கொடும்பாவி எரிக்கும்போது ஜாக்கிரதை!!!!!!!!!!
அது சரி இவர்கள் கண்டார்களாமா இம்மாதிரி ஆகும் என்று?
இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பார்கள் என நம்புவோமாக.
ரொம்பவும் சினிமா பார்த்தால் இம்மாதிரி ஆகிவிடுமோ?
கல்யாணப் பெண்ணை அழைத்து வரும் தோழியர் வாராய் என் தோழி வாராயோ பாடுவதைக் கண்டுள்ளோம். ஆனால் பெண்ணே அவ்வாறு பாடி நடனமாடினால்?
ஆனாலும் மணமகன் பாவந்தேன்!!!!!
இல்லை அப்படியில்லை என்கிறர் மகேஸ். அதே திருமணத்தில் மணமகன் அடிக்கும் லூட்டியைக் கீழே பார்க்கலாம். நன்றி மகேஸ்.
நான் என்ன நினைக்கிறேன் என்றால், பழங்காலத் திருமணங்களில் இரு தரப்பினரும் நையாண்டிப் பாடல்கள் பாடுவார்கள். அதன் இன்னொரு ரூபம்தான் இது என.
ஈவேரா பற்றிய கார்ட்டூன்களின் உண்மை உரைத்ததால் கள்ள மௌனமோ?
இதற்கு முந்தைய பதிவில் வந்த கார்ட்டூன்களை நான் போட்ட முக்கியக் காரணமே தலித்துகள் விஷயத்தில் அவரது உண்மை நிலையைக் காட்டவே. அதாவது condenscending மனப்பான்மை என்பார்கள். அதுதான் இது. உண்மையிலேயே அவருக்கு பார்ப்பனரல்லாத மற்ற உயர்சாதியினரின் முன்னேற்றம்தான் முக்கியம். இக்கருத்துக்கள் பற்றி நான் ஏற்கனவேயே கேள்விப்பட்டிருந்தாலும் அவற்றுக்கான சரியான சான்று கிடைக்காமல் இருந்தேன். இப்போது முரசொலி கார்ட்டூன் கிடைத்தது.
ஆனால் நான் எதிர்பார்த்தது போல எதிர்வினை ரொம்ப இல்லை. ஈவேரா ஆதரவாளர்களின் கள்ள மௌனம் நீடிக்கிறது.
மனதை நிறையச் செய்த ஒலிம்பிக்ஸ்
பரவாயில்லை. தங்கம் இல்லாவிட்டாலும் மற்ற பதக்கங்கள் கிடைத்தனவே என அல்ப திருப்தி பட்டு கொள்ள வேண்டியதுதான். அவை கூட இல்லாமல் சிங்கி அல்லவா அடித்துள்ளோம் இத்தனை ஆண்டுகளாக.
செய்ய வேண்டிய சுத்திகரிப்பு வேலைகள் இன்னும் பல உள்ளன. முக்கியமாக ஒலிம்பிக் டீமுடன் டூருக்கு வரும் அதிகாரிகளின் பிச்சைக்கார கும்பலை ஒழிக்க வேண்டும். செய்வார்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நூலறிமுக நிகழ்வு, ராலே
-
ராலே நகரில் Stories of the True நூலறிமுக நிகழ்வு. அமெரிக்க நகர்களில்
தொடர்ந்து நிகழ்ந்துவரும் நூலறிமுக நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அதே பார்ன்ஸ்
ஆண்ட் நோபிள் ...
3 hours ago
3 comments:
சிறப்பாக இருந்தது பஞ்சாமிர்தம்!
நன்றி!இங்கேயும் வரலாமே நேரமிருந்தால்!http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html
அவருக்கு மற்ற உயர்சாதியினரின் முன்னேற்றம்தான் முக்கியம். //////
அதை இந்த பதிவில் ஆதாரத்துடன் காட்டி உள்ளேன்.
பெரியாரை எதிர்த்த அண்ணா...
update this also.
http://www.youtube.com/watch?v=iMiQwaGVMto&feature=player_embedded
Post a Comment