pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. கூடங்குளம்: பிரதமரே இறுதி முடிவு எடுப்பார்: அமைச்சர் நாராயணசாமி
பதில்: சரிதான் உச்சா போவதற்குக் கூட சோனியாவின் அனுமதியை எதிர்பார்ப்பவரிடமிருந்து இத்தகைய எதிர்பார்ப்பா>
கேள்வி-2. கூடங்குளம் உண்ணாவிரதம் வாபஸ்: முதல்வரின் உறுதிமொழி ஏற்பு
பதில்: ஒருவர் மீசையிலும் மண் ஒட்டவில்லை எனும் திருப்திதான்
கேள்வி-3. தேர்தலை முறையாக நடத்த நீதிமன்றத்தை நாடுவோம்: ஸ்டாலின்
பதில்: எல்லாம் தனக்கு வந்தால்தான் தெரியும்.
கேள்வி-4. நான் பிரதமர் வேட்பாளர் அல்ல: அத்வானி சூசகம்
பதில்: அரசியல், அரசியல்
கேள்வி-5. தனித்தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதை அரசு முடிவு செய்யும்: ஆணையர் அய்யர்
பதில்: அது சுழற்சி முறையில் வரும் என நினைக்கிறேன்.
கேள்வி-6. A murderer is condemned to death. He has to choose between three rooms. The first is full of raging fires. The second is full of assassins with loaded guns. The third is full of lions that haven't eaten in 3 years. Which room is safest for him?
பதில்: Lions' room. They should all be dead if starving for 3 years.
கேள்வி-7. A woman shoots her husband. Then she holds him under water for over 5 minutes. Finally, she hangs him. But 5 minutes later they both go out together and enjoy a wonderful dinner together. How can this be?
பதில்: It is a Photo-shoot.
கேள்வி-8. What is black when you buy it, red when you use it, and grey when you throw it away?
பதில்: Matchstick.
கேள்வி-9. Can you name three consecutive days without using the words Wednesday, Friday, or Sunday?
பதில்: Yesterday, today and tomorroww.
கேள்வி-10. This is an unusual paragraph. I'm curious as to just how quickly you can find out what is so unusual about it. It looks so ordinary and plain that you would think nothing was wrong with it. In fact, nothing is wrong with it! It is highly unusual though. Study it and think about it, but you still may not find anything odd. But if you work at it a bit, you might find out. Try to do so without any coaching!
பதில்: There are no e's in that, everyone knows the trick.
ரமணா
கேள்வி-11. பதுங்கும் பங்குச்சந்தை சீறிப்பாயும் கமாடிடி சந்தை?
பதில்: அவை பற்றி மிகக்குறைவே அறிவுடைய டோண்டு ராகவனிடமா இக்கேள்வி??
கேள்வி-12. அன்னாவை அழைக்கும் பாகிஸ்தான் பற்றி?
பதில்: அங்கு போய் என்ன செய்வாராம்? சுதந்திரம் வந்த புதிதில் காந்திஜி பாகிஸ்தான் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தார் என்றால் அது வேறு விஷயம், வேறு பிரச்சினை.
தான் இன்னொரு காந்தி என நிறுவுவதற்காகவே அவர் முயலுகிறார்.
கேள்வி-13. தமிழக முதல்வரின் தற்கால செயல்பாடுகள் பற்றி?
பதில்: உண்மையான க்ரைசிஸ்கள் ஏதேனும் வந்தால்தான் அவரது முழுசெயல்பாடுகளை மதிப்பிட இயலும்.
கேள்வி-14. அமெரிக்கா,ஐரோப்பா இவைகளின் எதிர்காலப் பொருளாதாரம்?
பதில்: கேப்பிடலிசத்தில் ஏற்றமும் தாழ்வும் மாறி மாறி வரும். தவிர்க்க முடியாது.
கேள்வி-15. கூடங்குளம் அணுமின்நிலையம் தேவையா?
பதில்: இல்லை.
BalHanuman
கேள்வி-16. 'டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தால் எனது இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று புலம்புகிறாரே ப.சிதம்பரம்?
பதில்: இல்லாத விஷயத்துக்கு ஏன் புலம்பல்கள்?
கேள்வி-17. நில மோசடித் தடுப்புப் பிரிவையே ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளதே தி.மு.க.?
பதில்: வன்கொடுமை தடுப்புச் ச்ட்டத்தையே எடுக்க வேண்டும் என மரம்வெட்டிக் க்ட்சித்தலைவர் கூறுவது போல உள்ளது.
இதைத்தான் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பார்கள்.
மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
4 hours ago
6 comments:
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம் சூப்பர்.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
//கேள்வி-11. பதுங்கும் பங்குச்சந்தை சீறிப்பாயும் கமாடிடி சந்தை?
பதில்: அவை பற்றி மிகக்குறைவே அறிவுடைய டோண்டு ராகவனிடமா இக்கேள்வி??//
பங்கு சந்தையின் ஆல்டர்நேட்டிவ் சந்தை தான் கமாடிடி!
பங்கை விட கமாடிடி கைவிடாது என்ற நம்பிக்கையே கமாடிடி சந்தையின் பலம்!
//அமெரிக்கா,ஐரோப்பா இவைகளின் எதிர்காலப் பொருளாதாரம்?
பதில்: கேப்பிடலிசத்தில் ஏற்றமும் தாழ்வும் மாறி மாறி வரும். தவிர்க்க முடியாது.//
தாழ்வு வரலாம், அதளபாதாளா இருக்கே!
? சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கு அதன் தொண்டர்களே காரணம் என்கிறாரே கருணாநிதி?
//வால்பையன் said...
//கேள்வி-11. பதுங்கும் பங்குச்சந்தை சீறிப்பாயும் கமாடிடி சந்தை?
பதில்: அவை பற்றி மிகக்குறைவே அறிவுடைய டோண்டு ராகவனிடமா இக்கேள்வி??//
பங்கு சந்தையின் ஆல்டர்நேட்டிவ் சந்தை தான் கமாடிடி!
பங்கை விட கமாடிடி கைவிடாது என்ற நம்பிக்கையே கமாடிடி சந்தையின் பலம்!//
டோண்டுவின் அன்பு முழுமையும் பெற்ற வால்பையன் வருகைக்கு நன்றி.
மங்காத்தா போல் செயல்படுவதாய் சொல்லப்படும் காமாடி மார்க்கட் பற்றிய பலர் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும்?
1.பொருள பற்றிய விபரம் தெரியாமாலே கையில் வைத்துள்ள பணம் வைத்து இஸ்டத்திற்கு விலை ஏற்றுவது பற்றி?
2.பின் திடீரென விலையை குறையச் செய்து முதலிட்டாளரை திக்குமுக்காட வைப்பது பற்றி?
3.பங்கு வர்த்தகம் போல்(ஒரு சில வர்த்தகங்களில்) முழுப் பணத்தை கட்டினால் மட்டுமே சந்தையில் இருந்தால் நியாயமான வியாபராமாய் இருக்கும் எனபது பற்றி?
4.10 % மார்ஜீனை மட்டும் வைத்து சிலர் ஆடிய சித்து விளையாட்டினால் தங்கம் உச்சாணிக் கொப்பில்?
5.காட்டில் சிங்கம் மானை வேட்டையாடுவது போல் காமாடிடி மார்க்கட் சாமானிய மக்களின் உணவு ஆதாரத்தை தடுப்பதாய் சொல்வது பற்றி?
முக்கிய குறிப்பு: பாடுபடும் விவசாயிக்கும் நாமம் போடும் இந்த தரகு வியாபாரிகள் தினம் வருமானம் ரூபாய் 50 கீழே வாங்கி வாழும் நலிந்தோரின் ரத்தம் குடிப்பதாய் பொது உட்மை வாதிகளின் குற்றச்சாட்டை அசட்டை செய்து விட முடியாதல்லவா?
பங்கு வணிகமும், கமாடிடியும்
http://valpaiyan.blogspot.com/2011/10/blog-post.html
Post a Comment