இன்றைக்கு இந்த்ப் பாட்டின் முறை. அதை முதலில் பார்த்து கேட்கவும்.
அப்பாட்டு தனியாகக் கிடைக்காததால் படத்தின் கடைசி பகுதியையே இணைத்துள்ளேன். போனஸாக பெற்று மகிழவும், முக்கியமாக “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” பாடலுடன்..
சொன்னக் கருத்தில் நம்பிக்கை இருந்தால் அதை விடாது பிடித்துக் கொள்வதிலும் ஒரு நெஞ்சுரம் தேவைப்படும். பிற்காலத்தில் அதனால் பிரச்சினை வந்தாலும் சொன்னது சொன்னதுதான் என எத்தனை பேரால் இருக்கவியலும்?
முக்கியமாக பதிவுலகில் இதற்கான பல உதாரணங்கள் உண்டு. முதலில் ஓர் உந்துதலில் பதிவொன்றைப் போடுவது. பிறகு எல்லோரும் கடுமையாக எதிர்வினை புரியும்போது ஓசைப்படாமல் அதை எடுத்துவிடுவது.
எனக்கு இது எப்போதுமே புரிந்ததில்லை. வெளியே வந்த சொல் வில்லிலிருந்து விடுபட்ட பாணம் போல. அதைத் திரும்ப வாங்குவது மகாபாரதத்து அருச்சுனன் போன்றவரால் மட்டுமே முடியும். இது என்ன கதை எனக் கேட்பவர்களுக்காகக் கூறுகிறேன்.
மகாபாரத யுத்த முடிவில் அசுவத்தாமன் பாண்டவ வம்சத்தை அழிக்க பிரும்மாஸ்திரம் விட, அதற்கு எதிரக தனது தரப்பிலிருந்து பிரும்மாஸ்திரம் விடுகிறான் அருச்சுனன். இரு பிரும்மாஸ்திரங்களையும் தனது தபோவலிமையால் தற்காலிகமாக த்டுத்து நிறுத்தும் வியாச முனிவர், அருச்சுனனைப் பார்த்து அவன் தனது பிரும்மாஸ்திரத்தைத் திரும்பப் பெறவேண்டும் எனக் கேட்க, அவனும் அவ்வாறே செய்கிறான். ஆனால் அசுவத்தாமனோ அவ்வாறுசெய்ய தனக்குத் தெரியாது எனப்பேய்முழி விழிக்கிறான். “அப்படியானால் ஏன் அஸ்திரத்தை விட்டாய் மூடனே” எனச் சீறுகிறார் வியாசர்.
வேறுவழியில்லை அசுவத்தாமனின் அஸ்திரம் செயல்பட, கிருஷ்ணர் பாண்டவர்களைக் காப்பாற்றுவது வேறு கதை. அவ்வாறு செய்ததாலேயே அசுவத்தாமன் சிரஞ்சீவியாக வாழ்வான் என்றும் போகுமிடமெல்லாம் அவனது துரோகத்துக்கான வசைச் சொற்களைப் பெறுவான் எனவும் அவனுக்கு கடூரமான சாபம் கிடைப்பதும் வேறு கதை.
இங்கு மீண்டும் இப்பதிவுக்கு வருவேன். நான் இப்போது இடும் இப்பதிவு 1355-வது. இது வரைக்கும் ஒரு பதிவையும் எதிர்ப்புகளுக்கு பயந்து எடுத்ததில்லை. அதனால் எல்லாம் நான் பெரிய பிடுங்கி என்றெல்லாம் கூறவில்லை. ஆனால் அதே சமயம் அவற்றை நீக்காததால் ஒரு கேடும் எனக்கு நிகழவில்லை என்று மட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
நான் கூறுவதை மேலும் நன்கு புரிந்து கொள்ள நான் என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள், மற்றும் என் பெயரில் வெளியாகும்பின்னூட்டங்கள் -2 ஆகிய இரு இடுகைகளையே உதாரணங்களாகத் தருவேன். அக்காலக் கட்டத்தில் நான் மற்றவர் இடுகைகளில் இடும் பின்னூட்டங்களின் நகல்களை அவற்றுக்கான சுட்டிகளுடன் எனது மேலே சொன்ன இரு இடுகைகளிலும் இடுவேன். சில நாட்களுக்கு முன்னால் விளையாட்டாக சம்பந்த்ப்பட்ட சுட்டிகளைத் தேடினால் அவற்றில் பல காணாமல் போயிருந்த்ன. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் ஒன்றுதான் நான் இப்பதிவில் கூறிய விஷயமும் என்பதில் நான் தெளிவாகவே உள்ளேன்.
என்ன செய்வது, நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறம் இன்றி செயல்பட்டால் அதுதான் நடக்கும்.
எனக்கு மிக எதிர்ப்பைச் சம்பாதித்து தந்த பதிவுகளில் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.
பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுத்த விஷயம்
எத்தனை நெகடிவ் ஓட்டுகள்!!
அதனால் என்ன, நான் கூறியது கூறியதுதானே என விட்டு விட்டேன்.
எனது இந்த யோம் கிப்பூர் பதிவால் பல சங்கடங்கள், ஆனால் என்ன, போட்டது போட்டதுதான்.
மறுபடியும் கூறுவேன், இதனால் எல்லாம் நான் தைரியசாலி எனக் கூறிக் கொள்ளவில்லை. ஆனால் எனது தன்னம்பிக்கையே இதற்கெல்லாம் அடிநாதம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
போலி இளமை
-
இணையக்குப்பை அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ., வணக்கம்! உங்கள் பதில்
இணையக்குப்பை பல முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். முதலில், எனது மின்னஞ்சலை
கருத்தி...
9 hours ago
6 comments:
1355 ஆ.............
இனிய பாராட்டுகள்.
1,355! WOW! Amazing! Congrats and best wishes.
Lesson learnt.
1355....Great & Keep Going Sir!
அன்பின் ராகவன் அய்யா,
சிறு திருத்தங்கள்.
// நான் இப்போது இடும் இப்பதிவு 1355-வது. //
பதிவல்ல. இடுகை என்பதே சரி. பதிவர்கள் அனைவரும் இந்த தவறை புரியாமல் செய்கின்றனர்.
// மகாபாரத யுத்த முடிவில் அசுவத்தாமன் பாண்டவ வம்சத்தை அழிக்க பிரும்மாஸ்திரம் விட, அதற்கு எதிரக தனது தரப்பிலிருந்து பிரும்மாஸ்திரம் விடுகிறான் அருச்சுனன். //
அது பிரும்மாஸ்திரம் இல்லை போலும். பிரம்ம சிரஸ் என சோ அவர்களின் 'மஹாபாரதம் பேசுகிறது' பகுதி 2 ல் பக்கம் 928ல் உள்ளது. நிகழ்காலத்தில் இது போல ஒரு நிகழ்வு தவிர்க்கப்ட்டிருக்கிறது. விவரம் இங்கே. http://www.suduthanni.com/2010/01/3.html அங்குள்ள பின் ஊட்டங்களையும் படிக்கவும். நன்கு விவரம் புரியும்.
பிறகு எங்கள் உம்மா சொல்வது போல நெல்லைக் கொட்டினாலும் அள்ளிவிடலாம். சொல்லைக் கொட்டினால் அள்ள இயலாது என்பது தான் நிஜம். ஆனால் இணையத்தில் பலர் கருத்து புலிகளாக கருத்திட்டு விட்டு பின்னர் கொட்டையெடுத்த புலிகளாக ஆகி விடுகின்றனர். ஆனால் அனைத்து தகவல்களும் பூமிக்கு வெளியே உள்ள இறைவனின் தகவல் தளமான சித்திர குப்த ஏடு alias ஜீவ புத்தகம் (Book of Life) alias லவ்ஹீல் மக்பூலில் இருக்கும் என நம்புகிறேன். அதை அழிக்கவே, ஹேக் செய்யவே இயலாது.
உங்களின் உடல்நலம் ஒத்துழைத்தால் கேள்வி - பதிலை தொடர ஆசை.
1. இன்றும் உயிரோடு உள்ள அஸ்வத்தமா உங்களின் முன்னர் வந்து நின்றால் உங்களது நிலைப்பாடு என்ன?
Md. Ismail,
Thanks for your as usual interesting comments.
Regards,
Dondu N. Raghavan
Post a Comment