"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில்
உயராதோ நம் மதிப்பு அயல் நாட்டில்"
மேலே கூறிய பாடல் சமீபத்தில் 1966-ல் திரையிடப்பட்ட "விவசாயி" படத்தில் வந்தது. "சரி, அப்போது விவசாயம் செய்பவர்கள்தான் நம் நாட்டில் பெரும்பான்மையினர். இப்போது அப்படியில்லை" என்பவர்களுக்கு நான் கூறுவேன், "எல்லா வளமும் நம் நாட்டிலேயே இருக்கும் போது கொத்தடிமைகள் போல ஏஜெண்டுகள் எனப்படும் கொள்ளையரிடம் மனைவியின் தாலி வரை விற்றுக் கொடுத்து வெளிநாட்டில் போய் கேவலப்பட வேண்டுமா?" என்பதுதான் என் கேள்வி. விவசாயமோ அல்லது வேறு தொழிலோ, நம் நாட்டிலேயே வேலை பார்க்க முயற்சி செய்யுங்கள் என்றுதான் கூறுகிறேன்.
ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகள் தெரிந்து வைத்திருக்கும் நான் ஏன் ஜெர்மனிக்கோ பிரான்ஸுக்கோ செல்ல முயற்சிக்கக் கூடாது என்று பலரும் என்னிடம் பல முறை கேட்டு விட்டனர். நான் நினைத்திருந்தால் சென்றிருக்க முடியும். ஆனாலும் ஏனோ எனக்கு அவ்வாறு செல்ல வேண்டும் என்று ஒருபோதும் ஆவல் வந்ததேயில்லை. அம்மொழிகளில் பல புத்தகங்கள், செய்தி பத்திரிகைகள் படிப்பவன் என்ற முறையில் என்னால் அந்த நாட்டில் தினசரி வாழ்க்கை என்னைப் போன்றவர்களுக்கு எவ்வாறு அமையும் என்பதை மிகச் சுலபமாகக் கற்பனை செய்து பார்க்க முடியும். அக்கற்பனைகள் ஒருபோதும் எனக்கு வெளிநாடு செல்லும் ஆவலைத் தூண்டியதேயில்லை. நான் எந்த விதத்தில் குறைந்து விட்டேன்? என் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு வரும் வருமானத்தை வைத்து நான் பெற்றுள்ள வாழ்வின் தரம் மற்றும் நிம்மதி கண்டிப்பாக அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிரான்ஸிலோ கிடைத்திராது என்பதே நிஜம். என்னை பொருத்தவரை ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் என் வீட்டு வாசலுக்கே எனக்காக வந்துவிடுகின்றன. என்னிடம் பாஸ்போர்ட் கூடக் கிடையாது.
அவுட்சோர்ஸிங் ஏற்பாட்டில் இந்தியாவிலேயே நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமானதாகவே உள்ளது என்றுதான் எனக்கு படுகிறது.
அப்படியும் மீறி போகவேண்டியக் கட்டாயம் பலருக்கு இருக்கிறது என்பதும் உண்மைதான். அவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குவதும் இப்பதிவின் நோக்கங்களில் ஒன்று.
முதலில் ஒரு விஷயம் மறக்காதீர்கள். வெளி நாடுகளுக்கு நீங்கள் வேலை செய்யப் போவது பணம் சம்பாதிக்கவே. அந்த வேலையை பிடிக்கவே சொத்தையெல்லாம் விற்றுப் போவது முட்டாள்தனம். ஏமாற்றும் ஏஜெண்டுகளுக்கு கொடுப்பதற்கு பதில் அப்பணத்தை உள்ளூரிலேயே முதலீடு செய்து தொழில் செய்ய முடியுமே. இதை தீமாக வைத்து வந்த "வெற்றிக்கொடி கட்டு" என்ற படம் இதை அழகாகக் கூறுகிறது.
நீங்கள் இங்கு ஒரு கம்பெனியில் வேலை செய்து அவர்கள் உங்களை வெளிநாட்டில் இருக்கும் தங்கள் அலுவலகங்களில் வேலை செய்ய அனுப்பித்தால் தாராளமாகச் செல்லுங்கள். ஏனெனில் உங்களுக்கு இதில் காலணா செலவில்லை. எல்லாவற்றையும் கம்பெனி பார்த்துக் கொள்ளும். ஆனால் நீங்களே முயன்று கல்ஃப், சவுதி போன்ற பிரதேசங்களுக்கு செல்லும்போது ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் இசுலாமியராக இல்லாத பட்சத்தில் அங்கு போகாமல் இருத்தலே நலம். அப்படி மீறிப் போனால் பல அவமானங்களுக்கு உங்களைத் தயார் செய்து கொள்ளவும். அங்கு ஏடாகூடமாக மாட்டிக் கொண்டால் கண்டிப்பாக நமது தூதரகங்கள் உங்களைக் காப்பாற்றாது என்பதை மறக்காதீர்கள்.
அமெரிக்கா மாதிரியான இடங்களில் வேறு வகையான அவமானங்கள் காதிருக்கின்றன. அமெரிக்க தூதரகங்கள் வாயிலில் எவ்வளவு பேர் சூட், கோட் எல்லாம் போட்டுக் கொண்டு பிச்சைக்காரர்கள் போல நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை தில்லியில் பஸ்ஸில் செல்லும்போது பார்த்து கோபப்பட்டிருக்கிறேன்.
வெளிநாடுகளில் சம்பாதிக்கும் பணத்தை கட்டிக் காப்பதும் ஒரு கலையே. உறவினர்களுக்கு வாரிக் கொடுத்துவிட்டு அவதிப்படாதீர்கள். நீங்கள் திரும்பி வரும்போது அந்தப் பணம் உங்களுக்குத் தேவை. சகோதரனின் படிப்பு, சகோதரியின் கல்யாணம் எல்லாவற்றையும் உங்கள் பணத்தை வைத்து தாம் தூமென நடத்திக் கொள்ளும் உறவினர்களால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லை. எந்த உதவி செய்தாலும் அளவோடு செய்யுங்கள். உங்கள் மனைவி, பிள்ளைகளை மறந்து விடாதீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஊர் திரும்பும்போது உங்கள் கைவசம் கணிசமான பணம் இருத்தல் முக்கியம். குடும்பத்தை நீங்கள் வேலை செய்யும் ஊருக்கு அழைத்துக் கொள்ள முடியுமானால் அதை முதலில் செய்யுங்கள்.
ஊருக்கு வரும்போது மாமன் மச்சான் எல்லோருக்கும் பரிசுகள் வாங்கி நொந்தவர்கள் அனேகம். எவ்வளவு கொடுத்தாலும் அவர்களுக்கு போதாது. ஒன்றும் கொடுக்காமல் இருந்தால் பணமாவது மிச்சம். என்ன, திட்டுவார்கள். திட்டட்டுமே.
முக்கியமாகத் தன்னம்பிக்கையை விடாதீர்கள். வெளிநாடு செல்லும்போது மனதில் என்ன பயம் இருந்தாலும் காட்டிக் கொள்ளாதீர்கள். "தைரியம்னா என்ன, பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாதிருத்தல்தான்" என்று குருதிப் புனல் படத்தில் கமல் கூறுவதாக வசனம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன் (அப்படத்தை நான் பார்த்ததில்லை), இது சத்தியமான வார்த்தை.
போன இடத்தில் உள்ளூர் மொழியை கற்கவும். அது மிக உபயோகமாக இருக்கும். முக்கியமாக அரபு நாடுகளில். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும். யாரோடும், முக்கியமாக உள்ளூர்காரர்களோடு சண்டை போடாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
21 hours ago
33 comments:
சார் நான் ஒருவிவசாயி இந்த தொழிலிள் வருமானம் தாங்கள் நினைப்பது போல் இல்லை 30 ஆண்டுகளுக்கு முன் ஏன் இன்னமும் சொல்லப்போனால் காமராஜர் ஆட்சிக் காலத்தோடு போச்சு. நான் கூட ஒரு பதிவு தங்களுக்கு பதிலாக போட நினைத்தேன் பிறகு விட்டு விட்டு இதிலே கொடுக்கிறேன்.
நம்மவர்கள் வெளிநாடுகளில் சம்பாதித்தால் அன்னிய செலவானி அதிகம் நமக்கு வருமல்லவா? என்ன செய்வது.
//
என்னிடம் பாஸ்போர்ட் கூடக் கிடையாது.
//
ஆங்!!
படிப்பிற்காக வெளிநாடு செல்லும் மாணவர்களைப் பற்றியும் (முக்கியமாக சொந்தப் பணத்தைச் செலவு செய்து, GRE, TOEFL எழுதி U S (உத்தங்குடி செளத்!!:)) பல்கலைக்கழகங்களுக்குப் போகும் மாணவர்கள் பற்றியும்,
வெளிநாட்டுவாழ் இந்தியர்களைப் (NRI) பற்றியும் உங்கள் கருத்து என்ன?
வஜ்ரா ஷங்கர்.
நான் இங்குள்ள நிறுவனம் மூலமாக மலேசியா சென்றேன்.அப்போது அங்கு நீங்கள் சொன்ன மாதிரி ஏஜண்ட் மூலமாக வந்தவர் சொன்னது "அந்த பண(ரூ 1 லட்சம்) த்தை வைத்து பேசாமல் ஒரு கடை வைத்து பிழைத்துக்கொண்டிருக்கலாம்.இங்கு ஒரு வேலையும் இல்லாமல் இருக்கிறேன். வெறுங்கையுடன் ஊருக்கும் போக முடியாது".
என்னார் அவர்களே, விவசாயி படத்திலிருந்த அப்பாடலின் முதலடியைத் தலைப்பால் போட்டதால்தான் அப்பாட்டின் பல்லவி முழுக்கப் போட்டேன். 1966-க்குப் பிறகு நிலைமை மாறி விட்டது என்பது எனக்கும் தெரியும்.
இருப்பினும் அப்பாட்டின் தன்னம்பிக்கை கேட்பவரையெல்லாம் தொற்றிக் கொள்கிறது என்பதும் உண்மைதானே.
மேலும் பதிவின் பெரும்பகுதி அவ்வாறு வெளிநாடு செல்பவர்களுக்கு என்னாலான யோசனை அளித்துள்ளேன். அன்னியச் செலாவணி வருவதெல்லாம் இருக்கட்டும், அவ்வாறு கொண்டு வருபவர்களை திருடர்களைப் போல நம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் நடத்துவதை அறிவீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
"படிப்பிற்காக வெளிநாடு செல்லும் மாணவர்களைப் பற்றியும் (முக்கியமாக சொந்தப் பணத்தைச் செலவு செய்து, GRE, TOEFL எழுதி U S (உத்தங்குடி செளத்!!:)) பல்கலைக்கழகங்களுக்குப் போகும் மாணவர்கள் பற்றியும்,..."
அது என்ன சார் உத்தங்குடி தெற்கு? தமாஷ் இருக்கட்டும், மாணவர்கள் கூட பரீட்சைகள் எழுதி ஸ்காலர்ஷிப்பில் செல்வதுதான் புத்திசாலித்தனம். தன் பணத்தை செலவு செய்பவர்கள்? நிச்சயமாக அண்டர்கிரேஜுவேட் படிப்புக்கு வெளிநாடு செல்வது முட்டாள்தனம். மருத்துவக் கல்வி ரஷ்யாவில், பரவாயில்லை என்று நினைக்கிறேன். ராமனாதன் இன்னும் விவரமாகக் கூறுவார். பாஸ்போர்ட் இல்லாததால் எனக்கு ஏற்பட்ட ஒரே வருத்தம், இஸ்ரேல் செல்ல முடியாது என்பதாலேயே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அதையேத்தான் நானும் கூறுகிறேன், சிவப்பிரகாசம் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சார் முதலில் தமாஷ்.
//சமீபத்தில் 1966-ல்//
ஒரு காப்பிரைட் எடுத்து வச்சுக்குங்க. இப்போ எல்லாரும் இதை உபயோகப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க.
டோண்டு சார்,
விவசாயி 1967 ஆச்சுங்களே.
தேவர் படம்.
மருதகாசியும், உடுமலை நாராயணக்கவியும் பாட்டு எழுதியிருப்பாங்க.
நீங்க மேற்கோள் காட்டுன இந்தப் பாட்டு உடுமை அய்யா எழுதுனதுண்ணு நெனைக்கிறேன்.
அன்புடன்
ஆசாத்
இனி என் கேள்விகள்.
1) காசு கொடுத்து வெளிநாடி செல்பவர்கள் பற்றி உங்கள் கருத்திகளுடன் ஒத்துப் போகிறேன். அதில் சமீபத்தில் ஒரு பதிவில் ஸ்ருசல் எழுதியது) நம் அண்டை மாநிலத்தவர் காசு கொடுத்தேனும் வெளிநாடு செல்வதற்கான காரணங்கள் தெரியும்.
2) தாங்கள் வேலைப்பார்க்கும் நிறுவனங்கள் அனுப்புவதால் செல்லும் ஊழியர்களுக்கு தாங்கள் கூறியது பொருந்தவே பொருந்தாது.
3) //அக்கற்பனைகள் ஒருபோதும் எனக்கு வெளிநாடு செல்லும் ஆவலைத் தூண்டியதேயில்லை. நான் எந்த விதத்தில் குறைந்து விட்டேன்?//
கட்டாயம் ஒரு குறைவும் இல்லை. ஆனால் ஒவ்வொரு பயணமும் எனக்கு தரும் அனுபவங்கள் வித்தியாசமானவை. அவை அங்கு சென்றால் ம்ட்டுமே கிட்டும்.
4)//நான் பெற்றுள்ள வாழ்வின் தரம் மற்றும் நிம்மதி கண்டிப்பாக அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிரான்ஸிலோ கிடைத்திராது என்பதே நிஜம்.//
இது உங்கள் தனிப்பட்ட கருத்து, அது பொது விதியாக ஆகாது. நல்ல கட்டமைப்பு, நல்ல லைப்பரிகள், ஆராய்ச்சி செய்ய வசதிகள் என ஒவ்வொருவரின் தேவையும் மாறும் பொழுது அவர்கள்தான் தானிருக்குமிடத்தை முடிவு செய்ய வேண்டும்.
(தொடரும்...)
under graduate படிப்பிற்கு வெளிநாடு போவது முட்டாள்தனம் என்று மூளையுள்ள மாணவர்கள் யோசிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அப்படி அண்டர்கிராஜுவேட் படிப்பிற்கு வெளிநாண்டு செல்பவர்கள், பணத்தை வைத்துக் கொண்டு எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் முழிக்கும், அரசியல்வாதிப் பிள்ளைகள் தான்.
மற்றபடி, மெற்படிப்பு மேலை நாடுகளின் தரத்திற்கு இந்தியாவில் இருக்கும் பல்கலைக்கழகங்கள், அறிவியல் கழகங்கள் வெகு சொர்ப்பம். ஆகயால் வெளிநாட்டிற்குப் போவதைத் தவிர வேறு வழி இல்லை.
//
அது என்ன சார் உத்தங்குடி தெற்கு? தமாஷ் இருக்கட்டும்,
//
காலேஜ் தமாஷ் தான்...மேற்படிப்பிற்குப் போகும் நண்பர்களிடம் அடிக்கும் ஜோக்.!!
//
ஸ்போர்ட் இல்லாததால் எனக்கு ஏற்பட்ட ஒரே வருத்தம், இஸ்ரேல் செல்ல முடியாது என்பதாலேயே.
//
இப்ப கூட வாய்ப்பு இருக்கிறது...எக்கச்செக்க மக்கள், ஒரே ரவுண்டாக இஸ்ரேல், எகிப்து, ஜோர்டன் சுற்றி பார்க்க வருகிறார்கள். (இந்தியாவிலிருந்து தான்!!)
4) //அமெரிக்க தூதரகங்கள் வாயிலில் எவ்வளவு பேர் சூட், கோட் எல்லாம் போட்டுக் கொண்டு பிச்சைக்காரர்கள் போல நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை தில்லியில் பஸ்ஸில் செல்லும்போது பார்த்து கோபப்பட்டிருக்கிறேன்.//
இம்முறை பெரிதும் மாறிவிட்டதே. இப்பொழுது எல்லாம் நேர்க்காணலுக்கு பதிவு செய்து விட்டு அங்கு அந்நேரத்திற்கு சென்றால் போதுமே. இங்கு நியூயார்க்கில் இந்திய தூதரகத்தின் வாயிலில் அதிகாலை கூட்டத்தை நீங்கள் பார்க்க வேண்டும். இக்கரைக்கு அக்கரை பச்சை.
5) //ஒன்றும் கொடுக்காமல் இருந்தால் பணமாவது மிச்சம். என்ன, திட்டுவார்கள். திட்டட்டுமே.//
அதை விட இப்பொழுது எல்லாமே இந்தியாவில் கிடைக்கிறது. விலையும் ஏறத்தாழ ஒரே விலைதான். அதனால் சுமந்து கொண்டு போவது அர்த்தம் இல்லைதான்.
ஆக மொத்தம் இது எழுதப்பட்ட டார்கெட் ஆடியன்ஸ் இதனைப் படிக்கப் போவதில்லை. இதை மனதில் வைத்து கொஞ்சம் வேறு மாதிரி எழுதி இருக்கலாம். இப்பொழுது நீங்கள் ஒரு சார்பு நிலை எடுத்து அதை நியாயப்படுத்த முயல்வதாகவே தோன்றுகிறது.
சாரிங்க நம்பர் கொஞ்சம் மாறிப்போச்சு. இரண்டாவது பின்னூட்டத்தில் இருக்கும் கேள்விகள் 5,6 என இருக்கவேண்டும்.
ஆசிஃப் மீரான் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://asifmeeran.blogspot.com/2006/05/blog-post_30.html
"சவுதியில் மட்டும் என்று அவர் எழுதியிருப்பாரேயானால் நான் ஒருவேளை இதுகுறித்து வாய் திறந்திருக்க மாட்டேன்."
ஆக, சவுதியில் அப்படித்தான் என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். அதுவரைக்கும் சந்தோஷம். ஆனால் உங்கள் சக இசுலாமியர்கள் அதைக் கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள். நன்றி.
"நான் தற்போது வசிக்கும் துபாயில் அல்லது அமீரக நாட்டில், இஸ்லாமியரல்லாதவர் என்ற காரணத்துக்காக அவமானப்படுத்தப்பட்டவர்களை எத்தனை பேர் என்று டோண்டு ஐயா சொல்வாரா?"
ஐம்பது பேர், எனக்குத் தெரிந்து. அங்கு போய் திரும்பி வந்த என் நண்பர்கள் அவர்களில் அடக்கம். சிலர் இன்னும் அங்குதான் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை நான் கண்டிப்பாக கூறமாட்டேன்.
"அரபு மொழி தெரியாததற்காக வருந்தினாலும் அன்றாட வாழ்க்கையில் அது ஒரு தடையாக இருந்ததேயில்லை."
துரதிஷ்டவசமாக அங்கு உள்ளூர் கோர்ட்டுகளில் கேஸில் மாட்டும்போதுதான் அதன் அவசியம் தெரியும். அட, ஒன்பது ஆண்டுகள் அங்கு இருந்திருக்கிறீர்கள், அரபு மொழி கற்கவில்லையா? பொன்னான நேரத்தை வீணாக்கி விட்டீர்களே. அரபு மொழி இனிமையான மொழி. உங்கள் நிலையில் நான் இருந்திருந்தால் அதை கற்றுக் கொண்டு இன்னேரம் கவி சம்மேளன்களுக்கே போயிருப்பேன்.
"இத்தகைய அவமதிப்புகளை தாங்கள் சந்தித்திருக்கிறோமா என்பது குறித்து அமீரகம் வாழும் இஸ்லாமியரல்லாத பதிவாளர்கள் தயைசெய்து வாய் திறக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்."
அப்படி அவமானத்தை சந்தித்திருப்பவர்கள் வாய் திறப்பார்கள் என்று நிச்சயமாகவே எதிர்பார்க்கிறீர்களா? ரொம்பத்தான் அரேபிய நியாய முறைகளை பற்றி அதீதமாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
அதர் ஆப்ஷனை நீங்கள் உங்கள் பதிவில் வைத்திருப்பதால், இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்" என்ற பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். அதை பார்த்து விட்டே இப்பின்னூட்டத்தை மட்டுறுத்தவும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/blog-post_30.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
விவசாயி 1967-ஆ? சென்ஸார் சான்றிதழில் 1966 என்று பார்த்ததாக ஞாபகம், ஆனால் அப்படத்தை நான் எண்பதுகளில்தான் பார்த்தேன். எது எப்படியானாலும் ஆசாத் அவர்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும்.
நல்லவேளை, அதை எழுதியது வாலி என்று நினைத்திருந்தேன். வெளியில் கூறாது தப்பித்தேன்.
இனிமையான, தன்னம்பிக்கை தரும் பாடல் இல்லை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
"தாங்கள் வேலைப்பார்க்கும் நிறுவனங்கள் அனுப்புவதால் செல்லும் ஊழியர்களுக்கு தாங்கள் கூறியது பொருந்தவே பொருந்தாது."
அதை நானே கூறிவிட்டேனே.
"நல்ல கட்டமைப்பு, நல்ல லைப்பரிகள், ஆராய்ச்சி செய்ய வசதிகள்..."
க்குகளாண்டவர் உபயத்தால் இங்கேயே கிடைக்கும். ஹார்வேர் விஷயத்தில் நீங்கள் கூறுவது சரியே. case by case ஸ்டடி தேவைப்படும்.
"இம்முறை பெரிதும் மாறிவிட்டதே. இப்பொழுது எல்லாம் நேர்க்காணலுக்கு பதிவு செய்து விட்டு அங்கு அந்நேரத்திற்கு சென்றால் போதுமே."
மிக்க மகிழ்ச்சி இதை கேட்க.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"இப்ப கூட வாய்ப்பு இருக்கிறது...எக்கச்செக்க மக்கள், ஒரே ரவுண்டாக இஸ்ரேல், எகிப்து, ஜோர்டன் சுற்றி பார்க்க வருகிறார்கள்."
எனக்கு இஸ்ரேல் போதும், ஆனால் பாஸ்போர்ட் எடுப்பதுதான் தொல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார், செளதி தவிர மற்ற அனைத்து அரபு நாடுகளிலும் ஓரளவு படித்தவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வேலை கொடுத்தால், வாழ்க்கை சொர்க்கம் சார். அதற்கு என்ன எல்லா நாட்டிலும் மனுஷனுங்க மாதிரி சில குறைகள் உண்டு. ஆனால் பய்ந்து ஓடுகிறா மாதிரி பெரிய பிரச்சனை எதுவும் கிடையாது.
இங்கு லோக்கல் அரபியர்கள் மிக நல்ல மாதிரி. அவர்களுக்கு இந்தியர்களின் மதிப்பு தெரியும். இந்தியர்களால் தான் தங்கள் நாடு இந்தளவு சுப்பிட்சம் அடைந்தது என்பது தெரியும்.
விவரம் தெரியாமல், ஏஜண்டிடம் பணம் கொடுத்துவிட்டு ஏமாந்து வருகிறவர்கள் கதை வேறு. ஏமாத்துகிற ஆட்கள், நம்மாளுங்க சார்.
"செளதி தவிர மற்ற அனைத்து அரபு நாடுகளிலும் ஓரளவு படித்தவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வேலை கொடுத்தால், வாழ்க்கை சொர்க்கம் சார்."
அப்படியா உஷா அவர்களே, நான் சந்தித்தவர்கள் கூறிய கதை வேறுமாதிரியாக அல்லவா உள்ளது. படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாது ஒட்டகம் மேய்க்க விடுகிறார்களாமே. இது சவுதியில் மட்டுமல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தோண்டு சார்,
சவூதியை விடுங்கள். அமீரகத்தில் எத்தனை பேர் அந்த நாட்டு அரசாங்க கம்பெனிகளிலும் அமைச்சரகத்திலும் வேலை செய்திருக்கிறார்கள்.
நான் அரசாங்க கம்பெனியில் வேலைப் பாத்தவன். அவமானங்களை அடக்கித்தான் எழுதுகிறேன்.
ஆம் துபாயில் ஒரு நல்ல பன்னாட்டு நிறுவனத்தில் வேலிசெய்தால் நல்ல காசுதான். ஆனால் இழப்பது என்னவென்று நான் பட்டியலிடுகிறேன்.
நான் இந்தியாவிற்க்கு திரும்பி வந்திருந்தால் என் மகனுக்கு அவனுக்கு வேண்டிய படிப்பு முதல் கார் வரை என்னால் விலைக்கு வாங்கித் தந்திருக்கு முடியும். என் மகனும் அந்த மனநிலையில்தான் இருந்தான்.
கனடாவிற்கு வந்ததில் அவன் மாறிவிட்டான். வாழ்க்கையில் எதையும் சொந்தமாக செய்யவேண்டும் என முனைப்பும். அவனுடைய பல்கழை படிப்பிற்க்கு எங்கே உதவித் தொகை கிடைக்கிறது, என்ன படிக்க வேண்டும் என ஒரு தெளிவான மனநிலை அவனுக்கு உள்ளது. இது இவனுக்கு மட்டுமில்லை இந்தியாவிலிருந்து வந்த அனைவருக்கும் உள்ளது. அவன் மாலை நேரங்களில் வேலைக்குப் போய் சம்பாதிக்கவும் ரெடியாக உள்ளான். நான் அனுமதிபதில்லை.
காசுக்காக வேலைப் பார்ப்பதை விட முதியோர் இல்லத்திலும் அனாதை இல்லத்திலும் சேவையில் ஈடுபட்டால் ஒரு ஈகை குணம் வரும் என்ற நம்பிக்கையில் அவனை அந்த இடங்களில் சேவை செய்ய அனுப்புகிறேன்.
இவை நான் வெளிநாட்டில் அனுபவித்த நன்மைகள்
//ஏமாந்து வருகிறவர்கள் கதை வேறு. ஏமாத்துகிற ஆட்கள், நம்மாளுங்க சார்//
திருமதி உஷா அவர்களே,
நம் ஆட்கள் ஏமாத்துவது ஒரு முறை தான். அவரிடம் ஏமாந்து அரேபியரிடம் வந்து மாட்டிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் ஏமாறுபவர்கள் ஏராளம்.
தயவுசெய்து உங்கள் வீட்டுக்கு வந்து சுத்தம் செய்பவரிடமும் உங்கள் காரை கழுபவரிடமும் கேளுங்கள் அவர் அவருடைய எஜமானனுக்கு எவ்வளவு கப்பம் கட்டுகிறார் என்று
ஆக ஒன்று நிச்சயம், கால்கரி சிவா அவர்கள் போட்ட போட்டில் 99% பதிவாளர்கள் சவுதியை ஆதரிப்பதை விட்டு விட்டார்கள். Welldone Siva!
அமீர்கம், குவைத் ஆகிய இடங்களில் நம்மவர்கள் சௌக்கியமாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே. நான் வெளியில் இருப்பவன். அங்கு உள்ளே இருக்கும் நம்மவர்களுக்கு அசௌகரியம் நினைக்க மாட்டேன்.
மற்றப்படி அமீரகம் பற்றி எழுதியது போகிற போக்கிலேயே. என் பதிவின் முக்கிய நோக்கமே வெளி நாடுகளுக்கு ஏன் போக வேண்டும் என்ற கேள்வியும் அப்படியே போக வேண்டுமானால் என்னென்ன செய்யலாம் என்பது பற்றிய ஆராய்ச்சியே ஆகும்.
மற்றப்படி அரேபியர்களை பற்றி எனக்கு என்ன அக்கறை இருந்து விடப்போகிறது? அவர்கள் மகாத்மா காந்திக்கு சமமானவர்களா? இருந்து விட்டு போகட்டுமே, எனக்கு என்ன நஷ்டம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
அறிவுரை எல்லாம் நல்லா இருக்கு.. ஆனா இதுவரை பாஸ்போர்ட் கூட இல்லாம, வெறும் கேள்வி ஞானத்தில் அறிவுரை கொடுக்கும் போது தான் இடிக்குது..
அறிவுரையில் உண்மையிருக்கிறதா என்று பார்க்கலாமே. எல்லா விஷயங்களிலும் நமக்கு நேரடி அனுபவம் கிட்டி விடுமா என்ன? என்ன கற்றாலும் கற்றது என்னவோ கைம்மண் அளவுதானே.
நான் பாஸ்போர்ட் எடுக்காதது ஒரு தமாஷ் கதை. அது தனிப் பதிவுக்கு உரியது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நமக்கு நேரடி அனுபவம் கிட்டி விடுமா என்ன? என்ன கற்றாலும் கற்றது என்னவோ கைம்மண் அளவுதானே.
//
தெரியலைங்க.. பொதுவா நான் யாரோ சொன்னதை எல்லாம் என்னோட சொந்த கருத்தா ஆணித்தரமா சொல்வது இல்லை.. இப்போ உங்க நண்பர்கள் சொன்ன- காட்டிய - அரபு நாடுகள் ஒரு மாதிரி. உஷா சொல்வது வேறு மாதிரி இருக்கு..
ஒரே மாதிரி exposure- ஐச் (சரியான தமிழ்வார்த்தை கிடைக்கவில்லை) சந்தித்த ஐந்து பேரானாலும் ஐம்பது பேரானாலும் அவர்கள் சொல்வது ஒரே மாதிரி தான் இருக்கும். அது சரிதானா என்பதை நிச்சயமாக உணராமல் கருத்து உருவாக்கிக் கொண்டு, அதை அழுத்திச் சொல்வது என்னைப் பொறுத்தவரை சரியில்லை.
அதிலும், நீங்க சொல்வதைப் பார்த்தால், "உண்மை இருக்கிறதா" என்று நானே நேரில் சென்று/ நேர்ப்படச் சோதனை செய்து தானே பார்க்கவேண்டும்?! இது ஒன்றும் முடிவான உண்மையில்லையே? இதுவும் ஒரு சாராரின் கருத்து என்றவகையில் வேண்டுமானால் நீங்க சொல்வதை எடுத்துக் கொள்ளலாம்.
பொன்ஸ், சிவா எழுதியதற்கு இப்பொழுதுதான் ஆசிப்மீரான் பதிவில் பதில் கொடுத்துவிட்டு வருகிறேன்,
சிவா, டோண்டு சார், பொன்ஸ் அங்கப்போய் படிச்சிடுங்க !
"ஒரே மாதிரி exposure- ஐச் (சரியான தமிழ்வார்த்தை கிடைக்கவில்லை) சந்தித்த ஐந்து பேரானாலும் ஐம்பது பேரானாலும் அவர்கள் சொல்வது ஒரே மாதிரி தான் இருக்கும்."
அவ்வளவு சுலபமா நீங்கள் கூறுவது? ஒரே எக்ஸ்போஷர் இல்லையென்றால்? கால்கரி சிவா அவர்கள் இப்பதிவில் எழுதியதையும், ஆசிஃப் மீரன் அவர்களின் பதிவில் http://asifmeeran.blogspot.com/2006/05/blog-post_30.html எழுதியதையும் பாருங்கள். நான் கல்ஃப் மற்றும் சவுதியை பற்றிக் கூறியது போகிற போக்கிலேயே. பதிவின் முக்கிய விஷயமே வேறு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் அனுபவம் நன்றாக இருந்ததற்கு மிக்க மகிழ்ச்சி உஷா அவர்களே. நான் பேசியது அவ்வாறு நல்ல அனுபவம் பெறாதவர்கள் குறித்துத்தான்.
அதுவும் வெளி நாட்டுக்கு செல்லும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைத்தான் கூறினேன்.
இது வரை கால்கரி சிவா அவர்களின் சவுதி அனுபவத்தை மறுத்து எழுதியவர்கள் கூட இப்போது சவுதியை அம்போ என்று விட்டு விட்டார்களே. அதை பற்றி ஏதேனும் கருத்து?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அமெரிக்க தூதரகங்கள் வாயிலில் எவ்வளவு பேர் சூட், கோட் எல்லாம் போட்டுக் கொண்டு பிச்சைக்காரர்கள் போல நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை தில்லியில் பஸ்ஸில் செல்லும்போது பார்த்து கோபப்பட்டிருக்கிறேன்.//
டோண்டு சார்
அதெல்லாம் பழங்கதை.நான் டீஷர்ட் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு தான் போனேன்.8 மணிக்கு விசா இன்டர்வியு.7.50க்கு போனேன்.இரண்டே நிமிதத்தில் உள்ளே அனுப்பி விட்டார்கள்.உள்ளே டி.டி தந்து சர்டிபிகேட் சரி பார்க்க 15 நிமிடம்.இன்டர்வியு ஹாலில் சேர் போட்டு உட்கார வைத்தார்கள்.இன்டர்வியு துவங்கி இரண்டு நிமிடம் தான் நீடித்தது.விசா கொடுத்து விட்டார்கள்.
பேப்பர்கள் சரியில்லை,கோல்மால் செய்தோம் என்றால் தான் பிரச்சனை.ஒரு காரணமும் இல்லாமல் விசா ரிஜக்ட் செய்வதும் உண்டு.சந்தேகம் வந்தால் நீண்ட நேரம் இன்டர்வியு செய்வார்கள்.
அமெரிக்காவில் இருப்பது ஒருவிதத்தில் டில்லியில் இருப்பதுபோல்தான்.ஒன்றரை நாள் விமான பயணம்.டில்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வர 3 நாள் ஆகுமா?
இங்கே மக்கள் அன்பானவர்கள்.எந்த இனப்பாகுபாடும் கிடையாது.இந்தியாவில் கிடைக்கும் அனைத்தும் இங்கேயே கிடைக்கின்றன.உழைப்பவன் முன்னேற இங்கு வானமே எல்லை.
அமெரிக்க தூதரகத்தில் நிலைமை மாறியதில் மிக சந்தோஷம். நான் தில்லியில் கடைசியாக இருந்தது 2001-ல். ஐந்து ஆண்டுகளில் முன்னேற்றமா? பலே.
இது விஷயமாக் அப்டேட் செய்ததற்காக இலவச கொத்தனார் மற்றும் செல்வன் அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?...//
எண்ண வளம் இல்லை இந்தத் திருநாட்டில்!
exposure=வெளிக்கொணர்வு;
வெளிப்படுத்துதல்
[சரியாக இருக்குமா?]
எண்ணை வளம் இல்லைதான். மற்ற வளங்கள் உண்டல்லவா?
எக்ஸ்போஷர் என்றால் சில விஷயங்களுக்கு தங்களை உட்படுத்திக் கொள்வது என்று பொருள். வெளிக்கொணர்வோ வெளிபடுத்தலோ இருக்க முடியாது. உள்வாங்கல் என்ற ரேஞ்சில் வேண்டுமானால் யோசிக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெனாத்தல் சுரேஷ் அவர்கள் எனக்கிட்ட பின்னூட்டம் மின்னஞ்சலில் வந்தது. அவர் கேட்டுக் கொண்டபடி நான் இங்கு அதை ஏற்றுகிறேன்.
"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்" - எல்லாம் இருக்கிறது. அதில் ஒரு குறையும் இல்லை. அதே நேரத்தில் வெளிநாடு செல்வது அப்படி ஒரு பெரிய தவறும் இல்லை என்றே நான் நினைப்பதால்தான் இப்போது அமீரகத்தில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறேன்.
நீங்கள் ஜெர்மனிக்கும் ப்ரான்ஸுக்கும் போகாதது உங்கள் தனிப்பட்ட தேர்வு. அதே தேர்வு, மனப்பாங்கு எல்லாரிடத்திலும் எதிர்பார்க்க முடியாது. தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம், வெளிநாட்டிலிருந்து வருபவர்களைப்பார்க்கையில் அனைவருக்கும் சற்று அதிகமாகவே தென்படுவதன் விளைவுதான் இந்த மோகம். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கையில் புரளும் காசு, அவர்களின் குறைகளை மறைத்து, நிறைகளை அதீதமாக்கும் விவரிப்புகள் ஆகியவை தரும் மயக்கத்தை அவ்வளவு சுலபமாக விட்டுத்தள்ளி விடமுடியாததுதான் காரணம். எல்லா நாட்டிலும் குறைகளும் நிறைகளும் உண்டு, குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்ள வேண்டியதே அறிவுடையோரின் வழி. பொத்தாம் பொதுவாக வெளிநாடு செல்பவர்கள் எல்லாம் இந்தியாவை விற்று விட்டார்கள், அந்நிய தேசத்துக்கு அடிமைப்பட்டு விட்டார்கள் என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து கொண்டிருக்கிறது.
வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை, நான் இருக்கும் அமீரகத்திலோ, பயணம் செய்துள்ள கத்தார், பஹ்ரேன் போன்ற நாடுகளிலோ, வாழ்க்கை அவ்வளவு இனிமையானதில்லை என்பதைப் பார்த்திருக்கிறேன் - நான் எந்தக் கொடுமையையும் அனுபவித்து விடவில்லை - நான் சார்ந்த நிறுவனமும், நுழைந்த பதவியும் அதற்குக் காரணங்கள் - என்றாலும், வறுமை தலைவிரித்தாடும் பல இந்தியர்களைச் சந்தித்திருக்கிறேன், பெரிய படிப்பு படித்து சிறிய வேலை (ஒட்டகம் மேய்ப்பது போன்ற சொலவடைகளை விட்டுத்தள்ளுங்கள்..) செய்பவர்கள், குடும்பத்தைக் காக்க தியாகம் செய்து வாழும் இளைஞர்கள், ஏமாற்றிய ஏஜண்ட் ஏற்றிய கடனுக்காக காலம் தள்ளுபவர்கள்.. பல சோகக்கதைகள் இங்கு உலவுகின்றன.
இவற்றுக்கு முக்கிய காரணம், வெளிநாடு சென்றால் நம் பிரச்சினைகள் ஒழிந்துவிடும் என்ற எதிர்பார்ப்புகளும், எப்பாடு பட்டேனும் செல்ல வேண்டும் என்ற பேராசையும் என்ற உங்கள் வாதத்தையும் ஏற்கிறேன்.
உங்கள் பதிவில், சில இடங்களில் அலட்சியமாகப் போடப்பட்ட சில வார்த்தைகள், வேண்டுமென்றேவா எனத்தெரியவில்லை. முக்கியமாக:
இஸ்லாமியர் அல்லாதவர் வளைகுடா நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவுரை.. என்ன சொல்ல வருகிறீர்கள்? இங்கே இஸ்லாமியர்களுக்கு முதல்தர மரியாதை கொடுக்கப்படுகிறதென்றா? நிச்சயமாக இல்லை என்றே சொல்லுவேன். எல்லாத் தொழில்களிலும் எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள் - மூத்த மேலாளரிலிருந்து கடைமட்டத் தொழிலாளி வரை வழக்கமான வர்க்க ரீதியான மரியாதையே காட்டப்படுகின்றது என்பதே என் அனுபவம். என் பணியிடத்தில் எனக்குப்போட்டியாக உள்ள அனைவரையும்(எல்லாரும் பாகிஸ்தானியர்) நான் முந்துவதற்குக் காரணம், திறமையை மட்டுமே கொண்டு மதிப்பிடும் என் அரபி மேலாளர்.
டிரைவிங் லைசென்ஸ் பற்றி ஆசீப் மீரானின் பதிவில் விரிவாகவே எழுதி இருக்கிறேன்.
Favoritism என்பது எல்லா நாடுகளிலும், எல்லா நிலைகளிலும் தனிப்பட்ட குணமாக இருக்கிறது. ஒரு கல்லூரியில் மார்க் குறைத்துப்போட்ட ஒரு குறிப்பிட்ட மத / இன ஆசிரியரை முன்வைத்து அந்த மத / இனத்தவர் எல்லாரும் மோசம் என்று சொன்னால் ஏற்பீர்களா? அவ்வாறு அவர் செயல்பட்டதற்கு கல்லூரி நிர்வாகம் துணை போனால் வேறு கதை.
எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்தச் சட்டத்தை மதித்தே வாழ வேண்டும், ஒரு ஐரோப்பியன் தண்ணி அடித்துவிட்டு இந்தியாவில் வண்டி ஓட்டி, ஒரு நேர்மையான காவலரால் கைது செய்யப்பட்டால் அவன் நாட்டுத் தூதரகம் இந்தியாவில் அவனை விடுதலை செய்ய முடியுமா?
நான் சவுதியைப் பற்றி எதுவும் கூறாததற்கு ஒரே காரணம் நான் அங்கு இது வரை செல்லாதது மட்டுமே!
நன்றி.
Suresh – Penathal
பெனாத்தல் சுரேஷ் அவர்களே,
உங்கள் அனுபவங்கள் நன்றாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. என்னுடைய பதிவின் முக்கிய தீமே வெளிநாடு என்பதற்காக தேவையின்றி மோகம் கொள்ளாதீர்கள் என்பதை வலியுறுத்துவதே. ஆகவே நம் நாட்டிலேயே எல்லாம் கிடைக்கிறது என்று கூறினேன்.
மற்றப்படி கல்ஃப் மற்றும் சவுதியை பற்றி நான் எழுதியது என் நண்பர்கள் என்னிடம் தங்கள் சொந்த அனுபவத்தைப் பற்றி கூறியதை வைத்தே.
இது வரைக்கும் யாரும் சவுதியை பற்றி நன்றாக ஒன்றும் கூற முடியவில்லை அல்லது கூறவில்லை என்பதையும் பார்க்கிறேன். மிஞ்சுவது கல்ஃப். ஜாக்கிரதையாக இருங்கள், முடிந்தால் அங்கு போவதை தவிர்க்கவும் என்று என் சக இந்துக்களுக்கு கூறுவது தவறு என நான் நினைக்கவில்லை. என் கருத்து அது.
"பெரிய படிப்பு படித்து சிறிய வேலை (ஒட்டகம் மேய்ப்பது போன்ற சொலவடைகளை விட்டுத்தள்ளுங்கள்..) செய்பவர்கள், குடும்பத்தைக் காக்க தியாகம் செய்து வாழும் இளைஞர்கள், ஏமாற்றிய ஏஜண்ட் ஏற்றிய கடனுக்காக காலம் தள்ளுபவர்கள்.. பல சோகக்கதைகள் இங்கு உலவுகின்றன."
பாஸ்போர்ட் முதற்கொண்டு முக்கிய பேப்பர்களை ஸ்பான்சர் தன் வசம் வைத்துக் கொள்வதாகக் கேள்விப்பட்டேனே. அது பற்றி ஏதேனும் கூறமுடியுமா?
வேறு இடத்தில் வேலை தேடும் உரிமை உள்ளதா? அதற்கும் பேப்பர்கள் வேண்டுமே?
நீங்கள் ஜாக்கிரதையாக இருந்திருக்கிறீர்கள், அல்லது இந்தியாவில் வேலை செய்த நிறுவனத்தின் சார்பில் சென்றிருக்கிறீர்கள் ஆகவே நல்ல நிலைமையில் இருக்கிறீர்கள் என்பதுதானே நிஜம்?
அதைத்தானே நானும் கூறுகிறேன்? மறுபடியும் கூறுவேன் இசுலாமிய நாடுகளுக்கு செல்லும் இந்துக்கள் இரட்டிப்பு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று. ஜாக்கிரதையாக இருங்கள் எனக் கூறுவது தவறா? அவ்வாறு இருக்க முடியாதவர்கள் அங்கு செல்வதையே தவிர்க்கவும் என்றுதான் கூற வேண்டும்.
இந்துக்கள் மீது கெட்ட எண்ணம் அரபிகளின் பிறவிக்குணம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment