8/04/2011

டோண்டு பதில்கள் - 04.08.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. மக்களாட்சியில் வாக்குச் சீட்டுகள் மக்களின் மனசாட்சியாக இருக்கின்றன என்பதற்கு இலங்கை உள்ளாட்சித் தேர்தல் மற்றொருமுறை உலகுக்குக் கட்டியம் கூறியுள்ளது.

பதில்: மக்களாட்சியின் பலமே அதுதான். அம்மாதிரி பலம் தம்மிடம் இருப்பதை மக்கள் மறப்பதுதான் அதன் பலவீனமும் கூட.

கேள்வி-2. ஆ. ராசாவின் உத்தரவுப்படியே நடந்தேன்: சித்தார்த்த பெகுரா
பதில்: ராசா சொன்னதை சித்தார்த்த பெகுரா செய்தார். தனக்கு முந்தியவர்கள் செய்ததை ராசா செய்தார். சோனியா சொல்வதைத்தான் மன்மோகன் செய்வார். இப்படியேதான் சொல்லிக் கொண்டு போவதை ஆங்கிலத்தில் அழகாக paasing the buck என்பார்கள்.

அமெரிக்க குடியரசுத் தலைவர் அலுவலக மேஜை மேல் the buck stops here என்ற வாசகம் கொண்ட அட்டை இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். அம்மாதிரி இங்கும் வந்தால் தேவலை.

கேள்வி-3. சமச்சீர் கல்வியில் ஜெயலலிதாவுக்கு அக்கறை அதிகம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வாதம்
பதில்: ஜெயலலிதா கூறுவது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆயினும் செய்த முறையில் சில சொதப்பல்கள் வந்து விட்டன.

கேள்வி-4. எடியூரப்பா குடும்ப அறக்கட்டளைக்கு சட்ட விரோதமாக ரூ.30 கோடி நன்கொடை: சந்தோஷ் ஹெக்டே
பதில்: எடியூரப்பாவால் பாஜகாவுக்கு சங்கடமே.

கேள்வி-5. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக
பதில்: இருந்தால் இரு இல்லாவிட்டால் போ என ஒருவரிடம் கூறிய பிறகு, வேறு வழியின்றி அவர் போவது போலத்தான் இந்தச் செய்கை உள்ளது. அது இருக்கட்டும், பாமக கொ.ப.செ பதிவர்கள் இன்னும் பம்முகிறார்களே என்ன சமாச்சாரம்?

காங்கிரஸ் திமுக கூட்டணியில் திமுகவுக்கும் இதே நிலைதான். என்ன செய்வது, அதுதான் அரசியல்.

கேள்வி-6.கடந்த சில மாதங்களாக விவாதப் பொருளாக இருந்துவந்த திருப்பூர் சாய ஆலைக் கழிவுநீர் பிரச்னைக்குக் கடைசியாக ஓர் இணக்கமான தீர்வு காணப்பட்டுள்ளது.
பதில்: தமிழக அரசுக்கு பாராட்டு, மோதியின் குஜராத்துக்கு நன்றி. தினமணியின் மேலதிக ஆலோசனைகளைப் பரிசீலனை செய்வது அவசியம்.


கேள்வி-7. மூன்றாவது அணி: பா.ம.க. முடிவுக்கு திருமாவளவன் ஆதரவு
பதில்: எந்த மாதிரி ஆதரவாம்? தான் வெளியில் திமுக கூட்டணியில் இருந்துகொண்டு பாமகாவுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் நிலைக்கு செல்ல மாட்டார் என நம்புவோமாக.

கேள்வி-8. ஆகஸ்ட் 18-லிருந்து லாரி ஸ்டிரைக்
பதில்: கோரிக்கைகளில் வலு இருப்பதாகத் தோன்றுகிறது.

கேள்வி-9. மாநில அதிகாரத்தைப் பறிப்பதா?: மத்திய அரசின் மசோதாவுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு
பதில்: ஆட்சியில் இருந்தால் ஆர்டிகிள் 356-க்கு விரோதம், எதிர்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சிக்கு எதிராக அதை பிரயோகம் செய்ய ஆதரவு, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

கேள்வி-10. ஆற்றல், அறிவினை வளர்க்க துணை புத்தகங்கள் மட்டுமே: அமைச்சர் கே.வி.ராமலிங்கம்
பதில்: ஆகவே அவற்றைத் தெரிவு செய்வதில் கவனம் தேவை.

கேள்வி-11. ரூ.22 கோடியில் ஏரி, கால்வாய் புனரமைப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
பதில்: நல்ல விஷயம்தானே, ஆனால் இந்த நடவடிக்கைகள் டூ லேட் என நினைக்கிறேன்.

கேள்வி-12. காங்கிரஸ் கட்சியினருக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும். 
பதில்: கருணாநிதி இப்படிச் சொல்லித்தான் தன்னைத் தானே தேற்றிக் கொள்ளோணும்.

கேள்வி-13. அமெரிக்க கடன் உச்சவரம்பு விவகாரம்: குழப்பம் நீடிக்கிறது
பதில்: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என அமெரிக்கா புலம்பும் நிலையில்தான் உள்ளது.

கேள்வி-14. 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் வங்கிகளாக மாற்றப்படும்: கபில் சிபல்
பதில்: நடக்குமா? வங்கி நடத்தத் தேவையான மனப்பக்குவம் தபால் நிலையங்களுக்கு வருமா?

சாதாரண தபால் சேமிப்புக் கணக்குகளில் கையெழுத்து சரியில்லை என தாங்கள் பெர்சனலாக அறிந்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் கூட அரசு அதிகாரத்தனமாக அவர்கள் செய்யும் அலம்பல் அதிகமே என பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். இப்போது மாறியிருந்தால் யாராவது சொல்லுங்கப்பூ.

கேள்வி-15. எதிர்க்கட்சிகளும் யோக்கியமில்லை: பிரதமர்
பதில்: அது சரி, அரசியலில் யார்தான் யோக்கியம்? இப்போ ஆட்சியிலே இருக்கிறவங்களைப் பற்றி பேசுங்கப்பூ.

கேள்வி-16. கருணாநிதி மீது வழக்கு ஏன்..? கலைஞர் குடும்பம் கலக்கம்
பதில்: பின்னே என்ன கொஞ்சுவாங்களாமா?

கேள்வி-17. பிரதமரையும் விசாரிக்க மக்கள் ஆதரவு:மாதிரி ஓட்டெடுப்பில் பரபரப்பு முடிவு
பதில்: பிரதமரை விசாரிப்பிலிருந்து விலக்குவது என்பது அரசியல் நிர்ணயச் சட்டத்தின் கோட்பாட்டுக்கே விரோதமானது.

கேள்வி-18.  ஏ.டி.எம்., மிஷின் அலேக்:நூதன திருடர்கள் கைவரிசை
பதில்: அதற்காகத்தான் நான் ஏடிஎம்மே வேண்டாமென்று இருக்கிறேன்.

கேள்வி-19. அப்பாவி தமிழ் மக்களை கொன்றது உண்மைதான்: இலங்கை
பதில்: சிவில் வார் என்று வரும்போது கூடுதல் இழப்புகள் (collateral damages) வரத்தான் செய்யும்.

கேள்வி-20. ஆம்னி பஸ்களுக்கு ஈடுகொடுக்கத் திணறும் அரசு விரைவு பஸ்கள்
பதில்: ஆம்னி பஸ்களுக்கு உரிய அனுமதி வழங்கி, ரெகுலரைஸ் செய்ய வேண்டும்.

ஆனால் அவை கூட பிரயாணிகளை திராட்டில் விடுகின்றன. அரசு பஸ்களிலோ சீட்டில் ஆணிகள் உடைகளைக் கிழிக்கின்றன.


மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

24 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.ஜெயலலிதாவின் திட்டத்திற்கு கருணாநிதி வரவேற்பு
2.விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் : முதல்வர் ஜெ., பேட்டி
3.ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்'
4.அதிகம் பால் கொடுக்கும் வெளிமாநில கலப்பின பசு இறக்குமதி : ஒரு பசு ரூ.30,000
5.கைதாகாமல் தவிர்க்க "வாஸ்து' உதவியை நாடிய நேரு

BalHanuman said...

? மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் தி.மு.க. இடம்பெறவில்லையே ஏன்?

? பிரணாப் முகர்ஜி கருணாநிதியை வந்து சந்தித்துவிட்டுச் சென்றபிறகு அலைக் கற்றை ஊழல் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் ஒரு தொய்வு விழுந்திருப்பதாகச் சொல்கிறார்களே?

? தி.மு.க வின் தேர்தல் தோல்விக்கு காரணம் முதலில் பார்ப்பன சதி என்றார். பின்னர் கூடா நட்பு என்றார். பின்னர் மீடியா சூழ்ச்சி என்றார். இப்போது தி.மு.க வே தான் காரணம் என்கிறார். இப்படி மாற்றி மாற்றி கூறுவதன் காரணம் வயதானதால் ஏற்பட்ட தள்ளாட்டமா ?

?பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுக் குழு / செயற் குழுவில் ஸ்டாலினை முன்னிலைப் படுத்தாததன் காரணம் ?
- ராசாத்தி அம்மாளிடம் உள்ள அச்சம்
- அஞ்சா நெஞ்சனால் ஏற்பட்ட நடுக்கம்
- பதவி மேல் உள்ள ஆசை

BalHanuman said...

ஸ்டாலினுக்கு கோவையில் எதுவுமே கிடைக்க​வில்லையே?


? ஆ.ராசா, கனிமொழி சிறையில் சகல வசதிகளுடன் இருக்கிறார்களா ? அவர்களுக்கு பொழுது எப்படிப் போகிறது ?


? தயாநிதி மாறனின் திஹார் விஜயம் தள்ளிப் போவதன் மர்மம் என்ன ?

? திஹார் சிறை கண்ட தியாகி கனிமொழி மத்திய அமைச்சராக வாய்ப்பு உள்ளதா ?

?மனைவி, துணைவி என்று இந்தக் கிழவர் எத்தனை காலம் தான் ஊரை ஏமாற்றுவார் ?

?தா.கி. வழக்கில் நீதி கிடைக்குமா ? அஞ்சா நெஞ்சன் சிறை புகும் காலம் எப்போது ?

?அண்ணா நகர் ரமேஷ் வழக்கு என்னவாயிற்று ? இதில் தளபதியின் பங்கு என்ன ?

thenkasi said...

இந்தப் பாடல் வரிகளுக்கு டோண்டு பாணி விளக்கம்?

1)நான் பாடும் மெளன ராகம் கேட்க்கவில்லையா


2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு


3) வானைத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்


4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......


5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........

..
6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........


7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........



8)என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா



9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......


10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா...........

thenkasi said...

? மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் தி.மு.க. இடம்பெறவில்லையே ஏன்?

கொடுத்தவனே எடுத்துக் கொண்டானடி

? பிரணாப் முகர்ஜி கருணாநிதியை வந்து சந்தித்துவிட்டுச் சென்றபிறகு அலைக் கற்றை ஊழல் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் ஒரு தொய்வு விழுந்திருப்பதாகச் சொல்கிறார்களே?

ஹாப்பி இன்று முதல் ஹாப்பி



? தி.மு.க வின் தேர்தல் தோல்விக்கு காரணம் முதலில் பார்ப்பன சதி என்றார். பின்னர் கூடா நட்பு என்றார். பின்னர் மீடியா சூழ்ச்சி என்றார். இப்போது தி.மு.க வே தான் காரணம் என்கிறார். இப்படி மாற்றி மாற்றி கூறுவதன் காரணம் வயதானதால் ஏற்பட்ட தள்ளாட்டமா ?

நீங்கள் அத்துணை பேரும் உத்தமர்தான சொல்லுங்கள்

?பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுக் குழு / செயற் குழுவில் ஸ்டாலினை முன்னிலைப் படுத்தாததன் காரணம் ?
- ராசாத்தி அம்மாளிடம் உள்ள அச்சம்
- அஞ்சா நெஞ்சனால் ஏற்பட்ட நடுக்கம்
- பதவி மேல் உள்ள ஆசை

அச்சம் என்பது மடமையாட அஞ்சாமை திராவிடர் உட‌மையடா

thenkasi said...

BalHanuman said...

ஸ்டாலினுக்கு கோவையில் எதுவுமே கிடைக்க​வில்லையே?

நாளை நமதே ! நாளை நமதே ! நாளை நமதே !

? ஆ.ராசா, கனிமொழி சிறையில் சகல வசதிகளுடன் இருக்கிறார்களா ? அவர்களுக்கு பொழுது எப்படிப் போகிறது ?

கடவுள் ஏன் கல்லாணன் மனம் கல்லாய் போன மனிதர்களாலே!
? தயாநிதி மாறனின் திஹார் விஜயம் தள்ளிப் போவதன் மர்மம் என்ன ?

நடக்கும் என்பார் நடக்காது ! நடக்காதென்பர் நடந்துவிடும் !

? திஹார் சிறை கண்ட தியாகி கனிமொழி மத்திய அமைச்சராக வாய்ப்பு உள்ளதா ?

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா?

?மனைவி, துணைவி என்று இந்தக் கிழவர் எத்தனை காலம் தான் ஊரை ஏமாற்றுவார் ?

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்கடா !

?தா.கி. வழக்கில் நீதி கிடைக்குமா ? அஞ்சா நெஞ்சன் சிறை புகும் காலம் எப்போது ?

சத்தியம் நீயே தர்மத்தாயே தெய்வமகளே!

?அண்ணா நகர் ரமேஷ் வழக்கு என்னவாயிற்று ? இதில் தளபதியின் பங்கு என்ன ?

தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று

BalHanuman said...

டோண்டு ஸார்,

இந்த வாரம் உங்களை விடுவதாக இல்லை.

இதோ மேலும் சில கேள்விகள்....

? சிகிச்சைக்கு அமெரிக்கா போன சோனியா பொறுப்பை ராகுல் காந்தியிடம் கொடுக்கிறார்.. ஆனால் இந்தக் கருணாநிதி ஸ்டாலினுக்கு அல்வா தவிர வேறு எதுவும் கொடுப்பதாகத் தெரியவில்லையே ?

? ஜாபர் சேட்டுக்குப் பரிந்து பேசும் கருணாநிதி "இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவரான ஜாபர் சேட்" என்று புலம்ப ஆரம்பித்துள்ளார். இந்த ஆள் திருந்தவே மாட்டாரா ? தலித் என்ற அடை மொழி கொடுத்து ஆ.ராசவைக் காப்பாற்ற முயன்றவர் தானே இவர் ?

? ஜூனியர் விகடனில் வெளியாகி உள்ள கருணாநிதி குடும்பத்தின் சொத்து விவரங்களைப் பார்த்தீர்களா ? சொக்கா... கண்ணைக் கட்டுதே.....

?அஞ்சா நெஞ்சனிடம் இருந்து மதுரையை மீட்க முடியுமா ?

? சென்னை ‘போட் கிளப்’ ஏரியாவில் கலாநிதி அண்ட் பிரதர் அந்த ஏரியாவையே வளைத்துப்போட்டு எழுப்பியிருக்கும் மாபெரும் காம்பௌண்ட் சுவர் பற்றி உங்கள் கருத்து ?

ezhil arasu said...

மகாப் பெரியவர் கேள்வி பதில் சூப்பர் ஸ்டார் டோண்டுவின் பதில் என்ன தன்மானத் தலைவரின் வீர முழக்கத்திற்கு?‍
இல்லை வழக்கம் போல் நீண்ட மெளனமா?


"தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது' : கருணாநிதி ஆவேசம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட தி.மு.க., சார்பில், தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவதைக் கண்டித்து, திருவாரூர் தெற்கு வீதியில் கண்டனப் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி பேசியதாவது: திருவாரூரில் இன்று நடைபெறும் இந்த கூட்டம், மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் மீது, "ஜெயா' அரசு போட்டுள்ள பொய் வழக்கை கண்டித்து நடைபெறும் கூட்டமாகும். பொய் வழக்குகள் இந்த ஆட்சியில் வேக வேகமாக தொடரப்பட்டு, கட்சி மாவீரர்களை சாய்த்துவிடலாம் என்ற எண்ணிக் கொண்டு நடத்தும் அராஜகத்துக்கு பதிலடிக்கொடுக்க அல்ல. நாம் அதை எப்படி பார்க்கிறோம் என்பதை எடுத்துச் செல்ல நான் பயன்படுத்த விரும்புகிறேன். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடந்த காலத்தை, இன்று, தி.மு.க., ஆட்சியை தோற்கடித்துவிட்டு, நடைபெறும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை தயவு செய்து ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். பொய் வழக்கை கண்டிக்கிறோம் என்று சொன்னார்கள். இது பொய் வழக்கு மாத்திரம் அல்ல. இந்த வழக்குகள் அராஜக வழக்குகளாகவும் இன்றைக்கு தொடரப்படுகின்றன.

ezhil arasu said...

பூண்டி கலைவாணன் மீது, 3 வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன. முதல் வழக்கு தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினோடு அவர் சென்றார் என்பதுக்காக; 2வது வழக்கு அவருடைய பொறுப்பின்மையால் ஒரு மாணவர் இறந்து விட்டார் என்ற ஜோடிக்கப்பட்ட கற்பனையான ஒரு வழக்கு. சமச்சீர் கல்வியை ஆதரிக்கும் போராட்டம் நாடு முழுவதும் இன்று நடக்கிறது. அதிலே தன்னை ஒப்படைத்துக் கொண்ட மாணவன். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தோழரின் மகன். லாரி விபத்தில் சிக்கி இறந்து போனான். இறந்து போன சிறுவனின் சடலத்தை எடுத்து வைத்துக் கொண்டு, இது விபத்தல்ல, தி.மு.க., செயலாளர் தூண்டுதல் தான் காரணம் என்ற கூறி அதற்கு ஒரு வழக்கு. எங்கே இதிலும் ஜாமீன் பெற்றுவிடுவார்கள் என்ற சந்தேகத்தில் அழுத்தம் திருத்தமாக, "ஆப்பு' அடிக்க வேண்டும் என்ற மூன்றாவதாக என்ன வழக்கு போடலாம் என்ற யோசித்து பார்த்து, குண்டர் சட்டம் ஏவினர். கலைவாணனை பார்த்து மற்றவர்கள் பயப்பட வேண்டும். தி.மு.க.,வை வெறுக்க வேண்டும். அதன் காரணமாக கட்சி பலவீணப்பட வேண்டும் என்பதற்காக குண்டர் சட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். மறைந்த நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஞாபகத்தில் வருகிறார். அவருடைய பெயரை தான் கலைவாணனுக்கு வைத்தேன். "நீங்கள் தான் இந்த பெயர் வைத்தீர்கள்' என்பார். "நான் பெயர் வைத்த பாவம் நீ இன்று குண்டர் சட்டத்தில் அடைபட்டுள்ளாய்' என்று வருத்தப்பட்டுள்ளேன். குண்டர் சட்டம் பயன்படுத்துவதன் மூலம் நான் பயங்கரமான ஆட்சியை நடத்துகிறேன் பார் என்று ஜெயலலிதா நாட்டிலே இருப்பவர்களுக்கு தெரிவிக்கிறார்.

ezhil arasu said...

இன்றைக்கு அ.தி.மு.க., எந்த வகையில் ஆட்சிக்கு வந்துள்ளது?; என்ன சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளது? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தி.மு.க., ஆட்சியிலேயே ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளார்கள் என்று மேடைக்கு மேடை பேசினர். இதை கேட்டு உங்கள் காதுகள் புளித்துப்போயிருக்கும்.
ஒரு அரசு அதனுடைய செலவினங்களுக்காக, திட்டங்களுக்காக, மக்கள் பிரச்னையை அணுகுவதுக்காக கடன் வாங்கும். 2006ல் அ.தி.மு.க., ஆட்சி நடந்து முடியும் போது, தமிழக அரசின் கடன் சுமை, 57 ஆயிரத்து, 476 கோடியாக இருந்தது. இதை நாம் சுட்டிகாட்டினோம். நாங்கள் நீங்கள் ஏற்றியிருந்த கடனோடு, 2006 - 2011 வரை தி.மு.க., ஆட்சியில், 43 ஆயிரத்து, 898 கோடி ரூபாய் தான். இந்த ஒரு லட்சத்து 1,341 கோடி ரூபாய் பெரிதாக சொன்னார்களே, நம்மை பற்றி புகார் சொன்னார்களே, கேவலமாக பேசினார்களே. தற்போதைய அ.தி.மு.க., ஆட்சியில், 17 ஆயிரத்து, 403 கோடி ரூபாய் கடன் உள்ளது. தி.மு.க., அரசு பெற்ற கடனை பெரிதுபடுத்தி பேசியவர்கள், ஒரு லட்சத்து, 18 ஆயிரம் கோடியாக தமிழக கடன் சுமையை உயர்த்தியிருக்கிறார்கள் என்று எண்ணும் போது, இதை வெட்கக்கேடு என்று சொல்லுவதா? ஆளும், எதிர்கட்சி இணைந்து எவ்வாறு மக்களுக்கு நன்மை செய்யலாம், அதற்கேற்றவாறு எப்படி பட்ஜெட் போடலாம் என்ற அந்த நல்ல நோக்கத்தோடு இருந்தால் தான் வரவு-செலவு திட்டம் மக்களுக்கு போடப்பட்டதாக இருக்க முடியும். அந்த வகையில் தி.மு.க., ஆட்சியில், 99 பங்கு எதிர் கட்சிக்காரர்களுடன் பேசி, எண்ணங்களை பரிமாறிக் கொண்டு பகுத்து தான் பட்ஜெட் போட்டது. அனைத்து கட்சியையும் அழைத்து, பேசி, "டெண்டர்' கோரி இலவச கலர் "டிவி' தந்தோம். ஒரு வேளை, ஓட்டளிக்கும்போது மக்கள் அதை மறந்திருக்கலாம். அது திருவாரூர்காரர்கள் அல்ல. தமிழகத்திலே பல பேர் ஏதோ வரப்போகிறது என்று நம்பி, இல்லாதது, பொல்லாதது சொன்னதை எல்லாம் நம்பி ஏமாந்துள்ளனர். ஒரு கலைவாணனை அடக்கிவிட்டால்... இன்னொரு கலைவாணன் கிடைப்பது கஷ்டம் தான். இருந்தாலும் அந்த கலைவாணன் சிந்துவது ஒரு துளி ரத்தம், அதிலே ஆயிரக்கணக்கான கலைவாணன் வருவார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. சொத்துக்குவிப்பு வாழக்கில் ஜெயலலிதா, 130 தடவை வாய்தா வாங்கியிருக்கிறார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இது "வாய்தா' வழக்கு. குப்பனோ, சுப்பனோ இரண்டு நாள் தவணை கேட்டால் முடியாது வா என்று கையிலே விலங்கு போடும் போலீஸ். 14 ஆண்டு காலம் வாய்தா வாங்கும் ஜெ.,வை விட்டு வைத்துள்ளனர். யார், யாரோ இன்று சிறைபடுகிறார்கள்; தண்டிக்கப்படுகிறார்கள். உயர் ஜாதியில் பிறந்துவிட்ட காரணத்தால் ஒரு அம்மையார் இழுத்தடிக்கிறார்.

ezhil arasu said...

தி.மு.க., திராவிடர் என்ற உணர்வை தமிழகத்தில் ஏற்படுத்தும் ஒரே கட்சி என்பதால் அழிக்கத் துடிக்கின்றனர். பெரியாரால் உருவாக்கப்பட்டு, அண்ணாவால் வளர்க்கப்பட்ட இயக்கம். 3,000 ஆண்டுக்கு முற்பட்ட இனம். தி.மு.க.,வை அழித்தால் தான் நாம் வாழ முடியும் எண்ணும் கூட்டம் தமிழகத்தில் மிச்சம் மீதி இருக்கிறது. நான் எவ்வளவு நாள் இருப்பேன் என்று எனக்கு தெரியாது. இன்றே கூட...? இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது, பட்டுப்போக செய்ய முடியாது. இவ்வாறு கருணாநிதி பேசினார்.


பத்திரிக்கையாளர்கள் மீது பாய்ச்சல் : திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி பத்திரிக்கையாளர்கள் மீது திடீர் தாக்குதல் தொடுத்தார். அவர் பேசியதாவது: இங்கே இருக்கும் பத்திரிக்கையாளர் எல்லோரும் வாயில் கோந்து போட்டு மூடியிருக்கிறார்கள். பேனா முனையை உடைத்து அமர்ந்துள்ளனர். கல்மாடி மீது புகார் என்றால் எடு பேனாவை, கொட்டு எழுத்துக்களை, போடு முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக போடுகிறார்கள். அதேபோல், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் மீது குற்றம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், 20க்கு, 200 ஆக கதைகளை கட்டுகின்றனர். என்ன காரணம். இன்று தமிழகத்தில் இருக்கும் குறிப்பிட்ட வகுப்பினருக்காகவே கூர்தீட்டிக்கொண்டு பேனாவை பயன்படுத்தும் பத்திரிக்கையாளர்கள், நாம் ஒரே மூச்சில் எதிர்ப்பை தெரிவித்தால் தி.மு.க.,வை அழித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.


தமிழகத்தில் வேடிக்கையான வழக்குகள் : ""காலையில், யார் முகத்தில் முழிக்கப்போகிறோம் என்ற சந்தேகத்தில் படுத்து உறங்கச் சென்றால், நாட்டில் அமைதி நிலவுமா?'' என, கருணாநிதி பேசினார். திருவாரூரில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: தமிழகத்தில், வேடிக்கையான வழக்கு சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். திருவாரூர் மாவட்ட செயலர் மீது பொய் வழக்கு தொடரப்பட்ட அதே நாளில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த, தென்சென்னை மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., அன்பழகன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தனர்.
அதேபோல், சேலம் வீரபாண்டி ஆறுமுகம், யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், அவரை, போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகும்படி செய்து, கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்தார். மீண்டும் அவரை கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர். இது என்ன நாடா? இல்லை கரும்புலி வாழும் காடா? காலையில், யார் முகத்தில் முழிக்கப்போகிறோம். இன்ஸ்பெக்டர் முகத்திலா, ஐ.ஜி., முகத்திலா, டி.ஐ.ஜி., முகத்திலா என்ற சந்தேகத்தில் படுத்துறங்க செல்வார்களேயானால்... நாட்டில் அமைதி இருக்குமா? இவ்வாறு கருணாநிதி பேசினார்.

ezhil arasu said...

ஆதிக்க சக்திகளின் ஊதுகுழலாய் பதிவிடும் டோண்டுவின் பரம ரசிகர்கள் பி.டி,ரமணா,தென்காசி இன்னும் மற்றைய பார்பனர் ஆதரவாளர்கள் டோண்டுவின் கொள்கைக்கு அதரவாய் கேள்வி கேட்பதும் பாட்டுக்களை உபயோகிப்பதும் எத்துணை நாள் செல்லும் பார்க்கலாம்.அவருக்கு எதிராய் கேள்வி கேட்டால் கோமாளி,கமெடி பீஸ் என்ன நக்கலடிக்கும் போக்கை நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் போக்கால் தான் ஒரு சமயம் ஒஹோ என இருந்த டோண்டுவின் பதிவு இன்று ஹிட்டுகளெல்லாம் குறைந்து ஒரு சிலரே பார்க்கும் நிலை.
கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்ற நிலைதான் .

thenkasi said...

BalHanuman said...

டோண்டு ஸார்,

இந்த வாரம் உங்களை விடுவதாக இல்லை.

இதோ மேலும் சில கேள்விகள்....

? சிகிச்சைக்கு அமெரிக்கா போன சோனியா பொறுப்பை ராகுல் காந்தியிடம் கொடுக்கிறார்.. ஆனால் இந்தக் கருணாநிதி ஸ்டாலினுக்கு அல்வா தவிர வேறு எதுவும் கொடுப்பதாகத் தெரியவில்லையே ?

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

? ஜாபர் சேட்டுக்குப் பரிந்து பேசும் கருணாநிதி "இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவரான ஜாபர் சேட்" என்று புலம்ப ஆரம்பித்துள்ளார். இந்த ஆள் திருந்தவே மாட்டாரா ? தலித் என்ற அடை மொழி கொடுத்து ஆ.ராசவைக் காப்பாற்ற முயன்றவர் தானே இவர் ?

உள்ளம் எனபது ஆமை அதில் உறங்குவது என்பது ஊமை

? ஜூனியர் விகடனில் வெளியாகி உள்ள கருணாநிதி குடும்பத்தின் சொத்து விவரங்களைப் பார்த்தீர்களா ? சொக்கா... கண்ணைக் கட்டுதே.....

ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு
?அஞ்சா நெஞ்சனிடம் இருந்து மதுரையை மீட்க முடியுமா ?

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை தன் மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
? சென்னை ‘போட் கிளப்’ ஏரியாவில் கலாநிதி அண்ட் பிரதர் அந்த ஏரியாவையே வளைத்துப்போட்டு எழுப்பியிருக்கும் மாபெரும் காம்பௌண்ட் சுவர் பற்றி உங்கள் கருத்து ?

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன‌?

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.தமிழ் ஈழம்தான் நிரந்தர தீர்வு : ராமதாஸ், திருமாவளவன் பேச்சு
7.மும்பை: மூழ்கிய கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு
8.நியூயார்க்கில் சோனியாவுக்காக பிரார்த்தனை
9. அமெரிக்க போர் விமானங்கள் அனுமதியின்றி பிரவேசம்: இலங்கை கண்டனம்
10.2ஜி முறைகேடுகளுக்கு பிரதமரை பொறுப்பாக்க முடியாது: மான்டேக்

RS said...

ezhil arasu said...

//..கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்ற நிலைதான் .//

என்னடா இது நாம மாஞ்சு மாஞ்சு குஞ்சுமணி வேல பாக்கறோம் இந்த ஆளு எல்லா பின்னூட்டத்தையும் அனுமதித்து விட்டு சும்மா இருக்காரே.. என்ன பண்ணலாம்... அதான் எங்க சொ... தலையன் சொல்லி கொடுத்த சொந்த செலவில் சூனியம் இருக்கே, வயத்தெரிச்சல் வாந்தி, அத வந்து எடுத்துட்டு, நக்கிட்டு போவோம்னு வந்து கச்சிதமா நக்கிட்டு போயிருக்கு.

இதுல டோண்டு சார் ஹிட்ட பத்தி பேசுது கூகிலோல குஞ்சுமணி.

குஞ்சு... நீயோ ஒன்னோட சொ.... தலைவனோ இப்படியே வாந்தி எடுத்து நக்கிகிட்டு இருங்க 5 வருஷத்துக்கு. 5 வருஷத்துக்கு அப்புறம் பாக்கலாம் (நானோ, நீங்களோ உயிரோட இருந்தா).

அது வரைக்கும் வாந்தி எடுத்து நக்கறத மட்டும் பண்ணு, ஹிட்டு, கடை பத்தி எல்லாம் கவலை படாத, அத நாங்க பாத்துக்கறோம், சரியா.

ஸ்ரீதர்

ரமணா said...

1. கருணாநிதியின் குடும்பத்தில் அதிக கலக்கத்தில் யார்?
2. வைகை புயல் வடிவேலு ?
3. தேமுதிக தலைவர் விஜயகாந்த்ன் அமைதி?
4. தமிழக அரசின் முதல் பட்ஷட் எப்படி?
5. சென்னை சிங்கப்பூராயிடும் போலுள்ளதே?

dondu(#11168674346665545885) said...

@ரமணா
11-ஆம்தேதிக்கான பதிவு ஃபுல். ஆகவே உங்கள் கேள்விகள் 18-ஆம் தேதிக்கான வரைவுக்கு சென்று விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

pt said...

A STRONG RUMOUR MAIL BEING CIRCULATED IN INTERNET RESPECT OF BLKACK MONEY DEPOSITED IN SWISS BANK.


http://idlyvadai.blogspot.com/2011/08/blog-post_08.html

Simulation said...

உங்களிடம் கேள்வி கேட்பவர்களில் சிலர் கேள்விகளக் "கேள்வி"களாகக் கேட்காமல், வெறும், வாக்கியங்களாக வைக்கின்றார்கள். சில சமயம் வெறும் வாக்கியத்தின் பின் ஒரு கேள்விக்குறி!!! அதனை மற்றவர்களும் பின்பற்றுகிறார்காள்.

உ-ம்

"திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக"

"சமச்சீர் கல்வியில் ஜெயலலிதாவுக்கு அக்கறை அதிகம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வாதம்"

"ஆகஸ்ட் 18-லிருந்து லாரி ஸ்டிரைக்"

இவை கேள்விகளா? இல்லை. எனவே இவற்றை எடிட் செய்து கேள்விகளாக மாற்றிப் பின்னர் பதிலளியுங்கள். இல்லாவிட்டால் கேள்வியும் பதிலும் பயங்கர போரடிக்கின்றது.

- சிமுலேஷன்

dondu(#11168674346665545885) said...

@சிமுலேஷன்
அப்படியில்லை. உதாரணத்துக்கு பிடி என்பவர் “டோண்டு சாரின் ஸ்பெஷல் விமரிசனம்” என்ற ரைடருடனெயே கேள்விகளையே ஆரம்பிக்கிறார்.

ஆகவே ஒவ்வொரு கேள்வியையும் ரீகாஸ்ட் செய்யத் தேவையில்லை.

இன்னொரு விஷயம். எனக்கு ஏதோ விஷயம் தெரியும் அதிகமாக என்றெல்லாம் கேள்வி கேட்கப்படுவதில்லை. இவை எனக்கும் கேள்வி கேட்பவருக்குமிடையே ஒரு உரையாடலை ஏற்படுத்துகின்றன. நான் கூறியது சரியாக இல்லாவிட்டால், அவற்றை மாற்றிக் கொள்ள நான் தயங்கியதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ezhil arasu said...

அதிமுகவின் தலைவிக்கு எழிலரசுவின் நன்றிகள்.அறிஞர் பெருமக்களும் ஆற்றல் மிகு பெரியவர்களும் ஆய்ந்து அறிவித்த சம்ச்சீர் கல்வியினை உச்ச நீதிமன்றத்தின் உத்திரவுப்படி அமுல்படுத்த ஆணை‌ பிறப்பித்து சுமார் ஒரு கோடி மாண‌வர்களின் எதிர்காலத்திற்கு உத்திரவாதம் தந்த நல்ல முடிவு.
போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும் என வாழும் மனிதர்க‌ளுக்கு வசை பாடிடும் மனிதரை பற்றி கவ‌லையில்லை.ஒரு சிலர் அவர்கள் தான் செய்வது என்னது என தெரியாமல் செய்கிறார்கள். சொல்லப்படும் கருத்துக்களில் உடன் பாடில்லை என்றால் கூட கண்ணியக் குறைவான வார்த்தை‌களை தமிழர் பண்பாடு அனுமதிக்காது என்பது காலம் கண்ட பேருண்மை.டோண்டுவிற்கு என் நன்றிகள்.

RS said...

இது நீங்கள் இப்போது சொல்வது

//சொல்லப்படும் கருத்துக்களில் உடன் பாடில்லை என்றால் கூட கண்ணியக் குறைவான வார்த்தை‌களை தமிழர் பண்பாடு அனுமதிக்காது என்பது காலம் கண்ட பேருண்மை.//

இதுவும் நீங்கள் சொன்னது தான்.

//இந்தப் போக்கால் தான் ஒரு சமயம் ஒஹோ என இருந்த டோண்டுவின் பதிவு இன்று ஹிட்டுகளெல்லாம் குறைந்து ஒரு சிலரே பார்க்கும் நிலை.
கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்ற நிலைதான் .//

இந்த இடுகையை பொருத்த வரை இவை கண்ணியமற்ற சிண்டு முடியும் வரிகள் இதை நீங்கள் உங்கள் தமிழில் சொன்னதால் மட்டும் கண்ணியமான சொற்களாகாது. "பாவாடை நாடா" மாதிரியான சொற்கள் கண்ணியமான சொற்கள் என்றால், எங்கள் சொற்களும் கண்ணியத்துக்கு எள்ளளவும் குறைந்ததில்லை.

போதுமா, எங்களுக்கும் தமிழ் எழுத தெரியும், நல்ல சொற்களை வைத்தும் எழுத தெரியும் ஆனா சிலருக்கு அவர்கள் பாணியில் சொன்னாலும் புரியாது என்பது தெரியும் இருந்தும் சொல்லவில்லை என்று இருக்க கூடாது பாருங்கள் அதற்க்குத்தான்.

தயை கூர்ந்து தங்கள் பணியை தொடருங்கள், தங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் போது தான் எங்கள் எதிரிகள் எப்படி இருக்கிறார்கள் என்றும் அவர்களை அடக்கும் தெம்பும் எங்களுக்கு தெரியும்.:-)

BalHanuman said...

கருணாநிதியின் அபத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் கருத்து ?

- தலித் என்பதால், ராசாவைக் குற்றம் சாட்டுகிறார்கள்...

- பெண் என்பதால், கனிமொழியை விடுவிக்க வேண்டும்...

- மிகமிகப் பிற்படுத்தப்பட்டவன் என்பதால், என் ஆட்சியைக் கவிழ்த்தார்கள்...

- இஸ்லாமிய சமூகத்தவரான ஜாஃபர் சேட் மீது, நோன்புக் காலத்தில் நடவடிக்கை எடுக்கலாமா ?

dondu(#11168674346665545885) said...

@பாலஹனுமான்
அதுதான் நீங்களே கூறிவிட்டீர்களே, அபத்தக் குற்றச்சாட்டு என்று. அதுக்கெல்லாம் போய் பதில் சொல்லிக்கிட்டிருப்பாங்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது