எதேச்சையாக இன்றுதான் $ல்வன் இப்பதிவைப் பார்த்தேன். இப்போதுதான் சமீப (!) சமீபத்தில் நான்குxநான்கு விளையாட்டு முடிந்த தருணத்தில் இது வேறா என்று தோன்றியதாலேயே அது சம்பந்தமான பதிவுகளை ரொம்ப கவனத்துடன் பார்க்கவில்லை, அதனால்தான் இந்தத் தாமதம்.
சமீபத்தில் அறுபதுகளில் வெளியான "ஆண்டவன் கட்டளை" என்னும் படத்தில் "ஆறு மனமே ஆறு" என்ற பாடல் டி.எம்.எஸ்சின் கம்பீரமான சிம்மக் குரலோன் குரலில் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும். நேயர் விருப்பத்தில் ஒவ்வொரு முறையும் கேட்கப்படும், ஆனால் ஒவ்வொரு முறையும் கேட்டவர்தம் பெயர்களை அறிவிப்பதிலேயே ஒரு பாடலின் நேரத்தை எடுத்துக் கொண்டு படுத்துவார்கள். பாடலைப் பார்ப்போமா?
ஆறு மனமே ஆறு - அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
படம் -ஆண்டவன் கட்டளை
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர் - டி.எம். செளந்தரராஜன்
"ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...."
மேலே கூறிய வரிகளில் "ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி" என்ற வரி எனக்கு மிகவும் பிடித்தது. இங்கு ஆறு சொல்ல வேண்டியிருப்பதுவே எனது இப்பதிவின் தலைப்புக்கு காரணம்.
எனக்குப் பிடித்த ஆறு தலைவர்கள்:
1. ராஜாஜி
2. மகாத்மா காந்தி
3. காமராஜ்
4. மொரார்ஜி தேசாய்
5. வல்லபாய் படேல்
6. அடல் பிஹாரி வாஜ்பேயீ
எனக்குப் பிடித்த பத்திரிகை சம்பந்தப்பட்டவர்கள்
1. சோ அவர்கள்
2. சி.பா. ஆதித்தனார்
3. எஸ்.எஸ்.வாசன்
4. எஸ்.ஏ.பி.
5. நாடோடி
6. அருண் ஷோரி
எனக்குப் பிடித்தத் தமிழ் எழுத்தாளர்கள்:
1. கல்கி
2. சோ அவர்கள்
3. ரமணி சந்திரன்
4. அனுத்தமா
5. அனுராதா ரமணன்
6. வாசந்தி
எனக்குப் பிடித்த ஐரோப்பிய/அமெரிக்க எழுத்தாளர்கள்:
1. Taylor Caldwell (for: Tender Victory, Dear and Glorious Physician)
2. J.K.Rowling (for:All the six books of Harry Potter)
3. Hans Bemmann (for: Hans Bemmann: Stein und Flöte ...und das ist noch nicht alles)
4. A.J. Cronin (for: Keys of the Kingdom, Citadel, Beyond this place etc.)
5. Lloyd C. Douglas (for: The beautiful obsession, The Robe etc.)
6. Harper Lee (for: To kill a mocking bird)
எனக்குப் பிடித்த நடிகர்கள்:
1. சோ அவர்கள்
2. கமலஹாசன்
3. ஜெமினி கணேசன்
4. சிவகுமார்
5. சூர்யா
6. விக்ரம்
எனக்குப் பிடித்தப் பதிவாளர்கள்:
1. டி.பி.ஆர். ஜோசஃப்
2. நாட்டாமை
3. $ல்வன்
4. என்றென்றும் அன்புடன் பாலா
5. ஜெயராமன்
6. ம்யூஸ்
நான் அழைக்கும் எட்டு பதிவாளர்கள்
1. டி.பி.ஆர். ஜோசஃப்
2. நாட்டாமை
3. தினகர்
4. என்றென்றும் அன்புடன் பாலா
5. ஜெயராமன்
6. ம்யூஸ்
7. கால்கரி சிவா
8. வஜ்ரா ஷங்கர்
$ல்வன் என்னை அழைத்து விட்டதால், அவருக்கு பதிலாக தினகர். அவர் பின்னூட்டங்கள் மட்டுமே இட்டிருக்கிறார். அவரும் இதற்காகவாவது பதிவு போடட்டுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
5 hours ago
37 comments:
நாடோடி என்பவர் யாரென கேள்விப்பட்டதில்லையே...யார் அவர்..
வாருங்கள் செந்தழல் ரவி. நீங்கள் நாடோடியைப் பற்றி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
சமீபத்தில் ஐம்பது, அறுபதுகளில் அவர் ரொம்ப ஃபேமஸ். விகடன் ஆசிரியர் குழுவில் இருந்தார். அவர் எழுதிய கட்டுரைகள் விகடனின் ஒவ்வொரு இதழிலும் வரும்.
உங்கள் தந்தை, பெரியப்பா ஆகியோரைக் கேட்கவும். அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என் தந்தை காவலதிகாரி..அவர் விகடன் / குமுதம் எல்லாம் படிக்கக்கூடாது என்று தடைவிதித்திருந்தார் ஒரு சமயம்..அது ஏன் என பிறகு சொல்கிறேன்...
1992 - 1993 வாக்கில் இந்த தடை விலகியது...அப்போது குமுதம் / கல்கண்டு கிடைத்தது கையில்...
அதில் தொடராக வந்த பட்டாம்பூச்சி / ஜெனிபர் எல்லாம் படித்தேன்...சற்று புரியாத வகையில் இருந்தாலும் சுவாரசியமாக இருக்கும்...
குமுதத்தை முதலில் படிப்பது யார் என்று வெட்டு/குத்தே நடக்கும் எனக்கு என் அண்ணாவுக்கும்...
ம்ம்ம்...சரி நீங்கள் ஏதாவது அவரது எழுத்துக்கள் வைத்திருந்தால் அறிமுகப்படுத்துங்கள்..
என்ன, நாடோடி தெரியாதா என்று கேள்வி கேட்க இருந்தேன், சிங்கார வேலன் படத்தில் "மனோ வீடு தெரியாதா" என்று கமல் ஆட்டோக்காரரை மிரட்டலாகக் கேட்ட தோரணையில். (அந்த சீன் ஞாபகம் இருக்கிறதா?)
ஒரு நிமிடம் சுதாரித்ததில், சமீபத்தில் 1955-ல் என்றெல்லாம் நான் எழுதினாலும், பலருக்கு அது சமீபம் அல்ல என்ற உணர்வும் வந்தது.
நாடோடியைப் பற்றி ஒரு தனிப்பதிவே போட்டு விடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சார்,
ஒங்க ஆறுல என்னையும் சேர்த்ததுக்கு நன்றி..
முன்னால நாலு, இப்போ ஆறு.. நாளைக்கு எட்டா..?
வாங்க ஜோசஃப் சார், ஜோதியில கலந்துக்குங்க.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அடடே,
ஆறு லிஸ்டில் இந்த ஆனந்த கணேஷுமா? தன்யனானேன்.
மன ஆறு
அலை ஆடுகிறது.
ஜமாயுங்கள் ம்யூஸ்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அவர்கள் கால்கரி சிவா, மற்றும் வஜ்ரா ஷங்கரை லிஸ்டில் சேர்க்காததால்...
இஸ்ரேலில் மற்றும் கால்கரியில், சிம்ரன் ஆப்பக்கடை முதல் மாடியில் துவக்கப்பட்ட டோண்டு ரசிகர் மன்றம் கலைக்கப் பட்டுவிட்டது என்பதை வருத்ததுடன் (வயித்தெரிச்சலுடன்!!) தெரிவித்துக் கொள்கிறேன்...
:))
தவறுதான் மன்னிக்கவும் ஷங்கர் அவர்களே. அதனால் என்ன அழைப்பை எட்டு பேருக்கு அனுப்பினால் போயிற்று.
இப்போது பதிவைப் பாருங்கள். ரசிகர் மன்றத்தையெல்லாம் கலைக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஷங்கர், இது போங்கு.... இப்படி மிரட்டி எல்லாம் காரியத்தை சாதிக்க கூடாது. இதுக்கு கால்கரி சிவாயை வேற துணைக்கு அழைத்து உள்ளீர்க்கள். நான் கூப்பிட்டதற்கே இன்னும் அவர் பதில் சொல்ல... பார்க்கலாம்... எப்ப பதில் சொல்கீன்றார் என்று...
பரவாயில்லை, நாகை சிவா அவர்களே. இஸ்ரேலின் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கலாய்ப்பது சரிதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நிறைய நினைவுகளையும், படிக்க விஷயங்களையும் சொல்லியிருக்கிறீர்கள்.
முன்னுரையாக அந்தப் பாடல் மிக அருமை!
நன்றி.
நன்றி எஸ்.கே. அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன்,
டோண்டுவின் டாப் SIX-இல் இடம் பிடிப்பது என்பது சாமானியமான விஷயமா என்ன ;-) நன்றி !
சீக்கிரம் நீங்கள் கேட்டுக் கொண்டபடி பதிவிடுகிறேன்.
மிக மிக அற்புதமான ஒரு பாடலை ஞாபகப்படுத்தியதற்கு இன்னொரு நன்றி !
http://balaji_ammu.blogspot.com/2006/06/blog-post_22.html
என்றென்றும் அன்புடன்
பாலா
நன்றி பாலா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தோண்டு சார், ரொம்ப நன்றி என் பெயரையும் சேர்த்தற்கு. வஜ்ராவிற்கும் நன்றி என் பெயரை சேர்க்க வைத்ததிற்கு.
நாகை சிவா, கொஞ்சம் பிசி. ஜுலை 1 முதல் ஆட்டத்தை ஆரம்பித்து விடலாம். இதுவரைக்கும் 3 பேர் என்னை அழைத்திருக்கிறார்கள். நான் 18 பேரையாவது அழைக்க வேண்டும்
தங்கிலீஸில் எழுத மூன்று காரணங்கள்,
1.எழுத்துபிழை (என்னுடைய எழுத்தில்)
2.நேரமின்மை
3.என்னுடைய நண்பர்கள் நிறைய பேருக்கு தமிழ் தெரியும் ஆனால் படிக்க தெரியாது
இருப்பினும் தங்களுடைய ஆலோசனையை நடைமுறை படுத்த முயற்ச்சிக்கிறேன்
எனக்கு கொஞ்சம் மறதி அதிகம் அது குமுதமாக கூட இருக்கலாம்...
எது எப்படியோ உங்க வலைப்பதிவில் பின்னூட்டம் இட்டவுடன், தங்கள் நண்பர் நற்சொற்களில் எனக்கு பின்னூட்டம் இட்டு விட்டார் :-)
உங்கள் ஆறு படித்த பிறகு நான் கற்று கொள்ள நிறைய இருப்பது தெரிகிறது...
நன்றி ஸ்யாம் அவர்களே. கற்பது என்பது வாழ்க்கையின் கடைசி நாள் வரை செய்ய வேண்டிய வேலை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி கால்கரி சிவா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அவர்களே..
அருமையான பாடல் அது...இது போன்ற இனிய பாடல்கள் இப்பொதெல்லாம் அரிதாய் தான் வருகின்றன..
உங்களுடைய 6 களும் நன்றாக உள்ளன.. :-)
நன்றி மனதின் ஓசை அவர்களே. குழந்தை சௌக்கியமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிக்க மகிழ்ச்சி நாட்டாமை அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி தினகர் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வலைபூ உலகின் மூத்த சோ ரசிகருக்கு என் வந்தனம்.உங்கல் பதிவில் சோ அவர்களை பிடித்த நடிகர்,பிடித்த எழுத்தாளர்,பத்திரிக்கை சம்பந்தப்பட்டவர் என்பதை கண்டு மிகவும் ஆனந்தமடைந்தேன்.சோ பல்கலை வித்தகர் என்பதால் இவை அனைத்துக்கும் அவர் தகுதியானவரே.உங்கள் சோ பற்றிய பதிவுகளுக்கு என் வலைபூவில் இணைப்பு தந்துள்ளேன்.இந்த பதிவுக்கும் விரைவில் இணைப்பு தரவுள்ளேன்
நன்றி ராஜரிஷி சோ ரசிகன் அவர்களே. சோ ரசிகர் மன்றத்துக்கு உங்கள் வரவு நல்வரவாகுக.
ஆ ஊ என்றால் சோவை வம்புக்கிழுப்பதே இங்குள்ள பல வலைப்பதிவருக்கு வேலையாயிற்று. ஆனால் அவர்களில் பலரைப் பார்த்தால் எல்லோருமே ஒரு காலத்தில் சோ அவர்களை வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.
பிடிக்கிறதோ இல்லையோ சோ அவர்களை யாராலும் அலட்சியம் செய்ய முடியாது என்பதுதான் நிஜம்.
துக்ளக் ஆண்டுநிறைவு கூட்டங்கள் போயிருக்கிறீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
போயிருக்கிறேன் டோண்டு அவர்களே.சோவை வலைபூகளில் எதிர்ப்பவர்கள் எல்லாரும் திக,திமுககாரர்கள்.96ல் சோவை ஆகா,ஓஹோவென இவர்கள் புகழ்ந்தது இன்னும் மறக்கவில்லை.தற்போது அவர்கள் கட்சிக்கு ஆதரவாக ஜிங்க்சா தட்டி கொண்டிருக்கிறார்கள்.அதனால் அவர்கள் பேச்சை கண்டுகொள்ள வேண்டியதில்லை.
சரியாகச் சொன்னீர்கள் சோ ரசிகன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி ஹரிஹரன் அவர்களே. புகழ்ச்சி ஓவர்டோஸ் மூச்சு முட்டுகிறது. கூச்சமாகவும் இருக்கிறது.
உங்கள் பதிவில் தமிழில் தட்டச்சு செய்ய சில விளக்கங்கள் கொடுத்துள்ளேன். உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
இப்போது பதிவைப் பாருங்கள். ரசிகர் மன்றத்தையெல்லாம் கலைக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
//
நன்றி நன்றி நன்றி....
ரசிகர் மன்றங்கள் கலைக்ப்படும் முடிவை மற்றிவிட்டேன்.. ;D
இன்று தான் "மாற்றத்தைப்" பார்த்தேன்... நாகை சிவா கூறுவது போல் மிரட்டி எல்லாம் சாதித்துக் கொள்ள எண்ணம் இல்லை என்றாலும் ஒரு கலாய்ப்பு கலாய்க்கலாம் என்று தான் அப்படிச் சொன்னேன்...தனியாக நிற்பதைவிட...கால்கரியாரையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டதற்கு அவர் மன்னிப்பாராக...
கேள்வி:
பத்திரிக்கை சன்பந்தப்பட்டவர்களில், அருன் ஷூரி பெயரைப் பார்த்தேன்...அவரைப்பற்றி அல்லது அவர் கட்டுரைகளைப்பற்றி ஏதேனும் பதிவு போட்டு இருக்கிறீர்களா? இருந்தால் சுட்டி கொடுக்கவும்..
நன்றி
ஹரிஹரன் அவர்களே, உங்களுக்கு பின்னூட்டங்கள் மின்னஞ்சல் மூலமாகத்தானே வரும்? அதை ஜி மெயிலாக வைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஆர்கைவ்ஸில் சேமிக்கலாம். போகட்டும் இப்போது நான் மறுபடியும் வழிமுறைகளைக் கூறுவேன்.
முதலில், போன தடவை சொல்ல விட்டுப் போனது பர்றிப் பேசுவேன்.
சுரதாவின் பெட்டியை திறந்து கொள்ளவும். அதன் சுட்டி: http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
"இதில் நீங்கள் இரண்டு பெட்டிகளைப் பார்க்கலாம். மேல் பெட்டியில் தங்கிலீஷில் அடித்தால் கீழ்ப் பெட்டியில் தமிழ் எழுத்துருக்களுடன் வரும்."
மேலே உள்ளப் பாராவை தங்கிலீஷில் இப்படி அடிக்கவும்:
"ithil wiinggaL iraNdu pettikaLaip paarkkalaam. meel pettizil thanggiliishil adiththaal kiizppettizil thamiz ezuththurukkaLutan varum."
சில டிப்ஸ்:
S= ஸ்
N= ண்
L= ள்
z= ழ்
aqthu= அஃது
இப்போது இகலப்பைக்கு வருவோம். தமிழ் மணத்தின் இந்தப் பக்கத்தில் தமிழ் எழுது கருவிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்க்க: http://www.thamizmanam.com/resources.php
அதிலிருந்து இகலப்பை 2.0 இறக்கிக் கொண்டு நிறுவவும். அதில் உள்ள செயல்முறைகளை பின்பற்றவும்.
இப்போது போலி டோண்டு என்ற இழிபிறவி பற்றி. அவனை அலட்சியம் செய்து நீங்கள் இருப்பது போல இருக்கவும். எனக்குப் பின்னூட்டம் இட்டவரை திட்டுவதே அவன் வேலையாகிப் போயிற்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி வஜ்ரா ஷங்கர் அவர்களே. உங்கள் கலாய்ப்பு எனக்கு பிடித்திருந்தது. உங்கள் தந்தையின் தலைமுறையை நான் சேர்ந்தவனாக இருந்தாலும், என்னுடன் பேசுவது ஏதோ சமவயது தோழனுடன் பேசுவது போல் இருக்கிறது என்று நீங்கள் குறிப்பிட்டதை மிகப் பெருமைக்குரிய பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன்.
அருண் ஷோரியை பற்றி இதுவரை நான் பதிவு போட்டதில்லை. ஆனால் இனிமேல் போடப் போகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள் ஹரிஹரன் அவர்களே. சுரதா பெட்டியா உபயோகித்தீர்கள்?
அதில் ஹ அடிக்க -ha என்று அடிக்க வேண்டும். ஆகவே ஹரிஹரனுக்கு நீங்கள் அடிக்க வேண்டியது -hari-haran.
இகலப்பையை இறக்கி நிறுவினால் இந்தத் தொல்லை இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நன்றி மனதின் ஓசை அவர்களே. குழந்தை சௌக்கியமா?//
குழந்தை நன்றாக இருக்கிறான் டோண்டு அவர்களே... ஞாபகம் வைத்து கேட்டதற்க்கு நன்றி..:-)
(இந்த பக்கத்தை மறுபடி பார்க்க வில்லை...அதனால்தான் தாமதமான பதில்)
//இப்போது போலி டோண்டு என்ற இழிபிறவி பற்றி. அவனை அலட்சியம் செய்து நீங்கள் இருப்பது போல இருக்கவும். எனக்குப் பின்னூட்டம் இட்டவரை திட்டுவதே அவன் வேலையாகிப் போயிற்று.//
எனக்கும் அவன் பின்னூட்டம் இட்டான்.. அதை நான் சிறிதும் மதிக்க வில்லை... அனைவரும் அவனை லட்சியம் செய்யாமல் அவன் ஏதோ கத்தட்டும் என்று விட்டு விடலாம்...
டோண்டு.. உங்கள் பதிவை மற்றவர்களை விட அவன் தான் தொடர்ந்து படிக்கிறான் என நினைக்கிறேன்..சிரிப்பக இருக்கிறது...
அப்படித்தான் இருக்க வேண்டும் மனதின் ஓசை அவர்களே.
The dogs bark
And the caravan moves on. (கூறியது கலீல் கிப்ரான்)
அன்புடன்,
டோண்டு ராகவன்
இவ்வளவுபேருக்கு காப்பி போட்டு விட்டு பப்ளிகேஷனுக்கு வேண்டாம் என்று கேட்பது எனக்கு சரியாகப் படவில்லை. ஆகவே உங்கள் வேண்டுகோளை நான் ஏற்கவில்லை.
நிற்க, இதற்கான பதிலை நான் உங்கள் பதிவிலும் கூறியுள்ளேன். அதன் நகலை என்னுடைய "முரட்டு வைத்தியம் - 4ல் பின்னூட்டமாக இட்டுள்ளேன்.
Sorry, your reply has a lot of holes nor your persisting with the other option showச் any goodwill on your part.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment