ஒரு மொழிபெயர்ப்பாளருக்கும் (translator) துபாஷிக்கும் (interpreter) என்ன வித்தியாசம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. நான் தில்லியில் இருந்தபோது இப்படித்தான் ரான்பாக்ஸி கம்பெனியிலிருந்து என்னை ஒரு பிரெஞ்சு துபாஷியாகக் கூப்பிட்டார்கள். சரி என அங்கு போய் பிரெஞ்சுக்காரர் எங்கே எனக் கேட்டதற்கு பேய் முழி முழித்து விட்டு ஒரு கத்தை வரைபடங்களை கொடுத்து அதை நான் அங்கேயே எழுத்துமூலம் மொழி பெயர்க்க வேண்டும் எனக் கூறினார்கள்.
அவ்வாறாயின் அவர்கள் என்னிடம் துபாஷி எனக் கூறியிருக்கக் கூடாது என விளக்கினேன். அதன் பின்னால் எப்போது என்னிடம் துபாஷி என்று கேட்டு யாராவது ஃபோன் செய்தால் அது நிஜமாகவே துபாஷி வேலைதானா என நிச்சயம் செய்து கொள்கிறேன். அதே போல translator எனக் கேட்டு ஆனால் மனதில் interpreter என நினைத்துக் கொள்வதும் நடந்திருக்கிறது.
நம்மூரில்தான் இப்படி என்றில்லை. எல்லா இடங்களிலும் இதே கதைதான். கீழே உள்ள வீடியோ இந்த விஷயத்தைத் தொட்டு ஒரு துபாஷியின் வேலை சூழ்நிலையையும் காட்டுகிறது. அதிலும் அவர்கள் காட்டுவது conference interpreter-களைத்தான். ஆனால் consecutive interpreter-கள் என இன்னொரு வகை உண்டு. அதாவது வேற்று மொழிக்காரர் இங்குள்ளவர்களுடன் தனது மொழியில் பேச அவர் பேசி முடித்ததும் துபாஷி அதை உள்ளூர் மொழியில் மாற்றிச் சொல்ல வேண்டும். நம்மவர்கள் அதற்கு எதிர்வினையிட்டு அவர்கள் மொழியில் கூற, துபாஷி மீண்டும் அதை வேற்று மொழியில் மாற்ற வேண்டும். முதலில் சொன்னது மிகக்கடினமான வேலை. வேற்று மொழிக்காரர் பேசும்போதே துபாஷிகள் கூண்டில் அமர்ந்து உள்ளூர் மொழியில் தொடர்ந்து மொழி பெயர்க்க வேண்டும். பார்வையாளர்களிடம் இருக்கும் ஹெட்ஃபோனில் உள்ளூர் மொழியை தெரிவு செய்தால் அதை கேட்கலாம். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
நான் புள்ளிவிவரங்கள் எல்லாம் எடுக்கவில்லை. ஆனால் நான் பார்த்தவரை துபாஷிகள் அனேகமாக பெண்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் பொறுமை அதிகம் என்று பலர் நினைக்கிறார்கள். ஓரளவு உண்மையும் அதில் இருக்கக் கூடும்.
துபாஷிக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் இடையில் உள்ள ஆறு வித்தியாசங்கள் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஒரு வேற்று மொழிக்காரரிடம் அவருக்கு துபாஷி தேவையா இல்லையா என்பதைக் கூட கேட்டறியாது இவர்களே ஒரு துபாஷியை வரவழைத்து விட்டு, பிறகு வந்தவரே ஆங்கிலம் பேசுவதால் துபாஷியை திருப்பி அனுப்புவதும் நடந்திருக்கிறது. அப்படித்தான் என்னை கிட்டத்தட்ட இரு மணி நேரம் காக்க வைத்தக் கதையை ஏற்கனவேயே இங்கு எழுதியுள்ளேன். நான் அதற்கெல்லாம் அசராது இரு மணி நேர வேலைக்கான பில் போட்டு பணம் வாங்கியதை அவதூறு ஆறுமுகம் போன்றவர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் மொழிபெயர்ப்பாளர் தலைவாசல் ப்ரோஸில் உள்ள எனது சக மொழிபெயர்ப்பாளர்கள் நான் செய்ததுதான் சரி எனக்கூறியதையும் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறேன்.
இந்த விஷயத்தை நான் என்னுடைய மைத்துனனிடம் கூறியபோது அவன் என்னை அந்த வாடிக்கையாளர் திரும்ப கூப்பிடவே மாட்டார் என கருத்து தெரிவித்தான். அதுதான் இல்லை அதே வாடிக்கையாளர் அதன் பின்னால் என்னை மூன்று முறை கூப்பிட்டனுப்பி வேலை கொடுத்தார். நாம் உறுதியாக இருப்பதே சரியான முறை. இல்லாவிட்டால் ரோடில் செல்லும்போதே ட்ரௌசரை உருவி விடுவார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஷார்ஜா புத்தக விழா
-
டிசி புக்ஸ் என்னுடைய ஒரே ஒரு சிறு நூலைத்தான் வெளியிட்டிருக்கிறது- மாடன்
மோட்சம். அது சிறுகதை. அதை சிறு நாவலாக பின்னொட்டு முன்னொட்டுகளுடன்
வெளியிட்டு ஆண்டுக...
1 hour ago
15 comments:
திமுகவின் 2011 தேர்தல் அறிக்கையின் சேர்க்கை:
எங்கள் ஆட்சியில் இந்தியா இலங்கையை இறுதி போடியில் வீழ்த்தியது..!!! இதையொட்டி இன்று மாலை 6 :30 க்கு தீவுத்திடலில் கலைஞருக்கு பாராட்டு விழா..!!! அனைவரும் வாரீர்...!!!
இந்திய வெற்றி பெற்றதை அடுத்து மக்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு Cricket Bat & Ball இலவசமாக வழங்கபடும்..!!!!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் இருமுறை India விளையாடும் International Cricket போட்டியை சென்னையில் நடத்துவோம்..!!
டோனியின் புகழாரம் கலைஞரின் ஆட்சிக்கு!!!!
உதயசூரியனை மறந்துவிடாதீர்கள்!!!!
Ramana kindly read this also about your vijayakanth.
விஜயகாந்த: நேற்று நடந்த India vs Srilanka அரை இறுதி ஆட்டத்தில்...!!!
வேட்பாளர்: தலைவரே அது India vs Pakistan.....!!!
விஜயகாந்த்: பளார்.... பளார்..... பளார்....!!!!!!! மூடு மூடு வாய மூடு... வீட்ட்ல யார்னா பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா.. போ.. போ..!!!
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
ஓஹோஹோஹோஹொஹொஹோ
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
வரவறியாமல் செலவழிச்சாலும் நெலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் வெத வெதைச்சாலும் முளைக்காது
காத்துல வெளக்க ஏத்தி வச்சாலும் எரியாது
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
ஓஹோஹோஹோஹொஹொஹோ
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
for டோண்டு பதில்கள்:
1. விஜயகாந்திடம் அடிபட்டவன் மஹாராஜா ஆவானாமே?
2. "ஆள்வது திமுகவா, நான் முதல்வரா என்றே தெரியவில்லை", தேர்தல் கமிஷன் கண்டிப்பு பற்றியது என்று சொல்லப்படும் கருணாநிதியின் இந்தப் புலம்பல் குடும்பத்தினரின் அதீத ஆதிக்கம் குறித்த அவரது கருத்து என்கிறேன் நான். Your take?
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6. 2ஜி ஒதுக்கீட்டில் நேர்மைக்குப் புறம்பாக செயல்பட்டுள்ளார் ராசா: குற்றப்பத்திரிகையில் சிபிஐ தகவல்
7.ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு: வைகோ பங்கேற்பு
8 . குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி தமிழகத்தை மீட்போம்: சிவகாசியில் ஜெயலலிதா சபதம்
9.டாடா, நீரா ராடியா பிஏசி முன்பாக நாளை ஆஜர்
10.காங்கிரûஸ அதிமுகவும், தேமுதிகவும் விமர்சிக்காதது ஏன்? இல. கணேசன்
உங்களின் பாணியில் கருத்து சொல்லவும்?
1.திமுக/அதிமுக தேர்தல் அறிவிப்பு இலவசங்கள்
2.தேர்தல் பிரச்சாரம்-கருணாநிதி/ஜெயலலிதா
3.காங்+திமுக/அதிமுக+தேமுக கூட்டணி
உள்குத்துகள்
4. காமெடி நடிகர்களின் காசு வாங்க காமெடி பிரச்சாரம்
5.ஊடகங்களின் நேர்மையற்ற கருத்து புனைவு/திரிபு பிரச்சாரம்
for டோண்டு பதில்கள்:
108 ஆம்புலன்ஸ் திட்டம், கலைஞர் காப்பீட்டுத்திட்டம் ஆகியன திமுக அரசின் சாதனை என்று உள்துறை அமைச்சர் சீனாத்தானா பேசியுள்ளாரே? 108 மத்திய அரசின் திட்டமாயிற்றே? பீட்டர் அல்போன்ஸ் போல சீனாத்தானாவும் தேசியக் கட்சி காங்கிரசைத் தமிழகத்தில் ஓரம்கட்டி உட்கார்த்தி வைத்தது கலைஞரின் மாபெரும் சாதனை என்று மார்தட்டுவார் போலிருக்கிறதே? இந்த சூடு சொரணை இவற்றோடு சேர்ந்த இன்னபிற உணர்ச்சிகள் காங்கிரசாருக்குக் கிடையாதோ?
பதிவுக்கு சம்பந்தமுள்ள ஒரு பின்னூட்டம்:
துபாஷி வேலையிலும் பல்வேறு தினுசுகள் இருக்கிறது என்பது புதுத்தகவல் (எனக்கு). Interpreter பக்கத்தில் உட்கார்ந்து மொழிபெயர்ப்பார். Translator மொத்தமாக எழுதிக் கொடுப்பார் என்ற புரிதலில் இருந்தேன். ஒரு மொழியில் பேசுவதை வெவ்வேறு மொழிகளில் ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டு கேட்பது டெக்னாலஜி வேலையாக்கும் என்று எண்ணியிருந்தேன். அங்கும் மனித வேலை மையமாக இருக்கிறது என்பது இப்போது புரிந்தது.
@அருண் அம்பி
ஒரு மாதிரி குன்சாக நீங்கள் சொன்னது போலவும் சொல்லலாம்.
துபாஷி பேச்சு வழியே மொழி பெயர்ப்பார், அப்போது இரு மொழிக்காரர்களும் இருப்பது அவசியம்.
மொழி பெயர்ப்பாளரது வேலை முக்கியமாக எழுத்து வேலை.
அதே சமயம் நான் மொழிபெயர்ப்பாளராக வாடிக்கையாளரது அலுவலகம் செல்ல நேர்ந்த போது, எல்லாவற்றையும் எழுத நேரம் இருக்காமல் போவதுமுண்டு. அப்போது காகிதத்தைப் பார்த்து அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை வாடிக்கையாளருக்கு கூற வேண்டியிருக்கும்.
அதே போல துபாஷி வேலை சமயத்திலும் தேவைப்பட்டால் மீட்டிங்கின் மினிட்ஸ்களை வேகமாக எழுத்து மூலம் மொழி பெயர்ப்பு செய்து தர வேண்டும்.
எல்லாம் நிலைமைக்கேற்ப நடந்து கொள்ள வேண்டியதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1.1967 லிருந்து திமுக அரசியலை கவனித்து பார்க்கையில் கழகத்தின் தலைவர் கலைஞரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அளவுக்கு யாரும் பயங்கிரமாய் விமர்சித்ததாக தெரியவில்லை.
இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
2.விஜய்காந்த் பேச்சில் சில பகுதிகளை எடிட் செய்து பொய்யாய் ஒளிபரப்பும் சன்,கலைஞர்,மக்கள் தொலைகாட்சிகளை தேர்தல் கமிஷ்ன் கண்டு கொள்ளாதது ஏன்?
3.காங்கிரசின் உள்ளடி வேலை கலைஞருக்கு தெரியவில்லையா இல்லை புரியவில்லையா?
4.கலைஞருக்கு வயதாய்விட்டது அவருக்கு ஓய்வு கொடுங்கள் எனும் சீமானின் பேச்சு மக்களிடம் எடுபடுமா?
5.ஒருவேளை ஜெயலலிதா ஜெயித்து வந்தால் 2006 முதல் 2011 வரை தனக்கு தொந்திரவு ஏதும் (1996 லிருந்து 2001 காலத்தை போல்)தராத திமுக தலைவருக்காக ,கலைஞரின் குடும்பத்திற்கு தொந்திரவு ஏதும் தரமால் நன்றி காப்பாறா?
6.அடுத்து வரும் சிபிஐயின் இரண்டாவது ஸ்பெக்ட்ரம் அறிக்கையில் கலைஞர் டீவி பங்குதாரர்கள் பற்றிய குறிப்பு இருந்தால்( ஏபரல் 13 க்கு முன்னே) அது தேர்தலில் திமுகவின் வெற்றியை இன்னும் பாதிக்குமா ? ( ஏற்கனவே கருத்து கணிப்புகள்-ஜூவி,குமுதம்,புதிய தலைமுறை,லயோலா,ஹெட்லயின் தொலைகாட்சி-நக்கீரன் கோபால் உள்பட எல்லாம் அதிமுகவுக்கு சாதகமாய்- திமுக -70---->அதிமுக -100)
7.மருத்துவர் திமுகவின் அதள பாதாள தேல்விக்கு பிறகு காங் உடன் கை கோர்ப்பார் எனும் பா.ஜாவின் குற்றச்சாட்டு?
8.தலைகால் புரியாமல் கலைஞர் புகழ் பாடும் தொல்.திருமா தேர்தலுக்குபின் என்ன சொல்லி சமாளிப்பார்?
9. பிரச்சாரத்தில் வி.காந்த ஐ வறுத்து எடுக்கும் வடிவேலுவின் திரை உலக வாழக்கை என்னவாகும்?
10.யார் ஜெயித்தாலும் 2 கோடி மிக்ஸி/கிரைண்டர்/ஃபேன் எப்படி தயாரிப்பார்கள்?
தி இண்டர்பிரெட்டர் என்று இங்கிலீசு படம் எல்லாம் வந்திருக்கு. (படத்தில் கதாநாயகிக்கு துபாஷி வேசம்).
அதை தமிழில் டப் செய்து வெளியிட்டாலே அதுக்கு துபாஷி என்று பெயர் வைக்க மாட்டார்கள்.
@ரமணா
கேள்விகள் 6 முதல் 10 வரை 11-ஆம் தேதிக்கான பதிவின் முன்வரைவுக்கு சென்று விட்டன.
அன்புடன்,
டோண்டு
@வஜ்ரா
படத்துக்கு வேறு என்ன பெயர் வைக்கலாம்? இரட்டை நாக்கு நாச்சியார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மக்களில் அனைத்து பிரிவினரையும் கவரும் வகையில் கடந்த 5 ஆண்டுகளாய் மக்கள் நலத்திடங்கள் நடத்தி வந்த திமுகழகத்திற்கு அடுத்த முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு கிட்டாது என உலாவரும் கணிப்புகள் உண்மையானால் தமிழ்ச் சமுதாயம் இன்னும் 100 ஆண்டுகளுகு பின்னால் தள்ளப்படும் பேராபத்து, ஏன் சிலர் கண்களுக்கு தெரியவில்லை.
ஊழல்,லஞ்சம்,லாவண்யம் எனும் செயல்கள் இந்தியா முழுமைக்கும் இருக்கும் போது தமிழகத்தை மட்டும் குறிவைக்கும் பூணுல் பத்திரிக்கைகளின் செயல் கண்டு தமிழன்னை மீண்டும் அடிமைச் சங்கலியில் .
ஆதிக்க சக்திகளின் ஆட்சி வருமேயானால் கழகம் , இந்த இனத்தை காக்க மக்கள் சக்தியை திரட்டுவது நடக்கும்.
இந்த துரோக செயல்களுக்கு துணைபோவது யாராயிருந்தாலும் காலம் அவர்களை மன்னிக்காது.
Post a Comment