என்னை இந்த விளையாட்டுக்கு என்றென்றும் அன்புடன் அழைத்த பாலா அவர்களுக்கு நன்றி.
எபோதும் புத்தகமும் கையுமாக இருந்தவன் நான். குளிக்கும், தூங்கும் தருணங்கள் தவிர்த்து எப்போதும் புத்தகம் இருந்தது என்னிடத்தில். அது ஒரு பொற்காலம். இப்போது அவ்வளவாக இல்லை என்பது வேறு விஷயம். வாசிப்புகள் தற்சமயம் இணையத்தில் அதிகம் நிகழ்கின்றன.
தமிழில் எனக்கு விருப்பமான புத்தகங்கள்:
1. அமரதாரா, கல்கி அவர்கள் எழுதியது
2. தொடுவானம், பி.வி.ஆர். அவர்கள் எழுதியது
3. அன்பே ஆருயிரே, தி. ஜானகிராமன் அவர்கள் எழுதியது
4. வேர்கள், கிருஷ்ணமணி அவர்கள் எழுதியது
5. பாலங்கள், சிவசங்கரி அவர்கள் எழுதியது
6. சக்கரவர்த்தி திருமகன், ராஜாஜி அவர்கள் எழுதியது
7. வியாசர் விருந்து,ராஜாஜி அவர்கள் எழுதியது
8. மாம் ஃப்ரம் இண்டியா, அனுராதா ரமணன் அவர்கள் எழுதியது
மேலே கூறியவை எல்லாம் தொடர்களாக வெளிவந்தன. வியாசர் விருந்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தொடர்களாக வரும்போதே படித்தவன்.
இப்போது ஆங்கிலத்தின் முறை
1. Tender Victory, by Taylor Caldwell
2. Dear and Glorious Physician, by Taylor Caldwell
3. Mila - 18, by Leon Uris
4. Exodus, by Leon Uris
5. Q.B. VII, by Leon Uris
6. Tower of Babel, Morris West
7. Odessa File, Frederick Forsyth
8. Harry Potter series, by J.K. Rowling
ஜெர்மன் புத்தகங்கள்
1. Stein und Flöte und das ist noch nicht alles, by Bemman
2. Harry Potter series, by J.K. Rowling, all translated into German
3. Ilona, by Hans Habe
ஃபிரெஞ்சு புத்தகங்கள்
1. La peste, by Camus
2. Harry Potter series, by J.K. Rowling, all translated into French
நான் குறிப்பிட்டவை மிகக் குறைவே. இன்னும் எவ்வளவோ உள்ளன. எல்லாவற்றையும் கூறினால் பதிவு நீண்டு விடும்.
நான் அழைக்க நினைப்பவர்கள். எல்லோரும் எல்லோரையும் அழைத்து விட்ட நிலையில், யாரேனும் விட்டுப் போயிருந்தால் அவர்களுக்கு என் அழைப்பு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
1 day ago
22 comments:
என்ன நிறைய நாளாய்க் காணவில்லை.
நிறைய நடந்து விட்டது.
மஸ்ட் டூ மருமகனே,
எங்கும் செல்லவில்லை. பக்கத்திலேயே இருந்து எல்லாவற்றையும் கண்டு வருகிறேன். அனாமதேயங்கள் அடிக்கும் கொட்டத்தைப் பார்த்து வருகிறேன். மூல காரணமானவர் ஏதும் அறியாதவர் போல தன் பதிவில் பாடும் பிலாக்கணத்தையும் கண்டு வருகிறேன்.
தேவையான இடங்களில் என் பின்னூட்டங்களையும் இட்டு வருகிறேன்.
அது இருக்கட்டும், Patrick Süsskind எழுதிய ஜெர்மன் புத்தகமான Das Parfüm படித்துள்ளீர்களா? புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் வழுக்கிச் செல்லும் மொழி நடை. அதன் அமர்க்களான பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவையும் பிரபலமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
புத்தகம் படிப்பதாலும் பலன்கள் உண்டு என்பதை சமீபத்தில் 1969-ல் கண்டேன். அப்போதுதான் திருவல்லிக்கேணியிலிருந்து நங்கநல்லூருக்கு குடி வந்திருந்தோம். பக்கத்தில் உள்ள மாவு மெஷினில் ரசப்பொடி, மற்றும் சாம்பார் பொடி அரைக்க வேண்டியிருந்தது அரைக்க வேண்டியவற்றை தனித்தனி டப்பாக்களில் போட்டு, கையில் அமெரிக்க நூலகத்திலிருந்து எடுத்த ஒரு தலையணை சைஸ் நாவலுடன் சென்றேன். பெரிய கியூ. கடையில் நின்று கொண்டு கையில் இருக்கும் புத்தகத்தை விரித்து, விட்ட இடத்திலிருந்து படிக்கத் துவங்கினேன். முதலாளி தூரத்திலிருந்து என்னைப் பார்த்து என்னிடம் விரைந்து வந்தார். நான் என்ன படிப்பு படிக்கிறேன் என்று கேட்டார். நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் கடைசி வருடப் படிப்பு படிக்கிறேன் என்று கூறினேன். ஒன்றும் பேசாமல் நேராக என் டப்பாக்களைக் கையில் எடுத்து கியூவின் முன்னால் சென்றார். அங்கு ஒரு வயதானப் பெண்மணி தன்னுடைய முறை என்று கூற, அவர் கூறினார். "இந்தாம்மா இது படிக்கிற பிள்ளை. பரீட்சைக்கு படிக்க வேண்டிய புத்தகத்துடன் வந்திருக்கு. இதை முதலில் அனுப்ப முடிவு செய்து விட்டேன்" என்று கூற, அப்பெண்மணியும் என்னைப் பார்த்து "அப்படியா ராசா, நல்லாப் படி" என்று கூற எனக்கு என்ன கூறுவது என்று புரியவில்லை. காரியம் முடிந்ததும் பணத்தைக் கொடுத்து விட்டு வீடு திரும்பினேன். நான் எடுத்துச் சென்றது நாவல். அவர்கள் பாடப்புத்தகம் என்று நினைத்துக்கொள்ள, ஒரே தமாஷ்தான் என்றாலும், எனக்கு ஏற்பட்டக் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்க இயலவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இல்லை டோண்டு... அந்த புத்தகம் கிடைக்க வில்லை. ஆனால் Patrick Susskind எழுதிய he retort bass, Monaco Franze இந்த இரண்டு புத்தகங்களும் வாசித்தேன். பெரிதாக கவரவில்லை.
the perfume ஒரு வரலாற்று நூலா?
பெர்ஃப்யூம் ஒரு அபூர்வ மனிதனைப் பற்றிய நாவல். அவனைப் பிறப்பித்தவள் திருமணம் ஆகாத ஒரு பிரெஞ்சுப் பெண். பிறந்த குழந்தையை குப்பையில் போட்டு தப்பிக்க முயல்கிறாள். அதில் போலீஸிடம் அகப்பட்டு தண்டனை பெறுகிறாள். குழந்தை அனாதையாக வளர்கிறது. அதன் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் அதன் உடலில் ஒரு வாசனையும் இல்லை. இதைக் கண்டு பலர் பயப்படுகின்றனர். குழந்ஜை வளர்ந்து பெரியவனாகிறது. இப்போதும் அவனிடம் ஒரு வாசனையும் இல்லை. ஆனால் என்ன ஆச்சரியம், அவன் முகரும் திறன் மிக அதிகம். ஆகவே வாசனைப் பொருட்களில் அவனது திறமை இயற்கையாக வளர்கிறது.
அக்கால ஐரோப்பாவில் நகரமோ, கிராமமோ எங்கும் நாற்றம்தான். பாதாளச் சாக்கடை கிடையாது. மனிதக் கழிவுகள் சர்வ சாதாரணமாகத் தெருக்களில் கொட்டப்படுகின்றன. மக்கள் குளிப்பது எப்போதாவதுதான். ஆகவே எங்கும் நிறைந்திருக்கும் நாற்றம். அக்காலக் கட்டத்தில் வாசனைத் திரவங்களுக்கு நல்ல வியாபாரம்.
நம் கதாநாயகன் வாசனைத் திரவங்களைத் தயாரிப்பதில் மன்னனாகிறான். ஒரு வாசனைப் பொருளை முகர்ந்தவுடனேயே அவனால் அதன் கூட்டுப்பொருட்களை அவனால் அடையாளம் காண முடியும். அதே போல புது திரவங்களை உண்டாக்கவும் முடியும்.
இதற்கு மேல் கதையைக் கூறி சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை. ஜெர்மன் பதிப்பு கிடைக்கவில்லையென்றால், இருக்கவே இருக்கின்றன, பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள். மிக நல்லமுறையில் மொழி பெயர்க்கப்பட்டவை அவை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு, ஆங்கில மொழிபெயர்ப்பில் Perfumeஐப் படித்துள்ளேன். என் பட்டியலிலும் இருக்கிறது.
"இன்னும் சாகவில்லையா?"
யார் இன்னும் சாகலையா கோயிஞ்சாமி அவர்களே?
மான்ட்ரீஸர் அவர்களே, ஆங்கில நடை எப்படி? இந்த புத்தகத்தின் முதல் பாதி பிரெஞ்சில் படித்தேன். பிறகு மூல ஜெர்மன் பிரதி கிடைக்க, பாக்கியை அம்மொழியில் படித்தேன். இரண்டு மொழியிலும் அருமையாக வந்துள்ளது. ஆங்கிலமும் சோடை போகவில்லை என்றே கேள்விப்பட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
யார் செத்தால் வலைப்பூ உலகம் நன்றாகயிருக்கும் என்பதை விட கோயிஞ்சாமி வகையறாக்கள் செத்தால் இந்தியாவே நன்றாக இருக்கும் மிஸ்டர் கோயிஞ்சாமி! (உங்கள் எண்ணத்தில் இடி விழ!)
ராமசந்திரன் உஷா அவர்களே, மாம் ஃப்ரம் இண்டியாவுக்கு என்னக் குறைச்சல்? வயதானத் தம்பதியினரின் கவிநயம் மிக்கக் காதலும் சரி, தமிழக பஞ்சாபிய சம்பந்திகள் அடிக்கும் ஜுகல்பந்திக் கொட்டமும் சரி எல்லாமே நன்றாகத்தானே இருந்தன? சமீபத்தில் 1963 - ல் சாவி எழுதிய வாஷிங்டனில் திருமணம் கொடுத்த ஜாலியைத்தானே இதுவும் கொடுத்தது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
கோயிஞ்சாமி அவர்களே, யார் சாக வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது புரியவில்லை. மாயவரத்தான் அவர்களுக்கு புரிந்து விட்டது போலத் தோன்றுகிறது. நான் மட்டும் இதில் ஏன் குழல் விளக்காக இருக்க வேண்டும்? உங்கள் இருவரில் யாராவது என் சந்தேகத்தைத் தீர்த்து வைக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உலகம் அமைதியாக எந்தவித சண்டையோ சச்சரவோ இன்றி இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். ஆனால் கோயிஞ்சாமி போன்ற உருப்படாத உலக்கைகள் இருக்கும் வரை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது தான்!
டோண்டு சார்... இன்னுமா புரியலை?! அந்த கண்றாவி உங்களுக்கு புரியாமலேயே போய் விடட்டும்.
கோயிஞ்சாமி இப்போது பரப்பி வரும் நல்ல பல அரிய கருத்துகளும், இலக்கியங்களையும் பார்த்தாலே தெரியவில்லையா?! கோயிஞ்சாமி இப்படிப்பட்ட எண்ணங்கள் இருக்கும்வரை நீர் உருப்படவே முடியாது தான். ரோட்டில் நடந்து போகும் போதே கூட, அல்லது இதை படிக்கும் கணத்தில் கூட உமக்கு இயற்கையால் 'மணி' அடிக்கப்படலாம். ஆடாதீர்கள்!!
கோயிஞ்சாமி என்பது மனப்பிறழ்வு நோய் கொண்ட தான் மட்டுமே உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்ட ஒரு குணநலன்... (split personality) அதற்கு மரணம் கிடையாது... அந்த நோய் கொண்டிருக்கும் மூல உடம்பு ஜனித்திருக்கும் வரை பல ரூபத்தில் கோயிஞ்சாமிகள் வருவார்கள்...
கோயிஞ்சாமி குணநலனுக்கு ஒரே சமூக மருந்து புறக்கணிப்பு மட்டுமே... தான் கவனிக்கப்படுகிறோம் என்று உணர்ந்தால் அதற்கு உந்து சக்தி ஏற்பட்டு மேலும் மேலும் கொக்கரிக்கும்... அதை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தால் மட்டுமே அது அடங்கும் சாத்தியம் உண்டு...
கோயிஞ்சாமி பெயரில் வெளியாகியிருக்கும் இந்த கமெண்ட்களுக்கும் எங்களது நிஜ கோயிஞ்சாமி க்ளப் உறுப்பினர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கோயிஞ்சாமிகள் ஒருபோதும் கலகம் செய்யமாட்டார்கள். வலைப்பதிவுகளை கக்கூஸாக நினைத்து சிங்கப்படுத்திவைக்க மாட்டார்கள். யாரையும் அசிங்கப்படுத்தவும் மாட்டார்; அசிங்கப்படவும் மாட்டார்கள்.
கோயிஞ்சாமிகளைத் தவறாக நினைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கோயிஞ்சாமி க்ளப் மெம்பர்கள் பா.ரா, பத்ரி, சுவடு ஷங்கர், கிருபா ஷங்கர், முத்துராமன், முகில் சார்பாக...
ஜெ. ரஜினி ராம்கி என்கிற கோயிஞ்சாமி நெம்பர் ஒன்
கோயிஞ்சாமி க்ளப்பா? இதுவும் நல்லாத்தானே இருக்கு. போலி டோண்டு செய்த அசிங்கங்களுக்குப் பிறகு இப்போது போலி கோயிஞ்சாமி முறையா? பேஷ், பேஷ். இனிமேல் போலி மற்றப் பெயர்களுடன் நிஜமான அந்த ஒருவர் வருவதுதான் பாக்கி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கோயிஞ்சாமி என்பது மனப்பிறழ்வு நோய் கொண்ட தான் மட்டுமே உயர்ந்தவன் என்ற எண்ணம் கொண்ட ஒரு குணநலன்... (split personality) அதற்கு மரணம் கிடையாது... //
அப்போ சந்திரமுகியில் ஜோ காரெக்டரில் புகுந்திருந்த சந்திரமுகி சாகவில்லயா..
அப்போ சந்திரமுகி பார்ட் 2 வருமா?
"அப்போ சந்திரமுகி பார்ட் 2 வருமா?"
வந்து விட்டது போலிருக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இனிமேல் போலி மற்றப் பெயர்களுடன் நிஜமான அந்த ஒருவர் வருவதுதான் பாக்கி. //
ஒரு வேளை அவர் பேரே "போலி"யா இருக்குமோ?
//Patrick Süsskind எழுதிய ஜெர்மன் புத்தகமான Das Parfüm படித்துள்ளீர்களா? //
நல்ல நாவல் ! the Smell by radhika jha வினை படித்து பாருங்கள்..அதுவும் பாரீஸில் தான்
சோழநாடன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://chozanaadan.blogspot.com/2006/02/6_21.html
என்னுடைய பதிவை விட்டு விட்டீர்களே. பார்க்க: http://dondu.blogspot.com/2005/06/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காண்பிக்கும் நோக்கத்தில் அதை என்னுடைய மேலே கூறிய பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/06/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார் - "மாம் ஃப்ரம் இண்டியா" எனக்குத் தெரிந்து பதிப்பகங்கள் எதுவும் வெளியிடவில்லை. கல்கியிலிருந்து முழுதும் தொகுத்திருக்கிறீர்களா? இருந்தால் அடுத்த பதிவர் சந்திப்பில்(செப்டம்பருக்கு அடுத்து - அதுவரை ஜப்பான்!)கட்டாயம் கொண்டு வாருங்கள். ஒருமுறை மீள்வாசிப்பு செய்ய ஆசையாயுள்ளது!
அன்புடன்
வெங்கட்ரமணன்
Post a Comment