ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் இந்த தமாஷா விடாது நடைபெறுகிறது.
நாங்கள் வசிப்பது ஹிந்து காலனி 15-ஆம் குறுக்குத் தெருவில். எலெக்ஷன் புள்ளிவிவரங்கள் எடுக்க வந்த அந்த நாதாரி 17-ஆம் குறுக்குத் தெருவிலிருந்து எங்கள் தெருவுக்கு வரும்போது, புது பக்கத்தில் எங்கள் தெருவின் பெயரை மேலே எழுதிவிட்டு எங்களது விவரங்களையும் பதித்திருந்தால் பிரச்சினை ஏதும் இருந்திராது. 17-ஆம் குறுக்குத் தெருவின் கீழேயே எங்கள் விலாசத்தையும் எழுதிக் கொண்டு போயிருக்கிறார்கள். எனக்கு வந்த ஐடி கார்டில் 17-ஆம் குறுக்குத் தெரு என ஸ்பஷ்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே எங்கள் பெயர்களை புது லிஸ்டுகளில் கண்டறிவது வைக்கற்போரில் ஊசியை தேடும் நிலைதான். இம்முறை எனக்கு தந்த பதிவு எண் 877. அதே எண்ணை மேலும் இருவருக்கு தந்து சாதனை புரிந்துள்ளனர். இந்த அழகில் எனது பெயர் ஹிந்து காலனி 17-ஆம் தெருவில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் அம்மாதிரி தெருவே கிடையாது.
இரண்டு அடுத்தடுத்த பூத்துகளில் ஹிந்து காலனி 17-ஆம் தெரு காட்டப்பட்டுள்ளது. ஒரு பூத்தில் கிடைக்காமல் அடுத்த பூத்துக்கு போனால் அங்கு கிடைத்தது.
எங்கு போய் அடித்துக் கொள்வது? வோட்டர் ஐடி நம்பரை வைத்து லிஸ்ட் த்யாரித்தால் என்ன இந்த மடையர்களுக்கு? ஒருவேளை ஒரே ஐடி எண் ஒன்றுக்கும் மேற்பட்டவருக்கு தந்திருந்தால்? தலை சுற்றுகிறது சாமியோவ்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
A novel-writing workshop at Walnut Creek, California.
-
I conducted a workshop on writing novels in Chennai for Manasa
Publications. Now, my friends in the USA are asking me to hold similar
classes there. A one-...
2 hours ago
3 comments:
உலகிலேயே கணினி உபயோகித்து(ம்)குளறுபடிகள் செய்ய கூடிய ஒரே இனம் நம் அரசு ஊழியர்கள்தான் கடன்னெழவே என்று வேலை செய்யும் ஒரே இனமும் இவர்கள்தான்
உங்கள் பகிர்வு மிகவும் அருமை.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
யாருக்குன்னு சொல்லவேண்டாம்..
எப்படினாவது சொல்லுங்களேன்.. ஒட்டு போட்டதுதான்..
Post a Comment