கேள்விகள் பலருக்குப் பிடித்திருக்கின்றன. ஆகவே இன்னும் சில கேள்விகளைக் கேட்கலாம் என்று எண்ணம்.
1. ஜன்னல் எதுவும் இல்லாத ஒரு மூடிய அறையில் மூன்று பல்புகள் உள்ளன. அவற்றிற்கான ஸ்விட்சுகள் அறைக்கு வெளியே உள்ளன. அறையை ஒரு முறை மட்டும் திறந்து உள்ளே பிரவேசிக்கலாம் எந்த ஸ்விட்ச் எந்த பல்புக்கு என்று அறிய முடியுமா? எவ்வாறு?
2. ஒருவன் தன்னுடையக் காரில் ஒரு சக்கரத்தை மாட்டிக் கொண்டிருக்கிறான். அப்போது துரதிர்ஷ்டவசமாக சக்கரத்தின் நான்கு நட்டுகளும் சாக்கடையில் விழுந்து காணாமல் போகின்றன. அத்துவானக் காட்டில் இருக்கிறான். பக்கத்தில் கடை ஏதும் இல்லை. இப்போது என்ன செய்து சிக்கலிலிருந்து மீளுவான்?
3. ஒரு லாரி உயரம் குறைந்தப் பாலத்துக்கு அடியில் செல்லும்போது இசகு பிசகாக மாட்டிக் கொள்கிறது. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. ஒரே கூச்சல். லாரியை எவ்வாறு மேலே ஓட்டிச் செல்வது?
4. நீங்கள் ஒரு கிலோமீட்டர் நீளமும் 100 மீட்டர் அகலமும் கொண்டத் தீவின் நடுவில் இருக்கிறீர்கள். தீவு முழுக்க உலர்ந்த செடிகள் அடர்த்தியாக உள்ளன. தீவின் ஒரங்களில் செங்குத்தான வழுக்குப் பாறைகள் உள்ளன. தீவைச் சுற்றிலும் உள்ளக் கடலில் பல சுறாமீன்கள். தீவின் ஒரு எல்லையில் திடீரென்று காட்டுத்தீ மூண்டு விடுகிறது. காற்று நீங்கள் இருக்கும் இடம் நோக்கியே வீசுகிறது, ஆகவே தீயும் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. எவ்வாறு தப்பிப்பீர்கள்?
5. முந்தாநேற்று மீராவின் வயது 17. அடுத்த வருடம் அவள் வயது 20. எப்படி?
6. ராமு தன் பெற்றோர்களுடன் சென்னையில் வசிக்கிறான். போன வாரம் அவன் பெற்றோர்கள் வீட்டில் இல்லை. பக்க்த்து வீட்டு நிர்மலா அவனுக்கு கம்பெனி கொடுத்தாள். சற்று நேரம் கழித்து நிர்மலா சிகரெட் வாங்க வெளியில் சென்றாள். அப்போது முன்பின் தெரியாத இருவர் வந்து வீட்டிலிருந்து டி.வி செட்டை எடுத்துச் சென்றனர். அவர்கள் திருடர்கள். ராமு அவர்களை இது வரை பார்த்ததேயில்லை. ஆனாலும் அவன் அவர்களைத் தடுக்க ஒரு முயற்சியும் செய்யவில்லை. சொல்லப் போனால் அவர்கள் செயலைக் கண்டு திகைப்பு கூட அடையவில்லை. ஏன்?
7. அடர்ந்த காட்டின் நடுவில் ஒரு வாலிபனின் பிணம். அது நீச்சல் உடை அணிந்திருந்தது. நீந்துவதற்குரிய ஏரி 10 கிலோமீட்டர் தள்ளி இருந்தது. வேறு நீர்நிலைகளும் இல்லை. வாலிபன் எப்படி இறந்தான் என்பதை விளக்குக. இது நிஜத்தில் நடந்த நிகழ்ச்சி.
8. ஒரு போலீஸ்காரர் தெருவோரம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு குரலைக் கேட்டார், "பீட்டர், என்னைச் சுடாதே, என்னைச் சுடாதே!" துப்பாக்கி வெடித்த சப்தம் கேட்டது. சத்தம் வந்த வீட்டினுள் போலீஸ்காரர் நுழைந்து பார்த்தார். ஒரு பிணத்தைச் சுற்றி அவர் இது வரை பார்த்திராத மூவர் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவர் வக்கீல், இரண்டாமவர் பொறியாளர், மூன்றாமவர் பாதிரியார். போலீஸ்காரர் பாதிரியாரை உடனே அரஸ்ட் செய்தார். ஏன்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
26 comments:
8. Peter was the only male!
"8. Peter was the only male!"
முற்றிலும் சரி ஷ்ரெயா அவர்களே.
"2. மீதி மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு நட்டைக் கழற்றி இந்தச் சக்கரத்தில் போட்டுக்கொள்வான்.
5.முந்தாநேத்து டிசம்பர் 30.
டிசம்பர் 31 மீரா பிறந்தநாள்."
முற்றிலும் சரி ஜயஸ்ரீ அவர்களே. முதல் கேள்விக்கு விடை உங்களுக்குத் தெரியும் என்பதை நான் நிச்சயம் நம்புகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
8. "மீதி ரெண்டு பேரும் வேறு மதத்துக்காரர்கள்? (விவகாரமாகிடப் போகுது.)"
தவறான விடை. ஷ்ரேயா ஏற்கனவே விடை கூறிவிட்டார்.
"6. டிவி ரிப்பேர்காரர்கள் என்று நினைத்திருக்கலாம். (விடை சந்தேகம்தான்.) நானெல்லாம் ஐடி கார்டு பார்க்காம உள்ள விட மாட்டேன்."
தவறான விடை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
3. just to release the air from the wheels, then drive away the lorry.
4. Escape with the boat that was used to enter the island in the first place!!
"3. just to release the air from the wheels, then drive away the lorry."
மிகவும் சரி சலாஹுத்தீன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
6. Ramu is blind
"4. Escape with the boat that was used to enter the island in the first place!!"
தவறான விடை. படகு இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
6. Ramu is blind
தவறான விடை. ராமுவால் நன்கு பார்க்க முடியும், பராலிடிக்கும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
4. ஓடிச்சென்று ஒரு குச்சியில் நெருப்பை பற்றிக்கொண்டு தீவின் பாதியில் வந்து தீ வைத்து விட வேண்டும்.. காற்று வீசும் திசை ஒன்றே என்பதால் ஏற்கனவே எரியும் அதே திசையில் தீவின் பாதியில் இருந்து எரிய ஆரம்பிக்கும். தீ பாதி தீவுக்கு பரவும் போது அடுத்த பாதி ஏற்கனவே எரிந்திருக்கும், அங்கே மாறி நின்று கொள்ளலம்
6. ராமு என்பது நாயின் பெயர்.
1. ஒரு ஸ்விட்சை போட்டு 5 நிமிடம் கழித்து அணைத்து விடவும். இன்னொரு ஸ்விட்சை போட்டு உடனே அந்த ரூமிற்கு சென்று அணைந்திருக்கும் பல்பை தொட்டால், சூடாக இருக்கும் பல்பு முன்பு போட்ட ஸ்விட்சிற்கு உரியது
Answere for Q7:
A man was swimming/diving in the nearby lake. To putout the forest fire, the fire brigade took water from the lake. The man was also taken along with the water, without the knowledge of the fire brigade. When the water was used to extinguish the fire, the man was also dropped from a high altitude and he was killed on the spot.
"4. ஓடிச்சென்று ஒரு குச்சியில் நெருப்பை பற்றிக்கொண்டு தீவின் பாதியில் வந்து தீ வைத்து விட வேண்டும்.. காற்று வீசும் திசை ஒன்றே என்பதால் ஏற்கனவே எரியும் அதே திசையில் தீவின் பாதியில் இருந்து எரிய ஆரம்பிக்கும். தீ பாதி தீவுக்கு பரவும் போது அடுத்த பாதி ஏற்கனவே எரிந்திருக்கும், அங்கே மாறி நின்று கொள்ளலம்"
சரியான விடை.
"6. ராமு என்பது நாயின் பெயர்."
தவறான விடை. ராமு மனிதனே.
"1. ஒரு ஸ்விட்சை போட்டு 5 நிமிடம் கழித்து அணைத்து விடவும். இன்னொரு ஸ்விட்சை போட்டு உடனே அந்த ரூமிற்கு சென்று அணைந்திருக்கும் பல்பை தொட்டால், சூடாக இருக்கும் பல்பு முன்பு போட்ட ஸ்விட்சிற்கு உரியது"
சரியான விடை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
காட்டுத்தீயின் போது தீயணைக்கும் விமானம் ஏரியில் தண்ணீர் அள்ளும் போது இவனையும் சேர்த்து அள்ளிக்கொள்கிறது... (இந்த முறையில் காட்டு தீ அணைப்பது அமெரிக்காவில் சர்வசாதாரணம். இந்தியாவில் இந்த முறையில் நடக்கிறத என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை)
"Answere for Q7:
A man was swimming/diving in the nearby lake. To putout the forest fire, the fire brigade took water from the lake. The man was also taken along with the water, without the knowledge of the fire brigade. When the water was used to extinguish the fire, the man was also dropped from a high altitude and he was killed on the spot."
தண்ணீர் எப்படி எடுத்தார்கள்? மனிதனைப் பார்த்திருக்க மாட்டார்களா? வார்த்தைகளில் சிறிது மாற்றம் தேவை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
6. திருடர்கள் திருடியது நிர்மலா வீட்டு டிவியை
"காட்டுத்தீயின் போது தீயணைக்கும் விமானம் ஏரியில் தண்ணீர் அள்ளும் போது இவனையும் சேர்த்து அள்ளிக்கொள்கிறது... (இந்த முறையில் காட்டு தீ அணைப்பது அமெரிக்காவில் சர்வசாதாரணம். இந்தியாவில் இந்த முறையில் நடக்கிறத என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை)"
முகமூடி கூறுவது 100% சரி. முழு விவரங்களும் உள்ளன. ஸிமுலேஷன் கூறியது புரிந்தாலும் விடை முழுமையானதாக இல்லை. தண்ணிரை சேகரித்தது விமானத்திலிருந்தே என்பது முக்கிய வாக்கியம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
" முகமூடி said...
6. திருடர்கள் திருடியது நிர்மலா வீட்டு டிவியை."
தவறான விடை
அன்புடன்,
டோண்டு ராகவன்
6. திருடர்கள் டிவியை திருடியது ராமு பார்த்துக்கொண்டிருந்த சினிமாவில்
ராமு ஒரு குழந்தை.
இல்லேன்னா
ராமு தூங்கிக்கிட்டு இருந்திருக்கான்.
"6. திருடர்கள் டிவியை திருடியது ராமு பார்த்துக்கொண்டிருந்த சினிமாவில்"
இல்லவே இல்லை. நிஜமாகவே ராமு வீட்டு டி.வி.யைத்தான் எடுத்து சென்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ராமு ஒரு குழந்தை."
மிகவும் சரி. ராமு 10 மாதக் குழந்தை. திருடர்களைப் பார்த்து "ங்கா" என்று கத்தி சிரித்தது. (உதை வாங்கப் போகிறாய் டோண்டு).
அன்புடன்,
டோண்டு ராகவன்
// ராமு ஒரு குழந்தை // ஓ.. நிர்மலா பேபி சிட்டிங்கிற்கு வந்திருக்கலாம்...
4. :(((
இந்த டெக்னிக் ஏற்கனவே 'விரும்புகிறேன்' படத்துல வந்துடுத்து. அதனால இது பதிலா இருக்காதுன்னு புதுசா யோசிக்கக் கிளம்பிட்டேன். :((
இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனக்கு மேற்படி கொஞ்சம் குறைவு நான் இதில் அம்பேல்
என்னார்
Post a Comment