4/28/2011

டோண்டு பதில்கள் - 28.04.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. தமிழகமே பற்றி எரியும்:கே.வி.தங்கபாலு

பதில்: இப்படியும் ஒரு அல்ப ஆசை இவ்வாறு சொல்லிக்கொள்ள வேண்டுமென்று. தேர்தலில் அவர் தோல்வி பெற்றால் அவர் வயிறு வேண்டுமானால் எரியலாம்.

கேள்வி-2. ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியா முன்னேற்றம்
பதில்: யாருடைய ஏழ்மையை?

கேள்வி-3. ஒரு ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழலா?
பதில்: இதைத்தான் வேறு வழியே இல்லை என்பது. திமுக ஆட்சி இப்போது போக வேண்டியது. இது பற்றி நான் போட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன், “ஒரு பக்கம் அதிமுக கூட்டணி, மறு பக்கம் ஆளும் திமுக கூட்டணி. இரு கூட்டணிகளிலும் உள்ள பிரதான கட்சிகள் இரண்டிலுமே பல குறைகள் உண்டு. இரு கட்சிகளுமே ஆட்சி செய்துள்ளன. 1991 முதல் மாற்றி மாற்றித்தான் அவை ஆட்சி புரிந்துள்ளன. ஆளும் கட்சி ஜெயிப்பது கடந்த இருபது வருடங்களில் குறைந்த பட்சம் பொது தேர்தல்களில் இல்லை”.

1991-96-ல் அதிமுக ஆட்சி அதனுடைய அடாவடி போக்குக்காகவே மக்களால் தோற்கடிக்கப்பட்டது என்பது காலத்தின் கட்டாயம். 1996-2001-ஆட்சியில் ஒப்பீட்டு அளவில் திமுக நல்ல முறையிலேயே ஆட்சி செய்தாலும், கூட்டணி கணக்கில் 2001-ல் தோற்றது. அதே போல 2001-06 அதிமுக ஆட்சியும் ஒப்பீட்டு முறையில் நல்ல முறையிலேயே ஆட்சி தந்தாலும் அதே கூட்டணி கணக்கில் ஆட்சியை கோட்டை விட்டது. ஆனால் 2006-11 திமுக ஆட்சி 1991-96 அதிமுக ஆட்சியையே நினைவுபடுத்துகிறது.
அதற்காகவே அது போக வேண்டும் என்பது மீண்டும் காலத்தின் கட்டாயமே”.

கேள்வி-4. கலக்கிய தேர்தல் கமிஷன்... கலங்கிய கட்சிகள்...!
பதில்: சேஷன் சந்தோஷப்படுவார்.

கேள்வி-5. அலிக்கு உதவிய கவர்னர் ராஜினாமா?
பதில்: ஆக அலிக்கு உதவியது கவர்னர். அவரது ராஜினாமா அல்ல அப்படின்னு சொல்லலாமா?

கேள்வி-6. தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை ஜெயலலிதா எடுத்துக் கொண்டாரா? கலைஞர் கேள்வி.
பதில்: கலைஞர் சொன்னது “ஆற்றிலே வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போன ஒருவன் "உலகம் போச்சு உலகம் போச்சு'' என்று குரல் கொடுக்க அவனைக் காப்பாற்றி "என்னப்பா உலகம் போச்சு என்று குரல் கொடுத்தாயே'' என்று கேட்டபோது "நீங்கள் என்னை காப்பாற்றா விட்டால் என்னை பொறுத்தவரையில் உலகம் போயிருக்கும் அல்லவா, அதனால் தான் அப்படி கத்தினேன்''என்றானாம். அதைப்போல அம்மையாருக்கும் வேறு வழி எதுவும் தெரியாததால் ஏதேதோ குரல் கொடுத்துப்பார்க்கிறார்”, கலைஞருக்கும் பொருந்தும் போலிருக்கிறதே.

கேள்வி-7. பழ. நெடுமாறன் மீது கலைஞர் வழக்கு
பதில்: அவதூறு வழக்கில் பிரதிவாதிக்கு இருக்கும் ஒரு டிஃபன்ஸ் தான் கூறியது உண்மை என கூறுவதாகும். அது நெடுமாறன் விஷயத்திலும் நடக்கும் என நினைக்கிறேன்.

கேள்வி-8. கலைஞர் ஓய்வெடுக்கும் ரிசார்ட்டில் ஸ்டாலின் ஓய்வு
பதில்: என்ன செய்வது, கலைஞரது சீட்டில்தான் அமர இயலவில்லை, ரிசார்ட்டிலாவது ஓய்வெடுப்போம் என்றிருக்கிறாரோ என்னவோ.

கேள்வி-9. இருட்டுக்கடை அல்வா என்ற பெயரில் வேறு யாரும் கடை நடத்த தடை: நெல்லை கோர்ட்
பதில்: “இப்போதான் கரண்டு நாள் பூரா இருக்கறது இல்லையே. அப்போ கரண்டு இல்லாத கடையில் பகலிலும் இருட்டுல அல்வா பண்ணி இருட்டுக் கடை அல்வா என்று வித்தாத் தப்பா என்ன? வேணும் என்றால் வித்தா அதை பகலிருட்டுக் கடை அல்வா என்று போட்டுக்க இட்லிவடை சிபாரிசு செய்கிறது”.
இதுவும் நல்லாத்தானே இருக்கு! நன்றி, இட்லிவடை?

கேள்வி-10. தமிழ் பெண்களின் கற்பு குறித்து பேட்டி: நடிகை குஷ்பு மீதான வழக்கு ஒத்திவைப்பு
பதில்: இன்னுமா ரப்பர் மாதிரி இக்கேசை இழுக்கிறார்கள்?


Arun Ambie
கேள்வி-11. காந்திநகர் நகராட்சித் தேர்தலில் காங்கிரசு வென்று விட்டதாம். இது மோடிக்கு பின்னடைவு, மரண அடியின் முதல் படி என்று கொக்கரிப்போர் பற்றி....
Yet, மோடி சற்றே introspect செய்வதில் தவறில்லை என்பது குறித்த உங்கள் பார்வை??

பதில்: 18:15 பெரிய மார்ஜின் இல்லைதான், இருப்பினும் மோதி அவர்கள் இதை அவதானம் செய்வது நலம்.

கேள்வி-12. மறுஜென்மத்தை ஏற்றாலும் அதை மறுபதிப்பு என்று சொல்லி மீசையில் மண் ஒட்டவில்லை என்று இறும்பூது எய்தும் போலி பகுத்தறிவு ஜென்மங்கள் பற்றி உங்கள் கருத்து என்னவோ?
பதில்: எதைச் சொல்கிறீர்கள்? ராஜராஜ சோழனின் மறுபதிப்புத்தான் கலைஞர்னு ஒரு பதிவர் சொன்னதையா? அவர் சுந்தரசோழன் என எழுத்தாளர் பாரா குறிப்பிட்டுள்ளாரே? பாவம், வந்தியத்தேவனைத்தான் யாருமே கண்டுகொள்ளவில்லை.

thenkasi:
கேள்வி-13. மறுஜென்மம் பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
பதில்: ஒரு சராசரி இந்துவுக்கு இது பற்றி உள்ள எல்லா நம்பிக்கைகளும் எனக்கும் உண்டு.

கேள்வி-14. மானிட இனத்தில் இறப்புக்குப் பின்னால் உயிர் செல்லும் இடம் யாது?
பதில்: எமபுரிக்குச் செல்லும் வழியில் உள்ள வைதரணி நதிக்கரைக்கு உயிர் செல்லும் என கருட புராணக் கூறுகிறது. மேலதிகத் தகவல்களுக்கு, இங்கு பார்க்கவும்.

கேள்வி-15. மனித உடலில் உயிர் பிரிந்தபின் உடலின் எடை 5 கிலோ குறைகிறதாம்-அப்படியென்றால் ஆத்மா பற்றிய நம்பிக்கை சரிதானே?
பதில்: இதை யாராவது வெரிஃபை செய்து பார்த்திருக்கிறார்களா? பரிசோதனை எந்தச் சுழ்ழ்நிலையில் நடத்தப்பட்டது, ஆகிய அடிப்படை கேள்விகளுக்கு பதிலிருந்தால் மேலே பேசலாம்.

கேள்வி-16. இப்பிறவியில் சரியில்லாமல் நெறிமுறை தவறி வாழும் மனிதர்களில் சிலர் செல்வச் செழிப்போடு ஆனந்தமாய்,ஆர்ப்பாட்டமாய் வாழ்வதற்கு காரணம் அவர்கள் போன பிறவியில் செய்த நற்செயல்களா?
பதில்: அப்படித்தான் இந்து மதம் கூறுகிறது. நானும் நம்புகிறேன்.

கேள்வி-17. முந்தையக் கேள்வியில் சொல்லப்டும் நபர்களில், உடன் உங்கள் கவனத்துக்கு முதன்மையாய் வருவது யார்?
பதில்: ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின்னு சொல்லிட்டா உண்மைக்கு உண்மையும் ஆச்சு, ஆட்டோவும் வீட்டுக்கு வராது. எப்புடீ?

18. வாழும் யோகிகளில் யோக்கிமானவர் யார்?
பதில்: தெரியாது.

19. யோகக் கலை பற்றிய ஆர்வம் ஏகமாய் பரவுதன் காரணம் மன அழுத்தமா?
பதில்: அதுவும் ஒரு காரணமே.

20. எல்லாம் பிரம்மம் எனும் எண்ணம் மக்களுக்கு முழுமையாய் வந்துவிட்டால்?
பதில்: அசோகருக்கு பிறகு அவரது குடிமக்களுக்கு சாத்வீக எண்ணங்கள் நிரம்பிச் செல்ல, அன்னிய நாட்டுப் படையெடுப்பில் அவர்கள் லோலுப்பட வேண்டியிருந்தது. வெவ்வேறு எண்ணங்களும் செயல்பாடுகளும் இருந்தால்தான் நாடு நாடாக இருக்கும்.

21. கடவுள் பெருமாள் உங்கள் முன்னால் காட்சி தந்தால் என்ன வரம் கேட்பீர்கள்?
பதில்: இருக்கும்வரை கைகால்கள், மனம், மூளை ஆகியவை செயலாக இருந்து, பிறருக்கு உபத்திரவம் தராது, இறப்பதற்கு முந்தையக் கணம் வரை எனது தொழிலில் நன்கு உழைக்கும் பேறு வேண்டும் எனக் கேட்பேன்.

கேள்வி-22. வேற்று கிரக இறந்த மனிதன் பற்றிய பிரபல வீடியோ பற்றி உங்கள் கருத்து?
இந்த வீடியோவையா குறிப்பிடுகிறீர்கள்? கருத்து ஏதுமில்லை.

ரமணா
மே 13 அன்று
கேள்வி-23.அதிமுக ஆட்சிக்கு வந்தால்?

பதில்: தமிழகத்தின் இப்போதையத் தேவை நிறைவேறும்.

கேள்வி-24. திமுக ஆட்சி தொடர்ந்தால்?
பதில்: தமிழகத்துக்கு கஷ்டகாலம் தொடரும்.

கேள்வி-25. ஜெயலலிதாவின் பெங்களுரு சொத்து குவிப்பு வழக்கு அவருக்கு பாதகமாய் அமைந்தால்?
பதில்: நீதிக்கு ஜெயம்.

கேள்வி-26. பாமக, வி.சி ஜெயலலிதா அணி மாறினால் என்ன சொல்லி சமாளிப்பார்கள்?
பதில்: ஏற்கனவேயே இவ்வாறு செய்தபோது என்ன சொன்னார்களோ அதையே சொல்லிவிட்டு போகிறார்கள். எல்லாமே ஒரு மட சம்பிரதாயம்தானே.

கேள்வி-27. கருணாநிதி என்ன அறிக்கை விட்டு சாடுவார்?
பதில்: மேலே சொன்னதுபோல ஏற்கனவேயே கூறியதைத்தான் சொல்லுவார்.

அதிமுக,காங் கூட்டணி ஆட்சி வந்தால்
கேள்வி-28. கம்யூனிஸ்டுகள் என்ன சொல்லி திட்டுவார்கள்?

பதில்: விவஸ்தை கெட்ட நம்மூர் அரசியலில் யார் எதை வேண்டுமானாலும் கூறலாம். கம்யூனிஸ்ட்களும் அவ்வாறே.

கேள்வி-29. இலங்கைப் பிரச்சனை சூடு தணியுமா?
பதில்: தணியாது.

கேள்வி-30. மீனவர் பாதுகாப்பு என்னவாகும்?
பதில்: தமிழக அரசு, இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியவை கூடிப்பேசி சரி செய்ய வேண்டிய பிரச்சினை இது. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக கோஸ்ட் கார்ட் ஹெலிகாப்ப்டர்கள் மேலா ரோந்துப் பணியில் இருப்பது அவசியம். அதெல்லாம் செய்யாமல் போனால் மீனவர்கள் பாதுகாப்பு சந்தேகமே.

கேள்வி-31. வைக்கோ?
பதில்: அவரே அது பற்றி இன்னும் யோசிக்கவில்லை என நினைக்கிறேன்.ர்

கேள்வி-32. விஜயகாந்த்?
பதில்: ஆட்சியில் பங்கு கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பொருத்துத்தான் அவர் பேசுவது அமையும்.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.கனிமொழியை கட்சியின் தொண்டர் என்கிற முறையில்தான் பார்க்கிறேன்-- திமுகவின் தலைவர்-கலைஞர்
2.சோதனைகளை உரங்களாக்கி வெல்லும் தி.மு.க.--திகவின் தலைவர் கி. வீரமணி
3.மே தின விழாவை ஒருவார காலத்துக்கு
கொண்டாடுங்கள் --தேமுதிகவின் தலைவர்விஜயகாந்த்

4.இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க இந்தியா முன்வரவேண்டும்-அதிமுகவின் தலைவர் ஜெயலலிதா
5.காங்கிரஸ் மீது வருத்தம்,பத்திரிகைகள் மீது கோபம்,கனிமொழியைக் காப்பாற்றுவது கட்சியைக் காப்பாற்றுவதாகும்-திமுக உயர்நிலைக் குழு செயல் திட்டக் குழு கூட்ட நிகழ்வுகள்.

ரமணா said...

1.சோ அவர்களின் ஜெய டீவி பேட்டி-0630 pm -dated 28-4-2011-

கனிமொழியின் மேல் சிபிஐயின் குற்றச்சாட்டு பலவீனமானதாமே-இவ்வளவு சலுகை செய்யும் காங்கிரசை குற்றம் சாட்டும் திமுகவின் நிலையை பார்த்தால் என்ன சொல்லத் தோன்றுகிறது?
2.கருணாநிதியின் நடிப்பை இன்னும் நம்பும் அப்பாவி திமுக தொண்டன் நிலை?
3. வியாபார ரீதியில் பொன்னர் சங்கரும் இன்னுமொரு இளைஞனா?
4.குரங்கு ஆப்பை புடுங்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்ற நிலை பற்றி?
4.தினகரன்,தினத்தந்தி,குங்குமம்,
முரசொலி,நக்கீரன், த ரைசிங் சன்,சன் டீவி குழும சேனலகள், கலைஞர் டீவி குழும சேனல்கள் ( இந்து ராமின் ஆதரவு)-75 % மேல் ஊடக ஆதரவை வைத்துக் கொண்டு யாரை கலைஞர் சாடுகிறார்?
5.சோவின் கணிப்புபடி திமுக மோசமாய் தோற்றால்-முதல் வசவு,திட்டு,சபித்தல் யாருக்கு?

Prakash said...

Some Good news, Post Poll Survey done by India Today & Headlines Today predicts DMK Win in the Assembly election (130+ seats). In today’s (28th April) HT news at 6:00 pm same was broadcasted..

The same group said ADMK will win in their Pre Poll Survey, now they seem to change their stand to save their face when the election results are out by May 13th.

http://indiatoday.intoday.in/site/story/post-poll-survey-karunanidhi-gains-jayalalitha-slips-in-tamil-nadu/1/136557.html

வஜ்ரா said...

வாய்ப்பு கிடைக்காதவர்களின் வயித்தெரிச்சலைத் தான் கற்பு என்று அழைப்பதாக பட்சி சொல்லுது. அதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஞாஞளஙலாழன் said...

---------------------------
இப்பிறவியில் சரியில்லாமல் நெறிமுறை தவறி வாழும் மனிதர்களில் சிலர் செல்வச் செழிப்போடு ஆனந்தமாய்,ஆர்ப்பாட்டமாய் வாழ்வதற்கு காரணம் அவர்கள் போன பிறவியில் செய்த நற்செயல்களா?
----------------------------

இதில் என்ன நியாயம் இருக்கிறது? போன பிறவியில் நாம் என்ன செய்தோம் என்று இந்த பிறவியில் தெரிவதில்லை. ஆக இந்த பிறவியில் நல்லது செய்கிற ஒருவன் துன்பப்படுவதற்குக் காரணம் போன பிறவியில் அவன் செய்த தீயச் செயல்களே என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

baleno said...

இலங்கைப் பிரச்சனை சூடு தணியுமா?
டோண்டு: தணியாது.

டோண்டு சரியாக சொன்னார். இலங்கையில் சூடு தணியந்து விட்டால் உலகத்திலேயே மிக சிறந்த தன்நிறைவு அடைந்த பிரதேசமான இந்தியாவின் தமிழ்நாட்டில் அரசியல் என்னாவது? மிகவும் டல்லாயிடும். தினமணி, ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகளுக்கும் வேறு பிரச்சனை தமிழ்நாட்டில் கிடைக்காது போய்விடும்.
இலங்கை தமிழர்களின் ஒரு இணையதளம் எழுதுகிறது இந்தியாவின் தமிழகம் ஈழத்தமிழர்களுக்கு வாய்கரிசி போடவே விரும்புகிறது.
உண்மையை தவிர வேறு இல்லை.

hayyram said...

//வாய்ப்பு கிடைக்காதவர்களின் வயித்தெரிச்சலைத் தான் கற்பு என்று அழைப்பதாக பட்சி சொல்லுது. அதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?// கள்ளத்தொடர்பு கசப்புக்களை தவிர்ப்பதற்கே கொண்டுவரப்பட்ட சமூகக் கட்டுப்பாடு கற்பு. எந்த ஆணும் தன் மனைவி இன்னொருவருடன் உறவு கொள்வதை விரும்புவதில்லை. தான் நேசிக்கும் ஆண் தன்னை விட இன்னொரு பெண்ணை நேசிக்கும் துரோகத்தை எந்தப் பெண்ணும் ஜீரணிப்பதில்லை. இந்த கசப்புணர்வை தவிர்க்கவே பென்ணுக்கு கற்பும் ஆணுக்கு பிறன் மனை நோக்கா பேராண்மையும் வலியுறுத்தப்படுகிறது. இது ஒரு சமூகக் கட்டுப்பாடு. இதை மீற விரும்பினால் பக்கத்து வீட்டு அவலம் நாளை அவரவர் வீட்டிலும் நடக்கும். ஜீரணிக்கத் தயாரானவர்கள் கற்பு என்கிற கான்ஸெப்டை வெறுக்கலாம். பிறன் மனை நோக்காமல் இருக்கும் கட்டுப்பாட்டை மீறலாம். செய்தித்தாளில் அவர்கள் குடும்ப கோரம் சிரிக்காதவரை!

வஜ்ரா said...

//
பென்ணுக்கு கற்பும் ஆணுக்கு பிறன் மனை நோக்கா பேராண்மையும் வலியுறுத்தப்படுகிறது
//

ஏன் ஆணுக்கு கற்பும் பெண்ணும் பிறன் மனை நோக்கா பேர்பெண்மையும் வலியுருத்தக்கூடாது ?

hayyram said...

//ஏன் ஆணுக்கு கற்பும் பெண்ணும் பிறன் மனை நோக்கா பேர்பெண்மையும் வலியுருத்தக்கூடாது ?// ரெண்டும் ஒன்னு தான் சார், உங்களுக்கு பிடிச்சிருந்தா மாத்தி போட்டுக்கோங்களேன். அந்த காலத்தில ஆண்பால் பெண்பால் என்ற வேறு பாடு தெரிவதற்காகவே எல்லாவற்றிற்கும் ரெண்டு விதமா பேர் வெச்சாங்க. மாடுன்னா எல்லாம் ஒன்னுதான். ஆன்மாட்டை காளை என்றும் பெண் மாட்டை பசு என்றும் கூப்பிடவில்லையா. அது போல. அதனால் இப்படி பேர் வெச்சிருப்பாங்க. நீங்க மாத்தித் தான் வெச்சுக் கோங்களேன் யாருக்கு நஷ்டம். குதர்கம் பன்றது தான் பகுத்தறிவு நாகரீகம்னு கத்துக்கொடுத்துட்டாங்க. அதுக்கு நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது