கம்யூனிசத்தின் கோளாறுகளை பற்றி நான் போட்ட பதிவுகள்:
1
2
3
4
ஆனால் அவையெல்லாம் மேக்ரோ அளவில் போடப்பட்டவை. இப்போது கம்யுனிஸ்டுகளால் ஆளப்பட்டு வரும் கேரளாவின் நிலையை மைக்ரோ அளவில் பார்ப்போமா? அதியமான் அவர்களிடமிருந்து எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை பார்த்ததும் எனக்கு தோன்றுவதுதான் இப்பதிவு. முதலில் மின்னஞ்சலில் கூறியதைப் பார்ப்போம்.
மாயாவித் திருடர்கள்
சக்கரியா
பன்னாட்டு மூலதனங்களால் பிரபலமடைந்திருக்கிறது தமிழகம். முதலீட்டாளர்களில் பலரும் - உதாரணமாக பி.எம்.டபிள்யூ. கார் நிறுவனம் - கேரளத்துக்கு வந்து முதலீடு செய்வதற்கான சாத்தியங்களை விவாதித்தவர்கள். ஆனால் அவர்கள் உயிர் தப்பி ஓடிவிட்டார்கள். காரணம், கம்யூனிஸ்டுகளும் பிற அரசியல் கட்சியினரும் சேர்ந்து கேரளத்தில் உருவாக்கிவைத்திருக்கும் தொழிற்சூழல் பைத்தியக்கார விடுதிக்குச் சமமானது. தொழிலாளிகளின் மூளைகளை அரசியல் கட்சிகள் பொய்களால் மழித்துவைத்திருக்கின்றன. கம்பெனியைத் திறப்பதில் அல்ல; மூடுவதிலேயே அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் இடையில் நின்று இரு தரப்பினரின் சட்டைப் பைகளிலும் கை போடுகிறார்கள். இன்று கேரளத்தில் முதலீடு செய்வதும் அதைக் கடலில் வீசுவதும் ஏறத்தாழ ஒன்றுதான்.
இங்கே சின்ன அளவிலாவது முதலீடு செய்யத் துணிந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம் துரதிருஷ்டவசமாகக் கொக்கோகோலா மட்டுமே. அர்த்தமில்லாத ஒரு பானம். அதைக் குடிப்பதனால் தாகம்கூடத் தீராது. அது மட்டுமல்ல, குழந்தைகள் அதைக் குடிப்பதால் குண்டோ தரர்களாகவும் அகாலத்தில் நீரிழிவு நோயாளிகளாகவும் மாறக்கூடும். மதுவைப் போலவே கொக்கோகோலாவும் தீங்கானதுதான். மது நல்லதல்ல என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், கேரளத்தில் அரசே மது விற்பனையை நடத்துகிறது. மது அருந்து பவர்களின் எண்ணிக்கையோ கொக்கோகோலா குடிப்பவர்களின் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு.
கொக்கோகோலாவுக்குப் பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடையில் தொழிற்சாலை தொடங்க அனுமதி அளித்தது அன்று ஆட்சியிலிருந்த இடது முன்னணி அமைச்சரவையே. 2000இல் அந்நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியது. 2001இல் காங்கிரஸ் முன்னணி அதிகாரத்துக்கு வந்தது. அப்போதுதான் பழைய மார்க்சிஸ்ட் முன்னணியில் அங்கமாக இருந்த ஜனதா தளம் (எஸ்) கொக்கோகோலாவுக்கு எதிராகக் களமிறங்கியது.
கொக்கோகோலா தொழிற்சாலை உள்ள பிளாச்சிமடை என்ற பகுதி பெருமாட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்தது. கொக்கோகோலாவுக்கு அங்கே ஆலை நிர்மாணிக்க அனுமதியளித்த பெருமாட்டிப் பஞ்சாயத்து அப்போது ஜனதா தளம் (எஸ்)-இன் கைவசம் இருந்தது. கோலா எதிர்ப்பை முன்னெடுத்ததும் அவர்கள்தாம்.
முன்னெடுத்தார்கள் என்று சொல்லக் காரணமிருக்கிறது. கொக்கோகோலா தொழிற்சாலையின் சுற்றுப்புறங்களில் வசிக்கும் ஆதிவாசிகளுக்கு ஒரு போதும் குடிநீர் கிடைத்தது இல்லை. காரணம் எளிமையானது. ஆதிவாசிகளின் கோரிக்கைகளுக்குக் கேரளத்திலுள்ள அரசியல்-ஆட்சி-சமூகப் பொது அமைப்பு, ரோமத்தின் மதிப்புக்கூடத் தந்ததில்லை என்பதுதான். அவர்களுடைய குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்ததும் அவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அப்போது கொக்கோகோலா தொழிற்சாலையால்தான் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்று நம்பவைக்க ஆட்கள் இருந்தார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆதிவாசிகளுக்குக் குடிநீர் கொண்டுவந்து தர யார் கடமைப்பட்டவர்களோ அவர்கள் மிகச் சாமர்த்தியமாகப் பழியைக் கொக்கோகோலாமீது சுமத்தினார்கள். கொக்கோகோலா தொழிற்சாலைக்கு முன்னால் பந்தல் கட்டி ஆதிவாசிகள் போராட்டம் தொடங்கினார்கள்.
உலகமயமாக்கல், முதலாளித்துவம், நவகாலனியாக்கம் போன்ற சொற்களுக்கான மார்க்கெட் இடது சாரி மனோபாவமுள்ள கேரளத்தில் பிரசித்தமானது. தவிரவும், அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் இத்தகைய சொற்களின் நட்சத்திர மதிப்பு கவர்ச்சிகர மானது. அப்படிப்பட்ட சந்தையில் கொக்கோகோலாவுக்கு எதிராகத் திசைதிருப்பிவிடப்பட்டவர்களும் அப்பாவிகளுமான ஆதிவாசிகள் தொடங்கிய போராட்டம் முதல் தரமான விற்பனைச் சரக்காக இருந்தது. அதை ஜனதா தளம் போன்ற உயிர்ப் பிணமான ஒரு கட்சி ஆனந்தமாக முன்னெடுத்தது. ஆதிவாசிகள் பின்னணிக்குத் தள்ளப்பட்டு, அரசியல்வாதிகள் முன்னிலை வகித்தார்கள். சி.கே. ஜானு போன்ற ஆதிவாசித் தலைவர்கள் பின்வாங்கினார்கள்.
தாமதமில்லாமல் பிளாச்சிமடை உலகப் புகழ் பெற்றது. ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கேரளத் தலைவருக்கு உரிமையான ஒரு பிரபல நாளிதழ் போராட்டத்துக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டது. மேதா பட்கர் முதல் வந்தனா சிவா வரையான உலகப் புகழ்பெற்ற சூழலியலாளர்களின் தீர்த்தாடன கேந்திரமானது பிளாச்சிமடை. மயிலம்மாவைப் போன்ற உள்ளூர் விக்கிரகங்களும் உருவாக்கப்பட்டன. வழக்குகள் தடபுடலாக நடந்தன. கொக்கோகோலா தொழிற்சாலை மூடப்பட்டது. காங்கிரஸ் அரசு போய் கம்யூனிஸ்ட் அரசு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் அது முதலில் செய்த காரியம் கொக்கோகோலாவுக்குத் தடை விதித்ததுதான். அதாவது, கேரளத்தின் மக்கள் தொகையில் 0.5 விழுக்காட்டினர் குடிக்கும் பானத்தைத் தடைசெய்தது. 90 விழுக்காட்டினர் காலாவதியானதும் உலகளவில் தடைசெய்யப்பட்டதுமான மருந்துகளைப் பயன்படுத்தும் மாநிலத்தில், 60 விழுக் காட்டுக்கும் மேற்பட்டவர்கள் கலப்படம் செய்த மதுவை அருந்தும் மாநிலத்தில், தடை விதிக்கப்பட்டதோ 0.5 விழுக்காடுள்ள ஒரு முட்டாள் பானத்துக்கு.
இதற்கிடையில் கோலாவில் நச்சுக் கொல்லிகளின் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை இருக்கும் என்பதில் என்ன சந்தேகம்? கோலா தயாரிக்கப் பயன் படுத்தும் தண்ணீரிலும் சர்க்கரையிலும் அவை இருக் கின்றனவே! நச்சுக் கொல்லியின் கணக்கைப் பார்த் தால் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு வரும் எந்தக் காய்கறியையும் எந்தப் பழத்தையும் பயன்படுத்த முடியாது. அவை பூச்சி மருந்துகளில் மூழ்கி எழுந்தவை. அதிகம் எதற்கு? கேரளக் குடிநீர் வாரியம் விநியோகிக்கும் குழாய் நீரைப் பரிசோதித்தால் காணப்படும் நச்சுக் கூறுகள் நம்மை உணர்விழக்கச் செய்யும். ஆனால், இந்த உண்மைகள் வந்தனா சிவாவுக்கும் மேதா பட் கருக்கும் எம்.பி. வீரேந்திர குமாருக்கும் அவசியமில்லை. அவர்களுக்குத் தேவை கொக்கோகோலா போராளிகள் என்ற சர்வதேசப் பெருமை. மக்சேசே போன்ற விருதுகள். குடிநீரில் விஷமிருந்தால் யாருக்கு நஷ்டம்? காய்கறியிலும் பழத்திலும் விஷமிருந்தால் அவர்களுக்கு என்ன? கொக்கோகோலாதானே நட்சத்திரம்.
கொக்கோகோலா நிறுவனத்தை மூடி வருஷங்களாகின்றன. அது தண்ணீரை உறிஞ்சுவதில்லை என்பது வெளிப்படை. ஆனால், பிளாச்சிமடை ஆதிவாசிகளுக்கும் பிறருக்கும் இன்றும் குடிநீர் கிடைக்கவில்லை. இது என்ன ஆச்சரியம்? அப்படியானால் இந்த உலகப் பிரசித்தி பெற்ற போராட்டங்கள் எதற்காக? தமிழ் நாட்டிலுள்ள கொக்கோகோலா தொழிற்சாலைவரை பரவிய இந்தப் போராட்டம் ஏன் ஆதிவாசிகளுக்குக் குடிநீரைக் கொண்டுவரவில்லை? எல்லாரும் கேட்கக் கூடிய கேள்விகள்தாம் இவை.
அண்மையில்தான் இந்திய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக உண்மை வெளிவந்தது. சி.பி.எம். பொலிட்பீரோ உறுப்பினரும் எம்.பி.யுமான பிரகாஷ் காராட்டின் கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் செய்புதீன் ஷேக் அளித்த பதில் பின்வருமாறு:
மத்திய நீர்வளத் துறை பிளாச்சிமடை தண்ணீர்ப் பிரச்சினையைப் பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பிளாச்சிமடை உள்ளிட்ட பெருமாட்டிப் பஞ்சாயத்திலுள்ள நிலத்தடி நீரில் 92 விழுக்காட்டையும் அங்குள்ள விவசாயிகளின் குழாய்க் கிணறுகள் தாம் உறிஞ்சியெடுக்கின்றன. சரியாகச் சொன்னால் பெருமாட்டிப் பஞ்சாயத்தில் 17.4 மில்லியன் கன மீட்டர் நீர் இன்று உள்ளது. இதில் 16.12 மில்லியன் கன மீட்டர் நீர் விவசாயப் பாசனத்துக்கும் 1.08 மில்லியன் கன மீட்டர் நீர் வீட்டு உபயோகத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 0.2 மில்லியன் கன மீட்டர் நீரைத்தான் கொக்கோகோலா தொழிற் சாலையும் பிற மதுத் தயாரிப்பு ஆலைகளும் பங்கிட்டுக் கொள்கின்றன. பெருமாட்டிப் பஞ்சாயத்தில் 508 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. அவற்றில் கொக்கோகோலாவுக்கு உரிமையானவை ஐந்து. சாராய ஆலைக்குச் சொந்தமானது இரண்டு.
வந்தனா சிவாவுக்கும் மேதா பட்கருக்கும் இதைப் பற்றிச் சொல்ல ஏதாவது இருக்கிறதா? ஒரு வார்த்தைகூட இல்லை. அமைதி. பொய்களை வைத்து 'மக்கள் போராட்டங்களை' உருவாக்கும் இது போன்ற மாயாவித் திருடர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. குறைவாக இருக்கலாம். அதனால்தான் அடிப்படைப் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் கேரளத்தைவிட ஒளியாண்டுகளுக்கு முன்னால் செல்வதாக நான் முன்பே குறிப்பிட்டேன்.
பிளாச்சிமடையில் நடந்த போராட்டக் கூத்துக்கு இன்னொரு சுவாரசியமான கிளைமாக்ஸ் அண்மையில் நிகழ்ந்தது. கேரள நீர்வளத் துறை அமைச்சர் பிளாச்சி மடைக்குச் சென்றிருந்தார். ஆதிவாசிகளுக்கு இப் போதும் குடிநீர் கிடைப்பதில்லை என்ற உண்மையைக் 'கண்டுபிடித்தார்'. காரணம் என்ன என்கிறீர்களா? அண்மைக் காலம்வரை நீதிமன்ற உத்தரவின்படி கொக்கோகோலா நிறுவனம் ஆதிவாசிகளுக்குக் குடிநீர் கொண்டுவந்து விநியோகம் செய்துவந்தது. கம்பெனி மூடப்பட்ட பிறகும் அது தொடர்ந்துவந்தது.
நிறுவனம் ஊரைக் காலிசெய்ததோடு குடிநீர் விநியோகமும் நின்றுபோனது. நீர்வளத் துறை அமைச்சர் என்.கே. பிரேமசந்திரன் பிளாச்சிமடையில் ஒரு கம்பீரமான அறிவிப்பைச் செய்தார்: "ஆதிவாசிகளுக்குக் கொக்கோகோலாவின் பிச்சை வேண்டாம். இனிமேல் அரசே குடிநீர் வழங்கும்." அப்படியானால் இத்தனை காலமாகக் குடிநீர் வழங்காமல் அவர்களைப் போராட்டத்தில் இறக்கிவிட்டதற்குப் பொறுப்பாளிகள் யார்? கொக்கோகோலாவா?
"முட்டாள்களின் சொர்க்கம்" என்று ஒரு பிரயோகம் உண்டு. அதை நேரடியாக அனுபவித்து அறிய விரும்பினால் கேரளத்துக்கு வந்தால் போதும். நல்வரவு!
நன்றி: காலச்சுவடு
இதையும் பார்க்கவும்:
கேரள சகோதர்கள் உழைப்புக்கு அஞ்சுவதில்லை. இருப்பினும் கம்யூனிச கெடுபிடிகளால் அங்கு புது தொழில்கள் வரும் வாய்ப்பும் குறைவே. ஆகவேதான் அச்சகோதரர்கள் வெளியிடங்களுக்கு செல்கின்றனர். வெளிதேசங்களுக்கும்தான். அவ்வாறு ஈட்டிய பொருட்செல்வத்துடன் வருபவர்கள் ஏதேனும் தொழிலில் முதலீடு செய்தாலும் அது கேரளாவில் இல்லாதபடி பார்த்து கொள்கின்றனர். அவ்வளவு புண்ணியாத்மாக்கள் அங்குள்ள அரசியல்வியாதிகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
17 hours ago
29 comments:
கல்லகலான பதிவு.: சூப்பர்
ஒருத்தருமே பின்னூட்டம் போடலைன்னா உனக்கு நீனே நல்லாருக்கு சூப்பர் சூப்பர்னு போட்டுக்குறியாடா பாப்பார பயலே?
கம்யூனிஸ்ட்டுகள் கெட்டவன் என்று எழுதவதற்குக்கூட உனக்கு திராவிடனின் ஈமெயில் தேவைப்படுகிறது!!!
இதில் இருந்தே தெரியவில்லையா பார்ப்பனர்களின் இழி புத்தியை?
நானும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.கம்யூனிசத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று முனைந்த நாடுகளில் எல்லாம் தனி நபர் வருமானமும்,பொருளாதார வளமும் முன்னேற்றத்தில்தான் இருக்கின்றன..(அமெரிக்கா,ஜப்பான்,சிங்கப்பூர்...)என்ன காரணம்?
என்ன மடிப்பாக்கம், இன்னுமா உன் எஜமான் உன்னை பிளாக்மெயில் செய்கிறான்? சொந்தப் பெயரிலேயே வரலாமே. இனிமேல் என்ன பயம்?
டோண்டு ராகவன்
அது ஒன்றும் பிரம்ம வித்தையில்லை சங்கப் பலகை. உங்கள் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நீங்களே பொறுப்பு என ஆகிவிட்டால் நீங்கள் கவனமாகச் செயல்படுவீர்கள் அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//என்ன மடிப்பாக்கம், இன்னுமா உன் எஜமான் உன்னை பிளாக்மெயில் செய்கிறான்? சொந்தப் பெயரிலேயே வரலாமே. இனிமேல் என்ன பயம்?
டோண்டு ராகவன்//
மூர்த்தி இன்னனுமா ப்ளாக் மெயில் செய்கிறான்?
//இதில் இருந்தே தெரியவில்லையா பார்ப்பனர்களின் இழி புத்தியை?//
லட்சக்கணக்கில் தன்னாட்டு மக்களையே கொலை செய்த பாதகனின் பெயரை பெருமையாகத் தாங்கியிருக்கும் உன்னைப் போன்றவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க இயலும்?
டோண்டு ராகவன்
கம்யூணிசம் என்பது என்ன?
அடுத்தவர் வாழ்க்கையை சுரண்டி பிழைப்பது தானே. அதையே தான் அடுத்தவர்கள் செய்கிறார்கள் என்று சொல்லி நாங்கள் பிழைப்பு ஓட்டுவோம்
கேரளாவில் கம்யூணிசம் பேசிவிட்டு சோம்பேறியாக இருக்கும் மலையாளிகள் வெளி இடங்களில் பணத்துகாக என்ன வேலை செய்யவும் தயாராக இருப்பதுக்கு காரணம் என்ன?
மலையாளிகள் பொதுவாக உழைப்புக்கு அஞ்சாதவர்கள். எல்லாம் சிஸ்டத்தின் கோளாறு. கேரளாவில் நிலவும் தொழில் சூழ்நிலையில் வேறு என்ன செய்ய இயலும்?
அதுவே வெளியூரென்றால் போட்டி இருக்கும். வேலை செய்தால்தான் சோறே கிடைக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எல்லோரும் எல்லாமே பெற வேண்டும்,தலைமை ஒருங்கிணைப்பு,சே போன்றோரின் தன்னலமற்ற தன்மை கம்யூனிசத்தின் சிறப்புக்கள்.ஆனால் தொட்டதுக்கெல்லாம் வேலை நிறுத்தம்,போராட்டங்கள் என்ற உழைப்பின் திறனை வீண் செய்வது என்பதில்தான் பிரச்சினையே.கேரளாவின் வளங்கள் சுரண்டப் படாமலும் அதே நேரத்தில் அனைவருக்கும் பயன்படாமலும் போகின்றன என்பது என் கருத்து.மேலும் கல்கத்தாவில் கையிலிருந்த 3 ரூபாயில் 3 நண்பர்கள் பசியாரிய காலங்களுண்டு.
Article from NYTimes a couple of days back (cut and paste):
Jobs Abroad Support ‘Model’ State in India
By JASON DePARLE
TRIVANDRUM, India — This verdant swath of southern Indian coastline is a famously good place to be poor. People in the state of Kerala live nearly as long as Americans do, on a sliver of the income. They read at nearly the same rates.
With leftist governments here in the state capital spending heavily on health and schools, a generation of scholars has celebrated the “Kerala model” as a humane alternative to market-driven development, a vision of social equality in an unequal capitalist world. But the Kerala model is under attack, one outbound worker at a time.
Plagued by chronic unemployment, more Keralites than ever work abroad, often at sun-scorched jobs in the Persian Gulf that pay about $1 an hour and keep them from their families for years. The cash flowing home now helps support nearly one Kerala resident in three. That has some local scholars rewriting the Kerala story: far from escaping capitalism, they say, this celebrated corner of the developing world is painfully dependent on it.
“Remittances from global capitalism are carrying the whole Kerala economy,” said S. Irudaya Rajan, a demographer at the Center for Development Studies, a local research group. “There would have been starvation deaths in Kerala if there had been no migration. The Kerala model is good to read about but not practically applicable to any part of the world, including Kerala.”
Local lessons would matter less if this were a section of Mexico or Manila — places known for the hardships that make migrants flee. But Kerala’s standing as the other way — the benevolent path to development, a retort to globalization — makes the travails of its 1.8 million globalizing migrants especially resonant. The debate about Kerala is a debate about future strategies across the impoverished world.
Laly Mohan’s life offers the kind of case study common here. Having risen from a poor family to finish two years of college, her husband, Ramakrishnan, 39, saw few job prospects and left for the gulf 15 years ago. As a driver in Qatar, he now earns $375 a month, about five times the local wage, and sees his family once a year, on a three-week visit.
Mr. Mohan’s earnings have brought the family the accouterments of middle-class life: a renovated kitchen, a new motorscooter and a parochial school education for two daughters, Blessy, 10, and Elsa, 6. But despite her husband’s daily calls, Ms. Mohan said, “I feel very alone,” and the girls plead for their father’s return. “They want Papa and they also want money,” she said. “They cannot have both.”
“So many educated people are here, but we have no jobs,” Ms. Mohan added. “That is a big problem, a really big problem.”
To its admirers, the state’s struggles are those endemic to the developing world, while its achievements are unique. It is poor, even by India’s standards, with an annual per capita income of $675, compared with $730 nationwide. (The figure in the United States is about $25,000.)
But Kerala’s life expectancy is nearly 74 years — 11 years longer than the Indian average and approaching the American average of 77 years. Its literacy rate, 91 percent, compares to an Indian average of 65 percent, and an American rate the United Nations estimates at 99 percent.
Those enviable outcomes, its supporters stress, are a result of policy choices: Kerala spends 36 percent more on education than the average Indian state and 46 percent more on health.
“The fact that quality of life can be improved through government intervention, even in societies that are very poor — I think that’s important,” said Prabhat Patnaik, the vice chairman of the state planning board. Kerala’s experience, he said, shows “the quality of life is not just related to the growth rate” of the economy.
“Put it in the context of any other part of the developing world and its achievements still stand out as remarkable,” said Richard Franke, an anthropologist at Montclair State University in New Jersey. “Children don’t die in the first year of life, boys and girls have approximately equal life chances, they get educated, and they live long lives.”
He added, “The Kerala model stands as a great achievement, with or without migration.”
Kerala’s culture of human investment is at least two centuries years old and owes early debts to the missionaries and maharajahs who emphasized schools. By the early 20th century, literate Keralites were already migrating internally, to work as clerks in Delhi and Bombay, and sending money home.
Kerala was equally well known as a font of leftist politics. The Communist Party came to power in 1957, a year after statehood, and has ruled on and off since. The state transferred land from the rich to the poor, set a minimum wage and invested heavily in clinics and schools.
Though Kerala’s tax rates have been comparable to other Indian states’, its collection rates have been higher, and it has spent more on education and health.
It also gained a reputation as a place hostile to business, with heavy regulation, militant unions and frequent strikes. There are fishing jobs but little industry and weak agriculture. Government is the largest employer; many people run tenuous businesses like tea shops or tiny stores.
Talk of the Kerala model began after a 1975 United Nations report praised the state’s “impressive advances in the spheres of health and education.” Starved for success stories from the developing world, experts noticed.
Amartya Sen, a future Nobel laureate in economics, wrote widely on Kerala, arguing (in a book with Jean Dreze) that its “outstanding social achievements” were of “far-reaching significance” in other countries. In a book on three places that inspire global hope, Bill McKibben, an American, wrote that “Kerala demonstrates that a low-level economy can create a decent life” and shows that “sharing works.”
Yet even as Kerala gained fame, large numbers of its workers were leaving. The Persian Gulf needed labor, and Keralites were used to traveling for jobs. The number of overseas workers doubled in the 1980s, and then tripled in the 1990s. In a state of 32 million where unemployment approaches 20 percent, one Keralite worker in six now works overseas. The largest number work at taxing construction jobs, outdoors in the Arabian sun, though high literacy allows some Keralites to land office work.
Without migrant earnings, critics say, the state’s luster could not be sustained. The $5 billion that Keralite migrants send home augment the state’s economic output by nearly 25 percent. Migrants’ families are three times as likely as those of nonmigrants to live in superior housing, and about twice as likely to have telephones, refrigerators and cars. Men seeking wives place newspaper ads, describing themselves as “handsome, teetotaler, foreign-employed” or “God-fearing and working in Dubai.”
“The gulf is the biggest factor in sustaining a higher quality of life,” said B. A. Prakesh, an economist at the University of Kerala.
At its best, migration produces stories like that of Benjamin Fernandez, 55, who moved to the United Arab Emirates 30 years ago as a secretary and now owns a construction firm there. He built a big house in India with a teak spiral staircase and educated his daughters in private schools. One is studying to be a doctor, and the other is applying to business school. “The U.A.E. built a life for us,” he said.
Yet the suicide rate in Kerala is four times the national average, and there are also families like that of Shirley Justus, 45, who struggled to raise three daughters by herself while her husband drove trucks in Muscat and Dubai. Her oldest, Suji, graduated from high school last year and made two study plans, one aimed at England and the other at Mumbai, formerly known as Bombay. Ms. Justus, afraid to be responsible for letting her go, vetoed both ideas. Her daughter obeyed with little complaint and then hanged herself.
“If my husband was here, she wouldn’t have done this,” said Ms. Justus, who has made her living room a shrine to her daughter and her life a search for answers. “He would have solved the problem.”
With nearly a quarter of the money migrants send home being spent on education, some Keralites experience a painful cycle: migration buys education, which leads to more migration. Educated Keralites, more choosy about jobs, are more likely to be unemployed.
In the family of James John Pereira, literacy and migration have been intertwined for nearly 100 years, since his father left to work as a valet on a Sri Lankan plantation. His earnings put Mr. Pereira through private school, and Mr. Pereira’s 49 years abroad as a clerk did the same for his five children, all of whom earned master’s degrees.
But three are now working abroad themselves, as is the husband of a fourth, Jacqueline, who is raising a 10-year-old daughter by herself. “The literacy rate here is great,” she said, “and unemployment is much greater.”
Kerala’s homegrown critics say such stories underscore the problems of a strategy that severs human development and economic growth. “Keralites are developing the gulf economy,” Professor Rajan, the demographer, said. “They are not developing our economy.”
Professor Franke, the Kerala admirer, said the economic forces that lead people to migrate were beyond the state’s control. “But what’s unique about Kerala is that the benefits are likely to be shared in a more fair and just way,” he said.
“I wouldn’t say it discredits the model,” Mr. Franke said of Kerala’s migration. “It shows that it has weaknesses.”
( நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று எனும் மெட்டில் பாட வும்)
தம்பி நான் படிச்சேன்
டோண்டுவிலே நேற்று
அதை நானுக்கு
சொல்லட்டுமா இன்று
டோண்டு மொக்கைகளை
எழுதும் ஒரு அய்யர்
இது சுகுணாவே சொல்லிவைத்த உண்மை
(தம்பி...............)
இணையத்தின் தந்தையென
பலர் இருந்தார் -டோண்டு
இடையினிலே மொக்கையாக
வந்து ஒட்டினார்
நாட்டுக்காக பதிவெழத
டோண்டு நினைத்தார்
தன் நலத்திற்க்குதான்
பதிவெழுதி வெறுப்பேத்தினார்.
எழுதியபின் மொக்கைகெல்லாம்
பின்னூட்டம் இட்டார்
தான் எழுதியது புகழடைய
எழுதி ஒட்டினார் !
தெருத்தெருவா உதைவாங்கும்
பதிவர் டோண்டு
சும்மா நோண்டிவிட
நினைத்தாலே சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம்
என்று சொல்லுவார்
தம் குடுமி நலம்
ஒன்றில்தான் கும்மியடிப்பார்!
தம்மக்கள் நலம் ஒன்றுக்குத்தான்
குடுமியாட்டுவார்!
(தம்பி ..................... )
ஏய்பவர்க்கே காலம் என
எண்ணிவிடாதே
பொய் எத்தனை நாள்
கைக்கொடுக்கும்
மறந்துவிடாதே
ஒருநாள் இந்த நிலமைகெல்லாம்
மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு
தமிழ் மணம் உண்டு
அந்த மாறுதலை
செய்வதற்கு தமிழ் மணம் உண்டு
ஒரு பதிவு என்பது
நேற்று
அது மொக்கை என்பது
இன்று
அது கும்மி ஆவது நாளை
வரும் சோதனைதான்
இடைவேளை.
(தம்பி .....................
(கம்யூனிஸ்டுகளின் சொர்க்கம் என டோண்டு எழுதிய அரைகுறை அசட்டுதனத்துக்கு பதில் எழுத நினைத்தேன் .ஆனால் டோண்டுவுக்கு அதெல்லாம் அதிகம் என நினைத்ததால் இந்த பாடல் உடன் நிறுத்தி கொள்கிறேன்.
அடுத்த பாடல்
வர்றார் வர்றார் நம்ம டோண்டு அய்யர்
ஐயா தியாகு அவர்களே,
உங்களது பிதற்றல் பதிவைப் பார்த்தேன். சிரித்தேன். வேறு என்ன செய்ய முடியும்?
உங்கள் ஆறுதலுக்காக வேண்டுமானால் சில சரித்திர பொய்களைச் சொல்கிறேன்.
1.சோவியத் யூனியன் அழியவில்லை. அமெரிக்காதான் அழிந்தது.
2. கிழக்கு ஜெர்மனி பத்திரமாக உள்ளது. மேற்கு ஜெர்மனிதான் அழிந்து போய் ஜெர்மன் ஜனநாயக குடியரசு என்ற நாட்டுடன் இணைந்தது.
3. சீனாவில் கம்யூனிச முறையினால் பஞ்சங்கள் ஏதும் 1958-ல் வரவில்லை. சீனாக்காரர்கள் பெரிய தாவல் முன்னோக்கி தாண்டினார்கள். என்ன, கிழக்கே சமுத்திரம் இருந்தால் என்ன செய்ய முடியும்? சமுத்திரம்தான் குற்றவாளி என மாபெரும் அறிஞர் மாவோ கூறினார்.
போதுமா இன்னும் வேணுமா?
பைத்தியக்காரர் ஏதாவது உளறும்போது சரி என்று சொல்லி அந்தண்டை போவதும் ஒரு வழிமுறைதான் என சமீபத்தில் 1955-ல் நான் ஐந்தாவது வகுப்பு படித்த போது எனது வகுப்பாசிரியர் ரங்கா ராவ் கூறியுள்ளார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
What is worse about Kerala is that
you cannot carry or unload your won luggage in your house or anywhere without union gangs extorting money for work they did not do. try to carry a large suitcase from Thiruchur bus-stand.
asking for money for nil-work is not communism but mafia action.
more such atrocities in many areas have led to nil employment creation, while Kerala has excellent ports, water, money and skilled labour. all the talk about better human development index is fine but without employment generation , without remittances from outside, the situation is hopeless.
thiyagu, pls understand the difference between leftist ideaology and mafia actions masquerading as unions..
and madippakam, i am sick of all this perverted talk about aryan or brahmin. As if all non-brahmins are saints or too good. you are crazy to generalise.
and stalin, i admire genuine communists like Nallakannu Ayya (whom i met in train and had a lively debate once) who are honest and sincere. but they are rare and most use the cloak of communism for their selfish and unethical goals. most of the CPM guys who are less than 50 are like than while the old gurad like Ayya are really honest and genuine. and
no one says genuine communists are
'kettavan' ; too simplisitc arguments. i knew many honest and realy dedicated and sincere cadres in RSS, DK, DYFI, etc. only we differ in opinions and means. honesty and sincereity are basic requirements for any idealist or organisation. otherwise the core will be corrupted while the shell remains..
results speak for themselves, anyway than any arguments..
டோண்டு சார்
தியாகு பன்னாட்டு தர கட்டுப்பாட்டு நிறுவனமான ஐ.எஸ்.ஓ 9000 கன்சல்டன்டாக இருப்பவர்:-D. முதலாளித்துவத்தை பரப்பும் புனித பணியில் ஈடுபட்டிருக்கும் தியாகு கம்யூனிசத்தை பேசுவது பிழைப்புவாதம் நடத்தவே.
இவருக்கு கம்யூனிசம், பொருளாதாரம்,அரசியல் என எதைப்பற்றியும் ஆழ்ந்த அறிவு கிடையாது. உருப்படியாக ஒரு கட்டுரையை கூட இவரால் எழுத முடியாது.உங்கள் கட்டுரைக்கு பதில் எழுதும் திறனோ,அறிவோ அவருக்கு கிடையாது.அதற்கு பதில் பாப்பான் என எழுதுவது அவருக்கு எளிதாக இருக்கிறது.அதற்கு பெரிய அறிவு வேண்டியதில்லை அல்லவா?
லெனின் அவர்களே,
தியாகு அவர்களை பற்றி நீங்கள் கூறுவது உண்மையா எனத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவரது கம்யூனிச ஆதரவு கொள்கைகளுக்கும் அவர் செய்யும் வேலைக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்க வேண்டியதில்லை.
எனக்கு பதில் சொல்ல ஒரு விஷயமும் இல்லை என அவர் நினைப்பதிலும் பிரச்சினை இல்லை. அது அவரது கருத்து சுதந்திரம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\பைத்தியக்காரர் ஏதாவது உளறும்போது சரி என்று சொல்லி அந்தண்டை போவதும் ஒரு வழிமுறைதான் என சமீபத்தில் 1955-ல் நான் ஐந்தாவது வகுப்பு படித்த போது எனது வகுப்பாசிரியர் ரங்கா ராவ் கூறியுள்ளார்.//
Sooper Dondu Sir!!! Hope poli communists like Thiyagu will not open their mouth here after.
My humble request to all communists - You have your own life; Try to live that and let others live.
And Mr. Thiyagu, when you mention others' caste in public, it reveals that you are an educated idiot with a peanut size brain.
Disclaimer: I am not a blogger and I do not even have a gmail id. I am a regular reader of thamizmanam.
/And Mr. Thiyagu, when you mention others' caste in public, it reveals that you are an educated idiot with a peanut size brain./
தியாகுவின் மூளையின் அளவை இப்படி மிகைபடுத்தி கூறுதல் முறையா?
\\இவருக்கு கம்யூனிசம், பொருளாதாரம்,அரசியல் என எதைப்பற்றியும் ஆழ்ந்த அறிவு கிடையாது. உருப்படியாக ஒரு கட்டுரையை கூட இவரால் எழுத முடியாது.உங்கள் கட்டுரைக்கு பதில் எழுதும் திறனோ,அறிவோ அவருக்கு கிடையாது.அதற்கு பதில் பாப்பான் என எழுதுவது அவருக்கு எளிதாக இருக்கிறது.அதற்கு பெரிய அறிவு வேண்டியதில்லை அல்லவா?//
You mean vethu vettu? Can some one tell me what is the english version for "vethu vettu"?
Disclaimer: I am not a blogger and I do not even have a gmail id. I am a regular reader of thamizmanam.
DON,
Excellent post. You have nicely showed that how communists and leftists really are charlatans.
Unfortunately people in Tamil Blog world often don't argue based upon facts. Once you show some evidence that's opposite to their beliefs they immediately start attacking you personally.
Thiyagu's comments shows his true character and his lack of integrity. Thiyagu thanks for your comments.
Communism is dead, long live communism.
Here's another report:
China and sovereignty
September 8, 2007, BS, T C A Srinivasa-Raghavan
Why did China crawl before the US to get into the WTO? Because of the benefits of joining.
The politburo of the CPM has made a big song and dance about India’s sovereignty in the context of the Indo-US nuclear deal. It has also said the same thing in respect of defence co-operation between India and the US.
It is easy to see why the politburo is so worked up about the latter. If India and the US join hands militarily, China suffers.
But sovereignty is a little more complex. So let us see how China approaches it. Specifically, let us see how it abridged its sovereignty when it wanted to enter the WTO. The US made it crawl on all fours, and China agreed because it assessed the benefits of crawling correctly.
................................
................................
But enough said. The point is clear. The results of this surrender of sovereignty, which is what it was, were entirely beneficial to China. Its trade surplus with the US for the first seven months of 2007 was almost $25 billion and it holds almost $900 billion in US securities. Even if the US wants to, it can’t implement the utterly humiliating conditions it made China accept in 1999. There is simply too much at stake for it.
How could proud China bow and scrape like this? Could it be because there is no CPM in China?
Full Article here
http://www.business-standard.com/opinionanalysis/storypage.php?tab=r&autono=297248&subLeft=2&leftnm=4
a recent mail :
i often wonder about the arrogant and fearless way of the trade union leaders of
Indian Railways. it is an open secret that Kannayan owns two engg. colleges
and has amassed (that is stolen) crores of wealth (from Railways, of course).
all such leaders are corrupt, cynical and grossly insincere.
நீங்கள் சொல்லும் SRMU என்கிற யூனியனின் தலைவருக்கு 2000 கோடி ரூபாய் சொத்து உள்ளது. அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அந்த யூனியன் காங்கிரஸ் சார்பு யூனியன். கம்யூனிஸ்ட் சார்பு யூனியன் DREU என்கிற பெயரில் செயல்படுகிறது. எங்களுக்கென்று ஒரு கூட்டுறவு வங்கி உண்டு. அதனை ஆரம்பத்தில் DREU - தான் நிர்வகித்து வந்தது. அப்பொழுது வட்டி விகிதம் ஆண்டுக்கு 3%. நிர்வாக செலவுகள் மொத்த வருவாயில் 10%. லாபத்தில் 75% வரை பங்குதாரர்களுக்கு(ரயில்வே தொழிலாளிக்கு) பகிர்ந்தளிக்கப்பட்டது. 1990 இல் நடந்த தேர்தலில் SRMU கண்ணையா வெற்றி பெற்றார். எங்களுக்கு தொடங்கியது கெட்ட காலம். வட்டி இப்பொழுது 11%. நிர்வாக செலவு மொத்த வருவாயில் 25%. லாபத்தில் 50% மட்டுமே பகிர்வு தொகை. மற்றும் ஊழல் மயமானதால் அந்த தலவர் 2000 கோடி ரூபாய் சொத்து சேர்த்தார். இதற்கு இரயில்வே மந்திரி முதல் எல்லோரும் உடந்தை. அவர் அசைக்கமுடியாத ஒரு சக்தியாகி பின்னர் 17 ஆண்டுகளாக அவரே தலைவராக நீடிக்கின்றார். தேர்தல் என்பதும் கானல் நீராகிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு தலைவர் தான் அரசுடன் பேச்சுநடத்தும் AIRF, NFIR என்கிற சம்மேளனங்கள். இன்றளவும் மத்திய அரசுடன் தொழிலாளர் பிரச்சனை குறித்து பேச இவர்கள் மட்டுமே அரசினால் அழைக்கப்படுவர். மற்றவர்களுக்கெல்லாம் அழைப்பு கிடையாது. மற்ற துறைகளிலெல்லாம் AITUC, CITU, HMS போன்ற யூனியன்கள் வலுவாக உள்ளதால் அரசு அவர்களையும் ஒப்புக்கு சப்பானாக பேச்சுக்கு அவ்வப்போது அழைகும். அவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்தால் மட்டுமே ஒப்புக்கு பேச்சு நடத்தும். எனினும் ஆட்சேபம் தெரிவிக்ககூடிய உரிமை மற்றும் நிர்வாக முடிவுகளை மாற்றும் உரிமை NFIR, AIRF க்குமட்டுமே உண்டு. அதை சேர்ந்த ஊழல்வாதியான கண்ணையா எப்படி நீங்கள் சொல்லக்கூடிய ஆரோக்கியமான திட்டங்களுக்கு ஒத்துழைப்பார்?
------------------------
டோண்டு சார்,
கம்யூனிஸம் குறித்த எனது சமீபத்திய பதிவு இது
தனி மனிதனிடம் அடிப்படையாக இருக்கவேண்டிய "கடின உழைப்பு" மூலம் முன்னேறி மேம்மடும் எண்ணத்தை அழித்து அடுத்தவனிடம் இருந்து பிடுங்கித் தின்னும் சண்டியர்த்தனத்தை மறு பெயரிட்டால் அது கம்யூனிஸம்.
கம்யூனிஸ ரஷ்யா, சீனாவின் டெக்னாலஜி, எகானமி என அனைத்திலும் கிரியேட்டிவிட்டி எனும் தனிமனித முயற்சி,உழைப்பு அங்கீகரிக்கப்படாது எனும் மனோபாவத்தாலேயே 100 எடுக்க முடிந்தாலும் 10 எடுத்தாலே போதும் என்று தேங்கவைத்தது.
இன்று ரஷ்யா, சீனா இரண்டுமே பொதுவுடமை கம்யூனிஸத்தை கழட்டிவிட்டு தனியுடமை நோக்கித்தான் பயணிக்கிறது.
ரிலையன்சை வரவேற்கும் விவசாயிகள்
எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள்
கேள்வி:
4 மில்லியன் சிறு வியாபாரிகளின் (வணிகர்களின்) தேவையைவிட 300 மில்லியன் விவசாயிகளின் தேவைகள் முக்கியமானதா இல்லையா ?
நண்டு exhibition கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அது வேறு எதுவும் இல்லை கம்யூனிசம்தான். முன்னேறாமல் இருப்பவனை ஊக்கப்படுத்தி முன்னேற்றவைப்பதை விட்டு முன்னேறுபவனை கட்டுப்படுத்தி வைப்பதுதான் அது...
உங்கள் முந்தைய பதிவிலிருந்த பாடல் பற்றி...
"எல்லோரும் எல்லாமே பெற வேண்டும்,
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி
வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை"
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - சரி
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் - சரி
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி - ??
ஏன் வல்லான் பொருள் குவிப்பது கூடாது? திறமை, உழைப்பு இருந்தும் மண்ணாங்கட்டி போல அமர்ந்திருக்கவேண்டுமா? இந்த பாடல் சொல்ல வருவது எது?
ஐயா அனானி,
நீங்கள் சொல்வதைத்தானே எனது அந்த மொத்தப் பதிவே கூறிற்று?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அப்பாடலை எழுதிய கண்ணதாசனே வல்லான்தானே. அவர் காலத்தில் அவரை மிஞ்சி இன்னொரு கவிஞன் வர இயலவில்லை. அதற்காக அவரை குற்றம் சொல்ல முடியுமா? வாய்ப்பை சமமாக கொடுக்கிறேன் பேர்வழி என்று செயல்பட முடியுமா? அபத்தமாக இல்லை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டூ சார்,
நான் மிக சமீபத்தில் தான் தங்கள் பதிவை வாசிக்க ஆரம்பித்தேன்!!!
அப்பப்பா எவ்வளவு ஆழ்ந்த கருத்துக்கள்!!!உங்களின் தீவிர வாசகன் ஆகிவிட்டேன்!!
இந்த கம்யுனிஸ்ட் களின் அயோக்யதனத்தை நன்றாக தோலுரித்து காட்டி உள்ளீர்கள்!!
Post a Comment