9/30/2011

தேவை இல்லாமல் சீன் போட்ட பலன்

அடேங்கப்பா எத்தனை பதிவுகள், எத்தனை கிண்டல்கள்!!!

ஆனால் சும்மா சொல்லக் கூடாது, கிண்டலுக்கு ஆளானவர்கள் வாயே திறக்காமல் வடிவேலு மாதிரி நல்லவர்கள் ஆனார்கள்.

நான் குறிப்பிடுவது எனது இப்பதிவைத்தான்.

இப்போதுதான் பலமுறை நானும் மற்றவர்களும் துருவித் துருவி கேட்ட பிறகு தமிழ் மணம் சாவகாசமாகக் கூறுகிறது, “அவை கட்டணப் பதிவுகள்” என. ஓக்கே இருக்கட்டுமே, கட்டணப் பதிவு என இரு வார்த்தைகளை சம்பந்தப்பட்ட பதிவின் மேல் வைத்தால் அதை கேள்வி கேட்க எங்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?

இது பற்றி தமிழ் மணம் அளித்த பதில்கள்.

//கேள்வி :சில பதிவர்கள் தமது மென்பொருள் அறிவை தவறாகப் பயன்படுத்தி, தமது இடுகைகள் மட்டும் பல நாட்களாகத் தொடர்ந்து தமிழ்மண முதல் பக்கத்தில் வருமாறு செய்து விடுகிறார்கள்
பதில் : நீங்கள் குறிப்பிடும் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தொடர்ந்து இருக்க விளம்பரம் செய்யப்பட்ட பதிவுகள். தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்தில் எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே தமிழ்மணம் முகப்பில் தெரியும். அதனை யாரும் தவறாக பயன்படுத்துவதாக தெரியவில்லை//

டோண்டு ராகவன் on September 30th, 2011 6:10 am
அப்படி கட்டணச்சேவை என்றால் அது ஒருவித வர்ணப்பட்டையுடன் இருக்க வேண்டாமா? ஆனால் நான் சுட்டிய பதிவுகள் அவ்வாறு இல்லையே?
அன்புடன்,
டோண்டு ராகவன்//

//தமிழ்மணம் பல விதங்களில் விளம்பரங்கள் வழங்குகிறது. வர்ணப்பட்டையுடன் கூடிய விளம்பரங்களுக்கு கூடுதல் கட்டணம். வர்ணப்பட்டை இல்லாத விளம்பரங்களுக்கு குறைவான கட்டணம். சிலர் அதனைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்மணம் விளம்பரப் பக்கங்களில் அது குறித்த விபரங்கள் உள்ளன
http://www.tamilmanam.net/purchase_ads.php
http://tamilmanam.net/tamilmanam_paid_service.php//


விளம்பரங்களுக்கு குறைவான கட்டணம் செலுத்துபவர்களாகவே இருக்கட்டுமே, அதனால் என்ன? பதிவின் மேல் விளம்பரப் பதிவு என தமிழ்மண முகப்புப் பக்கத்தில் போட உங்களுக்கு என்ன தயக்கம்?

சம்பந்தப்பட்ட பதிவர்கள் தேவையின்றி அவதூறுக்கு ஆளானார்கள். ஆனால் அதிலும் தவறு அவர்கள் மீதுதான். தங்களது விளம்பரச் சேவை பதிவு என பதில் அளித்திருந்தால் தீர்ந்திருக்கும் விஷயம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அமுக்குனியாக இருந்து தாங்கள் என்னவோ மென்பொருள் நிபுணர்கள் என்ற ரேஞ்சில் சீன் போட்டால் இதுதான் நடக்கும்.

சரி சரி, ஆளை விடுங்கள். இதற்குத்தான் “நியாயமாக நடந்தால் போதாது, நியாயமாக இருப்பது வெளிப்படையாகவும் தெரிய வேண்டும்” எனக் கூறுகிறார்கள் போலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/29/2011

டோண்டு பதில்கள் - 29.09.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. கூடங்குளம்: பிரதமரே இறுதி முடிவு எடுப்பார்: அமைச்சர் நாராயணசாமி

பதில்: சரிதான் உச்சா போவதற்குக் கூட சோனியாவின் அனுமதியை எதிர்பார்ப்பவரிடமிருந்து இத்தகைய எதிர்பார்ப்பா>

கேள்வி-2. கூடங்குளம் உண்ணாவிரதம் வாபஸ்: முதல்வரின் உறுதிமொழி ஏற்பு
பதில்: ஒருவர் மீசையிலும் மண் ஒட்டவில்லை எனும் திருப்திதான்

கேள்வி-3. தேர்தலை முறையாக நடத்த நீதிமன்றத்தை நாடுவோம்: ஸ்டாலின்
பதில்: எல்லாம் தனக்கு வந்தால்தான் தெரியும்.

கேள்வி-4. நான் பிரதமர் வேட்பாளர் அல்ல: அத்வானி சூசகம்
பதில்: அரசியல், அரசியல்

கேள்வி-5. தனித்தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதை அரசு முடிவு செய்யும்: ஆணையர் அய்யர்
பதில்: அது சுழற்சி முறையில் வரும் என நினைக்கிறேன்.

கேள்வி-6. A murderer is condemned to death. He has to choose between three rooms. The first is full of raging fires. The second is full of assassins with loaded guns. The third is full of lions that haven't eaten in 3 years. Which room is safest for him?
பதில்: Lions' room. They should all be dead if starving for 3 years.


கேள்வி-7. A woman shoots her husband. Then she holds him under water for over 5 minutes. Finally, she hangs him. But 5 minutes later they both go out together and enjoy a wonderful dinner together. How can this be?
பதில்: It is a Photo-shoot.

கேள்வி-8. What is black when you buy it, red when you use it, and grey when you throw it away?
பதில்: Matchstick.

கேள்வி-9. Can you name three consecutive days without using the words Wednesday, Friday, or Sunday?
பதில்: Yesterday, today and tomorroww.

கேள்வி-10. This is an unusual paragraph. I'm curious as to just how quickly you can find out what is so unusual about it. It looks so ordinary and plain that you would think nothing was wrong with it. In fact, nothing is wrong with it! It is highly unusual though. Study it and think about it, but you still may not find anything odd. But if you work at it a bit, you might find out. Try to do so without any coaching!
பதில்: There are no e's in that, everyone knows the trick.

ரமணா
கேள்வி-11. பதுங்கும் பங்குச்சந்தை சீறிப்பாயும் கமாடிடி சந்தை?
பதில்: அவை பற்றி மிகக்குறைவே அறிவுடைய டோண்டு ராகவனிடமா இக்கேள்வி??

கேள்வி-12. அன்னாவை அழைக்கும் பாகிஸ்தான் பற்றி?
பதில்: அங்கு போய் என்ன செய்வாராம்? சுதந்திரம் வந்த புதிதில் காந்திஜி பாகிஸ்தான் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தார் என்றால் அது வேறு விஷயம், வேறு பிரச்சினை.

தான் இன்னொரு காந்தி என நிறுவுவதற்காகவே அவர் முயலுகிறார்.

கேள்வி-13. தமிழக முதல்வரின் தற்கால செயல்பாடுகள் பற்றி?
பதில்: உண்மையான க்ரைசிஸ்கள் ஏதேனும் வந்தால்தான் அவரது முழுசெயல்பாடுகளை மதிப்பிட இயலும்.

கேள்வி-14. அமெரிக்கா,ஐரோப்பா இவைகளின் எதிர்காலப் பொருளாதாரம்?
பதில்: கேப்பிடலிசத்தில் ஏற்றமும் தாழ்வும் மாறி மாறி வரும். தவிர்க்க முடியாது.

கேள்வி-15. கூடங்குளம் அணுமின்நிலையம் தேவையா?
பதில்: இல்லை.


BalHanuman
கேள்வி-16. 'டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தால் எனது இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று புலம்புகிறாரே ப.சிதம்பரம்?
பதில்: இல்லாத விஷயத்துக்கு ஏன் புலம்பல்கள்?

கேள்வி-17. நில மோசடித் தடுப்புப் பிரிவையே ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளதே தி.மு.க.?
பதில்: வன்கொடுமை தடுப்புச் ச்ட்டத்தையே எடுக்க வேண்டும் என மரம்வெட்டிக் க்ட்சித்தலைவர் கூறுவது போல உள்ளது.

இதைத்தான் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பார்கள்.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/24/2011

தமிழ் நாடகப் பேராசிரியர், பம்மல் சம்பந்த முதலியார் - 2

தமிழ் நாடகப் பேராசிரியர், பம்மல் சம்பந்த முதலியார் பற்றிய எனது இன்னொரு பதிவு இங்கே

அப்பதிவை இட்டபோது அவரது நாடகமேடை நினைவுகளிலிருந்து எனது நினைவிலிருந்து எடுத்து எழுதினேன். ஆனால் சில நாட்களுக்கு முன்னால் எனக்கு அப்புத்தகமும், பலகாலமாக தேடி வந்த வேறு சில புத்தகங்களும் கிடைத்தது என் பாக்கியமே.

அவரது நாடக மேடை நினைவுகளை இப்போதுதான் படித்து முடித்தேன். நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்த புத்தகத்துக்கும் இப்போதுதான் படித்து முடித்த புத்தகத்துக்கும் ஆறு வித்தியாசங்களுக்கும் மேலே உண்டு என்றுதான் நினைக்கிறேன்.

இப்போது படித்து முடித்தப் புத்தகம் 1932 வாக்கில் எழுதப்பட்டது, ஆனால் நான் முன்னால் படித்த புத்தகத்திலோ அதற்கு பிந்தையக் காலக் கட்டங்களும் சுட்டப்பட்டுள்ளன. மறுபடியும் கடையில் போய் பார்க்க வேண்டும். அது பற்றி பிறகு.

இப்போது இந்தப் புத்தகத்தை படித்ததும் எனது நினைவுகள் கிட்டத்தட்ட சரி என்ற நிலைக்குத்தான் வந்தேன். நாடக அரங்கங்களில் ஆபாசங்கள் என்னும் பதிவில் குறிப்பிட்ட ரோலக்ஸ் வாட்ச் ஒன்றுதான் எனது நினைவுகளுடன் ஒத்துப் போகவில்லை.

சம்பந்தம் முதலியாருக்கு துணைவி/காதலி பாத்திரங்களில் வந்த ரங்கவடிவேலு முதலியார், நாகரத்தினம் ஐயர் ஆகியோர் பற்றி அவர் தரும் விவரங்கள் புருவங்களைத் தூக்க வைக்கின்றன.

மனோகரன் நாடகத்தில் இவர் மனோகரனாக நடித்ததாலேயே ரங்கவடிவேலு விஜயாள் வேடம் தரித்தார், கர்ணன் நாடகத்தில் பானுமதியாக நாகரத்தினம் ஐயர் நடித்ததாலேயே இவர் துரியோதனன் வேடம் ஏற்க நேர்ந்தது, இவரும் அவரது பெண் ஜோடிகளாக வேடம் தரித்த ரங்க வடிவேலுவும் ஊடுவது பற்றி எல்லாம் படிக்கும்போது உண்மையான க்ணவன் மனைவி, நிஜக் காதலர்கள் கெட்டார்கள் போங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இவ்வரிகளை ஒரு மனோதத்துவ நிபுணர் படித்தால் என்ன நினைப்பார் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. சங்கடமாக உள்ளது.

இப்புத்தகத்தை படித்த போது இப்போது தோன்றிய விஷயத்தைக் கூறும் முன்னால் ஒரு சிறு டைவர்ஷன்.

பிரபல ஆங்கில நாவலாசிரியை ஜேன் ஆஸ்டன் பற்றிப் பேசுகையில் அவர் தனது சமகாலத்தில் நடந்த பிரெஞ்சு, அமெரிக்க மற்றும் தொழிற் புரட்சிகள் பற்றி தனது நாவல்களில் ஒன்றுமே கூறவில்லை. அது பற்றி பல விவாதங்கள் நடந்துள்ளன. அவை இப்போதைக்கு இங்கு வேண்டாம்.

அதே போல பாரதியார் கூட வீர பாண்டிய கட்டபொம்மன் பற்றி ஒன்றுமே எழுதாதற்கும் காரணங்கள் இருந்திருக்கும் அல்லவா? அது பற்றி இம்சை அரசன் புலிகேசி தூண்டிய நினைவுகள் என்னும் தலைப்பில் நான் இட்ட இடுகையில் நான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

உதாரணத்துக்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் ஐம்பதுகளில் வெளியானபோது தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் உள்ள தியேட்டர்களில் ஒன்றில்கூடத் திரையிடப்படவேயில்லை என்பது பத்திரிகை செய்தி. ஊர்கட்டுப்பாடுதான் அதற்குக் காரணம். தங்கள் மஹாராஜாவின் மீது அவ்வளவு பக்தி ஊர் மக்களுக்கு. ஒன்று இரண்டு மூன்று என்று கூறும்போது கூட, ஆறு, ஏழு, மஹாராஜா, ஒன்பது, பத்து என்றுதான் எண்ணுவார்களாம். ஏனெனில் எட்டு என்று கூறிவிட்டால் மஹாராஜாவைப் பெயர் வைத்துக் கூப்பிடுவதுபோல ஆகிவிடுமாம். அதனால்தான் பாரதியார் கூட தன் எழுத்துக்களில் வீர பாண்டிய கட்டபொம்மனைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். அக்காலக் கட்டங்களில் கட்டபொம்முவை கொள்ளைக்காரனாகத்தான் குறிப்பிட்டனர் பலர். பாரதியாரும் அவ்வாறே கருதியிருக்கலாம்.

சிறு டைவர்ஷன் முடிந்தது.

இப்புத்தகத்தில் முகத்தில் அறையும் எண்ணம் இதுதான். சுதந்திரப் போராட்டம் பற்றி ஒரு குறிப்புமே இல்லை. பல தமிழ் நாடகக் கலைஞர்கள் (கே.சாரங்கபாணி, கே.பி.சுந்தராம்பாள், நாகையா, டி.கே.சண்முகம், எஸ்.வி.சகஸ்ரநாமம், என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர்) தத்தம் உயிரைப் பயணம் வைத்து சுதந்திர தாகம் எழுப்பும் நாடகங்களை போட்ட கால கட்டத்தில் இவரது குழு சௌகரியமாக அரசு சார்பில் இருந்து, கவர்னர் துரை மற்ற அரசு அதிகாரிகள் மனம் மகிழும் நாடகங்கள் போட்டு, ராவ் பகதூர், திவான் பகதூர், சர் பட்டங்களைப் பெறுவதிலேயே காலம் கழித்திருக்கிறது. இவரும் அரசு உத்தியோகத்தில் ஜட்ஜாக எல்லாம் இருந்து ஓய்வும் பெற்றுள்ளார்.

இது பற்றியும் மனோதத்துவ நிபுணர்கள் இப்போது என்ன கூறுவார்கள் என்பதை நினைத்தாலும் சுவாரசியமாகத்தான் இருக்கும்.

அது சரி, பம்மல் சம்பந்த முதலியார் அறிவார்ந்த சுயநலத்துடன் செயல்பட்டுள்ளார். அதில் என்ன குற்றம் காண இயலும் என்னால்? நானே அப்படித்தானே!

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/22/2011

டோண்டு பதில்கள் - 22.09.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி:1. உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டி: கருணாநிதி

பதில்: திமுக இப்போதிருக்கும் மோசமான நிலையில் அதனுடன் கூட்டு வைக்க தைரியம் தேவைப்படும். அது எக்கட்சியிடம் உள்ளது?

அது தெரிந்து கருணாநிதி இவ்வாறு கூறுவதை ஒரு டேமேஜை குறைக்கும் செயலாகவே (மீசையில் மண் ஒட்டவில்லை) பார்க்கிறேன்.

கேள்வி:2. தயாநிதி, கலாநிதியிடம் சி.பி.ஐ. விசாரணை
பதில்: முதலில் தயாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்னும் ரேஞ்சில் சொன்ன சிபிஐ இப்போது இவ்வாறு நடப்பது ஐயங்களை உருவாக்குகிறது. ஏதோ பெரிய ஆப்பு யாருக்கோ உறுதி எனத் தோன்றுகிறது.

கேள்வி:3. அரசு ஊழியர் மாதச் சம்பளத்துக்கு ரூ.25,751 கோடி: நிதியமைச்சர்
பதில்: புள்ளி விவரங்கள், புள்ளி விவரங்கள். அதைக் கட்டுப்படுத்த ஏதும் முயற்சி கூட இல்லையே.

கேள்வி:4. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 உயரும்?
பதில்: லிட்ட்ருக்கு 4 ரூபாய் உயரவில்லையே என சந்தோஷப்பட்டுக் கொல்ள வேண்டியதுதான்.

கேள்வி:5. சிறந்த நிர்வாகத்துக்கு குஜராத் உதாரணம்
பதில்: இதில் என்ன சந்தேகம்?

கேள்வி:6. நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்றநிலை: பிரதமர் கவலை
பதில்: பொறுப்பற்ற பிரதமர் இருக்கும் நிலையை எண்ணி, எண்ணி அதே பொறுப்பற்ற பிரதமர் வருந்துகிறாரா, பேஷ்.

கேள்வி:7. பிரதமர் வேட்பாளராக மோடி: அமெரிக்க அறிக்கைக்கு அத்வானி ஆதரவு
பதில்: பாஜகாவில் உள்ள பொறாமையாளர்களது வயிறெரியுமே.

கேள்வி:8. கனிமொழி, சரத்குமார் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல்: சி.பி.ஐ. எதிர்ப்பு
பதில்: இன்னும் கொஞ்சம் நாட்கள்தான் களி தின்னட்டுமே.

கேள்வி:9. வெளிச்சந்தைக்கு சவால் விடும் அரசின் இலவசப் பொருள்கள்
பதில்: அப்படி கொடுக்கப்பட்ட இலவச பொருட்களும் வெளிச்சந்தைக்கு வந்த பிறகு சவாலாவது ஒன்றாவது.

கேள்வி:10. கூடங்குளம் குறித்து அச்சம் வேண்டாம்: ஜெயலலிதா
பதில்: பொறுப்பற்ற பேச்சு. அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.


ரமணா
கேள்வி:11. முன்னாள் முதல்வரின் இலவச திட்டம் இன்னாள் முதல்வரின் விலை இல்லாத் திட்டம் என்ன வேறுபாடு?
பதில்: லேபலில்தான் வேறுபாடு. இரண்டுமே சோம்பேறிகளை உருவாக்கும் திட்டமே.

கேள்வி:12. பெரியவர் கருணாநிதியை தேர்தலில் கைவிட்ட இலவச‌ டீவி யின் கதையை பார்த்த பிறகும் தமிழக் அரசின் விலை இல்லாத்திட்டம் ஜெயிக்க வைக்குமா அதிமுகாவை?
பதில்: திமுக பதவியில் இருக்கும் வரைக்கும் அதிமுகாவை பதவிக்கு கொண்டுவர வைக்க வேண்டும் என்ற ரேஞ்சுக்கு கருணாநிதி முயன்று வென்றார். இப்போது ஜெயலலிதாவின் முறை.

கேள்வி:13. ஒரு வேளை உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றால் என்ன வாகும் இந்த விலை இல்லாத்திட்டம்?
பதில்: அவ்வ்வ்வ்வ்.

கேள்வி:14. இதில் செலவளிக்கப் படும் 10,000 கோடியை அடிப்படை கட்டுமானத்திற்கு செல்வளித்தால் தமிழகம் இன்னுமொரு குஜராத் மாறுமே?
பதில்: அந்த அறிவு இருந்தால்தானே.

கேள்வி:15 .உங்கள் மோடி பிரதமரானால்?
பதில்: நாட்டுக்கு நல்லது.

கேள்வி:16. ஜான் பாண்டியன் விசயத்தில் சிபிஐ விசாரணை கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டம் சரியா?
பதில்: இன்னுமா மக்கள் சிபிஐ பற்றி நம்பிக்கை கொண்டுள்ளனர்?

கேள்வி:17. மதிமுகவின் மாநாடு பற்றி?
பதில்: அக்கட்சியும் தனது இருத்தலை அவ்வப்போது அவ்வாறு காட்டிக் கொள்வது அவசியம்தானே.

கேள்வி:18. பெட்ரோல் விலை உயர்வு லிட்டர் ரூ. 100 ஆகிவிடும் போலுள்ளதே?
பதில்: அது உருவாக்கும் விலை உயர்வு விஷச்சக்கரம் கவலையை வரவழைக்கிறது.

கேள்வி:19. சொத்து குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்தால்?
பதில்: பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வர்?

கேள்வி:20. அஜித்தின் மங்காத்தா பார்த்தீர்களா எப்படி உங்கள் பார்வையில்?
பதில்: பார்க்கவில்லை, ஆகவே கருத்தேதுமில்லை.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது