இவ்வார துக்ளக்கில் (29.08.2007) சோ அவர்கள் "மக்கள் அதிகாரம் இல்லாத அரசுகள்" என்ற தலைப்பில் மிக அருமையான தலையங்கம் எழுதியுள்ளார். இத்தலைப்புடன் மாறுபடுகிறானா இந்த டோண்டு ராகவன்? இல்லை.
மத்திய அரசை இடது சாரிகள் மிரட்டுகின்றனர். தமிழக அரசை பா.ம.க. சித்ரவதை செய்கிறது. ஆனாலும் தத்தம் ஆதரவை வாபஸ் பெறப் போவதில்லை என்றே கூறி வருகின்றனர். இக்கருத்துடன் மாறுபடுகிறேனா நான்? இல்லை.
மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி ஏன் இந்தத் தொல்லையை, இந்த அவமதிப்பை, இந்த அவமானத்தை, ஏன் இப்படி சகித்து கொள்கின்றனர்? காரணம் தகுதியின்மை. இரு அரசுகளுமே மக்களால் ஆட்சியில் அமர்த்தப்படவில்லை. மக்கள் அதிகாரம் இவர்களுக்கு இல்லை. காங்கிரஸ் மெஜாரிட்டியை பெறவில்லை. அது அமைத்த கூட்டணி கூட அதைப் பெறவில்லை. ஆகவே தேர்தலில் தன்னை கடுமையாக எதிர்த்த இடது சாரிகளின் ஆதரவை வெளியிலிருந்து பெற்றுத்தான் ஆட்சி அமைக்க முடிந்தது. இடது சாரிகள் ஆதரவை வாபஸ் வாங்கினால் காங்கிரஸ் வெளியேற வேண்டியதுதான். அதே போல காங்கிரசை எதிர்த்து மக்களிடம் ஓட்டு வாங்கிய இடதுசாரிகளும் காங்கிரசை ஆதரித்தது மக்கள் கருத்தை எதிர்த்தே. தமிழகத்தில் நிலைமை சற்றே வேறு. தேர்தல் சமயத்தில் கூட்டணி அரசு வரும் எனக் கூறி விட்டு கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த நிலையில் தனிப் பெரும்பான்மை இல்லாத தி.மு.க. மட்டும் கூட்டணியின் பெரும்பான்மையை தனது பெரும்பான்மை போல பாவித்து ஆட்சி அமைத்தது. இந்தத் தகுதியின்மை திமுகவை மைனாரிட்டி அரசு என ஜெயலலிதா தினமும் கூறி இம்சை செய்வதற்கு மேலே சொன்னதுதான் காரணம். இக்கருத்துடன் மாறுபடுகிறானா இந்த 61 வயது இளைஞன்? இல்லை.
ஆக, மக்கள் அதிகாரம் அளிக்காத போதே, அரசியல் பேரங்களைப் பயன்படுத்தி, அந்த அதிகாரத்தை அபகரித்துக் கொண்டவைதான் மத்திய - மாநில அரசுகள். இக்கருத்துடன் ஏதேனும் வேறுபாடு இவனுக்கிருக்கிறதா? இல்லவே இல்லை.
"தேர்தலில் நிற்பவர்களை 'ஓட்டுப் பொறுக்கிகள்' என்று வர்ணித்த, தி.மு.க.வின் இறைவனாகிய பெரியார் இன்று இருந்திருந்தால் இந்த மாதிரி அரசை ஆதரவு பொறுக்கிகள் என வர்ணித்திருப்பாரோ என்னவோ? நாம் அப்படிச் சொல்லவில்லை." என்ற இவ்வரிகளின் மாறுபடுகிறானா டோண்டு? ஆம், இக்கருத்தில் மட்டும் மிகவும் சற்றே மாறுபடுகிறான் அவன்.
இப்போது டோண்டு ராகவன் கூறுவது. பெரியார் அவ்வாறு நிச்சயம் கூறியிருக்க மாட்டார் என்பதுதான் எனது துணிபு. 1954-லிருந்து 1967 வரை இடைவிடாத காங்கிரஸ் ஆதரவு. பச்சைத் தமிழர் காமராஜ், திராவிட இயக்கத் தலைவரான அண்ணாவோ கண்ணீர்த்துளி மட்டுமே என்ற ரேஞ்சில்தான் இருந்தது அந்த ஆதரவு. 1965-ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையே எதிர்த்தவர் அவர், எல்லாம் காங்கிரசுக்கு ஆதரவு தந்ததால்தான்.
1967-ல் காங்கிரஸ் அரசு மறைந்தது. திமுக அரசு வந்தது. உடனடியாக தன் நிலையை மாற்றிக் கொண்டார் பெரியார். கீழ்வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள், அவர்தம் பெண்டிர் மற்றும் குழந்தைகள் ஆகியோரை கோபாலகிருஷ்ண நாயுடுவும், அடியாட்களும் தீவைத்து கொளுத்தியதை கண்டிக்காது சொதப்பலாக அவர் கருத்து கூறியதற்கும் அரசுக்கு அவர் அளித்து வந்த ஆதரவே காரணம்.
ஆக ஆதரவுக்காக சமரசங்களை செய்யத் துணிந்தவர் பெரியார் என்பதாலும், அதே முறையில் மான அவமானம் பார்க்காமல் இப்போதைய அரசு பாமக செய்யும் அவமானங்களை பொறுத்துக் கொள்வதன் மூலம் பெரியாருக்கு ஏற்ற சீடர்கள் என்பதே எனது கருத்து. இந்த விஷயத்தில் மட்டும் சோ அவர்களுடன் மிகச் சற்றே மாறுபடுகிறான் இந்த டோண்டு ராகவன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
8 hours ago
30 comments:
.08.1007
2007 என்று வரவேண்டும்.
//.08.1007
2007 என்று வரவேண்டும்//
சுட்டி காட்டியதற்கு நன்றி. மாற்றியாகி விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
61 வயது இளைஞன் என்று சொல்வதை மட்டும் நிறுத்தினால் பரவாயில்லை.பென்சன் பற்றி பதிவு போட்டுவிட்டு நான் இளைஞன் என்றால் மு.க ஸ்டாலினை இள்ளைஞரணி தலைவராக இன்னமும் வைத்திருப்பது போல் இருக்கு:-)
போன பதிவில் குட்டியது மாதிரி இதற்கும் குட்டி விடாதீர்கள்-)
பதிவை பற்றிய கமெண்ட்.
கருணாநிதி, ராம்தாஸ் சண்டையை பார்த்தால் ஜயராமன் எழுதிய மாடு,கட்டை உதாரணம் தான் ஞாபகத்துக்கு வருகிறது.சிறப்பான பதிவு அது
61 வயது இளைஞன் தன்னை 61 வயது இளைஞன் என்று சொல்லிக் கொள்ளும்போது 61 வயது இளைஞன் என்று கூறவேண்டாம் என வரும் ஆலோசனையை இந்த 61 வயது இளைஞன் ஏற்க மறுத்தால் இந்த 61 வயது இளைஞன் கூறுவது தவறு எனவும் கூறிடலாமோ என்று இந்த 61 வயது இளைஞன் கேட்கிறான்.
அன்புடன்,
61 வயது இளைஞன்
ஒன்றை செய்ய வேண்டாம் என்று கூறினால் அதை வலிந்து செய்யும் பிடிவாதம் சோவுக்கு உண்டு. உதாரணம் பெரியாரின் சீர்திருத்த தமிழ் எழுத்து பற்றிய அவரது நிலை.
இந்த விஷயத்திலும் இந்த 61 வயது இளைஞர் சோவுடன் மாறுபடவே இல்லை:-)
சோ கருணாநிதியை ஆதரித்து பேட்டி கொடுத்திருக்கிறாரே?அந்த கருத்துடன் மாறுபடுகிறீர்களா?
டோண்டு அய்யா,
எனக்கு கொஞ்ச நாளாவே, எந்த கும்பல் உண்மையான, தாடிக்காரரின் சிஷ்யக் கும்பல்னு சந்தேகம் இருந்துக்கிட்டிருக்கு.
மஞ்ச துண்டு அய்யாவும்,கண்ணகி வழி நடந்து மதுரையை எரிக்கும், ஓஸி பிரியாணி அடிக்கும் உடன்பிறப்பு கழிசடை கும்பலா?
மரம்வெட்டி அய்யாவின்,காட்டுமிராண்டி மொழியான தமிழை குடிதாங்குவதாக கூவி,செம்மையா அடி, உதை, குத்து அரசியல் செய்யும் பா ம க வின் காட்டுமிராண்டி ரெளடி கும்பலா?
இரட்டைக் குழல் துப்பாக்கியின் ஒரு குழலான, மானமிகு அய்யாவின் கேவலமான கருப்புசட்டை பொரிக்கி கும்பலா?
கோவிலுக்கு வெளியே யாராவது தாத்தா பூ வித்துக் கொண்டிருந்தா அரிவாளால் வெட்டியும்,ஆஸிட் ஊத்தியும்,அய்யா அவர்கள் சொன்னபடி செம்மையாக வன்முறை செய்யும் பெரியார் தி க வின் கருப்பு வெறி நாய் கும்பலா?
எந்த மூஞ்சிகளைப் பாத்தா, இப்போ தாடிக்கார அய்யா உச்சி குளிர்ந்து போவாரு?கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கய்யா.
பாலா
யார் வரவேண்டும்என்று வேண்டுமானால் பெரியார் குழம்பியிருக்கலாம்.. ஆனால் யார் வரக்கூடாது என்பதில் அவர் மிகமிக தெளிவாக இருந்தார் என்பது வரலாறு! :-)!
பெரியார் நிச்சயம் வரவேற்புதான் செய்திருப்பார். அவருக்கு என்றைக்குமே அவருடைய கொள்கைதான் முக்கியம். அந்தக் கொள்கைகளுக்காக யாருடனும் சமரசம் செய்து கொள்ள அவர் தயாராகவே இருந்தார். பச்சைத் தமிழனை ஜெயிக்க வைத்தே தீர வேண்டும். காமராஜர் ஜெயிக்காவிட்டால் தமிழகத்திற்கு விடிவு காலமே கிடையாது என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்தவர் அண்ணா ஜெயித்தவுடன், நேரில் வந்து சந்தித்தவுடன் தனது கொள்கைகளை பட்டவர்த்தனமாகப் பரப்ப, தான் உரிமையோடு தோள் மீது கை போட்டு கேட்கலாமே என்ற எண்ணத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பேசவும், எழுதவும் செய்தார். இங்கே அவர் சமரசம் செய்து கொண்டது தனக்காக அல்ல.. தான் கொண்ட கொள்கைகளுக்காக.. ஸோ.. சோ.. ஸோ.. சோ ஸார் சொன்னதிலிருந்து நானும் மாறுபடுகிறேன்.. நிச்சயம் பெரியார் திராவிடக் கட்சிகளை எதிர்க்கவே மாட்டார்..
//யார் வரவேண்டும்என்று வேண்டுமானால் பெரியார் குழம்பியிருக்கலாம்//
அய்யய்யோ,என்னங்க இது,நம்ம ஓசை செல்லா அய்யா இப்படி தாடிக்காரரை பற்றி கேவலமா,முக்கியமான விஷயங்களில் தெளிவான அறிவோ,பார்வையோ இல்லாதவார்னு எழுதிட்டாரு?
தாடிக்கார தமிழர் தந்தை அவர்கள் எவ்வளவோ விஷயங்களில் யோசித்துப் பாக்காம உளறி இருக்கலாம்;அதுக்காக இப்படியா நச்சுன்னு ஓசை அய்யா கேக்கணும்?
பாலா
பாலா,
பெரியார் 1967-ல் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் மிகத் தெளிவானவராகவே இருந்தார் என்றுதான் அவருடைய அப்போதைய எழுத்துக்களைப் படித்தால் தெரிகிறது. புரிகிறது..
இரண்டு அணிகள் வலுவாக களத்தில் நின்றன. காங்கிரஸ¤க்கு தலைமை கர்மவீரர் காமராசர். எதிரணிக்குத் தலைமை அண்ணா. உடன் துணைக்கு மூதறிஞர் ராஜாஜி. இதில் தி.மு.க. ஆட்சிப் பீடத்தில் அமரக்கூடாது என்பதில் பெரியாருக்கு இருந்த கருத்தில் நாம் குற்றம் காண முடியாது. அவரால் கண்ணீர்த்துளிகளைத் தாங்க முடியவில்லை. அதுதான்..
ஆனால் வெற்றி பெற்றவுடன்.. இனி 5 ஆண்டுகளுக்கு இவர்கள்தான். என்ன இருந்தாலும் நம் பிள்ளைகள். நாம் வளர்த்த பிள்ளைகள். நாம் சொன்னால் கேட்பார்கள். நாம் இத்தனை ஆண்டுகள் ஊர், ஊராகச் சென்று பரப்பியதை நம் பையன்களை வைத்தே பரப்பிவிடலாம் என்று ஆர்வம் கொண்டார். தன்னை நாடி வந்த பிள்ளைகளை அரவணைத்துக் கொண்டார். அதற்காக கர்மவீரரை அதற்குப் பின்பும் அவர் விமர்சித்ததாகத் தெரியவில்லை.
ஸோ செல்லா சொன்னதில் தவறில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் பெரியாரின் அப்போதைய ஒரே கொள்கை. அதற்காகத்தான் காங்கிரஸை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்று முழங்கிய பெரியார் பச்சைத்தமிழன் காமராசரின் கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டியதானது..
இதெல்லாம் பெரியவர்கள் வாழ்க்கையில் மிக சகஜம். அவரவர் நோக்கில் அவரவர் கொள்கை சரியானதாகத்தான் இருக்கும்..
இதில் யார் வர வேண்டும் என்று வேண்டுமானால் பெரியார் குழம்பியிருக்கலாம் என்று செல்லா சொன்னதற்குக் காரணம், தேர்தல் பிரச்சாரத்தின் ஊடே உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் கண்ணீர்த்துளிகளின் உழைப்பையும், திறமையையும் அவர் வெளிப்படையாகவே பாராட்டினார். அவருடைய மனதுக்குள்ளும் ஒரு பட்டிமன்றம் நடந்திருக்குமே.. போதாக்குறைக்கு ஆச்சாரியார் வேறு கிருஷ்ணன் கதாபாத்திரம் செய்கிறார். எப்படி வர விடுவது என்று நினைத்திருப்பார்.
என்னுடைய சொந்தக் கருத்து.. ஒருவேளை அந்தத் தேர்தலில் ஆச்சாரியார் காமராசருடன் கூட்டணி வைத்திருந்தால் பெரியார் காலத்தின் கட்டாயமாக அண்ணாவை ஆதரித்திருப்பார் என்று நம்புகிறேன்..
//அதற்காக கர்மவீரரை அதற்குப் பின்பும் அவர் விமர்சித்ததாகத் தெரியவில்லை.//
அறுபதுகளின் இறுதியில் அவர் காமராஜருடனும் அண்ணாவுடனும் எடுத்து கொண்ட இரு தனி படங்களை பற்றி பேசும் போது அண்ணாவுடன் இருந்த படத்தில் காணப்படும் தனது புன்னகை இதயத்திலிருந்து வந்ததென்றும் காமராஜர் இருக்கும் படத்தின் புன்னகை அப்படியில்லை என்றும் கூறினார். அதே சமயம் பெரியாருக்கு ஆள்வார்க்கு அடியார் என்ற பெயரும் இருந்தது.
கீழ்வெண்மணி விஷயத்தில் பெரியார் சொதப்பியதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கீழ்வெண்மணி விஷயத்தில் பெரியார் சொதப்பியதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?//
டோண்டு அய்யா,
வேறு என்ன காரணம்?க்ரீமி லேயர் ஓ பி ஸி க்களுக்கே உரிய ஜாதி வெறி தான் காரணம்.
பாலா
//ஸோ செல்லா சொன்னதில் தவறில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் பெரியாரின் அப்போதைய ஒரே கொள்கை. அதற்காகத்தான் காங்கிரஸை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்று முழங்கிய பெரியார் பச்சைத்தமிழன் காமராசரின் கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டியதானது..
இதெல்லாம் பெரியவர்கள் வாழ்க்கையில் மிக சகஜம். அவரவர் நோக்கில் அவரவர் கொள்கை சரியானதாகத்தான் இருக்கும்..//
உண்மைத் தமிழன் அய்யா,
நீங்கள் சொல்வது சரிதான்.ஆனாக்க அய்யா அவர்கள் காங்கிரசை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை என்ற கொள்கையில உறுதியா இருந்தார்.அதற்காக ஆங்கிலேயர்களின் காலை வருடி சுதந்திரம் வேண்டாம் என்று கூட கெஞ்சி பார்த்து கொள்கையில உறுதியா இருந்தார்.அப்புறம் காஞ்சிக்காரர் டூ வீட்டு கட்சி அமைத்தவுடன்,காமராசர் பச்சைத் தமிழன் என்ற உண்மையை பச்சை கன்னடரான அய்யா கண்டுபிடித்தார்.(அதுசரி காஞ்சி அய்யா பச்சைத் தமிழன் இல்லை என்ற அப்போதைய கொள்கையை குஞ்சுகள் எப்படி பொறுத்துக் கொண்டார்கள்?)
இது மாதிரி அப்பப்போ கொள்கையை மாத்தும் கொள்கையில் உறுதியா அய்யா இருந்தார். இதே கொள்கை உறுதியில் அய்யாவைப்போலவே மஞ்ச துண்டு அய்யா,மரம் வெட்டி அய்யா,மானமிகு அய்யா போன்றவர்கள் உறுதியாக இருக்கறதால இவங்க அனைவருமே அய்யாவோட உண்மையான சிஷ்யார்கள் தானா?ஒரே கன்ஃபியூஷனா இருக்குங்கய்யா.நீங்க தான் எந்த கும்பல் உண்மையான சிஷ்யக் கும்பல்னு தீர்ப்பு சொல்லணும்.
பாலா
//இது மாதிரி அப்பப்போ கொள்கையை மாத்தும் கொள்கையில் உறுதியா அய்யா இருந்தார். இதே கொள்கை உறுதியில் அய்யாவைப்போலவே மஞ்ச துண்டு அய்யா,மரம் வெட்டி அய்யா,மானமிகு அய்யா போன்றவர்கள் உறுதியாக இருக்கறதால இவங்க அனைவருமே அய்யாவோட உண்மையான சிஷ்யர்கள்தானா?//
வாழ்த்துக்கள் பாலா. எனது பதிவின் சாரத்தையே இங்கு கூறி விட்டீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பா.ஜ.க வுக்கும், மூன்றாம் அணி கோமாளிகளுக்கும் பதிலாக, தற்போதைய மத்திய அரசு ஒப்புக் கொள்ளக்கூடியதே. மாநில அரசுப் பற்றி விமர்சிக்கலாம் என்றால் ஜெயலலிதா 'என் ஆட்சி என்ன பொற்காலமா?' என்கிறார்.
>>1965-ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையே எதிர்த்தவர் அவர், எல்லாம் காங்கிரசுக்கு ஆதரவு தந்ததால்தான்.
- புரியவில்லை...நேரம் இருந்தால் விளக்குவீர்களா?
>>தீவைத்து கொளுத்தியதை கண்டிக்காது சொதப்பலாக அவர் கருத்து கூறியதற்கும் அரசுக்கு அவர் அளித்து வந்த ஆதரவே காரணம்.
- நான் படிதத வரையில் (இரவி ஸ்ரீனிவாஸ் பதிவு என நினைக்கிறேன்), அவரின் பார்வை கீழ்வெண்மணியே கம்யுனிஸ்டுகளால் உண்டானது என்ற பார்வையில் எழுதியிருந்ததாக நினைவு (தவறிருந்தால் திருத்திக்கொள்வேன்). இன்று வரை பெரியாரின் (விவாதிக்கவேண்டிய) கீழ்வெண்மணியின் பார்வையை அவர் காலத்தவரும் சரி, இப்போதைய தி.க. தலைமையும் சரி, தெளிவுப்படுத்தவில்லை (மாட்டார்கள் என்பதும் ஏறக்குறைய உறுதி).
>>பாமக செய்யும் அவமானங்களை பொறுத்துக் கொள்வதன் மூலம் பெரியாருக்கு ஏற்ற சீடர்கள்...
- மன்னிக்கவும்...பொருந்தவில்லை. பெரியாரின் முதல் குறிக்கோள் மனிதனின் அடிப்படை சுதந்திரம்...பின்பு மற்றவை (நாட்டு சுதந்திரம் உட்பட). இன்றைய கருணாநிதி ஆட்சி முதலில் தன் மகன்/மகள், மிச்சம் இருந்தால் பேராசிரியருக்கு/ஆற்காட்டாருக்கு/பொன்முடிக்கு...தமிழ் மக்களுக்கு மீதி.
Coalition politics is quite normal in many countries (icnl your Israel) ; and CPM opposes Congress purely on issue based matters and nothing personal ego clashes or 'sharing the loot' ; in a diverse and pluralisitic society such differences of opinion among coalition partners is quite normal and healthy (if within reasonable limits). I wonder how you would have commented if BJP finds itself in the same predicament as Congress now !! And BJP headed a coalition thru NDA...
I prefer the current type of normal PMs and accountable govts, compared the tyrannical dictatorship of Indira Gandhi, who had brutal majority in parliament and rode rough shed over any opposition. Thank God that the era of 'super' PMs are over. hopefully affter Mu.Ka and JJ's lifespans, same thing may happen in TN.
Periyar was always clear in his views. He certainly was very honest and forthright. He was very decent and polite in dealing with
everyone. He never used abusive language or singular terms while addressing any Brahmins.
His freindhip and cordial realtionship with his arch rival Rajaji is a lesson to be laernt by his emotional and absuive 'followers' like Polli.
I am sure he would have opposed the creamy layer from being incuded in reservation and dis-owned and loudly condemned people like Polli for using filthy and perverted language, were he alive today.
//I am sure he would have opposed the creamy layer from being incuded in reservation and dis-owned and loudly condemned people like Polli for using filthy and perverted language, were he alive today.//
Dear Mr. Athiyaman,
The idea, that EVR would have supported exclusion of creamy layer,seems to be more of wishful thinking rather than one based on fair assesment of EVRs track record; In my view, EVR never hesitated to use unfair or dishonest means (or foul language for that matter),to garner political and mind space among the so called dravidian Tamil mob .
In fact, it is the filthy language(perverted,as you say) that he used,attracted the semi literate characters (who called themselves dravidians) of whom there was a sizable number in Tamil Nadu,but mercifully not available in rest of South India.
Bala
//dis-owned and loudly condemned people like Polli for using filthy and perverted language, were he alive today.//
அதியமான் அய்யா,
இல்லீங்க.இப்போ ,உயிரோட இருந்திருந்தா, போலி அய்யாவை தி க வோட அஃபிஷியல் ஸ்போக்ஸ் பெர்ஸனா ஆக்கியிருப்பாரு நம்ம தாடிக்கார அய்யா;அய்யாவோட சிஷ்யரான மஞ்ச துண்டு அய்யா, வெற்றிக் கொண்டானை ஆக்கிய மாதிரி.இதில் சந்தேகம் வேண்டாம்.
பாலா
Bala,
you do not seem to know Periyar.
my father has met him and was an ardent DKiate. i have read some of his works. Periyar certainly would have opposed creamy layers from being included in reservation. no need for any wishful thinking. he had no hesitation in calling a spade, a spade. and creamy layers are indeed equivalent to FCs, and this is an open secret. and he would have called for periodic revison of the entire policy based on sound facts and statistics...
and you are wrong in saying that he used filty language. he never used such language while critising any individual (brahmin or others) ; yes, he used harsh words about religious rituals, legends / puranas, communists, etc ; but never ever about any individual. he was most polite and courteous to all around him and treated even kids with respect. (vaanga..)
there is a huge difference in this matter..
and how do you say, he would have appointed this perverted polli annani as spokeman if he were alive ? Periyar was a brave and forthright leader and he would have strongly disapproved of annanis and cowards who hide and abuse people.
don't fall into the trap of equating Periyar with his so called sisyaas like MuKa. it is like equating Gandhiji, Nehru and other old leaders with the current leaders of Congress (as all were/are congress members with the same flag till date). Periyar was against entering into vote bank politics and DMK was intiated precisely for that. and Muka is only rhetoric and never sincere. hence we may not take it seriously.
Pls read what Rajaji and Periyar wrote about their freindhip.
Baala,
Periyar's greatest acheivement is in eradicating caste surnames in TN. Tamilians are the only group in entire India who do not use caste surnames (unlike Nairs, Reddys, Yadavs, etc).
and hindhuva forces are held in check in TN mainly due to the solid foundation he laid thru decades of hard work.
you may have differences with his strong views, but he faced them squarely, unlike this polli...
>K.R.Athiyaman ;13230870032840655763 said...
>Periyar's greatest acheivement is >in eradicating caste surnames in >TN. Tamilians are the only group >in entire India who do not use >caste surnames (unlike Nairs, >Reddys, Yadavs, etc).
That is an illusion KRA. EVRN made sure caste politics thrives in TN and even children are certified with caste for their schools, colleges or jobs. In Kerala or West Bengal or Maharastra, you see all kinds of caste surnmes, but they are far less caste conscious than Tamils. The ultimate test is not what your surname is but how you look at the world and events - i.e. whether it is based on caste. On this test, Tamils are quire casteist.
such kind of castesim is pan-India phenemenon. and caste is recorded in schools for the simple reason for identifying the BC/SC reservation beneficiaries. that too is an all India phenomenan.
agreed that the caste identies have sharpened and more polarised today than in 1970. but that too is a Pan Indian phenemenon and not due to Periyar. UP is more polarised along caste lines in elections than TN. Mayawathi's coalition is the example.
BJP & Co pioneered the way in reaping sharply polarised communal vote banks (that is, Hindu vote bank) with their Ayodhya movement and the infamous ratha yatra.
And Bal Thackerey famously defined Hinduthva as "hinduthva means all hindus should only vote for BJP & Co..."
Caste is part and parcel of hindu religion and since 1989, the leaders of regional parties (esp in UP, bihar belt) consolidated this caste vote banks into eclectoral victory. M.S.Yadav, Lallu, Mayawathi followed the path shown by BJP. before 1980, UP and Bihar poltical scene was totally different from the current one.
TN too was leaning towrds similar paths thru P.M.K and dalith leaders ; but fortunately their hold is limited to smaller regions and as such caste based parties are only secondary to DMK, ADMK and MDMK, etc.
Periyar would fought against such caste based political outfits if he were alive today. he was totally against such identites. he never hesitated to attack any organisation or party if he felt they were not correct or dis-honest.
Periyar has been portrayed only for his anti-brahminsim and athesim. His acheivements are much more : women's rights, anti-supersitious crusade, equal rights for all castes, sceintific outlook of life, etc.
//he never used such language while critising any individual (brahmin or others) ;//
Dear Mr. Athiyaman,
Respecfully, I must submit that you cannot be more wrong,in respect of EVRs foul language.The language he used against Jawaharlal Nehru and Mahatma Gandhi was unaccepatably foul.You can accuse Nehru and Gandhi of many things;but to say that they were casteists is quite filthy really and in my view quite dishonest.
Equally,it is fraudulent to say that brahmins were solely responsible for the caste ills in society where as in reality the people(who now call themselves as OBC) who owned land and wealth in TN were the characters who oppressed the dalits and the economically weak sections of society.Brahmins were never in power in Tamil Nadu.To this day it is these people who are virulently casteist and Periyaar never had the guts to accept that he and his other OBC cronies are the villains in TN.I cannot see anything more dishonest than this stance that EVR took.
The other anonymous has rightly commented that the issue is not whether one's surname is reflective of what can be construed as caste;the real issue is ,whether one carries caste feelings in day to day life and dealings with people of any caste/language/religion .In this regard ,Kerala, Andhra,and even Karnataka are streets ahead of TN.One cannot see a ,more virulently casteist society than TN thanks to the Periyaar legacy.Mercifully, rest of south India did not buy into the falsehoods that EVR fraudulently preached.
Bala
டோண்டு மிக மிக அற்புதமான பதிவு
அதியமான பாலா இருவரின் உரையாடல் இப்படி தான் வாக்குவாதம் இருக்க வேண்டும் என்பதை அடுத்தவருக்கு உணர்த்துவது போல இருக்குகிறது
எனது பின்னோட்டங்களை வெளியிடாமல் இருக்கும் உங்களின் போக்கை கண்டிக்கிறேன்
Bala,
yes, Periyar opposed Gandhiji in many matters, esp his accepteance of 'sanadhana dharma" ; it is not the nomenclature of that term, but interpretations that matter.
i agree that Gandhiji was too great a laeder to have narrow castetist views.
Periyar and Ambedhkar had in occasions opposed independence as they (wrongly) feared that the Brahmin (and FC) elite will replace British raj. you must try to view their angle with the times they lived thru. in those days the great majority of govt posts were held by brahmins (And some FCs) ;
illetracy among non-brahmins was too high, etc.
Pls see this Periyar's article in 1950 carried by the Hindu :
http://www.hindu.com/af/india60/stories/2007081551140800.htm
and this is a mail i had sent :
Subject: reg : creamy layer misusing reservation policy
From : K.R.Athiyaman, Chennai - 96
To : Thriru.Ki.Veeramani Ayya Avargal, Chennai
Anbulla Ayya,
The creamy layer (that is, those who are
upper middle class and above) among
BC/SC/ST communities continue to enjoy
the benifits of reservation unashamedly.
(i hail from such a family).
We propose that economic criteria should
also be included as an additional qualification
for being eligible for reservation benefits.
Families whose annual income is above say,
Rs.1,80,000/- and where the parents are well
educated may be deemed as FCs. And many schools,
where annual fees are above Rs.60,000 may be
classified as FC schools.
Reservation was meant to be a short term
issue and never a permenent institution as
it has become now. And there should be a
standing committe consisting of eminent
jurists, educationalists and honest people
to perodically evaluate the effects/abuse
of reservation benefits. The whole process
should a dynamic one, not a static one, which
is now a vote bank issue and nutured by
vested interests. And there should be a
maximum limit for resrvation (and not the
present >70%), which should be gradually
brought down to zero.
And in promotion among govt staff only
seniority, merit and efficency should be
the criteria. Only one generation of any
family must be eligible for the benefits.
Subsequent generation must be deemed FCs.
Unfair reservation benefits to numerous
well off students has created resentment
and heart burn among FCs and many fair
minded people. The caste divisions has become
more rigid and divisive (esp in govt offices).
I am sure Thandai Periyar and Ambedhkar would
endorse my above views if they are alive today.
They were basicaly honest in all issues.
DK should have functioned as a bridge between
BCs and SCs (esp in rural areas) and established
peace committes for stopping caste clashes.
The aliented SCs have formed many organisations
of their own to fight for their rights, instead
of joinning DK. Blaming brahmins alone for all
the ills of the society will not solve any thing.
Thanks & Regards
K.R.Athiyaman
Chennai
Mr.Athiyaman
You have good ideas. Voices like this must be sufficiently strong to change the politicians priorities as well as general public's perception
"எனது பின்னோட்டங்களை வெளியிடாமல் இருக்கும் உங்களின் போக்கை கண்டிக்கிறேன்"
thambi,
athu Pinootam. pinOttam illai
kalaignar Tv paathu kettu poitiya.
athula munOtta oliparappu panrangale.
Post a Comment