11/13/2011

மன்னிக்கவும் இது politically correct பதிவு இல்லை

மொழிபெயர்ப்பு தலைவாசலாம் ப்ரோஸ்.காம்-ல் நான் எனது பழைய மன்ற இடுகைகளை புரட்டிக் கொண்டிருந்தபோது இந்த இடுகை கண்ணில் பட்டது. அதன் தமிழாக்கம் இங்கே.

இதை நான் எதேச்சையாகக் கண்டேன். ரஷ்ய மன்றங்களை ஸ்க்ரால் செய்தபோது இது ஆங்கிலத்தில் இருந்தது. அந்த மன்ற இடுகைக்கு 220-க்கும் மேல் பின்னூட்டங்கள். (ரஷ்ய இடுகையின் சுட்டியை மறந்து விட்டேன், மன்னிக்கவும்). உங்களுடன் இதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ழ்சி அடைகிறேன்.

சந்தைப்படுத்தல் என்றால் என்ன? (நீங்கள் ஒரு பெண்).
ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை நேரடியாகவே அணுகி, "என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறீர்கள், இது நேரடி சந்தைப்படுத்தல்.

ஒரு பார்ட்டியில் உங்கள் நண்பர்களுடன் கலந்து கொள்கிறீர்கள். அப்போது ஒரு அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை உங்கள் நண்பர்களில் ஒருவர் அணுகி உங்களைக் காண்பித்து, "அவளுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறார். இது விளம்பரம்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை அணுகி அவனது தொலைபேசி எண்ணைப் பெறுகிறீர்கள். அடுத்த நாள் அவனை ஃபோனில் கூப்பிட்டு, "என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறீர்கள், இது டெலிமார்க்கெட்டிங்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். உங்கள் புடவைத் தலைப்பை சரி செய்து கொண்டு, அவனிடம் செல்கிறீர்கள். அவனுக்காக கூல்ட்ரிங்க் வாங்கி கொடுக்கிறீர்கள். அவன் டையை அட்ஜஸ்ட் செய்யும்போது “தற்செயலாக” உங்கள் மார்பகம் அவன் முழங்கையில் உரசுகிறது. பிறகு, "அட சொல்ல மறந்து விட்டேன், என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்” என்கிறீர்கள். இது பப்ளிக் ரிலேஷன்ஸ்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனே உங்களிடம் வந்து, “உன்னோடு படுத்தால் சந்தோஷம் நிச்சயம்னு எல்லோரும் சொல்லறாங்களே” ன்னு சொல்லறான். இது பிராண்ட் அங்கீகாரம்.

ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை உங்கள் தோழியுடன் செல்லுமாறு அவனுக்கு கூறுகிறீர்கள். நீங்கள் ஒரு விற்பனை பிரதிநிதி.

உங்கள் தோழியால் அவனுக்கு மகிழ்ச்சி இல்லை. அவன் உங்களை அழைக்கிறான். இதுதான் டெக்னிக்கல் சப்போர்ட்.

நீங்கள் ஒரு பார்ட்டிக்கு செல்கிறீர்கள். திடீரென அங்கு பல அழகான வாலிபர்கள் இருக்கக் கூடும் என உங்களுக்குத் தோன்றுகிறது. ஆகவே ஒரு உயரமான மேஜை மீது ஏறிக் கொண்டு, “என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்” என்று உரக்கக் கூவுகிறீர்கள். அது ஸ்பாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

சூனிய விகடன் said...

இது நாம் நேரடியாக செய்யாவிட்டாலும் நமது விற்பனைக்கு மிகவும் நம்பகமான காரணம்தானே. நீங்கள் ( ஒரு பெண் ) பார்ட்டிக்கு செல்கிறீர்கள் ..அங்கு உங்கள் அழகையும் கவர்ச்சியையும் பலர் ரசிக்கிறார்கள் ..அவர்கள் தமக்குத் தெரிந்த, அறிந்த பலரிடம் " படுத்தா இவ கிட்ட படுக்கனும்டா :" என்று சொல்ல....அவர்கள் அதையே தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்ல......மிகப் பலமான விற்பனைச் சங்கிலித் தொடர் ......(பின்குறிப்பு : நான் படுத்த மாதிரி ஆகிவிட்டது...அல்லது படுக்கனும்கிற மாதிரி ஆகிவிட்டது )

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது