சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் நான் எட்டாப்பு படிக்கையில் எங்கள் ஆசிரியர் ஜெயராம ஐயங்கார் ஒரு கதை சொன்னார். அது பின்வருமாறு.
ஒரு கொலை வழக்கில் குற்றவாளி கேசவனுக்கு சார்பாக வக்கீல் பராங்குசம் ஆஜரானார். அரசு தரப்பு கேஸ் ரொம்பவுமே ஸ்ட்ராங். ஆகவே அவர் ஒன்று செய்தார். அதாவது குற்றவாளியிடம் “உன்னை என்ன கேள்வி கேட்டாலும் நீ பெப்பே பெப்பெப்பே எனச் சொல்லவும். நீ பைத்தியம் என வாதாடி நான் விடுதலை வாங்கித் தருகிறேன். அவ்வாறே அவனும் செய்ய அவனுக்கு விடுதலை கிடைத்தது.
அடுத்த நாள் அவன் பராங்குசத்தை பார்க்க வந்தான். அவரும் அவனிடம் ஃபீஸ் கேட்க அவனோ பெப்பே பெப்பெப்பே என்றான்.
இக்கதை ஏன் நினைவுக்கு வர வேண்டும். எதேச்சையாக நான் அறுபதுகளில் படித்த “The anatomy of a murder" என்னும் நாவலின் திரையாக்கம் பர்றி இப்போதுதான் கூகளில் பார்த்தேன். அப்படியே எங்கள் எட்டாப்பு ஆசிரியர் சொன்ன ஒன்லைன் ட்ரீட்மெண்ட்தான் இங்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வா.மு.சேதுராமன். அஞ்சலி
-
மரபுக்கவிஞரும், சர்வதேச அளவில் தமிழ்ப்பணிகளை ஒருங்கிணைத்த பன்னாட்டு
தமிழுறவு மன்ற நிறுவனருமாகிய வா.மு.சேதுராமன் மறைந்தார். அஞ்சலி.
வா.மு.சேதுராமன் தமிழ் வி...
11 hours ago
1 comment:
பழசை யெல்லாம் நினைவுபடுத்ததான் திரைப்படங்கள் வருகிரதோஎன்னமோ?
Post a Comment