீட் கூட பெறாது இந்திரா கலைஞரிடம் காங்கிரசை சமீபத்தில் 1971-ல் விற்ற கேவலத்தை விடவா?


ரமணா
உங்களின் பாணியில் கருத்து சொல்லவும்?
கேள்வி-21. 21. திமுக/அதிமுக தேர்தல் அறிவிப்பு இலவசங்கள்
பதில்: தமிழக மக்களை பிச்சைக்காரர்களாக்குவதில் போட்டா போட்டி. சபாஷ் சரியான போட்டி.

22. தேர்தல் பிரச்சாரம்-கருணாநிதி/ஜெயலலிதா
பதில்: ஆக்‌ஷன் ரீப்ளே, எத்தனாவது முறை என்பது மறந்து போய் விட்டது.

கேள்வி-23. காங்+திமுக/அதிமுக+தேமுக கூட்டணி உள்குத்துகள்
பதில்: மேலோட்டமான அமைதி. தோற்றாலும் சரி, வெற்றி பெற்றாலும் சரி, சம்பந்தப்பட்டவரிடையே சுமுக நிலை வருவது கடினம்.

கேள்வி-24. காமெடி நடிகர்களின் காசு வாங்க காமெடி பிரச்சாரம்
பதில்: அவர்களைப் பொருத்தவரை நிஜ வாழ்க்கையே பெரிய ஷூட்டிங் மாதிரித்தான்.

கேள்வி-25. ஊடகங்களின் நேர்மையற்ற கருத்து புனைவு/திரிபு பிரச்சாரம்
பதில்: இதில் என்ன புது விஷயம்? எப்போதும் இருக்கும் குலவழக்கம்தானே

கேள்வி-26. 1967 லிருந்து திமுக அரசியலை கவனித்து பார்க்கையில் கழகத்தின் தலைவர் கலைஞரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அளவுக்கு யாரும் பயங்கரமாய் விமர்சித்ததாக தெரியவில்லை. இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில்: உங்களுக்கு அப்படி தோன்றலாம், ஆனால் உண்மை இல்லை. காளிமுத்து, எஸ்.எஸ். சந்திரன் போன்றவர்கள் விமரிசனம் செய்ததை விடவா?

கேள்வி-27. விஜய்காந்த் பேச்சில் சில பகுதிகளை எடிட் செய்து பொய்யாய் ஒளிபரப்பும் சன், கலைஞர், மக்கள் தொலைகாட்சிகளை தேர்தல் கமிஷ்ன் கண்டு கொள்ளாதது ஏன்?
பதில்: அதெல்லாம் காரியத்துக்காகாது, தனிப்பட்ட அளவிலும் புகார் தர வேண்டியிருக்கும்.

கேள்வி-28. காங்கிரசின் உள்ளடி வேலை கலைஞருக்கு தெரியவில்லையா இல்லை புரியவில்லையா?
பதில்: புரியாமல் இருக்குமா? இப்போது அதை வெளிக்காட்டுவதில் பிரயோசனமில்லை.

கேள்வி-29.கலைஞருக்கு வயதாய்விட்டது அவருக்கு ஓய்வு கொடுங்கள் எனும் சீமானின் பேச்சு மக்களிடம் எடுபடுமா?
பதில்: இப்போது கலைஞரின் வயது பிரச்சினைக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது.

கேள்வி- 30. ஒருவேளை ஜெயலலிதா ஜெயித்து வந்தால் 2006 முதல் 2011 வரை தனக்கு தொந்திரவு ஏதும் (1996 லிருந்து 2001 காலத்தை போல்)தராத திமுக தலைவருக்காக ,கலைஞரின் குடும்பத்திற்கு தொந்திரவு ஏதும் தரமால் நன்றி காப்பாறா?
பதில்: 1991-96-ல் கூட ஜெயலலிதா தொந்திரவு தந்ததாக நினைவில்லை. ஆனால் 1996-2001-ல் கலைஞரும், 2001-06-ல் ஜெயும் தொந்திரவு கொடுத்தனர். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/05/2011

எனக்கு வந்த இந்த மின்னஞ்சலை பதிவாக்குவதை எனது கடமையாக நினைக்கிறேன்

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.



இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...


குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.



இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)



நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)



அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை??

அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.

இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.

நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

இப்போது டோண்டு ராகவனிடமிருந்து சில வார்த்தைகள். தமிழர்கள் சோறுதானே சாப்பிடுகிறார்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/03/2011

Difference between a translator and an interpreter

ஒரு மொழிபெயர்ப்பாளருக்கும் (translator) துபாஷிக்கும் (interpreter) என்ன வித்தியாசம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. நான் தில்லியில் இருந்தபோது இப்படித்தான் ரான்பாக்ஸி கம்பெனியிலிருந்து என்னை ஒரு பிரெஞ்சு துபாஷியாகக் கூப்பிட்டார்கள். சரி என அங்கு போய் பிரெஞ்சுக்காரர் எங்கே எனக் கேட்டதற்கு பேய் முழி முழித்து விட்டு ஒரு கத்தை வரைபடங்களை கொடுத்து அதை நான் அங்கேயே எழுத்துமூலம் மொழி பெயர்க்க வேண்டும் எனக் கூறினார்கள்.

அவ்வாறாயின் அவர்கள் என்னிடம் துபாஷி எனக் கூறியிருக்கக் கூடாது என விளக்கினேன். அதன் பின்னால் எப்போது என்னிடம் துபாஷி என்று கேட்டு யாராவது ஃபோன் செய்தால் அது நிஜமாகவே துபாஷி வேலைதானா என நிச்சயம் செய்து கொள்கிறேன். அதே போல translator எனக் கேட்டு ஆனால் மனதில் interpreter என நினைத்துக் கொள்வதும் நடந்திருக்கிறது.

நம்மூரில்தான் இப்படி என்றில்லை. எல்லா இடங்களிலும் இதே கதைதான். கீழே உள்ள வீடியோ இந்த விஷயத்தைத் தொட்டு ஒரு துபாஷியின் வேலை சூழ்நிலையையும் காட்டுகிறது. அதிலும் அவர்கள் காட்டுவது conference interpreter-களைத்தான். ஆனால் consecutive interpreter-கள் என இன்னொரு வகை உண்டு. அதாவது வேற்று மொழிக்காரர் இங்குள்ளவர்களுடன் தனது மொழியில் பேச அவர் பேசி முடித்ததும் துபாஷி அதை உள்ளூர் மொழியில் மாற்றிச் சொல்ல வேண்டும். நம்மவர்கள் அதற்கு எதிர்வினையிட்டு அவர்கள் மொழியில் கூற, துபாஷி மீண்டும் அதை வேற்று மொழியில் மாற்ற வேண்டும். முதலில் சொன்னது மிகக்கடினமான வேலை. வேற்று மொழிக்காரர் பேசும்போதே துபாஷிகள் கூண்டில் அமர்ந்து உள்ளூர் மொழியில் தொடர்ந்து மொழி பெயர்க்க வேண்டும். பார்வையாளர்களிடம் இருக்கும் ஹெட்ஃபோனில் உள்ளூர் மொழியை தெரிவு செய்தால் அதை கேட்கலாம். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.



நான் புள்ளிவிவரங்கள் எல்லாம் எடுக்கவில்லை. ஆனால் நான் பார்த்தவரை துபாஷிகள் அனேகமாக பெண்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் பொறுமை அதிகம் என்று பலர் நினைக்கிறார்கள். ஓரளவு உண்மையும் அதில் இருக்கக் கூடும்.

துபாஷிக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் இடையில் உள்ள ஆறு வித்தியாசங்கள் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஒரு வேற்று மொழிக்காரரிடம் அவருக்கு துபாஷி தேவையா இல்லையா என்பதைக் கூட கேட்டறியாது இவர்களே ஒரு துபாஷியை வரவழைத்து விட்டு, பிறகு வந்தவரே ஆங்கிலம் பேசுவதால் துபாஷியை திருப்பி அனுப்புவதும் நடந்திருக்கிறது. அப்படித்தான் என்னை கிட்டத்தட்ட இரு மணி நேரம் காக்க வைத்தக் கதையை ஏற்கனவேயே இங்கு எழுதியுள்ளேன். நான் அதற்கெல்லாம் அசராது இரு மணி நேர வேலைக்கான பில் போட்டு பணம் வாங்கியதை அவதூறு ஆறுமுகம் போன்றவர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் மொழிபெயர்ப்பாளர் தலைவாசல் ப்ரோஸில் உள்ள எனது சக மொழிபெயர்ப்பாளர்கள் நான் செய்ததுதான் சரி எனக்கூறியதையும் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறேன்.

இந்த விஷயத்தை நான் என்னுடைய மைத்துனனிடம் கூறியபோது அவன் என்னை அந்த வாடிக்கையாளர் திரும்ப கூப்பிடவே மாட்டார் என கருத்து தெரிவித்தான். அதுதான் இல்லை அதே வாடிக்கையாளர் அதன் பின்னால் என்னை மூன்று முறை கூப்பிட்டனுப்பி வேலை கொடுத்தார். நாம் உறுதியாக இருப்பதே சரியான முறை. இல்லாவிட்டால் ரோடில் செல்லும்போதே ட்ரௌசரை உருவி விடுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்



அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது