1/22/2007

துக்ளக் 37-வது ஆண்டுவிழா மீட்டிங் - 2

இதன் முந்தையப் பதிவு இங்கே.

எனக்கு நினைவிருந்த வரை துக்ளக் ஆண்டுவிழா கூட்டங்களில் அவர் மட்டுமே பேசுவார். இல்லை, குமரி அனந்தன் சமீபத்தில் 70/71-ல் சோ மீட்டிங்கில் பேசியிருக்கிறார் என்று ஓகை அவர்கள் கூறியிருக்கிறார். நான் தில்லியில் இருந்த 20 வருடங்களில் இம்மாதிரி ஏதாவது நடந்ததா என்பதை யாராவது கூறினால் நலமாக இருக்கும்.

சோ பேசிய விஷயங்கள் என்னால் முடிந்த வரை கொடுத்தேன். இப்போது துக்ளக்கில் முதல் பகுதி வந்துள்ளது. ஏறக்குறைய நான் கூறியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. மகிழ்ச்சி. இப்போது அதவானிஜி அவர்கள் பேசியதை எழுதுவேன்.

அத்வானி அவர்கள் ஒருவித பிரமிப்புடன் அமர்ந்திருந்தார். தமிழ் புரியாவிட்டாலும் மக்கள் உணர்ச்சிகள் அவருக்கு புரிந்தன. என்ன இருந்தாலும் மக்கள் தலைவர் அல்லவா அவர். பார்த்தாலே மரியாதை உணர்வை பார்ப்பவரிடம் உருவாக்கும் ராஜ கம்பீரம் அவருடையது. என்ன இருந்தாலும் பாஜக ஆதரவாளன் டோண்டு ராகவன் அவ்வாறுதானே கூறுவான் என்பவர்களுக்கு நான் தரும் பதில் ஆம் என்பதே.

மேலும், குருமூர்த்தி வேறு அவர் அருகில் அமர்ந்து என்னுடைய வேலையை திறமையுடன் செய்து கொண்டிருந்தாரே. ஆகவே அவர் சோ கூறியதையும் புரிந்து கொள்ள முடிந்தது.

அத்வானிஜி பேச எழுந்தார். அவையில் நிசப்தம், அவர் என்ன கூறப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்புடன். அதற்கு முன்னால் ஒன்று கூறி விடுகிறேன். சோ அவர்கள் பேசி முடிந்ததுமே அரங்குக்கு வெளியில் சிலர் செல்ல ஆரம்பித்து விட்டிருந்தனர். அவர்களுக்கு என்ன வேலையோ என்னவோ.

தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களுடன் அத்வானிஜி தன் கணீர் குரலில் பேச ஆரம்பித்தார். சோ அவர்கள் அளவுக்கு தன்னிடம் கம்யூனிகேஷன் திறமை இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டார். சோ அவர்களை தனக்கு பல ஆண்டுகளாக பல பரிமாணங்களில் தெரியும் என்றும் ஆனால் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது இப்போதுதான் தனக்குத் தெரியவந்து அதிசயப்பட்டதாகவும் கூறினார்.

இந்த மகத்தான கூட்டத்துக்கு தான் அழைக்கப்பட்டதற்கும், பேச வாய்ப்பு பெற்றது பற்றியும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இந்தியாவில் இவ்வளவு பத்திரிகைகள் உள்ளன, ஆனால் துக்ளக் ரேஞ்சுக்கு வருடா வருடம் மீட்டிங் நடத்தி, வாசகர்களை பகிரங்கமாகக் கேள்விகள் கேட்க வைத்து அதற்கு பதிலையும் உடனுக்குடன், சுவையாக கூறும் இம்மாதிரியான சூப்பர் மீட்டிங்குகளை எந்த பத்திரிகையும் நடத்தவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். அரங்கமே கைத்தட்டலால் நிரம்பியது. தானும் பத்திரிகையாளர் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். மக்கள் கூட்டம் அரங்கத்தில் ரொம்பி வழிந்து, வெளியேயும் ஸ்க்ரீன்கள் போட்டு அசத்தியதையும் அவர் பிரமிப்புடன் குறிப்பிட்டார்.

அறிவாளிகளின் ஒரு இயக்கத்தில் சோ அவர்கள் தேச ஒற்றுமை, தேசப்பற்று மற்றும் சிறந்த கோட்பாடுகளின் அடிப்படையில் சோ அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.

பொங்கல் பற்றி பேசுகையில் இது விவசாயிகள் சம்பந்தப்பட்டதால் நாடுமுழுதும் வெவ்வேறு ரூபங்களில் நடைபெறுவதாகக் கூறினார். பிஹு, மகரசங்கராந்தி, லோடி ஆகிய பெயர்கள் இப்பண்டிகைக்கு உண்டு என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். மகிழ்ச்சி கலந்த பக்தியுடன் இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டார் (gaiety with piety). குஜராத்தில் இது காற்றாடி விடும் நிகழ்ச்சியாகவும் உள்ளது என்பதையும் கூறினார்.

பிறகு குஜராத் பற்றி பேசுகையில் சோ அவர்கள் மோதி அரசை பற்றி கூறியதை அவரும் உறுதி செய்தார். ஒவ்வொரு கிராமத்தில் தடங்கலில்லாத மின்சாரம் தருவது குஜராத் மாநிலம் மட்டுமே என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார் (Jyotirgram villages). குஜராத் அரசை மட்டம்தட்ட மத்திய அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருவதையும் அவர் குறிப்பிட்டார். அன்னிய செலாவணி மூலதனம் குஜராத்தில்தான் அதிகம் ஏனெனில் அங்கு கட்டுமான வசதிகள் மிக அருமையான முறையில் பராமரிக்கப் படுகின்றன என்றும் அவர் கூறினார். மனது இருந்தால் அரசு என்னென்ன செய்ய இயலும் என்பதை குஜராத் அரசு காட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

சோ அவர்கள் பேசியதில் ஒரு விஷயம் என் பதிவில் குறிப்பிடாமல் போயிற்று. அதாவது அமெரிக்காவுடன் நாம் இப்போது கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தம் காலத்தின் கட்டாயம் என்றும், பிஜேபி ஆட்சியில் இருந்திருந்தாலும் அதில் கையெழுத்தீட்டிருக்குமென்று சோ அவர்கள் கூறியிருந்தார். இப்போது பிஜேபி அதை குறைகூறுவது ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில்தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதை திட்டவட்டமாக மறுத்தார் அத்வானிஜி. NPT ஒப்பந்தத்தில் தேவையான பாதுகாப்பு இன்றி கையெழுத்திட பிஜேபி மறுத்ததை அவர் சுட்டிக் காட்டினார். கையெழுத்து போட்டிருந்தால் போக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்த முடியாது போயிருந்திருக்கும் என்றும் அவர் கூறினார். போக்ரான் சோதனையை அக்காலக் கட்டத்தில் எதிர்த்தவர் மன்மோகன் சிங்க் என்பதையும் அத்வானிஜி சுட்டிக் காட்டினார். அதே போல தன் கட்சி ஆட்சியில் லாஹூர் பஸ் பயணம் தோல்வியடைந்ததையும் அவர் ஒப்பு கொண்டார்.

இந்த சமயம் எனது மொபைல் "அதோ அந்த பறவை போல வாழவேண்டும்" பாட்டை ஒலிக்க ஆரம்பித்தது. எடுத்துப் பார்த்தால் அயர்லாந்து வாடிக்கையாளர் பேசினார். ஏதோ கோப்பை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளதாகவும், ஞாயிற்றுக் கிழமை என்பதை மறந்து உடனடியாக வந்து செய்து தர வேண்டும் என்று வேண்டுகோள்விட 1000க்கும் மேல் ஓடிக்கொண்டிருக்கும் எனது கார்களில் ஒன்றை பிடித்து வீடு செல்ல வேண்டியதாயிற்று (வாடகைக் கார்கள் எல்லாம் என் கார்கள் அல்லவா)?

ஆனால், இந்த களேபரத்தின் நடுவிலும் அரங்குக்கு வெளியில் அலயன்ஸ் பதிப்பகத்தார் போட்டிருந்த ஸ்டாலில் சோ புத்தகம் ஒன்றை வாங்க மறக்கவில்லை. (அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் என்னும் அப்புத்தகத்தை வைத்து சோ பற்றிய பதிவுகள் இன்னும் சில போடப் போவதையும் இங்கே கூறிவிடுகிறேன்)

அத்வானிஜியின் பேச்சு முழு விவரம் துக்ளக்கில் வரும். அதுவரை பொறுக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

21 comments:

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் நெப்போலியன் அவர்களே.

முகம்மது அலி ஜின்னா என்றதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. அவசர நிலை சமயத்தில் ஜின்னா பிறந்த நாளன்று சோ அவர்கள் துக்ளக்கில் அவரை சிலாகித்து எழுதியதை சென்சார் வெட்டி விட்டனர் என்று அவர் சமீபத்தில் 1977-ல் சீரணி அரங்கில் நடந்த மீட்டிங்கில் கூறினார்.

இன்னொரு விஷயம், அத்வானி அவர்கள் கராச்சிக்காரர். பாகிஸ்தான் உருவாகி சில நாட்கள் கழித்துத்தான் அவர் இந்தியாவுக்கு குடி பெயர்ந்தார். கராச்சியில் இந்துக்களை இசுலாமியர் கொல்ல முயற்சித்தபோது ஜின்னா அவர்கள் நேரடியாகத் தலையிட்டு ஆபத்தில் இருந்த இந்துக்களை காப்பாற்றியவர். தன் உயிரையே அவர் பணயம் வைத்து அக்காரியத்தை செய்தார் என்பது இந்தியாவில் பலருக்கு தெரிந்திராது. இதை நேரில் பார்த்தவர்களில் அத்வானிஜியும் ஒருவர்.

இன்னொரு விஷயம், ஜின்னா அவர்கள் பாகிஸ்தானை மத சார்பற்ற தேசமாகத்தான் வைக்க எண்ணினார். அவர் இறந்தது இந்த முயற்சிகளுக்கு ஒரு முற்று புள்ளி வைத்தது. இந்தியாவில் காந்திஜி கூறியதை ஒதுக்கியது போல பாகிஸ்தானில் ஜின்னா கூறியவை புறக்கணிக்கப்பட்டன. வெறுமனே பாகிஸ்தானிய ரூபாய் நோட்டுகள், அரசு அலுவகங்களில், இன்னும் வேறு இடங்களில் போட்டோவாக மட்டும் அவர் உறைந்து போனார், inggu இந்தியாவில் காந்திஜிக்கு நடந்தது போல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"ஜின்னாவின் குடும்பம் பாம்பே டையிங் தொழிற்சாலைகளை நடத்துகிறார்கள்"

அப்படியா? இது எனக்கு செய்தி. தந்ததற்கு நன்றி.

இன்னொரு விஷயம் கூறுவேன். புட்டோ அவர்கள் 1956 வரை பம்பாயில்தான் இருந்தார். அதே போல பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் ஆசிஃப் இக்பால் இந்திய ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார். பிறகுதான் பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தார்.

ஜின்னா படம் வந்த போது நான் தில்லியில் இருந்தேன். அப்படத்தைப் பார்க்க ஆசைபட்டேன். பாகிஸ்தான் ஹைகமிஷனுக்கு போன் செய்து கலாசார தூதுவருடன் பேசினேன். அவரும் நன்றாகப் பேசினார். நான் சென்னைவாசி என்றதும் வணக்கம் என தமிழில் கூறினார். அந்த ஒரு வார்த்தைதான் அவருக்கு தமிழில் தெரியும் என்றும் கூறினார். ஜின்னா படம் தில்லியில் அவர்கள் ஹைகமிஷனில் திரையிட்டால் கண்டிப்பாக எனக்கு அழைப்பு அனுப்புவதாகக் கூறினார்.

சிறிது காலத்திலேயே சென்னைக்கு வந்து விட்டேன், ஆகவே அப்படத்தை பார்க்க இயலவில்லை.

எனக்கு தெரிந்து ஒரே ஒரு பாகிஸ்தானியரும் ஒரே ஒரு இந்தியரும்தான் பாரத ரத்னா மற்றும் நிஷான்-ஏ/பாகிஸ்தான் ஆகிய அந்தந்த நாட்டின் உச்ச விருதுகளை பெற்றனர்.

அவர்கள் யார் யார் என்று யாராவது கூற இயலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அந்த இருவரில் ஒவ்வொருவரும் இந்திய விருதையும் பெற்றனர், பாகிஸ்தானிய விருதையும் பெற்றனர். கான் அப்துல் கஃபார்கான் ஒரு சரியான விடை. ஆனால் இந்தியர்? யோசித்து கூறுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

திலீப் குமார்?

பாலா

dondu(#11168674346665545885) said...

அவர் தமிழர் அல்ல என்பது ஒரு க்ளூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"திலீப் குமார்?" இல்லை. :(((

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மொரார்ஜி தேசாய் சரியான விடை நெப்போலியன் அவர்களே. பாராட்டுக்கள்.

அது அவருக்கு அளிக்கப்பட்ட போது ஜியா-உல்-ஹக் பாகிஸ்தானிய அதிபர். அவர் இறந்ததும் பிரதமராக வந்தவர் பேநஜீர் புட்டோ. அவர் இந்த விருதை திரும்பத் தருமாறு மொரார்ஜியை கேட்க, அந்த பொல்லாத கிழவர் தர மாட்டேன் என்ற நிலை எடுத்தார்.

என்ன நடந்தது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"பாரத ரத்னா விருது பெற்றவர்களில் 4 பேர் இந்தியர்கள் கிடையாது."
கான் அப்துல் கஃபார்கானை பற்றி கூறியாகி விட்டது. நீங்கள் அன்னை தெரசாவை அதில் இன்க்ளூட் செய்திருந்தால் அது தவறு, ஏனெனில் அவர் இந்திய குடியுரிமை எடுத்து பிரஜையானவர்.

மற்றவர்கள் யார்?

There has been one award to a naturalized Indian citizen — Agnes Gonxha Bojaxhiu, better known as Mother Teresa (1980); and two to non-Indians — Khan Abdul Ghaffar Khan (1987) and Nelson Mandela (1990).

சுபாஷ் சந்திர போஸ், ஏனென்றால் அவர் இறக்கும் போது இந்தியா என்னும் பாரத் இன்னும் உருவாகியிருக்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி நெபோலியன். பார்க்க http://www.pakistanlink.com/Letters/2004/April04/16/02.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhu Ramanujam said...

//வாடகைக் கார்கள் எல்லாம் என் கார்கள் அல்லவா)?...//

நல்ல நகைச்சுவை. ஏனோ தெரியவில்லை, முதல் பகுதியில் இருந்த விருவிருப்பு இதில் மிஸ்ஸிங்!

dondu(#11168674346665545885) said...

என்ன செய்வது மதுசூதனன் அவர்களே. முதலில் பேசியது சோ, கேலியும் கிண்டலுமாக. ஆனால் இப்பதிவில் அத்வானியின் பேச்சுத்தானே, அவரோ படு சீரியஸ் பேர்வழி. நான் ஏற்கனவே கூறியபடி அரங்கத்துக்கு வெளியில் இருந்த பலர் சோ பேசி முடிந்ததுமே நடையைக் கட்டி விட்டனர். சிறிது நேரம் கழித்து நானும் செல்ல வேண்டியதாயிற்று.

இப்பதிவில் எனக்கும் திருப்தியில்லைதான்.

அன்புடன்,டோண்டு ராகவன்

K.R.அதியமான் said...

To : Mr.Rajinder Puri,

Dear Sir,

I belive in karma and dharma. Advani has been punished partly for his past sins in using the Ram temple fanatics of VHP, etc to further his political career
since 1980s. VHP and Co are alteast sincere and consistent in their fanatisism. They are genuine
communalists and facisits, who do not belive in democracy. but they are honest and forthright. never
double dealing nor political animals. But Advani is a crafty and cynical politician, and a
'pseudo-communalist'. VHP is right in being disillusioned with him, who carefully used thier agenda (Ram temple) to whip up a populist mass base and votes. And due to
political expediancy, he abandoned Ram temple later.

Advani, whose ratha yatra (which directly resulted in the murder of 1000s of inncoents in 1990) would have become PM, but for the Jain hawala case. (thanks to your PIL) ; and now he stands discredited and powerless within his own group.

Lord Rama has done justice. And Advani will never be PM in India.

Om tat Sat.

Regards
Athiyaman
Chennai

dondu(#11168674346665545885) said...

Thanks for the visit Adhiyaman. How come your letter to the columnist Rajinder Puri has found place here?

Anyhow, your opinions are quite interesting and they come from the heart.

Sober voices like yours are the need of the hour in the present disturbed state of India that is Bharat.

Have a nice day.

Regards,
Dondu N.Raghavan

Anonymous said...

டோண்டு சார்! ஜெ.ஜெ விடயத்தில் மட்டும் கண்மூடித்தனமான ஆதரவை பரிசுத்த ஆத்மா சோ வழங்குவதன் நோக்கம் என்ன?

pulliraja

dondu(#11168674346665545885) said...

//ஜெ.ஜெ விடயத்தில் மட்டும் கண்மூடித்தனமான ஆதரவை பரிசுத்த ஆத்மா சோ வழங்குவதன் நோக்கம் என்ன?//
கண்மூடித்தனமான ஆதரவு எங்கே தந்தார்? அவரைப் பொருத்த வரைக்கும் தீவிரவாதிகளை அதிலும் முக்கியமாகப் புலிகளை ஜெ எதிர்ப்பது போல முக கண்டிப்பாக எதிர்க்கவில்லை. இப்போதே பார்த்தீர்கள்தானே. தமிழக மீனவர்களை புலிகள்தான் கொன்றனர் என்பதை வேண்டாவெறுப்பாகத்தான் கருணாநிதி ஒத்து கொண்டுள்ளார்.

இதைத் தவிர்த்து ஜெக்கும் கருணாநிதிக்கும் இடையில் வேறுபாடுகள் ரொம்ப இல்லை என்றுதான் கூற வேண்டும். அதே சோ அவர்கள் 1996-ல் ஜெக்கு எதிரான நிலைதானே எடுத்தார்? நான் என்ன நினைக்கிறேன் என்றால் அவருக்கு தமிழகம் தீவிரவாதிகள் பிடியில் மாட்டக் கூடாது என்பதுதான். அவர்களை சமாளிக்க ஜே ஹ்டான் சரி என்று அவர் நினைக்கிறார். அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

K.R.அதியமான் said...

JJ is far better in many aspects,
esp the managing of economy and
tight fisted control of expenditure. She repaired the damage to the state's finances and
is far sighted in this matter.
MuKa and DMK are cheap populists
and will bankrupt the state thru
unfair freebies. and the ethics of
farmers are eroding more due to the
arbitary canellations of co-op bank loans across the board. i knew of rich farmers who made a fortune of 40 lacs or more. and the banks will soon be sick and bankrupt..

i am from a DMK family, but i voted
ADMK in the last election.

Cho is right is many issues. but he
is not as impartial in condemning
VHP & Co when they incite violence or break the laws. he uses the terms : "it is unfortunate that VHP says or does this.. they should change themselves.."
he doesn't use the same strong words he uses for Islamic or tamil groups or LTTE.

and his justification of Gujarat genocide was unacceptable. One of his readers had recently written an
excellent letter about this in Thuglak.

dondu(#11168674346665545885) said...

நன்றி அதியமான் அவர்களே. ஜெயலலிதா நீங்கள் சொல்வது போல பல விஷயங்களில் கருணாநிதியை விட மேல்தான். மழை நீர் சேமிப்பு திட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். கருணாநிதியால் ஜெ அளவுக்கு வெற்றி பெற்றிருக்க முடியாது.

மக்களுக்கு ஜெ சாய்ஸே தரவில்லை. சேமிப்பு ஏற்பாட்டை செய்ய மறுப்பவர்களுக்கு தண்ணீர் இணைப்பு கிடையாது என்று முதலில் கூறினார். அப்படியானால் பலருக்கு உள்ளபடியே நீர் இணைப்பு இல்லை என்பதை அவருக்கு எடுத்து காட்டியவுடன் மின் இணைப்பையும் துண்டிக்கப் போவதாகக் கூற, அவனவன் கழுதை மாதிரி அவசர அவசரமாக மழை நீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தினான். இப்போது கோடை காலத்திலும் நங்கநல்லூரில் நிலத்தடி நீரின் மட்டம் நல்ல நிலைமிலேயே உள்ளது. அதற்கு இந்தத் திட்டமே காரணம்.

அதே போல அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த விவகாரமும். பொது மக்கள் ஜெயின் நடவடிக்கைகளுக்கு மிகுந்த ஆதரவு அளித்தனர். இதில் ஒரே சங்கடம் என்னவென்றால் ஜெக்கு எப்போது நிறுத்த வேண்டும் எனத் தெரியவில்லை. சோ சொன்னது போல அந்த நேரத்தில் சட்டென பொது மன்னிப்பை அளித்திருந்தால் அவரது நிலை சீர்ப்பட்டே இருந்திருக்கும்.

நீங்கள் கூறியபடி பொருளாதார விஷயத்தில் அவர் கருணாநிதியைப் போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் செயல்படவில்லை என்பது உண்மையே.

ஆனால் அதே சமயம் ஜெ அவர்கள் காட்சிக்கெளியவன் என்று வள்ளுவர் கூறியது போல இருக்கத் தெரியவில்லை. அவரது மந்திரிகளே அவரைப் பார்க்க இயலவில்லை.

கூட்டணிக் கட்சித் தலைவர்களை மரியாதையுடன் நடத்தத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் நல்ல உதாரணமாக இருந்தார்.

//he doesn't use the same strong words he uses for Islamic or tamil groups or LTTE and his justification of Gujarat genocide was unacceptable. One of his readers had recently written an
excellent letter about this in Thuglak.//

சோ அவர்களது அரசியல் சார்பு தெரிந்ததே. அதே சமயம் தனக்கு பிடித்தவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களயும்தான் கண்டிக்கிறார். குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புக்கு விசாரணை என்ற பேரில் ரயில்வே அமைச்சகம் செய்த கூத்தை விடவா?

அங்கு நடந்த மனிதக் கொலைகளை அவர் நியாயப்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை.

மேலும், ஊழலற்ற அரசை மோதி அளிப்பதை பத்திரிகைகள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து மறைக்கின்றனவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

K.R.அதியமான் said...

Dondu Sir,

some annoymous cowardly pervert had put up a warning comment in my blog (athiyaman.blogspot.com) using
filthy language about my family,
warning me against posting any
comment on your blog.

I challange that coward to show his
face and come forward for a open
debate about any issue.

I stand by my comments about Advani and other "Hinduthuva" brigade. If needed i declare that
i am from a DK back ground and
admire EVR Periyar very much for
his contribution.

Anbudan
K.R.Athiyaman

K.R.அதியமான் said...

I find not much difference between leaders like Dr.Krishnasamy, Thol.thirumavalan, John Pandiyan,
Dr.Ramdoss and Advani & Co. While
Advani and his collegues use the Hindu religious sentiments to whip up communal frenzy to corner the "Hindu" vote bank, the other group uses the caste plank to do the same. Caste is a intergral part of Hindu religion and these
OBC and SC politicians have follwed the way shown by BJP since
1990 ! the scenerio in UP has changed completely since 1990.
Both methods are unconstitutional and divisive. And Congress and Muslim league are no better. While
Congress plays the communal and caste card coverly, Muslim League
does it overtly.

And Bal Thackerey had given an excellent definition for the word
Hinduthva (when there was too much
debate about its real meaning) :
"Hindutva means all Hindus should
always vote only for BJP & Co."

K.R.Athiyaman

dondu(#11168674346665545885) said...

//some annoymous cowardly pervert had put up a warning comment in my blog (athiyaman.blogspot.com) using
filthy language about my family,
warning me against posting any
comment on your blog.
I challange that coward to show his
face and come forward for a open
debate about any issue.//
இதற்காகவெல்லாம் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன். இதற்கும் மேல் அம்மாதிரி மின்னஞ்சல்கள் வந்தால் ஓசைப்படாமல் அவற்றை அழித்து விட்டு உங்கள் வேறுவேலைகளைப் பார்க்கவும். அதைப் பற்றி பேசாமல் அலட்சியம் செய்வதே போலி டோண்டுவுக்கு சரியான பதிலாகும்.

இன்னொரு காரியமும் செய்யுங்கள். உங்கள் ப்ரொஃபைலில் ஏதாவது படம் வருமாறு செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அதர் ஆப்ஷன் வழியாக உங்கள் பெயரில் தவறான பின்னூட்டங்கள் வந்தால் அவற்றை அடையாளம் கண்டு நீக்க முடியும்.

தமிழில் எழுத ஒரு சுலப வழி இதோ. இந்தச் சுட்டியை உபயோகிக்கவும்.
http://sg.tamil.sg/beta/main.php

தமிழை ஆங்கில எழுத்துக்களில் டைப் அடிக்கலாம். உதாரணத்துக்கு ammaa --> என்று தட்டச்சு செய்தால் அம்மா என்று வரும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

K.R.அதியமான் said...

To
The Editor,
Thuglak
Chennai

Sir,

I am a long time reader of Thuglak. I admire your courage and
forthrightness.

You have critisised the film "Bharathi" . I have sent a letter(in Tamil) about it. No film will get pass mark from you. Films like Karuthamma, Mahanadhi, Nmmavar, HeyRam were all rejected
by you as mediocre. Constructive criticism is not your style;
only destructive criticisim.

First of all you have no MORAL RIGHT to crititsise any film, as
you had acted in many fifth rate masala films in the past. It is like a butcher preaching ahimsa.

Regarding feminism and women in general you are a known chauvinist and a cynic. I have only one point to make. I perceive
that in your whole life (with a upper middle class urban broughtup
among Madras brahmins ) you were not fortunate enough to meet or know any innocent, unassuming low caste village women. It is very difficult for you to understand the ethos and the depth of culture and love among the rural, uneducated and innocent village
folks. All you know is about arrogant,narrow minded and domineering cynical women of upper middle class Madras and of course the women in filmworld and politics.I sugest, you discuss this view point with people like Bharathiraja, Writer Sujatha and Prabanjan. Your views are nothing but sweeping generalisations.

Regarding Hindu philosophy, I have herewith enclosed a copy of my
letter to The Astrological Magazine, which applies to your view point too.
Theoretically Hindu religion is great ; but we are interested in pracatical aspects.Equality of all men is alien to practical Hinduism.

RSS whose idealogy was a catalyst to Mahatma Gandhi 's assasination is supported by you.Their ideology is illogical and anachronist.I hope you
have read the book "WE" by its founder. There are truly honest and selfless members in RSS. I have many friends there. But they are all self righteouus and wallow in hatred. Though they do not espouse violence directly, their
preachings induce violence indirectly. Do you think that those who banned RSS in the past were idiots and not patriotic?

I support liberalisation and privatisation.Please arrange for a regualar coloumn explaining the various aspects and the nedd for liberalisation.

Thanks & Regards,
K.R.Athiyaman

----------------------------------------------------------------------------------------------------
encl :

To
The Editor,
The Astrlogical Magazine,
Bangalore


Dear Sir / Madam,

Time and again you have upheld the lofty character and the superiority of the
vedas. I am a Hindu and a beliver. I have a smattering knowledge about our religion -
mostly through the English translations.I am a Sudra, one who was declared unfit to
have the sacred knowledge and to learn sanskrit. I have a few questions ; I don't insist
on your reply. But please try to honestly answer these questions to yourself. Of course
this needs a bit of courage.


1. Do you believe in the equality of humans - not as some theoretical ideal as prescribed
in Manisha Panchaka but as a everyday fact of life - the absolute equality of humans
before God, that everyone is entitled to pray, to reach God, to read the sacred literature,
irrespective of their social status ?


2. Do you believe that salvation is possible to all - Hindus, Muslims, Christians & Jews ;
Brahmana, Vaishya, Kshatrya, Sudra and Panchama ? That birth and social status
doesn't disqualify anyone from reaching the supreme knowledge ?

3. What are the steps that you have taken to propagate the sacred knowledge found in the
Vedas ? Any Christian who can read, can read the Bible in his own mother tongue.Have
you ever tried to translate noble portions of Vedas into Kannada, to begin with ?

4. Do you believe that the sacredness of the Vedas would be lost in the translation ? The
medieval Church believed that only the Latin Bible was sacred - even though the Bible was
written originally in Hebrew - and it should not be translated. If you believe so, what are
the steps you have taken to spread Sanskrit among us the Indians so that we can learn
the Vedas as they are ?

5. Can you deny that for centuries this Sanskrit was not taught to Sudras and Panchamas,
even though foreigners like Alberuni (11th Century), William Jones (18th Century) and
Max Mueller were allowed to learn it ? Max Mueller was able to learn the Vedas, but not
the Kshatriyas, Vaisyas, Sudras or the Panchamas. Why ? Does it mean that Panchamas
and Sudras are inferior to Milechas ?

We were prevented from learning Sanskrit and the Vedas, and now you ask us to
appreciate their wisdom.This is like asking somebody to appreciate a painting he had
never seen, not even in photo, just because some scholar thinks it is the greatest painting
in the world.

The white races conquered the Americas,captured most of Asia, sold the Africans into
slavery,exploited them ruthlessly,exterminated the Red Indians and the Australian natives,
and impoverished India, China and numerous other countries.But even they acknowledged,
at least in theory,that all men are created equal.(Please remember Purusha Sukta).

6. If a Vedic dictum runs contrary to the spirit of our times, which shall prevail ?

7. It had been held that while the Srutis are eternal, Smritis are subject to the effects of
time. Hence, the smritis must be revised to suit the times. What steps have been taken
in this direction ?

8. What shall be the basis of our society in future - Chaturvarna -reformed and refined, or
equality as assured by our constitution ? Please do not obfuscate.

The Celebrated Manu had provided a very nice escape route from the inconvenient questions
of ignorant busybodies like me. He had ruled that a Sudra (me ! ) who presumes to teach a
Brahmin (need not say who ! ) should be "shown his place". Unfortunately these Whites
had overthrown the Sacred Order of our Society and started off thousands of Sudras like me.

Under the old system (the Sacred Varna) I 'd be eking out a miserable living as an
illiterate artisan and you would be content to call it my karma, and would not educate me.
The modern education had enabled me to stand up like a man, to earn a living suitable to my
intellectual capacity, not to feel inferior or superior to anybody and to seek the truth for myself
instead of depending on a priestly class.Now, which system, do you think will get my undying
loyalty and vociferous support ? Why ?

The Western society is plagued by many social evils - juvenile delinquency, single parents,
violence, high divorce rates and others. But let us not presume that we can show them the way -
with our untouchability, dowry deaths, caste violence, rigid caste system, and people who still
think all men are not equal and women are certainly inferior.

The West has nothing to teach us in religion and philosophy, but we have everything to learn
about liberty, equality and that doctrine totally alien to us, fraternity. Please do not quote -
" Vasudeva Kudumbakam". The Sudras and Panchamas were not family members of that
Kudumbakam, but helpless servants.

I am yet to see one Hindu religious head who upholds the equality of humans,says that the
smrithis must be revised, accepts that some excesses had happened under Chaturvarna, that
untouchablity is not suitable to our times and proclaims that everyone is entitled to study the
Vedas. When we are considered not even humans,why should someone care for our support ?
Only some miracle had prevented a wholesale exodus of Hindu masses to Islam and Christianity.
(May be the sudras felt that thir "Superiors" will follow them there also and continue to be the
"Superiors" ! This what happened to Budhism and led to its downfall). But that does not mean
that every Hindu is swallowing all the half baked theories of their "Superiors".

Unless and until the guardians of the old order really regret the mistakes of the past,accept that
equality shall be the basis of our future society and teach the sacred knowledge to all deserving
people, more and more Indians will repudiate the Vedas, on which the old order claimed it was
based. Let charity begin at home. May He lead us all to wisdom and enlightenment.

Om Tat Sat.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது