4/14/2011

டோண்டு பதில்கள் - 14.04.2011

எல்லோருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

ரமணா
கேள்வி-1. அடுத்து வரும் சிபிஐயின் இரண்டாவது ஸ்பெக்ட்ரம் அறிக்கையில் கலைஞர் டீவி பங்குதாரர்கள் பற்றிய குறிப்பு இருந்தால் (ஏபரல் 13 க்கு முன்னே) அது தேர்தலில் திமுகவின் வெற்றியை இன்னும் பாதிக்குமா? (ஏற்கனவே கருத்து கணிப்புகள்- ஜூவி, குமுதம், புதிய தலைமுறை, லயோலா, ஹெட்லயின் தொலைகாட்சி-நக்கீரன் கோபால் உள்பட, எல்லாம் அதிமுகவுக்கு சாதகமாய்- திமுக -70---->அதிமுக -100)
பதில்: அம்மாதிரி வரக்கூடிய குறிப்பை மட்டும் எதனுடனும் சேர்க்காமல் பார்த்தால் பாதிப்பு வரலாம் வராமல் போகலாம். ஆனால் அக்குறிப்பை ஏப்ரல் 13-க்கு முன்னால் வெளியிட்டால், காங்கிரஸ் திமுகவை கைகழுவ நினைக்கும் நோக்கம் இன்னும் வெளிப்படையாகத் தெரிவித்தால் காங்கிரஸ் திமுக உறவில் பாதிப்பு வந்தால் வியப்படைவதிற்கில்லை (அதாவது சமீபத்தில் 1971-ல் திமுகவின் துணையோடு மத்தியில் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, பின்னால் 1976-ல் சர்க்காரியா கமிஷன் ஏற்படுத்தி ஸ்டாலின் போன்றோரை சிறையில் முட்டிக்கு முட்டி தட்டியது போல).

கேள்வி-2. மருத்துவர் திமுகவின் அதல பாதாள தோல்விக்கு பிறகு காங் உடன் கை கோர்ப்பார் எனும் பா.ஜாவின் குற்றச்சாட்டு?
பதில்: அப்படியே பாமக செய்தால்தான் என்ன? இதை குற்றமாகக் கருதத் தேவையேயில்லை. பாமகவின் செயல்பாட்டை தெரிவு செய்யும் உரிமை அக்கட்சிக்கு மட்டுமே உண்டு. பாஜக இதில் நுழைவது சம்மன் இல்லாமல் ஆஜராவது போலத்தான்.

கேள்வி-3. தலைகால் புரியாமல் கலைஞர் புகழ் பாடும் தொல்.திருமா தேர்தலுக்குபின் என்ன சொல்லி சமாளிப்பார்?
பதில்: தேர்தலில் திமுக தோற்கும் என்றே முடிவு செய்து விட்டீர்களா? நானும் அதைத்தான் விரும்புகிறேன் என்றாலும், எதையும் இப்போது தெளிவாகக் கூறவியலாது என்றுதான் நினைக்கிறேன். முடிவு வரும் வரை இது அனுமானக் கேள்வியாகவே இருக்கும்.

கேள்வி-4. பிரச்சாரத்தில் வி.காந்த்தை வறுத்து எடுக்கும் வடிவேலுவின் திரை உலக வாழக்கை என்னவாகும்?
பதில்: விஜயகாந்த் ரஜனிகாந்த் போல செயல்பட்டால் பின்னவர் தன்னை 1996 தேர்தலில் மிகக்கேவலமாக விமரிசனம் செய்த நடிகை மனோரமாவை மன்னித்து தன் படங்களில் வாய்ப்பு கொடுத்து இன்னா செய்தாரை ஒறுத்தது போல இவரும் செய்யலாம். இல்லையெனில் வடிவேலு? அவ்வ்வ்வ்.

கேள்வி-5. யார் ஜெயித்தாலும் 2 கோடி மிக்ஸி/கிரைண்டர்/ஃபேன் எப்படி தயாரிப்பார்கள்?
பணம்: முன்பணம் அன்பளிப்பாகக் கொடுத்து காண்ட்ராக்ட் பெறுகிறார்கள், தயாரிக்கிறார்கள். இதில் என்ன பிரச்சினை?

தேர்தல் ஸ்பெசல் கமெண்ட்? இவர்கள் என்ன சொல்லி சமாளிப்பார்கள்
கேள்வி-6. அதிமுக கூட்டணி ஜெயித்தால்! அ. கருணாநிதி ஆ. தங்கபாலு இ. ராமதாசு ஈ. திருமாவளவன் உ. பெஸ்ட் ராமசாமி ஊ.வீரமணி எ.வடிவேலு ஏ.சன்/கலைஞர்/மக்கள் டீவிகள் ஐ.இலவச எதிர்பார்ப்பாளர்கள் / பாமர கிராம மக்கள் ஒ.மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஓ.திமுக ஆதரவு பத்திரிக்ககைகள்/வெப்தளங்கள்(தினகரன், தந்தி, விடுதலை, முரொசொலி, குங்குமம், நக்கீரன்...), ஔ. டோண்டு ராகவன்

பதில் (தருவது முரளி மனோகர்): டோண்டு பெரிசு இடும் அடுத்த நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்தைப் பார்க்கவும். மற்றவர் பற்றி அவர்களுக்கே அது தெரியாத நிலையில் பெரிசு மட்டும் என்ன சொல்லிட இயலும்?

கேள்வி-7. திமுக கூட்டணி ஜெயித்தால்! அ.ஜெயலலிதா ஆ.விஜயகாந்த இ.பாண்டியன்(வ.கம்) ஈ.இ. கம் ராமகிருஷ்ணன் உ. சோ ஊ. விஜய்/அஜித் மற்றும் திரை உலகம் எ. வியாபாரிகள் ஏ. படித்த இளைஞர்கள் ஐ. நகர வாசிகள்/உயர் ஜாதி வகுப்பினர் ஒ.மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஓ. அதிமுக ஆதரவு பத்திரிக்ககைகள்(தினமலர்,அண்ணா,தினமணி,துக்ளக்,விகடன்,குமுதம்) ஓள. டோண்டு ராகவன்
பதில்: பதில் (தருவது முரளி மனோகர்): டோண்டு பெரிசு தனது அடுத்த நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்தைப் பார்க்கவும். மற்றவர் பற்றி அவர்களுக்கே அது தெரியாத நிலையில் பெரிசு மட்டும் என்னச் சொல்லிட இயலும்?

ஆக, இரண்டுக்குமே ஒரே விடை. டோண்டு பெரிசை நான் நன்கு அறிவதாலேயே கூற முடிகிறது.

கேள்வி-8 .யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் பாதிக்கப்படும் அதிக நபர் யார் காரணம்? அ. கருணாநிதி/ஜெயலலிதா ஆ. ஸ்டாலின்/அழகிரி இ.விஜயகாந்த/வடிவேலு
பதில்: கருணாநிதி: ஸ்பெக்ட்ரம் கவலைகள் அதிகரிப்பு. ஜெயலலிதா: அடுத்த தேர்தலுக்கு முஸ்தீபு.
ஸ்டாலின்/அழகிரி: இப்போதைக்கு கருணாநிதியின் வாரிசு யார் என்னும் சண்டை பின்னால் தள்ளப்படும். விஜயகாந்த்/வடிவேலு: டாம் அண்ட் ஜெர்ரி.

கேள்வி-9. கருத்துக் கணிப்புகள் தரும் அதிர்ச்சியால் கருணாநிதி என்ன நிலை எடுப்பார்?
பதில்: இதுதான் தனது கடைசி தேர்தல் என்னும் அழுவாச்சி சீன்கள்.

கேள்வி-10. கருணாநிதிக்கு மாற்று ஜெயலலிதா இல்லை என்ற போதும் சோ போன்றோரின் ஜெயலலிதா பாசம் சரியா?
பதில்: இப்போதைக்கு ஒருவர் இன்னொருவருக்கு மாற்றுதான். ஆக கேள்வியே தவறு. இரு மாற்றுகளுமே சொல்லிக் கொள்ளூம்படியான நிலையில் இல்லை என்பது வேறு விஷயம். எது எப்படியானாலும் இப்போதைக்கு கருணாநிதி ஆட்சி போவது தமிழகத்துக்குத்தான் நல்லது.

கேள்வி-11. கேப்டன் விஜயகாந்த் சமீபத்திய பேச்சுகள் அவரது மக்கள் செல்வாக்கை குறைத்து விட்டதா?
பதில்: அவர் பேச்சுக்களின் டேப்புகளை திரிக்கிறார்கள் என்ற எண்ணம் வரத் துவங்கியுள்ளது, பார்ப்போம்.

கேள்வி-12. வருங்காலத்தில் கறுப்பு எம்ஜிஆர் விஜயகாந் ஆட்சியை பிடிப்பாரா?
பதில்: வெறுமனே பெயரை வைத்துக் கொண்டால் போதுமா? எம்ஜிஆர் எனச் சொல்லிக் கொள்பவர்கள் குடிகாரராக இருக்கலாகாது.

கேள்வி-13. அழகிரி திமுக, ஸ்டாலின் திமுக, தயாநிதி திமுக, கனிமொழி திமுக உதயமானால் தொண்டர்கள் யார் பக்கம்?
பதில்: 1, 2 இடையில் போட்டி இருக்கும். 3,4 பிக்சரிலேயே இருக்க முடியாது.

கேள்வி-14. ஜெயலலிதாவுக்கு பின்னால் அதிமுக இருக்குமா?
பதில்: சந்தேகம்தான்.

கேள்வி-15. வைகோவின் எதிர்காலம் இனி?
பதில்: நல்ல லாயராக பிராக்டீஸ் செய்யலாம்.

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-16. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: ராகுல் சூசகம்

பதில்: கொள்ளையில் பங்கு

கேள்வி-17. குடும்ப ஆட்சியை தண்டிக்கும் தேர்தல்: ஜெயலலிதா
பதில்: தோழியின் ஆட்சி மட்டும் பரவாயில்லையாமா? இருந்தாலும் இப்போதைக்கு அதை சகித்துத்தான் கருணாநிதியின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்னும் எனது கருத்தில் மாற்றமில்லை.

கேள்வி-18. தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சிதான்: ஸ்டாலின்
பதில்: இப்படிப் பேசித்தான் சமாளிக்க வேண்டும் போலிருக்கிறதே.

கேள்வி-19. காங்கிரஸ் அரசுக்கு பாடம் புகட்டுங்கள்: விஜயகாந்த்
பதில்: அவர் சொல்வது சரிதானே.

கேள்வி-20. கள் இறக்க அனுமதிக்கப்படும்: ஜெயலலிதா
பதில்: அதில் தவறில்லை.

கேள்வி-21. ரூ.11 கோடிக்கு டி-சர்ட்கள் கொள்முதல்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி
பதில்: வெறும் டி சர்ட்டுக்கே இவ்வளவு அதிர்ச்சி என்றால் மற்ற விஷயங்களுக்கு மாசிவ் ஹார்ட் அட்டாக்தானா?

கேள்வி-22. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை விற்றுவிடுவார்கள்: விஜயகாந்த்
பதில்: என்ன? இன்னும் விற்கவில்லையா?

கேள்வி-23. ஊழலில் திமுக-அதிமுக சமம்: சுஷ்மா ஸ்வராஜ்
பதில்: அவர் அபடித்தான் சொல்லணும். வேறென்ன செய்வார்? இப்போதைய நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவும் சரி அதிமுகவும் சரி விரும்பவேயில்லையே.

கேள்வி-24. தமிழக பத்திரிகைகளுக்கு செலக்டிவ் அம்னீஷியா: சேலத்தில் கனிமொழி பேச்சு
பதில்: முரசொலியும் தமிழகப் பத்திரிககளில் ஒன்றுதானே?

கேள்வி-25. லோக்பால் மசோதா வரைவுக்கான கூட்டுக்குழு குறித்து அரசாணைக் குறிப்பு வெளியிட்டது அரசு
பதில்: பாராளுமன்றங்களில் மகளிர் ஒதுக்கீடு மசோதாவின் கதிதான் இதுக்கும்னு நான் நினைக்கிறேன்.

சூர்யா
கேள்வி-26. விடுதலையில் ஒருவர் இப்படி கேள்வி கேட்கிறார்
கேள்வி: 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி என்பது மக்கள் விரோத ஆட்சி என்று கூறி அதனை ஒழித்தே தீரவேண்டும் என்று கூறிய இடது சாரிகள், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அந்த ஆட்சியைக் கொண்டு வந்தே தீருவோம் என்கிறார்களே?
_ உ, மாரிமுத்து, கச்சனம்
பதில்: இது அவர்களைப் பொறுத்தவரை சகஜம்; வெகு சகஜம், சென்ற தடவை நாம் எடுத்த நிலை தவறு என்று ஒரு வாரம் விவாதித்து முடிவு எடுப்பார்கள்_ ஒவ்வொரு முறையும்! பழைய வரலாற்றைக் கூறுகிறேன்.
வெட்கமில்லாமல் வீரமணியிடம் ஒருவர் இப்படிக் கேள்வி கேட்கிறார். வீரமணியும் தன் பேனாவை முறுக்கிக்கொண்டு இப்படி தெனாவெட்டாக பதில் அளித்துள்ளார். வீரமணி கடந்த காலத்தில் என்ன செய்தார் என்ற வரலாறு அவருக்கே மறந்து போய்விட்டது மாதிரிப் பேசுகிறாரே. எப்படி இவர்களால் வெட்கமில்லாமல் இப்படி நடந்து கொள்ள முடிகிறது?

பதில்: இல்லாத வெட்கம் வீரமணியிடம் இருப்பதாக நீங்கள் அவதூறு செய்தால் அவரும்தான் பாவம் என்ன செய்வார்?

கேள்வி-27. இந்தக் கேள்வியும் வீரமணி சம்பந்தமானதே. கீழ்க்கண்ட கேள்வி பதில் விடுதலையில் வந்தது. தேர்தல் கமிஷனர் ஒரு முஸ்லிம். இங்கே எங்கு பூணுல் வந்தது?
கேள்வி: தேர்தல் ஆணையம் தனது அதிரடியான, வேகமான, உறுதியான நடவடிக்கைகளால், அரசியல் எத்தர்களின் கைகளையும், கால்களையும் கட்டிப் போட்டுள்ளதாக துக்ளக் எழுதியிருக்கிறதே?
- _வி.ஜெயபால், சென்னை _ 11
பதில்: அந்தக் கயிறு பூணூல் கயிறுகளாக இருந்திருந்தால் ஒழிய சோ வின் (குடுமி) பேனா சும்மா எழுதாது! புரிகிறதா

பதில்: அதனால் என்ன, இங்கு இருக்கும் பல பார்ப்பன எதிர்ப்பு பதிவர்கள் கூறுவது போல குரேஷியும் பார்ப்பனவாதி என வரையறுத்தால் போகிறது. ஏற்கனவேயே வினவு போன்றவர்கள் பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் என்றெல்லாம் பதிவு போடுகிறார்களே.

கேள்வி-28. அன்னா ஹசாரே பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஊழலற்ற இந்தியா உருவாக அவர் செயல் ஒரு பிள்ளையார் சுழியாக இருக்குமா? அல்லது இதுவும் விழலுக்கு இறைத்த நீர்தானா?
பதில்: அவரது நோக்கம் நல்லதுதான். ஆனால் ஊழலற்ற இந்தியா உருவாக எல்லோருமாக சேர்ந்து உழைக்க வேண்டும். அது அரசால் மட்டும் முடியாது. என்னதான் லோக்பால் என்றெல்லாம் அமைத்தாலும், அதுவே வரம்பு மீறினால் என்ன செய்வது?

கேள்வி-29. உங்கள் வாக்கு யாருக்கு என்று முடிவு செய்து விட்டீர்களா?
பதில்: செய்யாமல் இருப்பேனா?

Arun Ambie
கேள்வி-30 கம்யூனிஸ சீனா முதலாளித்துவத்தை தீவிரமாக ஆதரிக்கிறதாம்..... இங்கே முதலாளித்துவம் நிர்மூலத்தின் மூலகாரணம் என்று சிவப்புத்துண்டு போட்டுக்கொண்டு முச்சந்திக்கு முச்சந்த்தி கூவும் இடது வலது கம்யூனிஸ்டுகள் என்ன செய்வார்களாம்?
பதில்: சுதந்திரச் சந்தை என்பது விளையாட்டில்லை. அதன் உள்ளே நுழைந்து வெற்றி பெற தனித் திறமை வேண்டும். அது செய்ய முடிந்தவர்கள் அதை ஆதரிப்பார்கள், முடியாதவர்கள் ஆதரிக்க மாட்டார்கள். நீங்கள் சொன்ன அதே கட்டுரையில் பல தரப்பினரது மனமாற்றமும் குறிப்பிடப்பட்டுள்ளதே.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

31 comments:

hayyram said...

//எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! // தமிழ் புத்தாண்டு என்று தெளிவாகப் போடுங்கள். உங்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

hayyram said...

//நடிகை மனோரமாவை மன்னித்து தன் படங்களில் வாய்ப்பு கொடுத்து இன்னா செய்தாரை ஒறுத்தது போல// அந்த சூழ்நிலையில் ரஜினி செய்தது தவறு. தான் ரொம்ப நல்லவன்னு காமிக்க வேண்டி அவருக்காக பொங்கி எழுந்த சக சினிமாக்காரர்களை மொக்கை ஆக்கி இருக்கிறார். அதே போல் தான் தனது மகள் சௌந்தர்யா திருமணத்திலும் தான் ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்லவன்னு காமிக்க ராமதாஸ் திருமா போன்ற கூட்டத்துக்கெல்லாம் பத்திரிக்கை வெச்சு தனக்காக உயிரைக்குடுத்து போராடிய உணர்ச்சி பொங்கி சப்போர்ட் பண்ணின ரசிகர்களை மொக்கை ஆக்கினார். என்னதான் சொல்லுங்க, இது மாதிரி விஷயங்கள்ல என் தலைவன் எம் ஜி ஆர் மாதிரி யாரும் இருந்திட முடியாது.

hayyram said...

///இதுதான் தனது கடைசி தேர்தல் என்னும் அழுவாச்சி சீன்கள்// ஒவ்வொரு வாட்டியும் கடைசின்னு சொல்லியே மக்களை ஏமாத்துது அந்த பெரிசு

hayyram said...

//இப்போதைக்கு கருணாநிதி ஆட்சி போவது தமிழகத்துக்குத்தான் நல்லது.// ஆமா, அந்த கேப்புலயாவது கருணாநிதி செத்துட்டா அடுத்த தலைமுறை கையில அந்த கட்சி முழுசா வந்திட்டா குறைந்த பட்சம் ஜாதி மத பிரிவினை வாத அரசியலாவது குறையும். அந்த அவகாசத்துக்கேனும் இப்போ தி மு க தோக்கனும்ங்கறது நல்லது. அதற்கு வசதியாக நிறைய ஊழல் கரை படிஞ்சிருக்கு அவங்க மேல. அந்தக் கரையால் அவர்கள் தோற்பார்கள் என்றால் கரை நல்லது.

hayyram said...

//வைகோவின் எதிர்காலம் இனி?// அந்த மனிதர் வேஸ்ட் பண்ணிட்டார். குறைந்த பட்சம் 12 சீட்டுகள் வாங்கி அதில் ஜெயித்துக்காட்டிசட்டசபைக்கு போக வழிசெய்து கொண்டிருக்கலாம். அதையும் விட்டு விட்டு அதிமுக விற்கு குழுதோண்டும் முயற்சியில் இறங்கினார். பாவம் கண்ணியமாக இருக்கத் தெரிந்தவருக்கு காரியமாகவும் இருக்கத் தெரியவில்லை.

hayyram said...

//தோழியின் ஆட்சி மட்டும் பரவாயில்லையாமா?// கடந்த ஐந்து வருட ஜெ ஆட்சி பரவாயில்லை தானே! உண்மையச் சொல்லுங்க!

hayyram said...

//விடுதலையில் ஒருவர் இப்படி கேள்வி கேட்கிறார்// ஓ, அதெல்லாம் படிக்கிறீங்களா?

எல் கே said...

உங்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

hayyram said...

//இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!// ஆங், இதான் நம்ம டோண்டு!

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1. அமைதியான தேர்தல்: ராமதாஸ் பாராட்டு

pt:first step to jump to other side?
2. கூட்டணி ஆட்சியும் அமையலாம்: கருணாநிதி
pt: last step to retain allaiance partners with him
3. தனிப் பெரும்பான்மை கிடைக்கும்: ஜெயலலிதா
pt: final reply to all partners?
4.திரிணமூல் - காங்கிரஸ் கூட்டணி வாக்கைப் பிரிக்கிறது பாஜக

pt: try to give reason for poll results favourable to CPM ?
5. தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து
pt:chiththiraraiyil muththirai pathiththor!

pt said...

/hayyram said...

//வைகோவின் எதிர்காலம் இனி?// அந்த மனிதர் வேஸ்ட் பண்ணிட்டார். குறைந்த பட்சம் 12 சீட்டுகள் வாங்கி அதில் ஜெயித்துக்காட்டிசட்டசபைக்கு போக வழிசெய்து கொண்டிருக்கலாம். அதையும் விட்டு விட்டு அதிமுக விற்கு குழுதோண்டும் முயற்சியில் இறங்கினார். பாவம் கண்ணியமாக இருக்கத் தெரிந்தவருக்கு காரியமாகவும் இருக்கத் தெரியவில்லை.//

Wait upto 13-5-2011
MDMK votes will decide some results in favour of DMK.In southern districts Mdmk has atlest 4000 to 5000 votes in their favour.It is reported that in Tenkasi this will be reflected clearly.
Even vaiko factor may help Dmk to retain rule in Tamilnadu.

ரமணா said...

1.வைகோவுக்கு ஜெயலலிதா செய்தது துரோகமில்லையா?
2.இதற்குப்பிறகும் வைகோவின் நடு நிலை இந்தத் தேர்தலில் அவர் அரசியல் செல்வாக்கை கூட்டுமா?
3.கல்லூரி மாணவர்களிடையே தேமுதிக தலைவர் மேல் நம்பிக்கை உள்ளதாய் தெரிகிறதே?
4. அதிமுக,தேமுதிக கூட்டணியால் யாருக்கு அதிக லாபம்?
5.தேமுதிகவின் தலைவி பிரேமலதாவின் பிரச்சாரத்திற்கு மக்களிடம் வரவேற்பு எப்படி?

6.நடிகர் விஜய்யின் திரைஉலக வாழக்கை என்னவாகும்?
7.வடிவேலுவின் கதி?
8.ரஜினி அதிமுகவுக்கு ஓட்டு போட்டதாய் வரும் செய்திகளினால்?
9.ஸ்டாலினுக்கு இந்தத் தடவையாவது சான்ஸ் கிட்டுமா?
10.ஒருவேளை திமுக தோற்றால் அழகிரியின் கோபம் யார்மீது திரும்பும்?

ezhil arasu said...

டோண்டுவும்,பார்ப்பன ஆதரவு சக்திகளும் என்ன மாய்மாலம் செய்தாலும் தலைவர்
அறிவித்த தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழர் புத்தாண்டு தொடக்கம்.
தமிழ்ச் சமுதாயம் ஆதிக்க சக்திகள் இன்னும் தங்களை ஆட்சி செய்ய அனுமதிக்காது.
மதுரை அழகிரியின் கணிப்புப்படி திமுக கூட்டணி200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று நல்லாட்சி தொடரும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் புகழ் பாடி வாழ்வோம்.

வஜ்ரா said...

எழில் அரசு,
நீங்கள் சொல்வது மட்டும் நடந்தால் தமிழகத்தை தந்தை பெரியாரே மறுசென்மம் எடுத்துவந்தாலும் காப்பாற்ற முடியாது.

அது சரி, தைத் திங்கள் சனவரி 14 தான் என்று எந்த பஞ்சாங்கத்தை வைத்து கணக்கிட்டீர்கள் ? திராவிட பஞ்சாங்கம் என்று ஒன்று உள்ளதா என்ன ?

Anonymous said...

TAMIL NEW YEAR

The Tamil Calendar, which has 12 months from Chitthirai (April - May) to Panguni (March - April), has a 60-year cycle.



Chitthirai April 14th to May 14th

Vaikasi May 15th to June 14th

Aani June 15th to July 16th

Aadi July 17th to August 16th

Aavani August 17th to September 16th

Purattasi September 17th to October 17th

Aipasi October 18th to November 15th

Karthigai November 16th to December 15th

Marghazi December 16th to January 13th

Thai January 14th to February 12th

Masi February 13th to March 13th

Panguni March 14th to April 13th

Anonymous said...

The Tamil Calendar is followed by the Tamil speaking state of Tamil Nadu, Kerala in India and by the Tamil population in Malaysia,Singapore & Sri Lanka. There are several festivals in Tamil Nadu based on the Tamil Hindu Calendar. The Tamil calendar is based on the solar cycle. It has a sixty years cycle and each year has twelve months. The Tamil New Year follows the vernal equinox and generally falls on April 14 of the Gregorian year.

The Tamil calendar is based on the Hindu solar calendar also used in Assam, Bengal, Kerala, Nepal, Manipur, Orissa and the Punjab. It in turn influenced the calendars of Burma, Cambodia, Laos, Sri Lanka and Thailand where the traditional new year falls around April 14 as well. The Hindu lunar calendar is conversely used in Andhra Pradesh, Karnataka and Maharashtra where the traditional year begins on the new moon preceding April 14.

Anonymous said...

The Seven Days of the Week

The days of the Tamil Calendar relate to the celestial bodies in the solar system. Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus, and Saturn, in that order. The week starts with Sunday

The following list compiles the days of the week in Tamil Calendar:
No. Weekday (Tamil) Weekday (English) Lord or Planet

Anonymous said...

01. Nyaayitru-kizhamai Sunday Sun

02. Thingat-kizhamai Monday Moon

03. Sevvaai-kizhamai Tuesday Mars

04. Buthan-kizhama Wednesday Mercury

05. Viyaazha-kizhama Thursday Jupiter

06. Velli-kizhama Friday Venus

07. Sani-kizhamai Saturday Saturn

Anonymous said...

The Months of a Tamil Calendar

The Tamil Hindu Calendar starts around April 14 of the Gregorian Calendar each year. It consists of twelve months. The number of days in a month can vary between 29 to 32.

The following list compiles the months of the Tamil Calendar. The names of most Tamil months have Sanskrit antecedents. For example the name of the month 'Panguni' is derived from the Sanskrit 'Phalguna'. The month 'Chitterai' is derived from the Sanskrit 'Chaitra'. The name of the month 'Vaikaasi' is derived from the Sanskrit 'Vaishaaka'. The month 'Aadi' comes from 'Ashaadha'.

Anonymous said...

No. Month (Tamil) Month (English) Gregorian Calendar equivalent

01. Chitthirai mid-April to mid-May

02. Vaikaasi mid-May to mid-June

03. Aani mid-June to mid-July

04. Aadi mid-July to mid-August

05. Aavani mid-August to mid-September

06. Purattaasi mid-September to mid-October

07. Aipassi mid-October to mid-November

08. Kaarthigai mid-November to mid-December

09. Maargazhi mid-December to mid-January

10. Thai mid-January to mid-February

Anonymous said...

11. Maasi mid-February to mid-March

12. Panguni mid-March to mid-April



The Sixty-Year Cycle of Tamil Calendar

There 60 year cycle of Tamil Calendar was inserted into the Tamil Calendar system relatively late. Except few names in the 60 year cycle, the rest are 'Sanskrit' names. The calendar follows a sixty year cycle. After the completion of sixty years, the calendar starts anew with the first year. This corresponds to the "Hindu century". The Vakya or Tirukannitha Panchangam (the traditional Tamil almanac) outlines this sequence.

The following list presents the current 60-year cycle of the Calendar:

No. Name Gregorian Year No. Name Gregorian Year

01. Prabhava 1987 - 1988 31.Hevilambi 2017 - 2018

02. Vibhava 1988 – 1989 32.Vilambi 2018 - 2019

03 Sukla 1989 - 1990 33. Vikari 2019 - 2020

04 . Pramodhoodha 1990 - 1991 34. Sarvari 2020 - 2021

05. Prajorpaththi 1991 – 1992 35. Plava 2021 - 2022

06. Aangirasa 1992 – 1993 36. Subakrith 2022 - 2023

07. Srimukha 1993 – 1994 37 .Sobakrith 2023 - 2024

08. Bhava 1994 – 1995 38. Krodhi 2024 - 2025

09. Yuva 1995 - 1996 39. Visuvaasuva 2025 - 2026

10. Thaadhu 1996 - 1997 40. Parabhaava 2026 - 2027

11. Eesvara 1997 - 1998 41. Plavanga 2027 - 2028

12. Vehudhanya 1998 – 1999 42. Keelaka 2028 - 2029

13. Pramathi 1999 - 2000 43. Saumya 2029 - 2030

14. Vikrama 2000 – 2001 44. Sadharana 2030 - 2031

15. Vishu 2001 – 2002 45.Virodhikrithu 2031 - 2032

16. Chitrabaanu 2002 - 2003 46. Paridhaabi 2032 - 2033

17. Subaanu 2003 - 2004 47. Pramaadhisa 2033 - 2034

18. Thaarana 2004 - 2005 48 .Aanandha 2034 - 2035

19. Paarthiba 2005 – 2006 49. Rakshasa 2035 - 2036

20. Viya 2006 - 2007 50. Nala 2036 - 2037

21. Sarvasithu 2007 – 2008 51. Pingala 2037 - 2038

22. Sarvadhari 2008 – 2009 52. Kalayukthi 2038 - 2039

23. Virodhi 2009 - 2010 53. Siddharthi 2039 - 2040

24. Vikruthi 2010 – 2011 54. Raudhri 2040 - 2041

25. Kara 2011 - 2012 55. Thunmathi 2041 - 2042

26. Nandhana 2012 - 2013 56. Dhundubhi 2042 - 2043

27. Vijaya 2013 - 2014 57. Rudhrodhgaari 2043 - 2044

28. Jaya 2014 – 2015 58. Raktakshi 2044 - 2045

29. Manmatha 2015 - 2016 59. Krodhana 2045 - 2046

30. Dhunmuki 2016 – 2017 60. Akshaya 2046 - 2047

Ganpat said...

பின்னூட்டமே இடாமல் ஒரு blog ஐ
அழிக்கும் வாசகர்கள் பலருண்டு என்றால் (சம்பந்தா சம்பந்தம் இன்றி) பின்னோட்டம் இட்டே blog ஐ
அழிக்கும் வாசகர்களும் பலர் இருக்கிறார்கள்
இதில் நீர் எந்த ரகம் என்று நக்கீரன் பாண்டியன் அவர்களே நீங்களே முடிவு செய்து கொள்ளும்

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.மம்தாவுக்கு 100 கோடி கறுப்பு பணம்; கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு
7.தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி
8.ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார் : எஸ்.வி.சேகர்
9.இதுவரை இல்லாத அளவு வாக்குப்பதிவு ஏன்?
10.வடிவேலு, குஷ்பூ பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது : நாஞ்சில் சம்பத்

thenkasi said...

/hayyram said...

//நடிகை மனோரமாவை மன்னித்து தன் படங்களில் வாய்ப்பு கொடுத்து இன்னா செய்தாரை ஒறுத்தது போல// அந்த சூழ்நிலையில் ரஜினி செய்தது தவறு. //


courtesy:Dinamalr dated 18.4.2011-
Latest news, about, Vadivelu -
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உற்சாகமாக சுற்றுப்பயணம் செய்த ‌காமெடி நடிகர் வடிவேலுவுக்கு முதல் அடி விழுந்திருப்பதாக கோடம்பாக்கமே சூடாக பேசிக் கொண்டிருக்கிறது. ஆம்! இப்போதைக்கு எந்த பட வாய்‌ப்பும் இல்லாமல் இருக்கும் வடிவேலு, தேர்தல் முடிவு வருவதற்குள் ஒரு படத்தில் நடித்து முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார். இதற்காக விஷால் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு, அப்படத்தின் டைரக்டரான நடிகர் பிரபுதேவாவுக்கு போன் அடித்திருக்கிறார் வைகைப் புயல். எதிர் முனையில் இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லையாம்.
--------------------------------

வைகைப்புயல் வடிவேலு, சன் ஆதித்யா மற்றும் கலைஞர் சிரிப்பொலிகளில் முழுநேர அறிவிப்பாளராய் மாறலாம் இல்லையா?
இனி விவேக்,சந்தானம்,கஞ்சா கருப்பு காடுகளில் நல்ல மழை.

வஜ்ரா said...

http://allafrica.com/stories/201104180172.html

இப்பொழுது செக்குலர் செம்மல்கள் கென்யாவை புறக்கணிப்பார்களோ ?

Arun Ambie said...

//வஜ்ரா said...

http://allafrica.com/stories/201104180172.html
இப்பொழுது செக்குலர் செம்மல்கள் கென்யாவை புறக்கணிப்பார்களோ ?
//
கீன்யாவில் ஏதாவது காசு தேறும் என்று தெரிந்துவிட்டால் இவர்களது நிலை மாறும். மனமோகன சிங்கரின் தலைமையிலான இந்தியா ஒளிர்கிறது என்று கூசாமல் கூவுவார்கள். மனமோகன சிங்கருக்குத் தலைமையை விட்டுக்கொடுத்த சோனியாவை வானளாவப் புகழ்வார்கள். இவர்களின் ஆட்சிக்குக் கீழுள்ள குஜராத்தில் நல்லது நடப்பது இவர்களின் மறைமுக சாதனை என்று பேசுவார்கள். பொருளாதாரக் கொள்கை மத்திய அரசினது என்பர். புகழுக்காக கூசாமல் கூஜா தூக்கும் கும்பல், எப்படி வேண்டுமானாலும் பேசும்.

Arun Ambie said...

சொல்ல மறந்து போனேன். இராகுல காந்தியார் இராப்பகலாக உழைத்து இந்தியாவைப் போல கீன்யாவையும் ஒரு வழிக்குக் கொண்டு வருவார், ஆனால் கீன்ய அரசில் பதவி எதையும் எதிர்பார்க்க மாட்டார் என்று காசு கொடுத்துச் செய்தி போடுவர்.

thenkasi said...

1.தேர்தலில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்களை உயர் அதிகரிகள் சந்திக்கிறார்கள் என வரும் செய்தி உண்மையா?
2.தேர்தல் கமிஷன் கெடுபிடி இல்லை என்றால் 2000 கோடி வரை புழங்கியிருக்குமாமே?
3.ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் என பிராமணர்கள் செய்தி பரப்புகின்றனர் எனும் திமுகவின் அபாண்ட குற்றச்சாட்டு பற்றி?
4.இனி இந்துக் கோவில்களுக்கு நல்ல காலமா?
5.முஸ்லீம்கள் ஓட்டு வங்கி எப்படி திசை மாறியது இந்தத் தேர்தலில்?

ezhil arasu said...

//3.ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் என பிராமணர்கள் செய்தி பரப்புகின்றனர் எனும் திமுகவின் அபாண்ட குற்றச்சாட்டு பற்றி?//

ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் எனும்
பகல் கனவு காணும் உரிமை உங்களுக்கு உண்டு.
திணிக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில்
உள்ள மயக்கம் தீரும் நாள் மே 13.
இனி ஆதிக்க சக்திகளுக்கு இங்கே துளியும் இடம் கிடையாது.
சோ,சுப்பிரமணிய சாமிகள்,டோண்டுகள் நிலை ?

ezhil arasu said...

//4.இனி இந்துக் கோவில்களுக்கு நல்ல காலமா?//

தலைவர் ஆட்சியில் இந்து வழிபாட்டு தலங்களுக்கு எந்தக் குறைவு வைத்தார்?
ஆத்தீகர் நலம் பேணும் தர்ம சிந்தையாளரை கேலி பேசுவது அடுக்குமா?
மாமன்னன் மாபலியின் மறுபிறவியை குறை கூறினால் அந்த விஷ்ணுவே பொறுக்க மாட்டார்.

பழமைபேசி said...

//கேள்வி-14. ஜெயலலிதாவுக்கு பின்னால் அதிமுக இருக்குமா?
பதில்: சந்தேகம்தான்.//

அம்மாவுக்குப் பின்னாடிதான அதிமுக இருக்கு?! அதுல என்ன சந்தேகம்?!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது