எதேச்சையாக இன்றுதான் $ல்வன்
இப்பதிவைப் பார்த்தேன். இப்போதுதான் சமீப (!) சமீபத்தில் நான்குxநான்கு விளையாட்டு முடிந்த தருணத்தில் இது வேறா என்று தோன்றியதாலேயே அது சம்பந்தமான பதிவுகளை ரொம்ப கவனத்துடன் பார்க்கவில்லை, அதனால்தான் இந்தத் தாமதம்.
சமீபத்தில் அறுபதுகளில் வெளியான "ஆண்டவன் கட்டளை" என்னும் படத்தில் "ஆறு மனமே ஆறு" என்ற பாடல் டி.எம்.எஸ்சின் கம்பீரமான சிம்மக் குரலோன் குரலில் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும். நேயர் விருப்பத்தில் ஒவ்வொரு முறையும் கேட்கப்படும், ஆனால் ஒவ்வொரு முறையும் கேட்டவர்தம் பெயர்களை அறிவிப்பதிலேயே ஒரு பாடலின் நேரத்தை எடுத்துக் கொண்டு படுத்துவார்கள். பாடலைப் பார்ப்போமா?
ஆறு மனமே ஆறு - அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
படம் -ஆண்டவன் கட்டளை
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர் - டி.எம். செளந்தரராஜன்"ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...."
மேலே கூறிய வரிகளில் "ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி" என்ற வரி எனக்கு மிகவும் பிடித்தது. இங்கு ஆறு சொல்ல வேண்டியிருப்பதுவே எனது இப்பதிவின் தலைப்புக்கு காரணம்.
எனக்குப் பிடித்த ஆறு தலைவர்கள்:1. ராஜாஜி
2. மகாத்மா காந்தி
3. காமராஜ்
4. மொரார்ஜி தேசாய்
5. வல்லபாய் படேல்
6. அடல் பிஹாரி வாஜ்பேயீ
எனக்குப் பிடித்த பத்திரிகை சம்பந்தப்பட்டவர்கள்1. சோ அவர்கள்
2. சி.பா. ஆதித்தனார்
3. எஸ்.எஸ்.வாசன்
4. எஸ்.ஏ.பி.
5. நாடோடி
6. அருண் ஷோரி
எனக்குப் பிடித்தத் தமிழ் எழுத்தாளர்கள்:1. கல்கி
2. சோ அவர்கள்
3. ரமணி சந்திரன்
4. அனுத்தமா
5. அனுராதா ரமணன்
6. வாசந்தி
எனக்குப் பிடித்த ஐரோப்பிய/அமெரிக்க எழுத்தாளர்கள்:1. Taylor Caldwell (for: Tender Victory, Dear and Glorious Physician)
2. J.K.Rowling (for:All the six books of Harry Potter)
3. Hans Bemmann (for: Hans Bemmann: Stein und Flöte ...und das ist noch nicht alles)
4. A.J. Cronin (for: Keys of the Kingdom, Citadel, Beyond this place etc.)
5. Lloyd C. Douglas (for: The beautiful obsession, The Robe etc.)
6. Harper Lee (for: To kill a mocking bird)
எனக்குப் பிடித்த நடிகர்கள்:1. சோ அவர்கள்
2. கமலஹாசன்
3. ஜெமினி கணேசன்
4. சிவகுமார்
5. சூர்யா
6. விக்ரம்
எனக்குப் பிடித்தப் பதிவாளர்கள்:1. டி.பி.ஆர். ஜோசஃப்
2. நாட்டாமை
3. $ல்வன்
4. என்றென்றும் அன்புடன் பாலா
5. ஜெயராமன்
6. ம்யூஸ்
நான் அழைக்கும் எட்டு பதிவாளர்கள்1. டி.பி.ஆர். ஜோசஃப்
2. நாட்டாமை
3. தினகர்
4. என்றென்றும் அன்புடன் பாலா
5. ஜெயராமன்
6. ம்யூஸ்
7. கால்கரி சிவா
8. வஜ்ரா ஷங்கர்
$ல்வன் என்னை அழைத்து விட்டதால், அவருக்கு பதிலாக தினகர். அவர் பின்னூட்டங்கள் மட்டுமே இட்டிருக்கிறார். அவரும் இதற்காகவாவது பதிவு போடட்டுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்