10/30/2008

இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்டும் என்று கூறுகிறார் சுஹேல் சேத்

எனது நண்பர் ஜயகமல் திரு. சுஹேல் சேத் போட்ட இந்த இடுகையை என் கவனத்திற்கு கொண்டு வந்தார். அவருக்கு என் நன்றிகள். இந்த சுஹேல் சேத் இருக்கிறாரே, அவர் மோடியை இதற்கு முன்னால் தீவிரமாக விமரிசனம் செய்தவர்.

எனது இம்மாதிரி இடுகைகளில் வரும் வழக்கம் போலவே இனி வரும் வரிகளில் வருவது சுஹேல் சேத் அவர்களே. இது பற்றிய எனது ஆங்கில இடுகை இங்கே. டோண்டு ராகவன் அப்புறம் வருவான்.

முதலில் சில விஷயங்களை தெளிவுபடுத்துவேன்: மற்ற எல்லோரையும் விட மோடிக்கு எதிராக நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றில் கோத்ரா நிகழ்வுக்கு பிறகு நடந்த கலவரங்களை மோடி கையாண்ட விதம் பற்றி பல விமரிசனங்கள் தந்துள்ளேன். தற்கால ஹிட்லர் என மோடியைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். கோத்ரா அவர் மேல் மட்டுமல்ல, நாட்டின் அரசியல் வர்க்கத்தின் மீதே ஒரு களங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளேன். கோத்ரா விவகாரத்துக்காக நாடு பெரிய விலையைத் தரவேண்டிய்ருக்கும் என்று இன்னமும் கூறுவேன்.

விஷயம் என்னவென்றால் அதற்கப்புறம் காலம் தன் வழியில் செல்ல ஆரம்பித்து விட்டது. மோடியும்தான் மாறிவிட்டார். மதவாதத்துக்காக குற்றம் சாட்டப்படுபவர்களில் மோடி மட்டும் தனியாக இல்லை. கூடவே மற்ற அரசியல்வாதிகளும் உள்ளனர். மதசார்பற்ற அரசியலை நடத்துவதாக விதந்தோதப்படும் காங்கிரஸ் ஆட்சியில்தான் 1984-ல் சீக்கியர்கள் மேல் கொலைவெறித் தாக்குதல்கள் நடந்தன. 3500-க்கும் அதிகமாக சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதாவது குஜராத்தில் கொல்லப்பட்டவர்களை விட மூன்று மடங்கு.

மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால், மோடியை விட இந்திய அரசியல் வானில் வல்லவர் யாரும் இல்லை என்பதுதான். மூன்று வாரங்கள் முன்னால் நான் அஹமதாபாத் சென்றிருந்தேன். YPO (Young President's Organisation) கூட்டத்தில் பங்கெடுக்கவே நான் சென்றிருந்தேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோடி அவர்களை சந்திக்கலாம் என முடிவு செய்தேன். அங்கு செல்வதற்கு முந்தைய மாலைதான் அவருக்கு டெலிஃபோன் செய்து பேசினேன். நான் அங்கு வந்து சேரும் நாள் அன்றே அவரை பார்க்க அனுமதி தந்தார். அதுவும் அவர் அலுவலகத்தில் அல்ல, அவர் இல்லத்தில்தான். எளிமையின் உருவம் மோடி.

இந்த விஷயத்தில் சோனியா, மாயாவதி போன்றவர்கள் மோடியிடமிருந்து பாடம் கற்பது நல்லது. மீட்டிங்கில் மோடியை சுற்றி எந்த அள்ளக்கைகளும் இல்லை. நாங்கள் இருவர் மட்டுமே. தேனீரை ஊற்றுவதற்காக ஒரு வேலையாள் அவ்வளவே. மோடியிடமிருந்து நேர்மறை எண்ணங்கள் வந்த வண்ணம் இருந்தன. குஜராத்தின் முன்னேற்றம், மறுமலர்ச்சி, அதன் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மேம்பாடு அவற்றையெல்லாம் எடுத்துரைக்கும்போது அவர் வெளியிட்ட மகிழ்ச்சி ஆகியவற்றை அந்த எண்ணங்கள் பிரதிலித்தன. சில உதாரணங்கள்: சிங்கப்பூர்வாசிகள் அருந்தும் பாலில் கிட்டத்தட்ட முழு அளவு குஜராத்திலிருந்து வருகிறது. அதே போல ஆஃப்கானிஸ்தானில் உண்ணப்படும் தக்காளி, கனடாவில் உட்கொள்ளப்படும் உருளைக்கிழங்கு போன்ற எல்லாமே குஜராத்தில் விளைந்தவை. அதே சமயம் தொழிற்சாலைகளும் அவற்றில் உற்பத்தியாகும் பொருட்களும் மோடியின் முன்னுரிமைகளில் உண்டு.

ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அவர் அருகிலுள்ள மேஜையிலிருந்து GIFT என்று அறியப்படும் குஜராத்தில் அமையவிருக்கும் புது தொழில் நகரத்தைப் பற்றிய புத்தகத்தை எனக்கு காட்டினார். சபர்மதி நதியின் கரையில் வரப்போகும் இந்த நகரம் துபாயையும் ஹாங்காங்கையும் ஜுஜூபி என்று சொல்ல வைக்கும். பை தி வே குஜராத்தில் உள்ள நதிகளை இணைத்து மோடி அவர்கள் சபர்மதியின் தண்ணீர் பற்றக்குறையை தீர்த்து வைத்துள்ளார்.

ரத்தன் டாட்டாவின் புது நானோ கார் தொழிற்சாலை பர்றியும் அவர் பேசினார். டாட்டா அவர்களிடம் பார்சிக்காரர்கள் முதலில் குஜராத்தில் வந்த போது நடந்த நிகழ்ச்சியை எடுத்து கூறி அவரை உணர்ச்சிக்குவியலாக்கியதையும் சொன்னார். அக்கதை பின்வருமாறு: பார்சிகள் முதல் முதலில் குஜராத்தில் வந்தபோது குஜராத் அரசர் அவர்களுக்கு ஒரு டம்ளர் நிறைய பால் கொடுத்து அனுப்பினாராம். அதாவது ஏற்கனவே குஜராத் ஹவுஸ்ஃபுல், அவர்களுக்கு இடமில்லை என்று கோடி காட்டியுள்ளார். பார்சிக்காரர்களோ அந்தப் பாலில் சர்க்கரையை கலந்து திருப்பி அனுப்ப, அரசர் மனம் மாறினாராம். அதாவது சர்க்கரை போல பார்சிக்காரர்கள் குஜராத்தின் தரத்தை உயர்த்துவார்கள் என்பதுதான் அவர்கள் செய்ததன் பொருள்.

நரேந்தர் மோடி முன்னேற்றப் பாதையில் செல்லும் அவசரத்தில் உள்ளார். அவரை விட்டால் பிஜேபிக்கு அத்வானியைத் தவிர வேறு பெரிய தலைவர்கள் இல்லை என்பதுதான் நிஜம். தீவிரவாதத்தை ஒழிக்க அரசியல் சாராத கடும் நடவடிக்கைகள் வேண்டும் என அவர் உறுதியாக நம்புகிறார். தில்லியில் குண்டு வெடிக்கலாம் என்பதை அவர் முன்கூட்டியே பிரதமருக்கு கூறியும் தக்க ஏற்பாடுகள் செய்யாது கோட்டை விட்டனர் என்று வருந்தினார் அவர். அவரது இந்த உறுதியை நான் விதந்தோதுகிறேன். தீவிரவாதத்தை சகித்து கொள்ள கிஞ்சித்தும் அவர் விரும்பவில்லை என்பது அவர் நடவடிக்கைகளிலிருந்து தெரிகிறது. சிறுபான்மையினரை அழிக்க அவர் முயல்கிறார் என சிலர் குதர்க்கமாக பேசினாலும் அவர் என்னவோ தெளிவாகத்தான் உள்ளார். சட்ட ஒழுங்கில் அவர் எந்த சமரசமும் செய்வதாக இல்லை.

மோடியின் வீட்டிலிருந்து திரும்பும்போது கார் டிரைவரிடம் மோடி பற்றி பேசினேன். மோடி கடவுள் என்னும் ரேஞ்சில் அவர் பேசினார். மோடிக்கு முன்னால் குஜராத்தில் ஒன்றுமே சரியாக இல்லை. சரியான சாலைகள் இல்லை, மின்சாரம் இல்லை, கட்டுமான வசதிகள் இல்லை. ஆனால் இன்றோ மின்சாரத்தில் உபரி உற்பத்தியை குஜராத் எட்டியுள்ளது. இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் சேர்ந்தாற்போல் வரும் புது தொழில்களை விட அதிகமாக குஜராத்தில் வருகின்றன. பன்னாட்டு நிறுவனக்கள் முதலீடு செய்ய அதிகம் விரும்பும் மானிலம் குஜராத். அதே சமயம் அரசின் செயல்பாடுகளில் இருக்கும் நேர்மை மற்ற மானிலங்களில் இல்லை.

YPO (Young President's Organisation) உறுப்பினர்கள் கூட்டத்துக்கு பிறகு அவர்களில் பலரிடம் மோடி பற்றி கேட்க எல்லோருமே ஒருமுகமாக மோடியை கடவுள் என்றே கூறினர்.

மேலும் அவர்கள் கூறியதாவது. ஐந்து மோடிகள் இருந்தால் இந்தியா மிகச் சிறந்த நாடாக உருவெடுக்கும் என்று. இது குஜராத்திய மிகைப்படுத்தலா என்று தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவரது குறைபாடுகளையும் மீறி நாட்டில் நல்ல மாறுதல்களை கொண்டுவர மோடி போன்றவர்கள் இன்றியமையானவர்கள். இன்னும் பல மோடிகள் நாட்டுக்கு தேவை!


சுஹேல் சேத் Counselage-ன் மேனேஜிங் பார்ட்னர்.

இப்போது மீண்டும் டோண்டு ராகவன். சுஹேல் சேத் ஒரு முசல்மான் எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் மோடியின் பெருமைகளை பட்டியலிடுவதில் அவர் தயங்கவில்லை.

அதே சமயம் “இது பலருக்கு பிடிக்காது, எல்லோரும் உன்மேல் பாயப்போகிறார்கள்” என்று எச்சரிப்பது முரளி மனோஹர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11 comments:

வால்பையன் said...

இந்த வார கேள்வி

//இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்டும்//
வந்தால்

1. இந்தியா முழுவதும் மது விலக்கை அமுல் படுத்துவாரா?

2. ஈழதமிழர்கலும் பூர்வீகத்தில் இந்தியர்களே அவர்களுக்காக குரல் கொடுப்பாரா?

3. மத சார்பில்லாத சட்டம் நிறைவேற உத்திரவாதம் உண்டா?

கரிசல் குயில் said...

தமிழ் நாட்டிலும் மோடி போல் ஒருவர் வேண்டும். Im really ashamed of Dravidian Parties Politics.

Anonymous said...

///அதே சமயம் “இது பலருக்கு பிடிக்காது, எல்லோரும் உன்மேல் பாயப்போகிறார்கள்” என்று எச்சரிப்பது முரளி மனோஹர்.//Hats off to modi
Let us pray god to get that golden gift

Very much pleased to know that the old writings of our Dondu sir is proved beyond doubt about Modi and his Gujarat.
India is going to glitter shortly under the great leader ship of modi the great.

Gujarat is
a land with out bribes
a land with out powercut
a land with out hurdles
a land of peace and prosperity

All should spread this news about gujarat and be ready to have a change in national/state level

India will become no:1 nation in the world in all respects.

Let us welcome the golden era of great modi in India

- All India Dondu peravai
Tamilnadu

மதிபாலா said...

இந்தியா முழுவதும் மது விலக்கை அமுல் படுத்துவாரா///

அதிருக்கட்டும்.....போன மார்ச்சில் நான் பரோடா போனபோது , சரக்கு கொஞ்சமே கொஞ்சமான அதிக விலையில் சாதாரணமாக கிடைத்ததே அதை நிறுத்த என்ன செய்திருக்கிறார் திரு.மோடி ?

2006 என்று நினைக்கிறேன் , அகமதாபாத்திலிருந்து பெட்லேட் என்னும் ஊருக்கு நான் போன பஸ்ஸை தமிழகத்தின் காயலாங் கடையில் கூட பார்க்கமுடியாதே?? அதுக்கென்ன செஞ்சாராம்???


இப்படி ஓவரே பில்ட் அப் கொடுத்தா அப்புறம் கோயில் இல்லாம இருக்கிற ஏதாவது ஒரு மூணு முக்குல காவிக்கட்சிக்காரங்க மோடிக்கோயில் கட்டிடப்போறாங்க பாத்துக்கோங்க..!!

வால்பையன் said...

மதிபாலா சொல்வதும் யோசிக்கவேண்டிய விசயம் தான்.
மோடி மேல் உங்களுக்கு இருக்கும் பற்றால் சில விசயங்கள் உங்கள் கண்ணுக்கு தெரிய மறுக்கிறது

dondu(#11168674346665545885) said...

@மதிபாலா: அதுதான் மதுவிலக்கு இப்போதைய முன்னுரிமைகளில் வராது என எழுதி விட்டேனே. நீங்கள் பயணம் செய்த பஸ் பற்றி முதன் மந்திரி அலுப்வலகத்துக்கு புகார் அனுப்பியிருந்தால் ஏதேனும் நடந்திருக்கலாம்.

@வால்பையன்: எது எப்படியாயினும் நம்ம உள்ளூர் மந்திரிகளுக்கும் மோடிக்கும் கம்பேர் செய்யக் கூட இயலாது. குற்றம் கூறுவது சுலபம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jay said...

//இந்தியா முழுவதும் மது விலக்கை அமுல் படுத்துவாரா?//

மது விலக்கை எங்கும் முழுமையாக அமல்படுத்துவது என்பது முடியாத காரியம். அமெரிக்காவில் 1920களில் மதுவிலக்கு சட்டம் இருந்தது.
ஆனால் முழுமையான மது விலக்கு அங்கேயே கொண்டுவர முடியவில்லை. மது விலக்கு சட்டத்தினால், மது கள்ள மார்கெட்டில் விற்கபட்டத்து. கள்ள மார்கெட்டில் விற்று லாபம் பெற்றது மாபியா (Mafia) மட்டும் தான். இதனால் அமெரிக்கவில் பெரும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது தான் மிச்சம்.

இந்தியாவில் மது விலக்கு கொண்டு வந்தால், பகுதி வாழ் ரவுடி-அரசியல்வாதிகளுக்கு தான் நல்ல கள்ள சாராய வியாபார வாய்ப்பு கிடைக்கும்.
கள்ள சாராயத்தின் மற்ற கேடுகள் உங்களுக்கு தெரியும்தானே...

dondu(#11168674346665545885) said...

மிகச்சரியாகச் சொன்னீர்கள் ஜயகமல் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராபின் ஹூட் said...

இந்தியாவின் பிரதமராக டோண்டு வரவேண்டும்.

Chandra said...

Many thanks to Jayakamal and Dondu Sir for posting in Tamil translation of Suhel Seth article. It is indeed great one and it shows the author honesty to accept the change that has been happening in Gujarat. The other discloser is that I once met Mr Suhel Seth in this year April in one of the penal discussion. Where, he spoke eloquently a range of issues except the illusion in understanding of population issue.

Chandra

Anonymous said...

//ராபின் ஹூட் said...

இந்தியாவின் பிரதமராக டோண்டு வரவேண்டும்.//


let us pary to god for that.
dondu sir will perform in a better way following the foot path of great modi of gujarat.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது