மண்டபத்திலிருந்து தருமிக்கு பாட்டெழுதி அதை தருமிக்கு சொக்கநாதப் பெருமான் தர, தருமி சண்பக பாண்டியன் அரசவைக்கு சென்று ஒவ்வொருவரையாக அரசர் என நினைத்து விளித்து, பிறகு கடைசியாக அரசனிடம் வந்து, "பார்வேந்தே, என்னைப் பார் வேந்தே" என்றெல்லாம் கூறி, பாடலை வேகமாகப் படித்து பரிசு பெறும் சமயத்தில்... அப்பா மூச்சு வாங்கிக்கிறேன்.
இப்போது இப்பதிவுக்கு வருகிறேன். தருமியின் பாட்டில் பொருட்குற்றம் இருப்பதாக நக்கீரன் கூறுகிறான். ஏனெனில் கூந்தலுக்கு இயற்கைமணம் கிடையாதாம். அதைப் பற்றி நான் போட்ட பதிவில் பொருட்குற்றம் செய்தது நக்கீரனே என்பதையும் எழுதியிருந்தேன். அதுவும் இப்பதிவின் விஷயம் அல்ல, ஆகவே சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுவான் இந்த டோண்டு ராகவன் உப்பிலி கதைப் பதிவைப் போல என டென்ஷன் கொள்ளவேண்டாம்.
நான் பேச வந்தது இலக்கிய உலகில் பொருட்குற்றத்தின் நிலை பற்றியே.
முதலில் சுஜாதா அவர்களிடமிருந்து ஆரம்பிக்கிறேன். இளா அவர்களது இப்பதிவில் கூறியது உண்மையே. ஆண் சிங்கம் ஒரு சோம்பேறி. பெண்சிங்கங்கள் வேட்டையாடுவதைத்தான் அது உண்ணும். ஆகவே ஒருவனை சிங்கம்டா நீ என்றால், அதற்கு ஒருவன் மனம்கிழ்வதில் பொருளே இல்லை. ஆக, சுஜாதா செய்தது பொருட்குற்றத்தில் வரும். அவர் மட்டுமல்ல சிங்கத்தை ஒப்பிட்டு கவிதைகள் இயற்றியுள்ள எல்லோருமே அக்குற்றத்தை செய்தவர்கள்தான். நக்கீரனுக்காவது ப்ளஸ் டூ படித்த அனுபவம் இல்லை என்ற சாக்கு உண்டு. சுஜாதாவுக்கு அதுவும் கிடையாது. ஆகவே அவர் செய்த பொருட்குற்றம் சீரியசானதுதான். ஆனால் ஒன்று குற்றத்துக்கு குறைத்து கொண்டு மீதியைத் தரவில்லை (நன்றி தருமி (பதிவர் அல்ல) அவர்களே). முழுப்பணமே தந்து மேலும் கௌரவிக்க இருக்கிறார்கள்.
நான் கண்ட பொருட்குற்றங்களைக் கூறுகிறேன்.
"மௌன கீதங்கள்" படத்தில் "டாடி டாடி" என்னும் பாடலில் கடற்கரையில் இருக்கும் நண்டுகள் எல்லாம் தத்தம் தாய் தந்தையருடன் சேர்ந்து வாழும்போது நாம் வாழ இயலவில்லையே என கதாநாயகனின் மகன் கூறுவதாக வரிகள் வரும். உண்மை என்னவென்றால், தாய் நண்டு குஞ்சுகள் பொறிக்கும்போது, முதுகு வெடித்து இறந்து விடும். முக்கியமாக மிருகங்களிடம் தாய், தந்தை, அதை, மாமா உறவுமுறைகள் கிடையாது. ஆகவே வைரமுத்து அவர்கள் செய்ததும் பொருட்குற்றமே என்றால் அவரது சிஷ்யகோடிகள் என்னை அடிக்க வருவார்கள். சுஜாதா ரசிகர்கள் மட்டும் என்னை அடிக்கவரமாட்டார்கள் என்றால், என்னைவிட அவருக்கு பெரிய ரசிகன் இருக்கமுடியாது என நானே கூறிவிடுவேன்.
இப்போது நான் ஏற்கனவே கூறியபடி திருக்குறள் பரிமேலழகர் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு வேலையில் எனது மனைவியின் அத்தையன்பருக்கு உதவி செய்து வருகிறேன். நேற்றுதான் காமத்துப்பாலின் இக்குறளுக்கு வந்தேன்.
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு ...... (குறள் எண் 1081)
"எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்", என உருகி வழிகிறான் (ரொம்பத்தான் வழியறான் இல்லை?) தலைவன். அவனிடம் போய் "ஐயா ஆண்மயில்தான் அழகு, ஆகவே இப்பெண்ணை மயிலுடன் ஒப்பிடுவது தவறு" எனக் கூறினால் உதைக்க மாட்டானா அவன்?
எனது ஒரு புதிர்கள் பதிவில் நான் கேட்ட கேள்வி, டொனால்ட் டக் விஷயத்தில் வால்ட் டிஸ்னி அவர்கள் பொருட்குற்றம் செய்தார், அது என்ன என்று? அக்கேள்வியை பல பதிவுகளுக்கு கேரி ஓவர் செய்ய வேண்டியதாயிற்று என்பது வேறு விஷயம். டக் என்பது பெண்பால் டிரேக் என்பதுதான் சரி. ஆனால் அதற்குள் டொனால்ட் டக் மிகப்பிரபலம் அடைந்து விடவே பொருட்குற்றத்தை நீக்க இயலவில்லை.
சமாதானப்புறா என்று எழுதுபவர்களும் பொருட்குற்றம் செய்கிறார்கள். புறாவைப் போன்ற கொடூரத்தன்மை வாய்ந்த பறவையைக் காண்பது துர்லபமே.
இதையெல்லாம் போய் யாரிடம் கூறுவது? ஆகவே உங்களிடம் இப்பதிவு மூலம் கூறுவது,
அன்புடன்,
டோண்டு ராகவன்
புத்தாண்டு
-
புத்தாண்டில் வழக்கமான மலைத்தங்குமிடத்தில் இருப்பேன். (31 காலைமுதல் 1 மாலை
வரை) ஆர்வமிருக்கும் நண்பர்கள் வந்து என்னுடன் தங்கலாம். செலவுகளைப்
பகிர்ந்துகொள்ளு...
6 minutes ago
41 comments:
அருமையான பதிவு டோண்டு அவர்களே
நீங்கள் மொழிபெயர்த்து தருகிறேன் என்ற கதை என்னாச்சு
சுவாரசியமான பதிவு. மிக்க நன்றி.
//நீங்கள் மொழிபெயர்த்து தருகிறேன் என்ற கதை என்னாச்சு//
சற்று என் நினைவை இற்றைப்படுத்த இயலுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
http://rajakkal3.blogspot.com/ - Pl. help me add my blog in to add in tamilmanam
Thanks
//Pl. help me add my blog in to add in tamilmanam//
தமிழ்மணத்தில் இந்தப் பக்கத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் உண்டு. பார்க்க: http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=help
Thanks., tried , but not sucessful, let me try again!
//Thanks., tried , but not sucessful, let me try again!//
முதலில் நீங்கள் மூன்று பதிவுகளுக்குக் குறையாமல் போட வேண்டும். அதை க்கூற மறந்து விட்டேன். மன்னிக்கவும்.
மேலும் அவர்கள் இணைப்பை உடனேயே தருவதில்லை. சற்று அவதானிக்கிறார்கள் என நினைக்கிறேன்.
வெற்றி உண்டாகட்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
/*"எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்", என உருகி வழிகிறான் (ரொம்பத்தான் வழியறான் இல்லை?) தலைவன். அவனிடம் போய் "ஐயா ஆண்மயில்தான் அழகு, ஆகவே இப்பெண்ணை மயிலுடன் ஒப்பிடுவது தவறு" எனக் கூறினால் உதைக்க மாட்டானா அவன்?*/
ஆங்கிலத்தில் அனாலஜி என்று சொல்வர்க்ள்...அதை போல் இது என்று...அதுக்காக அதுக்கு இருக்கிறது எல்லாம் இதுக்கும் இருக்கனுமின்னு அவசியம் இல்லை
...Romba kastama irukku tamila type panna konjam gap vittukiren..
..Kurala sonna anubavikkanum arayakoodathu..Purtha..
மயிலைத்தானே சொன்னார்கள் ?
பெண் மயில் என்று குறிப்பிட்டதாக தெரியவில்லையே. :)
அனானி முன்னா
தலைவா,
முதல் மறுமொழி போலியானது.
உண்மையான மன்றம் என்றைக்கும் அதர் ஆப்ஷனில்தான் வரும். போலியை நீக்கிவிடவும்.
டோண்டு ரசிகர் மன்றம்
தலைமை கிளை - நங்கநல்லுர்
// முதுகு வெடித்து இறந்து விடும்.//
இதுவும் தவறு குஞ்சுகள் தாயின் முதுகில் தான் பெரும்பாலும் ஓய்வு கொள்ளும் அதைப் பார்த்தவர்கள் தாய் நண்டின் வயிற்றைப் பிளந்து குஞ்சுகள் வருவதாக எண்ணுகிண்றனர். நேஷனல் ஜியகிரபியில் இதைப் பற்றிக் கூறினார்கள்
//நேஷனல் ஜியகிரபியில் இதைப் பற்றிக் கூறினார்கள்//
தகவலுக்கு நன்றி. ஆனால் இதே மாதிரி தேளையும் நான் பார்த்திருக்கிறேன். என்ன, நிஜமாகவே ஓய்வு கொள்கின்றனவா என்றா பார்க்க முடியும்? ஒட்டு மொத்தமாக கம்பு கொண்டு நிரந்தர ஓய்வுக்கு அனுப்பியதுதானே நடந்தது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
திருவள்ளுவர் மட்டுமல்ல, எல்லா கவிஞர்களுமே பெண்ணை மயிலன்ன சாயல் என வர்ணிப்பார்கள். அவற்றில் பலர் பெண்மயில் என்றே பொருள் கொள்வர். உண்மை கூறப்போனால் அதைப் பற்றி நினைத்துக் கூட பார்ப்பது கிடையாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்ப என்னதான் சொல்லவரீங்க. சுஜாதா
சொன்னாலும் குற்றம் குற்றமே.
//இப்ப என்னதான் சொல்லவரீங்க. சுஜாதா சொன்னாலும் குற்றம் குற்றமே.//
அதில் என்ன சந்தேகம்? நான் எழுதினேனே:
"அவர் மட்டுமல்ல சிங்கத்தை ஒப்பிட்டு கவிதைகள் இயற்றியுள்ள எல்லோருமே அக்குற்றத்தை செய்தவர்கள்தான். நக்கீரனுக்காவது ப்ளஸ் டூ படித்த அனுபவம் இல்லை என்ற சாக்கு உண்டு. சுஜாதாவுக்கு அதுவும் கிடையாது. ஆகவே அவர் செய்த பொருட்குற்றம் சீரியசானதுதான்".
இதையும் எழுதினேன்:
"ஆனால் ஒன்று குற்றத்துக்கு குறைத்து கொண்டு மீதியைத் தரவில்லை (நன்றி தருமி (பதிவர் அல்ல) அவர்களே). முழுப்பணமே தந்து மேலும் கௌரவிக்க இருக்கிறார்கள்".
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆகஸ்டு வலைப்பதிவு மீட்டிங்கில் உங்களுக்கு பிடித்த சிக்கன் பிரியாணியும், பீரும், சிகரெட்டும் ஓசியில் தறாங்களாம். போறீங்களா அய்யா?
உங்கள் எழுத்தை படிக்காமல் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை, எழுத்தி நிப்பாட்டி விடாதீங்க முரளி மனோஹர் சார்.
ஓசியில் பீரும் சிக்கன் பிரியாணியும் கிடைத்தால் எவன் கூப்பிட்டாலும் போவீங்களா நோண்டு சார்?
சிவக்குமார் ஒருவரைத் தவிர மீதி எல்லா திராவிட பசங்களும் உங்களை வெறுக்கிறார்களாமே அது உண்மையா?
//ஆகஸ்டு வலைப்பதிவு மீட்டிங்கில் உங்களுக்கு பிடித்த சிக்கன் பிரியாணியும், பீரும், சிகரெட்டும் ஓசியில் தறாங்களாம். போறீங்களா அய்யா?//
ஆகஸ்ட் வலைப்பதிவு மீட்டிங்குக்கு நன்கொடை கேட்டு வந்த பதிவுக்கு எதிர்வினையாக, அப்பதிவில் அதற்காகவே குறிப்பிட்டிருந்த மா.சிவகுமார் அவர்களது முகவரிக்கு நேற்றுத்தான் ரூ. 1000-க்கான காசோலை கூரியரில் அனுப்பினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி மடிப்பாக்கம்,
முரளி மனோஹர்
//சிவக்குமார் ஒருவரைத் தவிர மீதி எல்லா திராவிட பசங்களும் உங்களை வெறுக்கிறார்களாமே அது உண்மையா?//
எனது திராவிட நண்பர்களை நினைவிலிருந்து பட்டியலிடுகிறேன்:
அதியமான், செந்தழல் ரவி, சுவனப்பிரியன், நல்லடியார், ஷஹாபுத்தீன், சோம்பேறி பையன், குழலி....
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆகஸ்ட் வலைப்பதிவு மீட்டிங்குக்கு நன்கொடை கேட்டு வந்த பதிவுக்கு எதிர்வினையாக, அப்பதிவில் அதற்காகவே குறிப்பிட்டிருந்த மா.சிவகுமார் அவர்களது முகவரிக்கு நேற்றுத்தான் ரூ. 1000-க்கான காசோலை கூரியரில் அனுப்பினேன்.
//
உங்ககிட்ட பணம் வாங்கவே இல்லை என்று மாசிவக்குமாரும் பாலபாரதியும் சொல்றாங்களே? சல்மா அய்யூப்புக்கு ஆதரவா இருந்த உங்களிடம் பணம் கேப்பாங்களா? சும்மா வெளாடாதீங்க சார்?
செந்தழல்ரவி உங்க நண்பனா? அவர் போலி டோண்டுவின் நெருங்கிய நண்பர் என்று உனக்கு தெரியுமா நோண்டு சார்?
ஓசில எவனாச்சும் பார்ட்டி கொடுத்தா நாக்கை தொங்க போட்டு அலையும் பாப்பார படுவா ராஸ்கோல், நீயா 100 ரூபா அனுப்பி இருக்க போறே?
பூனூல் போட்ட பாப்பானிடம் பணம் வாங்கிய திராவிட நாய்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அமுக என்ற பேரில் உங்களைப் பற்றி அவதூறாக ஒரு பதிவு எழுதி அழித்தார்கள் சோண்டு சில நாட்களுக்கு முன்பு.
சார், திம்மிகள் நடத்தும் வலைப்பதிவு கூட்டத்துக்கு போகாதீங்க. அங்கே உங்களை ஆள் வைத்து கையைக்காலை உடைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது!
நோண்டு சார்,
இன்னிக்கு உங்க பதிவில்தான் கும்மியா?
போகப் போகத் தெரியும் ஒரு போலி, அவனை நம்பாதீங்க.
ஒரு பாப்பான் கோழி பிரியாணி திங்கலாமா? கம்யூனிசத்தில் அதற்கு இடமில்லை!
தலித்துகளை ஏமாற்றிப் பிழைத்து வந்தவன் ஆரியன். பேரா.மார்க்ஸ் என்ன சொல்கிறார் என்றால்...
உங்களோடு நானும் சேர்ந்து கொள்ளலாமா சார்?
நல்ல பதிவு ரசித்தேன்
ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் போய் ரொம்ப நாளாச்சு. இரண்டும் நன்றாக கலந்து பல ஆயிரம் வருடங்கள் ஆயிற்று. இல்லாவிடில் அதிமுக விற்கு ஜெயா எப்படி தலைவியாக இருக்க முடியும்?
இது தெரியாமல் இன்னும் திராவிடம் பேசும் வெண்ணைகளை எந்த எண்ணெய் கொப்புறையில் போடலாம்.
- ஆறாத ஆரியன்
>>>நக்கீரனுக்காவது ப்ளஸ் டூ படித்த அனுபவம் இல்லை என்ற சாக்கு உண்டு. சுஜாதாவுக்கு அதுவும் கிடையாது
AFAIK, Sujatha studied SSLC & PUC not +2 :-)
//AFAIK, Sujatha studied SSLC & PUC not +2 :-)//
இல்லை நான் சொன்னதுதான் சரி. சுஜாதாவும் S.S.L.C-க்கு அப்புறம் ப்ளஸ் டூ தான் படித்தார். அதாவது இண்டர்மீட்யட். என்ன இந்த ப்ளஸ் டூ சற்று வேறு.
இப்போது இருப்பது 11 & 12 ஆனால் அப்போது இருந்தது 12 & 13.
சமீபத்தில் 1956/57 கல்வியாண்டிலிருந்துதான் பி.யு.சி. வந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல விசாரணை.
தருமி தந்த பிரச்சனைக்குறிய பாடலில் வரும் 'கொங்கு தேர் வாழ்கை அம்சிறைத் தும்பி'. இதில் பொருள் குற்றம் உள்ளதா... அதாவது உண்மையிலேயே வண்டிற்கு பூவின் மணத்தை உணரும் சக்தி இருக்கிறதா?
ப்ரவீண் அவர்களே,
கண்டிப்பாக வண்டுகளுகு முகரும் சக்தி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எப்படி அது பூக்களைக் கண்டறியுமாம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment