10/27/2011

டோண்டு பதில்கள் - 27.10.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. வாஸ்து பிரச்னை: ஆன்டிலியாவிலிருந்து வெளியேறுகிறார் முகேஷ் அம்பானி?

பதில்: இதில் என்ன சொல்ல இருக்கிறது? ஒரு பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்பவர் இம்மாதிரி வாஸ்து மூட நம்பிக்கை வைத்திருப்பதால் வாஸ்து கன்சல்டண்டுக்குத்தான் பணம் வரப்போகிறது என்பதில் என்ன ஆர்வம் எனக்கு இருக்கப் போகிறது?

எனக்கு இதில் மொழிபெயர்ப்பு வேலை ஒன்றும் இல்லாததால் நோ கமெண்ட்ஸ். :))))))))

கேள்வி-2. ஊழல்களால் வர்த்தகத்துறை முதலீடுகளில் பாதிப்பா? பிரணாப் மறுப்பு
பதில்: பாதிப்பு என்பதைத்தான் மறுக்கிறார் போலிருக்கிறது. ஊழல்கள் இருக்கு என்பதை சிரிக்காமல் மறுக்க அவராலேயே முடியாது.

கேள்வி-3. விமான டிக்கெட் பாணியில் ரயில் டிக்கெட் விற்க பரிசீலனை: தினேஷ் திரிவேதி
பதில்: அப்போ தேவை குறையும்போது டிக்கெட் விலை குறையுமா?

கேள்வி-4. டி.என்.பி.எஸ்.சி., ரெய்டு எதிரொலி: நடந்து முடிந்த தேர்வுகள் குறித்தும் விசாரணை
பதில்: அவசியம் செய்ய வேண்டிய விஷயம்தானே.

கேள்வி-5. அமைதியான முறையில் நடந்து முடிந்தது 2ம் கட்ட ஓட்டுப்பதிவு: 80 சதவீத ஓட்டுக்கள் பதிவு
பதில்: 2-ஆம் கட்ட ஓட்டுப் பதிவில் கலந்து கொண்ட மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.


BalHanuman
கேள்வி-6. எடியூரப்பா?
பதில்: பாஜகாவுக்கு அவரால் சங்கடமப்பா.

கேள்வி-7.‘தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை’ என்கிறாரே பரிதி இளம்வழுதி?
பதில்: தனக்கு என வரும்போதுதான் அவருக்கு உரைக்கிறது என ஒரு வார இதழில் இது பற்றி கூறப்பட்டுள்ளது. அதுதான் என் கருத்தும்.

கேள்வி-8. கனிமொழி ஜாமீனில் தீபாவளி ரிலீஸ்?
பதில்: அவரை புக் செய்த செக்சன் 409 (?) ஜாமீனை அனுமதிக்காது என படித்த நினைவு இருக்கிறதே.

கேள்வி-9. கூடங்குளம் குழப்பங்குளம்?
பதில்: ரஷ்யாவின் சம்பந்தம் உள்ள எதுவுமே சரியில்லை.


ரமணா
கேள்வி-10. கனிமொழிக்கு கடைசியில் ஜாமீன்?
பதில்: கேள்வி 8-க்கான பதில்தான் இங்கும். ஒரு வேளை எனக்குத்தான் சரியாக புரியவில்லையா?

கேள்வி-11. கருணாநிதியின் சோனியாவை சந்திக்க மாட்டேன் எனும் சபதம் உடைந்தது ஏன்?
பதில்: குண்டி காஞ்சா குதிரையும் வைக்கோல் தின்னும்னு ஒரு பழைய சொலவடை உண்டு.

கேள்வி-12. தேமுதிகவின் படுதோல்வி?
பதில்: அது தனது செயல்பாட்டை சரி செய்து கொள்வது நல்லது.

கேள்வி-13. மருத்துவர் இனி என்ன செய்வார்?
பதில்: மரம் வெட்ட கோடாலியை தீட்டுவாரோ?

கேள்வி-14. காங்கிரசின் எதிர்காலம் இனி யார் கையில்?
பதில்: யாரும் அதை கையில் எடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள், குறைந்த பட்சமாக தமிழகத்தில்.

கேள்வி-15. அதிமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்திய விதம் எப்படி?
பதில்: மோசமில்லை என்றுதான் நினைக்கிறேன்.

கேள்வி-16. ரஜினி மீண்டும் திரை வானில்?
பதில்: அவர் பிழைக்க வேண்டாமா?

கேள்வி-17. இனி சட்ட சபை களை கட்டுமா?
பதில்: விஜயகாந்த் புள்ளி விவரங்களை அள்ளி வீசுவாரா? களை கட்டுகிறதோ இல்லையே தளை கட்டாமல் இருந்தால் சரிதான்.

கேள்வி-18. பாஜக‌வின் செல்வாக்கு தமிழகத்தில் உயர்ந்துள்ள‌தா?
பதில்: நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. முதலில் இருந்தது பூஜ்யம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

கேள்வி-19. 3ஜி உரிமம் இல்லாமல் சில தனியார் கம்பெனிகள் 3 ஜி வியாபாரம் செய்யும் விஷயம் அடுத்த ஸ்கீமா?
பதில்: அப்படி நடக்கவியலுமா?

கேள்வி-20. ஒரு உண்மையான தொழிற்சங்க வாதியின் அன்பு மகனாய் வளர்ந்த நீங்கள் அமெரிக்காவின் வலதுசாரி கொள்கையின் கண்மூடி ஆதரவளராய் இருப்பதின் அடிப்படை காரணம் என்ன?
பதில்: பதின்ம வயதுகள் என்பதே ரிபல்களின் வயதுதானே. இந்தியாவில் அப்போது நிலவி வந்த பெர்மிட் லைசன்ஸ் கோட்டா ராஜ்யத்தில் தொழிற்சங்கங்கள் சர்வாதிகாரமே செலுத்தின. எனது தந்தையின் நம்பிக்கையையே அவை சில சமயம் ஆட்டிப் பார்த்தன.

அப்போது நான் வலதுசாரி ஆதரவாளனாக இருந்தது காலத்தின் கட்டாயம்.

கேள்வி-21. அமெரிக்கா,ஐரோப்பா,ஆஸ்திரேலியாவில் உள்ள வசதி இல்லாத மக்களின் எழுச்சியை பார்த்த பிறகவாது‍ மன மாற்றம் வருமா?
பதில்: எழுச்சியா, எங்கே, எங்கே, எங்கே?

கேள்வி-22. அரசியல் சொல்வக்குடன், இல்லாத பொல்லாத செயல்கள் எல்லாம் செய்து பொருள் குவிக்கும் வல்லான்களை எப்பொழுது வசை பாடுவீர்கள்?
பதில்: அதைத்தான் பெர்மிட் லைசன்ஸ் கோட்டா ராஜ்ய கால கட்டங்களில் ஆள்பவர் துணை கொண்டு செய்யலாயினர். அதைத் நான் அப்போதே சாடினேனே.

கேள்வி-23. லஞ்ச லாவண்யத்தின் தயவால் நடத்தப்படும் ஆட்சி, அதிகாரம், வணிகம், கொள்ளை லாபம் பற்றி?
பதில்: முந்தைய கேள்வியிலேயே இதற்கான பதிலும் அடங்கியுள்ளது.

கேள்வி-24.பொருள் வர்த்தக வணிகம் மூலம் பரமபதம் விளையாடும் வர்த்தக சூதாடிகளை எதிர்ப்பீர்களா?
பதில்: பொருளாதார சுதந்திரத்தில் இதைத் தவிர்க்கவியலாது. ஸ்பெகுலேஷன் எனப்படும் இவ்வகை குற்றங்களை சோவியத் யூனியன் காலத்தில் சட்ட விரோதமாக்கி பார்த்துள்ளனர். காரியத்துக்காகவில்லை.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1. சீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரிக்கிறது இந்தியா
2.மத்திய அமைச்சர்களின் எரிபொருள் செலவு ரூ.3.67 கோடி
3.பறிபோகிறது பரம்பிக்குளம் அணை? கேரள அரசின் அடுத்த "அட்டாக்'
4.மாற்றான் தாய் பிள்ளை போல் நடத்துகிறது : அணுஉலை எதிர்ப்பு குழு தலைவர் பேச்சு
5.அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
6.நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதில் "ஊழல்': 3 மாதங்களில் "பல்' இளித்த ரோடுகள்
7.ஒன்றிய தலைவர் பதவி அ.தி.மு.க., வில் குடுமிபிடி
8.பயணிகளுக்குக் கொடுத்த அறிவுரையை ஆஸ்திரேலியா திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தல்
9.லிபியர்கள் தன்னை விரும்பியதாக கடைசி வரை நம்பினார் கடாபி: பாதுகாவலர்
10.கிரண் பேடி அறக்கட்டளை நிர்வாகி விலகல்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது