நேற்று காலை வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு ஆன்சைட் மொழிபெயர்ப்பு வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது இணைய நாடோடி செல்ல துரை என்னை சந்திக்க விரும்புவதாக நண்பர் மா.சிவகுமார் அவரகளிடமிருந்து செல் பேசியில் அழைப்பு வந்தது. நானும் அவரை சந்திக்க எண்ணியிருந்தேன். ஆகவே சிவகுமார் அவர்களிடம் செல்லத் துரை அவர்கள் என்னுடன் பேசுமாறு கேட்டுக் கொள்ள சொன்னேன். அதே போல சில நிமிடங்களில் அவரும் என்னை அழைத்தார். அப்போது வேலை எவ்வளவு நேரம் எடுக்கும் எனத் தெரியாததால் மறுபடியும் மாலை வேலை முடிந்ததும் பேசுவதாகக் கூறினேன்.
வேலை முடிய மாலை 5 ஆகி விட்டது. பிறகு செல் பேசியில் செல்லா அவர்களுடன் பேச முயற்சித்தால் செல் அணைக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வந்தது (அவர் செல்லில் அப்போது சார்ஜ் தீர்ந்து விட்டிருந்தது என்பதை செல்லா நேரில் பேசும்போது தெளிவுபடுத்தினார்). ஆகவே மாசிவகுமார் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அவர் இரவு 8 மணியளவில் செல்லா அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு வருவதாக சொன்னார். நானும் வருவதாகக் கூறினேன். சிறிது நேரம் கழித்து செல்லா அவர்களிடமும் பேசி இதை கன்ஃபர்ம் செய்தேன்.
எக்மோரில் உள்ள அவர் அறைக்கு சென்றபோது மாலை மணி 7.30. சிவகுமார் அவர்கள் இன்னும் வந்திருக்கவில்லை. முதல் முறையாக சந்திக்கும்போது செல்லா அவர்களுடன் வெகு நாள் பழகியது போன்ற உணர்வு. மனிதர் துறுதுறுவென்று இருக்கிறார். செல்பேசி காமெரா இயங்கி கொண்டே இருந்தது. ஏற்கனவே எடுத்த படங்களை மின்னஞ்சல் மூலம் தனது தளத்துக்கு அனுப்பிவிட்டதாக அவர் கூறியது ஆச்சரியத்தை விளைவிக்கவில்லை. அவ்வளவு வேகம் அவருக்கு. பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த இடத்தில் சற்றே திசை திருப்பலுக்கு மன்னிக்கவும்.
சமீபத்தில் 1964-ல் தனுஷ்கோடி புயல் முடிந்த சமயத்தில் குமுதத்தில் ஒரு கதை வந்தது. அதில் அறிஞர் அண்ணா, பெரியார், ராஜாஜி, காமராஜ் மற்றும் கதாசிரியர் ஒரு தனித்தீவில் மாட்டிக் கொண்டதாக அதில் இருக்கும். அதில் எல்லோரும் கொள்ளைக்காரர்களிடம் மாட்டிக் கொள்ள ஒரே கலாட்டா. பிறகு ராஜாஜி அவர்கள் ஒரு உபாயம் கண்டுபிடித்து, காமராஜ் மற்றும் அண்ணாவுக்கு கூற, அதன்படி போலீஸை வரவழைத்து கொள்ளையர்களைப் பிடிப்பதாகக் கதை போகிறது. அது பற்றி பிறகு. அக்கதையில் ஒரு இடத்தில் திடீரென அண்ணாவின் கை உயர்ந்து அவரால் கையை கீழே இறக்க இயலாது போக, எல்லோரும் திகைக்க, கொள்ளையர் தலைவன் மட்டும் கண்டு கொள்கிறான், அண்ணா அவர்கள் சீட்டாட்டம் ஆடும் பழக்கத்தில் அடிக்கடி டிக்ளேர் செய்வதற்காக கையை உயர்த்துவார் என்று. அதன்படி எல்லோரும் சீட்டாட ஆரம்பித்து என்று கதை மேலே செல்லும்.
இக்கதையை டோண்டு ராகவன் இங்கு ஏன் கூறவேண்டும், சமீபத்தில் 1964 என்றெல்லாம் இல்லாமல் அவனுக்கு எழுத வராதா என்று எல்லோரும் டென்ஷனுடன் குழம்பும் முன்னால் இங்கே விளக்கி விடுகிறேன். செல்லா அவர்கள் எப்போதும் இடது கையை முன்னால் உயர்த்தி வைத்துக் கொள்கிறார். அதுவும் பழக்கம் காரணமாகத்தான் என்பதற்கு இப்பதிவின் துவக்கத்தில் உள்ள போட்டோவே சான்று.
மாலை 8 மணிக்கு மேல் சிவகுமார் வந்து சேர்ந்து கொண்டார். பேச்சு பல விஷயங்களைத் தொட்டுச் சென்றது. செல்லாவும் சிவகுமாரும் பல ஆண்டுகளாக ஒருவர் இன்னொருவருக்கு பரிச்சயம், ஆகவே பேச நிறைய விஷயங்கள் இருந்ததில் ஆச்சரியமே இல்லை. ஆனால் அப்போதுதான் நேரில் சந்தித்த எனக்கும் செல்லா அவர்களிடம் நிறைய விஷயங்களைப் பற்றி பேச முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. Putting a man at ease என்பது அவருக்கு இயற்கையாக வருகிறது. மா.சிவகுமாரைப் பற்றிக் கூறவே வேண்டாம். நிறைய நேர்மறை எண்ணக் கருத்துக்களை உடையவர். அவர்கள் இருவருடன் ஒருசேர பேச முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
அரசியல் பற்றி நான் என்ன எழுதினாலும் அதை படித்து விடுவதாக செல்லா கூறினார். அவருடன் தேதிக்கு கிழமை கூறுவது, எனது வாழ்வில் சந்தித்த ஹைப்பர் லிங்க்குகள் ஆகியவற்றைப் பற்றி நான் போட்டிருந்த இடுகைகளைப் பற்றி நான் கூறியதை ஆர்வத்துடன் கேட்டார்.
செல்லா அவர்கள் அப்போது எடுக்கும் போட்டோக்களை அவர் பக்கத்திலிருந்து நகலெடுத்து எனது வலைப்பூவில் ஒட்ட அவர் அனுமதியும் பெற்றேன். இப்போது போட்டோக்கள்.
மா.சிவகுமார், டோண்டு
செல்லா, டோண்டு
அன்புடன்,
டோண்டு ராகவன்
5 comments:
இன்னும் சாவலியா நீ?
"Anonymous Hat gesagt…
இன்னும் சாவலியா நீ?
January 06, 2007 7:42 AM"
இப்போதைக்குப் போவதாக இல்லை. :)))))))
டோண்டு ராகவன்
"Anonymous Hat gesagt…
இன்னும் சாவலியா நீ?
January 06, 2007 7:42 AM"
என்ன ஆச்சு டோண்டு சார்? திடீர்னு இந்த அனானிமஸுக்கு என்ன கேடுகாலம்? இப்டியெல்லாம் பின்னூட்டம்? நீங்க வேற அதையெல்லாம் வெளியிட்டிட்டு?
ஓ, புரியறது. இப்ப இந்த அனானிமஸ் உண்மையிலேயே யாருன்னு சொல்லாம சொல்லத்தானே இந்த வேலை செஞ்சிருக்கீங்க?
கட்டபொம்மன்
என்ன பிரகாஷ் சார் டோண்டு ஐயா காரணத்தோடத்தான் அந்த அனானியின் பின்னூட்டத்தைப் போட்டார்னு தெளிவாத் தெரியுதே.
கட்டபொம்மன்
I would like to make it clear to my fellow bloggers that Thamizmanam may in no way be dragged into controversies among bloggers. As such Thamizmanam is doing a great service and that too under a set of very difficult circumstances.
Regards,
Dondu N.Raghavan
Post a Comment