மனித இயற்கையை மறுத்து ஒரு தத்துவம் எழுபது ஆண்டுகள் ஆட்டம் இட்டு விட்டு சென்றது. அதை செயல் படுத்திய நாடுகளிலேயே அதை மறுத்து புத்திசாலித்தனமாக காரியம் செய்கின்றனர். ஆனாலும் அசுரன் போன்றவர்கள் இன்னமும் இறந்து போன அந்த தத்துவத்தை நினைத்து மருகுவது ஒரு புறம் வேடிக்கையாயுள்ளது, மறு புறம் வியப்பாக உள்ளது.
தேவைக்கேற்ற ஊதியம், திறமைக்கேற்ற வேலை என்ற ஒரு கழிசடை கோட்பாட்டால் தொழில் முறை கம்மிஸ்ஸார்கள்தான் வளர்ந்தனர். சோவியத் யூனியன் வீழ்ந்து ஒவ்வொரு ரகசியங்களாக வெளி வரவரத்தான் ஸ்டாலின் என்ற அரக்கன் எவ்வாறெல்லாம் நாட்டை குட்டிச்சுவராக்கினான் என்பது தெரிய வந்தது. 1991-ல் சோவியத் யூனியன் அழிந்ததோ உலகம் உருப்பட்டதோ. கிழக்கு ஜெர்மனி ஒழிந்து போனதும்தான் ஷ்டாஸியிடம் (Staatssicherhait --> Stasi) ஒருவரையொருவர் எவ்வாறெல்லாம் காட்டிக் கொடுத்தனர் என்ற விவரமே வெளிப்பட்டது. சோவியத் யூனியனிடம் இந்திய கம்யூனிஸ்டுகள், ஸ்ரீலங்கா கம்யூனிஸ்டுகள் ஆகியோர் பெற்ற துரோகத் தொகைகளும் வெளியில் வர ஆரம்பித்தன. கொஞ்ச நாளைக்கு இந்திய கம்யூனிஸ்டுகள் முக்காடு போட்டுக் கொண்டு அமைதி காத்தனர்.
இப்போது சிலரை வெளியில் விட்டு ஆழம் பார்க்கின்றனர் போலும்.
எது எப்படியாயினும் சுதந்திரப் பொருளாதாரத்தை பற்றி மாமனிதர் ராஜாஜி அவர்கள் கூறியவையெல்லாம் பலித்து அந்தப் பொல்லாத கிழவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பது இப்போதுதான் எல்லோருக்கும் புரிய ஆரம்பித்துள்ளது.
புள்ளி விவரங்கள்? கைப்பூணுக்கு கண்ணாடி எதற்கு? கம்யூனிசம் மரணித்தது என்பதற்கு நாம் கண்ணால் பார்த்து, தீர விசாரித்து அறிந்தவையே போதும். எனது 13 வயதிலிருந்தே நான் கம்யூனிசத்தின் தீவிர எதிரி. இருப்பினும் சோவியத் யூனியன் அழிந்த போது மகத்தான ரஷ்ய மக்கள் எவ்வாறு ஒரு டுபாக்குர் சித்தாந்தத்தால் இவ்வாறு ஏமாற்றப்பட்டனர் என்பதை பார்த்த போது பரிதாபமாகத்தான் இருந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
35 comments:
hope you will write what is happening in Latin America!!LOL! i know you are prejudiced! but your american support is laughable! can show you more from "agent orange" to "bigboy" to talibans.. to .. ziawul haque to Mushraff to saudi arms kickback to the royal family to guetamala !! you need counter attacks!LOL!
With love and regards
OSAI CHELLA
வாருங்கள் செல்லா அவர்களே. அமெரிக்கர்கள் தேவதைகள் என்று நான் கூறவேயில்லையே.
நீங்கள் கூறுவது எல்லாம் நடக்கின்ரனதான். ஆனால் ஒரு சிறு வித்தியாசம். அவை எல்லாம் உங்களுக்கு அமெரிக்கப் பத்திரிகைகளிலிருந்தே கிடைக்கின்றன. அந்த ஒரு சுதந்திரம் எவ்வளவு மகத்தானது என்பதை அறிவீர்களா?
அது ஒன்றுக்காகவே நான் அமெரிக்காவை மதிக்கிறேன். அவர்கள் இஸ்ரேலின் ஆதரவாளர்கள் என்பதும் முக்கியம்தான், என் பார்வையில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
: )
அந்த ஒரு சுதந்திரம் எவ்வளவு மகத்தானது என்பதை அறிவீர்களா?
மிக அருமையான வரி. மனிதர்கள் கட்டுப்பாடு இழந்து செயல்பட கூடாது என்பதற்காகத்தான் சட்டமும் , நெறிமுறைகள், கோட்பாடுகள் இருக்க வேண்டுமே தவிர, அடிமை படுத்தி வைக்க அல்ல. மனிதனின் சுதந்திரம் முக்கியமானதே.
MM! As per your view ... they ( american) will do everything what the communists have done (more than that!) in the world scenario! ... the difference is they rape the world before the camera and they allow the people all over the world to watch it thru CNN and BBC! GREAT LOGIC SIR!!
Jay's comment: ignored lol!
With regards
OSAI Chella
அமெரிக்காவில் checks and balances என்று உண்டு. கம்யூனிச நாடுகளில் இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.
அமெரிக்காவுக்கு சர்வ தேச அளவில் ஒத்துழைப்பு தருபவர்கள் தங்கள் அறிவார்ந்த சுயநலத்தால் தருகின்றனர். ஒன்றைக் கொடுக்காது மற்றொன்றைப் பெற இயலாது என்பது அடிப்படை தத்துவம். (இதுதான் எனது அடுத்த இடுகையின் பொருள்).
இரண்டாம் யுத்தம் முடிந்ததும் மார்ஷல் திட்டத்தில் அமெரிக்கா உதவி அளித்திராவிட்டால் ஐரோப்பா அதோகதியாகியிருக்கும். இது சம்பந்தமாக அமெரிக்கப் பொருளாதாரமும் வளர்ந்தது என்பதும் உண்மையே.
ஆனால் அதே தருணத்தில் சோவியத் யூனியன் கிழக்கு ஐரொப்பாவின் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றது, முக்கியமாக கிழக்கு ஜெர்மனியிடமிருந்து. இது அத்தனையும் பயமுறுத்தல் அடிப்படையில் செய்தது.
நாம் எல்லாம் வாட்டர்கேட் ஊழல் என்று பேசி சிரித்தோமே, அது நமது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி செய்தததுடன் ஒப்பிட்டால் வெறும் ஜுஜுபிதான். இருப்பினும் ஒரு அமெரிக்க அதிபரையே பதவி விலகச் செய்தது அமெரிக்கப் பத்திரிகைகளின் ஜாக்கிரதையான செயல்பாட்டால்.
மற்றப்படி செல்லா அவர்களே, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கிறது (நிஜமாகவே கூறுகிறேன்), ஏனெனில் நீங்கள் மிகவும் கண்ணியமான முறையில் எழுதுகிறீர்கள். மற்றப்படி அதிகம் வாய் விட்டு சிரிப்பதால் (LOL) உஇங்களை ஒரு நோயும் அண்டாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஐயா,
அசுரர்கள் செய்வது எல்லாமே மனித இயற்கைக்குப் புறம்பாகத் தான் இருக்கும் என்பது தாங்கள் அறிந்தது தானே?
இவர்களும் ஏறக்குறைய 80-90 ஆண்டுகளாக பாரத வர்ஷத்து மக்களிடம் வர்க்கப் போராட்டம் பற்றி வாய்கிழியக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த உழைப்புக்குத் தக்க ஊதியம் பெரிதாக ஒன்றுமில்லை. இந்த முதலாளித்துவப் போக்கை எதிர்த்தே அவர்கள் ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டும் என்பேன் :)))
நன்றாகச் சொன்னீர்கள் ஜடாயு அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
i know that! i dont read junks and yours is fit for contraviews!LOL! Moreover you are my inspiration to write in tamil. hope you will digest my sarcasm, my usual style in english.. with lol ( Lot Of Lols)
i dont know someone with your name flooded me with abnox's things!! i am new here to Tamil Blogging. he wrote that i should not comment in your blog. Need a perostraika here!LOL!
back to the topic. my full name is Yuri Gagarin Chelladurai! Almost missed my study by a whisker at Patice Lumumba university, maskwa. Read a lot on the polshiviks and menshwiks , kgb, stalin, nikitha, and watched Karpochev's revolution. i know the issue of absconding peoples! know the folly of Equality practised their. Still i think once man evolve ( recall Zarathustra of nietze) he will escape from the survival of fittest capilastic structure! Still i hope you remember ... when Marx is asked the question.."Which country will be the first coomunis country in the world?" ... he said AMERICA!lol!
moreover it is not dry arguement. I am just for some balanced view and you said it rightly that AMERICAN's are not Angels but why a silence on Latin American Developement?! Our PM is there now na?!
With love and regards
OSAI Chella
"i dont know someone with your name flooded me with abnox's things!! i am new here to Tamil Blogging. he wrote that i should not comment in your blog. Need a perostraika here!LOL!"
அது போலி டோண்டு என்னும் இழிபிறவி. எனக்குப் பின்னூட்டம் இட்டவர்களை மிரட்டுவது அவன் வேலையாய் போயிற்று. அவனுக்கு அஞ்சுபவர்கள் அடக்கி வாசிப்பர். எனக்கு பின்னூட்டம் இடுவதைத் தவிர்ப்பர். பயப்படாதவர் போடா ஜாட்டான் என்று தாங்கள் செய்வதை செய்து கொண்டிருப்பர். அவனும் சிறிது நேரம் ஊளையிட்டு விட்டு அடுத்த பயந்தவரை நாடிச் செல்வான். நீங்கள் பயந்தவரா இல்லையா என்பதை தாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
ஒரு விஷயம் தெரியுமோ? எனக்கு ஒன்றும் அவனிடமிருந்து ஒரு மடலும் இப்போதெல்லாம் வருவதில்லை. என்னைப் பொருத்தவரை அவன் ஊளையிடுதல் படலம் முடிந்தது.
யூரிககாரின் பெயர் தாங்கியுள்ளீர்கள். எனக்கு மிகவும் பிடித்தப் பெயர்.
மற்றப்படி இந்த இடுகை கம்யூனிஸத்துக்கு எதிரானது. அமெரிக்கா செய்யும் தவறுகளைப் பற்றி எழுத வேறு இடுகை இட வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
oh ok! I done my own FOLLOW UP! He is against Brahmins! You know I am also against Brahminism but this type of cowardice act is inhuman! We can always agree to differ but this comic charector's assasination that too behind a mask is laughable and ignorable. hope i am learning my basics in a hard way in Tamil Blogging.
Then i wont say what to write! wont interfere in the topic selection!LOL!
will read you for sure. thanks for your offline activities too. for your info I know ma siva for a few years and he visited me once in cbe! His contributions to Tamil Opensource is known to me. Mr Kasi is like my elder bro and we used to meet and discuss about Web a lot. Hope we may meet asap.
With regards
OSAI Chella
நன்றாகப் புரிந்து கொண்டீர்கள் செல்லா அவர்களே. கண்டிப்பாக சீக்கிரம் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Enchanté. De rien.
Cher Chella,
La chose la plus importante est de rester enchanté, même de rien!
Salutations,
Dondu N.Raghavan
இவர்களும் ஏறக்குறைய 80-90 ஆண்டுகளாக பாரத வர்ஷத்து மக்களிடம் வர்க்கப் போராட்டம் பற்றி வாய்கிழியக் கத்திக் கொண்டிருக்கிறார்கள்.
என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். கொள்கையின்மேலுள்ள இவர்களது நேர்மை வேறு யாருக்கும் வராது. எந்த வர்க்கத்திற்கு எதிராக இவர்கள் குரல்கொடுக்கிறார்களோ அந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான் இவர்கள் என்பதும், எதற்கு எதிராக இவர்கள் குரல் கொடுக்கிறார்களோ அதை நடைமுறையில் பின்பற்றுவதும் இவர்கள்தான் என்பதும் இவர்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுக்கள் என்பதை நிறுவவில்லையா?
என்னுடைய பதிவிற்கு பின்னூட்டமாக ஒரு அனானி பதிவிட்டிருந்தார். அது இங்கே மெத்தப் பொருந்தும் என்பதால் இங்கே அதை காபி பேஸ்ட் செய்கிறேன்:
பாரத மாதாவே...எங்களைக் காப்பாற்று!
தொழில் வளர்ந்த நாடுகளில் கம்யூனிசம் வளரவில்லை;
கம்யூனிசம் வளர்ந்த நாடுகளில் தொழில் வளரவில்லை என்பது சரித்திரம்.
ஆப்பம் சுடும் ஆயாவிற்கும், அதனை விற்றுத் தரும்
அவளது பேத்திக்கும் இடையே வர்க்க பேதத்தைத்
திணிப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
நியாயமற்ற கோரிக்கைகலை வைப்பதும்; அநியாயமான போராட்டங்களைத் தூண்டுவதும் கம்யூனிஸ்ட்டுகளின் வாடிக்கை!
அதனால் எத்தனையோ இடங்களில் தொழில்
நசிந்திருக்கின்றன; தொழிலாளர் வாழ்க்கையும்
சீர் கெட்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும் கம்யூனிஸ்ட்டுகள் போராடும் பொழுது சில தொழிலுக்குச் சங்கு ஊதப்படுகிறது. அல்லது சில தொழிலாளர்களுக்கு சங்கு ஊதப்படுகிறது
தஞ்சையில் நெல்லின் கொள் முதல் விலையை உயர்த்தப் போராட்டம்; சென்னையில் அரிசி விலையைக் குறைத்துக் கொடு என்று போராட்டம். மதுரையில் பருத்தி விலையை உயர்த்து என்று போராட்டம்; கோவையிலும், திருப்பூரிலும்
நூல் விலையைக் குறைத்துக் கொடு என்று ஆர்ப்பாட்டம்
இது எப்படி சாத்தியமாகும்?
படிப்பறிவும், பகுத்தறிவும் இல்லாத அப்பாவி இளைஞர்களும், தொழிலாளர்களுமே கம்யூனிஸ்ட்டுகளின்
மயக்கு வாதத்தில் மயங்கி வாழ்வை இழந்தனர்.
அஞ்சல் துறையில் பெரிய தொழில் சங்கத்தை நடத்தி வருவது இந்தக் கம்யூனிஸ்டுகள்தான். அஞ்சல் துறையில் அகில இந்திய அளவில் 'ஈடி' என்று அழைக்கப்படும் புற நிலை ஊழியர்கள் மூன்று லட்சம் பேர் உள்ளனர். எனது கணவரும் 'ஈடி' ஊழியரே. இந்த 'ஈடி' ஊழியரை இலாக்கா ஊழியராக்கு என்று சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து
கம்யூனிச தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது.
இது வரை இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.மாறாக, இவர்கள் 'ஈடி' ஊழியர்களிடம் 'சந்தா' என்றும், வழக்குச் செலவு என்றும் காசு பிரித்துக் கொண்டிருப் பதுதான் மிச்சம். இது நிறைவேறாத கோரிக்கை என்றே போராடுவதும் தொடர்கிறது.
இவர்கள் எங்கெங்கே செங்கொடியை நாட்டினரோ அங்கெல்லாம் தொழிற்சாலைகள் விழுந்து விட்டன. அந்தக்கொடிக்கு அப்படியொரு மகத்துவம் உண்டு.
பாட்டாளிகளின் கூட்டாளிகளாகவும், உழைப்பாளிகளின் உடன் பிறப்புகளாகவும் கம்யூனிஸ்ட்டுகள் பொய் வேஷம் போடுகின்றனர். உண்மையில் அவர்களைப்போல தொழிலாளர் விரோதிகளை வேறு எங்கும் பார்க்க முடியாது.
மேற்கு வங்காளத்தில் சணல், பஞ்சாலை தொழிற்சாலைகளில் வேலை செய்த நான்கு லட்சம் தொழிலாளர்களின் வேலையைப் பறித்து அவர்களை வீதியில் விட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான்
எல்லாவற்றையும் அரசுடைமையாக்கச் சொல்வது
கம்யூனிஸ்ட்டுகளின் வழக்கம். இதே கம்யூனிஸ்ட்டுகள்தான் மேற்கு வங்காளத்தில் 'பாரத்' சணல் ஆலையைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கின்றனர்.
இதுபோன்று பற்பல நிறுவனங்கள் தனியார் வசமாகிவிட்டன.
கடந்த 29 ஆண்டுகளாக இவர்களது அட்சி நடைபெறும் மேற்கு வங்காளத்தில், தொழில் துறை தற்கொலை விளிம்பிற்குப் போயிருக்கிறது. 94 ஆயிரம் சிறிய, பெரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன.
இதையெல்லாம் விடக் கொடுமை என தெரியுமா?
எந்தவித நஷ்ட ஈடும் தராமல் தொழிற்கூடங்கள் மூடப்பட்டதாலிரண்டாயிரம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு மடிந்து போயினர் என்பதுதான்.
அதி 1,600 தொழிலாளர்களின் சாவை, கம்யூனிஸ்ட்டுகளே மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் ... துளிக்கூட வெட்கமில்லாமல்.
இந்த விடியா மூஞ்சிகள்தான் இங்கே 'பாட்டாளிகளின் நண்பர்கள் நாங்கள்' என்று பகட்டுகின்றனர்.
தேர்தல் முடிந்துள்ள நிலையில் இப்படிப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் மத்திய ஆட்சியில் இடம் பெற்று விடாமல் இருக்க அன்னை பாரத மாதா தான் உதவ வேண்டும்!
எழுதியவர்
டி.சரஸ்வதி,
ஆனார்,
கன்னியாகுமரி மாவட்டம்
(11.5.2004 தேதியிட்ட தினமலர் நாளிதழில், வாசகர் கடிதம் பகுதியில் இக்கடிதம் வெளிவந்தது - தேவைப்படுபவர் சொல்லுங்கள். ஸ்கேன்டு காப்பி அனுப்பி வைக்கப்படும்)
நல்ல பாயிண்டுகள் தந்தீர்கள் ஜயகமல் அவர்களே.
சமீபத்தில் 1976-ல் ஒரு டாகுமெண்டரி காண்பித்தார்கள் பம்பாயில் குடித்தனக்காரர்கள் படும் அவஸ்தையை பற்றி. ஒரு தம்பதியர் (இருவரும் எழுத்தாளர்கள்) ஒரு அறையில் பேயிங் கெஸ்ட் அடிப்படையில் தங்குபவர்கள். தாங்கள் தங்கள் அறையில் ஒரு கப் டீ போட்டுக் கொள்ளக்கூட அனுமதியில்லை என்பதை ஒரு தார்மீகக் கோபத்துடன் கூறினர். ஆனால் சௌகரியமாக சில விஷயங்களை கூறாது விட்டனர், டாகுமெண்டரியிலும் அதை கூறவில்லை. அப்போதைய நெருக்கடி நிலையின் கெடுபிடிகளுக்கு பயந்து யாரும் அதை வெளியில் சொல்லவில்லை.
அதாவது டீ போட்டுக் கொள்ள அனுமதித்தால் அவர்கள் குடித்தனக் காரர்கள் ஆகி விடுவர், பிறகு அவர்கள் வாடகையையும் விலைவாசிக்கேற்ப உயர்த்த இயலாது, காலி செய்யச் சொல்லவும் முடியாது. அதுதான் பம்பாய் வீட்டு வாடகை சட்டத்தின் விசேஷம். பேயிங் கெஸ்டுகளுக்கு இந்த வசதி கிடையாது.
இன்னொரு விஷயம், முதலில் ஏதாவது ஒரு கூரை அடைவதற்காக இம்மாதிரி கண்டிஷன்களை ஒத்துக் கொள்வது, பிறகு குய்யோ முறையோ என்று கத்துவது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
குழலி அவர்களது இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kuzhali.blogspot.com/2006/09/blog-post_14.html
"moreover if a persons head in the freezer and his legs in the cooking owen the average temperature says he is alive! his is the capitalistic way of improvement and figures!"
ஒரு சிறு திருத்தம். இந்த புள்ளி விவர விளையாட்டுகள் அரசுகளின் இயல்பு. அது எப்படிப்பட்ட அரசாயினும் சரி. என்ன, கம்யூனிச நாடுகளில் அப்படிப்பட்ட புள்ளிவிவரங்கள் வேதவாக்காக இருக்கும், அவற்றை எதிர்த்து வலைப்பதிவு கூட செய்ய முடியாது. ஜனநாயக நாடுகளில் அது நன்றாகவே முடியும்.
"கம்யூனிசம் நான், எனது என்ற தளத்தில் இயங்காமல் நாம்,நமது என்ற தளத்தில் இயங்குகின்றது. முன்னேற்றம் என்பது தனி நபர் முன்னேற்றம் என்று இயங்காமல் கூட்டு முன்னேற்றம் என்று இயங்குகின்றது. இதன் பொருள் தனியாக முன்னேறும் ஒருவனை பின்னோக்கி இழுப்பதல்ல, கூட்டாக அனைவரும் முன்னேறுவது, தனி முன்னேற்றம் என்ற நிலை வரும்போது பொறாமை, தான் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் மற்றவர்களின் முன்னேற்றத்தில் மண் அள்ளிப்போடுவது, அலுவலகங்களில் நடைபெறும் கூஜா தூக்குதல், ஜால்ரா அடித்தல், காக்கா பிடித்தல் என்று இது எல்லாவிதமான அசிங்கமான முகங்களையும், உத்திகளையும் கடைபிடிக்கின்றது."
என்னமோ காக்கா பிடித்தல் தனியுடைமை நாடுகளில் மட்டும் நடக்கின்றது என்பது போல எழுதுகிறீர்களே. கம்யூனிஸ்ட் நாடுகளில் அது ரொம்பவே அதிகம். கூறப்போனால் அது இல்லாது அங்கு முன்னேறவே முடியாது. அடுத்த வீட்டுக்காரன், உறவினர் எல்லோரையும் உளவு பார்த்து போட்டுக் கொடுப்பது அந்த நாடுகளில்தான் நடக்கும். தனித்திறமையால் ஒருவர் முன்னேற நினைக்கும்போது அவனை பின்னுக்கு இழுப்பதுதான் கம்யூனிச முறையில் நடக்கும். உங்கள் உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். உங்களுடன் படித்த மாணவர்கள் எல்லோருமே உங்கள் அளவுக்கு முன்னேறி விட்டார்கள் என்று உங்களால் கூற முடியுமா? உங்கள் திறமையில் நீங்கள் வந்தீர்கள். மற்றவர்கள் வர முடியவில்லை, தீர்ந்தது விஷயம். இல்லை, பரீட்சை சமயத்தில் எல்லோருக்கும் உதவிக் கொண்டிருந்தீர்களா?
இப்போதைய ரஷ்யாவையே எடுத்துக் கொள்வோம். 1991-ல் சோவியத் யூனியன் வீழ்ந்தபோது கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஒரே பொருளாதார நிலை. இப்போது? தன் முனைப்பு உள்ளவன் முன்னேறி கோடீஸ்வரன் ஆகிறான். இல்லாதவன் அப்படியே இருக்கிறான்.
நீங்கள் கூறுவது போல சோவியத் யூனியனில் ஒரு போதும் செழிப்பு இருந்ததில்லை. ஆனால் அரசு பிரசாரம் அது இருப்பதாக நம்ப வைத்தது. இப்போது உண்மை வெளியாகி விட்டது. அவ்வளவே.
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்டும் வகையில் அதன் நகலை கம்யூனிசம் எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post_115807685840498511.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
இந்தியாவில் இருக்கும் இந்த ஜனநாயக சுதந்திரத்தை 100ல் 99 பேர் தவறாகவே பயன் படுத்துகின்றனர்...!
ஒரு சோதனைக்காக நாம் CPIM கட்சிக்கு வோட்டு போட்டு கம்யூனிஸ நாடாகிவிடுவோம்...!!
அப்புறம் தான் தெரியும்...இங்கே லிபரலிஸ்டுகள், கம்யூனிசத்தைத் தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்கள் வலைப்பதிவுகளுக்கு எல்லாம் வேட்டு விழும்..!
30 வருஷமாக ஒரே கட்சி...ஒரே ஆட்சி...கல்கத்தாவில் 100க்கும் மேற்பட்ட இன்னும் மருத்துவர்கள் கண்டுபிடடக்காத வியாதிகள் உலவிக் கொண்டிருக்கின்றன (ஒரு joke தான்!!)
நிழலின் அறுமை வெயிலில் தான் தெரியும்...
plain and simple, கம்யூனிஸ ஆதரவாளர்கள் இக்கரைக்கு அக்கரை பச்சை கேசுகள்!!
"ஒரு சோதனைக்காக நாம் CPIM கட்சிக்கு வோட்டு போட்டு கம்யூனிஸ நாடாகிவிடுவோம்...!!"
அந்த சோதனையே நாட்டு மக்களுக்கு பெர்ம் சோதனையாக மாறிப்போகும். இன்னும் எழுபது ஆண்டுகள் கழித்து நாடு திவாலாகும்போதுதான் ஏதேனும் விமோசனம் பிறக்கும். அதெல்லாம் விளையாட்டுக்குக் கூட சொல்லாதீர்கள்.
அசுரர்களும், குழலிகளும், முத்துக்களும் என்னதான் எழுதினாலும் கம்யூனிசம் போனது போனதே. போயிந்தி, It's gone with the wind.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆடை உடுத்தி ஒரே இடத்தில் வீடு கட்டி வாழ்வதும் மனித இயற்கைக்குப் புறம்பானதுதான். அதனால் எல்லோரும் காட்டு வாழ்க்கைக்குப் போய் விட வேண்டுமா என்ன?
கட்டுப்பாடற்ற முதலாளித்துவ சமூகம் என்பது காட்டு வாழ்க்கை போன்றது. அதை நெறிப்படுத்தி எல்லோரின் கூட்டு நன்மைக்காக வழிகளை ஏற்படுத்திக் கொள்வது அறிவுடமை. எல்லோரின் கூட்டு நன்மை என்பதில் நமது நன்மையும் அடங்கியிருப்பது நிதானமாக அலசிப் பார்த்தால் புரியும்.
அன்புடன்,
மா சிவகுமார்
"ஆடை உடுத்தி ஒரே இடத்தில் வீடு கட்டி வாழ்வதும் மனித இயற்கைக்குப் புறம்பானதுதான்."
யார் சொன்னது? அப்படிப் பார்த்தால் முதலில் இருந்த அமீபா நிலைதான் இயற்கை என்று கூறுவீர்கள் போலிருக்கிறதே. நீங்கள் சொன்னது ட்ரையல் அண்ட் எர்ரர் முறையில் மனித இனத்தால் கையாளப்பட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உருவானது. பகுத்தறிவு பெற்றதன் பலன். ஞாபக சக்தி அதிகமாகி பஞ்சம் ஆகிய இயறகை பேரழிவிலிருந்து தானை பாதுகாத்துக் கொள்ள மனிதர்களால் சமீபத்தில் சில ஆயிரம் ஆண்டுகள் முன்னால் நிறுவப் பெற்று இன்னமும் மாற்றங்களை அடைந்து வருவன இந்த ஏற்பாடுகள். இப்போதைய நிலையில் அவை இயற்கையே.
கூடி வாழ்வதும் மனிதனின் சுய நல கோட்பாட்டுக்கு உட்பட்டதே. எனக்கு நீ உதவி செய்தால் பிற்காலத்தில் உனக்கு நான் உதவி செய்வேன் என்று வந்தது. முதலில் விளைச்சலை அதிகமாக்க வேண்டும். அதன் பிறகுதான் பங்கு போட வேண்டும். அதன்றி முன்னேறுபவனுக்கு கட்டுப்பாடுகளை வைத்தால் மொத்த முன்னேற்றமே தடைபடும். அதைத்தான் கம்யூனிசம் செய்தது. ஸ்டாலின் 1930களில் செய்விக்காத படுகொலைகளா? அந்த நாட்களுக்கா ஏங்குகிறீர்கள்?
இப்போது கூட கூரியர் கம்பெனிகளுக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக பேச்சு வந்ததே. ஏனெனில் தபால் துறையால் அவற்றுடன் போட்டி போட முடியவில்லையாம். இது பேச்சாகவே இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் காட்டு வாழ்க்கைக்கு ஏங்கவில்லை. இன்றைய பொருளாதார காட்டு வாழ்க்கைக்கு இடையே கூடி வாழும் பொருளாதார முறை பற்றி சிந்திப்பதில் தவறில்லை என்று சொல்கிறேன். நீங்கள் சொல்லும் டிரையல் எர்ரர் முறையில்தான் அது அமைய முடியும். ஸ்டாலின் என்ற சர்வாதிகாரி செய்த தவறுகளை முன்னிட்டு ஒரு நாகரீக முன்னேற்றத்தையே மனித இயல்புக்கு எதிரானது என்று நீங்கள் முத்திரை குத்துவது சரியில்லையே.
என்னுடைய நோக்கில் சந்தைப் பொருளாதாரம் என்பது, காட்டில் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியே வேட்டையாடி வந்த நிலைமை. அதில் மாறுபாடுகள் செய்து படிப்படியாக முன்னேறி வருகிறோம். சில முயற்சிகள் தோல்விகள் அடைகின்றன. வட ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமான சமூகவியல் கொள்கைகள் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க வழிதான் ஒரே வழி என்பது சரியில்லை. அந்த வழி அழிவுக்குத்தான் வழிகாட்டும் என்பது பல இடங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உலகின் ஒவ்வொருவரும் அமெரிக்க வாழ்க்கை முறையை மேற்கொண்டால் இந்தப் பூமி அதைத் தாங்காது.
அன்புடன்,
மா சிவகுமார்
"அமெரிக்க வழிதான் ஒரே வழி என்பது சரியில்லை."
நானும் அதை கூறவில்லை. அதை நாம் இந்தியாவின் நிலைக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு நம் உறவுமுறைகள். அவற்றையெல்லாம் இழக்க வேண்டியதில்லை.
"உலகின் ஒவ்வொருவரும் அமெரிக்க வாழ்க்கை முறையை மேற்கொண்டால் இந்தப் பூமி அதைத் தாங்காது."
அமெரிக்காவே அதை தாங்க இயலாது. :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல பின்னூட்டத்திற்கு நன்றி ஜே அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"டோண்டு சார்,
பாப்பான் டோண்டுவுக்கு பின்னூட்டம் செய்தால் உதைப்போம் என்று போலிகள் மிரட்டுகிறார்கள்! நான் என்ன செய்ய?"
மேலே எழுதியது மா.சிவகுமார் அவர்கள் இட்டப் பின்னூட்டம் என வந்தது. ஒரு நிமிடம் சுதாரித்தேன். அம்மாதிரி வெத்துவேட்டு மிரட்டலுக்கு பயப்படுபவர் மா.சிவகுமாராக இருக்க இயலாது. இது அவரது இயற்கைக்கு புறம்பானது!
எலிக்குட்டி எதற்கு இருக்கிறது? கடைசியாக போலி டோண்டு என்ற இழிபிறவி சிவகுமார் அவர்கள் பெயரிலும் வலைப்பூ துவங்கி விட்டான். ஒரு நாளைக்கு அவன் தனது உண்மையான அடையாளத்தையே மறக்கப் போகிறான் என்பது உறுதியானது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
The acceptable rate of unemployment is about 4-6%.
//
what about those who are unemployable?
I feel unemployable refers to üpeople without any skills and too old to learn new skills for being employed.
Having said that, it is very rare that a person is in that category. Still physical labor is there. Even handicapped people can be given jobs that do not challenge them too much. It all boils down to the person not willing to take up work of any sort. Such people are called Kamchor in Hindi, which literally means a work thief, i.e. a shirker.
Regards,
Dondu N.Raghavan
அசுரன் அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://poar-parai.blogspot.com/2006/09/blog-post.html
அப்படியா அசுரரே. ஆனாலும் நீர் என்னதான் அழுது புரண்டாலும் கம்யூனிசம் திரும்பப் போவதில்லை. உம்முடைய திருப்திக்கு வேண்டுமானால் உளறிக் கொண்டிரும். சோவியத் யூனியன் கிழக்கு ஜெர்மனி ஆகிய நாடுகளே உலக வரை படத்திலிருந்து மறைந்தன என்றால் கூட அதுவும் முதலாளித்துவ கொள்கைகளால்தான் என்று ஜல்லியடித்துக் கொண்டிருங்கள். நாங்கள் அவ்வப்போது பொழுது போகவில்லை என்றால் வந்து படித்து, சிரித்து விட்டுப் போகிறோம். மற்றப்படி நாங்கள் பாட்டுக்கு எங்கள் சுயநலனைப் பார்த்துக் கொண்டு போகிறோம்.
சைனா இப்போது போடு போடு என்று போடுவது கூட முதலாளித்துவத்தை ஏற்றதால் மட்டுமே என்பதைக் கூட உம்மால் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.
என்னவோ விஞ்ஞான கம்யூனிசம், கம்யூனிச சரித்திரம் என்றெல்லாம் பெரிய வார்த்தைகளை உபயோகித்து உளுத்து, அழிந்து போன ஒரு தத்துவத்தை தூக்கிப் பிடிக்கிறார் என் இணைய நண்பர் செல்லா அவர்கள். அவருக்கும் கூறுவேன். ரஷ்யாவில்தான் கம்யூனிசம் இல்லை, வேறு எங்கு இருக்கிறது அல்லது இருந்தது என்பதைக் கூற இயலுமா?
கைவசம் உருப்படியான சரக்கு இல்லாமல் அசுரன் பார்ப்பனியத்தை வைத்தும் ஜல்லியடிக்கலாம். அந்த வழிக்கும் வருவேன்.
நான், டோண்டு ராகவன் என்னும் பெயருடைய வடகலை ஐயங்கார் கூறுகிறேன். பார்ப்பனன் முன்னேறுவதை உம்மைப் போன்றவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக அதுதான் நடந்து வந்துள்ளது. இனிமேலும் நடக்கும் என்று கூறி,
விடை பெறுவது,
டோண்டு ராகவையங்கார்
பின் குறிப்பு: அபாயகரமான அதர் ஆப்ஷனை நீங்கள் வைத்துக் கொண்டிருப்பதாலும், அனானி ரூபத்தில் போலியார் வந்து உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டிருப்பதை பார்த்திருப்பதாலும், எனது இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய கம்யூனிசம் பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இஅடப்படும் என்பதை அறியவும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post_115807685840498511.html
அசுரன் அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது:
அசுரரே,
மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்பதை கம்யுனிசம் மறுக்கிறது என்பதுதான் டோண்டு சொல்லும் கம்யுனிசத்தின் இயற்கை மறுப்பு போக்கு என்றால்,
இல்லை. மதிப்பிற்குரிய டோண்டு அவர்கள் அப்படி சொல்லவில்லை.
பொதுவாக ஒருவர் சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லி அதை எதிர்ப்பது எளிதான விஷயம். பல ஸமயங்களில் இது நமது ப்ரிஜுடைஸ்களினால் ஏற்பட்டுவிடுகின்றது.
டோண்டு அவர்கள் சொன்னது மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் இல்லை, அவர்களிடம் "வித்யாஸங்கள்" உண்டு என்பதே. தாங்கள் குறிப்பிட்டதுபோல "ஏற்றத்தாழ்வுகள்" கொண்டவர்கள் மனிதர் என்று அவர் கூறவில்லை.
இன்னும் கோட்பாடக சொன்னால் மனித சமூகத்தின் வளர்ச்சியின் ரகசியமே அவன் இயற்கையுடன் முரன்பட்டு தன்னை தொடர்ந்து வளர்த்துக் கொள்வதில்தான் உள்ளது.
இதே போன்ற ஒரு கருத்தை விவேகானந்தரும் கூறியுள்ளார். என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. என் கருத்தின்படி மனிதனின் வளர்ச்சி இயற்கையை எதிர்த்ததால் இல்லை, புரிந்துகொண்டதாலேயே நிகழ்ந்தது. இயற்கையின் கோட்பாடுகளை எங்கனம் உபயோகித்தால் நமது விருப்பம் நிறைவேறும் என்பதை தெரிந்துகொண்டதால் நிகழ்கின்றது மனித முயற்சி.
இதை முழுமையாகப் புரியாமல் இருப்பவர்களால் ஏற்படுவதுதான் சுற்றுப்புறச் சூழல் கேடுகளும், கம்யூனிஸ, குழுவெறி தத்துவங்களும்.
இந்த உடலுறுவு அல்லது இனப்பெருக்க உறவு விசயத்தில் மனிதனின் இயற்கையான உணர்வு எதிர் பாலினம் யாராயிருந்தாலும் உறவு கொள்வது.
இல்லை. எல்லா உயிர்னங்களும் இனப்பெருக்கத்திற்கு முன் தன் துணையை தேர்வு செய்கின்றன. மனிதர்களும் அவ்வாறே - நாகரீகம் தோன்றுவதற்கு முன்னும், பின்னும்.
எந்த எதிர்பாலினரோடும் உடலுறவு கொள்ளத் தூண்டுவது இயற்கையில் தம் துணையைத் தேர்வு செய்யும் சூழல் இல்லாதபோதோ, அல்லது எதிர்பாலினரோடு உறவு கொள்ளும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக அந்த உயிரினம் நினைக்கும்போதும் ஏற்படுவது. இவை விதிவிலக்குகள்.
இந்த இயற்கை உணர்வுக்கு மாறனதுதான் குடும்பம் என்ற கட்டமைப்பு.
இல்லை. இயற்கையில் எல்லா உயிரினங்களிலும் குடும்பம் என்னும் ஒரு அமைப்பு உள்ளது. யார் யார் குடும்பத்தவர்கள் என்பதும், எவ்வளவு காலம் குடும்பம் நீடிக்கவேண்டும் என்பதில் வித்யாஸங்கள் இருக்கலாம்.
இன்றைக்கு தனியுடமை சமூகத்தின் கடைசி கட்டத்தில் வந்து நிற்கிறது.
தனியுடைமையின் முக்கிய ஆதாரத் தூணே தங்களால் "குடும்பம் எனும் ஒரு அதி உன்னதமான ஒரு மனித சமூக அமைப்பு" என்று அழைக்கப்படும் அமைப்புத்தான்.
அதாவது ஒரு கம்யுனிச சமூகத்தில் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு இருக்கும் என்பது ஒரு பொய்.
அப்போ, லெனின், ஸ்டாலின், மாவோ, ப்ரசன்டாவிற்கு கிடைக்கும் அதே மரியாதையும், சுகபோக வஸதிகளும், பவரும், அடிமட்டத்தில் கம்யூனிஸ சித்தாந்தங்களில் மயங்கியிருக்கும் நேர்மையான தோழர்களுக்கும் கிடைக்கும் என்கிறீர்கள். எல்லாருமே தொண்டர்கள்தான். தலைவர்கள் யாருமே கிடையாது. அல்லது எல்லாரும் தலைவர்கள்தான். தொண்டர்கள் யாரும் கிடையாது. நம்பறோம். நம்பறோம்.
அறிவு விசய்த்தில், அனைவருக்கும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதால், வள்ரும், வாழும் சூழ் நிலைக்கேற்ப்ப எந்த துறையில் வேண்டுமானாலும் கற்று எல்லாருமே தான் சம்பந்தப்பட்ட துறையில் சூப்பர் ஜினியஸாகத்தான் இருப்பார்கள்.
சூப்பர் ஜீனியஸாகமாற இப்படி ஒருவழியா? நீங்கள் ஜீனியஸ்தான்.
அவனவன் பிலீயன் கணக்கில் ரூபிள்களையும், டாலர்களையும் செலவழித்து எத்தனையோ ஆராய்ச்சிகளை இதற்காக செய்துகொண்டிருக்கிறான். இந்த மாதிரி கஷ்டமே இல்லாமல் ஒருவரை ஜீனியஸாக்கும் வித்தையை ஏந்தான் இந்த முதலாலித்துவ அரசுக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனவோ.
இதுவும் சிறிது காலம் எடுத்து சில, பல தலைமுறைகள் கடந்த பிற்பாடு ஏற்ப்படும் ஒரு நிலை.
குறைந்தது ஒரு ரெண்டாயிரம், அல்லது மூவாயிரம் ஆண்டுகள்?
ஏனென்றால், நூற்றுக்கணக்கிற்குக்கூட வராத நாடுகள் ஒன்று பிச்சை எடுக்கின்றன, இல்லாவிட்டால் கேபிடலிஸத்திற்கு திரும்பிவிட்டன. அதனால்தான் இந்த ஸந்தேகம்.
இது தவறான ஒரு கூற்று. மனித குல வரலாற்றை எடுத்துக் கொண்டால், பொது வுடைமைதான் அவனது இயல்பான உணர்வாக இருக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் இருக்கும் மனிதர்கள்தானே? இருக்கும். இருக்கும்.
இங்கே குழந்தைகூட தன் பொம்மையை தன் உடன் பிறந்த பாப்பாக்களுக்கு தர மறுக்கிறது.
வேட்டையாடி உணவு தேடும் பண்டைய புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் மனிதன் குலமாக, கூட்டமாக வாழ்ந்தான். அங்கு ஒவ்வொரு மனிதனும் தான் சேகரித்து வந்த உணவை பொதுவில் வைத்துத்தான் பகிர்ந்தனர்.
ஆனால் அந்த கூட்டத்தில் பலமுள்ளவனுக்குத்தான் அதிகப் பங்கு. அடுத்தது புத்திசாலிகளுக்கு. மற்றதெல்லாம்தான் தோழர்களுக்கு.
பங்கீடு சரியாக இல்லாவிட்டால் தெய்வம் தண்டிக்கும் என்பது இனக்குழு மக்களின் நம்பிக்கை.
பூசாரிகள் உருவானது இப்படித்தான். அவர்களுக்கு மக்கள் பயப்பட ஆரம்பித்ததும் இப்படித்தான்.
மனிதன் மந்தை உணர்ச்சி உடையவன்
பூமியில் வாழும் மனிதர்களிடம் இரண்டு கூறுகளும் (தனிமனித மற்றும் குழு மனப்பன்மை) உண்டு. ஒன்றைமட்டும் ஆதரிப்பது சமன நிலையில் ஏற்படாது. அது தீமையே விளைவாக்கும்.
அதனால்தான் பாதுகாப்பான உணர்வடையும் போதெல்லாம் மனிதன் தனது பொதுமை நாட்டத்தை வெளிப்படுத்துகிறான்.
மனித வாழ்க்கையில் எவ்வப்போதாவது ஏற்படும் உணர்வு இது. வறுமையின் துன்பம் அறியதவன் பிச்சை போடுவதில்லை. ஏழைக்கு இரங்குவதில்லை.
அமெரிக்கா. அங்கு மான்யம் பெற்றவர்களும், மான்யம் பெற்ற துறையும் எந்த நிலைமையில் இருக்கிறது
அதைத்தானே அவரும் சொல்லுகிறார்?
Hats off, Vinodh Dua!
Regards,
Dondu N.Raghavan
எனக்கு என்ன தோன்றுகிறதேன்றால் காப்பிடலிஸம் இருக்கும் இடத்தில் கம்யூனிசம் வலியுறுத்தும் சில நல்ல விஷயங்களுக்கு ஆதரவு தரலாம். முதலில் உற்பத்தி ஆனால்தானே ஏழைகளுக்கு ஏதாவது தர முடியும்? அதன்றி எல்லோரையும் ஏழையாக்குவதில் என்ன பலன்?
ஆகவேதான் நான் என்ன நினைக்கிறேன் என்றால் கம்யூனிசம் என்பது பின்னணியில்தான் இருக்க வேண்டும். அரசு சட்டங்கள் இயற்றி, இன்ஸெண்டிவ்கள் கொடுத்து பொது நலனுக்கான செலவுகளுக்கு பொருள் ஈட்டலாம்.
கிருஷ்ணன்
//எனக்கு என்ன தோன்றுகிறதேன்றால் காப்பிடலிஸம் இருக்கும் இடத்தில் கம்யூனிசம் வலியுறுத்தும் சில நல்ல விஷயங்களுக்கு ஆதரவு தரலாம்.//
Quite nicely put Mr. Krishnan.
GK
Surplus value theory fails to take into account the efforts of the capitalist / manager ; MOTIVE power is the most basic issue here. all capitalists and great industrial captains like Ford, Rockfeller, Carneige, Birla, etc started as workers (in any one generation ago) and there are no permanent super rich family for thousand years or so. All these people, thru their industry, skill and strong organising power rose to the top.
Unlike caste in India, class as understood by marxists is not a fixed and inflexible division. workers can become capitalists and vice versa thru indiviual efort or folly. hence the rigid division of class is not scientific or valid.
What prevents all the workers to turn into entrepreners and make it big ? only a few are able to it inspite of severe hardships. G.D.Birla's grandfather was a ordinary worker in the 19th cent. now we have Bill Gates, N.R.Narayamurthy, Sameer Bhatia, textile barons in Karur, Thirupur, etc. all started with nothing and bare hands and made it to the top while their peers remained in their worker status. so what is the compasision ?
the term expolitation is a misnomer. huge population (which increases supply of labour to high volumes), govt deficts which erode real wages, high taxes, etc are major reasons for worker 'exploitations'
The organising power and the ability to motivate, manage and uplift a industrial unit cannot be quanitfied easily like the hours or amount of labour a worker puts in. Marxisim fails to understand this vital aspect of human nature. The drive and involvement needed to build up a business. hence most communist factories are less efficent and crumbled in the long run as histroy proves repeatedly. there may be exceptions where exceptionally driven and talented individuals, who were genuine communists (that is they are ready to put in their best effort for the betterment of the 'commune') create efficient eneterprises. For such efficency and sucess, all the palyers must be motivated to do their best in return for minimum salary (to each according to his needs).
the crux of the problem is 'from each according to his ability' ;without proper and logical rewards (as in a free market economy) such output of individual is simply not possible.
humans are ego centric and will put in their best efforts and drive only when there is a proper reward or profit.
//the crux of the problem is 'from each according to his ability' ;without proper and logical rewards (as in a free market economy) such output of individual is simply not possible.
humans are ego centric and will put in their best efforts and drive only when there is a proper reward or profit.//
ஆகவே கூறுகிறேன். கம்யூனிசம் என்பது மனித இயற்கைக்கு புறம்பான ஒரு தத்துவம் என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment