வள்ளியைக் கவர முருகனுக்கு அவர் அண்ணன் யானை வடிவில் வந்து உதவியது எல்லோருக்கும் தெரிந்ததே. நமது இலக்கியத்தில் அந்த காலத்திலிருந்தே இந்த கான்சப்ட் ஓஹோ என வொர்க் ஆகிறது.
இப்போது இந்த வோடோஃபோன் விளம்பரத்தைப் பாருங்கள்.
விளம்பர வாசகம் “சிறு ஓசையையும் கேளுங்கள் வோடஃபோனில்” புன்னகையை வரவழைக்கிறது.அதன் தொடர்ச்சி விளம்பரத்திலோ, உடனடி தொடர்புகள் வோடஃபோனில் என ஆட்டையைப் போடுகிறார்கள்.
தொடர்பு கிடைத்து பையனும் பெண்ணும் பேசும்போது பூஜை வேளையில் இன்னொருவர் கரடியாக வருவதைத் தடை செய்யும் விஷயமும் அதே நாயால் நடக்கிறது. அதையும் பாருங்கள். தடையற்றப் பேச்சுக்கள் வோடோஃபோனில்,
அடுத்து அந்த நாய் என்ன செய்யப் போகிறது என்பதையறிய ஆவலாக உள்ளேன்.
வள்ளி முருகன் கதையிலிருந்து சுட்டு எம்ஜிஆர் நல்ல நேரம் படத்தில் யானையின் உதவியுடன் கேஆர் விஜயாவை கரெக்ட் செய்யும் காட்சியையும் பார்க்கலாமே. ஹிந்தி வெர்ஷனிலும் நன்றாகவே வந்தது ஆனால் சுட்டி கிடைக்கவில்லை.
புறாவிடு தூது வேண்டுமா? அதுவும் கீழே காட்டும் இப்படத்தில் காணக்கிடைக்கும்.
முழுக்க பறக்காமல் காரில் சவாரி செய்து குறும்பு செய்கிறது புறா என்பது அடிஷனல் போனஸ்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
12 hours ago
5 comments:
சிறுபிள்ளைகள் காதலை காண்பித்து காண்பித்தே,. இப்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே காதல் கடிதம் எழுத வைத்துவிட்டார்கள். இன்னும் கொஞ்சம் காலத்தில் பையில் காண்டமோடுதான் பள்ளிக்கு அனுப்பவேண்டும் போலிருக்கிறது.
விளம்பரத்துக்கு நன்றாகத்தான் இருக்கு. ஆனாலும் சின்ன பசஙகள் என்பதில்தான் உறுத்தல்.சின்ன பசங்களை கெடுப்பதில் இவர்கள் பங்கு. யாராவது சமுதாய கண்ணோட்டத்துடன் விளம்பர உலகத்தில் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை.
கடைசியில் நாயை மாமாவா ஆக்கிட்டானுங்க
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார்.
மிக்க நன்றி புதுகை அப்துல்லா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment