வடை பஜ்ஜி பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இது.
//விவசாயத்திற்கு தேவையான மண்ணோ, நீரோ மற்றும் பூலோக அமைப்போ
இல்லாத பாலைவனமான சவுதியை சோலைவனமா மாத்த அங்கங்க மணல், தண்ணி அது இது அப்படின்னு வாங்கி விவசாயத்த பெருக்க அந்த நாட்டு அரசு முயல்கிறது, அதில் குறிப்பிட தக்க அளவு வெற்றியும் பெற்று உள்ளது. நாம பூத்துக் குலுங்கும் சோலைவனமா உள்ள நமது நாட்ட பாலைவனமா மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பது தான் சுவனப்பிரியனோட கட்டுரையின் சாரம்.
எவ்வளவு நல்ல கருத்து இது? எவ்வளவு உண்மையும் கூட. இதை எவ்வளவு ஆக்கபூர்வமான விவாதத்திற்கு உரியதாக நீங்கள் மாற்றி இருக்கலாம் ? அதெல்லாம் விடுத்து சவூதி அரேபியா என்ற பெயர் வந்து விட்டதா , உடனே எதிர்த்தாக வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் நீங்கள் கட்டுரை தீட்டியதோ ஏனோ?????//
இதற்கெல்லாம் பல பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே இஸ்ரேல் நெகேவ் பாலைவனத்தை சோலை வனமாக மாற்றி விட்டது.
லஞ்ச லாவண்யங்கள் ஏதுமின்றி குஜராத்தில் மோதி அரசு திறம்பட அரசை நடத்தி வருகிறது. அதையே இந்தியாவின் மற்ற நாடுகளிலும் பின்பற்றுவது எல்லோருக்கும் நல்லது.
இப்பின்னூட்டத்துக்கு இசுலாமிய பதிவர்கள் எவ்வாறு எதிர்வினை புரிவார்கள் என நினைக்கிறீர்கள்?
இப்போது எனது இப்பதிவின் விஷயத்துக்கு வருவோம்.
நெகேவ் பாலைவனம் பற்றிய இஸ்ரேலின் டூரிசம் வீடியோ கீழே.
மற்றொரு வீடியோ
இஸ்ரேல் உருவாவதற்கு முன்பிருந்தே அங்கு யூதர்கள் பல முன்னேற்றங்களை விஞ்ஞானம் தொழில் நுட்பத்தில் கொண்டு வந்துள்ளது பற்றி இங்கு பார்க்கவும்.
இஸ்ரவேலர்கள் பல முறை நம் நாட்டுக்கும் தனது விவசாய முறைகளை கற்றுக் கொடுக்க முன்வந்தது. இசுலாமிய ஓட்டு வங்கியை மனதில் கொண்ட இந்திய அரசு அதை மறுத்து வந்திருக்கிறது. ஏதோ நல்ல புத்தி வந்து இப்போதுதான் இஸ்ரேலுடன் பல துறைகளில் - முக்கியமாக தீவிரவாதத்துக்கு பலமான எதிர்வினை - ஒத்துழைக்க ஆரம்பித்துள்ளது. இது போதாது. மேலும் செய்ய வேண்டும் என்பதே என் அவா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
-
ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 என்னும்
நூலுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஓர்
ஆய்வ...
2 hours ago
50 comments:
அவரோட எண்ணப்படி இந்தியா பாலைவனமாகி பின்னர் அதிலிருந்து பெட்ரோல் ஊற்று கிளம்பி அதைவிற்று களிமண் வாங்கி விவாசயம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ என்னவோ.
இந்தியா சவுதி அரேபியா போன்று நில அமைப்புக்கு மாறவேண்டும் என்று எந்த ஒரு குடிமகனும் விரும்பமாட்டான்.
அரசியல் ரீதியான ஒப்பீடு செய்யவும் சவுதி அரேபியா மதச் சார்பு அற்ற நாடும் அல்ல, நிள வள அமைப்பைப்பற்றி ஒப்பிடவும் பெரிதாக அங்கே ஒன்றுமே இல்லை.
நண்பர் சுவனப்பிரியன் சவுதிபற்றிய புகழ்ச்சிகளை நான் எதிர்க்கவில்லை, ஆனால் அவரின் ஆதங்கம் என்று அங்கே இந்தியாவை இழுத்துவந்ததால் இந்தியாவிலிருந்து வயிற்றுப்பிழைப்புக்குச் சென்றவர்கள் சீரழிக்கப்படுவதை நான் குறிப்பிட வேண்டி இருந்தது, அதில் சுவனப்பிரியன் தவிர்த்து பிறரது எதிர்பதிவுகளை நான் கண்டு கொள்ளததற்கு அவர்களில் யாரிடமும் நான் உரையாடியதும் இல்லை.
நல்லதொரு பயனுள்ள பதிவு.
என் ஒரு பதிவை வைத்து தொடராக நான்கு பதிவா! எப்படியோ கோவி கண்ணன் தனது தவறை சரி செய்து கொண்டால் நல்லது.
டோண்டு ராகவனும் உதாரணத்திற்கு இஸ்ரேலை கொடுக்கிறார். இஸ்ரேல் செய்யும் சிறந்த கண்டுபிடிப்புகளை பாராட்டுவோம். அதே சமயம் பாலஸ்தீனர்களுக்கும் உலக மக்களுக்கும் அவர்கள் செய்யும் தீமையையும் படம் பிடித்து காட்டுவோம்.
குஜராத்தின் வளர்ச்சி என்பது அந்த மக்களுக்கு போய் சேர வேண்டியது. குஜராத்தின் முதல்வiராக காமெடி நடிகர் செந்தில் அமர்ந்திருந்தாலும் இந்த வளர்ச்சியையே குஜராத் பெற்றிருக்கும். :-)
முன்னுதாரணமாக கொண்டு செயல்பட எத்தனையோ தேசம் இருக்கும் போது "சௌதி"யையா முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்பது உங்கள் மறைமுக கருத்து. இந்திய திரு நாடு எத்தனையோ சிக்கல்களுக்கு மத்தியில் இத்தனை வளர்ந்ததே பெருமையான பெரிய விஷயம். எது செய்தாலும் எங்களால் ஏற்று கொள்ள முடியாது என்று சொல்வதற்கு ஒரு பிரிவு. சோஷலிசம் பேசி நாட்டை சிதறடிக்க துடிக்கும் இன்னொரு பிரிவு. இத்தனைக்கு மத்தியிலும் - ஜனநாயகத்தில் (பலகுறைபாடுகளுக்கு இருந்தாலும்) முன்னுதாரணமாக பல நாடுகளுக்கு இருப்பது எதிர் தரப்புக்கு புரியவே புரியாது - எந்நாளும்.
@சுவனப்பிரியன்
மோதி வருவத்ற்கு முன்னால் குஜராத்திலும் ஊழல், மின்வெட்டுகள், பர்றாக்குறை பட்ஜெட் ஆகியவை கோமாளி காங்கிரஸ் முதல்வர்கள் இருந்தபோது (செந்தில் எவ்வளவோ தேவலை) இருந்தன.
மோதியிடம் ஒரு ஊழலைக் கூட பார்க்க முடியாது கோமாளி காங்கிரசார் 2007 தேர்தலில் தவித்த தவிப்பு மறந்து விட்டதா.
கோவி கன்ணனை குறை கூறிய நீங்களும் அதே தவற்றை செய்வது நகைப்புக்குரியது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@சுவனப்பிரியன்
"குஜராத்தின் வளர்ச்சி என்பது அந்த மக்களுக்கு போய் சேர வேண்டியது. குஜராத்தின் முதல்வiராக காமெடி நடிகர் செந்தில் அமர்ந்திருந்தாலும் இந்த வளர்ச்சியையே குஜராத் பெற்றிருக்கும். :-)"
அதென்ன சார் "காமெடி நடிகர் செந்தில் அமர்ந்திருந்தாலும்". எந்த அர்த்தத்தில் இவ்வாறு கூறுகிறீர்கள்? காமெடி நடிகர்கள் என்றால் விபரம் அறியாதவர்கள் (அல்லது முட்டாள்கள்?), எனவே ஒன்றுமே அறியாதவர் கூட செய்யக்கூடிய ஒரு விஷயம் தான் இது என்ற அர்த்ததிலா? அப்படியென்றால் ரஜினி, கமல், வி.காந்த் போன்றோர் மிக்க விபரமறிந்தவர்களா? அல்லது நம்பியார், அசோகன் மற்றும் வில்லன் நடிகர்கள் கொலைகாரப் பாதகர்களா?
அருமையான பதிவு,
சூரிய ஒளி பயன் பாட்டில் கூட இஸ்ரேல் முன்னிலையில் இருப்பதையும் சொல்லி இருக்கலாம்.அது என்னவோ குஜராத்தும் இந்த பாலைவன சோலை சூரிய ஒளி பயன்பாடு என்று ஈடுபாடு காட்டுவது ஒரு வியப்பான ஒற்றுமை.
http://www.dnaindia.com/india/report_gujarat-to-generate-500-mw-solar-power-soon_1636627
//அதே சமயம் பாலஸ்தீனர்களுக்கும் உலக மக்களுக்கும் அவர்கள் செய்யும் தீமையையும் படம் பிடித்து காட்டுவோம்.//
சுவனப்பிரியன்!நான் டோண்டு சாருக்கு தனக்குத்தானே உதவியான்னு கேட்கத்தான் வந்தேன்.இந்த பதங்கள் என் கண்ணில் பட்டது.எதையும் சமபார்வை பார்க்க பழக வேண்டும்.பாலஸ்தீனியர்களுக்கு வந்தா இஸ்ரேல் தீமை.அதுவே ஈழத்தமிழர்கள் என்றால் ராஜபக்சேவுக்கு சார்பா ஈழத்தமிழர்கள் மேல் கோபத்துடன் பதிவுகள் வருகின்றன.ஈழத்தில் இஸ்லாமியர்களை இடம் பெயரச் செய்தது விடுதலைப்புலிகள் செய்த இன்னுமொரு வரலாற்றுத் தவறு.ஆனால் அதே தவறை பாகிஸ்தானிய காஷ்மீர் மக்கள் காஷ்மீர் பண்டிட்களை வெளியேற்றியதைக் கண்டிக்க மனம் வராது.
ஏனிந்த இரட்டை நிலை.
(டோண்டு சார்!பின்னூட்டத்தை அவிழ்த்து விடுங்கோ.ஏனென்றால் இந்த விசயத்தில் நீங்களும் கூட கோணப்பார்வையே பார்க்கிறீங்க.)
dondu சார்,
இஸ்ரேலை விட சவுதியே மேன்மையானது. அங்கே பாலைவனமே சோலைவனம் என்பதை..
pagadu.blogspot.com இல் படித்து அறிந்து உங்கள் மேலான கருத்தை கூறவும்.
Tm 11 "-" vote nanthan poten :) :) :)
ராஜ நடராஜன்!
//சுவனப்பிரியன்!
பாலஸ்தீனியர்களுக்கு வந்தா இஸ்ரேல் தீமை.அதுவே ஈழத்தமிழர்கள் என்றால் ராஜபக்சேவுக்கு சார்பா ஈழத்தமிழர்கள் மேல் கோபத்துடன் பதிவுகள் வருகின்றன.//
மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு எனது ஆதரவு என்றுமே உண்டு. அதே சமயம ஓரினம் தானே என்று விடுதலைப் புலிகளை என்னால் ஆதரிக்க முடியாது. அவர்கள் தமிழர்களுக்கு பண்ணிய கொடுமை எத்தனை ஆண்டுகளானாலும் மறையாது. அந்த அளவு கொடுமைகளை அவர்கள் இழைத்திருக்கிறார்கள்.
//ஈழத்தில் இஸ்லாமியர்களை இடம் பெயரச் செய்தது விடுதலைப்புலிகள் செய்த இன்னுமொரு வரலாற்றுத் தவறு.//
இப்பொழுதாவது ஒத்துக் கொண்டதற்கு நன்றி.
//ஆனால் அதே தவறை பாகிஸ்தானிய காஷ்மீர் மக்கள் காஷ்மீர் பண்டிட்களை வெளியேற்றியதைக் கண்டிக்க மனம் வராது.//
காஷ்மீர் மக்கள் விரட்டியதாக உங்களுக்கு யார் சொன்னது? பாகிஸ்தானிய கூலிப் படைகளுக்கு பயந்து சிலர் வெளியேறியிருக்கலாம். பண்டிட்டுகள் அனுபவிக்கும் அதே இன்னல்களை மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களும் அனுபவிக்கிறன்றனர். பிரச்னைகள் முடிந்தவுடன் அனைவரும் சொந்த இடங்களிலேயே மீள் குடியமர்த்தப்படுவார்கள். அதற்கு இஸ்லாமியரின் பூரண ஆதரவு உண்டு.
'சவுதி அரேபியாவைப் போல் சிறந்த ஆட்சியாகவும் வளமான நாடாகவும் நம் நாடு மாறுவது எப்போது?' என்று ஏங்கும் சுவனபிரியன் அறியாத விடயம் என்னவெனில்.... சவுதிமன்னர் 2000-ல் அங்கு செய்துகாட்டியதை இந்தியாவில் 1960களிலேயே செய்துகாட்டிவிட்டார் இந்திராகாந்தி அம்மையார். அன்றே 'கரிபி ஹட்டாவோ' (வறுமையே வெளியேறு) என்று கோசமிட்டு ஆட்சியை பிடித்துவிட்டு அவரது பேரன் காலத்திலும் வறுமையை காங்கிரஸ் கட்டிகாப்பதை போலவே,2002-ல் பட்டத்து இளவராயிருந்த தற்போதைய சவுதி ராசாவான அப்துல்லா
ரியாதின் வறியோர் குடியிருப்புகளை பார்வையிட்டு வறுமை ஒழிக்கபடும் என வாக்குறுதி அளித்தார். முதன்முறையாக சவுதி அரச குடும்பம் சவுதியில் வறுமை இருப்பதை ஒப்புக்கொண்டது அப்போதுதான். இதனால் அவர் “king of humanity” என பட்டப்பெயர் பெற்றாராம்.
2005-ல் அவர் மன்னரான பின்பு வறுமை ஒழிந்துவிட்டதா? 2010 சவுதியில் வறுமை அதிகரித்து வருவதாக ஒரு விவரணப்படம் தயாரித்துள்ளனர். - "Mal'ub 'Alayna" (Played on Us: Poverty Saudi Arabia) "Mal'ub 'Alayna" (Played on Us: Poverty Saudi Arabia). அதில் கூறப்படும் தகவல்கள் அதிர்ச்சயூட்டுவதாக உள்ளன. 22% சவுதி குடிமக்கள் வறுமையில் வாடுவதாக அவர்கள் கூறுகின்றனர்.மேலும் ஒரு இமாம் சவுதி மக்கள் வறுமையின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க போதை பொருட்கள் விற்பதாவும், சிலர் பெற்ற மகள்களையே பாலியல் தொழில் செய்ய அனுப்புவதாக கூறி நம்மை மயக்கமடைய வைக்கிறார், தமது நாட்டு குடிமக்கள் எவ்வளவு கஷ்டபட்டாலும் தளராமல் சவுதி அரசு அல்கொய்தா, லக்சர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு கோடிக் கணக்கில் கொடுத்து உதவுவது குறிப்பிடத்தக்கது.
///.ஈழத்தில் இஸ்லாமியர்களை இடம் பெயரச் செய்தது விடுதலைப்புலிகள் செய்த இன்னுமொரு வரலாற்றுத் தவறு.///
இஸ்லாமியர்கள் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழர்களுக்கே துரோகம் இழைத்தார்கள் என்பது புலிகள் வரலாறு. முஸ்லீம்கள் எங்கிருந்தாலும் முஸ்லீமகளாக மட்டுமே இருப்பார்கள். அவர்களை இடம் சார்ந்தும், மொழிசார்ந்தும் நம்ப முடியாது. அதன் எதிரொலிதான் புலிகளின் முஸ்லீம் எதிர்ப்பு நிலைப்பாடு.
// இஸ்ரேல் செய்யும் சிறந்த கண்டுபிடிப்புகளை பாராட்டுவோம். அதே சமயம் பாலஸ்தீனர்களுக்கும் உலக மக்களுக்கும் அவர்கள் செய்யும் தீமையையும் படம் பிடித்து காட்டுவோம்.//
சுவனப்பிரியர், நீங்களெல்லாம் 'அதே சமயம்' நன்மை தீமை பேச வேண்டும் என்று நினைக்கும் போது நான் செய்தால் தான் தவறா ?
//எப்படியோ கோவி கண்ணன் தனது தவறை சரி செய்து கொண்டால் நல்லது.
//
இதுல திருந்த ஒன்றும் இல்லை. நீங்கள் வேண்டுமானால் திருந்திங்கள், ஒரு மதத்தை சார்ந்தவர் என்பதால் அந்த மதம் சார்ந்த நாட்டுக்கு முட்டுக் கொடுக்கலாம் என்பதை திருத்திக் கொள்ளுங்கள்.
திருப்பதிக்கும், சபரிமலைக்கும் தமிழகத்தில் இருந்து பக்தர்கள் சென்றுவருகிறார்கள், அதன் சாக்கிட்டு யாரும் தமிழகத்தைவிட ஆந்திராவும் கேரளவும் சிறந்தது என்றோ அவர்களைப் பார்த்து தமிழகம் திருந்த வேண்டும் என்றோ கூறிக் கொள்வது இல்லை.
@கோவி கண்ணன்
எனது பதிவின் அடிநாடத்தையே சுருக்கமாகக் கூறி விட்டீர்கள். நன்றி.
@ஹைராம்
உங்களுக்கு இசுலாமியரின் எதிர்வினைகள் சீறிக்கொண்டு வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஏன் எனது பின்னூட்டத்தை வெளியிடவில்லை என அறிந்துகொள்ள இயலுமா சார்?
//@ஹைராம்
உங்களுக்கு இசுலாமியரின் எதிர்வினைகள் சீறிக்கொண்டு வரும். //
டோன்டு உன் வேலையே சிண்டு முடியுறதுதானோ?
ஏறக்குறைய தொநூற்று ஐந்து விழுக்காடு இந்திய கிருத்துவர்கள் அமெரிக்காவையோ அல்லது வேறு எந்த கிருத்துவ நாட்டையோ தவறென்றால் கண்டிக்காமல் இருந்ததில்லை. இந்திய ராணுவம் நாகாலேந்திலோ அல்லது மிசாரத்திலோ தீவிரவாதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால்
கேரளத்திலோ அல்லது கோவாவிலோ உள்ள கிருத்துவர்கள் கொடிபிடித்து, ஐயோ கிருத்துவர்களை கொல்லுகிறார்களே என்று சொல்லுவதில்லை, கலாட்டா
செய்வதுமில்லை! பாரிசிகளை பற்றி சொல்லவேண்டியதில்லை! தாய்மண் இரானைவிட இந்தியாவை நேசிப்பவர்கள் அவர்கள்!
ஆனால் இஸ்லாமிய நாடென்றால் அவர்கள் எவ்வளவு மோசமான ஆட்சியாளர்கள் என்றாலும் நல்லவன், வல்லவன் என்ற நிலை எடுக்கும் ஒரே சமூகம், இஸ்லாமிய சமூகம் மட்டுமே!!!! வாய்கூசாமல் காஷ்மிரி பண்டிட்டுகள் "சிலர்" ஓடி விட்டார்கள் என்று கூறும் இவர்களின் இருமாபுக்கும் மதவெறிக்கும் ஞயம் காண்பது என்பது முடியாத செயல்.
ஆனானப்பட்ட அப்துல் கலாமையே வாய் கூசாமல் காரி உமிழும் மதவெறி கும்பல் (ஏனென்றால் அவர் மற்ற மதங்களை வெறுத்து இஸ்லாமே உண்மை என்று கூறவில்லையாம், அதானால் அவர் இந்துத்துவா அடிவருடியாம்), எதைதான் ஞாய உணர்வுடன் நோக்குவார்கள்! அவர்கள் பார்வை இஸ்லாம் மூலம் மட்டுமே வெளிவரும்! உலகில் உள்ளவை எல்லாமே இஸ்லாத்தால் எடை போடபட்டுதான் கருத்துகொள்ளப்படும் என்று இயங்கும் மத வெறியர்களுக்கு
இஸ்லாமியத்தை தாண்டி அறிவுசார்ந்த பொருள் என்றுமே இல்லை!
திரு சுவனப்பிரியனின் அறிவார்ந்த எழுத்துகளுக்கு சில பதில்கள்!
// அதே சமயம் பாலஸ்தீனர்களுக்கும் உலக மக்களுக்கும் அவர்கள் செய்யும் தீமையையும் படம் பிடித்து காட்டுவோம்.// உலகமக்களுக்கு இசரேலியர்கள் தீமை செய்தார்களா? எப்பொழுது சார்??? கொஞ்சம் கூட வாய்மையே இல்லாத ஒரு வசைக்கு தகுந்த பதில் கீழே!
உலக முன்னேற்றத்திற்கு யூதர்களின் பங்கு மிக மிக அதிகம்! கிட்டத்தட்ட நூற்றி அறுபது நோபில் பரிசுகளை அவர்கள் இதுவரை பெற்றிருக்கிறார்கள் (அறிவியல் சார்ந்த பரிசுகள் மட்டும்) !! அவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பால்தான் இன்றைய உலகின் பல பல அறிவியல் ஆக்கங்கள் சாத்தியமாயின!! அதே சமயம் அரேபியர்கள் பெற்ற ஒரே அறிவியல் நோபில், அஹ்மத் சவாயில் என்ற எகிப்தியர் பெற்றது. மற்றொரு இஸ்லாமியர், திரு அப்துல் சலாம் என்ற
பாகிஸ்தானியர்! அவரை இறந்த பின்னர் அவர் கல்லறையை உடைத்து அவர் இஸ்லாமியர் இல்லை என்று எழுதப்பட்டது வேறு கதை (அவர் அகமதியா வகுப்பை சேர்ந்தவர் ஆனாதால் அவர் இஸ்லாமியர் இல்லை என்று பாகிஸ்தான் அறிவித்துவிட்டது, அவரும் பாகிஸ்தானுக்கு பிணமாக மட்டுமே வந்தார், இருந்ததெல்லாம் அமெரிக்காதான்)!!
இதை தவிர அரேபியர்களி உலகக்கொடை பெரிதாக ஒன்றுமில்லை! அரேபியா அளிக்கும் ஒரே கோடை உலகில் உள்ள மதராசாக்களுக்கு துட்டு கொடுத்து
மனித நேயம் உள்ள மத வெறி இல்லாத இஸ்லாமியரை வகாபிகளாக, திரு சுவனப்பிரியனைபோல மத வெறியர்களாக மாற்றுவது!!
இப்படி அழுகி போய், எண்ணை பணத்தால் மட்டுமே அழகுபூசி, அழுக்கை மறைத்து திரியும் நாட்டை ஒருவர் கொண்டாடுவது, இஸ்லாம் என்ற ஒன்றைத்தவிர
வேறு ஒன்றுமே இல்லை
//அதே சமயம ஓரினம் தானே என்று விடுதலைப் புலிகளை என்னால் ஆதரிக்க முடியாது. அவர்கள் தமிழர்களுக்கு பண்ணிய கொடுமை எத்தனை ஆண்டுகளானாலும் மறையாது. அந்த அளவு கொடுமைகளை அவர்கள் இழைத்திருக்கிறார்கள்//.
எப்போ எப்போ வசதியோ அப்பப்போ தமிழர்கள் நாங்கள் என்று கூறவேண்டியது! பிரபாகரனை பற்றி எனக்கு ஒரு பெரிய அப்பிபிராயம் இல்லாவிட்டாலும், ஒரு விடயத்தில் அவர் தெளிவாகவே இருந்ததாக நான் கருதுகிறேன்! அது என்னவென்றால் தன்னின் எதிரிகள் யார் என்று நிலை நிறுத்துவதில்!
அதாவது அவருக்கு இரு எதிரிகள் என்று என்றுமே நினைத்தார்!ஒன்று, சிங்கள அரசு, மற்றொன்று தன் தலைமையை ஏற்காத இலங்கை தமிழர்கள்!!!
இரண்டாவது எதிரி, அதாவது தன் தலைமையை ஏற்காத இலங்கை தமிழர்கள் இந்துவா, கிருத்துவரா, இஸ்லாமியரா என்றெல்லாம் அவர் பார்த்ததாக தெரியவில்லை! எதிரி, அவ்வளவே!! அந்த விடயத்தில் அவர் தெளிவாக இருந்தார் என்றே தோன்றுகிறது! அப்படி இருக்கையில், தமிழ் பேசும் ஒரு சமூகம், நாங்கள் தமிழர் அல்ல, ஆதலால் நீங்கள் எங்களுக்கு தலைவர் அல்ல என்று கூறினால் கோபம்தானே வரும்?? சமயம் வரும்பொழுது தமிழர், வேலை ஆகிவிட்டால் நாங்கள் இஸ்லாமியர், உங்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று கூறுவது, நம்ம ஊரு பகுத்தறிவு
அரசியலில் வேண்டுமானால் எடுபடலாம்! ஆனால் பிரபாகரனிடம் எடுபடவில்லை! அதனால்தான் ஒரு சமூகத்தின் துரோகமாக இஸ்லாமியரின் செயலை அவர் பார்த்தார்! எப்பொழுது அவர்கள் நாங்கள் தமிழர்கள் இல்லை, இஸ்லாமியர் மட்டுமே என்று கூறினார்களோ, அப்போழ்தே
அவர்களை அந்த இடங்களை விட்டு அப்புரப்படித்தினார், அதாவது வடக்குபகுதிகளில் இருந்த சிங்களவர்களை தெற்கிற்கு விரட்டியதுபோல!!
சொல்லவருவது என்னவென்றால், பிரபாகரனை பொறுத்தவரையில் அவர் தமிழ் பேசுபவர்களை விரட்டவில்லை, நாங்கள் தமிழர் அல்ல, இஸ்லாமியர் என்று சொன்னவர்களைதான் கட்டம் கட்டினார்! அது தவறென்றாலும், அதற்க்கு வழி செய்து கொடுத்தவர்கள் இஸ்லாமியரே! ஆதலால் யார் தமிழர், யார் யாரினம் என்று மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி உங்களுகெல்லாம் கிடையவே கிடையாது! யார் இஸ்லாமியர் எண்டு வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போங்கள்!! அதை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை!!
உங்கள் இறைவனின் பூந்தியும் பொரிகடலையும் உங்கள் வாயின் மீது நிலவுவதாக
காஃபிரான டோண்டு அவர்களின் பதிவை ஆதரிக்க முடியாது.
மூமின்களின் பதிவையே ஆதரிக்க வேண்டும்.
காபிர்களின் கருத்துக்கு வழக்கம்போல செருப்படி, சவுக்கடி, மரண அடி, நெத்தியடி கொடுத்துள்ள மூஃமின்களை ஆதரிக்கிறேன்.
யா அல்லாஹ்
சவுதி அரேபியாவைப் போல் சிறந்த ஆட்சியாகவும் வளமான நாடாகவும் நம் நாடு மாறுவது எப்போது? என ஏங்கும் சுவனபிரியன் அறியாத விடயம்(?) என்னவெனில்.... சவுதிமன்னர் 2000-ல் அங்கு செய்துகாட்டியதை இந்தியாவில் 1960களிலேயே செய்துகாட்டிவிட்டார் இந்திராகாந்தி அம்மையார். அன்றே 'கரிபி ஹட்டாவோ' (வறுமையே வெளியேறு) என்று கோசமிட்டு ஆட்சியை பிடித்துவிட்டு அவரது பேரன் காலத்திலும் வறுமையை காங்கிரஸ் கட்டிகாப்பதை போலவே,2002-ல் பட்டத்து இளவராயிருந்த தற்போதைய சவுதி ராசாவான அப்துல்லா ரியாதின் வறியோர் குடியிருப்புகளை பார்வையிட்டு வறுமை ஒழிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். முதன்முறையாக சவுதி அரச குடும்பம் சவுதியில் வறுமை இருப்பதை ஒப்புக்கொண்டது அப்போதுதான். இதனால் அவர் “king of humanity” என பட்டப்பெயர் பெற்றாராம்.
2005-ல் அவர் மன்னரான பின்பு வறுமை ஒழிந்துவிட்டதா? 2010 சவுதியில் வறுமை அதிகரித்து வருவதாக சவுதி பதிவர்கள் ஒரு விவரணப்படம் தயாரித்துள்ளனர். - Mal'ub 'Alayna" (Played on Us: Poverty Saudi Arabia) அதில் கூறப்படும் தகவல்கள் அதிர்ச்சயூட்டுவதாக உள்ளன. 22% சவுதி குடிமக்கள் வறுமையில் வாடுவதாக அவர்கள் கூறுகின்றனர்.மேலும் ஒரு இமாம் வறுமையின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க சவுதி மக்கள் போதை பொருட்கள் விற்பதாவும், (கார் ஓட்டக்கூட தடை விதித்து பெண்களின் கற்பினை காக்கும் சவுதியில்) சிலர் பெற்ற மகள்களையே பாலியல் தொழில் செய்ய அனுப்புவதாக கூறி நம்மை மயக்கமடைய வைக்கிறார், தமது நாட்டு குடிமக்கள் எவ்வளவு கஷ்டபட்டாலும் தளராமல் சவுதி அரசு அல்கொய்தா, லக்சர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு கோடிக் கணக்கில் கொடுத்து உதவுவது குறிப்பிடத்தக்கது.
@ அண்ணன் நோ -
நலமா? வருடக்கணக்கில் ஆளையே காணோம்?!?
// இஸ்லாமிய நாடென்றால் அவர்கள் எவ்வளவு மோசமான ஆட்சியாளர்கள் என்றாலும் நல்லவன், வல்லவன் என்ற நிலை எடுக்கும் ஒரே சமூகம், இஸ்லாமிய சமூகம் மட்டுமே!!!!
//
அதென்னண்ணே சமூகம்னு ஒட்டுமொத்தமா குத்தம் சொல்றீங்க? உலகில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியர்களையும் தனித்தனியா நேரில் சந்தித்து கேட்டு தெரிஞ்ச மாதிரியே எழுதியிருக்கிங்க? இப்படி ஓட்டு மொத்தமா எல்லாரையும் சேர்த்து குத்தம் சொன்ன அடுத்த நொடியே அப்துல்கலாமைப் பத்தியும் சொல்றிங்க. அப்ப அவரு யாரு?
நானறிந்தவரை அரபுநாடுகளுக்கு வேலைக்கு போயிட்டு வந்து காட்டரபின்னு திட்டிகிட்டு இருக்குற இஸ்லாமியர்கள்தான் அதிகம். இஸ்லாம் வேறு, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வேறு என்ற தெளிவு பெரும்பாலான இஸ்லாமியர்களிடம் உண்டு. அண்ணன் சுவனப்பிரியன் மட்டுமே இஸ்லாத்தின் ஓட்டுமொத்த பிரதிநிதியாக நீங்கள்,கோவி போன்றோர் கருதுவது இஸ்லாம் மீதான உங்கள் காழ்புணர்ச்சியைக் கொட்ட வேண்டுமானால் வசதியாக இருக்கலாம்.
@அண்ணன் நோ -
இப்போது நான் என் அனுபவத்தைச் சொல்கிறேன். நான் சந்தித்த நாட்டிலேயே மிகவும் மோசமான அனுபவத்தை அளித்த நாடு ஐக்கிய அரபுக் குடியரசு. அரசு அலுவலகம் ஒன்றில் ஒரு வேலைக்காக சுமார் ஒரு மணி நேரம் வரிசையில் காத்து நின்று என் முறை வரும்போது திடீர் என அப்போதுதான் குறுக்கே வந்த ஒரு அரபி கவுண்டரில் அவரது கோப்புகளை நீட்டினர். நான் அவரிடம் வரிசையில் வரும்படி கூறியபோது மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டத் துவங்கினார். கவுண்டரில் இருந்த அரசு ஊழியரும் அவர் திட்டுவது சரி என்றும் உள்நாட்டுகாரருக்கே முதல் உரிமை என்றும் கூறினார். மனிதர் அனைவரும் சமமென்று சொல்லி.. நிறம்,இனம்,மொழி எதுவுமற்ற சமத்துவத்தை,மனிதாபிமானத்தை போதித்து அதன்படி வாழ்ந்தும் காட்டிய எம்பெருமான் நபிகளாரின் மண்ணில் நான் சந்தித்த அனுபவம் இது.
திருவாளர்.நோ அவர்களே, சுவனப்பிரியன் சவுதியை பெருமையாகச் சொல்லியதால் எல்லா இஸ்லாமியர்களும் தாய்நாட்டைவிட இஸ்லாமிய ஆட்சியாளர்களின் நாட்டைத்தான் நேசிப்பார்கள் என்று சொன்னீர்களே, இப்போது நான் திட்டியதை வைத்து எல்லா இஸ்லாமியர்களும் இஸ்லாமிய நாடென்றால் தவறாகவே நடந்தாலும் வல்லவன்,நல்லவன் என்று சொல்ல மாட்டார்கள் என்று எழுதுங்களேன்.
@கோவியார் - அண்ணன் சுவனப்பிரியனின் இந்தப் பதிவில் நான் எந்தத் தவறையும் உணரவில்லை. காரணம் அவர் அங்குள்ள விவசாயம் பற்றிக் குறிப்பிடுகிறார். இங்கு விவசாயம் அழியும் நிலை ஓப்பிடுகிறார். ஆனால் சிலநேரங்களில் அவர் சவூதியில் எல்லாமே இஸ்லாத்தின் வழி நடப்பதாக குறிப்பிட்டுவது வேண்டுமானால் ஏற்புடையதாக இல்லாதிருக்கலாம்.
இலங்கையில் வட பகுதிகளில் புலிகளால் அப்புறப்படுத்தபட்ட முஸ்லிம் தமிழர்கள் இதர தமிழர்களை அதற்காக குற்றம் சாட்டியதில்லை. சுவனப்பிரியனும் குற்றம் சாட்டியதில்லை. இதர தமிழர்களையே படு கொலை செய்தவர்கள் புலிகள் என்பதை அவர்கள் அறிவார்கள். சுவனப்பிரியன் இலங்கை விடயத்தில் மிக நியாயமாகவே எழுதினார். யாழ்பாண முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்கள் மாதிரி இல்லாமல் தஙகளை யாழ்பாணத்தவர்களாக பார்ப்பவர்கள். சவுதியே எல்லாவற்றிலும் மேன்மையானது என்று சொல்லாதவர்கள். அவர்களை புலிகள் வெளியேற்றியது பெரும்பாலான தமிழர்களுக்கு மிகுந்த மன வருதத்தை தந்தது.
சுவனப்பிரியனின் பதிவும் அதற்க்கு ஆதரவாக போட்டவரின் பதிவும் இஸ்லாமிய மத அடிப்படையில் சவுதிக்காக போட்ட பதிவு என்பதில் சந்தேகம் இல்லை. உலகில் எந்த ஒரு நாடும் எப்படி இருக்க கூடாது என்றால் அது சவுதி.பின்பு அப்கானிஸ்தானும் நன்றாக வந்துவிடும்
மார்க்க சகோதரர் எம் எம் அப்துல்லா கூறுவது ஓரளவுக்கு சரிதான்.
முஸ்லீம்கள் அனைவரையும் சுவனப்பிரியன் சொல்வதை வைத்து பொதுமைப்படுத்துவது தவறு.
உலக முஸ்லீம் மக்களில் சுமார் 45 சதவீதத்தினர் அல்குரான் சொல்லுவதெல்லாம் தவறு என்று நம்புகிறார்கள். அல்லாஹ் மனிதனை படைத்ததாக சொல்லுவதே தவறு என்றும் பரிணாமவியலே சரியானது என்றும் கூறுவதாக சார்வாகன் ஆதாரத்தை கொடுத்திருக்கிறார்.
ஆகவே இரண்டில் ஒரு முஸ்லீம் அல்குரானையோ மொஹம்மது இப்னு அப்தல்லாவை ஒப்புகொள்ளாதவர். பெயரளவுக்கே முஸ்லீமாக இருப்பவர். ஆகவே சுவனப்பிரியன் சொல்லுவதை வைத்து எல்லா முஸ்லீம்களையும் சுவனப்பிரியன் மாதிரி இருப்பதாக எண்ணுவது தவறு.
// சார்வாகன் ஆதாரத்தை கொடுத்திருக்கிறார் //
ஆர்.எஸ்.எஸ் குடுக்கும் ஆதாரம் எப்படி இருக்கும் என்பதை பலமுறை பலப்பல முறை பார்த்தாச்சு. சமீபத்திய உதாரணம் கர்நாடகாவில் பாக்கிஸ்தான் கொடியை ஏற்றியது :))
மார்க்க சகோ.
உலகத்தில் காககககேவுக்கு ஆப்படிக்கும் எல்லோரையும் யூதர்கள், ஆர்.எஸ்.எஸ் என்று சொல்லியே பழக்கப்பட்டுப்போய்விட்டதால், pew forum அமைப்பையும் ஆர்.எஸ்.எஸ் என்று சொல்வதில் தவறில்லை.
http://www.pewforum.org/Science-and-Bioethics/Religious-Differences-on-the-Question-of-Evolution.aspx
போட்டு தாக்குவோம்.
சகோ சுவனபிரியரை எங்கே காணோம்? பொங்கல் வைக்க போய்விட்டாரா? ;)
//அண்ணன் சுவனப்பிரியன் மட்டுமே இஸ்லாத்தின் ஓட்டுமொத்த பிரதிநிதியாக நீங்கள்,கோவி போன்றோர் கருதுவது இஸ்லாம் மீதான உங்கள் காழ்புணர்ச்சியைக் கொட்ட வேண்டுமானால் வசதியாக இருக்கலாம்.//
இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் உங்களைப் போன்றவர்கள் அவர்களுக்கு நேரிடையாக மறுப்புப் போடாத கள்ள மவுனம் என்று நாங்கள் நினைப்பது எப்படி தவறாகவும், நீங்கள் செய்ய வேண்டியதையும் நாங்களே செய்ய வேண்டிய அலுப்பு எங்களுக்கு இருக்கிறது.
நான் இந்துத்வாக்களையும் விமர்சனம் செய்கிறேன், நீங்கள் ஏன் உங்கள் மதவாதிகளை விமர்சனம் செய்வது இல்லை, ஆனால் பொதுப்படுத்தாதீர்கள் என்று மட்டும் சொல்ல முன்வருகிறீர்களே ஏன் ?
இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லப்படும் சொல்லைக் களைய வேண்டிய பொறுப்பு என்னைப் போன்றவர்களை விட உங்களுக்கு தான் அதிகம். அதை பிற மதத்தினர் சொல்லும் போது எதிர்க்கிறீர்கள், மதவாதம் செய்பவர்களை விட்டுவிடுகிறீர்கள்.
உங்கள் அடிப்படை குணம் மதம் சார்ந்தவை அல்ல என்றே நான் நம்புகிறேன், இல்லை என்றால் நீங்கள் மதம் சார்ந்து பேசலாம்.
ஆர்.எஸ்.எஸ். சோ,அல்குவைதாவோ எவராக இருப்பினும் மானுட குலத்திற்கு எதிரானவர்கள். ஆர்.எஸ்.எஸ்சாக பிறகு இருக்கலாம். முதலில் மனிதர்களாக இருக்க முயற்சியுங்கள்.
ஆனால் உங்களைப் போன்றவர்கள் அவர்களுக்கு நேரிடையாக மறுப்புப் போடாத கள்ள மவுனம் என்று நாங்கள் நினைப்பது எப்படி தவறாகவும், நீங்கள் செய்ய வேண்டியதையும் நாங்களே செய்ய வேண்டிய அலுப்பு எங்களுக்கு இருக்கிறது.
நான் இந்துத்வாக்களையும் விமர்சனம் செய்கிறேன், நீங்கள் ஏன் உங்கள் மதவாதிகளை விமர்சனம் செய்வது இல்லை, ஆனால் பொதுப்படுத்தாதீர்கள் என்று மட்டும் சொல்ல முன்வருகிறீர்களே ஏன் ?
//
யாரு நானு இஸ்லாமிய அடிப்படைவாதிகளை விமர்சிச்சதில்லை?!??! கேட்டு எனக்கு வாயில சிரிப்பு வரலை. சூப்பர் கோவியார் :))))
http://http//mmabdulla.blogspot.com/2009/03/blog-post_20.html
சும்மா ஒரேஒரு சுட்டிதான் குடுத்து இருக்கேன். வேனும்னா சொல்லுங்க இன்னும் அதிகம் அதிகம் சுட்டி தர்றேன்
லஞ்ச லாவண்யங்கள் ஏதுமின்றி குஜராத்தில் மோதி அரசு திறம்பட அரசை நடத்தி வருகிறது. அதையே இந்தியாவின் மற்ற நாடுகளிலும் பின்பற்றுவது எல்லோருக்கும் நல்லது. //
ஸ்ப்பா , இந்தக் கொசு தொந்தரவு தாங்கலையே....லஞ்ச லாவண்யங்கள் ஏதுமில்லையே அப்பாலிக்கா எதுக்கு லோக் ஆயுக்தா கூடவே கூடாதுன்னு மோடி அடம்பிடிக்கிறார்???
//@ அண்ணன் நோ -
நலமா? வருடக்கணக்கில் ஆளையே காணோம்?!?//
அன்பான நண்பர் அப்துல்லாவிற்கு வணக்கம். நான் வெகு நலம். நீங்களும் அவ்வாறே என்று கருதுகிறேன். அமாம் சார் அவ்வளவாக வலைக்கு வருவதில்லை, நேரமின்மை மற்றும் சலிப்பு!
In fact உங்கள் மறுமொழிகளை இரு நாட்களுக்கு முன்னரே பார்த்தேன். ஏனோ சலிப்பு, அதான் பதில் போடவில்லை. உண்மையை சொல்லவேண்டுமென்றால் நட்பை, நன்மதிப்பை கரைத்துகொள்ளகூடாது என்ற எண்ணத்தினால் வந்த சலிப்பு இது. ஆங்கிலத்தில் ஒருவர் சொன்னது - I respect you more than your views. Hence I would not want to comment on your views!
நல்லவேளையாக நண்பர் திரு கோவி அவர்களின் மேலே உள்ள பின்னூட்டங்கள் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டதாக நினைக்கிறேன்! அவர் எழுதிய ஒன்று - // கள்ள மவுனம் //
அதற்க்கு நீங்கள் ஒரு எடுத்துகாட்டு கொடுத்து இதோ நான் என் பதிவில் கேட்கிறேன் என்று கூறுகிறீர்கள்!
ஒன்று புரிந்து கொள்ளுங்கள்! மதத்தை கேள்வி கேட்பதற்கும், மத வெறியை கேள்வி கேட்பதற்கும், மதத்தின் பெயரால் நிகழத்தப்படும் வன்முறையை கேள்விகேட்ப்பதர்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன!
இந்துமதத்தில் இந்த மூன்று நிலைகளும் கடுமையாக இருக்கிறது! இந்துமதத்தை எல்லா நிலைகளிலிருந்தும் கேள்விக்கு உட்படுத்த இங்கே இந்துக்கள், இந்து பெயருள்ள ஆனால் மதத்தை பின்பற்றாத பெயரளவு இந்துக்கள், நான் இந்து அல்ல, இந்து மதம் எங்கள் எதிரி என்று கூறும் பலர் எல்லோரும் சேர்ந்து செய்யும் பல முனை தாக்கல் சீராக பயம் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது!
கிறுத்துவத்திலும் (குறிப்பாக ஐரோப்பிய கிருத்துவம்) ஏறக்குறைய அதே நிலை.
ஆனால் உங்கள் இடத்தில் காணப்படும் மௌன குரு நிலைமை மௌனம் கலைந்து சீறிப்பாயும் நேரம், குண்டு வெடித்து பலர் செத்து, நாசம் விளைந்த பின்னர் இதை கண்டிக்கிறோம் என்று கூறும் பொழுது மட்டுமே. ஆனால் அதற்க்கு அடித்தளமாக இருக்கும் வெறி பிடித்த உயர் நிலை எண்ணங்கள், ஆசீர்வதிகபட்ட மக்கள் நாங்கள் மட்டுமே, மற்றவனெல்லாம் பிசாசு விரும்பிகள், குருடர்கள் என்ற வெறி (திரு சுவனப்பிரியன் போல) போன்றவைகளை ஒரு வார்த்தை சொல்லாமல் ஒத்து ஓடுவது அல்லது சும்மா இருப்பது, நீங்கள் சொல்லுவதுபோன்ற ஒரு கேள்வி கேட்க்கும் அல்லது கண்டிக்கும் நிலையே அல்ல!
எதை கண்டிக்கவேண்டுமோ அதை கண்டிக்க வேண்டும். அப்படி செய்யாமல், திரு சுவனப்பிரியன் சில விடயங்களை தவிர மற்ற எல்லாவற்றையும் சரியாகதானே சொல்லுகிறார் என்று நீங்கள் சொல்லும் பொழுதே, மிக்க நாணயமான உங்களையும் மதம் மெல்ல விழுங்கி விட்டது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது!
திரு சுவனப்பிரியன் மற்றும் அவரைபோன்று எழுதும் வாஞ்சூர் போன்றவர்களின் வெறுப்பு தீ உங்கள் கண்களுக்கு படாதது மிக்க ஆச்சிரியத்தை தருகிறது!
திரு கோவி இந்த உங்கள் மௌவனத்தைதான் கள்ள மௌனம் என்கிறார் என்று என் எண்ணம்! குண்டு வெடிக்கும் பொழுது அதை கண்டிப்பது என்பது மனித நேயமுள்ள ஒவ்வருவரும் செய்வதுதான்! அதை செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியம்! உங்களைப்போன்றோர் உள்ளங்களையும் மதப்பேய் விழுங்குமானால் clash of civilizations என்று சொல்லபடுவது தொடங்கிவிட்டது என்றுதான் அர்த்தம்!
இதற்குமேல் நான் உங்களிடம் (இந்த விடயத்தில்) எதையும் சொல்ல விரும்பவில்லை!
சுவனப்பிரியனின் பதிவுக்கு எதிர்பதிவு போட்டவர் கோவி.
கோவியின் பதிவுக்கு எதிர்பதிவு போட்டவர் சிராஜ்.
சிராஜின் பதிவுக்கு எதிர்பதிவு இது.
எனில்,
"சுவனப்பிரியனின்
எதிர்ப்பதிவுக்கு(கோவியின் பதிவு)
எதிர்பதிவுக்கு(சிராஜின் பதிவு)
எதிர்ப்பதிவு(டோண்டு)"
என்றல்லவா தலைப்பு வந்திருக்க வேண்டும்..?
தப்பாக போனாலும் பரவாயில்லை என்று தலைப்பில் கூட இன்னொரு சக முஸ்லிம் பதிவரின் பெயர் வராமல் பார்த்துக்கொண்ட தங்கள் காண்டு நோகடிக்கிறது மிஸ்டர் டோண்டு.
//அன்புடன்,
டோண்டு ராகவன்...//
வெறும் எழுத்தில் மட்டுமே..!
அண்ணன் நோ - கள்ள மவுனமும் இல்லை. நல்ல மவுனமும் இல்லை. ஆக்ட்டிவ் பிளாகிங்கில் இருந்து சற்று விலகி இருப்பதால் அப்படித் தோணலாம். வலைப்பூக்களை பொறுத்தவரை இப்போது நான் முன்போல் பெரும்பாலும் தேடிப்படிப்பதில்லை. இந்த இடுகைகூட நண்பர் ஒருவர் மெயிலில் அனுப்பிய லிங்கில் தொடர்ந்து வந்தது. தேடி வந்தது அல்ல. கண்ணில் படுவதை அது தவறென்று தெரிந்தால் கண்டிக்கத்தான் செய்கிறேன். யாராக இருப்பினும்! அதே நேரத்தில் தவறு என்றால் மட்டுமே கண்டிக்க முடியும், தவறில்லாததை கண்டிக்க முடியாது. இப்பவும் சொல்கிறேன் சுவனப்பிரியனைக் கண்டிக்க ஆயிரம் காரணம் இருக்கிறது. ஆனால் இந்த இடுகைக்காக கண்டிக்க முடியாது. இதில் எங்கும் அவர் மதத்தை இழுக்கவில்லை. நான்கூட 15 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சென்றபோது ( இலங்கை தவிர்த்து நான் சென்ற முதல் வெளிநாடு.அது ஒன்றும் பொருளாதாரத்தில் வலுவான நாடும் அல்ல) அதன் உட்கட்டமைப்பைப் பார்த்து நம் நாட்டில் இதுபோன்று வராதா என்று நினைத்ததுண்டு. நான் நினைத்தது சாலை வசதி அவர் சொல்வது விவசாயம். இதை என்ன கண்டிக்கச் சொல்கின்றீர்கள்? இதில் ஒரு நோக்கம் கண்டறிந்து கண்டிக்கும் கோவியாரின் செயல்தான் எனக்கும் தவறாகப்படுகின்றது. நான் சிகிரெட் குடிப்பேன் என்பதற்காக நான் வாழைப்பழம் சாப்பிடுவதையும் கண்டிப்பது நியாயமில்லையே!
அதேபோல் இன்னோரு விசயமும் சொல்கிறேன் சகோதரர்.சுவனப்பிரியனுக்கு ஹிந்துத்துவா,நாத்திகர்கள் இவர்களைவிட என் போன்று சூஃபி மார்க்கத்தில் செல்பவர்கள்தான் முதல் விரோதி. என்வழியை எதிர்ப்பவர் என்ற ஒரே காரணத்திற்காகவும் என்னால் எதிர்நிலை எடுக்க முடியாது. அவரின் இந்த இடுகையில் தவறில்லாததால்தானே டோண்டு சாரே ஆதரிக்கிறார்!!!!
//இதில் ஒரு நோக்கம் கண்டறிந்து கண்டிக்கும் கோவியாரின் செயல்தான் எனக்கும் தவறாகப்படுகின்றது. //
அண்ணே சவுதியிடம் இருந்து இந்தியா கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது ? வெவசாயமா ? இராஜஸ்தான் பாலைவனத்தில் செய்வோம், அது தமிழ் நாட்டில் இல்லை, அது பற்றி தமிழில் எழுதினால் இராஜஸ்தான் அரசுக்கு புரியுமா ?
நாகரீக வளர்ச்சியிலும், சமூக வளர்ச்சியில் 1500 ஆண்டுகள் பழமையான நாடாக இருக்கும் ஒன்றின் பெட்ரோல் விற்று கிடைக்கும் கொள்ளை லாபத்தில் ஏற்பட்ட உயரக்கட்டிடங்களையும், உல்லாசத் தோட்டங்களையும் பார்த்து இந்தியா கற்றுக் கொள்ள இந்தியாவில் பெட்ரோல் கிடைக்கனும், இந்தியா பாலைவனமாகவும் இருக்க வேண்டும்.
அதே சுவனப்பிரியன் பெண்களுக்கான ஓட்டுரிமை, ஓட்டுனர் உரிமை ஆகியவற்றை இந்தியாவைப் பார்த்து சவுதி கற்றுக் கொள்ளட்டும் என்று எழுதுவாரா ?
******
சிங்கப்பூரைப் பார்த்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூட எழுதுவேன், அது இங்கு கடைபிடிக்கும் ஒழுங்குகளும், மதச்சார்பின்மையும் தொடர்புடையாதாகத் தான் இருக்கும், மற்றபடி சிங்கப்பூர் சீனத் தோட்டத்தில் ஆர்சர்ட் பூக்கள் மலர்கிறது, தண்ணீரே கடன் வாங்கும் நாட்டில் பூந்தோட்டம் பாருங்கள், இதையெல்லாம் பார்த்து இந்தியா பூச்செடி வளர்த்து ஏற்றுமதி செய்யாதா என்று அபத்தமாக எழுதமாட்டேன்
//சகோதரர்.சுவனப்பிரியனுக்கு ஹிந்துத்துவா,நாத்திகர்கள் இவர்களைவிட என் போன்று சூஃபி மார்க்கத்தில் செல்பவர்கள்தான் முதல் விரோதி. //
கவலைப்படாதீர்கள். உங்களுடன் சிராஜும் சுவனப்பிரியனும் டீ குடிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். பிரியாணியை பிசைந்து பிசைந்து உங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்களாம்.
எதற்கும் சாப்பாட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்து சாப்பிடவும்.
சூஃபி என்பது சியா- shia முஸ்லிம் பிரிவா?
// சூஃபி என்பது சியா- shia முஸ்லிம் பிரிவா?
//
இல்லை. சூஃபிகள் எல்லாப் பிரிவிலும் உண்டு. சூஃபிகள் இறைவனை இறைவனை என்ற உயர்ந்த நிலையில் வைத்து பூஜிப்பதுமல்லாமல் தன்னுடைய காதலனாகவும் நினைத்து நேசிப்பவர்கள். இனம்,குலம்,நிறம், மொழி தீவிர மத சம்பிரதாயங்கள் இவற்றைத் துறந்தவர்கள்.இன்னும் அதிகம் அறிந்துகொள்ள வேன்டுமெனில் சகோதரர்.நாகூர்ரூமி எழுதிய கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடான சூஃபிவழி என்ற நூலைப் படியுங்கள்.
எதற்கும் சாப்பாட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்து சாப்பிடவும்.
//
அதெல்லாம் எனக்கு பார்த்துக்கத் தெரியும். உங்க அட்வைஸ் எழவு எனக்குத் தேவையில்லை.
NO என்பவர் ஏனோ தம் அறிவுக்கு NO சொல்விட்டாரே..!!!
நோபல் பரிசு வரும் காலத்துக்கு முன்பே...
நோபல் பிறப்பதற்கும் முன்பே...
ஐரோப்பா இருண்டு கிரக்கும் முன்பே...
முஸ்லிம் அரேபியர்களின் அறிவியல் மீதான பங்கு யாருமே ஈடு செய்ய முடியாதது. எந்த அளவுக்கு உயரமான கட்டிடம் எழுப்பினாலும் அஸ்திவாரம் ரொம்ப முக்கியம் ...
///அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.
"நவீன அறிவியலின் இருதயத்தில் இருக்கக்கூடிய சொற்களான அல்ஜீப்ரா (Algebra), அல்கோரிதம் (Algorithm), அல்கலி (Alkali) எல்லாம் அரபியில் இருந்து வந்தவைதான், இவைகள் அவர்களது கலாச்சாரம் எந்த அளவு சிறந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன. அல்ஜீப்ரா இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC ///
இது ஐஸ் பெர்க் டிப் சாம்பிள்...
மேலும் முழுதும் அறிய ஆர்வம் இருப்போருக்கு மட்டும்...
http://royalsociety.org/policy/projects/atlas-islamic-world/golden-age/
@எம்.எம்.அப்துல்லா
தகவலுக்கு நன்றி.
அப்துல்லா,
//அண்ணன் சுவனப்பிரியனின் இந்தப் பதிவில் நான் எந்தத் தவறையும் உணரவில்லை. காரணம் அவர் அங்குள்ள விவசாயம் பற்றிக் குறிப்பிடுகிறார். இங்கு விவசாயம் அழியும் நிலை ஓப்பிடுகிறார். ஆனால் சிலநேரங்களில் அவர் சவூதியில் எல்லாமே இஸ்லாத்தின் வழி நடப்பதாக குறிப்பிட்டுவது வேண்டுமானால் ஏற்புடையதாக இல்லாதிருக்கலாம்.//
என்னக்கொடுமை , அவர் பதிவே தவறானது 1990 களில் நடைப்பெற்ற விவசாய மேம்பாடுகளின் அடிப்படையில் பதிவுப்போட்டுள்ளார் . இப்போதைய நிலவரம் என்ன? ஏன் இப்போது அவருக்கு இணையத்தொடர்பு போய் விட்டதா? இங்கு விவசாயம் அழிவதாக அவர் கவலைப்படுகிறாராம் அதுக்கு நீங்க மெச்சுகிறீர்களா? உங்களுக்கும் ஏன் பழைய விவரம்னு கேள்விக்கேட்கவோ, தேடிப்பார்க்கவோ தெரியாதா?
சுவனப்பிரியன்சி விட பெரிய பொய்யரை இது வரையில் கண்டதில்லை. :-))
இந்திய விவசாயம் குறித்து என்ன தெரியும் உங்களுக்கு எல்லாம். இணையத்தை வைத்து மதம் வளர்ப்பதை விட்டு போய் படிங்க சார்.
இந்தியா கோதுமை, அரிசி உற்பத்தியில் உலகில் இப்போதும் இரண்டாவது இடம் ஏன் முதல் இடம் வரவில்லைனு பதிவு போடுங்க. படிக்கிறோம்.
இன்று விவசாயம் அழிந்து , ஊத்தி மூடப்போகும் நிலையில் இருப்பது சவுதி அரேபியா தான் , நெட் இருந்தும் உலக நடப்பே தெரியாமா இருக்காங்களே , இவங்களை எல்லாம் என்ன செய்ய? 2016 இல் மொத்தமாக கோதுமை சாகுபடி நிறுத்த திட்டம், என சவுதி அரசு 2008 இல் அறிவித்து படிப்படியாக விவசாயத்தை நிறுத்தி வருகிறது.
எனது பதிவில் மேல் அதிக விவரங்கள் இருக்கு.
பாலையில் பாலாறும், தேனாறும் பழங்கதையாய் போன மர்மம் என்ன?
ஆள் ஆளுக்கு பதிவு ,எதிர்ப்பதிவுனு போட்டு குளிர் காய்கிறார்களே தவிர, இணையத்தில் தேடி எது உண்மை என அறிய மாட்டேன்கிறார்கள், வாழைப்பழ சோம்பேறிகள்.
சூஃபிவழி எம்.எம் அப்துல்லா,
//அதெல்லாம் எனக்கு பார்த்துக்கத் தெரியும். உங்க அட்வைஸ் எழவு எனக்குத் தேவையில்லை. //
அழகான தமிழில் பேசுகிறீர்களே! நீங்கள் சுபி வழியா அல்லது வஹாபி வழியா என்று எனக்கே சந்தேகமாக்த்தான் இருக்கிறது.
ஒருவேளை ஒரிஜினல் சூஃபி வழியும் உள்ளே இதுதானோ?
காககககே மாதிரியே அழகான மொழியில் பேசும் உங்களை பாராட்டுகிறேன்.
ஆ! ஆஷிக்!
//இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC ///
என்னது பிபிஸி சொன்னா ஒத்துக்குவீங்களா? சொல்லவே இல்லையே!
எதுக்கும் ஜாக்கிரதை. பரிணாமவியலை பற்றியும் நிறைய பக்கங்கள் பிபிஸியில் இருக்கின்றன.
ஆகையால் வானியல், பரிணாமம், புவியியல் ஆகியவை பிபிஸியில் வந்தால் அதனை மூஃமின்கள் ஏற்றுகொள்ள மாட்டோம் என்பதையும் சொல்லிவைத்துவிடுங்கள்.
ஆனா ஆஷிக் சகோ,
அல்குரான் லூசுத்தனம் என்று, அதனை விட மூளை சொல்லும் காரண காரியமே சிறப்பானது என்று முல்லாக்களை எல்லாம் அடக்கி வைத்து, அறிவியலை வளர்த்த முட்டாஜிலாக்கள் செய்த அறிவியலை எல்லாம் மூஃமின்களே செய்ததாக அவிழ்த்துவிட்டு அழகாக தாவா செய்கிறீர்களே!
காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா பெருமைப்படக்கூடிய காரியம்.
salvation is from the Jews
-jesus
You Samaritans worship what you do not know; we worship what we do know, for salvation is from the Jews.
John 4:22
salvation is from the Jews
-jesus
You Samaritans worship what you do not know; we worship what we do know, for salvation is from the Jews.
John 4:22
// காககககே மாதிரியே அழகான மொழியில் பேசும் உங்களை பாராட்டுகிறேன்
//
உம்மோட பாராட்டு எழவும் எமக்குத் தேவையில்லை.
ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?
நம் சந்ததியினருக்கு அந்தப் பேரழிவுகளின் காரணங்கள் குறித்து எந்தவிதமான அறிதலை விட்டுச் சென்றிருக்கிறோம்? அவை யாரால் எதற்காக அழிக்கப் பட்டன என்ற உண்மையைச் சொல்லக் கூட நமக்கு அனுமதி இல்லை துணிவு இல்லை. ஸ்ரீரங்கத்தில் 13000 வைணவர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற உண்மையை ஆனானப் பட்ட சுஜாதாவால் கூடச் சொல்ல முடியவில்லை.
அபு சலீமையும், தாவூத் இப்ராஹிமையும், டேவிட் ஹெய்லியையும் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வக்கில்லாத நாம், நம்மிடம் பிடிபட்ட அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்க வக்கில்லாத நாம் இது போன்ற படங்களைப் பார்த்துப் பொறாமைப் படத்தான் முடியும். பொறாமையுடன் கூடவே ஒரு சிறிய பாடத்தையும் இந்த சினிமா நமக்குக் கற்றுக் கொடுக்கும். வரலாற்றுப் பழிவாங்கல்களையும் கொடுமைகளையும் கொள்ளைகளையும் நாம் புறக்கணிக்கக் கூடாது முடியாது. அவற்றை அறிவதினால் நாம் எவரையும் பழிவாங்கப் போவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் இவை போன்ற படையெடுப்புகளில் இருந்தும் கொடூரமான கொலைகளில் இருந்தும் நம் சந்ததியினரைப் பாதுகாக்க நம் முன்னோர்களுக்கு என்ன நேர்ந்தது நம் நாடு எப்படி ஏன் சூறையாடப் பட்டது என்ற அடிப்படை அறிவு நம்மிடம் அவசியம் தேவை. அந்த அறிவு மட்டுமே நமக்கு எச்சரிக்கை உணர்வை அளிக்க வல்லது.
அலாவுதீன் கில்ஜியும், அவுரங்க சீப்பும் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் கொடூரங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்டதினாலேயே ஒரு அப்சல் குருவையும், அபு சலீமையும், கசாபையும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் பாதுகாத்து வருகிறார்கள். நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் இல்லை அதில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.
சொந்த புத்தி இல்லாவிட்டால் இஸ்ரேல் என்னும் ஒரு சிறிய நாட்டை அவர்களது செயல்பாடுகளைக் கண்டாவது நம் மக்கள் பாடம் பெற வேண்டாமா? தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்டீரீட் என்ற இஸ்ரேலிய திரைப்படத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது!
Part 1: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1
Part 2: கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1
.
Post a Comment