8/05/2012

மன்மதலீலையை வென்றார் உண்டோ?

சமீபத்தில் 1976-ல் வந்த இப்படம் இன்னும் என் மனதில் நிற்கிறது. அதன் முழு வீடியோ யூ டியூப்பில் இப்போது. கிடைக்கவில்லை, ஆனால் ஒரு பாட்டு உண்டு, எஞ்சாய்!!





இப்போது பார்த்தாலும் அதே புதுமையை இழக்காமல் உள்ளது அப்படம். பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டா என்றெல்லாம் எனக்கு தெரியாது.ஹிட் ஆகவில்லையென்றால் நமது ரசிகர்க்கு ரசனை போதாதுஎன்றுதான் கூறுவேன்.

கவர்ச்சி நடிகை ஹலத்தை முழுக்க முழுக்க போர்த்திய புடவையுடன் பார்ப்பது சிறந்த மாறுதலாக உள்ளது.

பெண் சபலம் மிக்க மது பார்க்கும் பெண்களுடன் எல்லாம் கற்பனையிலேயே காதல் செய்கிறான்.முக்கியமாக டைட்டில் சாங்க் “மன்மதலீலை” மிக அழகான முறையில் படமாக்கப்பட்டுள்ளது (பாடல் பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாகவே அவ்வப்போது வசனங்களுடன் வருகிறது).

ஒவ்வொரு பெண்ணின் அறிமுகமும் சுவையானது. அவ்வப்போது மனைவியிடம் மாட்டிக் கொண்டு பேய்முழி முழிப்பதும் சுவையானதே.

இப்படத்தில் வரும் பல ஆண்களும் பெண் சபலத்துடன் இருப்பது சற்றே இடிக்கிறது என்று கூறத் தோன்றினாலும் அதையும் சுவைபட சொல்கிறார் டைரக்டர்.

டாக்டரின் ஆலோசனைப்படி பாவமன்னிப்பு கேட்கிறேன் பேர்வழி என தனது கிளார்க்கிடம் எல்லாவற்றையும் கன்ஃபெஸ் செய்ய அவர் படும் பாடும் பிரமாதம்.

கிளைமாக்ஸ் பிரமாதம்.

சொல்லிக் கொண்டே போகலாம்.படத்தைத்தான் பாருங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

suvanappiriyan said...

சம்பூர்ணராமாயணமும், கர்ணனும், திருவிளையாடலும் பார்க்க வேண்டிய கண்கள் மன்மத லீலையை பார்க்கலாமோ! :-(

Kaliraj said...

உ வே சா-விடம் அவரது சீடர் கேட்கிறார், “ இந்த வயசான காலத்தில் சிற்றின்ப இலக்கியங்களை ஓலையில் இருந்து அச்சில் ஏற்ற முயற்ச்சிக்கிறீர்களே இது தகுமா என்கிறார். அதற்க்கு உ வே சா அவர்கள்,” நான் சிறு வயதில் பிரபந்தங்களையும், பெரும்புராணத்தையும் அச்சில் ஏற்ற முயன்றேன். அதை இறையருளால் செவ்வனே செய்தேன்...கடமையை செய்யும் போது அதில் பாகுபாடு பார்க்கக்கூடாது. என்பார்வையில் சிற்றின்பம், பேரின்பம் என்று ஒன்றும் இல்லை..எல்லாமே தமிழ்தான் .. எல்லாமே இலக்கியமே...எல்லாமே என் பாட்டன் சொத்து... என்பார்

சூனிய விகடன் said...

எனக்கு இந்தப் படத்தில் பிடிக்காத ஒரே விஷயம் ...ஆலம் திருந்துவதற்காக அவரது அப்பா ஒய். ஜி .பார்த்தசாரதியை வேலைக்காரியோடு படுக்க வைத்தது தான்... பெண்ணின் அப்பா...அப்புறம் பெண்ணின் புருஷன் தேவைப்பட்டால் பெண்ணின் மகன் எல்லாமே கள்ள உறவுக்காரர்களே என்ற நிறுவுதல் தான் மிகவும் அசிங்கமாக இருக்கிறது...ஒருவேளை ஒய்.ஜி .பி ஒழுக்கமானவராக இருந்திருந்தால் ஆலமும் கமலும் வாழ்க்கையில் மறுபடி இணையவே மாட்டார்களா....படத்தை எப்படி முடிப்பாராம் கே.பி .?

இந்தப் படம் என்றில்லை ..கே.பி யின் பெரும்பாலான படங்களில் ஆண்கள் சதைப்பிண்டத்துக்கு அலையும் வெட்கம் கெட்டவர்களாகவே படைக்கப்பட்டிருப்பார்கள்...நூல் வேலி படம் இந்த உதாரணத்தின் உச்ச கட்டம்...

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது