எனது இப்பதிவில் நான் இவாறு எழுதியிருந்தேன். “இது பற்றி பலரும் எழுதி வைத்து விட்டார்கள். நான் முக்கியமாக படிப்பது சோ மற்றும் ஜெயமோகனையும்தான். இருவரது நிலைப்பாடுகளுமே ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இருவரது எண்ணங்களுமே அவற்றைப் படிக்கும்போது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே உள்ளன. மேலும் இன்புட்டுகளை பெற்றுதான் நான் கருத்து கூற வேண்டும். இப்போது நிலைமையை அவதானித்து வருகிறேன். பார்ப்போம்”.
அதற்கான சிமுலேஷனின் பின்னூட்டம் இவ்வாறு இருந்தது. “சோ அவர்களை நீங்கள் வெகு, வெகு உயர்ந்த பீடத்தில் வைத்திருப்பதால், இன்னமும் ஹன்னா ஹசாரே குறித்த அவரது கருத்தினைக் குறித்து உங்களுக்கு குழப்பம் இருக்கின்றது போலும். இப்படிப்பட்ட நிலையில் இருந்தால், நீங்கள் அவதானித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். "சோ ஒன்றும் புனித பிம்பம் அல்ல, அவருக்கும் சறுக்கல்கள் ஏற்ப்டும். அவரும் ஒரு மனிதர்தானே. அதனால் சில, பல விஷயங்களில் உளறிக் கொட்டுவார்" என்று எண்ணத் தொடங்குங்கள். உங்களுக்குத் தெளிவு கிடைக்கும். அது சரி. சோவுடன் ஏதாவது ஒரு விஷயத்திலாவது முரண்படுகின்றீர்களா”?
அப்போது எனது பதில், “அப்படியெல்லாம் இல்லை. சோ அவர்களை நான் பல ஆண்டுகளாகவே அவதானித்து வருகிறேன். எண்பதுகளின் துவக்கத்தில் எல்லோருமே புலிகளை ஆதரித்தபோது அவர் மட்டும் எதிர் கருத்துக்களை கூறினார். ஆனால் அவர்தான் சரியாகக் கூறினார் என்பதை நான் பின்னால்தான் உணர்ந்தேன். அதே போலத்தான் வி.பி.சிங் விவகாரமும்.
எந்த ஒரு போராட்டமும் அதற்கான எதிர்ப்பையும் மீறித்தான் வர வேண்டும். அந்த வகையில் அன்னாவுக்கான எதிர்ப்புகளையும் நான் பார்க்கிறேன்.
ஏதாவது ஆரம்பியுங்கள் என ஜெயமோகன் கூறுவதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. சோ, ஜெயமோகன் இருவருமே என் மனதில் உயர் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.
எனது அவதானம் நில்லாமல் நடக்கும்”.
இப்போது எனது அவதானத்தை மேலும் தொடர்கிறேன்.
நானும் சரி, சோவும் சரி அன்னாவை ஒரு விஷயத்தில் அதிகமாக சந்தேகிக்கிறோம். மற்ற விஷயங்கள் பற்றி பிறகு. அந்த ஒரு விஷயம் இதுதான். சோவின் வார்த்தைகளில், “இப்படியாகத்தானே, இந்த சேனல்கள் கொடுத்த ‘கீ’ நன்றாகவே வேலை செய்திருக்கிறது. அன்னா ஹஸாரேவே இதில் மயங்கிப் போய், தன்னுடைய இயக்கத்தை, ‘இது இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று வர்ணித்துக் கொண்டு விட்டார். மற்றவர்கள் ஜெயப்ரகாஷ் நாராயண் இயக்கத்தை மறந்து இருக்கலாம். இவர் மறக்கலாமா? ஊழலுக்கு எதிராக, ஜெ.பி. நடத்திய இயக்கத்திற்குக் கிட்டிய ஆதரவைக் கண்டு, அன்று பிரமித்தது – இன்றைய பிரதமரைப் போன்ற பலவீனமான ஆட்சியாளர் அல்ல – பலம் மிக்கவராகத் திகழ்ந்த இந்திரா காந்தி! மற்ற கட்சிகளை நம்பி நடத்தப்பட்டது அல்ல அவருடைய அரசு. அசுர பலம் பெற்றிருந்த அவரே திகைத்துப் போய், அரசுக்கு ஆபத்து என்று பயந்து, (ஒரு நீதிமன்ற உத்திரவும் சேர) எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்தார். பல தலைவர்கள், பத்தொன்பது மாதம் தனிமைச் சிறையில் இருந்தனர். ஜெ.பி. யின் அந்தப் போராட்டம் ‘இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று பின்னர் பாராட்டப்பட்டது. ஆனால், அன்னா ஹஸாரே அதை அமுக்கி விட்டு, தன் இயக்கத்திற்கு ‘இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று, தானே பட்டம் சூட்டுகிறார்!
சரி, மக்கள்? அன்னா ஹஸாரேவிடம் மன உறுதி இருந்தால், அவருடைய இயக்கத்தை நம்பலாம். ஆனால், தன்னுடைய உறுதியின்மையை, அவரே பிரகடனப்படுத்திக் கொண்டதை எப்படி மறப்பது?
குஜராத் அரசைப் பாராட்டி விட்டு – தன்னுடைய மதச்சார்பின்மை சகாக்கள் முணுமுணுத்த உடனே பயந்துபோய், ‘நான் அங்குள்ள முன்னேற்றத்தைத்தான் பாராட்டினேன். வேறு ஒன்றுமில்லை...’ என்று மழுப்பி – அப்போதும் மதச்சார்பின்மை கூட்டத்தின் முனகல்கள் ஓயாததால், ‘குஜராத்தில் மகா ஊழல். எதற்கெடுத்தாலும் லஞ்சம். எனக்கு இப்போதுதான், இங்கு வந்த பிறகுதான் இது தெரிந்தது’ என்று ஒரு குட்டிக்கரணம் அடித்து, கன்னத்தில் போட்டு கொண்டார் இவர்.
ஒன்று – காங்கிரஸ்காரர்கள் மாதிரி ‘குஜராத்தில் எல்லாமே அநீதி’ என்று கூறுகிற பிடிவாதமாவது இருக்க வேண்டும். அல்லது ‘இந்தியாவிற்கே முன் மாதிரி குஜராத்’ என்று கூறுகிற நேர்மைத் துணிவாவது வேண்டும். அதுவுமில்லாமல், இதுவுமில்லாமல், அப்படி ஒருநாள், இப்படி ஒருநாள் என்று பேசி, தன் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முனைகிற இவரிடம், எப்படி மன உறுதியை எதிர்பார்ப்பது?
டோண்டு கூறுவது. சோவின் வார்த்தைகளில் ரூபாய்க்கு பதினாறணா நிஜம் உள்ளது.
ஜெயமோகனையே எடுத்துக் கொள்ளுங்கள். ஊழலற்ற அரசுகளை பற்றி ஒரே ஒரு வரி எழுதிவிட்டு அன்னா ஹசாரேயின் போராட்டத்தின் குணநலன்களை பற்றி எழுதுகிறார். ஊழலற்ற அரசு சம்பந்தமாக வெறுமனே நிதிஷ் குமார், நரேந்திர மோதி என ஒரே ஒரு வரி கூறிவிட்டு அப்பால் செல்கிறார்.
லோக்பால் ஏதுமில்லாமல் நரேந்திர மோதி அவர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊழலற்ற அரசை தந்து வருவதை கண்டுகொண்டு, அவரது செயல்பாடுகளை ஆராய வேண்டாமா? எனது இப்பதிவில் நான் இவ்வாறு எழுதியிருந்தேன், “மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு. இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட பூர்வமாக கலெக்ட் செய்வது மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60 லட்சம் ரூபாய் அதிகம்...” எவ்வளவு செக்போஸ்டுகள், எத்தனை பணம் அவற்றில் இன்வால்வ் ஆகின்றன முதலிய விஷயங்களை கவனித்தாலே மோதி அரசு செய்வது எத்தனை அரிதான விஷயம் என்பது புரியுமே. அவற்றையெல்லாம் முதலில் பாராட்டி விட்டு பிறகு செக்யூலர் ஜாட்டான்களின் கூச்சலுக்கு பயந்து அன்னா பின்வாங்கி முன்னுக்கு பின் முரணாக பேசும்போதே அன்னா என் பார்வையில் மிகவும் தாழ்ந்து விட்டார்.
இருப்பினும் அவரை நான் முழுமையாகவே பூட்ட கேஸ் என ஒதுக்காததன் காரணமே ஜெயமோகனின் எழுத்துகள்தான். அவர் என்ன கூறுகிறார் என்பதன் சாரமாக நான் இதைப் பார்க்கிறேன். அதாகப்பட்டது ஊழல் எதிர்ப்புக்கான நடவடிக்கைகளில் எங்காவது ஆரம்பிக்க வேண்டும், அதற்கான முதற்படிதான் லோக்பால் என்கிறார். சோ என்ன கூறுகிறார் என்றால், இம்மாதிரி புதுப்புது அமைப்புகளாக உருவாக்கிக் கொண்டே போனால் முடிவே இருக்காது என்பதுதான். இருவரும் அவரவர் நிலையில் ஒத்துக் கொள்ள வேண்டியவர்களாகத்தான் நான் பார்க்கிறேன்.
நான் முதலில் கூறியதுதான், அதாவது மாற்றங்கள் வரட்டும் அதே சமயம் அதற்கான எதிர்ப்புகளும் வரும், அவற்றையெல்லாம் சமாளித்து நிலையாக நிற்பவையே உண்மையான மாற்றங்கள் என்பதே அது.
மேலும் விஷயங்கள் தோன்றினால் இன்னொரு பதிவு போட்டு படுத்துவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
18 hours ago
9 comments:
உங்களுக்கு சோ, ஜெமோ. எனக்கு சோ, ஜெமோ மற்றும் டோண்டு.
tyaguu@gmail.com
திருடாதே பாப்பா திருடாதே ...
திருடாதே பாப்பா திருடாதே
திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே (திருடாதே ....)
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ -
தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ (திருடாதே ....)
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது (திருடாதே ....)
கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது -
இனி எடுக்குற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா ஆ
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா
பதுக்குற வேலையும் இருக்காது
இனி ஓதுக்குற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா ஆ
உழைக்கிற நோக்கம் உறுதி ஆகிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது (திருடாதே
Thanks Dondu Sir, That's just reflecting my hearts & minds. I have been following for last 15 years or so. However on this, I was very confused. But when I saw your posting, I felt I am not alone :)
நம்மை வாழ்க்கையில் பாதிப்பது எல்லாம்,
"யார்" இதை சொன்னது?
"யார்" இதை எழுதியது?,
"யார்" இதை செய்தது?
என்ற அணுகுமுறையே!
இதை விடுத்து,
"என்ன" சொல்லப்பட்டிருக்கிறது?,
"என்ன" எழுதப்பட்டிருக்கிறது?
"என்ன" செய்யப்பட்டிருக்கிறது?
என நம் அணுகுமுறையை
மாற்றிக்கொண்டால்
தெளிவு பிறக்கும்
சோ கடந்த நாற்பது ஆண்டுகளாக "இருட்டை" நேர்மையாக,விவரமாக,துணிவாக,
தெளிவாக விமரிசித்து வரும் ஒரு நிபுணர்
அன்னா ஹசாரே ஒரே ஒரு மெழுகுவர்த்தி மட்டும் ஏற்றி வைத்துள்ள,ஒரு சாமானியர்
வாசகர் "தென்காசி" எழுதியுள்ள பாடல் மிக நன்றாக உள்ளது.முயற்சி செய்தால் அவர் திரைத்துறையில் பாடலாசிரியராக பரிமளிக்கலாம்.
//வாசகர் "தென்காசி" எழுதியுள்ள பாடல் மிக நன்றாக உள்ளது.//
இதை தென்காசியே ஒப்புக் கொள்ள மாட்டாரே.
சமீபத்தில் 1961-வாக்கில் வெளிவந்த எம்.ஜி. ஆர். படமான திருடாதே என்னும் படத்தில் இப்பாடல் வருகிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது.
//சமீபத்தில் 1961-வாக்கில் வெளிவந்த எம்.ஜி. ஆர். படமான திருடாதே என்னும் படத்தில் இப்பாடல் வருகிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது.//
டோண்டு,
உங்கள் "அடர் வெள்ளை" மனம் எனக்கு புளங்காகிதம் உண்டாக்குகிறது!
அன்னா ஹசாரே, கேசரிதால், எல்லாம் எலக்ஷனில் நின்றால் கட்டிய டெபாசிட் கூட மிஞ்சாது... என்பது என் யூகம்.
ஜனாநாயக நாட்டில் சட்டம் இயற்றவேண்டும் என்றால் இப்படி கூட்டம் சேர்த்து கூப்பாடு போட்டால் போதாது. ஜனாநாயக முறைப்படி ஜெயித்து வரவேண்டும். அதைச் செய்யாமல் இப்படி மிரட்டி காரியம் சாதிக்க நினைப்பது சரியல்ல.
லோக்பால், ஜனலோக்பால் எல்லாமே அரசு ஏகபோகத்தை (government monopoly) லைசன்ஸ் பெர்மிட் ராஜை வெவ்வேறு வழிகளில் மறுபடியும் நிறுவ நினைக்கும் நிர்மூடர்களின் எண்ணமே.
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப்போரை நடத்திய ஜே.பி கூட தேர்தலில் நின்று ஜெயித்தவர் தான். ஆனால் இந்த ஹசாரே கேசரிதால் கூட்டம் வெத்துவேட்டுக்கூட்டம் போல் தான் தெரிகிறது. பொது மக்கள் ஆதரவு இவர்களுக்கு எவ்வளவு உள்ளது என்பதை இவர்கள் தேர்தலில் நின்று ஜெயித்துக் காட்டட்டும், பிறகு பேசலாம். அதுவரை, இவர்களை நம்ப நான் தயாராக இல்லை. உங்கள் அவதானிப்புகளுடன் ஒத்துப்போகிறேன்.
Cho has a valid point when he says that there are enough laws and regulations in the country, but their implementation is poor. But, I think that the laws themselves need more teeth so that the judiciary can impose heavier penalties and ensure that the law-breakers cannot escape. Anna Hazare and team are working on the laws, and simultaneously on including sufficient clauses for enforcing those laws. However, ultimately the success of any new law depends on those who implement them - otherwise, the laws will remain in the statute book only. Anna Hazare, with the right credentials, has appeared at the right moment in our country's history, and let us not run him down. Government, I believe, is not serious and thinks that Anna is a nuisance and somehow, should be put in his place.
Post a Comment