ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது. ஸ்ரீலங்காவிலிருந்து ஒரு தொழிலதிபருக்கு பிரெஞ்சு துபாஷி தேவைப்பட்டது. அவர் இது சம்பந்தமாக சென்னையிலுள்ள தனது க்ரூப் கம்பெனியை அணுகியிருக்கிறார். அந்த கம்பெனிக்காக நான் ஏற்கனவேயே பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் செய்துள்ளேன்.
அக்கம்பெனி என்னை சிபாரிசு செய்ய, இவர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். நானும் சென்றேன். அவர் என்னிடம் கொட்டேஷன் கேட்க அதையும் தந்தேன். சற்று பேரம் பேசிப் பார்த்தார், நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை. சரி என ஒத்துக் கொண்டார். பிறகுதான் தமாஷ். தன்னுடன் இன்னும் பலர் வந்திருப்பதாகவும், எல்லோரும் இரு குழுக்களாக பிரிந்திருப்பார்கள் என்றும், ஆகவே இன்னொரு துபாஷியும் வேண்டுமெனக் கேட்டார். நான் ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் கேட்டார்.
நான் யோசித்துச் சொல்கிறேன் என ஒரு நாள் டைம் கேட்டு வந்தேன். முடியாது என்று சொன்னால் அவர்கள் யாரேனும் இன்னொருவரை கூப்பிட்டு, அவருடன் நெகோஷியேட் செய்து அவரையே இன்னொருவரையும் கொண்டுவரச் செய்து என்னைக் கழட்டிவிடும் அபாயம் இருந்தது.
நான் தேர்ந்தெடுத்தது ஒரு பெண் துபாஷியை. ஒருவரை ஒருவர் பார்த்திருக்காவிட்டாலும் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் அவருடன் பரிச்சயம் உண்டு. அவருக்கு ஃபோன் செய்தேன். அவருக்கு துபாஷியாக வர விருப்பமா எனக் கேட்டேன். அவரும் சரி எனச் சொல்ல, அவருக்கு சில கண்டிஷன்கள் போட்டேன்.
1. நான் ஒத்துக் கொண்ட ரேட்டைத்தான் அவரும் கேட்க வேண்டும். அதற்குக் குறையக் கூடாது (இது ரொம்ப முக்கியம்). பிற்காலத்தில் அதே வாடிக்கையாளர் அவரை மட்டும் வேறு அசைன்மெண்டுக்கு கூப்பிட்டால், தாராளமாக தனது ரேட்டை என்ன வேண்டுமானால் கூறிக் கொண்டு செய்யட்டும். ஆனால் இம்முறை மட்டும் எனது ரேட்டைத்தான் கேட்க வேண்டும்.
2. வாடிக்கையாளர் அவருடன் தனியாகப் பேசி, அவர் மனதைக் கலைக்க முயற்சி செய்யலாம். ஆனால் அதற்கு இவர் இடமே தரலாகாது. ரேட்டை ராகவன் மட்டுமே நிர்ணயிப்பார் எனக் கூற வேண்டும்.
3. அவருடைய பணத்திலிருந்து நான் ஒரு பைசா கூட கமிஷனாகக் கேட்க மாட்டேன். அதே சமயம் தனது பில்களை சப்மிட் செய்து பணம் வாங்குவது அவரது பொறுப்பேதான். அவரது நிலையும் எனது நிலையும் இந்த அசைன்மெண்டில் ஒன்றுதான் எனவும் தெளிவுபடுத்தினேன்.
இந்த கண்டிஷன்களை அப்பெண்மணி தனது கணவரிடம் தெரிவிக்க, மறுபேச்சு பேசாமல் அவரை ஒத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்.
மூன்று நாட்கள் எங்கள் இருவருக்கும் வேலை இருந்தது. ஆக்சுவலாக அப்பெண்மணியின் குழுவினர் அவரை அதிக நேரம் ரீடைன் செய்ததில் அவரது பில் என்னுடையதை விட அதிகமே. அதில் எனக்கு பிரச்சினையில்லை, அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இருவருக்குமே பணம் கிடைத்தது.
இதில் என்ன வேடிக்கை என்றால், நான் அந்த தொழிலதிபர் இவ்வாறு செய்வார் என அனுமானித்தது அப்படியே நடந்தது. அப்பெண் ரேட் விஷயம் ராகவன் சொற்படி எனக்கூறி தப்பித்துக் கொண்டார்.
இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இரு குழுவினருமாக சேர்ந்து கடைசியில் ஒரு பார்ட்டி வைத்திருக்கின்றனர். என்னைக் கூப்பிடவில்லை, அப்பெண்மணிக்கு மட்டும் அழைப்பு போயிருக்கிறது. அப்பெண்மணியின் கணவர் ஒரு விஷயம்தான் அவரிடம் கூறினார், “ராகவன் சாரும் வருவதாக இருந்தால் தாராளமாகச் செல்”. அப்பெண் என்னிடம் இது பற்றிக் கேட்க, எனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என நான் தெளிவுபடுத்த, அவரும் பார்ட்டிக்கு செல்ல மறுத்து விட்டார். இது பற்றி பிறகுதான் அறிந்தேன்.
துபாஷி வேலையில், அதுவும் பெண்களுக்கு, இம்மாதிரி சங்கடங்கள் வரலாம். இந்த விஷயத்தில் அப்பெண்ணின் கணவர் சரியான முறையில் தன் மனைவியை வார்ண் செய்து அச்சங்கடத்தைத் தவிர்த்திருக்கிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மானுடத்தின் வெற்றி
-
மேல்நாட்டு அருங்காட்சியகங்கள் அந்த நாகரீகத்தின் மையங்கள். அவர்களுக்கான
ஆலயங்கள் அவையே. அறிவாலயங்கள்.நாம் ஆலயங்களுக்கே கொடையளிக்கிறோம். அங்கே
அருங்காட்சியகத...
9 hours ago
9 comments:
பிரமாதம்!மிகவும் ரசித்தேன்!!
nice post
சுவாரஸ்யமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
சிறந்த பதிவு!
Sir
Very interesting, people behave differently on different motives at different. But what you explained is not the usual difference. It shows the behaviour towards some motives!!
இதுவும் interestingகான பதிவு.
ஸ்ரீலங்கா தொழிலதிபரை பற்றி எழுதும் போது அவரில் கண்ட சிங்கள வெறி பௌத்த வெறி என்று சும்மா சேர்த்து தாளித்து எழுதியிருந்தால் உங்கள் பதிவு தான் மிக ஹிட்டானதாக வந்திருக்கும்.
@baleno
உண்மை கூறவேண்டுமென்றால் அவர் மிகவும் நல்லவர். சிங்களவராக இருந்தாலும் தமிழ் நன்றாக பேசினார்.
என்ன, சில வேடிக்கையான ஐடியாக்கள் வைத்திருந்தார் மொழிபெயர்ப்பாளர்கள் சம்பந்தமாக. ஆனால் இந்த ஐடியாக்கள் பல வாடிக்கையாளர்களுக்கும் உண்டு. அவை பற்றி இன்னொரு பதிவு போடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சிங்களத் தொழிலதிபர் நல்லவர், நன்றாகத் தமிழ் பேசினார் என்று சொல்லி தமிழ் 'உணர்வாளர்களை' சீண்டி விட்டுள்ளீர்கள்!!
இதே போன்ற அனுபவம் எனக்கும் உண்டு. எங்கள் கம்பெனியில் என்னுடைய ப்ராஜெக்டில் கணக்குப் பதிவு செய்ய இலங்கையைச் சேர்ந்த ஒருவரை நியமித்தார்கள். எங்கள் பாஸ் (இவர் ஆஸ்திரேலியர்) "you neighbours can have a good rapport" என்றார். எனக்கு ராஜபக்சே பற்றிய நம் ஊடகங்களின் பிம்பமே மனதில் இருந்தது. ஆனாலும் பேசிப்ப் பழக ஆரம்பித்தேன்.இன்று மிக நல்ல நண்பர். தமிழில் நன்றாகவே 'கதைக்கிறார்'. அரசியல் அதிகம் பேசுவதில்லை.
Arun Ambie said...
எனக்கு ராஜபக்சே பற்றிய நம் ஊடகங்களின் பிம்பமே மனதில் இருந்தது.
இலங்கையர்களே தமிழக ஊடகங்களின் பிம்பம்களை வியந்து பார்க்கிறோம்.
ஒன்றை கவனித்தீர்களோ இது வரை பௌத்த கொலை வெறி, தமிழர்கள் மீதான பௌத்த ஆக்கிரமிப்பு என்றவர்கள் ஏழாம் அறிவு படத்திற்க்கு பின்பு பௌத்தம் தமிழர்களின் மதம் என்று சொல்ல தொடங்கியுள்ளதை.
Post a Comment