pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. அமெரிக்க செனட்டில் சீன கரன்சிக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்
பதில்: இடியாப்பச் சிக்கலாகத்தான் எனக்கு இது படுகிறது. தனது கரென்சியின் மதிப்பை அந்தந்த நாடுதான் தீர்மானிக்கும் என்பதுதான் எனது கருத்து. அதற்கு எதிர்வினைகள் மற்ற நாடுகளின் தரப்பிலிருந்து வரும் எனறும் எனக்கு புரிகிறது. இது எது சரி, எது தவறு என்பதில்தான் குழப்பம்.
இது பற்றி படிக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் லேசாக தலை சுற்ற, நான் என்னையே மறந்து விடுகிறேன்.
பிறகு நான் தூக்கத்தில் குறட்டை விடுவதாக அவதூறாக சிலர் கூறி வருகின்றனர்.
கேள்வி-2. "மக்கள் என்னை வீட்டுக்கு அனுப்பினாலும், நாட்டுக்குச் செய்யும் கடமையை மறந்து விடவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
பதில்: அவர் செய்ய வேண்டிய ஒரே கடமை அரசியலிலிருந்து விலக வேண்டியதுதான்.
கேள்வி-3. திராவிட கட்சிகளை வேரறுப்பதுதான் தலையாய நோக்கம்: ராமதாஸ்
பதில்: அதானே, அன்புமணிக்கு மந்திரி பதவி தர உதவாதவை இருந்தென்ன லாபம்?
கேள்வி-4. மத்தியில் அடுத்து தே.ஜ., கூட்டணி ஆட்சி தான்: அடித்துச் சொல்கிறார் அத்வானி
பதில்: அவர் நம்பிக்கை சரிதான். ஆனால் முதலில் உட்கட்சி ஒற்றுமை வரட்டுமே.
கேள்வி-5. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு பவுன் பத்து ரூபாய் இருந்தது ஒரு காலம். இப்போழுது இருபது ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது
பதில்: பவுனுக்கு பத்து ரூபாய் இருந்த காலத்திலும் அக்கால கட்டத்து மக்களில் 99 சதவிகிதத்தினருக்கு தங்கத்தின் அந்த விலையும் மிக அதிகமே.
நமது இக்கால சம்பளம் அக்காலத்தில் இருந்திருக்கும் என மயங்குவதுதான் பிரச்சினையே.
கேள்வி-6. ம.தி.மு.க., அதிக இடங்கள் கைப்பற்றும்: சொல்கிறார் வைகோ
பதில்: அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அது கூட இல்லாவிட்டால் எப்படி?
கேள்வி-7. அதிகாரிகள் வெளியில் நடமாட முடியாது: ராமதாஸ் எச்சரிக்கை
பதில்: இவர் போன்றவர்களை டிபாசிட் கூட கிடைக்க முடியாத அளவுக்கு தோற்கடித்தால்தான் அவர்கள் வெளியே வரவும் அஞ்சுவர்.
கேள்வி-8. மின் வெட்டால் இருளில் மூழ்கப்போகின்றன பல மாநிலங்கள்: அனல் மின் நிலையங்கள் தவிப்பு
பதில்: கவலை தரும் விஷயம். அரசுகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். மின் திருட்டுகளை ஒழித்தாலே நிலைமையில் அபிவிருத்தி காணப்படும்.
கேள்வி-9. சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
பதில்: பயனுள்ள செய்தி.
ரமணா
கேள்வி-10. உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு இரண்டாவது இடமாமே?
பதில்: அது நடந்தால் திமுக இன்னும் வேகமாக உடையும்.
கேள்வி-11. திருச்சியில் திமுக ஜெயித்தால்?
பதில்: கருணாநிதிக்கு சற்றே ஆசுவாசம் கிடைக்கும்.
கேள்வி-12. முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் செல்வாக்கு இப்போது?
பதில்: அதை தக்கவைத்துக் கொள்ள அவர் இன்னும் பாடுபட வேண்டும்.
கேள்வி-13. வைகைப்புயல் வடிவேலு?
பதில்: நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா.
கேள்வி-14. மாவீரன் அழகிரியின் அதிரடி அரசியல்?
பதில்: ஆட்சியில் இல்லாத போது அது எடுபடாது.
கேள்வி-15. பேராசை கொண்டோரை எதிர்த்து அமெரிக்காவில் நடைபெறும் போராட்டம்?
பதில்: போராட்டம் நடத்துவோருக்கு மட்டும் பேராசை இருக்காது என்கிறீர்களா?
கேள்வி-16. எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிக்கல்?
பதில்: தெரியவில்லையே. கூகளிட்டு பார்த்தாலும் பலனில்லையே.
கேள்வி-17. சன் டீவி விவகாரம் /400 பிஎஸ் என் எல் போன்கள்/ ஏர்செல்?
பதில்: மாறன் சகோதரர்களுக்கு தலைவலிதான்.
கேள்வி-18. அரசு டீவியில் சன் டீவி சாத்யமா?
பதில்: இப்போதைக்கு இல்லை. அரசு டிவிக்கு இது நல்லதல்ல.
கேள்வி-19. உலகமயமாக்கம் தோல்வியை நோக்கியா?
பதில்: உலகமயமாக்கல் காலத்தின் கட்டாயம். பல மாறுதல்கள் வரும், அவற்றில் பல பலருக்கு சாதகமாக இருக்காதுதான்.
ஆனால் ஒன்று, உலகமயமாக்கல் வந்தே விட்டது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
A novel-writing workshop at Walnut Creek, California.
-
I conducted a workshop on writing novels in Chennai for Manasa
Publications. Now, my friends in the USA are asking me to hold similar
classes there. A one-...
4 hours ago
4 comments:
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.வாஸ்து பிரச்னை: ஆன்டிலியாவிலிருந்து வெளியேறுகிறார் முகேஷ் அம்பானி?
2.ஊழல்களால் வர்த்தகத்துறை முதலீடுகளில் பாதிப்பா? பிரணாப் மறுப்பு
3.விமான டிக்கெட் பாணியில் ரயில் டிக்கெட் விற்க பரிசீலனை: தினேஷ் திரிவேதி
4.டி.என்.பி.எஸ்.சி., ரெய்டு எதிரொலி: நடந்து முடிந்த தேர்வுகள் குறித்தும் விசாரணை
5.அமைதியான முறையில் நடந்து முடிந்தது 2ம் கட்ட ஓட்டுப்பதிவு: 80 சதவீத ஓட்டுக்கள் பதிவு
கடைசியில் ஜெயிக்கப் போவது என்னமோ மாறன் சகோதரர்கள் என்றே தோன்றுகிறது. சன் மூவிஸ் வெற்றிகரமாக ராதிகாவின் ராடன் பிக்சர்ஸ் மூலம் கொண்டுவந்துவிட்டார்கள். இது தொடரும் போல தெரிகிறது.
http://ahamumpuramum.blogspot.com/2011/10/7-7-habits-of-highly-effective-people.html
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம் சூப்பர்....
தொடர்ந்து எழுதுங்கள்...
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
1.எடியூரப்பா?
2.‘தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை’ என்கிறாரே பரிதி இளம்வழுதி ?
3.கனிமொழி ஜாமீனில் தீபாவளி ரிலீஸ்?
4.கூடங்குளம் குழப்பங்குளம் ?
Post a Comment