சமீபத்தில் 1972-ல் ஜூன் மாதம் ஒரு திங்கட்கிழமையன்று மத்தியப் பொதுப்பணி துறை அலுவலகத்திற்கு வரும் போது பகல் 1 மணிக்கு மேல் ஆகிவிட்டது. வழக்கமாக டோண்டு ராகவன் லேட்டாகத்தான் அலுவலகம் செல்வான் என்பது உண்மையானாலும், அன்றைக்கு அது என்னுடைய குற்றம் இல்லை. ஏனெனில் ஜூனியர் இஞ்சினியர்கள் தேறவேண்டிய அக்கௌண்டன்சி பரீட்சை எழுதி விட்டுத்தான் வந்தேன். அது பாஸ் செய்யவில்லையானால் முதல் இன்க்ரிமெண்டுக்கு பிறகு அடுத்து வரும் இன்க்ரிமெண்டுகள் நிறுத்தப்படும். ஆகவே அதை பாஸ் செய்ய வேண்டியது மிக முக்கியம். அன்று நன்றாகவே பரீட்சை எழுதியிருந்தேன். தேர்ச்சியும் பெற்றேன் ஆனால் அது பின்னால் தெரிய வந்தது, இப்பதிவுக்கு முக்கியம் இல்லை அது.
உள்ளே வந்ததுமே எனக்காக ஒரு தந்தி காத்திருந்தது என்று பியூன் கூறி அதை என் டேபிள் மேல் வைத்து சென்றார். எனக்கு அடிவயிறு கலங்கி விட்டது. என் தந்தை தனியாக நங்கநல்லூரில் இருந்தார். அவரை பார்த்து கொள்ளக்கூட யாரும் இல்லை. எங்களது மற்ற உறவினர்கள் தி.நகரில் இருந்தனர். ஆகவே தந்தி என்றதும் பயம் வந்தது. மனதை திடப்படுத்திக் கொண்டு பிரித்தேன். அதன் வாசகம் இவ்வாறு இருந்தது "Congratulations, you have won the third prize in the Neko soap contest, a TV set. Regards, Digikar, Parke Davis".
எனக்கு நிஜமாகவே திகைப்பு. சில மாதங்களுக்கு முன்னால் நீக்கோ சோப் போட்டி ஒன்றில் பங்கெடுத்திருந்ததை அச்சமயம் நினைவுக்கு கொண்டுவர சில நிமிடங்கள் பிடித்தன. தந்தைக்கு ஒன்றும் இல்லை என்ற நிம்மதிக்கு முன்னால் இந்த சந்தோஷம் பெரிதாகத் தெரியவில்லை. பிறகு நண்பர்களுக்கு தெரியவர எல்லோரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அந்த ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதிதான் பம்பாயில் டெலிவிஷன் ஒளிபரப்பு ஆரம்பமாக இருந்தன. தொலைக்காட்சி நிலையத்துக்கான வேலைகளை மத்தியப் பொதுப்பணித் துறைதான் கவனித்து கொண்டிருந்தது.
எனக்கு பரிசாக அறிவிக்கப்பட்ட டி.வி. யின் பெயர் ஸ்டாண்டர்ட் டி.வி. ஒரே ஒரு சேனல் மட்டுமே. எது எப்படியானாலும் நான் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தேன். டி.வி. வேண்டாம் என்று தீர்மானித்தேன். எனக்கென்னவோ அது வந்து விட்டால் அதற்கு அடிமையாகிவிடுவோமோ என்ற பயம். என் தந்தைக்கு முதலில் தந்தி அனுப்பினேன் பரிசு கிடைத்ததை பற்றி கூற. பிறகு விவரமான கடிதம் எழுதினேன். டி.வி யை நான் ஏன் வாங்க விரும்பவில்லை என அதில் விலாவாரியாக குறிப்பிட்டிருந்தேன். என்ன ஆச்சரியம் நான் என் தந்தைக்கு கடிதத்தை போஸ்ட் செய்த கிட்டத்தட்ட அதே நேரத்தில் அவரும் எனக்கு கடிதம் போட்டிருக்கிறார். இரண்டு கடிதங்களும் கிராஸ் ஆகியிருந்தன. அவர் கடிதத்தில் நான் சொன்னதையே அவரும் குறிப்பிட்டிருந்தார். டி. வி. பரிசை வாங்க வேண்டாம் என அவரும் அறிவுரை கூறியிருந்தார். ஆக, இந்த விஷயத்தில் எங்கள் கருத்துக்கள் 100% ஒத்து போயின.
என் நண்பர்கள் என்னை இதற்காக சாடினர். என் பெரியப்பா பெண் செம்பூரில் வசித்து வந்தார். அவரும் டி.வி.யை வாங்கி தனக்கு விற்குமாறு கூறினார். நண்பர்களும் அவ்வாறே கூறினர். நான் பார்க் டேவிசுடன் தொடர்பு கொண்டு டி.வி.க்கு பதிலாக அதன் விலையை கொடுத்து விடுமாறு கூறினேன். ஆனால் கம்பெனி அதை ஒத்து கொள்ளவில்லை. வேறு வழியின்றி அதை ஏற்க வேண்டியதாயிற்று.
ஒரு மாலை டி.வி. வந்தது. பார்க் டேவிஸின் மேனேஜர் டிஜிகரும் வந்திருந்தார். டி.வி.யை அறையில் வைத்துவிட்டு ஒரு ஃபோட்டோ எடுத்து கொண்டோம். டி.வி.க்கு முன்னால் நானும் டிஜிகரும் போஸ் கொடுத்தோம். என் ரூம் மேட் (நாங்கள் அச்சமயம் பத்து பேர் ஒரு அபார்ட்மெண்டில் பேயிங் கெஸ்ட் முறையில் தங்கியிருந்தோம்) வீரராகவன் ஒரு யோசனை சொன்னான். அதாவது டி.வி.யின் மேல் சில நீக்கோ சோப்புகளை பேக்ரௌண்டாக அடுக்கலாம் என்றான். அது நல்ல ஐடியா என ஒத்து கொண்ட டிஜிகர் என்னிடம் "நீங்கள் நிஜமாகவே இந்த சோப் உபயோகிப்பவரா" என்று சொல்லி வைத்தாற்போல கேட்டார். நண்பன் ஜயக்குமார் உடனேயே கூறினான், "இவனைத் தவிர நாங்கள் ஒன்பது பேரும் அதைத்தான் உபயோகிக்கிறோம்" என்று. அவருக்கே சிரிப்பு வந்து விட்டது. தலையை ஆட்டிக்கொண்டே சோப் இல்லாமலே போட்டோ எடுத்து கொண்டு டி.வி.யை என்வசம் ஒப்படைத்து சென்றார்.
நடந்தது இதுதான். காண்டஸ்ட் படிவத்தில் மூன்று சுலபமான கேள்விகள் கேட்கப்பட்டன. நினைவிலிருந்து கூறுகிறேன், தாஜ்மஹாலை கட்டியது யார்? மகாத்மா காந்தி எந்த ஆண்டு பிறந்தார்? இந்தியா எப்போது குடியரசாயிற்று? இவை எல்லாமே ஜுஜுபி கேள்விகள். நான்காவதாக வந்த வாக்கியத்தை நிறைவு செய்வதுதான் முக்கியம். I love Neko soap because ... (fill up by using not more than 10 words). நான் எழுதியது I love Neko soap because it transforms bathing into a pleasure from a dreaded routine. என்பதே. இதற்குத்தான் மூன்றாம் பரிசு. காண்டஸ்ட் படிவத்துடன் மூன்று நீக்கோ சோப்பின் காலி உறைகளை வைக்க வேண்டும். அதை நான் வீரராகவன், சுந்தரம் மற்றும் ஜயக்குமாரிடமிருந்து பெற்று படிவத்துடன் இணைத்து அனுப்பியிருந்தேன். பிறகு மறந்தும் போயிருக்கிறேன்.
அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரில் முக்கிய பக்கத்தில் இந்த காண்டஸ்ட் ரிசல்ட் வெளியிடப்பட்டது. Fridge, washing macine and then TV set என்ற வரிசையில் முதல் மூன்று பரிசுகள். பிறகுதான் மனித மனத்தின் விசித்திரங்கள் புலப்பட ஆரம்பித்தன. முதலில் டி.வி செட் வேண்டாம் என நான் எழுத்தில் அறிவித்தபோது நான் மேலே சொன்னது போல நான் அவசரப்பட்டுவிட்டதாகக் கூறினர். தாங்கள அதை விலை கொடுத்து வாங்கியிருப்பார்கள் எனவும் கூறினர். ஆனால் என்ன ஆச்சரியம், பார்க் டேவிஸ் நான் கூறியதை கேட்காது டி.வி செட்டை தள்ளிவிட்டு செல்ல சரி விலைக்கு எடுத்து கொள்கிறீர்களா என கேட்க, எல்லோரும் பைய நழுவினர். பூனாவில் இருந்த என் உறவினர் 2000 ரூபாய்க்கு எடுத்து கொள்வதாகவும் ஆனால் மாதம் ஐம்பது ரூபாயாக தந்து 40 மாதங்களில் பணம் முழுக்க தருவதாக அன்புடன் கூறினார். சரி இதெல்லாம் காரியத்துக்காகாது என டி.வி. உருவாக்கிய போல்ஸ்டார் எலெக்ட்ரானிக்ஸையே அணுக அவர்கள் தொழிற்சாலை விலை கொடுத்து எடுத்து கொள்வதாக கூறி பம்பாயில் அவர்கள் ஷோ ரூம் முகவரியை கொடுத்தனர். அங்கு செப்டம்பர் 1972-ல் அதை சேர்ப்பித்து ரசீதும் பெற்று கொண்டேன். இரண்டு மாதங்களில் 1890 ரூபாய் செக்காக தந்தனர். அத்துடன் அதன் கதை முடிந்தது. ஆனால் மனித மனத்தின் விசித்திரங்களுக்கு முடிவே இல்லை. டில்லியிலிருந்த இன்னொரு உறவினர் (இவர் பூனாக்காரரின் சகலை, இருவருமே எனது பெரியப்பாவின் மாப்பிள்ளைகள்) பிறகு பம்பாய் வந்தபோது இது பற்றி கேட்டார். "என்ன டோண்டு, 1890 ருபாய்தான் என்றால் நானே அதை வாங்கி கொண்டிருப்பேனே" என்று. பூனாக்காரரும் அருகில் இருந்தார். நான் இதற்குள் சற்று தேறிவிட்டேன், "அடேடே அத்திம்பேர், உங்களுக்குன்னா, நான் இலவசமாகவே தந்திருப்பேனே" என்று கூற இரண்டு சகலைகளும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்முறுவல் செய்து, "பேஷ், டோண்டுவும் தேறிட்டான்" என்று ஒத்து கொள்ள, நான் பணிவுடன் பூனாக்காரர் தவணை முறையில் தருவதாகக் கூறியதை கூற, மறுபடியும் இரு சகலைகளும் அவுட்டு சிரிப்புடன் கை குலுக்கி கொண்டனர்.
சசிதரன் நாயர் என்பவரிடமிருந்து மலையாளத்தில் ஒரு கடிதம் வந்தது. என் மலையாள சக இஞ்சினியர் சித்திக் படித்து சொன்னதிலிருந்து நான் அறிந்தது என்னவேன்றால், ஒரு மலையாளிக்கு பரிசு கிடைத்ததில் சந்தோஷம் என குறிப்பிட்டு விட்டு (நான் ராகவன் நாயர் என எண்ணியிருப்பார் போல) மத்தியப்பொதுப்பணித் துறையில் கலாசி வேலை வாங்கித் தரச்சொல்லி கேட்டிருந்தார். கிழிந்தது கிருஷ்ணகிரி என்று எண்ணினேன். என்ன செய்வது அக்காலக் கட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாகவே இருந்தது.
அதன்பிறகு டி.வி. 1979-ல் தான் சென்னையில் வாங்கினேன். அது பற்றி பிறகு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
39 comments:
வாங்கிய காசோலையை என்ன செய்தீர்கள்..?
அன்புடன்
அரவிந்தன்
1890-ரூபாயுடன் மேலே பணம் போட்டு 3000 ரூபாய்க்கு ஃபிக்ஸட் டிபாசிட் போட்டேன். (அக்காலக் கட்டங்களில் சுமார் 560 ரூபாய் வருமானத்தில் மாதம் 200 ரூபாய் சேமித்தேன்).
அவ்வாறு நான் போட்ட அடுத்த நாளைக்கே பம்பாயில் இருந்த தூரத்து உறவினர் ஒருவர் தான் ஃப்ரிட்ஜ் வாங்குவதற்காக அதைக் கடனாகக் கேட்டார். நான் ஃபிக்சஸட் டிபாசிட் போட்டு விட்டதை கூறி பணிவுடன் மறுத்து விட்டேன். இல்லாவிட்டால் அதே மாதிரி தவணை முறையில்தான் பணம் திரும்பத் தந்திருப்பாராக இருந்திருக்கும். வட்டியும் கிடைத்திருக்காது. நான் அதை சோதிக்கவில்லை. இதே ஃபிக்ஸட் டிபாசிட் 1975 டிசம்பரில் மெச்சூர் ஆன சமயம் அந்த 3000 ரூபாயை 20 ஆண்டுகள் க்யூமுலேட்டிவ் ஃபிக்சட் டிபாசிட்டில் போட்டு 1995-ல் கிட்டத்தட்ட 21500 ரூபாய் போல பெற்று கொண்டேன்.
ஆக, மூன்று சோப்பு உரைகள் நண்பர்களிடமிருந்து வாங்கி இவ்வளவும் நடந்தது. இதை நான் ஏதாவது கதையில் எழுதியிருந்தால் நம்புவது கடினமாக இருந்திருக்கும். ஆனால் வாழ்க்கை உண்மையிலேயே இம்மாதிரி பல நிகழ்ச்சிகள் கொண்டுள்ளது. கதையெல்லாம் ஜுஜூபி என்று ஆகிவிட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அப்பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து உதவி இருக்கலாமே டோண்டு அவர்களே??!!! ஏன் மனம் வரவில்லையா (வழக்கம் போல)??!!
கோமணகிருஷ்ணன்
இன்றெல்லாம் நடக்கும் குலுக்கல் போட்டிக்கு, இது போல் Fridge, TV, washing machine எல்லாம் கொடுப்பதில்லையே, ஏன் ?
//ஏன் மனம் வரவில்லையா (வழக்கம் போல)??!!//
வரவில்லை, ஏன் வரவேண்டும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இது போல் Fridge, TV, washing machine எல்லாம் கொடுப்பதில்லையே,//
கொடுக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
/// நான் இதற்குள் சற்று தேறிவிட்டேன், "அடேடே அத்திம்பேர், உங்களுக்குன்னா, நான் இலவசமாகவே தந்திருப்பேனே" என்று கூற இரண்டு சகலைகளும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்முறுவல் செய்து, "பேஷ், டோண்டுவும் தேறிட்டான்" என்று ஒத்து கொள்ள,////
எதில் தேறினீர்கள்? புரியவில்லை.
சமுதாயத்தில் மனிதர்கள் வெறும் வாய்வார்த்தையாக மட்டுமே பிஸினஸ் பேசுவதையும், லாபம் என்றால் மட்டுமே பிஸினஸில் ஈடுபடுவதையும் சொல்கிறீர்களா?
அல்லது,
இப்படித்தான் மனிதர்கள் என்ற தெளிவடைந்து அவர்களுக்கு ஏற்றவாறு நீங்களும் வெறும் வாய்வார்த்தையாக பதிலளிக்கும் சமயோஜிதத்தைச் சொல்கிறீர்களா?
//வரவில்லை, ஏன் வரவேண்டும்? //
சபாஷ். சரியான பதில்.
உங்களது நேர்மையைப் பாராட்டுகிறேன். துணிவையும் பாராட்டுகிறேன்.
உங்களிடம் இப்படி கேள்வி கேட்ட ஆள் பேங்க் டெப்பாஸிட்டே வைத்துக்கொள்ளாமல், சேரி மக்களுக்காக தான தர்மம் செய்கிறாராமா?
"அடுத்தவர்களுக்கு நல்லது செய்" என்று அடுத்தவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்தே வளர்ந்த தீராவிட குத்தறிவுவாதிகளை அடுத்தவர் என்று அடையாளம் காட்டுவதற்கும் உங்களிடம் துணிவு ஏற்படவேண்டும் என அந்த கிருஷ்ணனை வேண்டுகிறேன்.
கோபிகைகள் தன்மேல் காட்டிய பக்தியை கீழ்த்தரமான பின்னோட்டம் ஒன்று கேவலப்படுத்தினாலும், அதற்கு இணையாக ஏசுவைப்பற்றிய பின்னோட்டத்தைப் போட தாங்கள் மறுத்தாலும், கிருஷ்ணன் தங்களுக்குத் தேவையான துணிவை தருவான் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகம் இல்லை. ஏனெனில், துணிவுகொள்ளும் திறன் இருப்பபவர்களுக்கு மட்டுமே கிருஷ்ணன் துணிவு தருவான். உங்களிடம் அந்த திறன் இருக்கிறது என்பது என் நம்பிக்கை.
இப்படிக்கு,
உங்களுடைய போர் பிரகடனத்தைப் பெற்றுக்கொண்ட அனானி
//உங்களுடைய போர் பிரகடனத்தைப் பெற்றுக்கொண்ட அனானி//
அவனா நீயி? :))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இப்படித்தான் மனிதர்கள் என்ற தெளிவடைந்து அவர்களுக்கு ஏற்றவாறு நீங்களும் வெறும் வாய்வார்த்தையாக பதிலளிக்கும் சமயோஜிதத்தைச் சொல்கிறீர்களா?//
ஆம். ஆனால் சாதாரணமாக நான் அம்மாதிரி பேசுவதில்லை. என்னிடம் அப்பவே சொல்லியிருந்தால் நான் வானத்தையே வில்லா வளச்சிருப்பேன்னு சொல்றது எனக்கு பிடிக்காது. இருந்தாலும் அத்தருணத்தில் அதை செய்தேன். பிறகு என் தந்தையிடம் அதை கூறி (அவரிடம் எதையும் மறைக்க மாட்டேன்) அவரால் அதற்காக கண்டிக்கப்பட்டேன். என்ன இருந்தாலும் அவர்கள் என் பெரியப்பாவின் மாப்பிள்ளைகள். என் தந்தைக்கும் மாப்பிள்ளை முறை ஆக வேண்டும் அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
//// அவனா நீயி? :)))))) ////
இல்லை. மற்றவர்கள் பயப்படும் விஷயங்களை எழுதும் தைரியம் எனக்குண்டு.
அனல் பறக்கும் கேள்வி பதில் தாக்கத்தில் இருந்த வாசகர்களை ஒரு உண்மைக்கதை சொல்லி
அனைவரது மனதை கவர்ந்து விட்டீர்கள் ஐயா.
இக் காலத்தில் கணிப் பொறி வல்லுனர் வேலை தருவதாக சொல்லி நமது பணத்தை யல்லவா கொள்ளை அடித்து செல்கின்றனர்(விஸ்ப்ரோ(அதுவும் புகழ் பெற்ற விப்ரோ வைப் போல் போலி பெயருடன்)டெக்னாலஜி-சென்னை அண்ண நகர்-செய்தி-தினகரன் 11.5.08)-100 கோடி மோசடி)
இதை பற்றி ஒரு விரிவான பதிவு போட்டால் நன்மை பயக்கும்.
1.மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் உயர் சாதிப்பிரிவினர் (பிராமணர் அல்ல))(மலையில் வாழும்)நடத்தும் போராட்டம் தேவையா?
2.சாதிச் சுவர் இரட்டை குவழையை விட கொடியது அல்லவா-தங்கள் கருத்து என்ன?
3.திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இது போல் கோட்டை சுவர்(கோட்டைப் பிள்ளைமார்) இருந்ததாக சொல்வார்கள்.அது போல் தான் இதுவுமா?
4.300 குடும்பங்களின் போராட்டம் தேவையான ஒன்றா?
5இதுவும் அரசியலா?
6.கலைஞர் இந்த விஷயத்தில் நேர்மையாகத்தான் நடந்துள்ளார் போல் தெரிகிறது .
7.அரசின் முயற்சிகள் பலன் அளிக்குமா?
8.ஜாதி அரசியல் வானவேடிக்கை களுக்கு முற்றுப் புள்ளி வைக்குமா தமிழகம்?
9.வழக்கம் போல் B.J.P இதிl தலையிட்டு தலித்துகளின் வாக்கு வங்கியை முழுவதும் இழக்க முயலுமா?
(பிள்லைமார் சமுகத்தினர் b.j.p உதவியை நாடுவதாக தகவல்(j.vikatan-14.5.08)
10.புரட்சித் தலைவியின்(ஜெயலலிதா அம்மையார்)கருத்து என்ன என்றே தெரியவில்லை,ஏன்?
//இல்லை. மற்றவர்கள் பயப்படும் விஷயங்களை எழுதும் தைரியம் எனக்குண்டு.//
இது என்ன புடலங்காய் தைரியம்? எப்படியும் சொந்தப் பெயரில் எழுதப்போவதில்லை. மறைந்து கொண்டு கல்லடிப்பதற்கு என்ன தைரியம் தேவைப்படுகிறதாம்?
டோண்டு ராகவன்
dondu(#11168674346665545885) said...அவ்வாறு நான் போட்ட அடுத்த நாளைக்கே பம்பாயில் இருந்த தூரத்து உறவினர் ஒருவர் தான் ஃப்ரிட்ஜ் வாங்குவதற்காக அதைக் கடனாகக் கேட்டார். நான் ஃபிக்சஸட் டிபாசிட் போட்டு விட்டதை கூறி பணிவுடன் மறுத்து விட்டேன். இல்லாவிட்டால் அதே மாதிரி தவணை முறையில்தான் பணம் திரும்பத் தந்திருப்பாராக இருந்திருக்கும். வட்டியும் கிடைத்திருக்காது. நான் அதை சோதிக்கவில்லை. இதே ஃபிக்ஸட் டிபாசிட் 1975 டிசம்பரில் மெச்சூர் ஆன சமயம் அந்த 3000 ரூபாயை 20 ஆண்டுகள் க்யூமுலேட்டிவ் ஃபிக்சட் டிபாசிட்டில் போட்டு 1995-ல் கிட்டத்தட்ட 21500 ரூபாய் போல பெற்று கொண்டேன்.
ஆக, மூன்று சோப்பு உரைகள் நண்பர்களிடமிருந்து வாங்கி இவ்வளவும் நடந்தது. இதை நான் ஏதாவது கதையில் எழுதியிருந்தால் நம்புவது கடினமாக இருந்திருக்கும். ஆனால் வாழ்க்கை உண்மையிலேயே இம்மாதிரி பல நிகழ்ச்சிகள் கொண்டுள்ளது. கதையெல்லாம் ஜுஜூபி என்று ஆகிவிட்டது.
/////////////
சார் நண்பர்களிடம் கடனாகபெற்ற சோப்பு உரையின் மூலம் கிடைக்கப்பெற்ற பரிசு பணத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுக்க அதுவும் உறவினர்களுக்கு கடன் கொடுக்க மனமின்றிப் போனது வருத்தத்திற்குரிய செயல். இப்படிப்பட்ட மனமுடையவர்கள் பெருக பெருகத்தான் நாட்டில் வட்டியால் சீரழியக்கூடயவர்கள் அதிகமாகிவிட்டனர்.
வருத்தமுடன் தங்களின் ஆக்கங்களை வாசிப்பவன்.
//சார் நண்பர்களிடம் கடனாகபெற்ற சோப்பு உரையின் மூலம் கிடைக்கப்பெற்ற பரிசு பணத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுக்க அதுவும் உறவினர்களுக்கு கடன் கொடுக்க மனமின்றிப் போனது வருத்தத்திற்குரிய செயல்.//
சோப்பு உரைகள் கடனாக பெற்றதாக யார் சொன்னது? சரியாகப் படியுங்கள் ஐயா? அவை எனக்கு இலவசமாகத் தரப்பட்டன. அவற்றை எனக்கு தந்த நண்பர்கள் எனக்கு டி.வி. கிடைத்ததற்கு என்னை விட அதிகம் சந்தோஷப்பட்டனர். ஏனெனில் அவர்கள் நண்பர்கள்.
மற்றப்படி என்னிடம் கடனாகக் கேட்ட உறவினர் எனக்கு கண்டிப்பாக வட்டி ஏதும் தந்திருக்க மாட்டார். இப்போதைக்கு நூறு, பிறகு இருநூறு என்று தந்திருப்பார். யாருக்கு பிரீதி? ஒன்று மட்டும் புரிது கொள்ளுங்கள் உறவினர்களுக்கு கடன் தரும் முன்னால் அனேகம் முறை யோசிக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் கொடுத்த பணம் எள்தான். மேலும் கடன் கொடுக்கவென்றே சிலர் உள்ளனர். கழுத்தில் துண்டு போட்டு வசூலிப்பர். அவர்கள் நடைமுறை எனக்கு வராது. அதே சமயம் அவர்கள் தொழிலில் குறுக்கிட நான் யார்? அந்த உறவினர் வேறு காரணம் காட்டி பி.எஃப். லோன் எடுத்து அடைத்தார் (அடைத்திராவிட்டால் அவர் பாடு, அவர் ஆஃபீஸ் பாடு).
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆஹா நீங்க பதிவை வீக்கென்டில் போட்டு என்னை விளையாடவிடாமல் செய்துவிட்டீர்களெ .. தோ வந்துட்டேன்
சரவணன்
//சமீபத்தில் 1972-ல் ஜூன் மாதம் ஒரு திங்கட்கிழமையன்று மத்தியப் பொதுப்பணி துறை அலுவலகத்திற்கு வரும் போது பகல் 1 மணிக்கு மேல் ஆகிவிட்டது //
சார் வர வர உஙளுக்கு ஞாபகமறதி அதிகம் ஆயிடுச்சு, அன்னைக்கு நீங ஆஃபீசுக்கு வரும்போது மணி சரியா பகல் 12.50 , என்ன இதுக்குள்ள மறந்துட்டீங்க :-)
... நல்லா ஆரம்பிச்சு வச்சீங்க சமீபத்துலன்னு.. யப்பா சமீபத்துல யாரவது தமிழ்மணத்துல சமீபம்னு சொன்னாலே தாவு தீருது
சரவணன்
//... நல்லா ஆரம்பிச்சு வச்சீங்க சமீபத்துலன்னு.. யப்பா சமீபத்துல யாரவது தமிழ்மணத்துல சமீபம்னு சொன்னாலே தாவு தீருது//
பாவம், சமீபத்துலன்னு எழுதிட்டு அடைப்பு குறிகளுக்குள் டோண்டு ராகவனின் சமீபத்தில் அல்ல, நிஜமாகவே சமீப சமீபத்தில்னு அன்னிக்கு ஒருத்த்ர் போட்டிருந்தார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இடம் சுட்டி பொருள் விளக்குக.. நெசமாவே தெரியலீங்க இது எந்த ஊர் பாஷை அல்லது சமீபத்துல 50 வருடத்துக்கு முந்திய சொல்லாடலா
சரவணன்
//இடம் சுட்டி பொருள் விளக்குக.. நெசமாவே தெரியலீங்க இது எந்த ஊர் பாஷை அல்லது சமீபத்துல 50 வருடத்துக்கு முந்திய சொல்லாடலா//
உங்களுக்கு எது புரியவில்லை என்பது எனக்கு இப்போது புரியவில்லை. அது தெரிந்தால்தானே நான் உங்களுக்கு புரிய வைக்க இயலும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அவுட்டு சிரிப்புடன் கை குலுக்கி கொண்டனர்.//
இடம் சுட்டி பொருள் விளக்குக.. நெசமாவே தெரியலீங்க இது எந்த ஊர் பாஷை அல்லது சமீபத்துல 50 வருடத்துக்கு முந்திய சொல்லாடலா
சரவணன்
ஒரு நிமிடம் நிசப்தம், நான் விளக்கும் வரை. பிறகு குபீர் என கிளம்பியது சத்தத்துடன் சிரிப்பு. ஒருவரை ஒருவர் கைகுலுக்கி கொள்வது, முதுகில் தட்டி கொள்வது எல்லாமே அந்த அவுட்டு சிரிப்புடன் (busrsting out in laughter) சேர்ந்த வினைகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வரவில்லை, ஏன் வரவேண்டும்?
//
unmaiyai thairiyamaga oppukkondatharku nandri dondu avargale. yen enil yerkanave neengal socialism
vendam capitalismthan vendum ena yezaigal munnera koodathu enbathil kuriyaaga iruppavar. athai
maraikkamal iruppathargu nandri.
komanakrishnan
//அதன்பிறகு டி.வி. 1979-ல் தான் சென்னையில் வாங்கினேன்.//
என்ன 1979 லியே TV வாங்கிட்டீங்களா அய்யோ அப்ப வெறும் தூர்தர்ஷன் மட்டும்தானே எப்படி சார் சமாளிச்சீங்க.. அய்யோ செவ்வாய் கிழமை நாடகம்னு ஒண்ணு போடுவானே ஒரே அறை ஒரே ஸோஃபா 50 வயது ஹீரோ 40 வயது ஹீரோயின் பிஞ்ச செருப்பை இழுத்துகிட்டு நடக்குற மாதிரி ஒரு வேகமான கதை அய்ய்ய்ய்யோ..... அதை எல்லம் பார்பீங்களா.
உங்களுக்கு வேற எதுவுமே மறக்காதே எல்லாமே சமீபத்துல பார்த்தா மாதிரி இருக்குமே என்ன கொடுமை சார் அது. நல்ல வேளை எனக்கு ஆண்டவன் உங்களை போல் ஞாபகம் கொடுக்கலை இல்லன்னா ராத்திரி அந்த நாடகம் ஞாபகம் வந்து எழுந்து உட்காந்து ஓன்னு அழவேண்டியத்தான்.. :-)
அப்புறம் அதே சரக்குதான் இப்ப மெகா சீரியல் அப்படின்னு பேர் மாத்தி புது பாட்டிலில் புது லேபிளில் வருகிறது. மக்களும் உங்களை போல் ஞாபகம் எல்லாம் வச்சுக்காம கஜினி மாதிரி கடைசி 5 எபிசோட் ஞாபகம் வச்சு பார்த்து தொலைக்கிறார்கள்.
சரவணன்
அப்பல்லாம் TV இல் நிகழ்ச்சிகளில் இப்பொழுது உள்ளது போல கலக்கபோவது யாரு என்றோ காபி அடிக்கபோவது யாரு அப்படின்ற காமெடி நிகழ்ச்சிகள் கிடையாது. பொழுது போக்கு என்ற பெயரிலோ அறிவை வளர்கிறேன் என்ற பெயரிலோ செய்தி கொடுக்கிறேன் என்ற பெயரிலோ ஒரே தடங்கலுக்கு வருந்துகிறோம் என்ற அட்டையோ இல்லை மின் தடங்கலுக்கு வருந்துகிறேன் என்ற அட்டையோ போட்டு காமெடி பண்ணுவார்கள். நானும் ரொம்ப நாள் மின் தடங்கலுன்னு சொல்றானுங்க அப்புறம் எப்படி இந்த அட்டை செய்தியை ஒளிபரப்ப முடியுதுன்னு தலையை பிச்சுக்குவேன்.
இதுல எதாவது பெருசு மண்டைய போட்டுச்சுனா 15 நாள் 25 நாள் அப்படினு துக்கம் அனுஷ்டிப்பானுங்க, டேய் இப்பவே ப்ரோக்ராம் பூரா அப்படிதானே இருக்கு துக்கம்னு தனியா என்ன வேண்டியிருக்குனு தோணும், தமிழனின் வாழ்வில வாரம் அரை மணி நேரம் பாய்ச்சப்படும் ஒளியும் ஒலியும் கோவிந்தா அந்த மாதிரி சமயங்களில்
நாங்கல்லாம் ஞாயிறு மதியம் விண்வெளி ஆராய்ச்சியாளர் போல அன்டெனாவை நாலப்புறமும் திருப்பி எப்படியாவது சிலோன் வருதான்னு பார்ப்பொம்....
சரவணன்
///unmaiyai thairiyamaga oppukkondatharku nandri dondu avargale. yen enil yerkanave neengal socialism
vendam capitalismthan vendum ena yezaigal munnera koodathu enbathil kuriyaaga iruppavar. athai
maraikkamal iruppathargu nandri.
komanakrishnan
////
அல்லோ கோமணகிருஷ்ணன்,
டோண்டு எதை கேப்பிட்டலிஸம் என்று சொல்லுகிறார் என்பதை கவனியுங்கள். ஏழைகள் முன்னேறாமல் ஏழைகளாகவே இருக்கவேண்டும் என்று அவர் எங்கே சொல்லியிருக்கிறார்?
முன்னேற்றத்தைத்தான் கேப்பிட்டலிஸம் என்று அவர் சொல்லுகிறார்.
அதென்ன ஸார், என்னவோ ஒருத்தனோட வேலை அடுத்தவர்களை முன்னேற்றுவதுதான். தன்னை முன்னேற்றிக்கொள்ளுவது இல்லை என்கிற கம்யூனிஸ பல்லவி. திருப்பி திருப்பி கேட்டு புளித்துவிட்டது.
என்னவோ தன்னைவிட அடுத்தவன் எல்லாம் அறிவும், பலமும் இழந்தவன் எனவே அவனுக்கு கோவணக்ருஷ்ணனைப் போன்ற அறிவாளிகளும், பலமுள்ளவர்களும் வந்து உதவி செய்தால்தான் பிழக்கமுடியும் என்ற அதீத ஈகோ ப்ராப்ளம். தானே உசத்தி மற்றவனெல்லாம் மடையன் என்ற நினைப்பு. திருந்துங்கள் நண்பர்களே.
பாரதமாதா எல்லாருக்கும் தன்னை காத்துக்கொள்ளும் சக்தியை கொடுத்துள்ளாள். தெருவில் கிடக்கும் பிச்சைக்காரனுக்கும், விபச்சாரம் செய்து பிழைக்கும் பெண்ணுக்கும்கூட அந்த சக்தி இருக்கிறது.
அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்து பிழைப்பவர்களைவிட இவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்.
ஒருவன் முன்னேற அடுத்தவர்கள் உதவி எப்போதாவது தேவைப்படலாம். சில சம்யங்களில் அது அவசியமும் கூட - நம்மை நமது பெற்றோர்கள் படிக்கவைப்பதுபோல.
அதுகூட அடுத்தவன், அவன் விருப்பத்தையடைய, செய்யும் உழைப்பிற்கான உதவி. ஆபிரகாமிய மதங்களைப்போல உங்கள் விருப்பத்திற்காக அடுத்தவன் வாழவேண்டும், உழைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பில் அது நடக்கவில்லை.
ஆனால், ஒருத்தன் தன் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யக்கூடாது அடுத்தவர்களை முன்ன்னேற்றுவதற்காக உழைக்கவேண்டும் என்பது நடக்காத காரியம். அவனும் முன்னேற மாட்டான். அடுத்தவர்களும் முன்னேற மாட்டார்கள்.
ஒவ்வொருவரும் தன்னைத்தானே முன்னேற்றிக்கொள்ள வேண்டும். அப்படித்தான் ஹிந்துக்களின் கீதையும் சொல்லுகிறது. ஒருவன் தன் விருப்பத்தை நிறைவேற்ற உழைக்கவேண்டும். கடவுளின், மத குருமார்களின், பொலிட் பீரோவின் விருப்பத்திற்காக அல்ல.
அவர்களை முன்னேற்ற அடுத்தவர் உதவினால் அது ஒரு கடன். வலி. சுமை.
உனக்கு உதவுகிறேன் பார் அதனால் என்னை வணங்கு என்கிற கம்யூனிஸ சமுதாயக்திற்காகத்தான் இப்படி அடுத்தவர்களுக்கு உதவுங்கள், நீங்கள் பஞ்சப் பரதேசியாய் இருங்கள். பட்டினி கிடப்பதும், வளத்தை வெறுப்பதும் மிக உயர்ந்த குணம் என்றெல்லாம் பேசியும் எழுதுவதையும் நிறுத்திவிட்டு, உன் முன்னேற்றத்திற்கு உழையுங்கள்.
உன்னால் உனக்கு மட்டும்தான் உதவி செய்ய முடியும். மற்றவர்களுக்கு உதவுவதுகூட உனக்கு உதவி செய்வதற்காக ஒருவன் செய்துகொள்வது.
நீங்கள் எல்லாம் அடுத்தவர்களுக்கும் உதவி செய்வதில்லை. ஆனால், அட்வைஸ் செய்துகொண்டே இருப்பீர்கள்.
அட்வைஸ் செயலில் இருக்கவேண்டும்.
கதை கதை... எத்தனை நாள்தான் தலிவருங்களே கதை சொல்ல நாம கேட்கறது அதனால இப்ப பொதுஜனம், தலீவர் கதை சொல்ரன் கேளுங்க
ஒரு நாள் நம்ம சோஷியலிச நாட்டு தலைவர் ஒருவர் BMW கார்ல ( அம்பாசிடருக்கு முன்னாடியே சோஷியலிசம் கண்டுபுடிச்சுட்டாங்க அதுனால ஏன் அம்பாசிடர்ல போலன்னு கப்பிதனமா கேள்வி கேட்ககூடாது ) போய்கிட்டு இருந்தார். வழில ரெண்டு கோயிஞ்சாமிங்க புல்லை புடுங்கி தின்னுகிட்டு இருக்கானுங்க.
இதை பார்த்து பதட்டப்பட்டு போன நம்ம தலீவர் டபார்னு இறங்கி அவர்கள் கிட்ட போய் எதுக்கு இதை சாப்பிடுகிறீர்கள் என்று கேட்கிறார், கோயிஞ்சாமிங்களும் நாங்க இதைத்தான் ரொம்ப நாளா சாப்பிடறோம் அப்படின்ரானுங்க. அய்யோ இது எனக்கு தெரியாமப்போச்சேன்னு உடனே வந்து வண்டில ஏறுங்க அப்படின்றார். என்னோட வீட்டுக்கு வாங்க அங்க சாப்பிடலாம் அப்படின்றார். சாமி நாங்க வந்துட்டா எங்க பொண்டாட்டி புள்ளைங்களுக்கு யார் புல்லு புடுங்கி கொடுக்கறது என்கிறார்கள். நம்ம தலை அடப்பாவமே அவர்களும் புல்லை உண்கிறார்களா அப்ப அவங்களையும் வண்டில ஏத்து அப்படின்றார்.
BMW ல நம்ம கோயிஞ்சாமிங்க குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டு ஏற்றப்படுகிறது, வெளியே தொண்டர்கள் வாழும் வள்ளலார் என நம்ம தலையப்பார்த்து கோஷம் போடுது. AC யயும் வின்டோ கிளாசயும் ஏத்தி வச்சுகிட்டே நம்ம தலை கையாட்டிகிட்டே கிள்ம்புறார்.
அப்ப உள்ள இருக்குற ஒரு கோயிஞ்சாமி நம்ம சோஷியலிச தலைவர பார்த்து நீங்க ரெம்ப நல்லவரு புல்லு தின்னுகிட்டு இருந்த எங்களை உங்க வீட்டுக்கு கூட்டிபோறீங்களேன்னு.. அதுக்கு நம்ம தலீவர் சிரிச்சுகிட்டே என்னோட வீடு ரொம்ப பெருசு சுத்தி பெரிய தோட்டம்... ஆள் போட்டு கட்டுபடியாகலை புல்லெல்லாம் ஒரு அடி உயரத்துக்கு வளர்ந்துருக்கு உஙளுக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்றாரு
மேல உள்ளது என்ன கதை நான் சொல்ரது
அதிகம் யோசிக்காதீங்க .... யோசிக்கும் உரிமை ஓட்டு போடுபவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளத்து, சிந்திக்கும் உரிமை ஓட்டை மறுத்து வேட்டை ( வேட்டுங்க .. TNT ) நாடும் நக்ஸல்பாரிங்களுக்கும் .. வேட்டை ( அதே வேட்டு .. TNT ) மறந்து ஓட்டை வேட்டை ஆடும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. .. சோ நாம ஜோக்கை மட்டும் படிச்சு சிரிச்சுட்டு போய்கிட்டே இருப்போம் என்ன..
சரவணன்
நான் சமீபத்துல அனுப்புன கமென்டை ஏன் இன்னும் பிடிச்சு வச்சுர்க்கீங்க பாவம் விட்டுடுங்க
சரவணன்
ஹெல்லோ அனானிமஸ் அய்யா எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க பாவம் விட்டுடுங்க கூல் டவுன் கூல் டவுன்...:-)
டோண்டு சார் கேப்பிடலிஸ்ட் அப்படின்னு சொல்லுறீங்க தப்புங்க அது .. அவர் ஒரு தீவிர சோசியலிஸ்ட் அப்படின்னு என்னோட அடுத்த பின்னூட்டத்துல ப்ரூவ் பண்ணியிருக்கன் பாருங்க அஃப்கோர்ஸ் நான் ஒரு கேப்பிடலிஸ்ட்தான் ... இன்னும் நிறைய பேர கேப்பிடலிச கொளுகைகள சொல்லி மாத்திகிட்டு வேற இருக்கன் ;-)
சரவணன்
டோண்டு சோசியலிசவாதி என்றல்லவா இவ்வளவு நாள் நான் நினைத்திருந்தேன் அவரது பதிவுகள் படிக்கும் யாரும் டோண்டு சோசியலிசவாதி என சத்தியம் செய்வரே.
அவர் கேப்பிடலிசவாதி என்று எனக்கு தெரியாதே என்னவென்றால் கடந்த 2 வருடங்களாக கேப்பிடலிச கொள்கைகளால் நான் மிகவும் கவரப்பட்டேன். அது தனியாக தமிழகத்தை ஆட்டுவித்து இன்று ஒரு மிகப்பெரும் சக்தியாக உருவாகியுள்ளது கண்டு உள்ளம் பூரிக்கிறேன். கேப்பிடலிசம் முன்னால் சோசியலிசம் ஒன்றுமே இல்லை கேப்பிடலிசத்துக்கு பின்னால் எவ்வளவு பேர் சோசியலிசத்தால் ஒரு 2000 பேருக்கு மேல் கூட்டமுடியுமா..
கேப்பிடலிசத்தை எதிர்க்கும் ஒவ்வொருவரும் மனதுக்குள் நாமும் அதில் இணையவே துடிக்கின்றனர் என்பதை மறுக்கமுடியுமா உங்களால்
தமிழகமே கேப்பிடலிசத்துக்கு பின்னால் அணிவகுக்கும் நாள் தொலைவில் இல்லை .. வால்க டமில்.. வெல்லும் விரைவில் எங்கள் கேப்பிடலிசம்
சரவணன்
(பி.கு: எனக்கு ரசம்தான் தெரியும் எந்த இசமும் தெரியாது எனது இசங்களுக்கான் புரிதல் கீழே காண,...
1. சோசியலிசம் - 'சோ' இசம் - சோ கொள்கைகள்
2. கேப்பிடலிசம் - 'கேப்டன்' இசம் - கேப்டன் கொள்கைகள்
இப்ப மீண்டும் படிச்சா உஙளுக்கு என்னோட ஐபி கண்டுபிடிக்கற செலவு மிச்சம் )
சார் யாரு இந்த சரவணன். கிரானைட் குவாரி எதாவது சொந்தமா வெச்சி இருக்காரா. ஒவொரு பதிவிலும் ஒரு லாரி லோடு ஜல்லி அடித்து செல்கிறார்.
சரவணன் அய்யா கொஞ்சம் ஜல்லியை குறைக்கலாமே. புல் தின்னவன் ஜோக் சூப்பர், இது போல நச் கமெண்டு மட்டும் போடவும்.. நன்றி.
டோண்டு சார் ரிபப்ளிகன் சோசியலிஸ்ட் , டெமோக்ரேட் சோசியலிஸ்ட் அப்படின்னு ரெண்டு குரூப்பு இருக்காமே ஃபிரண்டு சொல்றான் நிஜமா .. அவங்களை பத்தி சொல்லுங்களேன் நம்ம நாட்டுல எந்த அரசியல் கட்சி இந்த இசங்களை பின்பற்றுகிறது.
சரவணன்
First of all, as far as you dont cheat, be honest, work hard and earn for you and your family, is it such a big crime to be selfish? Why, then, some fellows see that as a big crime?
Vikram
அய்யய்யோ அண்ணா வணக்கம், ஜோக் ரசிச்சதுக்கு நன்றி.
டோண்டு சார் சீரியஸ் பதிவுலயும் என்மாதிரி சிறுவர்கள் கும்மி அடிக்க விடுவார்னுதான் வந்திருக்கேன்.. முடிஞ்ச வரைக்கும் பதிவு சம்மந்தமான கும்மிதான் டொன்ட் வொர்ரி. டோண்டு சார் பதிவுல விளையாடிட்டு நாம பதிவு தொடங்கும்போது ஒரு பெரிய ஓப்பனிங்க் கிடைக்கும் அப்படின்னு ஒரு நப்பாசை.
//Aiyoyo said...
சார் யாரு இந்த சரவணன். கிரானைட் குவாரி எதாவது சொந்தமா வெச்சி இருக்காரா. ஒவொரு பதிவிலும் ஒரு லாரி லோடு ஜல்லி அடித்து செல்கிறார். //
அய்யய்யோ அவர்களே கருங்கல் குவாரியிலிருந்துதான் ஜல்லி எடுக்கபடுகிறது தாங்கள் கிரானைட் குவாரியையே ஜல்லிக்கு உபயோகபடுத்துவதில் இருந்து தாங்கள் உங்கள் வளங்களை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ளாத கேப்பிடலிசவாதி என புலப்படுகிறது.. வாங்க நம்ம கேப்டன் கட்சிக்கு.. வால்க டமில் :-)
சரவணன்
ஆணி புடுங்கற டயம் முடிஞ்சிடிச்சு சோ, கடைசி லோடு ஜல்லி அதுவும் சொந்த குவாரி ஜல்லி இல்லை ஃபிரண்டு சொன்னது..
ஒரு தபா ரஷ்யால அந்தூரு கோயிஞ்சாமி க்யூ வரிசையில நின்னுகிட்டு இருக்கான் காலையில இருந்து நிக்கறான் .. நிக்கறான் மதியத்துக்கு மேல ஆயிடுச்சு என்ன வாங்க வந்தோம்னே மறந்து போற அளவுக்கு வெயிட்டிங் டைம். கோயிஞ்சாமி உடனே என்னால் இனி பொறுக்கமுடியாது அந்த கோர்பசேவை சுட்டுதள்ள போகிறேன் என்று சொல்லிவிட்டு போறான்.
எல்லோரும் அவனை ஆச்சரியமா பார்கிரார்கள் என்ன வீரம்டா இவனுக்கு அப்படின்னு, கொஞ்ச நேரம் கழிச்சு போன பய திரும்பி வந்து க்யூல நிக்கறான். என்னடான்னு கேட்டா அந்த க்யூ இதை விட நீளமா இருக்குன்னு சொல்றான்
சரவணன்
//டோண்டு சார் பதிவுல விளையாடிட்டு நாம பதிவு தொடங்கும்போது ஒரு பெரிய ஓப்பனிங்க் கிடைக்கும் அப்படின்னு ஒரு நப்பாசை.//
உன் ஆசைல மண் அள்ளி போட..
1.பணவீக்கம் உயர்வுக்கு தவறான பொருளாதரக் கொள்கைகள் காரணமா?
2.தனியார்மயம்,தாரளமயம்,உலகமயம் இந்தியாவை இன்னொரு எத்தியோப்பி ஆக்குமா?
3.தொழில் தர்மம் இல்லா வணிகர்கள்(ஒரு பகுதியினர்) தான் இதற்கு காரணமா?
4.on line trading செய்யும் சேட்டை இதுவா?
5.பங்குவர்த்தகம் குழி தோண்டி குப்புறத் தள்ளும் குதிரையாய் மாறும் போல் உள்ளதே?
6.வழக்கம் போல் விலை வாசி எதிர்ப்பு செயலில் இடது சாரிகள் "வாய்ச் சொல் வீராரா?
7.இடைத்தேர்தல் count down தொடக்கமா?
8.எல்லா மநிலங்களை விட தமிழகத்தின்
நிலை பாராட்டுவது போல் உள்ளதற்கு கழக நிர்வாக ஆட்சி முறை காரணமா?
9.பழைய மொராஜி தேசாயின் ஜனதா ஆட்சி போல் வருவத்ற்கு வாய்ப்புள்ளதா?
10.நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம்
நடைபெற வாய்ப்புள்ளதா?நன்மை பயக்குமா?
My questions:
1) As far as you dont cheat, be honest, work hard, is it such a big crime to earn for you and your family and be selfish?
Why, then, some fellows see that as a big crime? (this question is already asked)
2) Any plan of starting some post on mild harmless, A Jokes to make the readers happy?
3) Like in some countries such as Dubai, is there a possibility in India too, that there
will be no income tax, someday?
4) When do you think that the big and widening gap between the rich and poor will be narrowed?
5) Is there a way to make the politicians (who always enjoy all facilities like a/c, car, bungalow, good food etc),
suffer like ordinary people like us, by exposing them to crowd, queue, sweat, unclean,dirty,
smelly public toilets, garbage, bad roads, traffic jam etc etc? so that they will realize the common
man's problems....?
Vikram
Post a Comment