இது ஒரு மீள்பதிவு.
இந்த மெரினா பீச் உலகிலேயே இரண்டாவது அழகிய கடற்கரை என்று நான் சமீபத்தில் 1955-ல் ஐந்தாம் வகுப்பில் படித்திருக்கிறேன். இதை யார் கூறியது என்று நான் எங்கள் ஆசிரியர் திரு ரங்கா ராவ் அவர்களைக் கேட்க அவர் என்னை அடித்துப் போட்டு வகுப்புக்கு வெளியில் அனுப்பினார். ஆனால் கடைசி வரை அதைக் கூறியது யார் என்றுக் கூறவேயில்லை. வேறு யாரும் இது வரை இதற்கான விடையை எனக்கு கூறவில்லை. ஆனாலும் இப்போதும் கூட யாராவது இந்த மெரினா பீச் உலகிலேயே இரண்டாவது அழகிய கடற்கரை என்று கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
நேற்றுக் கூட என் மருமாளிடம் நான் இதைக் கூறியதும் அவள் என்னிடம் இதே கேள்வியைக் கேட்டாள். ஹூம் காலம் கலிகாலமடா சாமி. நாங்கள் எல்லாம் சின்னவர்களாக இருந்தப் போது பெரியவர்களிடம் இம்மாதிரியெல்லாம் ஏடாகூடமாக கேள்வி கேட்கவே மாட்டோமாக்கும்!!!!
நிற்க. ஏதாவது ஒரு தருணத்தில் யாராவது இம்மாதிரி ஏதாவதைக் கூறி விட, நமக்குச் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதையே நாம் பிடித்துக் கொண்டு விடுகிறோம். உதாரணமாக அறுபதுகளின் முடிவில் ஐ.டி.பி.எல்.லின் சாதனை பற்றி ஒரு தருணத்தில் கூறப் பட்டது: "மற்றப் பெரிய மருத்துவக் கம்பெனிகள் பலப் பத்தாண்டுகளில் சாதித்ததை ஐ.டி.பி. எல் வெறும் பத்து வருடங்களிலேயே சாதித்து விட்டது." இதை நான் எண்பதுகளில் எத்தனை முறை பிரெஞ்சில் மொழி பெயக்க வேண்டியிருந்தது என்பது இப்போது என் நினைவில் இல்லை. உண்மை என்னவென்றால் அப்போதே இந்த நிறுவனம் தள்ளாடத் தொடங்கி விட்டது. தொண்ணூறுகளின் ஆரம்பத்திலேயே அதன் முடிவு எல்லார் கண்களுக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. இருப்பினும் மேலே கூறியதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தனர் நிர்வாகத்தினர்.
அதன் வீழ்ச்சி ஒரு சோகக் கதை. ஆனாலும் இப்போதுப் பின்னோக்கிப் பார்க்கும்போது இந்த நிலை தவிர்த்திருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. இதைப் பற்றி இன்னொரு பதிவில் போட்டுள்ளேன்.
அதே போல நொடித்துப் போன பழைய பணக்காரர்கள் வீட்டில் ஒரு மாதிரியான பிரமை இன்னும் இருக்கும். வெறும் பெருங்காய வாசனை என்று கூறுவார்கள். அவர்களால் தாங்கள் ஏழைகளாகி விட்டதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஆகவே பழம் பெருமை பேசி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வார்கள். அவர்களைப் பார்த்தாலே மனம் கனமாகி விடும். பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போல என்ற சொலவடை இவர்களுக்காகவே ஏற்பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
15 hours ago
14 comments:
எங்கட ஊரிலயும் உப்பிடியொரு கத இருக்கு அதப்பற்றி என்ர தளத்தில எழுதிறன்
நான் ஏற்கனவே ஒரு பதிவில் என் பழைய நினைவுகள் சம்பந்தமாக எழுதியிருந்தேன். (In memory yet green). இப்போதும் கண்களை மூடிக் கொண்டால் 1951-லிருந்து நினைவுகள் ஆரம்பிக்கின்றன. என்னுடன் சமீபத்தில் (1975-ல்) பிரெஞ்சு படித்தப் பெண்ணிடம் "பார்த்திபன் கனவு" படம் ரீஸன்டா 1960-ல் வெளியானது என்றுக் கூற அவள் உடனே "ராகவன், அப்போது எனக்கு 2 வயது" என்றுக் கூற ஒரே சிரிப்புத்தான் போங்கள். இருந்தாலும் இவ்வழக்கம் என்னை விடவே இல்லை.
அதை விடுங்கள். மெரினா பீச்சைப் பற்றி அவ்வாறு யார் முதலில் கூறியிருப்பார்கள்? திருவாளர்கள் முத்தையா மற்றும் ராண்டார் கையிடம்தான் கேட்க வேண்டும் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Marina is world's second largest sand beach... not the second most beautiful.
-dyno
சமீபத்தில 1955-ல நான் பூலோகத்தில பிறக்கனுமா வேண்டாமான்னு முடிவு கூட எடுக்கல, தெரியுமா?
சமீபத்தில 1955-ல நான் பூலோகத்தில பிறக்கனுமா வேண்டாமான்னு முடிவு கூட எடுக்கல, தெரியுமா?
"மெரினா கடற்கரை உலகத்திலேயே இரண்டாவது அழகியக் கடற்கரை" என்றுதான் என் ஐந்தாம் வகுப்புப் பாட புத்தகத்தில் போட்டிருந்தது. இதே வாக்கியத்தை அடித் தொண்டையில் உருப் போட்டுக் கொண்டேயிருந்ததில் மனதில் இதுவே பதிஞ்சுப் போச்சு.
அது இருக்கட்டும், முதல் இடம் எந்தக் கடற்கரைக்கோ? இவ்வாறு வரிசைப் படுத்தியது யார்?இவ்வளவு ஆண்டுகளும் இதே நிலைதானா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//முதல் இடம் எந்தக் கடற்கரைக்கோ?//
ரியோ டி ஜெனிரோ. நான் பாத்ததில்லை. இஸ்கூல் பாடபுஸ்தகத்தில் படித்ததுதான்.
இரண்டாவது பெரிய மணற்கடற்கரை என்பதும் சரியானதே! பெரிய என்பதை பலர் நீளமான என்று தவறாக அர்த்தம் கொள்கிறார்கள். பெரிய என்பது கடல் அலையிலிருந்து மணல் முடியும் வரையான (நெடுக்கு வாட்டில்) தூரத்தைக் குறிக்கிறது
Hello dondu sir,
Your posts are excellent, iam going thru your archive postings and its interesting, on reading your blog and other blogs i got interest to start myself, but not sure how to go with tamil typing, started with thanglish typing. When u get time pls do drop in and give your comments about it.
ஆணி பிடுங்கணும் அவர்களே,
சுரதா பெட்டியை பாவித்து தமிழில் தட்டச்சு செய்யலாம். பார்க்க: http://www.suratha.com/unicode.htm
இதில் இரண்டு பெட்டிகள் உள்ளன. அவற்றுக்கு நடுவில் ரேடியோ பட்டன்ககள் உள்ளன. அதில் தமிங்க்ளிஷ் தெரிவு செய்யவும். பிறகு மேல் பெட்டியில் தமிழை ஆங்கில எழுத்துக்களில் அடிக்கவும். உதாரணத்துக்கு:
ammaa --> அம்மா
appaa --> அப்பா
அன்புடன்,
டோண்டு ராகவன்
Hello dondu sir
ROmbha nandri,
By the way, Unga Id-la with number #4800161 kacha muchanu ore ketavaarthai potu oruthar comment poturukaar, i hope it was the polyaar one problem which u faced earlier, still i checked all the necessary things like using mouse the number shows the same on hyperlink with ur name and it goes to your blogspot link. Not sure why it has come like this. Just to inform you. Your advice would be better to deal this type of comments.
Remove the "other" option. The socalled comment from me with the blogger number coming up with mouseover option will not contain my photo, I should guess.
But if you had not activated the option for profile photo display in your commenting page, it will not help.
Whatevet it is, just remove the "other option", I would advise you.
Regards,
Dondu N.Raghavan
அழகிய கடற்கரையா இல்லை அழுகிய கடற்கரையா... சரியா பாருங்கோ
Post a Comment