6/01/2006

காக்க, காக்க

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்ற பதிவு போட்டதன் நோக்கமே புரியாது வழக்கம்போல திசைதிருப்பல்கள். வெளிநாடு செல்லும் இந்தியர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறேன். அதிலும் இந்துக்கள் கல்ஃப், சவுதி முதலிய நாடுகளைத் தவிர்க்கவும் என்று கூறினேன். ஏன்? அங்கு போனவர்கள் இந்துக்கள் என்பதால் பட்ட கஷ்டங்களை சம்பந்தப்பட்டவர்களால் கூறக்கேட்டதன் பலனாகக் கூறினேன். அதிலும் அது பதிவில் ஒரு சிறிய பகுதியே. ஏற்பவர்கள் ஏற்கிறார்கள், ஏற்காதவர்கள் தங்கள் நேரடி அனுபவங்களைப் பெறுகிறார்கள்.

அதையெல்லாம் விட்டார்கள். அரேபியர்களின் கொ.ப.செ. ரேஞ்சுக்கு பலர் வந்து விட்டார்கள். காக்க, காக்க என்றெல்லாம் பதிவு போட்டு விடுகிறார்கள். அதில் பின்னூட்டம் இட்டவர்கள் கூட சவுதியை ரொம்ப டிஃபண்ட் செய்வதாகக் காணோம். அப்பதிவை எழுதியவர் கூட அதைச் செய்யவில்லை. அதை சுட்டிக் காட்டினால் அவசரம் அவசரமாக வந்து சப்பைகட்டு கட்டுகிறார். அது இருக்கட்டும்.

பலர் தாங்கள் அமீரகத்தில் நல்ல நிலையில் இருந்ததாகவும் ஒரு கஷ்டமும் இல்லை எனக் கூறுகிறார்கள். அவர்களுக்காக நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால் கூர்ந்து பார்த்தால் அவர்களுக்கு நான் என்னுடைய முந்தைய பதிவில் சொன்ன சப்போர்ட் எல்லாம் இருந்திருக்கிறது. தங்கள் நிறுவனத்தால் ட்ரான்ச்ஃபர் செய்யப்பட்டு அங்கு சென்றவர்கள் அவர்களில் பலர். அவர்களைப் பற்றி என் பதிவு இல்லையே. என் பதிவு தங்கள் முயற்சியால் ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து சென்றவர்களுக்கான ஜாக்கிரதைப்படுத்தல்தானே.

இன்னொருவர் கூறுகிறார், சென்னை பாண்டிபஜாரில் கூட பலர் குறைந்த கூலிக்கு அதிக வேலை செய்கிறார்கள் என்று. அவருக்கு என்னுடைய எதிர்க் கேள்வி இதுதான். கடை முதலாளி அவர்கள் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துள்ளாரா? வேறுவேலைக்கு அவர்கள் போக முயன்றால், அவர்களை அவர் தடுக்க முடியுமா? இவையும் அதற்கு மேலும் கல்ஃபில் நடக்கிறது.

ஒரு விஷயம் நடந்தது, ஆகவே ஜாக்கிரதையாக இருங்கள் என்று நான் அபாயத்துக்கு உட்படுத்தப்படுபவருக்கு கூறுகிறேன். எங்களுக்கெல்லாம் அம்மாதிரி நடக்கவேயில்லை என்று கூறுகிறார்கள் சிலர். அவர்களை நான் கேட்கிறேன். ஒருவருக்கும் அம்மாதிரி நடக்கவேயில்லை என்று உங்களால் கூறிட முடியுமா? அவ்வாறு கூற உங்களுக்கு 100% விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

தர்க்க சாஸ்திரத்தை இங்கு துணைக்கழைக்கிறேன்.

இசுலாமிய நாடுகளில் சில இந்துக்கள் இந்துக்கள் என்பதால் துன்பப்பட்டனர் என்று எனக்கு அவ்வாறு துன்பப்பட்ட இந்துக்களே கூறியிருக்கின்றனர். நான் மற்றவர்களை ஜாக்கிரதை செய்ய எனக்கு அவை போதும். அதையே செய்தேன். அவ்வாறு எங்களுக்கு நடக்கவில்லை என்று சிலர் கூறியுள்ளனர். ஆகவே யாருக்கும் ஜாக்கிரதையாக இருக்கத் தேவையில்லை என அவர்கள் கூறிட இயலுமா? யோசியுங்கள் ஐயா.

If there are 100 events and to say one sequence of happening has taken place, you are required to know just one incident where it happened. If on the other hand, you want to say one sequence did not at all take place, you are required to know all the 100 events.

அவ்வளவுதான் சார் விஷயம்.

அது சரி என் பதிவில் வேறு பல விஷயங்கள் கூறியிருந்தேனே. அதைபற்றியெல்லாம் இவர்களுக்கு என்ன கவலை? அரேபியர்கள் பெயர் கெடாமல் இருந்தால் போதும் அவர்களுக்கு.

இன்னொரு விஷயத்தையும் இங்கே கூறி விடுகிறேன். முடிந்தால் சப்பைகட்டு கட்டவும்.

தொண்ணூறுகளில் சவுதியிலிருந்து வேலைக்கு ஆள் எடுக்க தில்லிக்கு வந்தார்கள் சில சவுதி அதிகாரிகள். வேலைக்கு இந்துக்கள் யாரையும் எடுக்கவில்லை. கிறித்துவர்கள், இசுலாமியர் மட்டும் தேவை என்று வெளிப்படையாகக் கூறி ஆள் எடுத்தனர். ஏர்போர்ட்டில் அவர்களில் இரண்டு கிறித்துவரை வடிக்கட்டினர். காரணம் அவர்கள் பெயர் இந்துக்கள் பெயர் போல இருந்திருக்கிறது. அவர்கள் தாங்கள் கிறித்துவர்கள் என்று கரடியாகக் கத்தியும் அவர்களை விமானத்தில் ஏற்றவில்லை. சவுதி விமானம் மேலே ஏறியது. கீழே இறங்குவதற்காக வந்த கஷக்ஸ்தான் விமானத்தின் மீது மோதி நூற்றுக்கணக்கானோர் அவுட். விடுபட்டுப் போன இரண்டு கிறித்துவர்கள் பிழைத்தனர். இந்த விஷயம் ஹிந்துஸ்தான் டைம்ஸில் அடுத்த நாள் செய்தியாக வந்தது. நான் எழுப்பும் பாயிண்ட் அதுவல்ல. நம் நாட்டுக்கு வந்து, மத அடிப்படையில் டிஸ்கிரிமினேட் செய்து போகின்றனர் திமிர் பிடித்த சவுதி அரேபியினர். அதைத் தட்டிக் கேட்க நம்மூர் அரசுக்கு ஒரு வக்கும் இல்லை. நம் உள்ளூர் மதசார்பற்றவர்களுக்கு பேச ஒரு வாயும் இல்லை.

நான் எழுதிய முந்தையப் பதிவில் ஒரு மாறுதலும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11 comments:

வாசகன் said...

1). ஆசிஃப் உங்கள் அபத்தத்தை சுட்டினாரே ஒழிய, யாருக்கும் கொ.ப.செ வேலை செய்யவில்லை. செய்பவருமில்லை.

2). உங்கள் அபத்தம் நாறுவது அறிந்தவுடன் 'கூகுளை' துணைக்கழைத்து 'ஒரு புயல் வேகப்பதிவு' தந்தீர்களே.., சூ.....ப்ப்ப்...பர்.

3). இந்தப் பதிவும் 'ஈகோ' 'மண'ப்பதன் விளைவே.
முடியாத போது துணைக்கிழுத்துக்கொள்ள கிடக்கவே கிடக்கிறது 'தர்க்க சாஸ்திரம்'.

dondu(#11168674346665545885) said...

ஆசிஃப் அவர்கள் சுட்டிக் காட்டியது நான் கூறியது 100% உண்மை இல்லை என்பதுதான். நானே அதை க்ளைம் செய்யவில்லை.

நான் கேட்ட விஷயங்களை வைத்து எச்சரிக்கை செய்தேன் அவ்வளவே. இதில் அபத்தம் என நீங்கள் கூறுவதுதான் அபத்தம்.

புயல் வேகப் பதிவுக்கும் நீங்கள் குறிப்பிடும் பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அது எவ்வாறு வந்தது என்பதையும் கூறிவிட்டேன். பொறுமையாகப் படிக்கவும்.

தர்க்க சாஸ்திரம் என்பது நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வரும். அதன் விதிகளை நீங்கள் அறிந்தாலும் அறியாவிட்டாலும் அது உங்களைக் கட்டுப்படுத்தும்.

ஒரு விஷயம் நடந்தது என்பதற்கு ஒரு உதாரணம் கொடுத்தால் போதும். நடக்கவில்லை என்பதற்கு 100% உதாரணங்கள் தர வேண்டும் என்று கூறுவது உங்களுக்கு புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Prabu Raja said...

//டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி ----(நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதை)----் பற்றி ----- உங்களிடம் கூற ஆசைப் படுகிறேன். //

இந்த விஷயத்தில் நீங்கள் மேலே சொன்னது பொருந்தவில்லை.

கீழே சொன்னதை செய்திருக்கலாம். :)

//புதிதாகக் கற்கவும் ஆசை.//

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்திற்கு நன்றி, பிரபு ராஜா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கால்கரி சிவா said...

டோண்டு சார், இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல வருகிறேன். சவூதியில் ஆரம்பகாலங்களில் இந்துகளுக்கு அனுமதியில்லை. திருமதி இந்திரா காந்தி அவர்கள் தலையிட்டு பாதிக்கு பாதி வேறு மததினரை வேலைக்கு அழைப்பதென்றால் உள்ளே வாருங்கள் இல்லையென்றால் நடையைக் கட்டுங்கள் என்றார். அலறி அடித்துக் கொண்டு முழுங்கால் இட்டவர்கள் நம் சவூதி "வீரர்"கள்

dondu(#11168674346665545885) said...

இந்திரா காந்தி காலத்துக்கு பிறகு ஒரு தடவை அம்மாதிரி ஹிந்துக்களை மட்டும் வேலைக்கு எடுக்காது போய் விமானம் விழுந்த கதையைத்தான் இப்பதிவில் போட்டுள்ளேனே.

அரபு கொ.ப.செ.க்களுக்கு என்ன வேண்டுமாம்? ஐயா இம்மாதிரி பேர்வழிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்லக் கூடாதாமா? எந்த ஊர் நியாயம் இது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ramachandranusha(உஷா) said...

அன்புள்ள டோண்டு சார்,
நண்பர் ஒருவர் உங்களை அந்துமணியுடன் ஒப்பிட்டு சொன்னதை, "நீங்களா இப்படி சொன்னீர்கள்?"என்று ஆச்சரியத்துடன் கண்டித்திருந்தார்.

நான் அந்த ஒப்பீடு செய்ததற்கு காரணம், அந்துமணியைப் போல அடித்து விட்டிருக்கிறீர்கள் என்பதும், நீங்கள் இத்தகைய கமெண்ட்டுகளை தவறாய் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நினைப்பிலும்தான். எனக்கு தர்க்கமும்,வாதமும் செய்யவும் வராது, விருப்பமும் இல்லை. ஆனால் நீங்கள் திரும்ப திரும்ப கொ.ப. செ என்ற சொல்வதைப் பார்த்து வியக்காமல்
இருக்க முடியவில்லை. பிரச்சனைகள் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மாதிரி இருக்கத்தான் செய்யும் என்பதை ஆசிப்புக்கு போட்ட
கமெண்ட்டுலேயே சொல்லிவிட்டேன். ஆனால் நீங்கள் சொல்வதைப் போல பயந்து, அஞ்சி நடுங்கும் அளவு இல்லவே இல்லை.

இந்தியா என்றால் மகாராஜாக்களும், பாம்புகளும் நிறைந்த நாடு என்று வெள்ளையர்கள் சொல்வார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். அதற்கும் நீங்கள் அமீரகம் பற்றி சொல்லும் எச்சரிக்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இணையம் என்பது உலகில் உள்ள அனைவராலும் படிக்கப்படுகிறது. தவறான தகவல் சொல்வது சரியில்லை என்று சொல்லி இவ்விஷயத்தை
இத்துடன் முடித்துக் கொள்கிறேன். முடித்துக் கொள்கிறேன் என்பதற்கு பொருள், நான் இங்கே இருக்கிறேன், இங்கு நடப்பது என்னவென்று
தெரிந்து எழுதுகிறேன், நீங்களோ யாரோ ஏதோ சொன்னார்கள் என்று எழுதி தள்ளுகிறீர்கள். நாம் இருவரும் நம் நிலையில் இருந்து மாறப்போவதில்லை. ஆகவே முற்றும்.

dondu(#11168674346665545885) said...

உஷா அவர்களே,

அந்துமணியை என்னுடன் ஒப்பிட்டு பேசியதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

நீங்கள் உங்கள் நல்ல அனுபவத்தைக் கூறினீர்கள். சந்தோஷம். அதே போல கெட்ட அனுபவம் பெற்றவர்கள் என்னிடம் தில்லியிலும், இங்கும் பல முறை கூறியவர்களும் நம்பகத்துக்குரியவர்களே. அவை நான் புதிதாகப் போகப் போகிறவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறுவதற்கு போதுமானதாக இருந்தன. அவ்வளவுதான் விஷயம்.

மற்றப்படி ஒருவர் இன்னொருவர் கருத்தை மாற்ற இயலாது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மனதின் ஓசை said...

டோன்டு சார் அவர்களே,
இது சம்பந்தமான மூன்று பதிவுகளையும் பார்த்தேன்..இந்த விஷயத்தில் நீங்கள் முரண்டு பிடிப்பதாகவே தொன்றுகிறது.. நான் அங்கு சென்றது இல்லை..அங்கு சென்று வந்த/வசிக்கும் சில நண்பர்கள் சொல்வது எல்லாம் நல்ல விதமாகத்தான் இருக்கிறது..அதை விடுங்கள்... அங்கு இருக்கும் பலர் இங்கே சொல்லியும் நீங்கள் மறுபடியும் மறுபடியும் எச்சரிக்கை செய்வதாக கூறிக்கொன்டு பயமுறுத்துவதாகத்தான் தோன்றுகிறது.. உங்கள் மனதை கேட்டுப்பாருங்கள். உன்மை என்னவாக இருக்க முடியும் என்று. வெளியில் சொல்ல வெண்டாம்..தேவையான அளவு நீங்களும் ஆசீப் மீரனும் சொல்லி விட்டீர்கள்...இத்தொடு விட்டு விடலாமே.இந்த பதிவுகளை படிக்கும் அனைவரும் அவரவர் மனதுக்கு உண்மை என்று நம்புவதை எற்றுக்கொள்ளட்டும்...

உங்கள் பதிவுகள் அதிகமான வலைப்பதிவாலர்களால் (என்னையும் சேர்த்து..) பல கருத்துக்களில் வெறுபாடு கொண்டு இருந்தாலும், படிக்கப் படுகிறது..நினைவில் கொள்க..நன்றி.
என் கருத்தை சொல்ல விரும்பினேன்..உங்களை விட வயதிலும், அனுபவத்திலும் மிகச்சிறியவன்..மரியதைக்குறைவாக எதும் தோன்றினால் மன்னித்து விடுங்கள். நிச்சயமாக அது என் நோக்கமாக என்றும் இருக்காது.

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்துக்கு நன்றி மனதின் ஓசை அவர்களே. நான் சரி என்று நினைத்ததை கூறி எச்சரிக்கை புதிதாக வெளி நாடு செல்பவர்க்கென்று கூறியாகி விட்டது. ஏற்பவர் ஏற்கட்டும் அவ்வளவே.

இப்பதிவை தாண்டி நான் வந்தாகி விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஹரிஹரன் அவர்களே. என்னைப் பொருத்தவரை கல்ஃப், சவுதி ஆகிய இடங்களுக்கு செல்லும் இந்துக்களை எச்சரிப்பதே முக்கியம். அதைத்தான் செய்தேன்.

இப்போது கல்யாண மார்க்கெட்டுகளில் வெளிநாடு மாப்பிள்ளையா, கவனம் என்றுதானே பலரும் இருக்கின்றனர். இது தவறு என்று கூற முடியுமா?

மேலும் என் பதிவே "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்" என்றுதான் கேட்டது. நிச்சயமில்லாத ஒரு வேலைக்காக ஒரு ஏஜெண்டிடம் பணம் எல்லாம் கொடுத்து ஏமாறாதீர்கள் என்றும் கூறியது.

போகிற போக்கில் அரபு நாடுகளை பற்றி எச்சரிக்கை செய்தது அவர்களது கொ.ப.செ.க்களுக்கு தவறாகப் போயிற்று. போகட்டும். நான் கூறியதில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டும் என நான் நினைக்கவில்லை அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது