1/16/2013

துக்ளக் 43-வது ஆண்டுவிழா





இந்த ஆண்டும் இந்தச் சந்திப்புக்கு செல்ல உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்றெல்லாம் கூற மாட்டேன், என் வீட்டம்மா மற்றும் என் மகள் அனுமதிக்கவில்லை, அதே சமயம் நானும் அவ்வளவு பிடிவாதமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 14-ஆம் தேதி இரவு கத்தாரிலிருந்து நண்பர் கிருஷ்ணன் தொடர்பு கொண்டு,  மீட்டிங்கிற்கான வீடியோ இணைப்பு தேவையா எனக் கேட்க, நானும் ஆமாம் எனக்கூற, அவரும் அதை அன்புடன் தந்ததில், இப்போதுதான் பார்த்து முடித்தேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஸ்வெட்டர், குல்லா சகிதம் சோ வருகை தர கரகோஷம். தனக்கு உடல்நிலை சரியில்லை என பில்ட் அப் கொடுத்ததாக கூறிக்கொண்டு அனுதாப  ஓட் பெற்று விட்டதாகவும். ஆனால் ஆக்சுவலாக உடல்நிலை அவ்வளவு மோசம் இல்லை எனவும் கூறி கலகலப்பூட்டினார். தன்னை உட்கார்ந்து பேசுமாறு ஆலோசனை தரப்பட்டதாகவும் கூறினார். ஆனால் நின்ற வண்ணம்தான் பேசினார்.

முதலில் பொங்கல் வாழ்த்து, பிறகு துக்ளக் குழுவினரின் அறிமுகம், அட்டெண்டர்களை கூட அறிமுகம் செய்வித்தார் வழக்கம்போல. அதுதான் சோ.

பிறகு பார்வையாளர்கள் பேச அழைக்கப்பட்டனர்.

1. சத்யநாராயணன், தர்மபுரி:
குஜராத்தில் மோதி ஜெயிப்பதை துக்ளக் சரியாகவே ப்ரெடிக்ட் செய்தது, மோதி தான் செய்த சேவையின் பலத்தில் மீண்டும் மீண்டும் ஜெயிக்கிறார், மற்ற முதல்வர்கள் ஏன் அவ்வாறு ஜெயிக்கக்கூடாது?

ஒழுங்கீனங்கள் அதிகரித்து விட்டன, அதற்கு தண்டனைகள் அதிகம் இல்லாததே காரணம்.

சோ அவர்கள் தண்டனை வேண்டும் என்பதை ஒத்துக் கொண்டார், கூடவே மோதி நல்ல முதலமைச்சர் என்பதையும்.

2. மோகன், தேனி:
பாக்ஸ்தான் இவ்வளவு வாலாட்டியும் மத்திய அரசு ஏன் அமைதியாக இருக்கிறது? இஸ்ரேல் மாதிரி பாய வேண்டாமா?

சோ: மத்திய அரசு மட்டுமல்ல பத்திரிகைகளும் பாக்கிஸ்தான் விஷயத்தை அடக்கி வாசிக்கின்றன. இஸ்ரேல் செய்வது மாதிரி செய்ய வேண்டும். அமெரிக்காவிடம் நட்பு வலுக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு இவ்வளவு பணியக்கூடாது.

3. அப்துல் ரஹ்மான்:
அரசு மதுக்கடைகளில் லாபம் பார்க்கிறது.  அந்த வருமானத்தில் சலுகைகள் தருவது, குழந்தையின் ரத்தத்தை விற்று குடும்பத்தைக் காப்பாற்றுவது போன்றது.

இப்போது சோ: பூரண மதுவிலக்கு பிராக்டிகல் இல்லை. வருமானத்தைச் சரியாக செலவு செய்வதில்தான் கவனம் வேண்டும். குஜராத்தில் மதுவிலக்கு இருந்தாலும் அங்கும் கள்ளச் சாராயம் உண்டு.

தீமை என்றால் காப்பி, டீ கூட தீமைதான். அதிகமாக உணவு உண்பதே தீமைதான்.

அப்துல் ரஹ்மானின் இன்னொரு கேள்வி சோ ஏன் ஆன்மீகம் சம்பந்தமாக அதிகம் எழுதக்கூடாது என்பதே. அதற்கான பலம் தன்னிடம் இல்லை எனக்கூறி, காலட்சேபம் செய்பவர்கள் பலரது பெயர்களை கூறினார், அந்த அளவுக்கு தனக்குத் தகுதி இல்லை எனவும் கூறினார்.

4. அவினாசி வேலுச்சாமி:
 விவசாயிகள் வேறு தொழில் செய்ய வேண்டும் என மன்மோகன் சிங் கூறுவதை கண்டிக்க வேண்டும். அவரிடமும் அம்மாவிடமும் சொல்லி விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என சோ அவர்களை கேட்டுக் கொண்டார்.

“எங்கம்மா மேலேதான் இருக்காங்க” என ஜோக் அடித்தார் சோ. மன்மோகன் பர்றி பேசும்போது விவசாயிகள் அத்தொழிலை விட்டால் என்ன செய்வது? வேறு வேலை இல்லையே? எல்லோரும் இவர் மாதிரி பிரதம மந்திரி ஆக முடியாது அல்லவா எனக் கிண்டலடித்தார்.

வாசகர் சொன்னதை துக்ளக்கில் பாக்ஸ் மேட்டராக போடுவதாகவும் சொன்னார்.

5. மாலதி சுந்தர், வேளச்சேரி:
பெண்கள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரம் பற்றி குறிப்பிட்டு, பெண்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை மீடியாக்கள் சரியாக வலியுறுத்துவதில்லை எனக் குறைபட்டுக் கொண்டார்.

சோ: அப்படிச் சொன்னால் பழங்காலம்னு சொல்லிடுவாங்க. ஆனால் பழங்காலத்தில் பெண்களுக்கு மரியாதை தரப்பட்டது. மனுஸ்மிருதியும் அதை வலியுறுத்துகிறது.

இம்மாதிரி குற்றங்களுக்கு தண்டனை அதிகம் தர வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார். நல்ல வேளையாக சிதம்பரம் ஹோம் மினிஸ்டர் இல்லை என சந்தோஷப்பட்டுக் கொண்டார், இல்லாவிட்டால் வடேராவுக்கு சப்பை கட்டு கட்டியது போல இங்கும் பேசியிருக்கக் கூடும் என கேலியாகக் கூறினார்.

மற்றப்படி புள்ளிவிவரங்களை பார்த்தால் இந்திய இளைஞர்கள் இவ்விஷயத்தில் அவ்வளவு மோசமில்லை..

அச்சமயம் அக்பருதீன் ஒவைசி என்பவர் 15 நிமிடங்களுக்குள் இந்துக்கள் அத்தனை பேரையும் கொல்ல முடியும் என பேசியது பற்றி சோவுக்கு ஆடியன்ஸ் தரப்பிலிருந்து கேள்வி வந்தது.

அது அயோக்கியத்தனம், தண்டிக்கப்பட வேண்டியது என்றர். ஆனால் மீடியா அதை அடக்கி வாசிக்கிறது. இதையே ராமகோபாலன் கூறியிருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என பட்டியலிட்டு காட்டினார். இப்போது உண்மை கூற வேண்டுமானால் இம்மாதிரி அடக்கி வாசித்து மத்திய அரசு இசுலாமியரைத்தான் கேவலப்ப்டுத்துகிறது. பெரும்பான்மை இசுலாமியர் அக்பருதீன் ஒவைசி கூறியதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஓவைசி சொன்னது என்ன என கேட்பவர்கள் நண்பர் அருண் அம்பி போட்டிருக்கும் இடுகையை பார்க்க வேண்டுகிறேன்.

6. ராமகிருஷ்ணன், மாடம்பாக்கம்:
ஸ்டாலினை கருணாநிதி வாரிசாக அறிவித்தார், துக்ளக்குக்கு வாரிசை சோ அவர்கள் எப்போது அறிவிப்பார்?

தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என ஆகிவிட்ட பிறகு அதிமுக இதை எப்படி ஈடுகட்டும்?

சோ அவர்கள் அதற்கு பதிலளிக்கையில்: கருணாநிதி அப்போது கூறியதையே எப்போதும் கூற மாட்டார், தானும் கருணாநிதியும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரி, வாரிசு எல்லாம் கூறமாட்டோமாக்கும்.

மற்றப்படி தேமுதிக பற்றி கவலைப்படும் வேலை இப்போது திமுகாவுக்குத்தான்.

7. பிரபு, சென்னை:
அரசின் அலட்சியத்தால் விபத்துக்ள் ஏற்படும்போது நஷ்ட ஈடு கேட்டால் கிடைக்குமா?.

சோ: அதை நிரூபணம் செய்தால் கண்டிப்பாக கிடைக்கும்.

8. ஜான்சன், கோவை:
பிரதமர் பதவி மியூசிகல் சேர் விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது. இதை சரி செய்ய வேண்டாமா? மோதிதான் பிரதமராக வரவேண்டும் என்பதை சோ எடுத்துக் கூற வேண்டும்.

பாஜகவும் தமிழகத்தில் வளர்கிறது. அதையும் குறிப்பிட வேண்டும்.

சோ: மோதி பிரதமர் ஆக வேண்டும்தானே , ஆக்கி விடுகிறேன். ஆனால் அவரை பாஜகாவிலேயே பலர் எதிர்க்கின்றனர். ஒரு தலைவருக்கு அத்தாரிட்டி ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், தெலுகு தேசம் ஆகிய கட்சிகளைப் பார்க்கலாம்.

ஆனால் பாஜகாவில் மோதியை தேர்ந்தெடுக்க பயப்படும் காரணமே அவருடைய ஆளுமைதான். அவரை தன்னிஷ்டப்படி ஆட்டி வைக்க முடியாது என்பதாலேயே அவரை முன்னிறுத்த பலர் தயங்குகின்ற்னர்.

9. அஃப்சல் மாலிக்:
திமுக் சங்கரமடம் இல்லை என அழகிரி கூறினாரே எனக் கேட்க, அவ்வாறு கூறியது கருணநிதிதான் என சோ அவர்கள் கூறினார்.

உண்மைதான், சங்கர மடத்தில் திமுக ரேஞ்சுக்கு குடும்ப உறுப்பினர்களை வாரிசாகக் கொண்டு வரமுடியாதுதான் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும் என சிரிக்காமல் கூறினார்.

10. மகாதேவன், காரைக்குடி:
வால்மார்ட் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதில் தவறு இலை என்றும், இந்த விஷயத்தில் தான் குருமூர்த்தியின் கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் சொ கூறினார் (”I disagree with Gurumurthi with all pleasure”!)

11. எஸ். கிருஷ்ணமூர்த்தி, சித்தூர்:
இலங்கை பற்றி தொடர் கட்டுரை எழுத வேண்டும், ரஜனிகாந்த் தேசீய நதிகள் இணைப்பு பற்றி பாடுபட வேண்டும் ஆகிய விஷயங்களை இவர் தொட்டார்.

சோ: ராஜீவ், ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை குலைத்தன் மூலம் புலிகளும், அவரது தமிழக ஆதரவாளர்களும் தீங்குதான் விளைவித்தனர். அது பற்றி வேணது ஏற்கனவேயே எழுதி விட்டாயிற்று.

12. ஸ்ரீனிவாசன்:
வைகோ மூன்று விஷயங்களை நல்லபடி செய்கிறார். ராமதாஸ் ஜாதி பற்றி பேசுவதையும் 75% மக்கள் மனத்தளவில் ஒப்புக் கொண்டாலும், வெளிப்படையாக ஆதரவு தர மாட்டேன் என்கிறார்கள். சோ ஏன் ஆதரவு த்ரக்கூடாது?

சொ: வைக்கோ செய்வது எனக்குத் தெரிந்து நடைபயணம்தான், நல்ல உடற்பயிற்சி சர்க்கரை வியாதிக்கு நல்லது. என்னிடம் ஒருவர் தான் செய்யும் உடற்பயிற்சி பற்றி பெருமை அடித்துக் கொண்டதாகவும், அவரிடம் ஒன்று உடலை வளர்க்கலாம், இல்லாவிட்டால் மூலியை வள்ர்க்கலாம் என்ற ரேஞ்சுக்கு பேசி அவரையும் என் வழிக்கு கொண்டு வந்தேன்.

ராமதாஸ் தலித்துகளை குறிவைத்து தாக்குவதை கண்டிக்கிறேன். ஆண்டாண்டு காலமாக தலித்துகள் கொடுமை செய்யப்பட்டதை மறுக்கவியலாது.

13. பொன்னுசாமி, ஆவடி:
திமுக ஆட்சியில் இருந்த குறைகள் அதிமுக ஆட்சியில் மறையவில்லை.

அதை சோ அவர்கள் மறுத்தார். புள்ளி விவரங்கள் இல்லாவிட்டாலும் போலீஸ் ஸ்ட்ரேஷனில் கட்சி ஆட்கள் நுழைவதில்லை, கட்டைப் பஞ்சாயத்து குறைந்து விட்டது, ரொடியிசம் இல்லை. குற்றங்களும் குறையும் என நம்புகிறேன்.

14. குணசேகரன், ராயப்பேட்டை:
 மோடியை உயர்த்த நிதிஷ்குமாரை மட்டம் தட்டுகிறார்  சோ. குஜராத்துக்கு டீமை அனுப்புவதுபோல பீஹாருக்கும் அனுப்பலாமே.
ஜெ அரசு கல்விக்கு முக்கியத்துவம் தரவில்லை.

சோ தனது பதிலில் ஜெ கல்விக்கு முக்கியத்துவம் தருவதை உதாரணங்களுடன் விளக்கினார். பீஹாருக்கு டீம் அனுப்புவது நல்ல யோசனை என்றும் அவ்வாறே செய்யலாம். நிதிஷ் குமாரை வேண்டுமென்று மட்டம் த்ட்டவிலை.

15. கோபால கிருஷ்ணன், ஈரோடு:
 மோடிக்கு தனி மெஜாரிடி இருபதால் குஜராத்தில் செயல்பட முடிகிறது, ஆனால் மத்தியில் கூட்டணி ஆட்சிதான் என ஆன பிறகு, கூட்டணி நிர்ப்பந்தங்களை அவரால் சமாளிக்க இயலுமா?

சோ அவர்கள் இங்கு ஒரு தவறு செய்துள்ளார், இன்றைக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏன் தரவில்லை?,

சோ: இவர் ஒருவர்தான் பொங்கல் தினம் புத்தாண்டாக இருந்தது என்பதை ஞாபகம் வைத்துள்ளார்.

மோதி இப்போதே குஜராத்தில் தனது கட்சியிலேயே ப்ல தரப்பு மக்களை சமாளித்து கூட்டணி ஆட்சிதான் நடத்துகிறார். கண்டிப்பாக மத்தியிலும் அவரால் சமாளிக்க இயலும், எங்குமே கூட்டணிதான்.

இப்போது சோவின் பேச்சு:
ஜெ அவர்களை நான் எல்லா விஷயங்களிலும் ஆதரிக்கவில்லை. தான் அவருடன் கருத்து மாறுபடுவதையும் பல உதாரணங்களுடன் விளக்கினார். அதே சமயம் ஜெ செய்த நல்ல விஷயங்களையும் பட்டியலிட்டார். தான் பேசுவது நமது எம்ஜிஆர் பத்திரிகை ரேஞ்சுக்கு இருப்பதாக சிலர் கூறுவதை குறிப்பிட்ட அவர் அப்படியாவது அப்பத்திரிகைக்கு வரும் விளம்பரங்கள் போல தமது பத்திரிகைக்கும் வந்தால் நன்றாக இருக்குமே என விசனப்பட்டார். பிறகு தான் ஜெய்லலிதாவை ஆதரிப்பதன் காரணமே திமுக மீண்டும் பதவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

முதல் மந்திரியை சுலபமாக பார்க்க முடியவில்லை என சிலர் கூறுவதற்கு, ஏன் அவர் எல்லோரையும் பார்க்க வேண்டும்? அவர் என்ன கருணாநிதியா அவர் முதல் மந்திரியாக இருந்தபோது  வேறு வேலை இல்லாமல் இருந்தது போல?

ஜெ பல தரப்பினரை பார்த்து தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுகிறார். காற்றுவழி மற்றும் நீர்வழி மின்சாரம் தட்டுப்பாட்டிற்கு இயற்கைதான் காரணம். வெளி மாநிலத்திலிருந்து மின்சாரம் தருவிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு தர மறுக்கிறது. பாகிஸ்தானுக்கு வேண்டுமானால் பவர் தருவோம், தமிழகத்துக்கு இல்லை என்ற ரேஞ்சில் மத்திய அரசு நடந்து கொள்கிறது.

போர்க்கால அடிப்படையில் ஜெ செயல் புரிஇறார், சீக்கிரமே நிலைமை சீர் அடையும் என நம்புகிறேன். எது எப்படியாயினும் திமுக மீண்டும் பத்விக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் எனது எண்ணம். அதற்காகவே தான் அதிமுக அரசை அனுசரித்து போகிறேன்.

இப்போது நடக்கவிருப்பது பாராளுமன்ற தேர்தல், அங்கு அதிமுக நல்ல பலத்துடன் வெற்றிபெறுவது முக்கியம் என்றும் அவர் கூறினார். இத்தேர்தலில் காங்கிரஸின் ஊழல் ஆட்சி எக்ஸ்போஸ் செய்யப்பட வேண்டும்.

அத்தருணத்தில் ப. சிதம்பரம் அவர்களது உளறல்களையும் அவர் கண்டித்தார். கருணாநிதியுடன் பழகும் தோஷத்தால் இவரும் அவர் மாதிரியே பேசுகிறார்.

குஜராத்தில் தாங்கள்தான் ஜெயிச்சோம் என ப.சிதம்பரம் கூறுவதையும் சோ கிண்டலடித்தார். பிரதமரோ எல்லாவற்றுக்கும் கவலைப்பட்டால் தனது வேலை முடிந்தது என நினைக்கிறார். ஒரு காலத்தில் நல்ல பெயருடன் அறியப்பட்ட அவர் இப்போது ஐயோ பாவம் ரேஞ்சுக்கு வந்து விட்டார்.

பாஜகாவில் பலரும் தன்னைத்தாமே தலைவர் ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்வதில்தான் சிக்கலே இருக்கிறது. அத்வானி அவர்கள் முன்மொழிந்து மோதி பிரதமராக ஆவன செய்ய வேண்டும்.

மாநில அளவில் திமுக என்ன செய்கிறது என்பது பற்றியும் அவர் பேசினார். தமிழகத்தில் விளக்கு எரிந்தால் தன் வீட்டில் இருள் வரும் என கருணாநிதி நினைக்கிறார்.

ஜெ மத்திய அரசுடன் சமாதானமாக போக வேண்டும் என்று கூறுபவர்களிடம் ஒரு ஒத்துழைப்பையும் தர மறுப்பவர்களிடம் எவ்வாறு சமாதானமாக போக இயலும் என கேட்டார். அவர் தைரியமாக சண்டைபோட வேண்டிய இடங்களில் போடுவதால்தான் அவர் அரசு நிலைத்து நிற்கிறது.

இப்போ டெசோ பற்றி சோ பேச ஆரம்பிக்க ஆடியன்சில் ஒரே சிரிப்பு. கருணாநிதி எவ்வாறு அது பற்றி மாற்றி மாற்றி பேசுகிறார் என்பதை சோ அபிநயித்துக் காட்டினார்.

வெளிநாடுகளில் சட்டத்துக்கு இருக்கும் மரியாதை இங்கு இல்லாததன் காரணமே தண்டனைகள் குறைவாக இருப்பதுதான்.

காங்கிரஸில் ஊழல் பேர்வழிகள் அதிகம் பாஜகாவில் நேர்மையாளர்கள் அதிகம் மோதி பிரத்மராக வாய்ப்புகள் அதிகம்.

கடைசியில் பாஜகா அதிமுக கூட்டணி வருமா என ஆடியன்சிலிருந்து கேள்விவர, “என்னை ஏன் கேட்கிறீர்கள், அவங்களைக் கேளுங்க என ஆடியன்சையே சுட்டிக்காட்டினார் (அங்கு பாஜக காரர்கள் இருந்திருப்பார்கள் என நான், டோண்டு, நினைக்கிறேன், :)))

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக நல்ல பலம் பெற வேண்டும், காங்கிரஸ் தோற்க வேண்டும், திமுக மீண்டும் வரக்கூடாது என மறுபடியும் கூறி சோ அவர்கள் தனது உரையை முடித்துக் கொண்டார்

நேரில் பார்த்ததை எழுதாமல் இம்மாதிரி வீடியோவை பார்த்து எழுதியதை அழுகினி ஆட்டம் ஆடியது போல உணர்கிறேன். இருந்தாலும் என்ன செய்வது வேறு வழியில்லை. அடுத்த ஆண்டு பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


                                  

  



 

12 comments:

k.rahman said...

இது எல்லாவறையும் நீங்கள் டைப் செய்தீர்களா? மிக்க நன்றி. படிப்தற்கு உதவியாக இருந்தது.

சோ இது போல ஒரு அதிமுக ஜால்ராவாக இருபது அவருக்கு உண்மையிலேயே அசிங்கம் தான். பத்திரிக்கை துறையிலிருந்து ரெடைரே ஆக வேண்டிய நேரம் வந்து விட்டது இதற்கும் மேலும் இது போன்ற அதிமுக சோம்பு அடிக்கும் வேலையை அவர் செய்தால் இத்தனை வருடம் சேர்த்து வய்த்த அவர் மரியாதையை அவரே கெடுத்து கொண்டிருகீறார்.

//ஒரு காலத்தில் நல்ல பெயருடன் அறியப்பட்ட அவர் இப்போது ஐயோ பாவம் ரேஞ்சுக்கு வந்ததையும் அவர் குறிப்பிட்டார்// இதுவே தான் சோவுக்கும் வர போகிறது போல எனக்கு தெரிகிறது.

dondu(#11168674346665545885) said...

மோதி மாதிரி எல்லோரும் இருப்பதில்லையே, ஆகவே அவர் நமக்கு முதல்வராக கிடைக்காதவரை ஜெயலலிதாவா, கருணாநிதியா என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.

ஒருவரும் தேறவில்லை எனக்கூற ஐந்து நிமிட்ங்கள் கூட ஆகாது. ஆனால் அவ்வாறு இருப்பது காரியத்துக்காகாது.

இதைத்தான் சோ பல முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறி வருகிறார். அவரது செயல்பாடுகளும் இம்மாதிரித்தான்.

மேலும் செம்பு அடிப்பதால் அவருக்கு என்ன லாபம்? தன் சுய தேவைகளுக்காக சோ அவர்கள் யாரிடமும் இதுவரை கையேந்தியதில்லை. அதை நாம் மறக்கக் கூடாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு பகிர்வு! சோ நல்லதையே செய்தாலும் மீண்டும் நமக்கு நல்லது நடக்க மாட்டேங்கிறது. முன்பு திமுக ஆட்சி அமைக்க உதவி செய்து பின்னர் அதிமுக ஆட்சி அமைக்க உதவி செய்து என்று ஒரு மேக்கராக இருந்தாலும் தமிழகத்திற்கோ மக்களுக்கோ அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வருத்தமான விஷயம்!

Sathish said...

is it 42nd or 43rd anniversary ?

dondu(#11168674346665545885) said...

@சுரேஷ்
என்ன செய்வது, நமது மக்கள் இலவசங்களுக்கு மயங்கும் வரை அதுதான் நடக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Amudhavan said...

சோவின் துக்ளக் ஆண்டுவிழா பேச்சின் தொகுப்பை விழாவுக்குப் போகவில்லையென்றபோதும் இணையத்தில் பதிக்க வேண்டும் என்ற தங்களின் ஆர்வத்தையும் சிரமத்தையும் பாராட்டுகிறேன். ஆனால் ரொம்பவும் bad reporting. வரிக்கு வரி சோ கூறினார் சோ அவர்கள் தெரிவித்தார் என்றார் சோ அவர்கள் என்பதுபோல மொத்தம் 33 இடங்களில் ஏதோ ஜெபம் பண்ணுவது போல சோ நாமாவளி பாடியிருக்கிறீர்கள்.
'டோண்டு ராகவனைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று மயிலாப்பூரைச் சேர்ந்த ராமசாமி கேட்டதற்கு "இணைய எழுத்தாளர்களிலேயே எனக்கு டோண்டு ராகவன் ஒருவரைத்தான் பிடிக்கும்" என்றார் திரு சோ. என்பதுபோல் நீட்டாக எழுதியிருக்கலாமே. நல்லவேளை, பத்திரிகை துறைக்கு வந்திருந்தீர்கள் என்றால் உங்களைத் திருப்பி அனுப்பியிருப்பார்கள்.

dondu(#11168674346665545885) said...

@அமுதவன்
அதனால்தான் பத்திரிகைத் துறைக்கு போகவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

sriramsharma said...

அழுகுணி ஆட்டம் ஆடுவது , டோண்டுவின் மரபணுவில் இல்லை என்பது உலகறிந்தது !
கருப்பு , மஞ்சள் என்பதெல்லாம் நிலையிலாதது ! காவி நிலையானது !
ஆன்மாவைப்போல் !!
நின்று ஆடுங்கள் சார் !
நமஸ்காரம் !!

Arun Ambie said...

பொறுமையாக இவற்றைத் தட்டெழுதி வெளியிட்ட உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள். சோ சற்றே அதிமுக பக்கம் சாய்ந்திருப்பது உலகறிந்த விஷயம். ஆனால் 2011க்குப் பிறகு கொஞ்சம் அதிகமாகச் சாய்ந்திருப்பது போலவே படுகிறது.

பாஜக தமிழகத்தில் 1998-2004ல் நன்றாக வளர்ந்திருக்கலாம். காங்கிரசு கூட்டணிக்குக் குங்குமம் சுமக்கும் கழுதையாகவே இருந்து தேய்ந்து கட்டெறும்பாகிக் கோட்டை விட்டது போல பாஜக தன் ஆட்சிக் காலத்தை திமுகவுக்கு கோபம் வராமல் நடத்திவிட்டுத் தற்போது நான் வளர்கிறேனே மம்மி என்கிறது. பாஜக வளர்வது நாட்டுக்கு நல்லது என்ற போதும் தற்போது challenges அதிகம்.

gujjan said...

நேரில் பார்த்ததை எழுதாமல் இம்மாதிரி வீடியோவை பார்த்து எழுதியதை அழுகினி ஆட்டம் ஆடியது போல உணர்கிறேன். இருந்தாலும் என்ன செய்வது வேறு வழியில்லை. அடுத்த ஆண்டு பார்ப்போம்.///

Its ok sir. We still dont consider it as "azhugini-aatam" :) Your blog was informative. TFS

hayyram said...

சோ அதிமுக பக்கம் சாய்ந்திருப்பதற்கு முக்கியக் காரணம் குடும்ப கொள்ளைக்கூட்டம் மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதால்தான். மக்கள் அதை மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டும்.

dondu(#11168674346665545885) said...

@hayyram
அதையேதான் நானும் இப்பதிவின் அடிநாதமாக வைத்தேன்.

ஒண்ணுமே உருப்படாது என்று சொல்லிவிட்டுப் போக ஐந்து நிமிடங்க கூட தேவைப்படாது. ஆனால் அவ்வாறு செய்ய சோ பொறுப்பர்றவர் இல்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது