1. இந்தியாவை விட்டும் எங்குமே வெளி தேசத்துக்கு செல்லாத டோண்டு ராகவன் அந்த நிலை மாறாமலேயே வெறும் தரையில் நின்று கொண்டு சீனாவின் பெருஞ்சுவரை நேரடியாகவே காணவியலும். எங்கனம்?
2. மெக்கானிக் அண்ணாமலையின் சகோதரன் தாயுமானவன் இறந்து விட்டார். ஆனால் தாயுமானவுக்கு சகோதரனே கிடையாது. எவ்வாறு?
3. தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்? இம்சை அரசனுக்கு விடை தெரியாமல் மண்டையே வெடித்து விடும் போல. டோண்டு ராகவனுக்கும்தான்.
4. கோவிந்தாச்சாரி தனது காரை ஸ்பீட் லிமிட்டிற்குள்தான் ரோட்டோரமாக ஓட்டிக் கொண்டிருந்தார். எதிரே வந்த கார்களோ இவரது காரை விட வேகமாகவே வந்தன. இருப்பினும் போலீஸ்காரர் மணவாளன் கோவிந்தாச்சாரியை நிறுத்தி அபராதம் போட்டார். என்ன அக்கிரமம?
5. ராமகிருருஷ்ணன், தன்னருகிலேயே படுத்திருக்கும் தன் மனைவி பத்மாசனிக்கு தனது செல்பேசியிலிருந்து அழைப்பு அனுப்ப, அவள் தனது செல்பேசியை எடுத்து பேசும் முன்னால், தனது செல்பேசியை அணைத்து விட்டு ஆனந்தமாக தூங்கலானான். ஏன் இந்தக் கொலைவெறி அவனுக்கு?
6. எலெக்ட்ரீஷியன் ஆதிகேசவன் அந்த ரூம் விளக்கை அணைச்சுட்டு போனதாலே, 200 பேர் செத்தாங்க? எப்படி?
7. தன் சொந்த வீட்டில் இருந்தும் கூட ராமநாராயணன் தாகத்தால் அவதிப்பட்டான், தண்ணீரை வாங்கிக் குடிக்கவும் இயலவில்லை, பணம் நிறைய இருந்தும். ஏன்?
8. ராஜகுமாரன் பிங்களன் தன் குதிரை நீலவேணியை 15 அடி நீள கயிற்றில் கட்டி விட்டு ராஜகுமாரி பரிமளாவுடன் உல்லாசமாக இருக்க செல்கிறான். குதிரைக்கு 25 அடி தூரத்தில் புல்கட்டு இருக்கிறது. இருப்பினும் நீலவேணியால் அப்புல்லை தின்ன முடிந்தது. எங்கனம்?
9. மெய்யூரில் இருப்பவர்கள் அனைவரும் உண்மையை மட்டும் கூறுவார்கள். பொய்யூரிலோ பொய்யைத் தவிர அம்மக்களுக்கு ஒன்றும் தெரியாது. இரு ஊரையும் இணைக்கும் ராஸ்தாவின் நடுவில் உள்ள கூட்டு ரோட்டில் ஒரு வழிப்போக்கன் வருகிறான். அவன் ஒரு அழகான பென்ணைப் பார்க்கிறான் (வயது 18). அவன் மெய்யூருக்கு செல்ல வேண்டும். எவ்வாறு?
10. நான் கடவுளை விட வலிமைமையானவன், ஏழைகளிடம் இருப்பவன், பணக்காரர்களிடம் இல்லாதவன். நான் உன்னிடம் வந்தால் நீ இறப்பாய். நான் யார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
8.
நமது தேவைகள், நமது பாவனைகள்
-
அன்புள்ள ஜெ, இதை எழுதும்போதே பெரும் சோர்வொன்று வந்து ஆட்கொண்டுவிடுகிறது.
வாழ்வின் எல்லா பக்கங்களும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. இலட்சியக் கனவுகளோடு
பேரிய...
20 hours ago
24 comments:
2. Annamalai woman
4. oneway
//4. கோவிந்தாச்சாரி தனது காரை ஸ்பீட் லிமிட்டிற்குள்தான் ரோட்டோரமாக ஓட்டிக் கொண்டிருந்தார். எதிரே வந்த கார்களோ இவரது காரை விட வேகமாகவே வந்தன. இருப்பினும் போலீஸ்காரர் மணவாளன் கோவிந்தாச்சாரியை நிறுத்தி அபராதம் போட்டார். என்ன அக்கிரமம?//
:) என்ன கொடுமை. இருவழிச்சாலை அல்லது ஒருவழிச்சாலையில் போக்குவரத்திற்கு எதிராக வண்டி ஓட்டினால் அபராதம் போட மாட்டாங்களா ?
கோவி கண்ணன் மற்றும் ரமேஷ் வைத்யா, சரியான விடைகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1) சீனாவின் பெருஞ்சுவரை நேரடியாகவே காணவியலும். எங்கனம்? B'coz the wall is the boundary of India
2 & 4) Already replied
5)On waking, to calculate actual hours of sleep
6) Can't be 'Photo Shoot'..?
7) Can happen for multi reasons - immobility/ shops closure when nil potable water at home, or Ramakrishnan could be a toddling child etc...
8) One end of rope to the horese; other end let free
9) By not getting distracted by the beauty & following her ;)
@பிவிடி
8-சரியான விடை. மீதி விடைகள் தவறு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
8. குதிரை 15அடி விட்டத்தின் ஓரத்தில் இருக்கிறது. புல் அதிலிருந்து 25 அடி தூரத்தில் எதிர் பக்கமாக (வட்ட நடுவின் மறுபக்கம்) இருப்பதால், குதிரையால் புல்லை தின்ன முடியும்.
9. அவளிடம் ஏதாவது ஒரு ஊரைக் காட்டி "மெய்யூருக்கு போக எதிர்த்த ஊரு மக்கள் கிட்ட கேட்டா, அவங்க எந்த வழி சொல்வாங்க?"னு கேட்டு, அதுக்கு எதிர் திசையில் உள்ள ஊருக்கு போகனும்.
10. பசி.
//8. குதிரை 15அடி விட்டத்தின் ஓரத்தில் இருக்கிறது. புல் அதிலிருந்து 25 அடி தூரத்தில் எதிர் பக்கமாக (வட்ட நடுவின் மறுபக்கம்) இருப்பதால், குதிரையால் புல்லை தின்ன முடியும்.
9. அவளிடம் ஏதாவது ஒரு ஊரைக் காட்டி "மெய்யூருக்கு போக எதிர்த்த ஊரு மக்கள் கிட்ட கேட்டா, அவங்க எந்த வழி சொல்வாங்க?"னு கேட்டு, அதுக்கு எதிர் திசையில் உள்ள ஊருக்கு போகனும்.
10. பசி.//
8-க்கு அதிகம் சரியான் விடை ஏற்கனவே வந்து விட்டது. 9-க்கு விடை ஏற்றுக் கொள்ளத் தக்கதே, இருப்பினும் நான் நினைத்த விடை இன்னும் எளிமையானது.
10-க்கு விடை, சர்றே இம்ப்ரூவ் செய்யவும். பசி பணக்காரனுக்கும் வருமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
6. அந்த அறையில் ஏற்கனவே கேஸ் சிலிண்டர் லீக் ஆகிருக்கு. லைட் சுவிட்சு ஆஃப் செய்யும்போது, தீ பிடிச்சிருச்சி!
5. ஆனால், மனைவியின் செல்பேசி அந்த அறையில் இல்லை (தொலைந்தோ/ அச்சமயம் வேறு யாரோ அதனை வைத்திருக்கலாம்).
@சுதாகர்
தவறான விடைகள். அந்த அறையிலோ அருகிலோ வேறு யாருமே இல்லை, இறந்தவர்கள் பல மைல் தூரத்தில் இருந்தனர்.
செல்பேசி விடையும் தவறே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
6. அது லைட் ஹவுஸ். (க்ளுவுக்கு நன்றி!)
5. அவனுடைய செல்பேசி (அ) மனைவியோட செல்பேசி அப்போதுதான் புதுசா ஆக்டிவேட் ஆகியிருக்கும். அதை சரி பாக்க, மனைவி செல்பேசிக்கு அழைத்திருக்கலாம்.
@சுதாகர்
லைட் ஹௌஸ் சரியான விடை. செல்பேசி விடை தவறு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
/இந்தியாவை விட்டும் எங்குமே வெளி தேசத்துக்கு செல்லாத டோண்டு ராகவன் அந்த நிலை மாறாமலேயே வெறும் தரையில் நின்று கொண்டு சீனாவின் பெருஞ்சுவரை நேரடியாகவே காணவியலும். எங்கனம்?
//
உலக வரைபடத்தில்
//கோவிந்தாச்சாரி தனது காரை ஸ்பீட் லிமிட்டிற்குள்தான் ரோட்டோரமாக ஓட்டிக் கொண்டிருந்தார். எதிரே வந்த கார்களோ இவரது காரை விட வேகமாகவே வந்தன. இருப்பினும் போலீஸ்காரர் மணவாளன் கோவிந்தாச்சாரியை நிறுத்தி அபராதம் போட்டார். என்ன அக்கிரமம?
//
one way
7. Ramanarayan would be some pet animal/bird which is close to the safe.
10. Nothing
1 . டெலஸ்கோப்
5 . அலாரம்
7 . நோய் (டயாலிசிஸ் தேவைப்படும் ஆசாமி)
5) மனைவி பத்மாசினி குறட்டையால் தூங்க முடியாமல் அவளை போன் செய்து எழுப்பி விட்டு ராமகிருருஷ்ணன் ஆனந்தமாக தூங்கலானான்
//உலக வரைபடத்தில்// தவறு
//one way// சரி, ஆனால் விடை ஏற்கனவேயே வந்து விட்டது.
//10. Nothing// சரி
//5) மனைவி பத்மாசினி குறட்டையால் தூங்க முடியாமல் அவளை போன் செய்து எழுப்பி விட்டு ராமகிருருஷ்ணன் ஆனந்தமாக தூங்கலானான்// சரியான விடை
//1 . டெலஸ்கோப்// பாதி தூரம் தாண்டி விட்டீர்கள். இன்னும் சில லட்சக்கணக்கான மைல்கள் தாண்ட வேண்டும்.
மீதி விடைகள் தவறு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
9. இந்த வழியாப் போனா உங்க ஊருக்கு போக முடியுமா? வரும் விடை எப்போதுமே சரியாக இருக்கும்!
@மஹிலன்
இல்லை, பெண்ணின் ஊர் என்னவென்று தெரியாதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. You can go thru' ISRO rocket to space without passport and see china wall thru telescope.
Explanation for my answer.
1. பெண் எப்போதும் பொய் சொல்வாள். அவளிடம் பொய்யூர் செல்லும் வழியைக் காட்டி, இந்த வழியாய் போனால் உங்கள் ஊருக்குப் போகலாமா என்றால் அவள் இல்லை என்பாள். என்வே நீங்கள் மாற்று வழியை பின்பற்றவேன்டும். அதே போல் மெய்யூர் செல்லும் வழியைக் கேட்டிர்களாயின், அவள் ஆமாம் என்பாள். என்வே நீங்கள் அந்த வழியை பின்பற்றலாம்.
2. உண்மையே சொல்பவளாயின், ஒன்றும் பிரcசனை இல்லை. நேரடி பதில் கிடைக்கும். அதே வழிமுறைதான்!
ஆக மொத்தம், பதில் ஆம் என்றால் அந்த வழி நம் வழி. இல்லை என்றால் மாற்று வழி நம் வழி!
//1. You can go thru' ISRO rocket to space without passport and see china wall thru telescope.//
வெறும் தரையிலிருந்து என்றல்லவா கூறினேன். ஆகவே சந்திரனிலிருந்து பார்ப்பது என்பது சரியான விடை.
@மஹிலன்
நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் இன்னும் சுலப கேள்வி ஒன்று இருக்கிறது. அப்பென்ணிடம் உங்கள் ஊருக்கு செல்லும் வழி எது என கேட்டால், அவள் உண்மை கூறுபவளானாலும் சரி பொய்யுரைப்பவளானாலும் சரி மெய்யூரைத்தான் காட்டுவாள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment