1/03/2013

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 03.01.2013

சோ அவர்களது கேள்வி பதில்களில் சில 

சில கேள்வி பதில்களுடன் எனது சேர்க்கையும் சில சமயம் இருக்கும். கண்டுக்காதீங்க.

1. கே: குஜராத் தேர்தல் வெற்றி நரேந்திர மோதி என்ற தனிமனிதருடையதா? இல்லை பாரதீய ஜனதாக் கட்சியுடையதா?
ப: ஒரு தனி மனிதர் மாநில அளவில் இப்படிப்பட்ட வெற்றியை பெற்று விட முடியது.அதே போல ஒரு கட்சியும் கூட, மக்களிடையே நம்பிக்கையை பெற்ற ஒரு மனிதனின் தலைமயில் இயங்கும்போதுதான் இப்படிப்பட்ட வெற்றிகளைப் பெற முடிகிறது. இப்படி வேண்டுமானால் சொல்லலாம்: பாரதிய ஜனதா ஒரு மோட்டார் கார். அதை ஓட்டிச் சென்றவர் நரேந்திர மோதி. இரண்டுமே அபாரமாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.  

2. கே. குஜராத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற நரேந்திர மோதி தனது அரசியல் எதிரியான கேசுபாய் படேலை சந்தித்து ஆசி பெற்றுள்ள அரசியல் நாகரிகம் பற்றி?
ப: இதில் அரசியல் நகரிகமும் இருக்கிறது, அரசியல் விவேகமும் இருக்கிறது. கேசுபாய் படேலை நம்பி ஓட்டளித்த படேல் சமூகத்தினர் மீண்டும் அத்தவற்றைச் செய்யாமலிருக்க இந்தப் பெருந்தன்மையான நடவடிக்கை உதவும் அல்லவா?
டோண்டு ராகவன் சேர்ப்பது: பிறகு பத்திரிகையாளர்களுடன் பேசிய கேசுபாய் படேல் தான் அல்பத்திலும் அல்பம் என்பதை நிரூபித்துள்ளார். அதுவும் மோதிக்குத்தான் பலம் சேர்க்கிறது.

3. கே: குஜராத் ஒன்றும் இந்தியா அல்ல என நரேந்திர மோதியின் வெற்றி குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளதே?
ப்: காங்கிரஸ்காரர்களுக்கு மோதி மேல் வரும் கோபத்தில் குஜராத் இந்தியாவிலேயே இல்லை என்று கூட சொல்லத் தயாராகி விடுவார்கள் போலிருக்கிறதே.
டோண்டு ராகவன் சேர்ப்பது: அப்படியாவது ஆறுதல் பெறட்டும் காங்கிரஸ்.

4. கே: எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது இப்போதைக்கு நடவடிக்கை இல்லை என பாரத் ஈய ஜனதா முடிவெடுத்திருப்பது பயத்தினால்தானே?
ப: இப்போதைக்கு சுயமரியாதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலாட்சி கவிழ்ந்துவிடும். ஆகையால் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஆட்சி தொடர வழி செய்வ்அது என்று பாஜக த்லை தீர்மானித்திருப்பது புரிகிறது
டோண்டு ராகவன் சேர்ப்பது: இது நிச்சயம் பாஜகவுக்கு இழிவுதான்.

ஆனந்த விகடன் செய்யும் கூத்து (இதழ் 09.01.13)
லேட்டஸ்ட் விகடன் முதல் கட்டுர்ஃபை ஆணாதிக்கத்தை எதிர்த்து முழக்கமிடுகிறது. அடுத்த கட்டுரையோ நயனதாரா யாருக்கு என சீப்பாக இரு சகோதர்களுக்கிடையே நடக்கும் போட்டியை பற்றி எழுதுகிறது. இக்கட்டுரையின் டைட்டில் ஆணாதிக்கத்துக்கு சரியான சான்று.

வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தென்றல் மாத இதழ்
அமெரிக்காவிலிருந்து திரும்பிய எனது மைத்துனி எனக்கு இதன் இரண்டு மாத இதழ்களைத் தந்தார். தூள் கிளப்புகிறது. அக்டோபர் 2012 இதழில் நம்ம பழமைபேசியின் கவிதை அமர்க்களம். அதை இங்கே பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
14 comments:

krishjapan said...

Dondu sir,

Please comment on the fact that more than 134 Gujarat MLAs are Crorepatis and also more than 60% MLAs have criminal cases and that too rape and murder charges. I hope u wont say that all Cong MLAs in that list are culprits and all BJP MLAs are victimized by false cases and also they r crorepatis by birth...

dondu(#11168674346665545885) said...

@krishjapan
134-ல் காங்கிரஸ் எத்தனை, பாஜக எத்தனை பேர்?

மோதியின் சொத்து மதிப்பு என்ன?

என்ன சொல்ல வருகிறீர்கள்? எது எப்படியாயினும் ஊழலற்ற ஆட்சியை பாஜக கொடுக்கிறதா இல்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு பகிர்வு! நன்றி!

poornam said...

//ஆனந்த விகடன் செய்யும் கூத்து (இதழ் 09.01.13)
லேட்டஸ்ட் விகடன் முதல் கட்டுர்ஃபை ஆணாதிக்கத்தை எதிர்த்து முழக்கமிடுகிறது. அடுத்த கட்டுரையோ நயனதாரா யாருக்கு என சீப்பாக இரு சகோதர்களுக்கிடையே நடக்கும் போட்டியை பற்றி எழுதுகிறது. இக்கட்டுரையின் டைட்டில் ஆணாதிக்கத்துக்கு சரியான சான்று. //
அதில ஆச்சர்யமே இல்லையே? அரசியல்வாதிகளை விடக் கேவலமானவர்கள் என்று ஒரு இனம் உண்டென்றால் அது பத்திரிகைகள் தான். மன்னிக்கவும், மீடியா தான். (இப்பல்லாம் மடிப்பாக்கம் டைம்ஸ், மந்தவெளி டைம்ஸுக்குக் கூட அதானே பேரு?) துக்ளக் மாதிரி ஓரிரு பத்திரிகைகள் நீங்கலாக எல்லாரும் பெட்டிக்கடைகளில் தலைகீழாகத் தொங்க விட்டு சந்தைப்படுத்திக் கொண்டிருப்பது அவர்களது மனசாட்சியைத்தான்.
அரசியல்வாதிகளை விடக் கேவலம் என்று ஏன் சொன்னேன் என்றால் அரசியல்வாதிகள் யாருக்கும் உபதேசம் செய்வதில்லை. இந்த அதிமேதாவிகள் ஏஸி அறைக்குள் ஒளிந்து கொண்டு உள்ளூர்க் கவுன்ஸிலர் முதல் ஒபாமா வரை எல்லாருக்கும் இலவச தர்மோபதேசம் வேறு செய்வார்கள்.இந்த இரட்டை வேடதாரிகள் நான்காவது தூணாய் இருப்பது தான் நமது ஜன நாயகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு.

பழமைபேசி said...

ஆகா. வணக்கம் ஐயா!! அவர்கள் இங்கிருக்கும் போது பேச வாய்ப்புக் கிட்டியிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மிகவும் கேட்டதாகக் கூறவும்.

krishjapan said...

Dondu sir,

What I meant is, there are so many crorepatis and criminal case owners(!) in that assembly with representation from BJP also. If a person of Modis stature himself cant deny seats for these people and comes back to power with the support of these people, then what can "No MASS BASE LEADERS" DO?

I hope u wont say that, compare with Cong. and also I hope u wont say that all these charges are false....

"among top 10 MLAs facing serious criminal charges six belonged to BJP, including Amit Shah, Shankar Chaudhary, Babulal Jamnadas Patel, Purshottam Solanki, Jetha Bharwad and Dilip Patel".

"Among legislators who had filed affidavits with the Election Commission declaring serious criminal cases against them included Jetha Bharwad (Ahir) of BJP who has been charged with rape among other charges including attempt to murder."

Couldnt Modi deny seat for this person? If he cant, then I will say he is also part of this establishment.

dondu(#11168674346665545885) said...

//Couldnt Modi deny seat for this person? If he cant, then I will say he is also part of this establishment.//
It is not practical. Criminalization of politics is a reality in all the political parties including Congress and BJP.

Inspite of this, Modi has given a corruption-free government. Hence his hattrick.


குலசேகரன் said...

டோண்டு ராகவன் சேர்ப்பது: அப்படியாவது ஆறுதல் பெறட்டும் காங்கிரஸ்.

Unless Modi joins national politics and we see the results, nethier u nor Cho nor Cong can b correct.

குலசேகரன் said...

Ur reply to krishapan s disappointing. Corruption-free govt includes clean public representatives also.

The man who raped shd be behind bars, like the Guwahati MLA yesterday, and not in Legislative Assembly.

How can women be safe from him?

Do u mean to say if a party leader packs his party with rapists and murderers, it is possible for his government to be corruption free?

dondu(#11168674346665545885) said...

@Kulasekaran
How do you explain the hattrick? You seem to set double standards for public probity.

Dondu N. Raghavan

Unknown said...

Sir,

Pongal Greetings,

How are you? Trust you are doing well.

Hv you attended Cho's today programme.

If not I can give you a link, as I have regd with Swathi.

Many years we have enjoyed your coverage and we know your interest.
Hope u won't misunderstand.

Best wishes,

Krishnan,
Qatar

dondu(#11168674346665545885) said...

Thanks a lot Krishnan. This year too I could not attend the function due to indifferent health.

I will indeed be glad to have the link as promised by you.

God bless you and your famiy and I wish you a very happy Pongal.

Regards,
Dondu N. Raghavan

Roaming Raman said...

நீங்கள் இவ வில் கேட்டிருந்த கேள்விக்கு விடை :

"இல்லை"


-ரோமிங்ராமன்
(roamingraman@gmail.com)

Krishnakumar said...

Take care dondu sir. Just now got to read your previous posts on your health. Hope you are doing fine now. Hope God gives you sufficient strength by next year to get your full coverage of "CHO's" event.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது