நான் மிக ஆவலுடன் எதிர்பார்த்த நிகழ்வு இது. ஆனால் அதற்கு போக முடியாமல் என் உடல்நலம் சதி செய்து விட்டதே. ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும் இடது காலை பெல்ட் போட்டு இருக்கியிருக்கிறது. ஆகவே காலை இழுத்து இழுத்துத்தான் நடக்க வேண்டியுள்ளது. கீழே உட்கார ஏலாது.
இது எத்தனை நாளைக்கு என்றால் டாக்டர் சீரியசாகவே பிப்ரவரி முதல் வாரம் வரை எனக் கூறிவிட்டார். அதிலும் காலை இழுத்து நடப்பதும் வீட்டுக்குள்ளே மட்டும்தான் வெளியே வந்தால் தெரியும் சேதி என என் வீட்டம்மாவிடம் அவர் கூறிவிட்ட நிலையில் வெளியே வரவே அனுமதி லேது என்றாகி விட்டது.
போன முறை மாதிரி இம்முறையும் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு இருக்குமா என கேட்டதற்கு துக்ளக் ஆஃபீசில் தெரியாது எனக் கூறி விட்டார்கள். சரி பார்ப்போம்.
எனது ஏமாற்றத்தை இங்கு இச்சமயம் பதிவு செய்கிறேன். யாராவது துக்ளக்குக்கு சொல்லி நேரடி இணைய ஆன்லைன் ஒளிபரப்பு வைத்தால் நன்றாக இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
-
ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 என்னும்
நூலுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஓர்
ஆய்வ...
2 hours ago
3 comments:
Hello Sir,
Wishing you speedy recovery.
Kalaakendra is live webcasting this event.
http://www.kalakendra.com/shopping/42nd-anniversary-thuglak-live-webcast-14th-630pm-p-3014.html
It is not free though. The charge is Rs 180.
Thanks
Venkat
Idlyvadai is doing live reporting in their blog.
அன்புமிக்க ராகவன்!
விரைவில் பரிபூரணக் குணம்பெற பெருமாள் நிச்சயம் அருள் புரிவார்.
துக்ளக் விழாவில் 6 மணிமுதல் 7.45 வரை இருந்தேன். புல்வெளியில் நின்றுகொண்டே காணொளிமூலமாகப் பார்த்தேன், பேச்சினைக் கேட்டேன்.
தொடக்கம் வழக்கம்போலத்தான். அத்வானி அவர்கள் தில்லி விமானத்தைப் பிடிக்கவேண்டி இருந்ததால் சோ தனது உரையைச் சுருக்கமாக முதலிலேயே முடித்துக்கொண்டார். மிகவும் கீழ்த்தரமான அவதூறுச் செய்தி ஒன்றை நக்கீரன் வெளியிட, அதை சொல்லுக்குச் சொல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முதல் பக்கத்திலே வெளியிட்டு தன் கீழத்த்ரமான் செயலைக் காட்டிய தி ஹிந்துவை மிகவும் கண்டித்தார். அனைவரும் ஆமோதித்தனர். மன்னார்குடி மாஃபியாவைப் பெயர் சொல்லாமல், ஜெயலலிதா செய்த தரமான அறுவைச் சிகிச்சையைப் பாராட்டினார். தமிழகம் குஜராத்தைப் போலச் செழித்து ஓங்கவேண்டும் என்ற தன் ஆவலைத் தெரிவித்துக்கொண்டார். அத்வானி தன் உரையை ஆரம்பித்த் 5 நிமிஷங்களில் நான் கால்கடுக்கவே வெளிவந்துவிட்டேன்.
என்னைப் போன்ற பெரிசுகளும் வெளியேறிக் கொண்டிருந்தனர். மைக் ஏற்பாடு படு மட்டம். ஏற்கனவே பெரிசுகள் அரைச்செவிடு. ஒலிபெருக்கி ஒலிசுருக்கியாகச் செயல்பட்டதால் அரைகுறையாகத்தான் காதில் விழுந்தது.
அன்புடன்
Post a Comment