இத்தொடரை நான் ஏறக்குறைய முழுமையாகப் பார்த்தேன் என்றுதான் கூற வேண்டும். சுமார் 810 தொடர்களில் ஒரு 40 தொடர்கள் மட்டும் பார்க்காமல் விடப்பட்டிருக்கும். சில சமயம் காட்சி ரொம்ப மனக்கிலேசம் அளிப்பதாகவிருந்தால் என் கணினி இருக்கும் அறைக்கு சென்று என் மொழி பெயர்ப்பு வேலைகளில் ஈடுபடுவேன். சில நேரங்களில் தமிழகத்தில் சொந்த விஷயமாகச் சுற்றுப்பயணம் செல்லும்போது ஹோட்டலுக்கு காரில் செல்வதற்குள் 9.30 மணி ஆகியிருக்கும். ஆனால் ஒன்று அந்த 40 சொச்சத் தொடர்களில் சிலவற்றை ஜெமினியில் தெலுங்கில் பார்த்து விட்டேன். ஆகவே நான் கூறப்போவது ஓரக்கண்ணால் பார்த்து அல்ல, இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொண்டு பார்த்ததின் பலனே.
மெட்டி ஒலி பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/01/even-scene-in-mega-serial-can-be.html
அதில் கூறிய கருத்தை இப்போதும் உறுதி செய்கிறேன். ஒருவர் விடாமல் அடிக்க மற்றொருவர் பொறுமை என்ற பெயரில் விடாமல் தாங்கிக் கொள்வது ஒரு அலுப்பையே கொடுக்கிறது. ஒரு தலை யுத்தத்தை எவ்வளவு நேரம்தான் பார்ப்பது? கடைசியில் ஒரு முறை மன்னிப்பு கேட்டு விட்டால் செய்ததெல்லாம் மறந்து விடுமா என்ன? "ஒறுத்தாருக்கு ஒரு நாளை இன்பம், பொறுத்தாருக்கு பொன்றும் துணையும் புகழ்" என அய்யன் அவர்கள் எழுதி வைத்தாலும் வைத்தார், சீரியல்காரர்கள் இதையே பிடித்து கொண்டு தொங்குகிறார்கள். சிறுமை கண்டு பொங்கச் சொன்ன பாரதியே எனக்கு அதிகச் சிறப்புடையவராகத் தோன்றுகிறார். ஒரு கன்னத்தில் அறைந்தால் அறைந்தவன் இரு கன்னத்திலும் மாறிமாறி அறைவதுதான் எனக்கு பிடிக்கும். வாழு வாழ விடு என்பதே என் கொள்கை.
ஒருவரே செயலாற்றுவது மற்றவர்கள் அதைப் பேசாமல் ஏற்றுக்கொள்வது அல்லது பலவீனமாக எதிர்வினை ஆற்றுவது என்பதையே அதிகம் காட்டினால் திகட்டி விடும். எல்லா தளங்களிலிருந்தும் செயல் வந்து அதை எதிர்த்து செயல் புரிதல் என்ற அளவில் காட்சிகள் அமைத்தால் அவை விருவிருப்பாக அமையும்.
மெட்டி ஒலி அந்த வகையில் தோல்வி அடைந்துள்ளது. சரோவின் மாமியாரும் கணவனும் கடைசி வரை அராஜகம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பல கொடூர மனதுடையோருக்கு மேலும் ஐடியாக்கள் கொடுப்பதாகவே அமைந்தன அவ்வகைக் காட்சிகள். ரவியின் கதையும் அஃதே. திருந்துவது கூட சீரியலை முடிக்க வேண்டுமே என்பதற்காகத் திணிக்கப்பட்டக் காட்சிகளே. செயற்கையாகவே தோன்றுகின்றன. ஆணாதிக்கம் போற்றப்பட்டிருக்கிறது. வேலி தாண்டிய மாணிக்கம் பலமுறை மன்னிக்கப்பட்டிருக்க ஒரு முறை அறியாமையில் கணவனைப் பிரிந்த அருந்ததி மிகக் கொடுமையாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். செல்வத்தையும் அருந்ததியையும் சேர்த்து வைத்திருந்தால் அது நியாயம். சக்தியின் பாத்திரப்படைப்பு தேவையற்ற ஒன்று. எபிஸோடுகளின் எண்ணிக்கையை பலப்படுத்துவதற்கே அது திணிக்கப்பட்டுள்ளது. திருமுருகனால் நிச்சயமாக இம்மாதிரி செல்வத்தையும் அருந்ததியையும் சேர்த்து வைத்திருக்க முடியும். அவருள் இருக்கும் ஆண் அதை செய்யவிடவில்லை. இதே பலவீனம் மற்ற எல்லா இயக்குனர்களிடமும் உள்ளன என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.
இவ்வளவெல்லாம் இருந்தாலும் ஏன் நான் இந்த சீரியலை விடாது பார்த்தேன்? சீரியல் விருவிருப்பாக எடுக்கப்பட்டிருந்தது. நடிக நடிகைகள் தேர்வு அபாரம். எல்லோரும் பாத்திரங்களாகவே மாறிவிட்டிருந்தனர் ஆகியவையும் சீரியலின் புகழுக்கு காரணம்.
ஆனால் ஒன்று. அடுத்து வரும் முஹூர்த்தம் சீரியலை பார்க்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறேன். கொஞ்ச நாளைக்காவது சீரியல் போதையிலிருந்து விடுபட ஆசை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
12 hours ago
18 comments:
நீங்களும் மெட்டி ஒலி பத்தி எழுதிட்டீங்க. எங்கே பார்த்தாலும் இதே ஒலிதான் இப்போதைக்கு!!
இந்த 'மெட்டி ஒலி' பாக்காத, அதைப் பத்தி ஒண்ணுமே தெரிஞ்சுக்காம இதுவரை இருந்தது
நான் மட்டும்தான் போலெ!!!
அட தேவுடா!!!!
அன்புள்ள் டோண்டு அவர்களுக்கு,
இந்த'மெட்டிஒலி' தொடர் சிங்கப்பூர் நேரபடி கிட்டத்தட்ட நள்ளிரவுக்குஒளிபரப்பாகும். உலகமே மெட்டிஒலி மெட்டிஒலி என்கிறதே, நாமும் ஒரு முறையாவது பதிவு செய்து பார்த்துவிட எண்ணியிருந்தேன்.அதற்குள் முடிந்தே விட்டது. கடைசிநாளன்றும் வாய்க்கவில்லை. இந்தப்பதிவுகளையெல்லாம் படிக்கும் ஏதோ சுவாரஸி
யத்தை இழ்ந்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. சில நேரங்களில் இதன் பிடியில் சிக்காமல் தப்பித்தோமே என்றும் தோன்றுகிறது.
அன்புடன் ஜெயந்தி சங்கர்
//ஒரு கன்னத்தில் அறைந்தால் அறைந்தவன் இரு கன்னத்திலும் மாறிமாறி அறைவதுதான் எனக்கு பிடிக்கும். வாழு வாழ விடு என்பதே என் கொள்கை.//
ஐயா, இதைதானே ஈழத்தமிழர் செய்கின்றணர். அதன் நியாயம் மட்டும் ஏன் நிறைய பேருக்கு புரியவில்லை?
மற்றபடி நிங்கள் கூறியபடி அருந்ததி செல்வம் விஷயத்தை நானும் ஆமோதிக்கிறேன். ஆண்கள் வேலி தாண்டலாம் ஆனால் பெண்கள் அடுத்த ஆண்களை ஏறெடுத்து கூட பார்க்க கூடாது என்பதில் திருமுருகன் மட்டும்ல்ல ஏறக்குறைய எல்லா தொடர் இயக்குனர்களும் தெளிவாக இருக்கின்றனர். இதைவிட கொடுமையென்ன என்றால் அனேக பெண்களும் இதே கருத்தை கொண்டிருப்பதுதான்.
அட தேவுடா!!!!!!!!!!!!!
நான் எழுதுவதற்கும் மற்ற பலர் எழுதியதற்கும் ஒரு சிறு வேறுபாடு. பலர் தாங்கள் அவ்வப்போது பார்த்ததாகக் கூறினர். நானோ கிட்டத்தட்ட முழுமையாக கூர்ந்து பார்த்தவன்.
ஒவ்வொரு பாத்திரத்தையும் ஆழமான அலசலுக்கு என்னால் உட்படுத்த முடியும். அதை எல்லாம் போட்டிருந்தால் பதிவு மிக நீண்டிருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"//ஒரு கன்னத்தில் அறைந்தால் அறைந்தவன் இரு கன்னத்திலும் மாறிமாறி அறைவதுதான் எனக்கு பிடிக்கும். வாழு வாழ விடு என்பதே என் கொள்கை.//
ஐயா, இதைதானே ஈழத்தமிழர் செய்கின்றனர். அதன் நியாயம் மட்டும் ஏன் நிறைய பேருக்கு புரியவில்லை?"
கண்டிப்பாக. ஆனால் ஒரே ஒரு சிக்கல். திரும்ப அறையப்படுபவரிடம் உங்களுக்கு எதிர்காலத்தில் ஏதேனும் உதவி தேவைப்படுமா என்று பார்த்துக்கொள்தல் நலம். அவ்வாறின்றி திரும்ப அறைந்து விட்டு அறைபட்டவரிடம் உதவி எதிர்பார்ப்பது அசட்டுத்தனம். அவர் உங்கள் சங்காத்தமே வேண்டாம் என்று போய்விடும்போது அதற்காக வியப்பும் கொள்ளக்கூடாது. அவர் உங்கள் மேல் நல்லபிப்பிராயம் வைத்துக்கொள்வார் என்பதையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும்.
மெட்டி ஒலி லீலாவையே எடுத்துக்கொள்வோம். அவர் செய்திருக்க வேண்டியது ரவியை விட்டு பிரிதலே. அவர் அவ்வாறு செய்ய நினைக்கும் போது அவர் தந்தை அவரைத் தடுக்கிறார். பார்வையாளர்களுக்கு எரிச்சல் ஏற்படும் வண்ணம் வாதங்களும் வைக்கிறார். லீலா அதைக் கேட்காமல் பிரிந்திருந்தால் ரவி அவரை விவாகரத்து செய்திருக்கலாம். அதைத் தன்னால் எதிர்க்கொள்ள முடியுமா என்பதைப் பார்த்துத்தான் லீலாவின் செயல் இருக்க வேண்டும். அதன்றி டைவர்ஸ் ஆனவுடன் இம்மாதிரி நடக்கும் எனத் தான் நினைக்கவேயில்லை என்று பிரலாபிப்பதால் என்ன பயன்?
புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
"இந்தப்பதிவுகளையெல்லாம் படிக்கும் ஏதோ சுவாரஸியத்தை இழந்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. சில நேரங்களில் இதன் பிடியில் சிக்காமல் தப்பித்தோமே என்றும் தோன்றுகிறது."
இரண்டுமே சரிதான் ஜயந்தி சங்கர் அவர்களே. இப்போதைக்கு இரண்டாவதையே நினைத்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"தயவு செய்து இது வழக்கம் போல் தூற்றும் பதிவு என நினைத்தால் என்னை மன்னித்து என் பதிவை அழித்து விடுங்கள்."
கண்டிப்பாக நான் அவ்வாறு நினைக்கவில்லை நண்பர் புலிக்குட்டி அவர்களே. நான் இரு கன்னத்திலும் அறைவேன் என்று சொன்னது ஒரு தற்காப்பு நடவடிக்கையே. விளக்குகிறேன். பதிலுக்கு இரு அறைகள் கொடுத்தேன் என்றால் எதிராளியும் யோசிப்பான், இவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று. அதன்றி மற்றொரு கன்னத்தைக் காட்டினால் அவன் மாறிமாறி அறைவான். மெட்டி ஒலியில் சரோவும், லீலாவும் சிதம்பரமும் சீற வேண்டியத் தருணங்களில் சீறியிருந்தால் பல மன உளைச்சல்களைத் தவிர்த்திருக்கலாம். அந்த கான்டக்ஸ்டில்தான் நான் கூறியது வருகிறது.
பிராம்மணர்களின் குணம் துஷ்டனைக் கண்டால் தூர விலகுவதே ஆகும். ஆனால் அம்முறையும் தற்காலத்தில் பயன் அளிக்காது. அதைப்பற்றி நான் "என் வெளிப்படையான எண்ணங்களில்" கூறியுள்ளேன். நான் கூறியது பிராம்மணர்களின் அடையாளம் அல்லதான். ஒத்துக்கொள்கிறேன். மற்றப்படி விகர்ணனை எனக்கு பிடிக்கும். உங்கள் பின்னூட்டத்தை அழிப்பதா? மூச்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன் சார்,
நல்ல அலசல் !
//நான் எழுதுவதற்கும் மற்ற பலர் எழுதியதற்கும் ஒரு சிறு வேறுபாடு. பலர் தாங்கள் அவ்வப்போது பார்த்ததாகக் கூறினர்.
நானோ கிட்டத்தட்ட முழுமையாக கூர்ந்து பார்த்தவன்.
//
முழுமையாக பார்த்தால் மட்டுமே ஒருவர் சிறப்பாக அலச முடியுமா என்ன ? அவர் ஒரு நல்ல விமர்சகராகவும் (குறை நிறைகளை சரியாக ஆராயவல்ல !), மனித உறவுகளின் யதார்த்தத்தை உணர்ந்தவராகவும் இருத்தலும், அதை விட மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன் !!!
எ.அ.பாலா
ஜெமினியில் தெலுங்கிலும் சூர்யாவில் மலையாளத்திலும் மெட்டி ஒலி மொழிமாற்றம் செய்யப்படுகிறது. கன்னடத்திலும் வருமாயிருக்கும் (உஷெ), ஆனால் நான் பார்த்ததில்லை.
சாதாரணமாக எல்லா பாப்புலர் சன் டி.வி. சீரியலகள் இம்மாதிரி டப் செய்யப்படுகின்றன. அம்பிகை என்னும் சீரியலின் தெலுங்கு டப்பிங் 15 எபிஸோடுகள் முன்னால் சென்றது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அடேடே தவறாக நினைக்காதீர்கள் பாலா அவர்களே. நான் சிறு வேறுபாடு என்றுதானே கூறினேன். உங்களையும் சேர்த்து யாரும் சீரியலை முழுக்கப் பார்த்ததாகக் கூரவில்லை. நான் முழுக்கப் பார்த்தேன். அதை மட்டும் கூறினேன். மற்றப்படி உங்கள் அலசலும் நன்றாகவே உள்ளது.
சித்தியைப் பற்றி நீங்கள் கூறியதையும் ரசித்தேன். உங்கள் மனைவி தேவலை. என் வீட்டம்மாவிடம் நான் இதைக் கூறியிருந்தால் குமட்டில் செல்லமாக(!) குத்தியிருப்பார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மூளை அதற்கு இருப்பதே கேள்விக்குறியாகிவிட்ட ஓர் ஈனப்பிறவி (ப்ளாக்கர் எண் 9999511) வாந்தி எடுத்துவிட்டுச் சென்றிருக்கிறது. ஆள் யார் என்பது தெரியும். என் நண்பர்களுக்கும் தெரியும். அப்பதிவு அழிக்கப்பட்டது. லிங்க் மட்டும் அப்படியே உள்ளது. இனி வரும் பதிவுகளும் அவ்வாறே கையாளப்படும். என் கிமெயிலில் அதன் செய்தி ஹெடர்ஸுடன் ஆர்கைவ்ஸில் உள்ளது என்பதையும் தெரிவித்து விடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள ராகவன்,
வணக்கம். நல்லா இருக்கீங்களா?
இதுலே முதல் பின்னூட்டம் நான் போட்டது. ஏனோ இப்பெல்லாம்
பலசமயங்களில் ?????? என்றே வருகிறது.
என்றும் அன்புடன்,
துளசி.
பி.கு: இந்த 'மேளா'வில் கலந்துக்காதது நானும் ஜெயந்தியும்தான் போலெ!!!
"இதுலே முதல் பின்னூட்டம் நான் போட்டது. ஏனோ இப்பெல்லாம்
பலசமயங்களில் ?????? என்றே வருகிறது."
தெரியும் துளசி அவர்களே. உங்கள் பெயரை ஆங்கிலத்தில் மாற்றிப் பார்த்தீர்களா? எப்படியும் என்னுடைய ஜிமெயில் வரவுப்பெட்டி பெயர்களை க்ளியராக காட்டிவிடும். அப்படியே இல்லாவிட்டாலும் கேள்விக்குறியின் மேல் எலிக்குட்டியை வைத்தால் கீழே ப்ளாக்கர் எண் தெரியும். வலது க்ளிக் > இன்னொரு திரை என்று க்ளிக்கினால் ப்ளாக்கர் ப்ரொஃபைல் பெயருடன் வரும். என்ன, சிலருக்கு அதில் ப்ரொஃபைல் மறைக்கப்பட்டது என்று வரும். அதுதான் இப்போது தரக்குறைவாக பின்னூட்டமிட்ட ஒரு நபர் விஷயத்தில் வந்தது. அவருடைய ப்ளாக்கர் எண்: 9999511. அவர் பதிவை அழித்து லிங்கை மட்டும் அப்படியே வைத்திருக்கிறேன். போலி டோண்டுதான் அவர் என்பதிலும், யார் அவர் என்பதிலும் தெளிவாக உள்ளேன். இப்போதெல்லாம் அந்த நபர் தன் சொந்தப் பதிவில் ரொம்பவும் உத்தமமாக எழுதி வருகிறார் என்பதையும் பார்த்துத்தான் வருகிறேன்.
ஒரு வேளை மெட்டி ஒலி சீரியலின் சி.டி. போடுகிறார்களோ என்னவோ. பார்க்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தரம் கெட்டப் பின்னூட்டங்கள் அழிக்கப்படும். லிங்க் வைத்து கொள்ளப்படும். செய்தி ஹெடெர்ஸுடன் ஜி மெயிலில் இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இது இன்று எழுதியதுதானா? ஏன் இவ்வளவு நாள் கழித்து திடீரென்று மெட்டி ஒலி ஞாபகம்?
என் நண்பன் ஒருவன் நான் சீரியல் எல்லாம் பார்த்து டைம் வேஸ்ட் செய்வதில்லை என்று பம்மாத்து விட்டு விட்டு ரகசியமாக மெட்டி ஒலி மட்டும் பார்ப்பதை கண்டு பிடித்தோம். பின்னர் அவன் கூறியது, இந்த சீரியலில் மட்டும்தான் கேரக்டர் எல்லாம் ஓவர் மேக்-அப்பும் பகட்டான உடைகளும் இல்லாமல் இயற்கையாக இருக்கிறார்கள் என்று.
நான் நினைக்கிறேன் இதுவும் இந்த சீரியலை மக்கள் விரும்பி பார்த்ததற்கு ஒரு காரணமாகும். மற்றபடி மெட்டி ஒலியும் ஸ்பான்சர்களை திருப்திபடுத்தும் அம்சங்கள் நிறைந்தததுதான்.
//இது இன்று எழுதியதுதானா? ஏன் இவ்வளவு நாள் கழித்து திடீரென்று மெட்டி ஒலி ஞாபகம்?//
இல்லையே, சரியாக இரண்டு ஆண்டுகள் முன்பு எழுதியது. பரண் பகுதியில் தமிழ்மணத்தால் வெளியிடப்பட்டது. அதில் லேபல் சேர்த்து இற்றைப்படுத்தியதால், பின்னூட்டங்கள் வந்தால் மறுமொழியப்பட்ட ஆக்கங்களில் வருகிறது. மேலும் இந்த சீரியல்; இன்னும் மக்கள் மனத்தில் நிற்கிறது.
சீஇரியல் மிக அருமையாக எடுக்கப்பட்டிருந்தது, சில மிகைப்படுத்தல்கள் தவிர.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"//ஒரு கன்னத்தில் அறைந்தால் அறைந்தவன் இரு கன்னத்திலும் மாறிமாறி அறைவதுதான் எனக்கு பிடிக்கும். வாழு வாழ விடு என்பதே என் கொள்கை.//
ஐயா, இதைதானே ஈழத்தமிழர் செய்கின்றனர். அதன் நியாயம் மட்டும் ஏன் நிறைய பேருக்கு புரியவில்லை?"
verti thirumalai
"கண்டிப்பாக. ஆனால் ஒரே ஒரு சிக்கல். திரும்ப அறையப்படுபவரிடம் உங்களுக்கு எதிர்காலத்தில் ஏதேனும் உதவி தேவைப்படுமா என்று பார்த்துக்கொள்தல் நலம். ! " டோண்டு.
ஏன் டோண்டு சார்!! ஒரு உதாரணத்திற்கு மட்டும் கேட்கின்றேன்.
உங்க மனைவியை ஒரு பெரியண்ணா கையைப் பிடிச்சு இழுத்தா, பெரியண்ணா ரொம்ப பெரிய மனுசனாச்சே பிற்காலத்தில் பெரிய உதவி கிடைக்கும் என விட்டுக்கொடுப்பீங்களா?
புள்ளிராஜா
//உங்க மனைவியை ஒரு பெரியண்ணா கையைப் பிடிச்சு இழுத்தா, பெரியண்ணா ரொம்ப பெரிய மனுசனாச்சே பிற்காலத்தில் பெரிய உதவி கிடைக்கும் என விட்டுக்கொடுப்பீங்களா?//
கண்டிப்பாக பெரியண்ணாவைப் போட்டுத்தள்ளுவேன். ஆனால், அதுக்கப்புறம் பெரியண்ணா வூட்டுக்காரங்கக் கிட்டே பின்னாலெ போய், நான் கொன்னது துன்பியல் சம்பவம். என்னோட ஆளுக்கு மருத்துவ உதவி கொடுங்கன்னு கெஞ்சவும் மாட்டேன். அதைத்தானே புலிகள் செய்யறாங்க? அவங்களோட ஆதரவாளர்களும் கேக்கறாங்க?
அன்ப்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment