இன்று காலை பேங்கில் இருந்தபோது, என் செல்பேசி அதோ அந்த பறவை போல வாழவேண்டும் என்று ட்யூன் விட ஆரம்பித்தது. ஒரு புது வாடிக்கையாளர் லைனில் வந்தார். அர்ஜண்டாக பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் வேண்டும் என்றார். நான் என் ஒரு மணி நேரத்துக்கான ரேட் (600 ரூபாய்) எல்லாம் சொல்லி, மினிமமாக இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்வேன் என்றேன். ஒரு மணி நேரம்தான் வேலை என்றால் என்று போனில் பேசிய பெண் இழுக்க, 1200 ரூபாய் என்று மண்டயிலடித்தற்போல் கூறினேன். மேலும் டாக்ஸி சார்ஜ் மற்றும் டீ, காபி, லஞ்ச் எல்லாம் அந்தந்த நேரத்தில் வேண்டும் எனக் கூறினேன்.
எல்லாவற்றுக்கும் ஒத்துக் கொண்டு, கார் அனுப்பி வைத்தார்கள். கீழ்க்கட்டளையில் ஒரு கம்பெனி அது. என் கார் (:))))))))) கம்பெனி போனதும் ரிசப்ஷனில் உட்காரச் சொல்லிவிட்டு அந்த பெண் அதிகாரி சேர்மன் ஆஃபீசில் நுழைந்தார். அதற்கு முன்னால் ஒரு கூல் ட்ரிங்க் வேறு எனக்களிக்க ஏற்பாடு செய்தார்.
ரிசப்ஷனில் இரண்டு அழகிய இளம் பெண்கள். ஒருவர் உருது நன்றாகப் பேசினார். அவருடன் உருதுவில் கதைத்து விட்டு, பிறகு கையில் எடுத்து போன நாவல் ஒன்றை பிரித்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.
ஒரு மணி நேரம் சென்றது. என்னடா என்று பார்த்தால் அந்த ஆஃபீசர் வெளியில் வந்து தனது கேபினுக்கு அழைத்து சென்றார். பிறகு ஆரம்பித்தார் ஒரு கதை. அதாவது பிரெஞ்சுக்காரருக்கு ஆங்கிலம் நன்கு தெரியுமாம். ஆகவே நான் தேவையில்லையாம். என்ன செய்யலாம் என்று என்னைக் கேட்டார். நான் ஒன்றும் பேசாமல் கைப்பையிலிருந்து என் பில் புக்கை எடுத்தேன். இரண்டு மணி நேரத்துக்கு பில் போட்டுவிட்டு காரில் ட்ராப் செய்வார்களா என்று கேட்டபோது தெரியாது என்றார். ஓக்கே திரும்பப் போகும் டாக்ஸி சார்ஜ் 150 ரூபாய் சேர்த்து போட்டு கொள்கிறேன் என்றேன்.
அவர் ஒரு நிமிடம் என்னை நிறுத்தி விட்டு வெளியில் சென்றார். திரும்ப வரும்போது அவர் கூடவே பெர்சனல் ஆஃபீசர், வாய் நிறைய புன்னகையுடன் வெந்தார். என்னை தன் அறைக்கு அழைத்து சென்றார். பிறகு என்னைப் பற்றி விசாரித்தார். என் கதையெல்லாம் சொல்ல அரை மணி நேரம் ஆயிற்று. பிறகு மெதுவாக நான் என்ன செய்ய உத்தேசிப்பதாகக் கேட்டார். எனது பில்லை நீட்டினேன். கார் டிராப் இல்லையென்றால் என்று ஆரம்பித்ததுமே, இல்லை கார் டிராப் உண்டு என அவசர அவசரமாகக் கூறினார். ஓக்கே என்று பில்லை பூர்த்தி செய்து கையில் கொடுத்தேன்.
இப்போதுதான் தமாஷ் ஆரம்பம்.
அவர்: சார் இது சரியில்லை, நீங்கள் வேலை செய்யவேயில்லை.
நான்: அந்தக் கதை வேண்டாம் சார், என்னை 2 மணி நேரம் வைத்திருந்தது நீங்கள்தான் (அப்போது 2 மணி நேரம் ஆகி முடிந்திருந்தது).
அவர்: இல்லை என்று சொல்லவில்லையே சார். இருந்தாலும் நியாயம் என்று ஒன்று உண்டல்லவா?
நான்: (கோபமாக இருப்பது போல காட்டிக் கொண்டு) என்ன சொல்கிறீர்கள்? பில் பே பண்ண மாட்டீர்களா?
அவர் (பதறிப் போய்) அதில்லை சார், ஆனால் ஒரு மணி நேரத்துக்கு வாங்கிக் கொள்ளுங்கள்.
நான்: இந்தக் கதையே வேண்டாம் சுவாமி. எனது பில்லை முழுமையாக செட்டில் செய்யுங்கள்.
அவர்: இப்போ மத்தியானம் 3 மணிக்குத்தான் நீங்கள் தேவைன்னு மேலேயிருந்து தகவல் வந்தது. உங்களை ரீடெய்ன் செய்யலாமா?
நான்: தாராளமா, அப்போ பில்லை திரும்பக் கொடுங்க. வேலை முடிந்ததும் இப்போதிலிருந்து எத்தனை மணி ஆகிறதோ அதையும் சேர்த்துவிடுகிறேன்.
அவர்: சார் நீங்க வேலை செய்யவேயேயில்லையே.
நான்: அது என் தப்பா சார்?
இப்படியே பேச்சு போக, திடீரென சொன்னேன். இன்னும் நேரம் கடத்தினால் பில் 3 மணி நேரத்துக்கு போய் விடும் என்று. வேக வேகமாக வவுச்சர் போட்டு, என்னிடம் கையெழுத்து வாங்கி 1200 ரூபாய் எண்ணி கொடுத்தார்கள். பிறகு காரில் வீடு வரை வந்து டிராப் செய்தார்கள். இதில் என்ன தமாஷ் என்றால், என் கார்டுகளையும் வாங்கிக் கொண்டார்கள். இப்போதும் நான் சொன்னேன். எப்போது கூப்பிட்டாலும் எல்லாம் சரி பார்த்து கூப்பிடச் சொல்லி.
ஆக ஒரு மணி நேரம் நீல பத்மனாபன் நாவல் படித்து, கடலை போட்டதற்கு 1200 ரூபாய் கிடைத்தது. அதை விடுங்கள். இப்படி கூடவா இருப்பார்கள்? வெளிநாட்டு விருந்தாளி வருகிறாரென்றால், முதலில் அவர்களுக்கு ஃபேக்ஸ் அனுப்பி, வருபவர்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? இல்லையெனில் மொழிபெயர்ப்பாளர் தேவையா என்றெல்லாம் கேட்க வேண்டாமா? இந்த அழகில் இது ஒரு ஐ.எஸ்.ஓ. 9000 சான்றிதழ் பெற்ற கம்பெனியாம். தரக் கட்டுப்பாடாம் இன்னும் லொட்டு ல்லொஸ்காம். என்னன்னு சொல்றது போங்கோ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
10 hours ago
69 comments:
உழைக்காமல் ஆயிரத்தி இருநூறு ரூபாயை கொண்டுவந்தது திருட்டுக்கு சமம் அல்லவா டோண்டு ராகவன் அவர்களே ?
அந்த நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனமா ? இல்லை உள்நாட்டினர் நடத்துகிறார்களா ?
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் விவசாயிக்கு அவ்வளவு பணம் கிடைப்பதில்லை...வண்டி இழுத்து மூட்டை தூக்கும் கூலி தொழிலாளிக்கு அவ்வளவு பணம் கிடைப்பதில்லை..
நீங்கள் கண்டிப்பாக ஏன் அப்படி செய்தீர்கள் என்று விளக்கவேண்டும்..
"உழைக்காமல் ஆயிரத்தி இருநூறு ரூபாயை கொண்டுவந்தது திருட்டுக்கு சமம் அல்லவா டோண்டு ராகவன் அவர்களே"?
என்ன அறிவுகெட்டத்தனமான வாதம் ரவி அவர்களே? நான் அதே நேரம் வீட்டிலிருந்தால் என் கைவசம் உள்ள வேலைகளை (இந்த மாதம் முழுதுக்கும் உள்ளன) செய்து அதற்கு மேலேயே சம்பாதித்திருப்பேனே. அது ஏன் உங்களுக்கு தோன்றவில்லை?
ஒரு டூரிஸ்ட் டாக்சி கூப்பிடுகிறீர்கள். 5 மணி நேரம் + 30 கிலோமீட்டர் என்ற ஏற்பாட்டில். ஒவ்வொரு மணி நேர எக்ஸ்ட்ராவுக்கு 40 ரூபாய், ஒவ்வொரு கிலோம்ட்டருக்கும் 5 ரூபாய் என்று பேச்சு. ஆக 350 ரூபாய் மினிமம் பில்லிங்க். நீங்கள் என்ன செய்கிறீர்கள், 5 மணி நேரம் கார் அப்படியே உங்கள் வாசலில் நிற்கிறது. நீங்கள் ஏதோ வேலையால் வீட்டிலேயே உள்ளீர்கள். பிறகு டாக்ஸி வேண்டாம் என தீர்மானிக்கிறீர்கள்.
டிரைவரிடம் சொல்லிப் பாருங்கள், அவன் வேலையே செய்யவில்லை ஆகவே 350 ரூபாய் தரமுடியாது என்று. சும்மா சொல்லிப் பாருங்கள் சார்.
சொல்லிவிட்டு, மூக்கு காயத்துக்கு பிளாஸ்திரி போட்டுக் கொண்டு இப்பின்னூட்டத்துக்கு எதிர்வினை அளிக்கவும்.
//நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் விவசாயிக்கு அவ்வளவு பணம் கிடைப்பதில்லை...வண்டி இழுத்து மூட்டை தூக்கும் கூலி தொழிலாளிக்கு அவ்வளவு பணம் கிடைப்பதில்லை..//
பேஷ், உங்கள் ஆஃபீசில் பியூனுக்கும் உங்களுக்கும் ஒரே சம்பளமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
i think that company officials called you without proper planning. so they should suffer.
எந்த வலைப்பதிவை இன்று பார்த்தாலும் டோண்டு டோண்டு என்று இருக்கிறதே ஏதாவது அச்சுப்பிழையா?:)
//எந்த வலைப்பதிவை இன்று பார்த்தாலும் டோண்டு டோண்டு என்று இருக்கிறதே ஏதாவது அச்சுப்பிழையா?:)
வேண்டுதல் ;))) டோண்டு டோண்டு டோண்டுன்னு பதிவு போட்டா தமிழ் மணத்தில் ஹிட்ஸ் எக்கசக்கமா கிடைக்குதாம்
this ISO audit and most of the standard certifications just a cheap trick to obtain other countries order.
Bist du ein Dolmetscher? aA Ha!!
Du must noch learnen!!!
நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி என்று ஏற்றுக்கொள்ளலாம்...
ஆட்டோ மீட்டர் மாதிரி வெயிட்டிங் சார்ஜ் போட்டேன் என்று...
இருந்தாலும் ப்ர்சனல் எத்திக்ஸ் இருக்கிறதே சார் ? ஆட்டோக்காரனும் நீங்களும் ஒன்றா ??
அந்த நிறுவனம் ஒரு உள்நாட்டு நிறுவனமா என்று கேட்டதுக்கு இன்னும் பதில் இல்லை !!!!
எங்க ஆபீஸ் ப்யூனும் நானும் ஒன்றில்லைதான்...நான் கற்ற கல்வி அவன் கற்றிருக்க மாட்டான் தான்...இருந்தாலும் அவன் டீ கொண்டு வருகிறான்.. அதுக்கு தகுந்த சம்பளத்தை மாதம் பெறுகிறான். நான் மில்லியன் டாலர் க்ளையண்டை ஹேண்டில் செய்கிறேன் அதுக்கு தகுந்த சம்பளத்தை நான் பெறுகிறேன்.
ஆனால் நானும் சரி, என் ஆபீஸ் ப்யூனும் சரி உழைக்கிறேம், ஊதியம் பெறுகிறோம். ஆனால் நீங்கள் ?
கடைசியாக கொஞ்சம் ஜாலி கேள்வி:
அங்கே இருந்த உருது பிகரிடம் நீங்கள் கடலை போட்டதுக்கு அந்த நிறுவனத்தார் ஏதாவது சார்ஜ் செய்தார்களா என்ன ?
ரவி,
உங்களுக்கு என்று வரும்போது மட்டும் தகுதி படிப்பு எல்லாம் பேசுகிறீர்களே? அப்போது நானும் மூட்டை தூக்குபவனும் ஒண்ணா?
அது எந்த கம்பெனியாக இருந்தால் என்ன? அது உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யும், பல கோடிக்கணக்கில் டர்னோவர் உள்ள கம்பெனி. போதுமா?
எனது நேரம் பொன்னானது சுவாமி, அதற்கான விலையை கொடுத்துத்தான் ஆக வேண்டும். இதில் பெர்சனல் எதிக்ஸ் எங்கு வந்தது? நான் என்ன அகண்ட பஜனை செய்யவா போனேன்?
உருது ஃபிகருடன் கடலை போட்டதற்கு கம்பெனி சார்ஜ் செய்வதா? அது கம்பெனிதானா அல்லது வேறு ஏதாவதோவா?
மேலும் எங்கள் இருவருக்குமே அதில் சந்தோஷம். இதில் யார் கொடுப்பது, யார் வாங்குவது? :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ஆனால் நானும் சரி, என் ஆபீஸ் ப்யூனும் சரி உழைக்கிறேம், ஊதியம் பெறுகிறோம். ஆனால் நீங்கள்"?
நீங்கள் லீவு நாட்களும் சம்பளம் பெறுகிறீர்கள். கேட்டால் ஒப்பந்தம் என்பீர்கள். இங்கும் அதே ஒப்பந்தம்தான் சுவாமி.
வேலை செய்யும் நாளில் டோட்டல் பவர் ஃபெயிலியர். வேலையே நடக்கவில்லை.
கம்பெனியில் சும்மா உட்கார்ந்தீர்கள்.
அன்றும் சம்பளம் உண்டுதானே?
ஆஃபீசில் உட்கார்ந்து தமிழ்மணம் பார்க்கிறீர்கள்? ப்ரௌசிங் ஃபீஸ் தருவீர்களா? எதிக்ஸ் என்னவாயிற்று?
அன்புடன்,
டோண்டு ராகவன்
////ஆஃபீசில் உட்கார்ந்து தமிழ்மணம் பார்க்கிறீர்கள்? ப்ரௌசிங் ஃபீஸ் தருவீர்களா? எதிக்ஸ் என்னவாயிற்று?///
சரியான வாதம்..நான் பெயில்...நீங்க பாஸ்...
Dondu,
You should charge for your travel time also. Most of the freelancers do. I used to travel coast to coast. I used to bill my flying time . 6 hours on Sunday night and 6 hours on Thursday night. It was my personal time. I could have enjoyed spending that time with chidren. So really that personal officer was unethical. In my experience people who are very strict with their billing never lost a business becuase of that. They lose becuase of incompetence.
//You should charge for your travel time also.//
பயண நேரம் 20+20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் ஒன்று. காரில் போகும்போது வெளிநாட்டவர் இருந்து, அவர்களுக்கு துபாஷி வேலை செய்தால் அது சார்ஜாகும்.
என்னை காலை 10 மணிக்கு வரச்சொல்கிறார்கள என்று வைத்துக் கொள்வோம். நான் அங்கே 9 மணிக்கே போனால் அது எனது தவறு. 10 மணிக்குத்தான் மீட்டர் ஆரம்பிக்கும் அல்லது வேலை ஆரம்பிக்கும்போது, இவற்றில் எது முதலில் வருகிறதோ. ஆக இங்கு அவர்கள் காரில் போய் இறங்கியாயிற்று. போன உடனேயே மீட்டர் டிக் டிக்கென்று அடிக்க ஆரம்பித்து விட்டது.
இது தவறு என்று கூறுபவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. அவர்கள் என் நிலையில் இருக்கும்போது நான் நடந்து கொண்ட மாதிரித்தான் நடந்து கொள்வார்கள். ஆனால் மற்றவர்களுக்கு மட்டும் தாராளமாக் உபதேசம் செய்வார்கள். ஆஷாடபூதிகள்.
2. அல்லது விட்டுக் கொடுப்பார்கள். ஏமாளிகள். அவர்கள் அண்மையிலிருந்து கடவுள் என்னை காப்பாற்றட்டும். அவர்கள் தவிர்க்க வேண்டிய நபர்கள். losers.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu Pass Aaittaru!! (Play the tune in the background as in Amithabh Bacchan's Ad!)
அமிதாப் குரலில். "காசு டோண்டு டோண்டு குடுப்பான்". :))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
கம்பெனியில் சும்மா உட்கார்ந்தீர்கள்.
அன்றும் சம்பளம் உண்டுதானே?
ஆஃபீசில் உட்கார்ந்து தமிழ்மணம் பார்க்கிறீர்கள்? ப்ரௌசிங் ஃபீஸ் தருவீர்களா? எதிக்ஸ் என்னவாயிற்று?
- Good yorker :). I am writing this from my office, so the rule applies to me too :).
Dondu sir, bonjour
Ungaluku nigar neengathaaan, Kalakunga, by the way, Tamil spell check software unda...Irundhaal sollavum.
Aanipidunganum.
//- Good yorker :). I am writing this from my office, so the rule applies to me too :).//
ஆமாம் யார்க்கர் என்றால் என்ன வகை பந்து வீச்சு கிரிக்கெட்டில்? அதே போல கூக்ளி, பவுன்ஸர்? பம்பருக்கும் பவுன்சருக்கும் என்ன வேறுபாடு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆணிபிடுங்கணும் அவர்களே,
தமிழில் ஸ்பெல் செக் இருக்கிறது. எங்கு கிடைக்கும் எனத் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// Tamil spell check software unda...Irundhaal sollavum. //
tamil spell check software patRich solla vEndumenil adhaRku neengaL paNam tharavENdi irukkum. sariyaa ? :-)))))
டோண்டு சார்,
மொதல்ல அனானிகளை அனுமதிச்சதுக்கு ஒரு டாங்ஸ்.
ஊர்ல வெந்தது, வேகாதது, அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, மூளை இருக்கறது, இல்லாதது இப்படி பல தரப்பட்ட மக்களோட தாக்குதல சமாளிச்சுக்கிட்டே இருக்கற உங்களுக்கு ஒரு சலாம்.
பேரரசு கமெண்டப் பாத்தேன். !!நெத்தியடி !! மரமண்டைகளுக்கு ஏறுனா சரி.
//tamil spell check software patRich solla vEndumenil adhaRku neengaL paNam tharavENdi irukkum. sariyaa ? :-)))))//
நிச்சயமாக சரியே. எனக்கு ஒரு விஷயம் தேவையானால் கண்டிப்பாக காசு கொடுத்து வாங்குவேன். ஆனால் எனக்கு தமிழிலோ ஜெர்மனிலோ ஸ்பெல் செக் தேவையில்லை. சம்பந்தப்பட்ட மொழிகளில் எனது ஆளுமை அத்தகையது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Bist du ein Dolmetscher? aA Ha!!
Du must noch learnen!!! //
Was soll ich noch lernen, Herr Unbekannter?
Mit freundlichen Grüßen,
Dondu N.Raghavan
//நீங்கள் கண்டிப்பாக ஏன் அப்படி செய்தீர்கள் என்று விளக்கவேண்டும்.. //
செந்தழல் ரவி அவர்களே...
ஒரு நாளைக்கு 8 மணி நேரம் குறைந்த பட்ச வேலை நேரம். நாம் 8 மணி நேரம் முழுதுமா வேலை பார்க்கிறோம்? (ஆமாம் என்று பீலாவெல்லாம் வேண்டாம்) இல்லை என்ற போதும் கூட ஒரு நாள் சம்பளத்தை முழுதாக வாங்கவில்லையா? அதை விட்டுட்டு திருட்டு புண்ணாக்குனு.... போங்க சார்..
மதுசூதனன் அவர்களே,
அதான் செந்தழல் ரவி ஒத்துக்கிட்டாரே. அப்புறம் என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
A question for ethics logic. Does the friend who asked the question returns his pay check if he is in bench???
Murali.
//if he is in bench???//
You mean H1B visa in the USA? I think not. And no need to ask that friend because, he has already accepted my answer to that question.
No need to preach to the already converted, I guess. :)))
Regards,
Dondu N.Raghavan
Approach & observe a person from his positivitiesஎனும் வகையில் 60+ வயதிலும் இளைஞர்களையும் விட சுறுசுறுப்பாக இயங்கும் தங்களது உழைத்தல் போற்றுதலுக்குரியது.
கறாராகவும், மிடுக்காகவும் உழைத்தல் அவசியம் என்பதை உணர்த்துகின்றீர்கள்.
செந்தழலார் விட்ட "Sweeppeing Statement"ஐ அவரே ஃபெயில் என்று ஒத்துக்கொண்டதும் இதனாலேயே நேர்மையான உழைப்பு மாதிரி ஏதும் இல்லை!
விஜயகாந்த், ஜெயலலிதா, கருணாநிதி என்று அரசியல்வாதிகளே தமது வருமானத்தைப் பொதுவில் சொல்ல அஞ்சும் நிலை இருக்கும் தமிழகத்தில்,
தைரியமாகத் துணிவுடன்
தனது வருமானத்தைப் பொதுவில் பிரகடனம் செய்த அரசியல்வாதி டோண்டுதான் :-))
வலையுலக அரசியலில் அடிக்கடி அடிபடும் பிரமுகர் என்பதை வைத்துச் சொன்னேன்.
///ஒரு நாளைக்கு 8 மணி நேரம் குறைந்த பட்ச வேலை நேரம். நாம் 8 மணி நேரம் முழுதுமா வேலை பார்க்கிறோம்? (ஆமாம் என்று பீலாவெல்லாம் வேண்டாம்) இல்லை என்ற போதும் கூட ஒரு நாள் சம்பளத்தை முழுதாக வாங்கவில்லையா? அதை விட்டுட்டு திருட்டு புண்ணாக்குனு.... போங்க சார்..////
மதுசூதனா,
நான் எட்டு மணியல்ல பதினாறு மணி நேரம் கூட வேலை செய்திருக்கேன்...சமயத்தில் கம்ப்யூட்டரை வீட்டுக்கு கொண்டு சென்று விடிய விடிய வேலை செய்திருக்கேன்...அதுக்கென்ன ஓவர் டைம் காசா கொடுக்கிறான்...இதுக்கென்ன பதில் ?
I accept your aproach to your profession. ppl should learn to pay for the TIME, whether it is their's or yours. Still some subtle points...
When we are negotiating for a contract do we charge for the time we spent in trying for the order? Cause work starts after the wining of the bid.
then waiting charge in an auto is always less than the running charge!
But still those time stealers should pay more for wasting your time and their time! Cause no one knows the actual value of time cause it vary person to person, situation to situation.
Good post.
My Signature
(lol!) Said and unsaid!
நன்றி ஹரிஹரன் அவர்களே,
அன்புடன்,
(அரசியல்வாதி) டோண்டு ராகவன்
ரிசப்ஷனில் இருந்த பிகருக்கு உருது தெரியும் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?
//ஆமாம் யார்க்கர் என்றால் என்ன வகை பந்து வீச்சு கிரிக்கெட்டில்? அதே போல கூக்ளி, பவுன்ஸர்? பம்பருக்கும் பவுன்சருக்கும் என்ன வேறுபாடு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
யார்க்கர் என்றால், காலை குறிவைத்து நகர்த்த முடியாதபடி பந்துவீசுவது. என்னுடைய பதிவில் வக்கார் யூனுஸ் லாராவுக்கு வீசும் வீடியோ உள்ளது. பார்த்துக் கொள்ளுங்கள். தட்ஸ் பெர்ஃபெக்ட் யார்க்கர்.
கூக்ளி என்றால், ஆஃப் ஸ்பின் வீசுபவர் திடிரென ஒரு பந்தை மட்டும் லெக் ஸ்பின் வீசுவது and vice versa.
பவுன்ஸர் என்றால், என்னோட பதிவின் தலைப்பிற்கு மேல் ஒரு சிறிய படம் உள்ளது பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது, உயர எழுப்பி தலையை பெரும்பாலும் குறி வைத்து வீசுவது. பம்பர் என்றாலும் பவுன்ஸர் என்றாலும் ஒன்றே.
http://bouncypitch.blogspot.com/
ரவி அவர்களுக்கு,
//நான் எட்டு மணியல்ல பதினாறு மணி நேரம் கூட வேலை செய்திருக்கேன்...சமயத்தில் கம்ப்யூட்டரை வீட்டுக்கு கொண்டு சென்று விடிய விடிய வேலை செய்திருக்கேன்...அதுக்கென்ன ஓவர் டைம் காசா கொடுக்கிறான்...இதுக்கென்ன பதில் ?//
நானும்தான்.... ஆனால் நாம் சேவை செய்வது நமது முதலாளிகளுக்கு (employers). அதனால் overtime / bench எல்லாம் நமது நிறுவன HR சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. ஞாயமாக பார்த்தால் உங்கள் உழைப்பு உங்களுடைய நிறுவனத்தின் முதலீடு. அதற்கு தகுந்த லாபம் ஈட்ட வேண்டும் என்பதுதான் குறிக்கோள்.
டோண்டு சொல்வது professional services. அதாவது freelancing consultant மாதிரி. அவருடைய சட்ட திட்டங்களை நிர்ணயிப்பவர் அவரே.
ஆனால் அவர் செய்தது professional ethics படி மிகச் சரியே. அவருடைய நிலையில் நான் இருந்தால் நிச்சயமாக charge செய்திருக்க மாட்டேன். ஏனென்றால் நான் முழு professional கிடையாது.
Bench means being in company rolls without any project. Plainly saying idle. Sometimes bench time would be even upto 6 months in companies like Infosys, Wipro.
And funny fact...at any point of time roughly 10% of these companies workforce is in bench..
Anyhow I will take back my question since the person had accepted.
Murali.
வீரத் திராவிடன் அவர்களே,
இது என்ன பிரமாதம்? அந்த சுட்டிப் பெண் டெலிஃபோனில் யாரிடமோ ஹிந்தியில் பேசினார். பிறகு அவர் பெயரை ஹிந்தியில் கேட்க, இசுலாமியப் பெயரை கூறினார். அங்கிருந்து உருதுவுக்கு தாவ இந்த மொழிபெயர்ப்பாளனுக்கு பெரிய காரியமா? அவருக்கும் தேனினும் இனிய உருது மொழியை இந்த இளைஞனின் குரலில் கேட்க மகிழ்ச்சி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"நான் எட்டு மணியல்ல பதினாறு மணி நேரம் கூட வேலை செய்திருக்கேன்...சமயத்தில் கம்ப்யூட்டரை வீட்டுக்கு கொண்டு சென்று விடிய விடிய வேலை செய்திருக்கேன்...அதுக்கென்ன ஓவர் டைம் காசா கொடுக்கிறான்...இதுக்கென்ன பதில் ?"
நீ ஏமாந்தவன்
ஏமாந்த கொக்கு எலி....
//நீ ஏமாந்தவன்
ஏமாந்த கொக்கு எலி...
நீ உருப்பட மாட்டே
ஏமாறாத சிங்கம் புலி.
//ரிசப்ஷனில் இருந்த பிகருக்கு உருது தெரியும் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?
யோவ் இது என்னய்யா கேள்வி. டோண்டு சார் உருதுல பேசித்தான் கண்டுபுடிச்சாரு.
கண்டிப்பாக இல்லை நீ ஏமாந்தவன் அவர்களே. ஐ.டி.யில் 16 மணி நேர வேலை என்பது ஜூஜுபி. ஆனால் அதற்கேற்ப சம்பளம் பெர்க்ஸ் எல்லாம் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வீரத் திராவிடன் அவர்களே,
இது என்ன பிரமாதம்? அந்த சுட்டிப் பெண் டெலிஃபோனில் யாரிடமோ ஹிந்தியில் பேசினார். பிறகு அவர் பெயரை ஹிந்தியில் கேட்க, இசுலாமியப் பெயரை கூறினார். அங்கிருந்து உருதுவுக்கு தாவ இந்த மொழிபெயர்ப்பாளனுக்கு பெரிய காரியமா? அவருக்கும் தேனினும் இனிய உருது மொழியை இந்த இளைஞனின் குரலில் கேட்க மகிழ்ச்சி.
அன்புடன்,
டோண்டு ராகவன்///
மாமா சைக்கிள் கேப்ல ஏரோப்பிளேன் ஓட்டுறாருப்பா.
//கண்டிப்பாக இல்லை நீ ஏமாந்தவன் அவர்களே. ஐ.டி.யில் 16 மணி நேர வேலை என்பது ஜூஜுபி. ஆனால் அதற்கேற்ப சம்பளம் பெர்க்ஸ் எல்லாம் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
வேலையை க்ரிக்டான டயத்துல உழார் பண்ணாமே டெட் லேன் நாள அனிக்கு எல்லாம் ஜோலியும் முடிக்கனும்னா ஊட்லயோ இல்லாங்கட்டி ஆபிஸ்ல புல் டே னைட் அடிச்சு தான் முடிக்கனும். அதுக்கு தபா பீடி துண்டு கூட பெர்க்க்ஸுன்னு கொடுக்கமாட்டங்க.
Sri Venkat தரும் பதில் மிக நன்றாக உள்ளது..
செந்தழல் ரவி ( பீட்டா சொதப்பல், அனானி ஆப்சனுக்கு நன்றி)
தம்புடு ஸ்ப்பீடு பவுலர்
உன் வூட்ல அதான் வலை ஊட்ல அனானி ஆட்டம் இருக்குதா?
இல்லங்காட்டி போ
//http://bouncypitch.blogspot.com/
செந்தழல் ரவி,
வா மச்சி அனானி ஆட்டம் ஆடலாம்
//மாமா சைக்கிள் கேப்ல ஏரோப்பிளேன் ஓட்டுறாருப்பா.//
அந்த பிளேனும் என்னொடதுங்கோவ். :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதுக்கு தபா பீடி துண்டு கூட பெர்க்க்ஸுன்னு கொடுக்கமாட்டங்க.//
:))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஐ.டி.யில் 16 மணி நேர வேலை என்பது ஜூஜுபி. ஆனால் அதற்கேற்ப சம்பளம் பெர்க்ஸ் எல்லாம் உண்டு.
//
உங்கள் எண்ணம் தவறு...ஓவர் டைம் வேலை பார்த்தால் அதற்கேற்ற சம்பளம் என்பது எல்லாம் கிடையாது..!!!
செந்தழல் ரவி
//அந்த பிளேனும் என்னொடதுங்கோவ். :)))
பிளேனும் வாடகை பிளேனா ;?? மாமா நீங்க எலக்டிரிக் ட்ரையினயே வாடகைக்கு எடுத்துவரு. செய்தாலும் செய்வீரு
//உங்கள் எண்ணம் தவறு...ஓவர் டைம் வேலை பார்த்தால் அதற்கேற்ற சம்பளம் என்பது எல்லாம் கிடையாது..!!!
செந்தழல் ரவி//
உழைப்பாளி் ஒற்றுமைஓங்குக
உழைபபாளி இல்லாத நாடுதான் இங்கு ஒன்று ஏது?
இந்த பதிவில் இதுவரை வராத முகமது யூனுஸ் - ஹாரி பாட்டரை வன்மையாக கண்டிக்கிறேஎன்.
//உங்கள் எண்ணம் தவறு...ஓவர் டைம் வேலை பார்த்தால் அதற்கேற்ற சம்பளம் என்பது எல்லாம் கிடையாது..!!!//
அதுதான் கம்பெனி கம்பெனியாகத் தாவுகிறார்களே. சாலரி ஜம்ப் இல்லாமயா? இன்க்ரிமெண்ட் 40% வாங்கினவங்களை பாத்திருக்கேனே.
மற்றப்படி நெகோஷியேட் செய்வது உங்கள் திறமை.
அபன்புடன்,
டோண்டு ராகவன்
//அபன்புடன்,
டோண்டு ராகவன்//
தமிழ் தாத்தா டோண்டுவிற்க்கு என்னவாயிற்று? அபன்புடன் என்று எழுதி விட்டாரே?
//அதுதான் கம்பெனி கம்பெனியாகத் தாவுகிறார்களே. சாலரி ஜம்ப் இல்லாமயா? இன்க்ரிமெண்ட் 40% வாங்கினவங்களை பாத்திருக்கேனே.
அதுல 30% ஃபேக் சான்றிதழை கொடுத்து வாங்கினாங்களாம்
//தமிழ் தாத்தா டோண்டுவிற்க்கு என்னவாயிற்று? அபன்புடன் என்று எழுதி விட்டாரே?//
தட்டச்சு பிழை. :)))
தமிழ்த்தாத்தா ஒருவர்தான், அவர்தான் உ.வே. சாமினாத ஐயர். என்னைப் போன்ற துரும்புக்கெல்லாம் அந்த பெயரைத் தராதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தமிழ்த்தாத்தா ஒருவர்தான், அவர்தான் உ.வே. சாமினாத ஐயர். என்னைப் போன்ற துரும்புக்கெல்லாம் அந்த பெயரைத் தராதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
தமிழ் வலைபூ தாத்தா என்று வைத்து கொள்வோம் .;))
டோண்டு சார
் அட்த்த்த பதிவு எப்பாங்காட்டி வரும்?
சவுதி அரேபியாவில் பேச்சுலராக 4 நபர்கள் தங்கியிருக்கும் எங்களுடைய வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் முடிந்துவிட்டிருந்தது. கேஸ் ஸ்டேஷன் சென்று கேஸ் எடுப்பதற்காக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் வாடகை டாக்ஸியில் நானும் எனது ஹிந்து நண்பர் ஒருவரும் சென்றோம். நாங்கள் சென்ற நேரத்தில் கேஸ் ஸ்டேஷன் மூடப்பட்டிருந்தது. சிலிண்டர் எடுக்காமல் திரும்பிய எங்களை மீண்டும் எங்கள் வீட்டிலேயே கொண்டுவந்து விட்டுவிட்ட அந்த டாக்ஸி டிரைவருக்கு நாங்கள் பேசிய பணத்தை கொடுத்தோம். அதை அந்த டாக்ஸி டிரைவர் வாங்க மறுத்துவிட்டார்.
<---- இன்க்ரிமெண்ட் 40% வாங்கினவங்களை பாத்திருக்கேனே.
-->
It is not a regular thing. It depends on (software) market.
It is (almost) a contract job.
//மேலும் எங்கள் இருவருக்குமே அதில் //சந்தோஷம். இதில் யார் கொடுப்பது, //யார் வாங்குவது? :)))
உருது பிகர்க்கு உங்களுடன் பேசியதில் சந்தோஷமா - இது கொஞ்சம் அதிகமாகப் படுகிறது. நீங்கள் செய்தது சரிதான்(கடலை போட்டதை சொல்லவில்லை). அடுத்தமுறை கூப்பிடும்போது(?) ஒழுங்காக செய்வார்கள்.
<-----
It is not a regular thing. It depends on (software) market.
It is (almost) a contract job --->
Continuation of the above ----
Employee work in 'Fixed-price' basis(Read - fixed salary for 8 hrs,16hrs,bench). Employer will charge the client in Hourly-rate basis.
Employee work in 'Fixed-price' basis(Read - fixed salary for 8 hrs,16hrs,bench). Employer will charge the client in Hourly-rate basis.
மேல கிறத படிச்சா .
ஐ.டி ல வேல செய்ற எல்லா பார்டியும் ஏமாந்தவன் "நீ உருப்பட மாட்டே" போல தெறுது
//உருது பிகர்க்கு உங்களுடன் பேசியதில் சந்தோஷமா - இது கொஞ்சம் அதிகமாகப்படுகிறது.//
சொந்த மொழியில் பேசுவது என்பது என்பது எல்லோருக்குமே மகிழ்ச்சி தரக்கூடியது அல்லவா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Mr. Dondu,
I really admired about your mental strength.How can you tolerate everthing, though entire Tamil Manam is bouncing the ball towards you? You are the role model for Mental strength...(though I am not in favour of your write ups)
தமிழ் மணம் முழுக்கவா? இல்லையே? என் பக்கமும் இருக்கிறார்களே. ஆனால் என்ன அவர்கள் எதிர்ப்பாளரை விட குறைச்சலாக சத்தம் செய்கிறார்கள்.
மற்றப்படி நான் கூறும் எல்லாவற்றையும் நீங்களும் ஒத்து கொண்டால், அஹ்டு ஒரு பெரிய அகண்ட பஜனை ஆகிவிடும்.
ரொம்ப போர் அடிக்குமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதே கேள்வியை எங்களது proz.com மொழிபெயர்ப்பாளர் தலைவாசல் மன்றத்தில் ஒரு இடுகையிட்டுக் கேட்டேன். அதில் வரும் பதில்களைப் பாருங்கள்.
பை தி வே இந்தத் தலைவாசலின் தமிழாக்கத்தில் நானும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறேன். இப்போதைக்கு நான் லாகின் செய்து தமிழில் பக்கங்களைக் காணலாம். சில நாட்களுக்கு பிறகு அது பொதுப் பார்வைக்கும் வரும். தள மொழிகளில் தமிழும் வர இருக்கிறது. அச்சமயம் இது பற்றி இங்கு பதிவும் போடுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தமிழ் வலைபூ தாத்தா என்று வைத்து கொள்வோம் .;))//
தமிழ் வலைப்பூ தாதா என்று வைத்த்துக்க்கொள்ளலாமா ?
அண்டார்ட்டிக்காவில் இருந்து,
செந்தழல் ரவி
///அச்சமயம் இது பற்றி இங்கு பதிவும் போடுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன் //
இதுதான் பிரச்சினையே !!!
மீண்டும் கும்தலக்கடி கும்மா..!!! ( இதுக்கும் ஒரு பதில் ரெடியா வெச்சிருப்பீங்களே? )
/தமிழ் வலைப்பூ தாதா என்று வைத்த்துக்க்கொள்ளலாமா ?//
நான் வயதானவன் என மற்றவர் கருதுவதால் தாத்தா என்று ஒத்து கொண்டேன். தாதா ஏற்கனவே இருப்பதால் நான் அந்தப் பட்டத்துக்கு உரியவன் அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment