8/01/2005

நபியில்லாமல் டோண்டு இல்லை

சமீபத்தில் 1998-ல் தில்லியில் வைத்து எனக்கு ஒரு பெரிய பிரச்சினை. வருமானவரி கணக்கு கொடுக்க வேண்டும். அதற்கான படிவத்தைப் பார்த்தால் தலை சுற்றியது. என்னென்னவோ sections, sub-sections என்றெல்லாம் ஒரே கலாட்டா. என் பக்கத்து கட்டிடத்தில் இருந்த ஆடிட்டர் ஒருவரிடம் இம்மாதிரி சட்டப் பிரிவுகள் என்னைக் குழப்புகின்றன என்று மூக்கால் அழ அவர் என்னிடம் நக்கலாக கூறினார், "அதற்குத்தான் நாங்கள் ஆடிட்டர்கள் இருக்கின்றோம், நாங்கள் பிழைக்க வேண்டாமா" என்று.

அப்போதுதான் என் இன்னோரு அண்டை வீட்டுக்காரரான ஹமீது கூறினார், "நீங்கள் நபியிடம் பாரத்தைப் போடுங்கள்" என்று. பிறகு அவரே என்னை அன்புடன் தில்லி கனாட் ப்ளேசில் உள்ள ஜெயின் புத்தகக் கடைக்கு அழைத்து சென்று அங்கிருந்து "Nabhi's Income Tax, Guidelines & Mini Ready Reckoner" வாங்கிக் கொடுத்தார்.

அடாடா என்ன எளிமையாக அதில் விளக்கங்கள் கிடைத்தன! எல்லா sections- ம் தங்கள் பயமுறுத்தும் தன்மையை விட்டு எனக்கு தோழர்களாக மாறின. அதை வைத்து கொண்டு மிகச் சுலபமாக ரிடர்ன் சமர்ப்பிக்க முடிந்தது.

வருடம் 2002. இப்போது நான் சென்னையில். நபிக்காக கடை கடையாக ஏறினேன். வேறு யார் பெயரெல்லாமோ சொன்னார்கள். எனக்கு திருப்தியில்லை. நபிதான் வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தேன். பிறகு சீதாராமன் கடையில் நபி கிடைக்கப் பெற்றேன்.

இப்போது? ஒரு பிரச்சினையும் இல்லை. நபி இருக்கும்போது என்னக் கவலை? ஆக, நபி இல்லாமல் டோண்டு இல்லை என்பது சரிதானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

மரத் தடி said...

நான் நினைத்தேன், நீங்கள் நபியைத்தான் உங்கள் தெய்வமாக ஏற்றுக் கொண்டீர்களோ என!

நீங்களா? இஸ்லாத்தையா? தழுவுவதா? அது இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகளானாலும் நடவாத செயல் அல்லவா!!!

dondu(#11168674346665545885) said...

விசிதா அவர்களே, அது வரை நான் வேலையில் இருந்ததால் சம்பளத்திலேயே பிடித்தம் செய்து விடுவார்கள். ரிடர்ன் சமர்ப்பித்ததில்லை. 1998-ல் வெளியே இருந்ததால் ரிடர்ன் கொடுக்க வேண்டியிருந்தது.

அங்குதான் நபி நிற்கிறார். நபி இல்லாமல் டோண்டு இல்லைதானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

நல்லடியார் said...

//"Nabhi's Income Tax, Guidelines & Mini Ready Reckoner" வாங்கிக் கொடுத்தார். அடாடா என்ன எளிமையாக அதில் விளக்கங்கள் கிடைத்தன! எல்லா sections- ம் தங்கள் பயமுறுத்தும் தன்மையை விட்டு எனக்கு தோழர்களாக மாறின//

உண்மைதான்! நபியின் ஏனைய விளக்கங்களையும் படித்தால் இன்னும் உங்கள் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்!!

உபரித்தகவல்: மொத்த வருமானத்தில் 2.5% அல்லது 1/40 பங்கு. இது முஹம்மது நபி பரிந்துறைக்கும் Income Tax!!!

dondu(#11168674346665545885) said...

"மொத்த வருமானத்தில் 2.5% அல்லது 1/40 பங்கு. இது முஹம்மது நபி பரிந்துறைக்கும் Income Tax!!!"

அப்படியா? என் நபி கூறுகிறார் ரூ. 3 லட்சம் வருமானத்துக்கு 64000 ரூபாய் வரி. பார்க்க: பக்கம் 389, அட்டவணை ஜி. 10. ஆனால் இது அவர் பரிந்துரை அல்ல. இருப்பதை இருப்பதுபடி கூறுகிறார்.

ப.சி. கவனிப்பாரா? ஹூம்!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது